தி – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

திகழ் (1)

சீர் திகழ் சிலம்பு_அகம் சிலம்ப பாடி – திரு 40

மேல்


திங்கள் (1)

திங்கள் போல திசை விளக்கும்மே ஒரு முகம் – திரு 98

மேல்


திசை (1)

திங்கள் போல திசை விளக்கும்மே ஒரு முகம் – திரு 98

மேல்


திண் (5)

நுண் பூண் ஆகம் திளைப்ப திண் காழ் – திரு 32
அந்தர பல் இயம் கறங்க திண் காழ் – திரு 119
நேர் வாய் கட்டளை திரியாது திண் நிலை – நெடு 62
மணி கண்டு அன்ன மா திரள் திண் காழ் – நெடு 111
திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக – நெடு 160

மேல்


திணி (2)

வல வயின் உயரிய பலர் புகழ் திணி தோள் – திரு 152
படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் – நெடு 31

மேல்


திதலையர் (1)

பொன் உரை கடுக்கும் திதலையர் இன் நகை – திரு 145

மேல்


திரண்டு (3)

நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு
தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற – நெடு 25,26
புடை திரண்டு இருந்த குடத்த இடை திரண்டு – நெடு 121
புடை திரண்டு இருந்த குடத்த இடை திரண்டு
உள்ளி நோன் முதல் பொருத்தி அடி அமைத்து – நெடு 121,122

மேல்


திரள் (3)

மணி கண்டு அன்ன மா திரள் திண் காழ் – நெடு 111
நுண் சேறு வழித்த நோன் நிலை திரள் கால் – நெடு 157
நீள் திரள் தட கை நிலம் மிசை புரள – நெடு 170

மேல்


திரி (2)

இரும்பு செய் விளக்கின் ஈர் திரி கொளீஇ – நெடு 42
பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி – நெடு 103

மேல்


திரிதர (1)

இரு கோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர
வெள்ளி வள்ளி வீங்கு இறை பணை தோள் – நெடு 35,36

மேல்


திரிதரு (1)

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆஅங்கு – திரு 1,2

மேல்


திரிதரும் (2)

விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து – நெடு 161
சிலரொடு திரிதரும் வேந்தன் – நெடு 187

மேல்


திரிந்த (1)

தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை – நெடு 68

மேல்


திரிப்ப (1)

ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை – திரு 111

மேல்


திரியாது (1)

நேர் வாய் கட்டளை திரியாது திண் நிலை – நெடு 62

மேல்


திரு (6)

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 24
திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து – திரு 70
முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி – திரு 84
எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும் – திரு 159
திரு நிலைபெற்ற தீது தீர் சிறப்பின் – நெடு 89
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து – நெடு 90

மேல்


திருத்தி (1)

ஊறா வறு முலை கொளீஇய கால் திருத்தி
புதுவது இயன்ற மெழுகு செய் பட மிசை – நெடு 158,159

மேல்


திருந்து (1)

திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ – திரு 204

மேல்


தில் (1)

இன்னே முடிக தில் அம்ம மின் அவிர் – நெடு 168

மேல்


திலகம் (1)

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 24

மேல்


திவவின் (1)

செவி நேர்பு வைத்த செய்வு_உறு திவவின்
நல் யாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின் – திரு 140,141

மேல்


திளைப்ப (2)

நுண் பூண் ஆகம் திளைப்ப திண் காழ் – திரு 32
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ – திரு 204

மேல்


திறம் (1)

ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து – நெடு 75

மேல்


திறல் (2)

அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல்
பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை – திரு 149,150
தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் – திரு 287

மேல்


திறலினர் (1)

தீ எழுந்து அன்ன திறலினர் தீ பட – திரு 171

மேல்


தின் (1)

நிணம் தின் வாயள் துணங்கை தூங்க – திரு 56

மேல்


தின்ற (1)

பொலம் தொடி தின்ற மயிர் வார் முன்கை – நெடு 141

மேல்