பு – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

புக்க 1
புக்காதார் 1
புக்கு 1
புக்கும் 1
புக 2
புகல் 2
புகல்வதே 1
புகல்வாய் 1
புகல்வேன் 1
புகல 2
புகலல்வேண்டும் 1
புகலவைத்தாய் 1
புகலாய் 13
புகலிடம் 3
புகலிடம்-அதா 1
புகலும் 1
புகலுவாய் 1
புகலுவேன் 1
புகழ் 4
புகழ்ந்து 1
புகழ்வது 1
புகழ்வர் 1
புகழ 1
புகழவே 1
புகழும் 1
புகன்ற 1
புகன்றபடி 1
புகன்றிடேன் 1
புகன்று 2
புகா 1
புகு 1
புகுத 1
புகுதலாம் 1
புகுதாது 1
புகுதாமல் 1
புகுந்தது 1
புகுந்தாய் 1
புகுந்திடுவான் 1
புகுந்து 3
புகும் 3
புகை 1
புங்க 1
புங்கவி 1
புஷ்பம் 1
புசித்த 1
புசித்தற்கு 1
புசித்து 4
புசிப்பதற்கு 1
புசிப்பு 2
புசிப்பேனோ 1
புட்கல 1
புட்கலமா 1
புடை 1
புடைத்து 1
புடைபட்டு 1
புடைபெயர்ந்திடவும் 1
புண் 4
புண்-தனை 1
புண்_நீர்மையாளர் 1
புண்டரிகபுரத்தினில் 1
புண்ணாக 1
புண்ணாளர் 1
புண்ணிய 2
புண்ணியம் 2
புண்ணியர்கள் 1
புண்ணியர்காள் 1
புண்ணியருக்கு 1
புண்ணியன் 1
புண்ணியனே 1
புணர்க்கை 1
புணரும் 1
புணை 3
புணையே 1
புணையை 2
புத்தமிர்த 2
புத்தமுதும் 1
புத்தர்-தமை 1
புத்தி 7
புத்தியை 1
புத்திரர்கள் 1
புதல்வர் 1
புதல்வனோடும் 1
புதிது 1
புது 1
புதுக்கிவைத்தது 1
புதுமை 2
புந்தி 9
புந்தி-தனை 1
புந்திக்குள் 3
புந்தியினால் 1
புந்தியோடு 1
புரக்க 1
புரக்கும் 1
புரத்துக்கும் 1
புரந்தனை 1
புரந்தான் 1
புரந்து 1
புரந்தோர் 1
புரப்பது 2
புரப்பான்-தன் 1
புரம் 1
புரவாமல் 1
புரள்வேன் 1
புராணம் 1
புராதனி 1
புராந்தகி 1
புரிதியேல் 1
புரிந்திடார்க்கு 1
புரிந்திடும் 2
புரிந்து 1
புரிந்தோரை 1
புரியும் 1
புரிவாய் 1
புருஷர் 2
புருஷனில் 1
புருஷனும் 1
புருஷார்த்தம் 2
புருடன் 2
புருடனுடன் 1
புருடனும் 1
புருடனோடு 1
புரை 2
புரைகள் 1
புல் 2
புல்லாமல் 1
புல்லாயினும் 1
புல்லி 1
புல்லும்படி 1
புல 7
புலத்தை 1
புலத்தோர் 1
புலப்பட 1
புலப்படவே 1
புலப்படுத்த 1
புலப்படுத்தவேண்டி 1
புலப்படுவது 1
புலம் 4
புலம்_இலான் 1
புலம்பாதே 1
புலம்பி 2
புலம்பிய 1
புலம்புமா 1
புலம்புவனோ 2
புலம்புவார் 1
புலமா 1
புலர்ந்தேன் 1
புலன் 6
புலன்கள் 1
புலனாய் 1
புலனால் 1
புலனில் 1
புலனும் 1
புலனுமாய் 1
புலனை 1
புலால் 3
புலி 6
புலியின் 1
புலியூர் 1
புலை 6
புலையர் 1
புலையினேன் 1
புவன 1
புவனத்தினிடை 1
புவனத்தை 2
புவனம் 3
புவி 1
புவியை 2
புவிராஜர் 1
புழு 2
புழுக்கம் 1
புளகிதமாக 1
புளகிப்ப 2
புற்புதம் 1
புற்றகத்து 1
புற 1
புறத்தவரை 1
புறத்தில் 1
புறத்தின் 1
புறப்பது 1
புறம் 7
புறம்பா 1
புறம்பும் 1
புறமும் 5
புறமுமாய் 1
புன் 8
புன்மை 3
புன்மையே 1
புன்மையேன் 5
புன்னகை 2
புனல் 9
புனலே 1
புனற்குள் 1
புனித 5
புனிதம் 1
புனிதமாய் 1
புனிதர்-பால் 1
புனிதரின் 1
புனிதன் 1
புனை 3

புக்க (1)

போதித்த நிலையையும் மயக்குதே அபயம் நான் புக்க அருள் தோற்றிடாமல் பொய்யான உலகத்தை மெய்யா நிறுத்தி என் புந்திக்குள் இந்த்ரசாலம் – தாயு:5 39/2
மேல்


புக்காதார் (1)

புக்காதார் உண்டோ புகலாய் பராபரமே – தாயு:43 892/2
மேல்


புக்கு (1)

புக்கு உழலும் வாஞ்சை இனி போதும் என்பது எந்நாளோ – தாயு:45 1116/2
மேல்


புக்கும் (1)

மத்தியிடை நின்றும் உதிர் சருகு புனல் வாயு வினை வன் பசி-தனக்கு அடைத்தும் மவுனத்து இருந்தும் உயர் மலை முழை-தனில் புக்கும் மன்னு தசநாடி முற்றும் – தாயு:4 36/2
மேல்


புக (2)

நீ உண்டு நின்னை சரண் புக நான் உண்டு என் நெஞ்சம் ஐயா – தாயு:27 421/3
சித்தம் மிசை புக இருத்தி பிடித்துக்கொண்டு தியக்கம்_அற இன்ப சுகம் சேர்வது என்றோ – தாயு:41 599/2
மேல்


புகல் (2)

பொல்லா மயக்கத்தில் ஆழ்ந்து ஆவது என்ன புகல் நெஞ்சமே – தாயு:27 445/4
புகல் அரிய நின் விளையாட்டு என்னே எந்தாய் புன்மை அறிவு உடைய என்னை பொருளா பண்ணி – தாயு:42 634/1
மேல்


புகல்வதே (1)

பொருவரே அவர்க்கு என்-கொல் புகல்வதே – தாயு:18 266/4
மேல்


புகல்வாய் (1)

சாதிக்குதே இதனை வெல்லவும் உபாயம் நீ தந்து அருள்வது என்று புகல்வாய் சண்மதஸ்தாபனமும் வேதாந்த சித்தாந்த சமரச நிர்வாக நிலையும் – தாயு:5 39/3
மேல்


புகல்வேன் (1)

வல்லான் ஒருத்தன் வரவும் த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் வல்ல தமிழ் அறிஞர் வரின் அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன்
வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகை வந்த வித்தை என் முத்தி தருமோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 66/3,4
மேல்


புகல (2)

என்னே எனே கருணை விளையாட்டு இருந்தவாறு எம்_அனோர் புகல எளிதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 90/4
பொரு திரை கடல் நுண் மணல் எண்ணினும் புகல
கருத எட்டிடா நிறை பொருள் அளவை யார் காண்பார் – தாயு:24 339/3,4
மேல்


புகலல்வேண்டும் (1)

