அகநானூறு 26-50

    #26 மருதம் பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி #26 மருதம் பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி கூன் முள் முள்ளி குவி குலை கழன்ற வளைவான முள்ளை உடைய முள்ளிச் செடியின் குவிந்த குலையிலிருந்து கழன்று விழுந்த மீன் முள் அன்ன வெண் கால் மா மலர் மீனின் முள்ளைப் போன்ற வெண்ணிற காம்புகளையுடைய கரிய மலர்களை, பொய்தல் மகளிர் விழவு அணி கூட்டும் விளையாட்டு மகளிர் தமது திருவிழா ஆட்டத்துக்கு அழகுசெய்ய எடுத்துச் சேர்க்கும்  அம் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனை அழகிய வயல்களை அருகில்கொண்ட வளம் மிகுந்த ஊரனாகிய தலைவனைக் புலத்தல் கூடுமோ தோழி அல்கல்                     5 கோபித்துக்கொள்ள முடியுமா?, தோழியே! ஒவ்வொரு நாளும், பெரும் கதவு பொருத யானை மருப்பின் பெரிய கோட்டைக் கதவினைக் குத்தித் தாக்கிய யானையின்…

Read More

அகநானூறு 1-25

மூலம் அடிநேர் உரை     #0 கடவுள் வாழ்த்து #0 கடவுள் வாழ்த்து கார் விரி கொன்றை பொன் நேர் புது மலர் கார்காலத்தில் மலரும் கொன்றை மரத்தின் பொன்னை ஒத்த புதிய மலர்களாலான தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் குறுமாலையன்; நீள்மாலையன்; சூடிய தலைமாலையன்; மார்பினஃதே மை இல் நுண் ஞாண் மார்பின்கண் உள்ளது குற்றமற்ற நுண்ணிய பூணூல்; நுதலது இமையா நாட்டம் இகல் அட்டு நெற்றியில் உள்ளது இமைக்காத கண்; பகைவரைக் கொல்லும், கையது கணிச்சியொடு மழுவே மூவாய்          5 கையில் இருப்பது, குந்தாலியுடன் கோடரி, மூன்று கூறுகளையுடைய வேலும் உண்டு அ தோலாதோற்கே சூலாயுதமும் உண்டு அந்தத் தோல்வி இல்லாதவருக்கு; ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே ஏறிச்செல்வது காளை; சேர்ந்து இருப்பது உமையவள்; செ வான் அன்ன மேனி அ வான்…

Read More

கலித்தொகை

 #1 கடவுள் வாழ்த்து – மதுரை ஆசிரியர் நல்லந்துவனார்  #1 கடவுள் வாழ்த்து – அடிநேர் உரை     ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து ஆறு அங்கங்களையும் அறிந்த அந்தணர்களுக்கு அரிய வேதங்கள் பலவற்றையும் அறிவித்து, தேறு நீர் சடை கரந்து திரிபுரம் தீமடுத்து தெளிந்த நீரைக்கொண்ட கங்கையைத் தன் சடையில் அடக்கிக்கொண்டு, முப்புரங்களையும் தீயூட்டி, கூறாமல் குறித்ததன் மேற்செல்லும் கடும் கூளி சொல்லாமலேயே மனத்தால் நினைத்த எப்பொருளுக்கும் எட்டாமல் நிற்கும் கடிய கூளியின் மாறா போர் மணி மிடற்று எண் கையாய் கேள் இனி புறமுதுகிடாத போரினையும், நீலமணி போன்ற கழுத்தினையும், எட்டுக்கைகளையும் உடையவனே! கேட்பாயாக! படு பறை பல இயம்ப பல் உருவம் பெயர்த்து நீ        5 ஒலிக்கின்ற பறைகள் பல முழங்க, பல்வேறு உருவங்களையும் உன்னுள்ளே அடக்கிக்கொண்டு…

