மா – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மா 37
மாக்கள் 1
மாக 1
மாகம் 1
மாசு 5
மாசு_அற்ற 3
மாசு_ஆன 1
மாசு_இல் 1
மாட்சி 1
மாட்சியா 1
மாட 4
மாடம் 1
மாடு 3
மாண்டவர் 1
மாண்டனையோ 1
மாண்டு 3
மாணா 1
மாணிக்க 2
மாணிக்கமே 1
மாதத்திலே 1
மாதர் 10
மாதர்கள் 1
மாதரை 1
மாதவர்க்கும் 1
மாது 1
மாய 9
மாயம் 2
மாயமாம் 1
மாயா 10
மாயா_வாரி 1
மாயாதி 1
மாயாதே 1
மாயாவிகார 1
மாயை 41
மாயை-தம்பால் 1
மாயை-தனை 1
மாயை-தானும் 1
மாயைக்கு 1
மாயையான 1
மாயையில் 3
மாயையிலே 2
மாயையினும் 1
மாயையினோர்க்கு 1
மாயையுமே 1
மாயையை 2
மாயையோடே 1
மார்க்க 7
மார்க்கங்கள் 1
மார்க்கண்டர் 1
மார்க்கண்டர்க்காக 1
மார்க்கண்டர்க்கு 1
மார்க்கத்தில் 2
மார்க்கத்திலும் 1
மார்க்கத்தின் 1
மார்க்கத்து 1
மார்க்கத்தையே 1
மார்க்கம் 14
மார்க்கமா 1
மார்க்கமாய் 1
மார்க்கமான 1
மார்க்கமே 1
மார்க்கமோ 1
மார்பன் 1
மார்பில் 2
மாரணமாய்விடும் 1
மாரி 2
மால் 8
மால்_அற 1
மால்கொண்டு 1
மாலை 10
மாலைமாலையா 1
மாலையா 1
மாள 2
மாளாநின்றனர் 1
மாளிகை 3
மாளின் 2
மாற்சரியமோ-தான் 1
மாற்ற 1
மாற்றப்படாதோ 1
மாற்றம் 1
மாற்றல் 1
மாற்றாக 1
மாற்றாய் 1
மாற்றி 4
மாற்றிடவும் 1
மாற்றினை 1
மாற்று 2
மாறவிலை 1
மாறா 8
மாறாத 4
மாறாது 2
மாறுபடு 1
மாறுபடும் 1
மாறுமோ 1
மான் 4
மான 1
மானத 2
மானமொடு 1
மானார் 1
மானுட 1
மானுடன் 1
மானே 1
மானை 1

மா (37)

சோதியை மா தூ வெளியை மனது அவிழ நிறைவான துரிய வாழ்வை – தாயு:3 18/3
அரு மறையின் சிர பொருளாய் விண்ணவர் மா முனிவர் சித்தர் ஆதி ஆனோர் – தாயு:3 21/1
மா திக்கொடு அண்ட பரப்பு எலாம் அறியவே வந்து அருளும் ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 39/4
பார் ஆதி அறியாத மோனமாம் வித்தை பதித்து அன்பு நீர் ஆகவே பாய்ச்சி அது பயிராகும் மட்டும் மா மாயை வன் பறவை அணுகாத வண்ணம் – தாயு:8 72/2
வல்லாளராய் இமய நியமாதி மேற்கொண்ட மா தவர்க்கு ஏவல்செய்து மனதின்படிக்கு எலாம் சித்தி பெறலாம் ஞானம் வாய்க்கும் ஒரு மனு எனக்கு இங்கு – தாயு:10 96/3
மல்லல் மா ஞாலம் காக்க வருபவர் கடவுள் என்னில் – தாயு:15 170/2
வான் என நிறைந்து ஆனந்த மா கடல் வளைவது இன்றே – தாயு:15 171/4
மன்று ஆக இன்ப_கூத்து ஆட வல்ல மணியே என் கண்ணே மா மருந்தே நால்வர்க்கு – தாயு:16 182/3
மடம் பெறு பாழ் நெஞ்சாலே அஞ்சாதே நிராசை மன் இடமே இடம் அந்த மா நிலத்தே பொருளும் – தாயு:17 188/2
கடம் பெறு மா மத யானை என்னவும் நீ பாச கட்டான நிகளபந்த கட்டு அவிழ பாரே – தாயு:17 188/4
மத்தனேன் பெறும் மா மலம் மாய வான் – தாயு:18 228/3
உற்ற மா தவர்க்கு உண்மையை நல்குமே – தாயு:18 271/2
மன கிலேசங்கள் தீர்ந்த மா தவர்க்கு இரண்டு அற்று ஓங்கும் – தாயு:21 296/3
பின்னைத்-தான் நின்றன் அருள் பெற்ற மா தவ பெரியோர் – தாயு:25 364/3
உணரும் மா தவர்க்கு ஆனந்தம் உதவினை ஒன்றும் – தாயு:25 369/2
அம் பொன் மா மலர் பதத்தையே துணை என அடிமை – தாயு:25 378/3
வளரும் மா மதி போல் மதி தளர்வு_இன்றி வாழ்வேன் – தாயு:25 380/4
ஆய்ந்த மா மறை எத்தனை அத்தனை அறிவால் – தாயு:25 386/3
வாழ்வு அனைத்தும் தந்த இன்ப மா கடலை நல் அமிர்தை மணியை பொன்னை – தாயு:26 393/1
சித்தினை மா தூ வெளியை தன்மயமாம் ஆனந்த தெய்வம்-தன்னை – தாயு:26 396/4
சிவம் ஆதி நான்முகக்கோ அந்த மா மறை செப்புகின்ற – தாயு:27 410/1
தேறி தெளிந்து நிலைபெற்ற மா தவர் சித்தத்திலே – தாயு:27 411/3
வல்லாளனான மவுன சதானந்த மா கடலே – தாயு:27 424/4
பொல்லாத மா மர்க்கட மனமே எனை போல் அடுத்த – தாயு:27 449/1
மன்னினவர் போதியார் மா மௌனன் தன் உள் – தாயு:28 520/2
வாங்காத ஆனந்த மா மழையும் நீங்காவாம் – தாயு:28 527/2
அஞ்சல்அஞ்சல் என்று இரங்கும் ஆனந்த மா கடல் கீழ் – தாயு:29 546/3
வாத நோயாளர்க்கும் எட்டாத முக்கண் உடை மா மருந்துக்கு அமிர்தமே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 580/4
பேற்றை பகுத்து அருளி எனை ஆள வல்லையோ பெரிய அகிலாண்ட கோடி பெற்ற நாயகி பெரிய கபிலை மா நகர் மருவு பெரியநாயகி அம்மையே – தாயு:39 587/4
சிந்தனை போய் நான் எனல் போய் தேக்க இன்ப மா மழையை – தாயு:43 772/1
வல்லமையே காட்டுகின்ற மா மாயை நான் ஒருவன் – தாயு:43 800/1
உள்ளது உணரா உணர்வு_இலி மா பாவி என்றோ – தாயு:43 969/1
சுத்த மா மாயை தொடக்கு அறுவது எந்நாளோ – தாயு:45 1164/2
மா தேவா என்று வருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1235/2
துட்டனை மா மாயை சுழல் நீக்கி அந்தரமே – தாயு:45 1244/1
இ மா நிலத்தில் இருந்தபடியே இருந்து – தாயு:45 1283/1
தேசு_உற்ற மா மணி நின் தேசினையும் காண்பேனோ – தாயு:46 1318/2
மேல்


