ஐ – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஐ (36)

ஆ ஈ ஊ ஏ ஐ – எழுத். நூல்:4/1
ஓ ஔ என்னும் அ பால் ஏழும் – 4/2
ஐ ஔ என்னும் ஆ ஈர் எழுத்திற்கு – எழுத். மொழி:9/1
ஐ என் நெடும் சினை மெய் பெற தோன்றும் – எழுத். மொழி:23/2
அ ஐ ஔ எனும் மூன்று அலங்கடையே – எழுத். மொழி:29/2
இ ஈ எ ஏ ஐ என இசைக்கும் – எழுத். பிறப்:4/1
ஐ ஒடு கு இன் அது கண் என்னும் – எழுத். புணர்:11/1
வேற்றுமை அல் வழி இ ஐ என்னும் – எழுத். தொகை:16/1
சுட்டு சினை நீடிய ஐ என் இறுதியும் – எழுத். தொகை:17/3
யா என் வினாவின் ஐ என் இறுதியும் – எழுத். தொகை:17/4
சுட்டு முதல் ஆகிய ஐ என் இறுதி – எழுத். உரு:5/1
யா என் வினாவின் ஐ என் இறுதியும் – எழுத். உரு:6/1
ஐ வரு-காலை மெய் வரைந்து கெடுதலும் – எழுத். உயி.மயங்:56/2
ஐ என் இறுதி அரை வரைந்து கெடுமே – எழுத். உயி.மயங்:81/3
நிலை இன்று ஆகும் ஐ என் உயிரே – எழுத். உயி.மயங்:82/2
கொடி முன் வரினே ஐ அவண் நிற்ப – எழுத். உயி.மயங்:83/1
ஐ என் இறுதி அவா முன் வரினே – எழுத். உயி.மயங்:86/2
வல்லெழுத்து மிகுதலும் ஐ இடை வருதலும் – எழுத். புள்.மயங்:77/2
ஐ அம் பல் என வரூஉம் இறுதி – எழுத். புள்.மயங்:98/1
பெயர் ஐ ஒடு கு – சொல். வேற்.இய:3/2
ஐ என பெயரிய வேற்றுமை கிளவி – சொல். வேற்.இய:10/2
முதல்-கண் வரினே சினைக்கு ஐ வருமே – சொல். வேற்.மயங்:4/2
முதல் முன் ஐ வரின் கண் என் வேற்றுமை – சொல். வேற்.மயங்:5/1
கு ஐ ஆன் என வரூஉம் இறுதி – சொல். வேற்.மயங்:25/1
இ உ ஐ ஓ என்னும் இறுதி – சொல். விளி:3/2
இ ஈ ஆகும் ஐ ஆய் ஆகும் – சொல். விளி:4/2
முறைப்பெயர் மருங்கின் ஐ என் இறுதி – சொல். விளி:9/1
இ ஐ ஆய் என வரூஉம் மூன்றும் – சொல். வினை:26/3
ஐ வியப்பு ஆகும் – சொல். உரி:87/1
ஐ வகை மரபின் அரசர் பக்கமும் – பொருள். புறத்:20/2
தவல்_அரும் சிறப்பின் ஐ நிலம் பெறுமே – பொருள். கள:15/2
ஐ வகை அடியும் விரிக்கும்-காலை – பொருள். செய்யு:50/1
ஐ வகை அடியும் ஆசிரியக்கு உரிய – பொருள். செய்யு:52/1
ஐ சீர் அடியும் உள என மொழிப – பொருள். செய்யு:63/2
ஐ சீர் அடுக்கியும் ஆறு மெய் பெற்றும் – பொருள். செய்யு:154/2
ஐ ஐந்து ஆகும் இழிபு அடிக்கு எல்லை – பொருள். செய்யு:162/3
மாவும் மாக்களும் ஐ அறிவினவே – பொருள். மரபி:32/1

TOP


ஐகார (3)

ஐகார ஔகாரம் கானொடும் தோன்றும் – எழுத். புணர்:35/1
ஐகார வேற்றுமை திரிபு என மொழிப – எழுத். தொகை:15/13
ஐகார இறுதி பெயர்நிலை முன்னர் – எழுத். உயி.மயங்:78/1

TOP


ஐகாரம் (1)

அகர இகரம் ஐகாரம் ஆகும் – எழுத். மொழி:21/1

TOP


ஐகாரமும் (1)

