மோ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மோக 7
மோக_வாரிதியில் 1
மோகத்திலே 1
மோகத்து 1
மோகம் 5
மோகம்கொள் 1
மோகமோ 1
மோகாதி 2
மோசம் 1
மோசம்போனேன் 1
மோலி 1
மோன 39
மோன_வாரிதியில் 1
மோனகுரு 8
மோனகுரு-தன் 1
மோனகுருவே 3
மோனத்தில் 2
மோனத்தை 1
மோனம் 15
மோனம்-தனக்கு 1
மோனம்-தனை 1
மோனமாம் 2
மோனமாய் 1
மோனமே 4
மோனருக்கு 1
மோனன் 3
மோனனுமாய் 1
மோனா 4

மோக (7)

வைத்து எமை மயக்கி இரு கண் வலையை வீசியே மாயா விலாச மோக_வாரிதியில் ஆழ்த்திடும் பாழான சிற்றிடை மடந்தையர்கள் சிற்றின்பமோ – தாயு:10 98/2
மோக ஆசை முறியிட்ட பெட்டியை மு_மலம் மிகுந்து ஒழுகு கேணியை மொய்த்து வெம் கிருமி தத்து கும்பியை முடங்கல் ஆர் கிடை சரக்கினை – தாயு:13 122/2
மோக இருள் மாயை வினை உயிர்கட்கு எல்லாம் மொய்த்தது என்-கொல் உபகார முயற்சியாக – தாயு:14 145/3
கொழும் தாது உறை மலர் கோதையர் மோக குரை கடலில் – தாயு:27 407/1
பழுதுண்டு பாவையர் மோக விகார பரவையிடை – தாயு:27 433/1
யோக நிலை ஞானிகளுக்கு ஒப்புவதோ மோக நிலை – தாயு:28 510/2
மெல்_இயலார் மோக விழற்கு இறைப்பேன் ஐயா நின் – தாயு:47 1357/1
மேல்


மோக_வாரிதியில் (1)

வைத்து எமை மயக்கி இரு கண் வலையை வீசியே மாயா விலாச மோக_வாரிதியில் ஆழ்த்திடும் பாழான சிற்றிடை மடந்தையர்கள் சிற்றின்பமோ – தாயு:10 98/2
மேல்


மோகத்திலே (1)

மோகத்திலே சிறிதும் ஒழியவிலை மெய்ஞ்ஞான மோனத்தில் நிற்க என்றால் முற்றாது பரிபாக சத்தி களனேக நின் மூதறிவிலே எழுந்த – தாயு:11 102/3
மேல்


மோகத்து (1)

முத்தமிழ் முழக்கமுடன் முத்த நகையார்களொடு முத்துமுத்தாய் குலாவி மோகத்து இருந்தும் என் யோகத்தின் நிலை நின்று மூச்சை பிடித்து அடைத்து – தாயு:11 105/2
மேல்


மோகம் (5)

மோகம் ஆதி தரு பாசம்-ஆனதை அறிந்துவிட்டு உனையும் எனையுமே முழுது உணர்ந்து பரமான இன்ப_வெளம் மூழ்கவேண்டும் இது இன்றியே – தாயு:13 126/3
நீயே இங்கு எளியேற்கும் தாக மோகம் நினைவூடே நின்று உணர்த்தி நிகழ்த்தலாலே – தாயு:41 597/1
ஏழைக்குறும்பு செய்யும் ஏந்து_இழையார் மோகம் எனும் – தாயு:45 1139/1
மோகம் மிகு மாயை முடியும் நாள் எந்நாளோ – தாயு:45 1163/2
வாள் ஆரும் கண்ணியர் மோகம் யம வாதை கனலை வளர்க்கும் மெய் என்றே – தாயு:54 1447/1
மேல்


மோகம்கொள் (1)

தெரிவாக ஊர்வன நடப்பன பறப்பன செயல் கொண்டு இருப்பன முதல் தேகங்கள் அத்தனையும் மோகம்கொள் பெளதிகம் சென்மித்த ஆங்கு இறக்கும் – தாயு:2 5/1
மேல்


மோகமோ (1)

மோகமோ மதமோ குரோதமோ லோபமோ முற்றும் மாற்சரியமோ-தான் முறியிட்டு எனை கொள்ளும் நிதியமோ தேட எனின் மூசு வரி வண்டு போல – தாயு:37 583/3
மேல்


மோகாதி (2)

மோகாதி அல்லலிலே மூழ்கினையே நெஞ்சே இ – தாயு:28 476/3
மோகாதி உண்டோ மொழியாய் பராபரமே – தாயு:43 933/2
மேல்


மோசம் (1)

மோசம் வரும் இதனாலே கற்றதும் கேட்டதும் தூர்ந்து முத்திக்கான – தாயு:24 322/2
மேல்


மோசம்போனேன் (1)