மாக்கள் (1)

அழுக்காற்றால் நெஞ்சம் அழுங்கிய புன் மாக்கள்
இழுக்காற்றால் இன்ப நலம் எய்தார் பராபரமே – தாயு:43 932/1,2
மேல்


மாக (1)

மாக இந்த்ர தனு மின்னை ஒத்து இலக வேதம் ஓதிய குலாலனார் வனைய வெய்ய தடிகாரனான யமன் வந்து அடிக்கும் ஒரு மண்_கலத்து – தாயு:13 122/3
மேல்


மாகம் (1)

மாகம் ஓடவும் வல்லன் எனை ஆள வல்லையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 583/4
மேல்


மாசு (5)

மாசு_அற்ற ஆனந்த_வாரி வழங்கிடுமே – தாயு:29 543/2
மாசு_இல் சமத்து முத்தி வாய்க்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1286/2
மாசு_அற்ற அன்பர் நெஞ்சே மாறாத பெட்டகமா – தாயு:46 1318/1
மாசு_ஆன நெஞ்சன் இவன் வஞ்சன் என்றோ வாய் திறந்து – தாயு:51 1394/1
ஏசற்று இருக்க மாசு_அற்ற ஞான – தாயு:55 1451/36
மேல்


மாசு_அற்ற (3)

மாசு_அற்ற ஆனந்த_வாரி வழங்கிடுமே – தாயு:29 543/2
மாசு_அற்ற அன்பர் நெஞ்சே மாறாத பெட்டகமா – தாயு:46 1318/1
ஏசற்று இருக்க மாசு_அற்ற ஞான – தாயு:55 1451/36
மேல்


மாசு_ஆன (1)

மாசு_ஆன நெஞ்சன் இவன் வஞ்சன் என்றோ வாய் திறந்து – தாயு:51 1394/1
மேல்


மாசு_இல் (1)

மாசு_இல் சமத்து முத்தி வாய்க்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1286/2
மேல்


மாட்சி (1)

கைத்தலம் விளங்கும் ஒரு நெல்லி அம் கனி என கண்ட வேதாகமத்தின் காட்சி புருஷார்த்தம் அதில் மாட்சி பெறு முத்தி-அது கருதின் அனுமானம் ஆதி – தாயு:11 106/1
மேல்


மாட்சியா (1)

கல்லாத அறிவும் மேல் கேளாத கேள்வியும் கருணை சிறிதேதும் இல்லா காட்சியும் கொலை களவு கள் காமம் மாட்சியா காதலித்திடும் நெஞ்சமும் – தாயு:5 42/1
மேல்


மாட (4)

மத்த மத கரி முகில் குலம் என்ன நின்று இலகு வாயிலுடன் மதி அகடு தோய் மாட கூட சிகரம் மொய்த்த சந்திரகாந்த மணி மேடை உச்சி மீது – தாயு:11 105/1
தந்தை தாய் தமர் தாரம் மகவு என்னும் இவை எலாம் சந்தையில் கூட்டம் இதிலோ சந்தேகம் இல்லை மணி மாட மாளிகை மேடை சதுரங்க சேனையுடனே – தாயு:12 113/1
மாது காதலி_பங்கனை அபங்கனை மாட மாளிகை சூழும் – தாயு:24 332/3
மாடு மக்கள் சிற்றிடையார் செம்பொன் ஆடை வைத்த கன தனம் மேடை மாட கூடம் – தாயு:41 603/1
மேல்


மாடம் (1)

மின் அனைய பொய் உடலை நிலை என்றும் மை இலகு விழி கொண்டு மையல் பூட்டும் மின்னார்கள் இன்பமே மெய் என்றும் வளர் மாடம் மேல்வீடு சொர்க்கம் என்றும் – தாயு:5 40/1
மேல்


மாடு (3)

மனைவி புதல்வர் அன்னை பிதா மாடு வீடு என்றிடும் மயக்கம்-தனையும் – தாயு:23 313/3
வகையாக அலக்கழித்தாய் உண்டு உடுத்து வாழ்ந்தேன் நான் இரண்டு கால் மாடு போலே – தாயு:41 602/2
மாடு மக்கள் சிற்றிடையார் செம்பொன் ஆடை வைத்த கன தனம் மேடை மாட கூடம் – தாயு:41 603/1
மேல்


மாண்டவர் (1)

சொல் இறந்து மாண்டவர் போல் தூ மௌன பூமியில் நான் – தாயு:28 527/3
மேல்


மாண்டனையோ (1)

அவ்விடத்து மாயையிலே மாண்டனையோ அவ்விடமும் – தாயு:29 552/3
மேல்


மாண்டு (3)

மாண்டு கிடக்கினும் அந்த எல்லையையும் பூரணமாய் வணக்கம்செய்வேன் – தாயு:26 399/2
உற்று அறியும் என் அறிவும் உட்கருவி போல் சவி மாண்டு
அற்றும் இன்பம் தந்திலையே ஐயா பராபரமே – தாயு:43 661/1,2
மண்ணான மாயை எல்லாம் மாண்டு வெளியாக இரு – தாயு:43 967/1
மேல்


மாணா (1)

மன துறவும் அப்படியே மாணா இவற்றில் – தாயு:28 516/3
மேல்


மாணிக்க (2)

மலர்ந்த வாய் முக்கண் மாணிக்க சோதியே – தாயு:18 246/4
மன்று ஆடும் வாழ்வே மரகதம் சேர் மாணிக்க
குன்றே நின் தாள் கீழ் குடி பெறவும் காண்பேனோ – தாயு:46 1327/1,2
மேல்


மாணிக்கமே (1)

மன்றுள் ஆடிய மாணிக்கமே உனை – தாயு:18 260/2
மேல்


மாதத்திலே (1)

மாதத்திலே ஒரு திங்கள் உண்டாகி மடிவதை நின் – தாயு:27 451/1
மேல்


மாதர் (10)