நம் ஊர்ந்து வரூஉம் இகர ஐகாரமும் – சொல். பெயர்:9/4
முறைமை சுட்டா மகனும் மகளும் – 9/5

TOP


ஐஞ்ஞூற்றொடு (1)

ஐயீர் ஆயிரத்து ஆறு ஐஞ்ஞூற்றொடு – பொருள். செய்யு:101/2
தொண்டு தலையிட்ட பத்து குறை எழுநூற்று – 101/3

TOP


ஐந்தன் (4)

ஐந்தன் ஒற்றே மகாரம் ஆகும் – எழுத். குற்.புண:38/1
ஐந்தன் ஒற்றே மெல்லெழுத்து ஆகும் – எழுத். குற்.புண:43/1
ஐந்தன் ஒற்றே முந்தையது கெடுமே – எழுத். குற்.புண:49/1
ஐந்தன் ஒற்றே யகாரம் ஆகும் – எழுத். குற்.புண:63/1

TOP


ஐந்தனும் (1)

மூன்றனும் ஐந்தனும் தோன்ற கூறிய – சொல். வேற்.மயங்:9/1

TOP


ஐந்தாகுவதே (1)

ஐந்தாகுவதே – சொல். வேற்.இய:16/1
இன் என பெயரிய வேற்றுமை கிளவி – 16/2

TOP


ஐந்திணை (2)

நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய – பொருள். அகத்:2/2
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் – பொருள். கள:1/2

TOP


ஐந்திணையும் (1)

மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும் – பொருள். அகத்:54/1
சுட்டி ஒருவர் பெயர் கொள பெறாஅர் – 54/2

TOP


ஐந்து (13)

க த ந ப ம எனும் ஆ ஐந்து எழுத்தும் – எழுத். மொழி:28/1
மூன்றும் நான்கும் ஐந்து என் கிளவியும் – எழுத். குற்.புண:51/1
ஈற்றசை இ ஐந்து ஏகாரம்மே – சொல். இடை:9/2
ஈர்_ஐந்து ஆகும் என்ப பேர் இசை – பொருள். புறத்:24/18
பொருந்திய நான்கே ஐந்து என மொழிப – பொருள். மெய்ப்:17/3
உவம போலி ஐந்து என மொழிப – பொருள். உவம:24/1
மூ_ஐந்து எழுத்தே நெடிலடிக்கு அளவே – பொருள். செய்யு:39/1
சீர் நிலை-தானே ஐந்து எழுத்து இறவாது – பொருள். செய்யு:41/1
இன் சீர் வகையின் ஐந்து அடிக்கும் உரிய – பொருள். செய்யு:54/2
ஐ ஐந்து ஆகும் இழிபு அடிக்கு எல்லை – பொருள். செய்யு:162/3
வண்ணம்-தாமே நால்_ஐந்து என்ப – பொருள். செய்யு:212/1
குறளடி முதலா ஐந்து அடி ஒப்பித்து – பொருள். செய்யு:242/2
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே – பொருள். மரபி:27/5

TOP


ஐந்தும் (15)

எ ஒ என்னும் அ பால் ஐந்தும் – எழுத். நூல்:3/3
ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப – 3/4
குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே – எழுத். மொழி:11/1
அ-பால் ஐந்தும் அவற்று ஓர்_அன்ன – எழுத். பிறப்:4/2
அ-பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும் – எழுத். பிறப்:5/2
ஐந்தும் மூன்றும் ந ம வரு-காலை – எழுத். குற்.புண:46/1
நான்கும் ஐந்தும் ஒற்று மெய் திரியா – எழுத். குற்.புண:57/1
அச்ச கிளவிக்கு ஐந்தும் இரண்டும் – சொல். வேற்.மயங்:17/1
அ நால் ஐந்தும் மூன்று தலை இட்ட – சொல். வினை:11/2
அச்சம் முன்தேற்று ஆ ஈர் ஐந்தும் – சொல். உரி:85/4
மெய்ப்பட தோன்றும் பொருட்டு ஆகும்மே – 85/5
குறிப்பே இசையே ஆ ஈர்_ஐந்தும் – சொல். எச்ச:34/3
கிழக்கிடு பொருளொடு ஐந்தும் ஆகும் – பொருள். உவம:5/1
ஆறு தலை இட்ட அ நால்_ஐந்தும் – பொருள். செய்யு:1/10
அளபெடை தலைப்பெய ஐந்தும் ஆகும் – பொருள். செய்யு:89/1
மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய – பொருள். மரபி:15/2
நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும் – பொருள். மரபி:89/1
கலந்த மயக்கம் உலகம் ஆதலின் – 89/2