ஆனது என்-கொல் ஐயா ஏகதேசம் பூரணத்துக்கு உண்டோ-தான் புகலல்வேண்டும் – தாயு:42 633/2
மேல்


புகலவைத்தாய் (1)

பொய் விடா பொய்யினேன் உள்ளத்து இருந்து தான் பொய்யான பொய்யை எல்லாம் பொய் எனா வண்ணமே புகலவைத்தாய் எனில் புன்மையேன் என் செய்குவேன் – தாயு:6 51/2
மேல்


புகலாய் (13)

கல்லாத வறிஞனுக்கு உள்ளே உணர்த்தினை கதிக்கு வகை ஏது புகலாய் கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 49/4
வெய்யனேன் வெகுளியேன் வெறியனேன் சிறியனேன் வினையினேன் என்று என்னை நீ விட்டுவிட நினைவையேல் தட்டழிவது அல்லாது வேறு கதி ஏது புகலாய்
துய்யனே மெய்யனே உயிரினுக்குயிரான துணைவனே இணை ஒன்று இலா துரியனே துரியமும் காணா அதீதனே சுருதி முடி மீது இருந்த – தாயு:8 74/2,3
தொண்டர்களிடத்திலோ நீ வீற்றிருப்பது தொழும்பனேற்கு உளவு புகலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 86/4
இருமை செறி சட_வினை எதிர்த்து வாய் பேசுமோ ஏது உளவு சிறிது புகலாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 95/4
சமய நெறி காணாத சாக்ஷி நீ சூக்ஷ்மமா தமியனேற்கு உளவு புகலாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 103/4
பொய்யன் என்று எனை புறம் விடின் என் செய்வேன் புகலாய் – தாயு:25 372/4
புனித நீ அறியாதது ஒன்று உள்ளதோ புகலாய் – தாயு:25 374/4
தடுத்தவாறும் புகலாய் சிரகிரி தாயுமான தயாபர மூர்த்தியே – தாயு:31 556/4
பொய்யோ வெளியா புகலாய் பராபரமே – தாயு:43 673/2
பூசல் என்று போமோ புகலாய் பராபரமே – தாயு:43 823/2
போதனையும் உண்டோ புகலாய் பராபரமே – தாயு:43 875/2
புக்காதார் உண்டோ புகலாய் பராபரமே – தாயு:43 892/2
பூண்டது என்ன கன்மம் புகலாய் பராபரமே – தாயு:43 955/2
மேல்


புகலிடம் (3)

பொல்லாத சேய் எனில் தாய் தள்ளல் நீதமோ புகலிடம் பிறிதும் உண்டோ பொய் வார்த்தை சொல்லிலோ திரு_அருட்கு அயலுமாய் புன்மையேன் ஆவன் அந்தோ – தாயு:9 79/3
பொய்யனேற்கு புகலிடம் எங்ஙனே – தாயு:18 224/4
அல்லால் புகலிடம் வேறும் உண்டோ அதுவே நிலையா – தாயு:27 445/2
மேல்


புகலிடம்-அதா (1)

போதமாய் ஆதி நடு அந்தமும் இலாததாய் புனிதமாய் அவிகாரமாய் போக்கு_வரவு இல்லாத இன்பமாய் நின்ற நின் பூரணம் புகலிடம்-அதா
ஆதரவுவையாமல் அறிவினை மறைப்பது நின் அருள் பின்னும் அறிவு_இன்மை தீர்த்து அறிவித்து நிற்பது நின் அருள் ஆகில் எளியனேற்கு அறிவு ஆவதே அறிவு இலா – தாயு:4 35/1,2
மேல்


புகலும் (1)

போனகம் இருக்கின்ற சாலையிடை வேண்டுவ புசித்தற்கு இருக்குமது போல் புருஷர் பெறு தர்மாதி வேதமுடன் ஆகமம் புகலும் அதினால் ஆம் பயன் – தாயு:5 41/1
மேல்


புகலுவாய் (1)

வேத முதலான நல் ஆகம தன்மையை விளக்கும் உள்_கண்_இலார்க்கும் மிக்க நின் மகிமையை கேளாத செவிடர்க்கும் வீறு வாதம் புகலுவாய்
வாத நோயாளர்க்கும் எட்டாத முக்கண் உடை மா மருந்துக்கு அமிர்தமே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 580/3,4
மேல்


புகலுவேன் (1)

தளரும் தன்மை இங்கு ஆரொடு புகலுவேன் தக்கோய் – தாயு:25 363/4
மேல்


புகழ் (4)

அருமை பெறு புகழ் பெற்ற வேதாந்த சித்தாந்தம் ஆதியாம் அந்தம் மீதும் அத்துவித நிலையராய் என்னை ஆண்டு உன் அடிமை ஆனவர்கள் அறிவினூடும் – தாயு:4 32/3
இனத்தாரே நல்ல இனத்தார் கனத்த புகழ்
கொணடவரும் அன்னவரே கூறு அரிய முத்தி நெறி – தாயு:28 479/2,3
வார் அணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ் வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 582/4
அட்ட சித்தியும் நல் அன்பருக்கு அருள விருது கட்டிய பொன் அன்னமே அண்ட கோடி புகழ் காவை வாழும் அகிலாண்டநாயகி என் அம்மையே – தாயு:38 586/4
மேல்


புகழ்ந்து (1)

இருவரே புகழ்ந்து ஏத்தற்கு இனியராம் – தாயு:18 266/1
மேல்


புகழ்வது (1)

தமிழ் சமர்த்தர் மெய் புகழ்வது எந்நாளோ – தாயு:45 1109/2
மேல்


புகழ்வர் (1)

வெற்பினிடை உறைதலால் தவராஜசிங்கம் என மிக்கோர் உமை புகழ்வர் காண் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 65/4
மேல்


புகழ (1)

ஆர் அணி சடை கடவுள் ஆரணி என புகழ அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயிலே – தாயு:37 582/3
மேல்


புகழவே (1)

இட்டமுற்ற வள ராஜ_யோகம் இவன் யோகம் என்று அறிஞர் புகழவே ஏழையேன் உலகில் நீடு வாழ்வன் இனி இங்கு இதற்கும் அனுமானமோ – தாயு:38 586/2
மேல்


புகழும் (1)

புகழும் கல்வியும் போதமும் பொய் இலா – தாயு:18 267/1
மேல்


புகன்ற (1)

புகன்ற நின் தன்மை போதத்து அடங்குமோ – தாயு:18 237/2
மேல்


புகன்றபடி (1)

பொருந்து சகம் அனைத்தினையும் பொய்பொய் என்று புகன்றபடி மெய் என்றே போத ரூபத்து – தாயு:42 623/1
மேல்


புகன்றிடேன் (1)

பொய்த்த மொழி அல்லால் மருந்துக்கும் மெய்ம் மொழி புகன்றிடேன் பிறர் கேட்கவே போதிப்பது அல்லாது சும்மா இருந்து அருள் பொருந்திடா பேதை நானே – தாயு:8 75/3
மேல்


புகன்று (2)

சஞ்சலம் மாற்றினை இனிமேல் தாய்க்கு உபசாரம் புகன்று
பஞ்சரிக்க நான் ஆர் பதியே பராபரமே – தாயு:33 566/3,4
பூராயம் எல்லாம் புகன்று வா பைங்கிளியே – தாயு:44 1063/2
மேல்


புகா (1)

ஒப்பு உயர்வு ஒன்று இன்றி ஒலி புகா மோன வட்ட – தாயு:43 750/1
மேல்


புகு (1)

இடம் பொருள் ஏவலை குறித்து மடம் புகு நாய் எனவே எங்கே நீ அகப்பட்டாய் இங்கே நீ வாடா – தாயு:17 188/1
மேல்