இமை_அளவு போதை ஒரு கற்ப_காலம் பண்ணும் இ உலகம் எ உலகமோ என்று எண்ணம் வருவிக்கும் மாதர் சிற்றின்பமோ என்னில் மகமேரு ஆக்கி – தாயு:11 103/1
வையக மாதர் சகத்தையும் பொன்னையும் மாயை மல – தாயு:27 453/1
கற்பு உறு சிந்தை மாதர் கணவரை அன்றி வேறு ஓர் – தாயு:36 571/1
தெட்டிலே வலிய மட மாதர் வாய் வெட்டிலே சிற்றிடையிலே நடையிலே சேல் ஒத்த விழியிலே பால் ஒத்த மொழியிலே சிறுபிறை நுதல் கீற்றிலே – தாயு:37 579/1
வார் அணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ் வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 582/4
வைச்சிருக்கும் மாதர் மயக்கு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1133/2
பாழான மாதர் மயல் பற்று ஒழிவது எந்நாளோ – தாயு:45 1137/2
மெய்யில் சிவம் பிறக்க மேவும் இன்பம் போல் மாதர்
பொய்யில் இன்பு இன்று என்று பொருந்தா நாள் எந்நாளோ – தாயு:45 1141/1,2
வந்த வரவை மறந்து மிக்க மாதர் பொன் பூமி மயக்கத்தில் ஆழும் – தாயு:54 1446/1
துன்_மார்க்க மாதர் மயக்கம் மன தூயர்க்கு பற்றாது சொன்னேன் சனகன்-தன் – தாயு:54 1449/1
மேல்


மாதர்கள் (1)

மை உலாம் விழி மாதர்கள் தோதக – தாயு:18 233/1
மேல்


மாதரை (1)

பொன்னை மாதரை பூமியை நாடிடேன் – தாயு:18 194/1
மேல்


மாதவர்க்கும் (1)

வந்து ஆடி திரிபவர்க்கும் பேசா மோனம் வைத்திருந்த மாதவர்க்கும் மற்றும் மற்றும் – தாயு:14 142/2
மேல்


மாது (1)

மாது காதலி_பங்கனை அபங்கனை மாட மாளிகை சூழும் – தாயு:24 332/3
மேல்


மாய (9)

மத்தனேன் பெறும் மா மலம் மாய வான் – தாயு:18 228/3
கள்ளமே துரக்கும் தூ வெளி பரப்பே கரு என கிடந்த பாழ் மாய
பள்ளமே வீழாது எனை கரையேற்றி பாலிப்பது உன் அருள் பரமே – தாயு:19 275/3,4
வானே மாய பிறப்பு_அறுப்பான் வந்து உன் அடிக்கே கரம் கூப்பி – தாயு:20 287/2
வெம் மாய காட்டில் அலைந்தேன் அந்தோ என் விதிவசமே – தாயு:27 436/4
மாய மயக்கு ஒழிந்தார் மற்று ஒன்றை நாடுவரோ – தாயு:43 831/1
கட்டிவைக்கும் மாய மின்னார் கட்டு அழிவது எந்நாளோ – தாயு:45 1136/2
மாய மடவார் மயக்கு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1138/2
கல் கண்டால் ஓடுகின்ற காக்கை போல் பொய் மாய
சொல் கண்டால் ஓடும் அன்பர் தோய்வு அறிவது எந்நாளோ – தாயு:45 1249/1,2
வாதனையோடு ஆடும் மன பாம்பு மாய ஒரு – தாயு:49 1380/1
மேல்


மாயம் (2)

தாழ்வு பெற்று இங்கு இருந்தேன் ஈது என்ன மாயம் தடையுற்றால் மேல்_கதியும் தடை-அது ஆமே – தாயு:16 178/2
கண்ணிவைப்போர் மாயம் கடக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1128/2
மேல்


மாயமாம் (1)

முற்றும் மாயமாம் சகத்தையே மெய் என முதல்-தான் – தாயு:25 389/3
மேல்


மாயா (10)

அண்ட பகிரண்டமும் மாயா விகாரமே அ மாயை இல்லாமையே ஆம் என்னும் அறிவும் உண்டு அப்பாலும் அறிகின்ற அறிவினனை அறிந்து பார்க்கின் – தாயு:2 7/1
ஒருமை மனது ஆகியே அல்லல் அற நின் அருளில் ஒருவன் நான் வந்திருக்கின் உலகம் பொறாததோ மாயா விசித்ரம் என ஓயுமோ இடம் இல்லையோ – தாயு:10 95/1
வைத்து எமை மயக்கி இரு கண் வலையை வீசியே மாயா விலாச மோக_வாரிதியில் ஆழ்த்திடும் பாழான சிற்றிடை மடந்தையர்கள் சிற்றின்பமோ – தாயு:10 98/2
மலைமலையாம் காட்சி கண் காணாமை ஆதி மறப்பு என்றும் நினைப்பு என்றும் மாயா_வாரி – தாயு:14 147/1
மாயா சகத்தை மதியாதார் மண் முதலாயே – தாயு:28 468/1
இ மாயா யோகம் இனி ஏனடா தம் அறிவின் – தாயு:28 511/2
மாயா சகம் இலையேல் மற்று எனக்கு ஓர் பற்றும் இலை – தாயு:43 742/1
மாயா விகார மலம் அகல எந்தை பிரான் – தாயு:46 1319/1
வால் அற்ற பட்டம் என மாயா மன படலம் – தாயு:46 1321/1
மறப்பும் நினைப்புமாய் நின்ற வஞ்ச மாயா மனத்தால் வளர்ந்தது தோழி – தாயு:54 1431/2
மேல்


மாயா_வாரி (1)

மலைமலையாம் காட்சி கண் காணாமை ஆதி மறப்பு என்றும் நினைப்பு என்றும் மாயா_வாரி
அலையலையாய் அடிக்கும் இன்ப துன்பம் என்றும் அதை விளைக்கும் வினைகள் என்றும் அதனை தீர்க்க – தாயு:14 147/1,2
மேல்


மாயாதி (1)

ஆன நெறியாம் சரியை ஆதி சோபானம் உற்று அணுபக்ஷ சம்புபக்ஷம் ஆம் இரு விகற்பமும் மாயாதி சேவையும் அறிந்து இரண்டு ஒன்று என்னும் ஓர் – தாயு:5 41/3
மேல்


மாயாதே (1)

வாடாதே நானாவாய் மாயாதே எம் கோவை – தாயு:45 1291/1
மேல்


மாயாவிகார (1)

மாயாவிகார மலம் ஒழி சுத்தாவத்தை – தாயு:45 1168/1
மேல்


மாயை (41)

