ஏ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

ஏத்த (2)

ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி – திரு 93
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் – திரு 221

மேல்


ஏத்தி (4)

வாழிய பெரிது என்று ஏத்தி பலர் உடன் – திரு 39
முந்து நீ கண்டு_உழி முகன் அமர்ந்து ஏத்தி
கைதொழூஉ பரவி கால் உற வணங்கி – திரு 251,252
யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது – திரு 277
இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி
தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் – திரு 286,287

மேல்


ஏத்தும் (1)

பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள் – திரு 274

மேல்


ஏந்தி (3)

ஒண் தொடி தட கையின் ஏந்தி வெருவர – திரு 54
விரை உறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து – திரு 188
முழவு உறழ் தட கையின் இயல ஏந்தி
மென் தோள் பல் பிணை தழீஇ தலைத்தந்து – திரு 215,216

மேல்


ஏந்திய (2)

ஈர்_இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை – திரு 157
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரி பனி – நெடு 164

மேல்


ஏந்தியது (1)

விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை – திரு 107,108

மேல்


ஏந்து (5)

பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் – திரு 146
பூ குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழை கண் – நெடு 38
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து – நெடு 102
இகல் மீக்கூறும் ஏந்து எழில் வரி நுதல் – நெடு 116
பூ துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல் – நெடு 145

மேல்


ஏமுற (1)

எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி – திரு 97

மேல்


ஏமுறு (1)

ஏமுறு ஞாலம்_தன்னில் தோன்றி – திரு 163

மேல்


ஏர் (1)

தளிர் ஏர் மேனி தாய சுணங்கின் – நெடு 148

மேல்


ஏர்பு (4)

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு – திரு 1
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ – நெடு 1
இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு
ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து – நெடு 74,75
தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல் – நெடு 174

மேல்


ஏரகத்து (1)

ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று – திரு 189

மேல்


ஏற்ப (1)

ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ – திரு 254,255

மேல்


ஏற்றை (1)

நெடு மயிர் எகின தூ நிற ஏற்றை
குறும் கால் அன்னமோடு உகளும் முன்கடை – நெடு 91,92

மேல்


ஏறிய (1)

எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும் – திரு 159

மேல்


ஏறு (3)

புள் அணி நீள் கொடி செல்வனும் வெள் ஏறு
வல வயின் உயரிய பலர் புகழ் திணி தோள் – திரு 151,152
ஆமா நல் ஏறு சிலைப்ப சேணின்று – திரு 315
ஏறு உடை இன நிரை வேறு புலம் பரப்பி – நெடு 4

மேல்


ஏறே (2)

மங்கையர் கணவ மைந்தர் ஏறே
வேல் கெழு தட கை சால் பெரும் செல்வ – திரு 264,265
பலர் புகழ் நன் மொழி புலவர் ஏறே
அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக – திரு 268,269

மேல்