Read More

பரிபாடல் 25.3 – 35.13

    # 25.3 வையை # 25.3 வையை அறவோர் உள்ளார் அரு மறை காப்ப மதுரையில் அறவோராய் உள்ளவர்கள் அரிய வேதங்களைக் கடைப்பிடித்து நிற்க ———– ———— ———— ———- ———- ———- ————- ————— செறுநர் விழையா செறிந்த நம் கேண்மை பகைவரும் விரும்பும் நெருக்கமான நம்முடைய நட்பு மறுமுறை யானும் இயைக நெறி மாண்ட மறுபிறப்பிலும் இயைவதாக!  ஒழுக்கத்தால் மாட்சிமைப்பட்ட  தண் வரல் வையை எமக்கு குளிர்ந்த நீர் வரவினையுடைய வையையே எமக்கு;     # 26.4 வையை # 26.4 வையை தெரி மாண் தமிழ் மும்மை தென்னம்பொருப்பன் ஆராய்ந்தெடுத்த மாட்சிமைக்குரிய தமிழ் மூன்றினையும் கொண்ட தெற்குமலைக்குத் தலைவனான  பாண்டியனின் பரி_மா நிரையின் பரந்தன்று வையை குதிரைகள் வரிசையாக பரந்து வருவதைப் போன்று பரவி வருகிறது வையை;  …

Read More

பரிபாடல் 22-24

    # 21 செவ்வேள் – பாடியவர் : நல்லச்சுதனார் # 21 செவ்வேள் பண் அமைத்தவர் : கண்ணாகனார்- பண் : காந்தாரம்       ஊர்ந்ததை எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னி நீ ஊர்ந்த ஊர்தி, நெருப்பைப்போன்ற நெற்றிப்பட்டம் இடையே கிடந்து ஒளிரும் நெற்றியையுடைய பொரு சமம் கடந்த புகழ் சால் வேழம் போரிடும் போர்களிலெல்லாம் வெற்றிகண்ட புகழ் நிறைந்த யானை; தொட்டதை தைப்பு அமை சருமத்தின் தாள் இயை தாமரை நீ அணிந்துகொண்டது, தைப்பதற்காக அமைந்த தோலினால், உன் திருவடிக்குப் பொருந்திய தாமரை மலர் போன்று செய்யப்பட்டது; துப்பு அமை துவர் நீர் துறை மறை அழுத்திய செம்பவளம் போன்ற துவர்நீர்த் துறையில் முழுதும் மறையும்படி அழுத்திப் பதனிடப்பட்டது; வெரிந தோலொடு முழு மயிர் மிடைந்த அதன்…

Read More

பரிபாடல் 11-15

# 11 வையை – பாடியவர் : நல்லந்துவனார் # 11 வையை பண் அமைத்தவர் : நாகனார்  பண் : பண்ணுப்பாலையாழ்       விரி கதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப விரிந்த ஒளிக்கதிர்களையுடைய திங்களுடன் அகன்ற வானத்தில் சேர்க்கப்படுவனவாகிய, எரி சடை எழில் வேழம் தலை என கீழ் இருந்து எரி என்னும் கார்த்திகை, சடை என்னும் திருவாதிரை, அழகிய யானை என்னும் பரணி ஆகிய நாள்கள் முதலாக, இவற்றின் பெயரால் தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள் இடபவீதி, மிதுனவீதி, மேடவீதி என்று வேறுபடுத்திக்கூறப்பட்ட ஒவ்வொன்றும் ஒன்பது நாட்களைக்கொண்ட, மூவகை இராசிகளுள் உரு கெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர மிக்க வெண்மையான நிறத்தைக்கொண்ட வெள்ளியானது இடபராசியைச் சேர, வருடையை படிமகன் வாய்ப்ப பொருள் தெரி மேடராசியைச் செவ்வாய் சேர்ந்துநிற்க,…

Read More

பரிபாடல் 6-10

# 6 வையை – பாடியவர் : ஆசிரியர் நல்லந்துவனார் # 6 வையை பண் அமைத்தவர் : மருத்துவன் நல்லச்சுதனார் – பண் : பண்ணுப்பாலையாழ்       நிறை கடல் முகந்து உராய் நிறைந்து நீர் துளும்பும் தம் நீர் நிறைந்த கடலில் நீரை முகந்து வானத்தில் பரவி, நிறைவாக நீர் தளும்பும் தம் பொறை தவிர்பு அசைவிட பொழிந்தன்று வானம் பாரத்தை இறக்கிவைத்து இளைப்பாறும்பொருட்டு பொழிந்தன மேகங்கள்; நிலம் மறைவது போல் மலிர் புனல் தலை தலைஇ நிலம் முழுவதும் மறைந்துவிடுவதுபோல் மிகுந்த வெள்ளம் இடங்கள்தோறும் கூடி, மலைய இனம் கலங்க மலைய மயில் அகவ மலையிலுள்ள விலங்கினங்கள் கலங்க, மலையிலுள்ள மயில்கள் கூவ, மலை மாசு கழிய கதழும் அருவி இழியும் மலையின் மாசுகள் கழிந்துபோகும்படி, விரைவான அருவியாய் இறங்கும்…