அண்ட பகிரண்டமும் மாயா விகாரமே அ மாயை இல்லாமையே ஆம் என்னும் அறிவும் உண்டு அப்பாலும் அறிகின்ற அறிவினனை அறிந்து பார்க்கின் – தாயு:2 7/1
சிந்தை குடிகொள்ளுதே மலம் மாயை கன்மம் திரும்புமோ தொடு_வழக்காய் சென்மம் வருமோ எனவும் யோசிக்குதே மனது சிரத்தை எனும் வாளும் உதவி – தாயு:2 8/3
பூதலயம் ஆகின்ற மாயை முதல் என்பர் சிலர் பொறி புலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர் கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம் என்பர் சிலபேர் – தாயு:2 9/1
பாச இருள் தன் நிழல் என சுளித்து ஆர்த்து மேல் பார்த்து பரந்த மனதை பாரித்த கவளமாய் பூரிக்க உண்டு முகபடாம் அன்ன மாயை நூறி – தாயு:5 37/2
பார் ஆதி அறியாத மோனமாம் வித்தை பதித்து அன்பு நீர் ஆகவே பாய்ச்சி அது பயிராகும் மட்டும் மா மாயை வன் பறவை அணுகாத வண்ணம் – தாயு:8 72/2
மெளனமொடு இருந்தது ஆர் என் போல் உடம்பு எலாம் வாயாய் பிதற்றுமவர் ஆர் மனது எனவும் ஒரு மாயை எங்கே இருந்து வரும் வன்மையொடு இரக்கம் எங்கே – தாயு:10 89/2
எல்லாமும் வலது இந்த மனம் மாயை ஏழையாம் என்னால் அடக்க வசமோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 92/4
தன் நிலைமை காட்டாது ஒருங்க இரு_வினையினால் தாவு சுக_துக்க வேலை தட்டழிய முற்றும் இல்லா மாயை அதனால் தடித்து அகில பேதமான – தாயு:10 99/2
அமைய ஒரு கூத்தும் சமைந்து ஆடும் மன_மாயை அம்மம்ம வெல்லல் எளிதோ அருள் பெற்ற பேர்க்கு எலாம் ஒளி பெற்று நிற்கும் ஈது அருளோ அலாது மருளோ – தாயு:11 103/3
சுத்த நித்த இயல் பாகுமோ உனது விசுவ மாயை நடுவாகவே சொல்ல வேண்டும் வகை நல்ல காதி கதை சொல்லும் மாயையினும் இல்லை என் – தாயு:13 130/3
வீறு அனைத்தும் இ நெறிக்கே என்ன என்னை மேவு என்ற வரத்தே பாழ் வெய்ய மாயை
கூறு அனைத்தும் கடந்த எல்லை சேடம் ஆகி குறைவு_அற நின்றிடும் நிறைவே குலவாநின்ற – தாயு:14 134/2,3
மோக இருள் மாயை வினை உயிர்கட்கு எல்லாம் மொய்த்தது என்-கொல் உபகார முயற்சியாக – தாயு:14 145/3
நான் என்னும் ஓர் அகந்தை எவர்க்கும் வந்து நலிந்தவுடன் சக மாயை நானா ஆகி – தாயு:14 146/1
நான்முக_தேவே நின்னால் நாட்டிய அகில மாயை
கான் முயல்_கொம்பே என்கோ கானல் அம் புனலே என்கோ – தாயு:15 165/2,3
வடிவு அனைத்தும் தந்த வடிவு இல்லா சுத்த வான் பொருளே எளியனேன் மனம் ஆம் மாயை
குடிகெடுக்க துசம்கட்டிக்கொண்ட மோனகுருவே என் தெய்வமே கோது_இலாதபடி – தாயு:16 177/1,2
நின்றாயே மாயை எனும் திரையை நீக்கி நின்னை யார் அறிய வல்லார் நினைப்போர் நெஞ்சம் – தாயு:16 182/2
முடி எனும் அதுவும் பொருள் எனும் அதுவும் மொழிந்திடில் சுகம் மன மாயை
குடிகெட வேண்டில் பணி அற நிற்றல் குணம் என புன்னகை காட்டி – தாயு:19 278/2,3
புன் செயல் மாயை மயக்கின் என் செயலா பொருந்துவேன் அஃது ஒரு காலம் – தாயு:19 279/2
விட திரள் அனைய காம வேட்கையில் அழுந்தி மாயை
சடத்தினை மெய் என்று எண்ணி தளரவோ தனியனேனே – தாயு:21 300/3,4
ஆற்றிலேன் அகண்டானந்த அண்ணலே அளவு_இல் மாயை
சேற்றிலே இன்னம் வீழ்ந்து திளைக்கவோ சிறியனேனே – தாயு:24 337/3,4
ஏதம் அ மனம் மாயை என்றிடின் கண்ட எல்லாம் – தாயு:24 349/3
அளவு மாயை இங்கு ஆர் எனக்கு அமைத்தனர் ஐயா – தாயு:25 380/2
பொன்னிலே பணி போலும் மாயை தரும் மனமே உன் புரைகள் தீர்ந்தாய் – தாயு:26 397/2
மாயை பெரும் படைக்கே இலக்கா எனை வைத்தனையோ – தாயு:27 401/2
மடம் பெறு மாயை மனமே இனி இங்கு வா மவுனி – தாயு:27 417/3
காட்டிய அந்த கரணமும் மாயை இ காயம் என்று – தாயு:27 448/1
வையக மாதர் சகத்தையும் பொன்னையும் மாயை மல – தாயு:27 453/1
வான் ஆதி மாயை வழங்காதோ ஞானா கேள் – தாயு:28 518/2
வைத்த மவுனத்தாலே மாயை மனம் இறந்து – தாயு:28 540/3
அடைவு கெட்ட பாழ் மாயை ஆழியிலே இன்னம் அல்லல்பட – தாயு:33 559/3
ஆக்குவை மாயை யாவும் நொடியினில் அவற்றை மாள – தாயு:35 570/1
இகல் விளைக்கும் மல மாயை கன்மத்தூடே இடருறவும் செய்தனையே இரக்கம் ஈதோ – தாயு:42 634/2
மாயை முதலாம் வினை நீ மன் உயிர் நீ மன் உயிர் தேர்ந்து – தாயு:43 746/1
வல்லமையே காட்டுகின்ற மா மாயை நான் ஒருவன் – தாயு:43 800/1
மை காட்டும் மாயை மயக்கம்_அற நீ குருவாய் – தாயு:43 965/1
மண்ணான மாயை எல்லாம் மாண்டு வெளியாக இரு – தாயு:43 967/1
மோகம் மிகு மாயை முடியும் நாள் எந்நாளோ – தாயு:45 1163/2
சுத்த மா மாயை தொடக்கு அறுவது எந்நாளோ – தாயு:45 1164/2
துட்டனை மா மாயை சுழல் நீக்கி அந்தரமே – தாயு:45 1244/1
உள் நிறைந்த மாயை ஒழிந்திடவும் காண்பேனோ – தாயு:46 1343/2
கூறு அரிய சக மாயை அறவே – தாயு:56 1452/21
மேல்