புகுத (1)

பொய் வந்து உழலும் சமய நெறி புகுத வேண்டா முத்தி தரும் – தாயு:30 554/3
மேல்


புகுதலாம் (1)

சந்ததமும் இளமையோடு இருக்கலாம் மற்று ஒரு சரீரத்தினும் புகுதலாம் சலம் மேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம் தன் நிகர்_இல் சித்தி பெறலாம் – தாயு:12 118/3
மேல்


புகுதாது (1)

நெறியில் புகுதாது ஓர்படித்தாய் நின்ற நிலையும் தெரியாது – தாயு:20 283/2
மேல்


புகுதாமல் (1)

பற்பல விதம் கொண்ட புலி கலையின் உரியது படைத்து ப்ரதாபம் உறலால் பனி வெயில்கள் புகுதாமல் நெடிய வான் தொடர் நெடிய பரு மர வனங்கள் ஆரும் – தாயு:7 65/3
மேல்


புகுந்தது (1)

சித்தம் மிசை புகுந்தது தான் மெய்யோ பொய்யோ சிறியேற்கு இங்கு உளவு உரையாய் திகையா வண்ணம் – தாயு:41 601/2
மேல்


புகுந்தாய் (1)

ஆள வந்தார் தாளின் கீழ் ஆள் புகுந்தாய் மீள உன்னை – தாயு:28 523/2
மேல்


புகுந்திடுவான் (1)

இன்ப_கடலில் புகுந்திடுவான் இரவும் பகலும் தோற்றாமல் – தாயு:20 285/1
மேல்


புகுந்து (3)

மனத்துள் புகுந்து மயங்கவும் என் மதிக்குள் களங்கம் வந்தது என்னோ – தாயு:23 321/3
பொறியில் செறி ஐம்_புல கனியை புந்தி கவரால் புகுந்து இழுத்து – தாயு:24 334/1
வேறுபடும் சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின் விளங்கு பரம்பொருளே நின் விளையாட்டு அல்லால் – தாயு:42 630/1
மேல்


புகும் (3)

போனால் அதிட்ட வலி வெல்ல எளிதோ பகல் பொழுது புகும் முன் கண் மூடி பொய் துகில்கொள்வான்-தனை எழுப்ப வசமோ இனி போதிப்பது எந்த நெறியை – தாயு:8 73/3
ஆறு அனைத்தும் புகும் கடல் போல் சமயகோடி அத்தனையும் தொடர்ந்து புகும் ஆதி நட்பே – தாயு:14 134/4
ஆறு அனைத்தும் புகும் கடல் போல் சமயகோடி அத்தனையும் தொடர்ந்து புகும் ஆதி நட்பே – தாயு:14 134/4
மேல்


புகை (1)

அனல் ஒன்றிட எரிந்து புகை மண்டிடுவது அன்று – தாயு:56 1452/8
மேல்


புங்க (1)

புங்க வெண்_கோட்டானை பதம் புந்தி வைப்பது எந்நாளோ – தாயு:45 1091/2
மேல்


புங்கவி (1)

பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி புராந்தகி த்ரியம்பகி எழில் புங்கவி விளங்கு சிவசங்கரி சகஸ்ரதள புஷ்பம் மிசை வீற்றிருக்கும் – தாயு:37 582/1
மேல்


புஷ்பம் (1)

பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி புராந்தகி த்ரியம்பகி எழில் புங்கவி விளங்கு சிவசங்கரி சகஸ்ரதள புஷ்பம் மிசை வீற்றிருக்கும் – தாயு:37 582/1
மேல்


புசித்த (1)

பொய் திகழும் உலக நடை என் சொல்கேன் என் சொல்கேன் பொழுதுபோக்கு ஏது என்னிலோ பொய் உடல் நிமித்தம் புசிப்பு கலைந்திடல் புசித்த பின் கண்ணுறங்கல் – தாயு:7 61/1
மேல்


புசித்தற்கு (1)

போனகம் இருக்கின்ற சாலையிடை வேண்டுவ புசித்தற்கு இருக்குமது போல் புருஷர் பெறு தர்மாதி வேதமுடன் ஆகமம் புகலும் அதினால் ஆம் பயன் – தாயு:5 41/1
மேல்


புசித்து (4)

நேராக நின்று விளை போகம் புசித்து உய்ந்த நின் அன்பர் கூட்டம் எய்த நினைவின்படிக்கு நீ முன் நின்று காப்பதே நின் அருள் பாரம் என்றும் – தாயு:8 72/3
விரவும் அறு_சுவையினோடு வேண்டுவ புசித்து அரையில் வேண்டுவ எலாம் உடுத்து மேடை மாளிகை ஆதி வீட்டினிடை வைகியே வேறு ஒரு வருத்தம் இன்றி – தாயு:10 97/3
புத்தமிர்த போகம் புசித்து விழி இமையாத பொன்_நாட்டும் வந்தது என்றால் போராட்டம் அல்லவோ பேர்_இன்ப முத்தி இ பூமியிலிருந்து காண – தாயு:10 98/3
கனியேனும் வறிய செங்காயேனும் உதிர் சருகு கந்த மூலங்களேனும் கனல் வாதை வந்து எய்தின் அள்ளி புசித்து நான் கண் மூடி மெளனி ஆகி – தாயு:11 104/3
மேல்


புசிப்பதற்கு (1)

தேகம் விழும் முன் புசிப்பதற்கு சேர வாரும் சகத்தீரே – தாயு:30 555/4
மேல்


புசிப்பு (2)

பொய் திகழும் உலக நடை என் சொல்கேன் என் சொல்கேன் பொழுதுபோக்கு ஏது என்னிலோ பொய் உடல் நிமித்தம் புசிப்பு கலைந்திடல் புசித்த பின் கண்ணுறங்கல் – தாயு:7 61/1
கல்லாத மனமோ ஒடுங்கி உபரதி பெற காணவிலை ஆகையாலே கை ஏற்று உணும் புசிப்பு ஒவ்வாது எந்நாளும் உன் காட்சியில் இருந்துகொண்டு – தாயு:10 96/2
மேல்


புசிப்பேனோ (1)

போதரவால் இன்பம் புசிப்பேனோ பைங்கிளியே – தாயு:44 1042/2
மேல்


புட்கல (1)

தத்துவ சொருபத்தை மத சம்மதம் பெறா சாலம்ப ரகிதமான சாசுவத புட்கல நிராலம்ப ஆலம்ப சாந்தபத வ்யோம நிலையை – தாயு:1 3/2
மேல்


புட்கலமா (1)

பொங்கிய நின் தண் அருளை புட்கலமா பெற்றவர்கட்கு – தாயு:43 777/1
மேல்


புடை (1)

வலையின் புடை மறிந்த மறி என்று அவசமுண்டு – தாயு:56 1452/31
மேல்


புடைத்து (1)

மின் போலும் இடை ஒடியும்ஒடியும் என மொழிதல் போல் மென் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப வீங்கி புடைத்து விழ சுமை அன்ன கொங்கை மட மின்னார்கள் பின் ஆவலால் – தாயு:12 120/1
மேல்


புடைபட்டு (1)

பொய்யும் அவாவும் அழுக்காறும் புடைபட்டு ஓடும் நல் நெறியாம் – தாயு:23 317/2
மேல்


புடைபெயர்ந்திடவும் (1)

ஞான நெறி முக்ய நெறி காட்சி அனுமானம் முதல் நானாவிதங்கள் தேர்ந்து நான் நான் என குளறுபடை புடைபெயர்ந்திடவும் நான்கு சாதனமும் ஓர்ந்திட்டு – தாயு:5 41/2
மேல்


