கெ – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கெட்ட (1)

கெட்ட இறுதி இயல் திரிபு இன்றே – எழுத். உரு:11/2

TOP


கெட்டு (1)

துவர கெட்டு வல்லெழுத்து மிகுமே – எழுத். புள்.மயங்:15/2

TOP


கெட (17)

வஃகான் மெய் கெட சுட்டு முதல் ஐம் முன் – எழுத். புணர்:20/1
உயிர் மிக வரு வழி உயிர் கெட வருதலும் – எழுத். தொகை:15/4
குறியதன் இறுதி சினை கெட உகரம் – எழுத். உயி.மயங்:32/1
வேற்றுமைக்கு உ கெட அகரம் நிலையும் – எழுத். புள்.மயங்:4/1
உ கெட நின்ற மெய்-வயின் ஈ வர – எழுத். புள்.மயங்:31/2
இ இடை நிலைஇ ஈறு கெட ரகரம் – எழுத். புள்.மயங்:31/3
முதல்-கண் மெய் கெட அகரம் நிலையும் – எழுத். புள்.மயங்:52/2
அழன் என் இறுதி கெட வல்லெழுத்து மிகுமே – எழுத். புள்.மயங்:59/1
பொன் என் கிளவி ஈறு கெட முறையின் – எழுத். புள்.மயங்:61/1
பத்தன் ஒற்று கெட னகாரம் இரட்டல் – எழுத். குற்.புண:29/1
நின்ற பத்தன் ஒற்று கெட ஆய்தம் – எழுத். குற்.புண:32/2
பஃது என் கிளவி ஆய்த பகரம் கெட – எழுத். குற்.புண:40/3
நிற்றல் வேண்டும் ஊகார கிளவி – 40/4
நூறு என் கிளவி நகாரம் மெய் கெட – எழுத். குற்.புண:58/3
ஊ ஆ ஆகும் இயற்கைத்து என்ப – 58/4
அது என் உருபு கெட குகரம் வருமே – சொல். வேற்.மயங்:11/2
புடை கெட போகிய செலவே புடை கெட – பொருள். புறத்:3/2
புடை கெட போகிய செலவே புடை கெட – பொருள். புறத்:3/2
ஒற்றின் ஆகிய வேயே வேய்ப்புறம் – 3/3
வந்த குற்றம் வழி கெட ஒழுகலும் – பொருள். கற்:5/21

TOP


கெடல் (1)

கெடல் அரு மரபின் உள்ளுறை ஐந்தே – பொருள். பொருளி:48/2

TOP


கெடவரல் (1)

கெடவரல் பண்ணை ஆ இரண்டும் விளையாட்டு – சொல். உரி:21/1

TOP


கெடு (2)

அ பெயர் மெய் ஒழித்து அன் கெடு வழியே – எழுத். புள்.மயங்:55/1
உகரம் கெடு வழி அகரம் நிலையும் – எழுத். புள்.மயங்:79/3

TOP


கெடு-வழி (2)

வெரிந் என் இறுதி முழுதும் கெடு-வழி – எழுத். புள்.மயங்:5/1
வரும் இடன் உடைத்தே மெல்லெழுத்து இயற்கை – 5/2
பத்து என் கிளவி ஒற்று இடை கெடு-வழி – எழுத். புள்.மயங்:95/1
நிற்றல் வேண்டும் ஆய்த புள்ளி – 95/2

TOP


கெடுத்தல்-கண்ணும் (1)

கிழவோள்-பால் நின்று கெடுத்தல்-கண்ணும் – பொருள். கற்:9/19
உணர்ப்பு-வயின் வாரா ஊடல் உற்றோள்-வயின் – 9/20

TOP


கெடுத்து (1)

ஈறு மெய் கெடுத்து மகாரம் ஒற்றும் – எழுத். குற்.புண:58/6

TOP


கெடுத்தே (1)

மெய்யொடும் சிவணும் அ இயல் கெடுத்தே – எழுத். புணர்:36/2

TOP


கெடுதல் (10)

ஈறு ஆகு அகர முனை கெடுதல் வேண்டும் – எழுத். புணர்:13/2
முன்னர் கெடுதல் உரித்தும் ஆகும் – எழுத். புணர்:18/3
ஒற்று மெய் கெடுதல் தெற்றென்று அற்றே – எழுத். புணர்:31/2
ஆ-வயின் யகர மெய் கெடுதல் வேண்டும் – எழுத். உரு:16/4
ஆய்தம் கெடுதல் ஆ-வயினான – எழுத். உரு:28/3
மெய்யொடும் கெடுதல் என்மனார் புலவர் – எழுத். உயி.மயங்:86/3
ஒற்று மெய் கெடுதல் என்மனார் புலவர் – எழுத். புள்.மயங்:36/3
கெடுதல் வேண்டும் என்மனார் புலவர் – எழுத். குற்.புண:27/2
ஈறு மெய் ஒழிய கெடுதல் வேண்டும் – எழுத். குற்.புண:64/2
நின்ற ஆய்தம் கெடுதல் வேண்டும் – எழுத். குற்.புண:70/3