மாயை-தம்பால் (1)

வாக்கு ஆதியான கன்ம மாயை-தம்பால் வீண் காலம் – தாயு:45 1145/1
மேல்


மாயை-தனை (1)

சோதிக்க மன மாயை-தனை ஏவினால் அடிமை சுகமாவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 85/4
மேல்


மாயை-தானும் (1)

நல்லது மாயை-தானும் நான் என வந்து நிற்கும் – தாயு:15 170/4
மேல்


மாயைக்கு (1)

ஆதிக்கம் நல்கினவர் ஆர் இந்த மாயைக்கு என் அறிவு அன்றி இடம் இல்லையோ அந்தரப்புஷ்பமும் கானலின் நீரும் ஓர் அவசரத்து உபயோகமோ – தாயு:5 39/1
மேல்


மாயையான (1)

செக மாயையான அரும் கோடை நீங்கும் திறம் இலையே – தாயு:27 408/4
மேல்


மாயையில் (3)

பிறிவு இலாத வணம் நின்றிடாதபடி பல நிறம் கவரும் உபலமாய் பெரிய மாயையில் அழுந்தி நின்னது ப்ரசாத நல் அருள் மறந்திடும் – தாயு:13 123/3
மதியையும் விதித்து அ மதி மாயையில்
பதியவைத்த பசுபதி நின் அருள் – தாயு:18 256/2,3
ஆராக நான் அலைந்தேன் அரசே நீ-தான் அறிந்திருந்தும் மாயையில் ஏன் அழுந்தவைத்தாய் – தாயு:41 600/2
மேல்


மாயையிலே (2)

உலக மாயையிலே எளியேன்-தனை உழல விட்டனையே உடையாய் அருள் – தாயு:24 328/1
அவ்விடத்து மாயையிலே மாண்டனையோ அவ்விடமும் – தாயு:29 552/3
மேல்


மாயையினும் (1)

சுத்த நித்த இயல் பாகுமோ உனது விசுவ மாயை நடுவாகவே சொல்ல வேண்டும் வகை நல்ல காதி கதை சொல்லும் மாயையினும் இல்லை என் – தாயு:13 130/3
மேல்


மாயையினோர்க்கு (1)

வைத்த சுவர் அலம்பின் மண் போமோ மாயையினோர்க்கு
எத்தனை போதித்தும் என் ஆம் எந்தாய் பராபரமே – தாயு:43 929/1,2
மேல்


மாயையுமே (1)

மன்றும் மனையும் மனம் ஆதி தத்துவ மாயையுமே – தாயு:27 432/4
மேல்


மாயையை (2)

பத்தியாய் நெடிது நம்பும் என்னை ஒரு மையல் தந்து அகில மாயையை பாருபார் என நடத்த வந்தது என் பாரதத்தினும் இது உள்ளதோ – தாயு:13 130/2
கொடுத்த போது கொடுத்தது அன்றோ பினும் குளறி நான் என்று கூத்தாட மாயையை
விடுத்தவாறும் கண்ணீரொடு கம்பலை விலகுமாறும் என் வேட்கை ப்ரவாகத்தை – தாயு:31 556/2,3
மேல்


மாயையோடே (1)

பண்டையில் படைப்பும் காப்பும் பறந்தன மாயையோடே
வெண் தலை விழி கை காலில் விளங்கிட நின்றான் யாவன் – தாயு:15 167/3,4
மேல்


மார்க்க (7)

தேகமானதை மிகவும் வாட்டுதே துன்பங்கள் சேராமல் யோக மார்க்க சித்தியோ வரவில்லை சகச நிஷ்டைக்கும் என் சிந்தைக்கும் வெகு தூரம் நான் – தாயு:10 94/3
பல் மார்க்க நெறியினிலும் கண்டதில்லை பகர்வு அரிய தில்லை மன்றுள் பார்த்த போது அங்கு – தாயு:14 143/2
கல் மார்க்க நெஞ்சம் உள எனக்கும்-தானே கண்டவுடன் ஆனந்தம் காண்டல் ஆகும் – தாயு:14 143/4
வாதனை பெருக்கி என்னை வசம்செய்து மனம் துன்_மார்க்க – தாயு:36 574/3
நாள் பட்ட கமலம் என்ன இதயம் மேவும் நறும் தேனே துன்_மார்க்க நாரிமார் கண் – தாயு:42 614/1
சித்தாந்த மார்க்க சிறப்பே பராபரமே – தாயு:43 1000/2
துன்_மார்க்க மாதர் மயக்கம் மன தூயர்க்கு பற்றாது சொன்னேன் சனகன்-தன் – தாயு:54 1449/1
மேல்


மார்க்கங்கள் (1)

தாக்கும் வகை ஏது இ நாள் சரியை கிரியா யோக சாதனம் விடித்தது எல்லாம் சன்மார்க்கம் அல்ல இவை நிற்க என் மார்க்கங்கள் சாராத பேர்_அறிவு-அதாய் – தாயு:4 27/2
மேல்


மார்க்கண்டர் (1)

சிந்தை அறியார்க்கு ஈது போதிப்பது அல்லவே செப்பினும் வெகு தர்க்கமாம் திவ்ய குண மார்க்கண்டர் சுகர் ஆதி முனிவோர்கள் சித்தாந்த நித்யர் அலரோ – தாயு:6 53/2
மேல்


மார்க்கண்டர்க்காக (1)

மார்க்கண்டர்க்காக மறலி பட்ட பாட்டை உன்னி – தாயு:43 763/1
மேல்


மார்க்கண்டர்க்கு (1)

நெஞ்சு உகந்து உனை நேசித்த மார்க்கண்டர்க்கு
அஞ்சல் என்ற அருள் அறிந்தே ஐயா – தாயு:18 210/1,2
மேல்


மார்க்கத்தில் (2)

வாழாது வாழவே இராமன் அடியால் சிலையும் மட மங்கை ஆகவிலையோ மணிமந்த்ரம் ஆதியால் வேண்டு சித்திகள் உலக மார்க்கத்தில் வைக்கவிலையோ – தாயு:2 12/3
மரு மலர் சோலை செறி நல் நீழல் மலை ஆதி மன்னு முனிவர் கேவலமாய் மந்த்ரமாலிகை சொல்லும் இயம நியமாதியாம் மார்க்கத்தில் நின்றுகொண்டு – தாயு:12 111/1
மேல்