புண் (4)

நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் நெடு நாள் இருந்த பேரும் நிலையாகவே இனும் காயகற்பம் தேடி நெஞ்சு புண் ஆவர் எல்லாம் – தாயு:2 13/2
வட கயிறு வெள் நரம்பா என்பு தசையினால் மதவேள் விழா நடத்த வைக்கின்ற கைத்தேரை வெண்ணீர் செந்நீர் கணீர் மல நீர் புண் நீர் இறைக்கும் – தாயு:11 101/2
தடையால் தளையிட்டு நெஞ்சம் புண் ஆக தளரவைத்தாய் – தாயு:27 455/3
புண்_நீர்மையாளர் புலம்புமா போல் புலம்பி – தாயு:45 1240/1
மேல்


புண்-தனை (1)

அளி புண்-தனை வளைந்து விரல் கொண்டு உற அளைந்து – தாயு:56 1452/45
மேல்


புண்_நீர்மையாளர் (1)

புண்_நீர்மையாளர் புலம்புமா போல் புலம்பி – தாயு:45 1240/1
மேல்


புண்டரிகபுரத்தினில் (1)

புண்டரிகபுரத்தினில் நாதாந்த மெளன போதாந்த நடம் புரியும் புனித வாழ்வே – தாயு:24 333/4
மேல்


புண்ணாக (1)

புண்ணாக செய்தது இனி போதும் பராபரமே – தாயு:43 670/2
மேல்


புண்ணாளர் (1)

பூராயமா மேல் ஒன்று அறியா வண்ணம் புண்ணாளர் போல் நெஞ்சம் புலம்பி உள்ளே – தாயு:14 155/3
மேல்


புண்ணிய (2)

போத நித்திய புண்ணிய எண் அரும் புவன – தாயு:25 365/3
புண்ணிய பாவங்கள் பொருந்தா மெய் அன்பர் எல்லாம் – தாயு:45 1227/1
மேல்


புண்ணியம் (2)

பொருந்தும் நாள் நல்ல புண்ணியம் செய்த நாள் பொருந்தாது – தாயு:25 375/2
புண்ணியம் நினக்கே அன்றோ பூரணானந்த வாழ்வே – தாயு:36 575/4
மேல்


புண்ணியர்கள் (1)

போதாந்த புண்ணியர்கள் போற்றி சய போற்றி எனும் – தாயு:43 653/1
மேல்


புண்ணியர்காள் (1)

பூ_உலகில் வளர் அருணகிரியே மற்றை புண்ணியர்காள் ஓ என்பேன் புரை ஒன்று இல்லா – தாயு:14 162/3
மேல்


புண்ணியருக்கு (1)

அன்பால் கரைந்து கண்ணீர் ஆறு கண்ட புண்ணியருக்கு
உன்-பால் வர வழி-தான் உண்டோ பராபரமே – தாயு:43 730/1,2
மேல்


புண்ணியன் (1)

போதமாய் நின்ற புண்ணியன் பூம் திரு – தாயு:18 243/3
மேல்


புண்ணியனே (1)

போனாலும் யான் போவன் அல்லால் மோன புண்ணியனே வேறும் ஒரு பொருளை நாடேன் – தாயு:42 616/2
மேல்


புணர்க்கை (1)

பூண்ட அளவைகள் மன வாக்கு ஆதி எல்லாம் பொருந்தாமல் அகம் புறமும் புணர்க்கை ஆகி – தாயு:14 144/4
மேல்


புணரும் (1)

புல்லாமல் புல்லி புணரும் நாள் எந்நாளோ – தாயு:45 1192/2
மேல்


புணை (3)

அழுந்தாத வண்ணம் நின் பாத புணை தந்து அருள்வது என்றோ – தாயு:27 407/2
பாத புணை இணையை பற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1190/2
நேச புணை தாள் நிறுத்தினால் ஆகாதோ – தாயு:47 1363/2
மேல்


புணையே (1)

வெள்ள செம் பாத புணையே அல்லால் கதி வேறு இல்லையே – தாயு:27 441/4
மேல்


புணையை (2)

விழுகின்ற பாவிக்கும் தன் தாள் புணையை வியந்து அளித்தான் – தாயு:27 433/2
கரை சேரும்படிக்கு உன் அருள் புணையை கூட்டும் கைப்பிடியே கடைப்பிடியா கருத்துள் கண்டேன் – தாயு:40 590/2
மேல்


புத்தமிர்த (2)

புத்தமிர்த போகம் புசித்து விழி இமையாத பொன்_நாட்டும் வந்தது என்றால் போராட்டம் அல்லவோ பேர்_இன்ப முத்தி இ பூமியிலிருந்து காண – தாயு:10 98/3
புத்தமிர்த போகமும் கற்பக நல் நீழலில் பொலிவுற இருக்கும் இயல்பும் பொன்_உலகில் அயிராவதத்து ஏறு வரிசையும் பூமண்டலாதிக்கமும் – தாயு:12 121/1
மேல்


புத்தமுதும் (1)

பூங்காவன நிழலும் புத்தமுதும் சாந்தபதம் – தாயு:28 527/1
மேல்


புத்தர்-தமை (1)

போதவூர் நாடு அறிய புத்தர்-தமை வாதில் வென்ற – தாயு:45 1110/1
மேல்


புத்தி (7)

சுமை எடு-மின் என்று-தான் சும்மாடுமாய் எமை சுமையாளும் ஆக்கி நாளும் துர்_புத்தி பண்ணி உள நல்_புத்தி யாவையும் சூறையிட்டு இந்த்ரஜாலம் – தாயு:11 103/2
சுமை எடு-மின் என்று-தான் சும்மாடுமாய் எமை சுமையாளும் ஆக்கி நாளும் துர்_புத்தி பண்ணி உள நல்_புத்தி யாவையும் சூறையிட்டு இந்த்ரஜாலம் – தாயு:11 103/2
பொய் முடங்கு தொழில் யாததற்கும் நல சாரதி தொழில் நடத்திடும் புத்தி யூகம் அறிவு_அற்ற மூகம் இவை பொருள் என கருதும் மருளன் யான் – தாயு:13 125/3
ஓர் ஆயிரம் புத்தி சொன்னாலும் ஓர்கிலை ஓ கெடுவாய் – தாயு:27 450/3
புத்தி நெறியாக உனை போற்றி பல காலும் – தாயு:33 567/1
புத்தி நீ எனக்கு ஒன்று உண்டோ பூரணானந்த வாழ்வே – தாயு:36 576/4
புத்தி எனும் துத்தி பொறி அரவின் வாய் தேரை – தாயு:45 1149/1
மேல்


புத்தியை (1)

பூராயம் ஆகவும் நீ மற்று ஒன்றை விரித்து புலம்பாதே சஞ்சலமா புத்தியை நாட்டாதே – தாயு:17 189/3
மேல்


புத்திரர்கள் (1)

பதி உண்டு நிதி உண்டு புத்திரர்கள் மித்திரர்கள் பக்கம் உண்டு எக்காலமும் பவிசு உண்டு தவிசு உண்டு திட்டாந்தமாக யமபடர் எனும் திமிரம் அணுகா – தாயு:37 578/1
மேல்


புதல்வர் (1)

மனைவி புதல்வர் அன்னை பிதா மாடு வீடு என்றிடும் மயக்கம்-தனையும் – தாயு:23 313/3
மேல்


புதல்வனோடும் (1)

வண் துளபம் அணி மார்பன் புதல்வனோடும் மனைவியொடும் குடியிருந்து வணங்கி போற்றும் – தாயு:24 333/3
மேல்