மோசம்போனேன் நான் முறையோ பராபரமே – தாயு:43 676/2
மேல்


மோலி (1)

மயல் அறு மந்திரம் சிக்ஷை சோதிடாதி மற்று அங்க நூல் வணங்க மெளன மோலி
அயர்வு_அற சென்னியில் வைத்து ராஜாங்கத்தில் அமர்ந்தது வைதிக சைவம் அழகு இது அந்தோ – தாயு:14 141/3,4
மேல்


மோன (39)

கங்குல் பகல அற நின்ற எல்லை உளது எது அது கருத்திற்கு இசைந்தது அதுவே கண்டன எலாம் மோன உரு வெளியதாகவும் கருதி அஞ்சலிசெய்குவாம் – தாயு:1 1/4
சைவ முதலாம் அளவு_இல் சமயமும் வகுத்து மேல் சமயம் கடந்த மோன சமரசம் வகுத்த நீ உன்னை யான் அணுகவும் தண் அருள் வகுக்கவிலையோ – தாயு:4 29/2
இரு_வினைகள் அற்று இரவு_பகல் என்பது அறியாத ஏகாந்த மோன ஞான இன்ப நிஷ்டையர் கோடி மணிமந்த்ர சித்தி நிலை எய்தினர்கள் கோடி சூழ – தாயு:5 44/2
கண்ணே கருத்தே என் எண்ணே எழுத்தே கதிக்கான மோன வடிவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 52/4
சத்தம் அற மோன நிலை பெற்றவர்கள் உய்வர் காண் சனகாதி துணிவு இது அன்றோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 105/4
இயல் அறிந்து வளர் மூல குண்டலியை இனிது இறைஞ்சி அவள் அருளினால் எல்லை_அற்று வளர் சோதி மூல அனல் எங்கள் மோன மனு முறையிலே – தாயு:13 127/2
சொல் மயக்கம்-அது தீர அங்கை கொடு மோன ஞானம்-அது உணர்த்தியே சுத்த நித்த அருள் இயல்பு-அதாக உள சோமசேகர கிர்பாளுவாய் – தாயு:13 131/3
பந்தம் அறும் மெய்ஞ்ஞானமான மோன பண்பு ஒன்றை அருளி அந்த பண்புக்கே-தான் – தாயு:14 151/1
பேதம் அபேதம் கெடவும் ஒரு பேசாமை பிறவாதோ ஆல் அடியில் பெரிய மோன
நாதன் ஒரு தரம் உலகம் பார்க்க இச்சை நண்ணானோ என்றுஎன்றே நானா ஆகி – தாயு:14 163/2,3
அன்று ஆலின் கீழ் இருந்து மோன ஞானம் அமைத்த சின்முத்திரை கடலே அமரர் ஏறே – தாயு:16 182/4
சித்த மோன சிவ சின்மயானந்தம் – தாயு:18 203/3
முதிய ஞானிகள் மோன பொருள் அது – தாயு:18 222/2
உணர்த்தி மோன ஒண் சுடர் வை வாள் தந்த – தாயு:21 293/3
மோன நாயக நின் அடிக்கு அன்பு இன்றி முற்றும் – தாயு:25 381/3
நோக்கற்கு அரிதான நுண்ணிய வான் மோன நிலை – தாயு:28 477/1
மனத்தாலும் வாக்காலும் மன்னவொண்ணா மோன
இனத்தாரே நல்ல இனத்தார் கனத்த புகழ் – தாயு:28 479/1,2
கண் ஒளியே மோன கரும்பே கவலை அற – தாயு:28 480/1
மோன மயமான முறை – தாயு:28 484/4
ஆதிக்க மோன அருள் தாயே சோதியாம் – தாயு:28 495/2
சித்தான மோன சிவனே நின் சேவடிக்கே – தாயு:28 505/3
நிறைகுடம்-தான் நீர் கொளுமோ நிச்சயம் ஆம் மோன
முறை உணர்ந்தார் யாதை முயல்வார் பிறை அணிந்த – தாயு:28 506/1,2
எல்லாம் நல் மோன வடிவே – தாயு:28 532/4
எல்லாமே மோன நிறைவு எய்துதலால் எவ்விடத்தும் – தாயு:28 533/1
நல்லார்கள் மோன நிலை நாடினார் பொல்லாத – தாயு:28 533/2
சும்மா இருத்தி சுகம் கொடுத்த மோன நின்-பால் – தாயு:28 539/3
கற்றோமே மோன கரு – தாயு:28 542/4
எடுத்த தேகம் பொருள் ஆவி மூன்றும் நீ எனக்கு ஒன்று இல்லை என மோன நல் நெறி – தாயு:31 556/1
சித்தி நீ சித்தர் சித்தி திறமும் நீ திறம் ஆர் மோன
முத்தி நீ முத்திக்கான முதலும் நீ முதன்மையான – தாயு:36 576/2,3
வேதமே வேத முடிவான மோன வித்தே இங்கு என்னை இனி விட்டிடாதே – தாயு:41 605/2
ஞான_நாயகனே நின் மோன ஞான நாட்டம் உற்று வாழ்ந்திருக்கும் நாள் எ நாளோ – தாயு:42 613/2
போனாலும் யான் போவன் அல்லால் மோன புண்ணியனே வேறும் ஒரு பொருளை நாடேன் – தாயு:42 616/2
பார்த்தன எல்லாம் அழியும் அதனால் சுட்டி பாராதே பார்த்திருக்க பரமே மோன
மூர்த்தி வடிவாய் உணர்த்தும் கைகாட்டு உண்மை முற்றி எனது அல்லல் வினை முடிவது என்றோ – தாயு:42 621/1,2
மாறுபடும் கருத்து இல்லை முடிவு_இல் மோன_வாரிதியில் நதி திரள் போல் வயங்கிற்று அம்மா – தாயு:42 630/2
ஒப்பு உயர்வு ஒன்று இன்றி ஒலி புகா மோன வட்ட – தாயு:43 750/1
நாதாந்த மோன நலமே பராபரமே – தாயு:43 841/2
பேசாத மோன நிலை பெற்று அன்றோ நின் அருளாம் – தாயு:43 919/1
பெற்றார் அநுபூதி பேசாத மோன நிலை – தாயு:43 1011/1
முத்திக்கு வித்தான மோன கரும்பு வழி – தாயு:43 1020/1
கண் நிறைந்த மோன கருத்தே என் கண்ணே என் – தாயு:46 1343/1
மேல்