மார்க்கத்திலும் (1)

வல்லாளர் கண்ட வழி கண்டிலேன் சக மார்க்கத்திலும்
செல்லாது என் சிந்தை நடுவே கிடந்து திகைத்து விம்மி – தாயு:27 429/2,3
மேல்


மார்க்கத்தின் (1)

வாசா கயிங்கரியம் அன்றி ஒரு சாதனம் மனோ வாயு நிற்கும் வண்ணம் வாலாயமாகவும் பழகி அறியேன் துறவு மார்க்கத்தின் இச்சை போல – தாயு:2 4/1
மேல்


மார்க்கத்து (1)

ஆரண மார்க்கத்து ஆகம வாசி அற்புதமாய் நடந்து அருளும் – தாயு:19 272/1
மேல்


மார்க்கத்தையே (1)

வேதமுடன் ஆகம புராணம் இதிகாசம் முதல் வேறும் உள கலைகள் எல்லாம் மிக்காக அத்துவித துவித மார்க்கத்தையே விரிவாய் எடுத்துரைக்கும் – தாயு:10 91/1
மேல்


மார்க்கம் (14)

உற்று உணர உணர்வு அற்று உன்மத்த வெறியினர் போல உளறுவேன் முத்தி மார்க்கம் உணர்வது எப்படி இன்ப_துன்பம் சமானமாய் உறுவது எப்படி ஆயினும் – தாயு:5 46/3
ஆதலின் எனக்கு இனி சரியை ஆதிகள் போதும் யாதொன்று பாவிக்க நான் அது ஆதலால் உன்னை நான் என்று பாவிக்கின் அத்துவித மார்க்கம் உறலாம் – தாயு:10 91/3
என் மார்க்கம் இருக்குது எல்லாம் வெளியே என்ன எச்சமயத்தவர்களும் வந்து இறைஞ்சாநிற்பர் – தாயு:14 143/3
வந்து என் உடல் பொருள் ஆவி மூன்றும் தன் கைவசம் எனவே அத்துவா மார்க்கம் நோக்கி – தாயு:14 149/1
வரி சிறை வண்டு இனங்காள் ஓதிமங்காள் தூது மார்க்கம் அன்றோ நீங்கள் இதுவரையிலேயும் – தாயு:14 159/3
மற்றும் வேறு உள மார்க்கம் எலாம் எடுத்து – தாயு:18 271/3
மானத மார்க்கம் புரிந்து இங்கு அலைந்தேனே பரந்தேனே வஞ்சனேனே – தாயு:24 353/4
வாராய் நெஞ்சே உன்றன் துன்_மார்க்கம் யாவையும் வைத்துக்கட்டு இங்கு – தாயு:27 450/1
மன்னும் கலை ஞான மார்க்கம் பராபரமே – தாயு:43 822/2
வஞ்சகத்தார் அல்லர் அவர் மார்க்கம் என்னோ பைங்கிளியே – தாயு:44 1059/2
சொல் மார்க்கம் கண்டு துலங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1301/2
மதிக்கும் அதனை மதியார் அவர் மார்க்கம் துன்_மார்க்கம் சன்_மார்க்கமோ மானே – தாயு:54 1448/2
மதிக்கும் அதனை மதியார் அவர் மார்க்கம் துன்_மார்க்கம் சன்_மார்க்கமோ மானே – தாயு:54 1448/2
மார்க்கம் நீதி திட்டாந்தம் அவன்-தான் அந்தமான சதானந்தன் அன்றோ – தாயு:54 1449/2
மேல்


மார்க்கமா (1)

வான் என வயங்கி ஒன்று இரண்டு என்னா மார்க்கமா நெறி தந்து மாறா – தாயு:22 311/3
மேல்


மார்க்கமாய் (1)

வடிவு_இலா வடிவாய் மன நினைவு அணுகா மார்க்கமாய் நீக்கு அரும் சுகமாய் – தாயு:19 281/1
மேல்


மார்க்கமான (1)

பல் மார்க்கமான பல அடிபட்டேனும் ஒரு – தாயு:45 1301/1
மேல்


மார்க்கமே (1)

வானமே எனக்கு வந்துவந்து ஓங்கும் மார்க்கமே மருளர் தாம் அறியா – தாயு:22 307/2
மேல்


மார்க்கமோ (1)

மதிக்கும் அதனை மதியார் அவர் மார்க்கம் துன்_மார்க்கம் சன்_மார்க்கமோ மானே – தாயு:54 1448/2
மேல்


மார்பன் (1)

வண் துளபம் அணி மார்பன் புதல்வனோடும் மனைவியொடும் குடியிருந்து வணங்கி போற்றும் – தாயு:24 333/3
மேல்


மார்பில் (2)

விண்_ஆறு வெற்பின் விழுந்து ஆங்கு என மார்பில்
கண் ஆறு பாய்ச்சிடும் என் காதல்_வெள்ளம் கண்டிலையோ – தாயு:33 564/1,2
வைத்திடும் காலை பிடித்து கண்ணின் மார்பில் வைத்து அணைத்துக்கொண்டு கையால் வளைத்து கட்டி – தாயு:41 599/1
மேல்


மாரணமாய்விடும் (1)

மாரணமாய்விடும் எண்_சித்தி முத்தியும் வாய்ந்திடுமே – தாயு:27 425/4
மேல்


மாரி (2)

விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன் மெய் சிலிர்த்து இரு கை கூப்பி விண் மாரி என என் இரு கண் மாரி பெய்யவே வேசற்று அயர்ந்தேன் இனி யான் – தாயு:9 83/2
விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன் மெய் சிலிர்த்து இரு கை கூப்பி விண் மாரி என என் இரு கண் மாரி பெய்யவே வேசற்று அயர்ந்தேன் இனி யான் – தாயு:9 83/2
மேல்


மால் (8)

மை திகழும் முகில் இனம் குடை நிழற்றிட வட்ட வரையினொடு செம்பொன் மேரு மால் வரையின் முதுகூடும் யோகதண்ட கோல் வரைந்து சய விருது காட்டி – தாயு:7 61/3
மாறுபடு தர்க்கம் தொடுக்க அறிவார் சாண் வயிற்றின் பொருட்டதாக மண்டலமும் விண்டலமும் ஒன்றாகி மனது உழல மால் ஆகி நிற்க அறிவார் – தாயு:8 69/1
மத்த வெறியினர் வேண்டும் மால் என்று தள்ளவும் எம்மாலும் ஒரு சுட்டும் அறவே வைக்கின்ற வைப்பாளன் மெளன தேசிகன் என்ன வந்த நின் அருள் வழி காண் – தாயு:12 121/2
மால் அறவும் சைவம் முதல் மதங்கள் ஆகி மதாதீதமான அருள் மரபு வாழி – தாயு:14 164/2
நிற்பர் அம்போருகன் மால் பணி நீதர் என் நெஞ்சகமாம் – தாயு:27 402/2
மால் காட்டி சிந்தை மயங்காமல் நின்று சுக – தாயு:43 703/1
மால் வைத்த சிந்தை மயக்கு_அற என் சென்னி மிசை – தாயு:43 966/1
மால்_அற வகுத்தனை ஏலும் வண்ணம் – தாயு:55 1451/25
மேல்