புதிது (1)

இன்று புதிது அன்றே எளியேன் படும் துயரம் – தாயு:43 678/1
மேல்


புது (1)

கொய்யும் புது மலர் இட்டு மெய் அன்பர் குழாத்துடனே – தாயு:27 403/2
மேல்


புதுக்கிவைத்தது (1)

பொய் புவியை மெய் போல் புதுக்கிவைத்தது என்னேயோ – தாயு:51 1407/2
மேல்


புதுமை (2)

புலம் காணார் நான் ஒருவன் ஞானம் பேசி பொய் கூடு காத்தது என்ன புதுமை கண்டாய் – தாயு:42 626/2
போக்கு_வரவு அற்று இருக்கும் சுத்த பூரணம் ஆக்கினான் புதுமை காண் மின்னே – தாயு:54 1438/2
மேல்


புந்தி (9)

புந்தி மகிழுற நாளும் தடை அற ஆனந்த வெள்ளம் பொலிக என்றே – தாயு:3 19/3
புந்தி மகிழ் உற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன் பூராயமாக நினது அருள் வந்து உணர்த்த இவை போன வழி தெரியவில்லை – தாயு:4 30/2
புன் புலால் மயிர் தோல் நரம்பு என்பு மொய்த்திடு புலை குடிலில் அருவருப்பு பொய் அல்லவே இதனை மெய் என்று நம்பி என் புந்தி செலுமோ பாழிலே – தாயு:9 80/3
போக்கும் இல்லை என் புந்தி கிலேசத்தை – தாயு:18 250/2
பொறியில் செறி ஐம்_புல கனியை புந்தி கவரால் புகுந்து இழுத்து – தாயு:24 334/1
புந்தி என்ன போதம் என்ன போ – தாயு:28 464/4
பூதமொடு பழகி வளர் இந்திரியமாம் பேய்கள் புந்தி முதலான பேய்கள் போராடு கோபாதி ராக்ஷச பேய்கள் என் போதத்தை ஊடு அழித்து – தாயு:37 585/1
புங்க வெண்_கோட்டானை பதம் புந்தி வைப்பது எந்நாளோ – தாயு:45 1091/2
போற்றேன் என்றாலும் என்னை புந்தி செயும் வேதனைக்கு இங்கு – தாயு:45 1241/1
மேல்


புந்தி-தனை (1)

பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனை கந்த பொடியிலே அடியிலே மேல் பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே புந்தி-தனை நுழைய விட்டு – தாயு:37 579/2
மேல்


புந்திக்குள் (3)

போதித்த நிலையையும் மயக்குதே அபயம் நான் புக்க அருள் தோற்றிடாமல் பொய்யான உலகத்தை மெய்யா நிறுத்தி என் புந்திக்குள் இந்த்ரசாலம் – தாயு:5 39/2
புந்திக்குள் நின்ற அருள் பொற்பே பராபரமே – தாயு:43 936/2
புந்திக்குள் நீ-தான் பொருந்திடவும் காண்பேனோ – தாயு:46 1315/2
மேல்


புந்தியினால் (1)

புந்தியினால் நின் அடியை போற்றுகின்ற மெய் அடியார் – தாயு:43 982/1
மேல்


புந்தியோடு (1)

பூரண அறிவில் கண்டிலம் அதனால் போற்றி இ புந்தியோடு இருந்து – தாயு:19 272/3
மேல்


புரக்க (1)

தாய் உண்டு சேய் என்ன என்னை புரக்க சதானந்தமாம் – தாயு:27 421/2
மேல்


புரக்கும் (1)

கோனே என்னை புரக்கும் நெறி குறித்தாய்_இலையே கொடியேனை – தாயு:20 289/2
மேல்


புரத்துக்கும் (1)

அண்டார் புரத்துக்கும் அன்பர் வினைக்கும் அசனி தன்னை – தாயு:27 405/2
மேல்


புரந்தனை (1)

சகம் எலாம் தனி புரந்தனை தகவு உடை தக்கோர் – தாயு:25 385/1
மேல்


புரந்தான் (1)

வேண்டுவ படைத்தாய் நுந்தை விதிப்படி புரந்தான் அத்தை – தாயு:15 166/1
மேல்


புரந்து (1)

வானே முதல் ஆம் பெரும் பூதம் வகுத்து புரந்து மாற்ற வல்ல – தாயு:20 289/1
மேல்


புரந்தோர் (1)

புரந்தோர் தம் தேசம் என்பார் பூமியை போராடி – தாயு:43 863/1
மேல்


புரப்பது (2)

காதல் மிகு மணி_இழையார் என வாடுற்றேன் கருத்து அறிந்து புரப்பது உன் மேல் கடன் முக்காலும் – தாயு:14 163/4
நம்பினேன் இனி புரப்பது எ காலமோ நவிலாய் – தாயு:25 378/4
மேல்


புரப்பான்-தன் (1)

புரப்பான்-தன் அருள் நாடி இருப்பது போல் எங்கு நிறை பொருளே கேளாய் – தாயு:24 323/2
மேல்


புரம் (1)

அடையார் புரம் செற்ற தேவே நின் பொன் அடிக்கு அன்பு சற்றும் – தாயு:27 455/1
மேல்


புரவாமல் (1)

தாய் ஆன தண் அருளை நிரம்ப வைத்து தமியேனை புரவாமல் தள்ளித்தள்ளிப்போய் – தாயு:42 633/1
மேல்


புரள்வேன் (1)

வாயில் கும்பம் போல் கிடந்து புரள்வேன் வானின் மதி கதிரை முன்னிலையா வைத்து நேரே – தாயு:14 156/4
மேல்


புராணம் (1)

வேதமுடன் ஆகம புராணம் இதிகாசம் முதல் வேறும் உள கலைகள் எல்லாம் மிக்காக அத்துவித துவித மார்க்கத்தையே விரிவாய் எடுத்துரைக்கும் – தாயு:10 91/1
மேல்


புராதனி (1)

பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி புராந்தகி த்ரியம்பகி எழில் புங்கவி விளங்கு சிவசங்கரி சகஸ்ரதள புஷ்பம் மிசை வீற்றிருக்கும் – தாயு:37 582/1
மேல்


புராந்தகி (1)

பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி புராந்தகி த்ரியம்பகி எழில் புங்கவி விளங்கு சிவசங்கரி சகஸ்ரதள புஷ்பம் மிசை வீற்றிருக்கும் – தாயு:37 582/1
மேல்


புரிதியேல் (1)

தன்னை தான் அறிந்திட அருள் புரிதியேல் தக்கோய் – தாயு:25 364/2
மேல்


புரிந்திடார்க்கு (1)

அவம்_புரிந்திடார்க்கு ஆனந்த அமிர்தத்தை அளிக்க – தாயு:25 388/3
மேல்


புரிந்திடும் (2)

தன்னை தன் அடியார்க்கு அருள் புரிந்திடும் தக்கோய் – தாயு:25 377/4
பவம் புரிந்திடும் பாவியேற்கு அருள் நிலை பதிய – தாயு:25 388/1
மேல்


புரிந்து (1)

மானத மார்க்கம் புரிந்து இங்கு அலைந்தேனே பரந்தேனே வஞ்சனேனே – தாயு:24 353/4
மேல்


புரிந்தோரை (1)

மகம் எலாம் புரிந்தோரை வாழ்வித்தனை மாறா – தாயு:25 385/3
மேல்


புரியும் (1)

புண்டரிகபுரத்தினில் நாதாந்த மெளன போதாந்த நடம் புரியும் புனித வாழ்வே – தாயு:24 333/4
மேல்