Read More

பரிபாடல் 1-5

# 1 திருமால் – பாடியவர், பண் அமைத்தவர் பெயர் தெரியவில்லை. # 1 திருமால்     ஆயிரம் விரித்த அணங்கு உடை அரும் தலை ஆயிரமாய்ப் படம் விரித்த அச்சந்தரும் அரிய தலைகளும் தீ உமிழ் திறலொடு முடி மிசை அணவர சினமாகிய தீயை உமிழ்கின்ற வலிமையுடன் உன் திருமுடியின் மேல் கவித்துநிற்க, மா உடை மலர் மார்பின் மை இல் வால் வளை மேனி திருமகள் வீற்றிருக்கும் அகன்ற மார்பினைக்கொண்டும், குற்றமில்லாத வெண்மையான சங்கினைப் போன்ற மேனியுடனும், சேய் உயர் பணை மிசை எழில் வேழம் ஏந்திய மிக உயர்ந்த மூங்கில் கோலின் உச்சியில் அழகிய யானைக்கொடியை உயர்த்தியபடியும், வாய் வாங்கும் வளை நாஞ்சில் ஒரு_குழை_ஒருவனை                      5 கூர்மை செய்யப்பட்ட வளைந்த கலப்பைப் படையினைக் கொண்டும், ஒற்றைக் குழையை உடைய பலதேவனாகவும் விளங்குகிறாய்!…

Read More

பதிற்றுப்பத்து 51-94

    ஆறாம் பத்து              ஆறாம் பத்து                    காக்கைபாடினியார் நச்செள்ளையார்       காக்கைபாடினியார் நச்செள்ளையார்     # 51 பாட்டு 51 # 51 பாட்டு 51 துளங்கு நீர் வியல்_அகம் கலங்க கால் பொர அசைகின்ற நீரையுடைய அகன்ற கடற்பரப்பு கலங்கும்படி காற்று மோதுவதால் விளங்கு இரும் புணரி உரும் என முழங்கும் ஒளிவிட்டு எழுகின்ற பெரிய அலைகள் இடி போல முழங்கும் கடல் சேர் கானல் குட புலம் முன்னி கடலைச் சேர்ந்த கடற்கரைச் சோலையுள்ள மேற்கு நிலப்பகுதியை நோக்கிச் சென்று, கூவல் துழந்த தடம் தாள் நாரை பள்ளங்களில் மீனைத் தேடித் துழாவிய பெரிய கால்களையுடைய நாரை, குவி இணர் ஞாழல் மா சினை சேக்கும் குவிந்த பூங்கொத்துகளையுடைய ஞாழல் மரத்தின் பெரிய கிளையில் சென்றுதங்கும்,ழ்ர் வண்டு இறைகொண்ட தண்…

Read More

பாடல் 10. நெய்தல் திணை பாடியவர் – அம்மூவனார்

துறை – இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று தோழி சொல்லியது மரபு மூலம் – உரிதினின் பெயர்தல் வேண்டும் வான்கடற் பரப்பிற் றூவற் கெதிரிய மீன்கண் டன்ன மெல்லரும் பூழ்த்த முடவுமுதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினைப் புள்ளிறை கூரும் மெல்லம் புலம்ப 5 நெய்த லுண்கண் பைதல கலுழப் பிரித லெண்ணினை யாயி னன்று மரிதுதுற் றனையாற் பெரும வுரிதினின் கொண்டாங்குப் பெயர்தல் வேண்டுங் கொண்டலொடு குரூஉத்திரைப் புணரி யடைதரு மெக்கர்ப் 10 பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர் மோட்டுமண லடைகரைக் கோட்டுமீன் கொண்டி, மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும் வளங்கெழு தொண்டி யன்னவிவள் நலனே சொற்பிரிப்பு மூலம் வான் கடல் பரப்பில் தூவற்கு எதிரிய, மீன் கண்டு அன்ன மெல் அரும்பு ஊழ்த்த, முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச்…

Read More