மால்_அற (1)

மால்_அற வகுத்தனை ஏலும் வண்ணம் – தாயு:55 1451/25
மேல்


மால்கொண்டு (1)

ஆலம் படைத்த விழியார்கள் மால்கொண்டு அவர் செய் இந்த்ரசாலம் – தாயு:27 435/1
மேல்


மாலை (10)

முத்து அனைய மூரலும் பவள வாய் இன்_சொலும் முகத்து இலகு பசுமஞ்சளும் மூர்ச்சிக்க விரக சன்னதம் ஏற்ற இரு கும்ப முலையின் மணி மாலை நால – தாயு:10 98/1
விந்தைபெற அறு_சுவையில் வந்தது என அமுது உண்ணும் வேளையிலும் மாலை கந்தம் வெள்ளிலை அடைக்காய் விரும்பி வேண்டிய வண்ணம் விளையாடி விழி துயிலினும் – தாயு:11 110/3
பல் மாலை திரள் இருக்க தமை உணர்ந்தோர் பாமாலைக்கே நீ-தான் பக்ஷம் என்று – தாயு:16 175/1
என் மாலை அறிந்து இங்கே வாவா என்றே எனை கலப்பாய் திரு_கருணை எம்பிரானே – தாயு:16 175/4
வேள் ஏறு தந்தியை கன தந்தியுடன் வென்று விரை ஏறு மாலை சூடி விண் ஏறு மேகங்கள் வெற்பு ஏறி மறைவுற வெருட்டிய கரும்_கூந்தலாய் – தாயு:37 584/3
மாலை வளர்த்தனையே வாழி பராபரமே – தாயு:43 837/2
மாலை வளர்ந்து என்னை வளர்த்து இறைவர் பல் நெறியாம் – தாயு:44 1070/1
மாலை வியாபார மயக்கு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1122/2
மனமான வானர கை மாலை ஆக்காமல் – தாயு:45 1146/1
மாலை வகை பல சூடி உடனே – தாயு:56 1452/35
மேல்


மாலைமாலையா (1)

சொல் மாலைமாலையா கண்ணீர் சோர தொண்டனேன் எந்நாளும் துதித்து நிற்பேன் – தாயு:16 175/3
மேல்


மாலையா (1)

நல் மாலையா எடுத்து சொன்னார் நல்லோர் நலம் அறிந்து கல்லாத நானும் சொன்னேன் – தாயு:16 175/2
மேல்


மாள (2)

மறுகி சுழலும் மன_குரங்கு மாள வாளா இருப்பேனோ – தாயு:24 334/2
ஆக்குவை மாயை யாவும் நொடியினில் அவற்றை மாள
நீக்குவை நீக்கம் இல்லா நினைப்பொடு மறப்பும் மாற்றி – தாயு:35 570/1,2
மேல்


மாளாநின்றனர் (1)

நேற்று_உளார் இன்று மாளாநின்றனர் அதனை கண்டும் – தாயு:24 337/1
மேல்


மாளிகை (3)

விரவும் அறு_சுவையினோடு வேண்டுவ புசித்து அரையில் வேண்டுவ எலாம் உடுத்து மேடை மாளிகை ஆதி வீட்டினிடை வைகியே வேறு ஒரு வருத்தம் இன்றி – தாயு:10 97/3
தந்தை தாய் தமர் தாரம் மகவு என்னும் இவை எலாம் சந்தையில் கூட்டம் இதிலோ சந்தேகம் இல்லை மணி மாட மாளிகை மேடை சதுரங்க சேனையுடனே – தாயு:12 113/1
மாது காதலி_பங்கனை அபங்கனை மாட மாளிகை சூழும் – தாயு:24 332/3
மேல்


மாளின் (2)

பட்டப்பகல் போல பாழ்த்த சிந்தை மாளின் எல்லாம் – தாயு:43 997/1
பார்க்கின் அணு போல் கிடந்த பாழ்ம் சிந்தை மாளின் என்னை – தாயு:43 998/1
மேல்


மாற்சரியமோ-தான் (1)

மோகமோ மதமோ குரோதமோ லோபமோ முற்றும் மாற்சரியமோ-தான் முறியிட்டு எனை கொள்ளும் நிதியமோ தேட எனின் மூசு வரி வண்டு போல – தாயு:37 583/3
மேல்


மாற்ற (1)

வானே முதல் ஆம் பெரும் பூதம் வகுத்து புரந்து மாற்ற வல்ல – தாயு:20 289/1
மேல்


மாற்றப்படாதோ (1)

படலத்தை மாற்றப்படாதோ நிறைந்த பராபரமே – தாயு:27 438/4
மேல்


மாற்றம் (1)

கச்சு இருக்கும் கொங்கை கரும்பு இருக்கும் இன் மாற்றம்
வைச்சிருக்கும் மாதர் மயக்கு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1133/1,2
மேல்


மாற்றல் (1)

மன_கிலேசத்தை மாற்றல் வழக்கு அன்றோ – தாயு:18 209/2
மேல்


மாற்றாக (1)

ஓட்டினை எடுத்து ஆயிரத்தெட்டு மாற்றாக ஒளி விடும் பொன் ஆக்குவீர் உரகனும் இளைப்பாற யோக தண்டத்திலே உலகு சுமையாக அருளால் – தாயு:7 58/3
மேல்


மாற்றாய் (1)

வாடினேன் என் மயக்கம் மாற்றாய் பராபரமே – தாயு:43 835/2
மேல்


மாற்றி (4)

மனத்து அகத்து உள அழுக்கு எலாம் மாற்றி எம்பிரான் நீ – தாயு:25 362/3
வெள்ளத்தை மாற்றி விடக்கு உண்பார் நஞ்சு ஊட்டும் – தாயு:33 562/3
நீக்குவை நீக்கம் இல்லா நினைப்பொடு மறப்பும் மாற்றி
போக்கொடு வரவும் இன்றி புனித நல் அருள் ஆனந்தம் – தாயு:35 570/2,3
எனதாம் பணி அற மாற்றி அவன் இன் அருள்_வெள்ளத்து இருத்திவைத்தாண்டி – தாயு:54 1432/2
மேல்