புரிவாய் (1)

சந்ததமும் நின் அருளை மறவா வரம் தந்து தமியேனை ரக்ஷை புரிவாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 110/4
மேல்


புருஷர் (2)

போனகம் இருக்கின்ற சாலையிடை வேண்டுவ புசித்தற்கு இருக்குமது போல் புருஷர் பெறு தர்மாதி வேதமுடன் ஆகமம் புகலும் அதினால் ஆம் பயன் – தாயு:5 41/1
பொல்லாத பொய்ம்மொழியும் அல்லாது நன்மைகள் பொருந்து குணம் ஏதும் அறியேன் புருஷர் வடிவானதே அல்லாது கனவிலும் புருஷார்த்தம் ஏதும் இல்லேன் – தாயு:5 42/2
மேல்


புருஷனில் (1)

பொல்லாத வாதனை எனும் சப்த பூமியிடை போந்துதலை சுற்றி ஆடும் புருஷனில் அடங்காத பூவை போல் தானே புறம் போந்து சஞ்சரிக்கும் – தாயு:10 92/2
மேல்


புருஷனும் (1)

கரவு புருஷனும் அல்லன் என்னை காக்கும் தலைமை கடவுள் காண் மின்னே – தாயு:54 1426/2
மேல்


புருஷார்த்தம் (2)

பொல்லாத பொய்ம்மொழியும் அல்லாது நன்மைகள் பொருந்து குணம் ஏதும் அறியேன் புருஷர் வடிவானதே அல்லாது கனவிலும் புருஷார்த்தம் ஏதும் இல்லேன் – தாயு:5 42/2
கைத்தலம் விளங்கும் ஒரு நெல்லி அம் கனி என கண்ட வேதாகமத்தின் காட்சி புருஷார்த்தம் அதில் மாட்சி பெறு முத்தி-அது கருதின் அனுமானம் ஆதி – தாயு:11 106/1
மேல்


புருடன் (2)

நோக்கு கரணம் புருடன் உடனே கூட நுவல்வர் இருபத்தைந்தா நுண்ணியோரே – தாயு:24 346/4
அழுத்திடும் மூலம்-தன்னில் துரியாதீதம் அதனிடையே புருடன் ஒன்றி அமரும் ஞானம் – தாயு:24 347/3
மேல்


புருடனுடன் (1)

சுழுத்தி இதயம்-தனில் பிராணம் சித்தம் சொல் அரிய புருடனுடன் மூன்றது ஆகும் – தாயு:24 347/1
மேல்


புருடனும் (1)

வழுத்திய நாபியில் துரியம் பிராணனோடு மன்னு புருடனும் கூட வயங்காநிற்கும் – தாயு:24 347/2
மேல்


புருடனோடு (1)

நீக்கம்_இல் அந்தக்கரணம் புருடனோடு நின்ற முப்பான் ஐந்து நிலவும் கண்டத்து – தாயு:24 346/2
மேல்


புரை (2)

பூ_உலகில் வளர் அருணகிரியே மற்றை புண்ணியர்காள் ஓ என்பேன் புரை ஒன்று இல்லா – தாயு:14 162/3
பொய் மயமேயான புரை தீர எந்தை இன்ப – தாயு:47 1354/1
மேல்


புரைகள் (1)

பொன்னிலே பணி போலும் மாயை தரும் மனமே உன் புரைகள் தீர்ந்தாய் – தாயு:26 397/2
மேல்


புல் (2)

பூ விற்கும் வான் கடையில் புல் விற்போர் போல ஒன்றை – தாயு:33 563/3
போன வழியும் கூட புல் முளைப்பது எந்நாளோ – தாயு:45 1156/2
மேல்


புல்லாமல் (1)

புல்லாமல் புல்லி புணரும் நாள் எந்நாளோ – தாயு:45 1192/2
மேல்


புல்லாயினும் (1)

புல்லாயினும் ஒரு பச்சிலையாயினும் போட்டு இறைஞ்சி – தாயு:27 431/2
மேல்


புல்லி (1)

புல்லாமல் புல்லி புணரும் நாள் எந்நாளோ – தாயு:45 1192/2
மேல்


புல்லும்படி (1)

புல்லும்படி எனக்கு ஓர் போதனை-தான் இல்லையோ – தாயு:48 1378/2
மேல்


புல (7)

ஐவர் என்ற புல வேடர் கொட்டம்-அது அடங்க மர்க்கடவன் முட்டியாய் அடவி நின்று மலை அருகில் நின்று சருகு ஆதி தின்று பனி வெயிலினால் – தாயு:13 125/1
பொறியில் செறி ஐம்_புல கனியை புந்தி கவரால் புகுந்து இழுத்து – தாயு:24 334/1
அவமே தரும் ஐம்_புல பொறிக்கே என் அறிவு பொல்லா – தாயு:27 410/3
நாற்றை பதித்தது என ஞானமாம் பயிர்-அதனை நாட்டி புல பட்டியும் நமனான தீப்பூடும் அணுகாமல் முன் நின்று நாடு சிவபோகமான – தாயு:39 587/3
விஞ்சு புல பாடு அனைத்தும் வீறு துன்பம்செய்ய வந்த – தாயு:43 900/1
அஞ்சு புல வேடருக்கும் ஆற்றேன் பராபரமே – தாயு:43 900/2
வேட்டை புல புலையர் மேவாத வண்ணம் மன – தாயு:45 1147/1
மேல்


புலத்தை (1)

உன் புலத்தை ஓரின் அருட்கு ஒப்பு ஆவாய் நெஞ்சே நீ – தாயு:29 550/3
மேல்


புலத்தோர் (1)

போத நிலை கண்ட புலத்தோர் பராபரமே – தாயு:43 829/2
மேல்


புலப்பட (1)

பொய்யினேன் புலையினேன் கொலையினேன் நின் அருள் புலப்பட அறிந்து நிலையா புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மை போல் பொருள் அலா பொருளை நாடும் – தாயு:8 74/1
மேல்


புலப்படவே (1)

எம்மை புலப்படவே யாம் அறிவது எந்நாளோ – தாயு:45 1170/2
மேல்


புலப்படுத்த (1)

போதனை தந்து ஐயா புலப்படுத்த வேண்டாவோ – தாயு:49 1380/2
மேல்


புலப்படுத்தவேண்டி (1)

பூராயம் நம்மை புலப்படுத்தவேண்டி அன்றோ – தாயு:29 547/2
மேல்


புலப்படுவது (1)

பொருள் எமக்கு வந்து புலப்படுவது எந்நாளோ – தாயு:45 1204/2
மேல்


புலம் (4)

போனாலும் கர்ப்பூர தீபம் போல போய் ஒளிப்பது அல்லாது புலம் வேறு இன்றாம் – தாயு:14 153/2
பூண்ட நான் என் புலம் அறியாததோ – தாயு:18 208/2
புலம்_இலான் தனக்கு என்ன ஓர் பற்று_இலான் பொருந்தும் – தாயு:24 351/2
புலம் காணார் நான் ஒருவன் ஞானம் பேசி பொய் கூடு காத்தது என்ன புதுமை கண்டாய் – தாயு:42 626/2
மேல்


புலம்_இலான் (1)

புலம்_இலான் தனக்கு என்ன ஓர் பற்று_இலான் பொருந்தும் – தாயு:24 351/2
மேல்


புலம்பாதே (1)

பூராயம் ஆகவும் நீ மற்று ஒன்றை விரித்து புலம்பாதே சஞ்சலமா புத்தியை நாட்டாதே – தாயு:17 189/3
மேல்