மோன_வாரிதியில் (1)

மாறுபடும் கருத்து இல்லை முடிவு_இல் மோன_வாரிதியில் நதி திரள் போல் வயங்கிற்று அம்மா – தாயு:42 630/2
மேல்


மோனகுரு (8)

அறிவில் நின்று குருவாய் உணர்த்தியதும் அன்றி மோனகுரு ஆகியே அகிலம் மீது வர வந்த சீர் அருளை ஐய ஐய இனி என் சொல்கேன் – தாயு:13 128/3
மோனகுரு ஆகியும் கைகாட்டினையே திரும்பவும் நான் முளைத்து தோன்றி – தாயு:24 353/3
தாய் என மோனகுரு ஆகி வந்து தடுத்து அடிமை – தாயு:27 458/2
ஆனவை எல்லாம் தாமே ஆகுமே மோனகுரு
சொன்ன ஒரு சொல்லால் சுகமாய் இரு மனமே – தாயு:28 529/2,3
ஆனந்த மோனகுரு ஆம் எனவே என் அறிவின் – தாயு:28 532/1
மோனகுரு அளித்த மோனமே ஆனந்தம் – தாயு:28 534/1
கூட்டினான் மோனகுரு – தாயு:28 535/4
மூர்த்தி எல்லாம் வாழி எங்கள் மோனகுரு வாழி அருள் – தாயு:43 864/1
மேல்


மோனகுரு-தன் (1)

ஒன்றும் அற நில் என்று உணர்த்திய நம் மோனகுரு-தன்
துணை தாள் நீடூழி தாம் வாழ்க என்றென்றே – தாயு:28 478/1,2
மேல்


மோனகுருவே (3)

குடிகெடுக்க துசம்கட்டிக்கொண்ட மோனகுருவே என் தெய்வமே கோது_இலாதபடி – தாயு:16 177/2
மோனகுருவே முழுதினையும் தான் உணர்ந்த – தாயு:28 489/3
ஏன் அலைந்தேன் மோனகுருவே – தாயு:28 533/4
மேல்


மோனத்தில் (2)

மோகத்திலே சிறிதும் ஒழியவிலை மெய்ஞ்ஞான மோனத்தில் நிற்க என்றால் முற்றாது பரிபாக சத்தி களனேக நின் மூதறிவிலே எழுந்த – தாயு:11 102/3
சாதக மோனத்தில் என்ன வட ஆல் நீழல் தண் அருள் சந்திரமெளலி தட கைக்கு ஏற்க – தாயு:14 135/3
மேல்


மோனத்தை (1)

செகங்கள் எங்கும் திரிந்து நல் மோனத்தை
உகந்த பேர் உனை ஒன்றுவர் ஐயனே – தாயு:18 237/3,4
மேல்


மோனம் (15)

