த – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தக 2
தகட்டு 1
தகடு 1
தகர 1
தகரன் 1
தகை 1
தசம் 1
தட்டத்து 1
தட 6
தடவில் 1
தடிந்த 2
தடைஇ 1
தடைஇய 1
தண் 13
தண்ணீர் 1
தண்மையின் 1
தத்து 1
தத்து_உற்று 1
தந்த 1
தந்து 1
தம் 2
தரு 1
தரூஉம் 1
தலை 6
தலைக்கொண்ட 1
தலைத்தந்து 1
தலைமையர் 1
தலைய 1
தலைவ 1
தலைவர் 1
தலைஇய 1
தவ்வென்று 1
தழீஇ 4
தழை 1
தளிர் 4
தறி 1
தன் 3
தன்னில் 1

தக (2)

இணைப்பு_உறு பிணையல் வளைஇ துணை தக
வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர் – திரு 30,31
ஆண்டு_ஆண்டு ஆயினும் ஆக காண்_தக – திரு 250

மேல்


தகட்டு (1)

பெரும் தண் சண்பகம் செரீஇ கரும் தகட்டு
உளை பூ மருதின் ஒள் இணர் அட்டி – திரு 27,28

மேல்


தகடு (1)

தகடு கண் புதைய கொளீஇ துகள் தீர்ந்து – நெடு 127

மேல்


தகர (1)

தண் நறும் தகர முளரி நெருப்பு அமைத்து – நெடு 55

மேல்


தகரன் (1)

தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம் – திரு 210

மேல்


தகை (1)

முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து – திரு 139

மேல்


தசம் (1)

தசம் நான்கு எய்திய பணை மருள் நோன் தாள் – நெடு 115

மேல்


தட்டத்து (1)

புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து
தகடு கண் புதைய கொளீஇ துகள் தீர்ந்து – நெடு 126,127

மேல்


தட (6)

செறுநர் தேய்த்த செல் உறழ் தட கை – திரு 5
ஒண் தொடி தட கையின் ஏந்தி வெருவர – திரு 54
தாழ் பெரும் தட கை உயர்த்த யானை – திரு 158
முழவு உறழ் தட கையின் இயல ஏந்தி – திரு 215
வேல் கெழு தட கை சால் பெரும் செல்வ – திரு 265
நீள் திரள் தட கை நிலம் மிசை புரள – நெடு 170

மேல்


தடவில் (1)

பகு வாய் தடவில் செம் நெருப்பு ஆர – நெடு 66

மேல்


தடிந்த (2)

சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் – திரு 46
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து – திரு 60

மேல்


தடைஇ (1)

கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ
கரும் கோட்டு சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப – நெடு 69,70

மேல்


தடைஇய (1)

அம் பணை தடைஇய மென் தோள் முகிழ் முலை – நெடு 149

மேல்


தண் (13)

தலை பெயல் தலைஇய தண் நறும் கானத்து – திரு 9
உருள் பூ தண் தார் புரளும் மார்பினன் – திரு 11
பெரும் தண் சண்பகம் செரீஇ கரும் தகட்டு – திரு 27
பெரும் தண் கண்ணி மிலைந்த சென்னியன் – திரு 44
சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை – திரு 203
செயலை தண் தளிர் துயல்வரும் காதினன் – திரு 207
குறும்பொறி கொண்ட நறும் தண் சாயல் – திரு 213
பெரும் தண் கணவீர நறும் தண் மாலை – திரு 236
பெரும் தண் கணவீர நறும் தண் மாலை – திரு 236
தண் கமழ் அலர் இறால் சிதைய நன் பல – திரு 300
துவலை தண் துளி பேணார் பகல் இறந்து – நெடு 34
தண் நறும் தகர முளரி நெருப்பு அமைத்து – நெடு 55
வடந்தை தண் வளி எறி-தொறும் நுடங்கி – நெடு 173

மேல்


தண்ணீர் (1)

தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார் – நெடு 65

மேல்


தண்மையின் (1)

தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை – நெடு 68

மேல்


தத்து (1)

முத்து உடை வான் கோடு தழீஇ தத்து_உற்று – திரு 305

மேல்


தத்து_உற்று (1)

முத்து உடை வான் கோடு தழீஇ தத்து_உற்று
நன் பொன் மணி நிறம் கிளர பொன் கொழியா – திரு 305,306

மேல்


தந்த (1)

வடவர் தந்த வான் கேழ் வட்டம் – நெடு 51

மேல்


தந்து (1)

இன்னா அரும் படர் தீர விறல் தந்து
இன்னே முடிக தில் அம்ம மின் அவிர் – நெடு 167,168

மேல்


தம் (2)

தா இல் கொள்கை தம் தொழில் முடி-மார் – திரு 89
உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொள்-மார் – திரு 173

மேல்


தரு (1)

தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து – நெடு 90

மேல்


தரூஉம் (1)

வேனில் பள்ளி தென்_வளி தரூஉம்
நேர் வாய் கட்டளை திரியாது திண் நிலை – நெடு 61,62

மேல்


தலை (6)

தலை பெயல் தலைஇய தண் நறும் கானத்து – திரு 9
கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை
ஒண் தொடி தட கையின் ஏந்தி வெருவர – திரு 53,54
மாண் தலை கொடியொடு மண்ணி அமைவர – திரு 227
பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி – நெடு 103
திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக – நெடு 160
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு – நெடு 176

மேல்


தலைக்கொண்ட (1)

உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு – திரு 121

மேல்


தலைத்தந்து (1)

மென் தோள் பல் பிணை தழீஇ தலைத்தந்து
குன்று-தொறு ஆடலும் நின்ற தன் பண்பே அதாஅன்று – திரு 216,217

மேல்


தலைமையர் (1)

தாம் வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு – திரு 134

மேல்


தலைய (1)

தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல் – நெடு 174

மேல்


தலைவ (1)

வானோர் வணங்கு வில் தானை தலைவ
மாலை மார்ப நூல் அறி புலவ – திரு 260,261

மேல்


தலைவர் (1)

பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக – திரு 162

மேல்


தலைஇய (1)

தலை பெயல் தலைஇய தண் நறும் கானத்து – திரு 9

மேல்


தவ்வென்று (1)

தவ்வென்று அசைஇ தா துளி மறைப்ப – நெடு 185

மேல்


தழீஇ (4)

மென் தோள் பல் பிணை தழீஇ தலைத்தந்து – திரு 216
அணங்கு சால் உயர் நிலை தழீஇ பண்டை தன் – திரு 289
முத்து உடை வான் கோடு தழீஇ தத்து_உற்று – திரு 305
புடை வீழ் அம் துகில் இட_வயின் தழீஇ
வாள் தோள் கோத்த வன்கண் காளை – நெடு 181,182

மேல்


தழை (1)

சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ – திரு 203,204

மேல்


தளிர் (4)

வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர்
நுண் பூண் ஆகம் திளைப்ப திண் காழ் – திரு 31,32
அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்-தொறும் – திரு 144
செயலை தண் தளிர் துயல்வரும் காதினன் – திரு 207
தளிர் ஏர் மேனி தாய சுணங்கின் – நெடு 148

மேல்


தறி (1)

செம் கேழ் வட்டம் சுருக்கி கொடும் தறி
சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க – நெடு 58,59

மேல்


தன் (3)

உச்சி கூப்பிய கையினர் தன் புகழ்ந்து – திரு 185
குன்று-தொறு ஆடலும் நின்ற தன் பண்பே அதாஅன்று – திரு 217
அணங்கு சால் உயர் நிலை தழீஇ பண்டை தன்
மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி – திரு 289,290

மேல்


தன்னில் (1)

ஏமுறு ஞாலம்_தன்னில் தோன்றி – திரு 163

மேல்