புலம்பி (2)

பூராயமா மேல் ஒன்று அறியா வண்ணம் புண்ணாளர் போல் நெஞ்சம் புலம்பி உள்ளே – தாயு:14 155/3
புண்_நீர்மையாளர் புலம்புமா போல் புலம்பி
கண்ணீரும்_கம்பலையும் காட்டும் நாள் எந்நாளோ – தாயு:45 1240/1,2
மேல்


புலம்பிய (1)

மூவர் சொலும் தமிழ் கேட்கும் திரு_செவிக்கே மூடனேன் புலம்பிய சொல் முற்றுமோ-தான் – தாயு:42 619/2
மேல்


புலம்புமா (1)

புண்_நீர்மையாளர் புலம்புமா போல் புலம்பி – தாயு:45 1240/1
மேல்


புலம்புவனோ (2)

பொய் கூடு கொண்டு புலம்புவனோ எம் இறைவர் – தாயு:44 1066/1
பொங்கு விடம் அனைய பொய் நூல் புலம்புவனோ – தாயு:51 1410/2
மேல்


புலம்புவார் (1)

பூராயமாய் ஒன்று பேசும் இடம் ஒன்றை புலம்புவார் சிவராத்திரி போது துயிலோம் என்ற விரதியரும் அறி துயில் போலே இருந்து துயில்வார் – தாயு:2 6/3
மேல்


புலமா (1)

புலமா என் அறிவில் சந்திப்பது எந்நாளோ – தாயு:45 1213/2
மேல்


புலர்ந்தேன் (1)

புலர்ந்தேன் முகம் சருகாய் போனேன் நின் காண – தாயு:45 1239/1
மேல்


புலன் (6)

பூதலயம் ஆகின்ற மாயை முதல் என்பர் சிலர் பொறி புலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர் கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம் என்பர் சிலபேர் – தாயு:2 9/1
என் புலன் மயங்கவே பித்தேற்றிவிட்டாய் இரங்கி ஒரு வழியாயினும் இன்ப_வெள்ளமாக வந்து உள்ளம் களிக்கவே எனை நீ கலந்தது உண்டோ – தாயு:9 78/2
ஐந்து புலன் ஐம்_பூதம் கரணம் ஆதி அடுத்த குணம் அத்தனையும் அல்லை அல்லை – தாயு:14 149/2
வாதியாநின்றது அன்றியும் புலன் சேர் வாயிலோ தீயினும் கொடிதே – தாயு:22 305/4
வாயில் ஓர் ஐந்தில் புலன் எனும் வேடர் வந்து எனை ஈர்த்து வெம் காம – தாயு:22 306/1
புலன் ஐந்தும் தானே பொர மயங்கி சிந்தை – தாயு:28 505/1
மேல்


புலன்கள் (1)

அறிவிப்பான் நீ என்றால் ஐம்_புலன்கள் தந்தம் – தாயு:43 885/1
மேல்


புலனாய் (1)

நேசமும் நல் வாசமும் போய் புலனாய் இல் கொடுமை பற்றி நிற்பர் அந்தோ – தாயு:24 322/3
மேல்


புலனால் (1)

துச்ச புலனால் சுழலாமல் தண் அருளால் – தாயு:45 1282/1
மேல்


புலனில் (1)

சத்தம் முதலாம் புலனில் சஞ்சரித்த கள்வர் எனும் – தாயு:45 1143/1
மேல்


புலனும் (1)

இரு_வினையும் முக்குணமும் கரணம் நான்கும் இடர்செயும் ஐம்_புலனும் காமாதி ஆறும் – தாயு:16 176/3
மேல்


புலனுமாய் (1)

பொருள் ஆகி அ பொருளை அறி பொறியும் ஆகி ஐம்_புலனுமாய் ஐம்_பூதமாய் புறமுமாய் அகமுமாய் தூரம் சமீபமாய் போக்கொடு வரத்தும் ஆகி – தாயு:8 68/2
மேல்


புலனை (1)

அடக்கி புலனை பிரித்தே அவன் ஆகிய மேனியில் அன்பை வளர்த்தேன் – தாயு:54 1425/1
மேல்


புலால் (3)

புன் புலால் மயிர் தோல் நரம்பு என்பு மொய்த்திடு புலை குடிலில் அருவருப்பு பொய் அல்லவே இதனை மெய் என்று நம்பி என் புந்தி செலுமோ பாழிலே – தாயு:9 80/3
புன் புலால் நரம்பு என்பு உடை பொய் உடல் – தாயு:18 206/1
இடத்தை காத்திட்ட சுவா என புன் புலால் இறைச்சி – தாயு:24 348/1
மேல்


புலி (6)

கானகம் இலங்கு புலி பசுவொடு குலாவும் நின் கண் காண மத யானை நீ கைகாட்டவும் கையால் நெகிடிக்கென பெரிய கட்டை மிக ஏந்தி வருமே – தாயு:5 43/1
பற்பல விதம் கொண்ட புலி கலையின் உரியது படைத்து ப்ரதாபம் உறலால் பனி வெயில்கள் புகுதாமல் நெடிய வான் தொடர் நெடிய பரு மர வனங்கள் ஆரும் – தாயு:7 65/3
சீறு புலி போல் சீறி மூச்சைப்பிடித்து விழி செக்க சிவக்க அறிவார் திரம் என்று தந்தம் மதத்தையே தாமத செய்கையொடும் உளற அறிவார் – தாயு:8 69/3
கைத்தலம் நக படை விரித்த புலி சிங்கமொடு கரடி நுழை நூழை கொண்ட கான மலை உச்சியில் குகையூடு இருந்தும் என் கரதலம் ஆமலகம் என்ன – தாயு:11 105/3
கந்துக மத கரியை வசமா நடத்தலாம் கரடி வெம் புலி வாயையும் கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம் கட்செவி எடுத்து ஆட்டலாம் – தாயு:12 118/1
பாய் அ புலி முனம் மான் கன்றை காட்டும்படி அகில – தாயு:27 401/1
மேல்


புலியின் (1)

புலியின் அதள்_உடையான் பூத படையான் – தாயு:28 483/1
மேல்


புலியூர் (1)

உய்யும்படிக்கு அருள்செய்வது என்றோ புலியூர் அத்தனே – தாயு:27 403/4
மேல்


புலை (6)

புன் புலால் மயிர் தோல் நரம்பு என்பு மொய்த்திடு புலை குடிலில் அருவருப்பு பொய் அல்லவே இதனை மெய் என்று நம்பி என் புந்தி செலுமோ பாழிலே – தாயு:9 80/3
துன்று மன கவலை கெட புலை நாயேனை தொழும்புகொள சீகாழி_துரையே தூது – தாயு:14 161/3
பொய்யில் ஆழும் புலை இனி பூரை காண் – தாயு:18 233/2
பொய் உலக வாழ்க்கை புலை சேரி வாதனை நின் – தாயு:43 820/1
பொய் வீசும் வாயார் புலை ஒழிவது எந்நாளோ – தாயு:45 1127/2
பொல்லாத காம புலை தொழிலில் என் அறிவு – தாயு:45 1154/1
மேல்


புலையர் (1)

வேட்டை புல புலையர் மேவாத வண்ணம் மன – தாயு:45 1147/1
மேல்


புலையினேன் (1)

பொய்யினேன் புலையினேன் கொலையினேன் நின் அருள் புலப்பட அறிந்து நிலையா புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மை போல் பொருள் அலா பொருளை நாடும் – தாயு:8 74/1
மேல்


புவன (1)

