நீ – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நீ (8)

நீ என் ஒரு பெயர் நெடு முதல் குறுகும் – எழுத். உரு:7/1
நீ என் பெயரும் இடக்கர் பெயரும் – எழுத். உயி.மயங்:48/1
நீ என் ஒரு பெயர் உருபு இயல் நிலையும் – எழுத். உயி.மயங்:51/1
எல்லாம் நீயிர் நீ என கிளந்து – சொல். பெயர்:20/3
நீயிர் நீ என வரூஉம் கிளவி – சொல். பெயர்:34/1
நீ என் கிளவி ஒருமைக்கு உரித்தே – சொல். பெயர்:35/2
ஏனது சுவைப்பினும் நீ கை தொட்டது – பொருள். கற்:5/12
இரவினும் பகலினும் நீ வா என்றலும் – பொருள். பொருளி:16/4
TOP


நீக்கலின் (2)

நீக்கலின் வந்த தம் உறு விழுமமும் – பொருள். அகத்:39/3
நீக்கலின் ஆகிய நிலைமையும் நோக்கி – பொருள். கள:11/19
TOP


நீக்கி (3)

சிறந்த நாளினில் செற்றம் நீக்கி – பொருள். புறத்:36/7
பிறந்த_நாள்-வயின் பெருமங்கலமும் – 36/8
நிரம்ப நீக்கி நிறுத்தல் அன்றியும் – பொருள். பொருளி:43/2
ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கி – பொருள். மரபி:104/3
தெற்றென ஒரு பொருள் ஒற்றுமை கொளீஇ – 104/4
TOP


நீக்கிய (2)

பரிவின் நீக்கிய பகுதி-கண்ணும் – பொருள். கற்:5/38
நளியின் நீக்கிய இளி வரு நிலையும் – பொருள். கற்:6/10
TOP


நீங்கி (1)

வினையின் நீங்கி விளங்கிய அறிவின் – பொருள். மரபி:94/1
TOP


நீங்கிய (1)

பகுதியின் நீங்கிய தகுதி-கண்ணும் – பொருள். கற்:6/27
TOP


நீங்கின் (1)

மெய் உயிர் நீங்கின் தன் உரு ஆகும் – எழுத். புணர்:37/1
TOP


நீங்கு (1)

வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும் – பொருள். புறத்:33/2
TOP


நீட்டம் (3)

நீட்டம் வேண்டின் அ அளபு உடைய – எழுத். நூல்:6/1
நின்ற ஈற்று அயல் நீட்டம் வேண்டும் – சொல். விளி:27/2
அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம் – சொல். விளி:36/1
அ முறைப்பெயரொடு சிவணாது ஆயினும் – 36/2
TOP


நீட்டமும் (1)

உரைப்பொருள் கிளவி நீட்டமும் வரையார் – எழுத். உயி.மயங்:10/1
TOP


நீட்டலும் (1)

நீட்டும் வழி நீட்டலும் குறுக்கும் வழி குறுக்கலும் – சொல். எச்ச:7/4
TOP


நீட்டும் (1)

நீட்டும் வழி நீட்டலும் குறுக்கும் வழி குறுக்கலும் – சொல். எச்ச:7/4
TOP


நீட (1)

நீட வருதல் செய்யுளுள் உரித்தே – எழுத். உயி.மயங்:6/1
TOP


நீடல் (1)

முதல் நிலை நீடல் ஆ-வயினான – எழுத். குற்.புண:50/3
TOP


நீடலும் (3)

அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும் – எழுத். நூல்:33/1
உள என மொழிப இசையொடு சிவணிய – 33/2
ஈற்று-மிசை அகரம் நீடலும் உரித்தே – எழுத். புள்.மயங்:16/2
மூன்றன் முதல் நிலை நீடலும் உரித்தே – எழுத். குற்.புண:52/1
TOP


நீடிய (2)

சுட்டு சினை நீடிய ஐ என் இறுதியும் – எழுத். தொகை:17/3
சுட்டு சினை நீடிய மென்றொடர் மொழியும் – எழுத். குற்.புண:22/1
TOP


நீடினும் (2)

முதல் நிலை நீடினும் மானம் இல்லை – எழுத். குற்.புண:60/1
நொந்து தெளிவு ஒழிப்பினும் அச்சம் நீடினும் – பொருள். கள:20/8
பிரிந்த-வழி கலங்கினும் பெற்ற-வழி மலியினும் – 20/9
TOP


நீடு (3)

பலவற்று இறுதி நீடு மொழி உளவே – எழுத். உயி.மயங்:11/1
ழகர உகரம் நீடு இடன் உடைத்தே – எழுத். உயி.மயங்:59/1
நீடு நினைந்து இரங்கல் கூடுதல் உறுதல் – பொருள். கள:11/3
TOP


நீடும்மே (1)

ஆறு என் கிளவி முதல் நீடும்மே – எழுத். குற்.புண:53/1
TOP


நீத்த (5)

கடி மனை நீத்த பாலின்-கண்ணும் – பொருள். புறத்:21/16
காமம் நீத்த பாலினானும் என்று – பொருள். புறத்:21/23
நீத்த கணவன் தீர்த்த வேலின் – பொருள். புறத்:24/12
நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர் – பொருள். கற்:9/27
அல்லல் நீத்த உவகை நான்கே – பொருள். மெய்ப்:11/2
TOP


நீத்து (1)

நீத்து அகன்று உறையார் என்மனார் புலவர் – பொருள். கற்:46/2
TOP


நீயிர் (2)

எல்லாம் நீயிர் நீ என கிளந்து – சொல். பெயர்:20/3
நீயிர் நீ என வரூஉம் கிளவி – சொல். பெயர்:34/1
TOP


நீர் (6)

நீர் செரு வீழ்ந்த பாசியும் அதாஅன்று – பொருள். புறத்:13/7
பிற நீர் மாக்களின் அறிய ஆயிடை – பொருள். கள:27/3
பெய் நீர் போலும் உணர்விற்று என்ப – பொருள். கள:27/4
நீர் வாழ் சாதியும் அது பெறற்கு உரிய – பொருள். மரபி:42/1
நீர் வாழ் சாதியுள் நந்தும் நாகே – பொருள். மரபி:63/1
நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும் – பொருள். மரபி:89/1
TOP


நீர்ப்படை (1)

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல் – பொருள். புறத்:5/19
TOP


நீரின் (1)

நீரின் குறிப்பின் நிரம்ப கூறி – பொருள். கள:11/12
TOP