TOP


ஐந்தே (1)

கெடல் அரு மரபின் உள்ளுறை ஐந்தே – பொருள். பொருளி:48/2

TOP


ஐந்தொடு (1)

ஆ ஈர்_ஐந்தொடு பிறவும் அன்ன – சொல். கிளவி:58/4

TOP


ஐம் (6)

வஃகான் மெய் கெட சுட்டு முதல் ஐம் முன் – எழுத். புணர்:20/1
ஐம் பால் அறியும் பண்பு தொகு மொழியும் – எழுத். குற்.புண:77/5
இரு திணை மருங்கின் ஐம் பால் அறிய – சொல். கிளவி:10/1
இரு திணை பிரிந்த ஐம் பால் கிளவிக்கும் – சொல். பெயர்:7/1
ஐம் பாற்கும் உரிய தோன்றல் ஆறே – சொல். வினை:28/2
ஈர்_ஐம் குற்றமும் இன்றி நேரிதின் – பொருள். மரபி:98/3

TOP


ஐம்பது (1)

நாலீர் ஐம்பது உயர்பு அடி ஆக – பொருள். செய்யு:162/2

TOP


ஐம்பால் (1)

இரு திணை ஐம்பால் இயல் நெறி வழாஅமை – பொருள். மரபி:89/3

TOP


ஐம்மை (1)

அரியே ஐம்மை – சொல். உரி:58/1

TOP


ஐய (4)

பால் மயக்கு உற்ற ஐய கிளவி – சொல். கிளவி:23/1
ஐய செய்கை தாய்க்கு எதிர் மறுத்து – பொருள். கள:23/37
ஐய கிளவியின் அறிதலும் உரித்தே – பொருள். கள:26/3
ஐய கிளவி ஆடூஉவிற்கு உரித்தே – பொருள். பொருளி:44/2

TOP


ஐயம் (7)

ஆன் இடை வருதல் ஐயம் இன்றே – எழுத். உயி.மயங்:45/2
அறிந்த பொருள்-வயின் ஐயம் தீர்தற்கு – சொல். கிளவி:32/3
எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை – சொல். இடை:7/1
கொல்லே ஐயம் – சொல். இடை:20/1
சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப – பொருள். கள:3/1
வியர்த்தல் ஐயம் மிகை நடுக்கு எனாஅ – பொருள். மெய்ப்:12/9
ஐயம் செய்தல் அவன் தமர் உவத்தல் – பொருள். மெய்ப்:22/7

TOP


ஐயமும் (3)

மாறு கொள் எச்சமும் வினாவும் ஐயமும் – எழுத். உயி.மயங்:88/1
கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும் – 88/2
ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே – சொல். உரி:86/1
ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கி – பொருள். மரபி:104/3

TOP


ஐயர் (2)

ஐயர் யாத்தனர் கரணம் என்ப – பொருள். கற்:4/2
ஐயர் பாங்கினும் அமரர் சுட்டியும் – பொருள். கற்:5/29

TOP


ஐயின் (1)

ஐயின் முன்னரும் அ இயல் நிலையும் – எழுத். புணர்:25/1

TOP


ஐயீர் (1)

ஐயீர் ஆயிரத்து ஆறு ஐஞ்ஞூற்றொடு – பொருள். செய்யு:101/2

TOP


ஐயும் (5)

சுட்டு முதல் வகரம் ஐயும் மெய்யும் – எழுத். உரு:11/1
சினை நிலை கிளவிக்கு ஐயும் கண்ணும் – சொல். வேற்.மயங்:2/1
ஓம்படை கிளவிக்கு ஐயும் ஆனும் – சொல். வேற்.மயங்:14/1
ஐயும் கண்ணும் அல்லா பொருள்-வயின் – சொல். வேற்.மயங்:22/1
குவ்வும் ஐயும் இல் என மொழிப – சொல். வேற்.மயங்:26/2

TOP


ஐயொடும் (1)

ஆ-வயின் வகரம் ஐயொடும் கெடுமே – எழுத். உரு:6/3

TOP