ப் – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

ப்ரகாச (1)

சோதி ப்ரகாச மயம் தோற்றுவித்தால் ஆகாதோ – தாயு:47 1362/2
மேல்


ப்ரகாசமாய் (1)

அங்கு இங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தி ஆகி அருளொடு நிறைந்தது எது தன் அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம் – தாயு:1 1/1
மேல்


ப்ரசாத (1)

பிறிவு இலாத வணம் நின்றிடாதபடி பல நிறம் கவரும் உபலமாய் பெரிய மாயையில் அழுந்தி நின்னது ப்ரசாத நல் அருள் மறந்திடும் – தாயு:13 123/3
மேல்


ப்ரதாபம் (1)

பற்பல விதம் கொண்ட புலி கலையின் உரியது படைத்து ப்ரதாபம் உறலால் பனி வெயில்கள் புகுதாமல் நெடிய வான் தொடர் நெடிய பரு மர வனங்கள் ஆரும் – தாயு:7 65/3
மேல்


ப்ரதாபித்து (1)

ஈங்கு ஆர் எனக்கு நிகர் என்ன ப்ரதாபித்து இராவணாகாரம் ஆகி இதய_வெளி எங்கணும் தன் அரசு நாடு செய்திருக்கும் இதனொடு எந்நேரமும் – தாயு:5 45/3
மேல்


ப்ரபஞ்சம்-தனை (1)

தந்தை தாய் முதலான அகில ப்ரபஞ்சம்-தனை தந்தது எனது ஆசையோ தன்னையே நோவனோ பிறரையே நோவனோ தற்காலம்-அதை நோவனோ – தாயு:2 10/3
மேல்


ப்ரவாக (2)

காகமானது கோடி கூடி நின்றாலும் ஒரு கல்லின் முன் எதிர்நிற்குமோ கர்மமானது கோடி முன்னே செய்தாலும் நின் கருணை ப்ரவாக அருளை – தாயு:10 94/1
அறிவாய் இருந்திடும் நாத ஒலி காட்டியே அமிர்த ப்ரவாக சித்தி அருளினை அலாது திரு_அம்பலமும் ஆகி எனை ஆண்டனை பின் எய்தி நெறியாய் – தாயு:12 116/2
மேல்


ப்ரவாகத்தை (1)

விடுத்தவாறும் கண்ணீரொடு கம்பலை விலகுமாறும் என் வேட்கை ப்ரவாகத்தை
தடுத்தவாறும் புகலாய் சிரகிரி தாயுமான தயாபர மூர்த்தியே – தாயு:31 556/3,4
மேல்


ப்ராணநாதா (1)

வாராயோ என் ப்ராணநாதா என்பேன் வளைத்துவளைத்து எனை நீயா வைத்துக்கொண்டு – தாயு:14 155/2
மேல்


ப்ராணன் (1)

உள் உறையில் என் ஆவி நைவேத்தியம் ப்ராணன் ஓங்கும் மதி தூப தீபம் ஒருக்காலம் அன்று இது சதா_கால பூசையா ஒப்புவித்தேன் கருணைகூர் – தாயு:6 54/2
மேல்


ப்ராணனோடு (1)

சுத்திசெய்தும் மூல ப்ராணனோடு அங்கியை சோமவட்டத்து அடைத்தும் சொல் அரிய அமுது உண்டும் அற்ப உடல் கற்பங்கள்-தோறும் நிலைநிற்க வீறு – தாயு:4 36/3

மேல்