பெருவெளியாய் ஐம்_பூதம் பிறப்பிடமாய் பேசாத பெரிய மோனம்
வரும் இடமாய் மனம் ஆதிக்கு எட்டாத பேர்_இன்ப மயமாய் ஞான – தாயு:3 16/1,2
வந்து ஆடி திரிபவர்க்கும் பேசா மோனம் வைத்திருந்த மாதவர்க்கும் மற்றும் மற்றும் – தாயு:14 142/2
மோனமாய் இருக்கவொட்டா மோனம் இன்றாகவே-தான் – தாயு:15 171/2
வான் ஆக அ முதலே நிற்கும் நிலை நம்மால் மதிப்பு அரிதாம் என மோனம் வைத்ததும் உன் மனமே – தாயு:17 193/3
மோனம் சொன்ன முறை பெற முக்கண் எம் – தாயு:18 251/2
முடிவு_இலா வீட்டின் வாழ்க்கை வேண்டினர்க்கு உன் மோனம் அல்லால் வழி உண்டோ – தாயு:19 281/2
மோனம் பொருள் என கண்டிட சற்குரு மோனனுமாய் – தாயு:27 415/2
ஆரா அமுது என மோனம் வகித்து கல்_ஆல் நிழல் கீழ் – தாயு:27 420/1
சொல் எல்லாம் மோனம் தொழில் ஆதியும் மோனம் – தாயு:28 532/3
சொல் எல்லாம் மோனம் தொழில் ஆதியும் மோனம்
எல்லாம் நல் மோன வடிவே – தாயு:28 532/3,4
பெற்றிலேன் மோனம் பிறந்த அன்றே மோனம் அல்லால் – தாயு:28 537/3
பெற்றிலேன் மோனம் பிறந்த அன்றே மோனம் அல்லால் – தாயு:28 537/3
பேச்சாகா மோனம் பிறவா முளைத்தது என்றற்கு – தாயு:43 712/1
மோனம் தமியேற்கு முத்தி பராபரமே – தாயு:43 842/2
மோனம் தரு ஞானம் ஊட்டி எனக்கு உவட்டா – தாயு:43 980/1
மேல்


மோனம்-தனக்கு (1)

மோனம்-தனக்கு இசைய முற்றியதால் தேன் உந்து – தாயு:28 532/2
மேல்


மோனம்-தனை (1)

மோனம்-தனை விளைத்தால் இனி யாது மொழிகுவதே – தாயு:27 414/4
மேல்


மோனமாம் (2)

பார் ஆதி அறியாத மோனமாம் வித்தை பதித்து அன்பு நீர் ஆகவே பாய்ச்சி அது பயிராகும் மட்டும் மா மாயை வன் பறவை அணுகாத வண்ணம் – தாயு:8 72/2
நலம் ஏதும் அறியாத என்னை சுத்த நாதாந்த மோனமாம் நாட்டம் தந்தே சஞ்சலம் – தாயு:54 1437/1
மேல்


மோனமாய் (1)

மோனமாய் இருக்கவொட்டா மோனம் இன்றாகவே-தான் – தாயு:15 171/2
மேல்


மோனமே (4)

பார் ஆதி அறியாத மோனமே இடைவிடா பற்றாக நிற்க அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 11/4
மோனமே முதலே முத்தி நல் வித்தே முடிவு_இலா இன்பமே செய்யும் – தாயு:22 307/3
மோனகுரு அளித்த மோனமே ஆனந்தம் – தாயு:28 534/1
நதி உண்ட கடல் என சமயத்தை உண்ட பர ஞான ஆனந்த ஒளியே நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே நான் எனும் அகந்தை தீர்த்து என் – தாயு:37 578/3
மேல்


மோனருக்கு (1)

வாரா வரவாக வந்து அருளும் மோனருக்கு என் – தாயு:44 1075/1
மேல்


மோனன் (3)

உற்று பார் மோனன் ஒரு சொல்லே உண்மை நன்றாய் – தாயு:28 460/3
தாயான மோனன் அருள் சந்திக்க வந்திடுமே – தாயு:29 548/4
அன்பருக்கு அன்பான மெய்யன் ஐயன் ஆனந்த மோனன் அருள் குருநாதன் – தாயு:54 1430/1
மேல்


மோனனுமாய் (1)

மோனம் பொருள் என கண்டிட சற்குரு மோனனுமாய்
தீனன்-தனக்கு இங்கு இரங்கினையே இனி சிந்தைக்கு என்றும் – தாயு:27 415/2,3
மேல்


மோனா (4)

நின்றது அல்லால் மோனா நிருவிகற்ப நிட்டை நிலை – தாயு:28 491/3
நின்னையே சிந்திக்க நீ கொடுத்தாய் மோனா நான் – தாயு:28 498/3
குரு ஆகி தண் அருளை கூறும் முன்னே மோனா
உரு நீடு உயிர் பொருளும் ஒக்க தருதி என – தாயு:28 536/1,2
வல்லாளா மோனா நின் வான் கருணை என்னிடத்தே – தாயு:51 1400/1

மேல்