TOP


கெடுதலும் (9)

சாரியை உள் வழி சாரியை கெடுதலும் – எழுத். தொகை:15/5
சாரியை உள் வழி தன் உருபு நிலையலும் – 15/6
நெடியதன் முன்னர் ஒற்று மெய் கெடுதலும் – எழுத். தொகை:18/1
குறியதன் முன்னர் தன் உருபு இரட்டலும் – 18/2
பெயரிடை வகரம் கெடுதலும் ஏனை – எழுத். தொகை:30/2
இறுதி வகரம் கெடுதலும் உரித்தே – எழுத். உயி.மயங்:7/2
இறுதி யகரம் கெடுதலும் உரித்தே – எழுத். உயி.மயங்:9/2
ஐ வரு-காலை மெய் வரைந்து கெடுதலும் – எழுத். உயி.மயங்:56/2
செய்யுள் மருங்கின் உரித்து என மொழிப – 56/3
முதல்நிலை ஒழிய முன்னவை கெடுதலும் – எழுத். புள்.மயங்:20/2
வரை நிலை இன்றே ஆசிரியர்க்க – 20/3
ஆ-வயின் உகரம் கெடுதலும் உரித்தே – எழுத். புள்.மயங்:79/2
முந்தை இறுதி மெய்யொடும் கெடுதலும் – எழுத். குற்.புண:25/2
மேல் நிலை ஒற்றே ளகாரம் ஆதலும் – 25/3

TOP


கெடுதியும் (1)

ஊரும் பேரும் கெடுதியும் பிறவும் – பொருள். கள:11/11

TOP


கெடும் (2)

ஒற்றும் உகரமும் கெடும் என மொழிப – எழுத். உரு:19/3
மெய் ஒழித்து அன் கெடும் அ இயற்பெயரே – எழுத். புள்.மயங்:52/3

TOP


கெடுமே (15)

அக்கின் இறுதி மெய்-மிசையொடும் கெடுமே – எழுத். புணர்:26/2
குற்றியலுகரம் முற்ற தோன்றாது – 26/3
ஒட்டிய மெய் ஒழித்து உகரம் கெடுமே – எழுத். உரு:4/2
ஆ-வயின் வகரம் ஐயொடும் கெடுமே – எழுத். உரு:6/3
அஃது என் கிளவி ஆ-வயின் கெடுமே – எழுத். உரு:27/4
உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே – 27/5
ஆ-வயின் இறுதி மெய்யொடும் கெடுமே – எழுத். உரு:29/3
இறுதி இகரம் மெய்யொடும் கெடுமே – எழுத். உயி.மயங்:38/2
டகாரம் ஒற்றும் ஆ-வயினான – 38/3
அம்மின் மகரம் செரு-வயின் கெடுமே – எழுத். உயி.மயங்:58/3
தம் ஒற்று மிகூஉம் வல்லெழுத்து இயற்கை – 58/4
ஐ என் இறுதி அரை வரைந்து கெடுமே – எழுத். உயி.மயங்:81/3
மெய் அவண் ஒழிய என்மனார் புலவர் – 81/4
பெயர் ஒற்று அகரம் துவர கெடுமே – எழுத். புள்.மயங்:53/2
ஆயிரம் வரு-வழி உகரம் கெடுமே – எழுத். புள்.மயங்:96/1
குற்றியலுகரம் மெய்யொடும் கெடுமே – எழுத். குற்.புண:28/3
முற்ற இன் வரூஉம் இரண்டு அலங்கடையே – 28/4
ஐந்தன் ஒற்றே முந்தையது கெடுமே – எழுத். குற்.புண:49/1
முதல் ஈர் எண்ணின் உகரம் கெடுமே – எழுத். குற்.புண:59/2
ரகரத்து உகரம் துவர கெடுமே – எழுத். குற்.புண:74/3
மெய்யொடும் கெடுமே ஈற்று-மிசை உகரம் – சொல். வினை:41/3

TOP


கெழீஇ (2)

போக்கு உடன் அறிந்த பின் தோழியொடு கெழீஇ – பொருள். கள:24/8
கற்பின் ஆக்கத்து நிற்றல்-கண்ணும் – 24/9
சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇ – பொருள். பொருளி:2/6
செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கியும் – 2/7

TOP


கெழு (2)

பயம் கெழு துனை அணை புல்லி புல்லாது – பொருள். கற்:5/31
பால் கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே – பொருள். பொருளி:5/1

TOP


கெழுதகை (1)

முறைப்பெயர் மருங்கின் கெழுதகை பொது சொல் – பொருள். பொருளி:26/1

TOP


கெழுவும் (2)

உம்மும் கெழுவும் உளப்பட பிறவும் – எழுத். குற்.புண:76/2
குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே – சொல். உரி:5/1

TOP