மாற்றிடவும் (1)

வையம் கன மயக்கம் மாற்றிடவும் காண்பேனோ – தாயு:46 1328/2
மேல்


மாற்றினை (1)

சஞ்சலம் மாற்றினை இனிமேல் தாய்க்கு உபசாரம் புகன்று – தாயு:33 566/3
மேல்


மாற்று (2)

பருவம்-அது அறிந்து நின் அருளான குளிகை கொடு பரிசித்து வேதிசெய்து பத்து_மாற்று தங்கம் ஆக்கியே பணிகொண்ட பக்ஷத்தை என் சொல்லுகேன் – தாயு:4 32/2
மெய்யில் நோய் மாற்று அவுழ்தம் மெத்த உண்டு எம் அண்ணல் தந்த – தாயு:44 1071/1
மேல்


மாறவிலை (1)

எத்தனை விதங்கள்-தான் கற்கினும் கேட்கினும் என் இதயமும் ஒடுங்கவில்லை யான் எனும் அகந்தை-தான் எள்ளளவும் மாறவிலை யாதினும் அபிமானம் என் – தாயு:8 75/1
மேல்


மாறா (8)

தனி வளர் பொருளே மாறா தண் அரும் கருணை பூத்த – தாயு:21 301/1
வான் என வயங்கி ஒன்று இரண்டு என்னா மார்க்கமா நெறி தந்து மாறா
தேன் என ருசித்து உள் அன்பரை கலந்த செல்வமே சிற்பர சிவமே – தாயு:22 311/3,4
கரை_இலா இன்ப_வெள்ளம் காட்டிடும் முகிலே மாறா
பரை எனும் கிரணம் சூழ்ந்த பானுவே நின்னை பற்றி – தாயு:24 335/2,3
மண்ணும் விண்ணும் மற்று உள்ளன பூதமும் மாறா
பெண்ணும் ஆணுமாய் அல்லவாய் நிற்கின்ற பெரியோய் – தாயு:25 384/3,4
மகம் எலாம் புரிந்தோரை வாழ்வித்தனை மாறா
இகம் எலாம் எனை பிறந்திட செய்தது ஏன் எந்தாய் – தாயு:25 385/3,4
மாறா அனுபூதி வாய்க்கின் அல்லால் என் மயக்கம் – தாயு:43 658/1
பரம் உனக்கு என்று எண்ணும் பழக்கமே மாறா
வரம் எனக்கு தந்து அருள் என் வாழ்வே பராபரமே – தாயு:43 698/1,2
வன்பு ஒன்றும் நீங்கா மனது இறப்ப மாறா பேர்_அன்பு – தாயு:43 977/1
மேல்


மாறாத (4)

ஒளியும் கருணையும் மாறாத இன்பமும் ஓர் உருவாய் – தாயு:27 454/3
மாறாத கவலையுடன் சுழல என்னை வைத்தனையே பரமே நின் மகிமை நன்றே – தாயு:42 609/2
மாறாத துன்பம் எல்லாம் வந்து உரைத்தால் நின் செவியில் – தாயு:43 899/1
மாசு_அற்ற அன்பர் நெஞ்சே மாறாத பெட்டகமா – தாயு:46 1318/1
மேல்


மாறாது (2)

சூழ் பெரும் பேர்_ஒளியை ஒளி பரந்த பரவெளியை இன்ப சுகத்தை மாறாது
ஏழ் உலகும் கலந்து இன்றாய் நாளையாய் என்றும் ஆம் இயற்கை-தன்னை – தாயு:26 393/3,4
நனி இரதம் மாறாது நானும் தனி இருக்க – தாயு:28 537/2
மேல்


மாறுபடு (1)

மாறுபடு தர்க்கம் தொடுக்க அறிவார் சாண் வயிற்றின் பொருட்டதாக மண்டலமும் விண்டலமும் ஒன்றாகி மனது உழல மால் ஆகி நிற்க அறிவார் – தாயு:8 69/1
மேல்


மாறுபடும் (1)

மாறுபடும் கருத்து இல்லை முடிவு_இல் மோன_வாரிதியில் நதி திரள் போல் வயங்கிற்று அம்மா – தாயு:42 630/2
மேல்


மாறுமோ (1)

வாட்டம் அறா உற்பவ நோய் மாறுமோ நாட்டமுற்று – தாயு:28 467/2
மேல்


மான் (4)

இனம் பிரிந்த மான் போல் நான் இடையா வண்ணம் இன்பமுற அன்பர் பக்கல் இருத்திவைத்து – தாயு:14 133/3
கோண் அற ஓர் மான் காட்டி மானை ஈர்க்கும் கொள்கை என அருள் மெளனகுருவாய் வந்து – தாயு:14 148/4
பாய் அ புலி முனம் மான் கன்றை காட்டும்படி அகில – தாயு:27 401/1
துங்க மழு மான் உடையாய் சூல படை உடையாய் – தாயு:28 507/1
மேல்


மான (1)

ஆன மான சமயங்கள் ஆறுக்கும் – தாயு:18 220/1
மேல்


மானத (2)

மானத விகற்பம் அற வென்று நிற்பது நமது மரபு என்ற பரமகுருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 41/4
மானத மார்க்கம் புரிந்து இங்கு அலைந்தேனே பரந்தேனே வஞ்சனேனே – தாயு:24 353/4
மேல்


மானமொடு (1)

தானம் தருமம் தழைத்த குரு மானமொடு
தாய் எனவும் வந்து என்னை தந்த குரு என் சிந்தை – தாயு:28 541/2,3
மேல்


மானார் (1)

கொண்டு விடு மானார் பொய் கூத்து ஒழிவது எந்நாளோ – தாயு:45 1129/2
மேல்


மானுட (1)

எண் அரிய பிறவி-தனில் மானுட பிறவி-தான் யாதினும் அரிதரிது காண் இ பிறவி தப்பினால் எ பிறவி வாய்க்குமோ ஏது வருமோ அறிகிலேன் – தாயு:7 60/1
மேல்


மானுடன் (1)

தொல் நீர்மையாளர்க்கு மானுடன் வகுத்த அருள் துணை என்று நம்புகின்றேன் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 81/4
மேல்


மானே (1)

மதிக்கும் அதனை மதியார் அவர் மார்க்கம் துன்_மார்க்கம் சன்_மார்க்கமோ மானே – தாயு:54 1448/2
மேல்


மானை (1)

கோண் அற ஓர் மான் காட்டி மானை ஈர்க்கும் கொள்கை என அருள் மெளனகுருவாய் வந்து – தாயு:14 148/4

மேல்