போத நித்திய புண்ணிய எண் அரும் புவன
நாத தற்பர நான் எவ்வாறு உய்குவேன் நவிலாய் – தாயு:25 365/3,4
மேல்


புவனத்தினிடை (1)

பேரிட்டு மெய் என்று பேசு பாழ்ம் பொய் உடல் பெலக்க விளை அமுதம் ஊட்டி பெரிய புவனத்தினிடை போக்கு_வரவு உறுகின்ற பெரிய விளையாட்டு அமைத்திட்டு – தாயு:4 31/2
மேல்


புவனத்தை (2)

ஓங்காரமாம் ஐந்து_எழுத்தால் புவனத்தை உண்டுபண்ணி – தாயு:27 409/3
பொய் காட்சியான புவனத்தை விட்டு அருளாம் – தாயு:45 1178/1
மேல்


புவனம் (3)

புவனம் படைப்பது என் கர்த்தவியம் எவ்விடம் பூத பேதங்கள் எவிடம் பொய் மெய் இதம் அகிதமே வரும் நன்மை தீமையொடு பொறை பொறாமையும் எவ்விடம் – தாயு:10 89/3
ஆகார புவனம் இன்பாகாரம் ஆக அங்ஙனே ஒரு மொழியால் அகண்டாகார – தாயு:14 132/1
மெய் காட்சியாம் புவனம் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1178/2
மேல்


புவி (1)

வெய்ய புவி பார்த்து விழித்திருந்த அல்லல் அற – தாயு:45 1188/1
மேல்


புவியை (2)

பொன்னை புவியை மட பூவையரை மெய் எனவே – தாயு:34 569/3
பொய் புவியை மெய் போல் புதுக்கிவைத்தது என்னேயோ – தாயு:51 1407/2
மேல்


புவிராஜர் (1)

போனகம் அமைந்தது என அ காமதேனு நின் பொன் அடியில் நின்று சொலுமே புவிராஜர் கவிராஜர் தவராஜன் என்று உனை போற்றி ஜய போற்றி என்பார் – தாயு:5 43/2
மேல்


புழு (2)

புன் மலத்து புழு அன்ன பாவியேன் – தாயு:18 231/3
பொய் உணர்வாய் இந்த புழு கூட்டை காத்திருந்தேன் – தாயு:43 1024/1
மேல்


புழுக்கம் (1)

பொங்கு ஏதமான புழுக்கம் எலாம் தீர இன்பம் – தாயு:45 1237/1
மேல்


புளகிதமாக (1)

உடலும் புளகிதமாக எனது உள்ளம் உருக உபாயம் செய்தாண்டி – தாயு:54 1427/2
மேல்


புளகிப்ப (2)

அங்கை கொடு மலர் தூவி அங்கம்-அது புளகிப்ப அன்பினால் உருகி விழி நீர் ஆறாக வாராத முத்தியினது ஆவேச ஆசை கடற்குள் மூழ்கி – தாயு:4 26/1
இடைந்திடைந்து ஏங்கி மெய் புளகிப்ப எழுந்தெழுந்து ஐய நின் சரணம் – தாயு:22 304/1
மேல்


புற்புதம் (1)

இ பிறவி என்னும் ஓர் இருள்_கடலில் மூழ்கி நான் என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு இரு_வினை எனும் திரையின் எற்றுண்டு புற்புதம் என கொங்கை வரிசை காட்டும் – தாயு:12 112/1
மேல்


புற்றகத்து (1)

குத்திர மெய் புற்றகத்து குண்டலி பாம்பு ஒன்று ஆட்டும் – தாயு:45 1231/1
மேல்


புற (1)

ஆன புற கருவி ஆறுபத்தும் மற்று உளவும் – தாயு:45 1156/1
மேல்


புறத்தவரை (1)

இல்_புறத்தவரை நாடார் யாங்களும் இன்ப வாழ்வும் – தாயு:36 571/2
மேல்


புறத்தில் (1)

மண் ஆதி ஐந்தொடு புறத்தில் உள கருவியும் வாக்கு ஆதி சுரோத்ராதியும் வளர்கின்ற சப்தாதி மனம் ஆதி கலை ஆதி மன்னு சுத்து ஆதியுடனே – தாயு:6 48/1
மேல்


புறத்தின் (1)

காண்டல்பெற புறத்தின் உள்ளபடியே உள்ளும் காட்சி மெய்ந்நூல் சொலும் பதியாம் கடவுளே நீ – தாயு:14 144/1
மேல்


புறப்பது (1)

என்னை புறப்பது அருளின் கடனாம் என் கடனாம் – தாயு:43 1004/1
மேல்


புறம் (7)

அருளானோர்க்கு அகம் புறம் என்று உன்னாத பூரண ஆனந்தம் ஆகி – தாயு:3 20/3
பொல்லாத வாதனை எனும் சப்த பூமியிடை போந்துதலை சுற்றி ஆடும் புருஷனில் அடங்காத பூவை போல் தானே புறம் போந்து சஞ்சரிக்கும் – தாயு:10 92/2
ஊன் என்றும் உடல் என்றும் கரணம் என்றும் உள் என்றும் புறம் என்றும் ஒழியா நின்ற – தாயு:14 146/3
தையல் ஓர் புறம் வாழ் சக_நாதனே – தாயு:18 252/4
ஆதியாய் நடுவாய் அந்தமாய் பந்தம் யாவும் அற்று அகம் புறம் நிறைந்த – தாயு:22 305/1
பொய்யன் என்று எனை புறம் விடின் என் செய்வேன் புகலாய் – தாயு:25 372/4
என்னை புறம் விடுதல் என்னே பராபரமே – தாயு:43 898/2
மேல்


புறம்பா (1)

விண்டேன் என்று எனை புறம்பா தள்ளவேண்டாம் விண்டது நின் அருள் களிப்பின் வியப்பால் அன்றோ – தாயு:40 591/2
மேல்


புறம்பும் (1)

உள்ளும் புறம்பும் ஒருபடித்தாய் நின்று சுகம் – தாயு:46 1322/1
மேல்


புறமும் (5)

பூண்ட அளவைகள் மன வாக்கு ஆதி எல்லாம் பொருந்தாமல் அகம் புறமும் புணர்க்கை ஆகி – தாயு:14 144/4
அந்தம் இல்லை ஆதி இல்லை நடுவும் இல்லை அகமும் இல்லை புறமும் இல்லை அனைத்தும் இல்லை – தாயு:14 151/4
அறியாத என்னை அறிவாயும் நீ என்று அகம் புறமும்
பிறியாது அறிவித்த பேர்_அறிவாம் சுத்த பேர்_ஒளியோ – தாயு:27 430/1,2
அண்ட பிண்டம் காணேன் அகமும் புறமும் ஒன்றா – தாயு:43 914/1
அகமும் புறமும் இன்றி முறை பிறழாது – தாயு:56 1452/2
மேல்


புறமுமாய் (1)

பொருள் ஆகி அ பொருளை அறி பொறியும் ஆகி ஐம்_புலனுமாய் ஐம்_பூதமாய் புறமுமாய் அகமுமாய் தூரம் சமீபமாய் போக்கொடு வரத்தும் ஆகி – தாயு:8 68/2
மேல்


புன் (8)

புன் புலால் மயிர் தோல் நரம்பு என்பு மொய்த்திடு புலை குடிலில் அருவருப்பு பொய் அல்லவே இதனை மெய் என்று நம்பி என் புந்தி செலுமோ பாழிலே – தாயு:9 80/3
காய் இலை புன் சருகு ஆதி அருந்த கானம் கடல் மலை எங்கே எனவும் கவலையாவேன் – தாயு:14 156/3
புன் புலால் நரம்பு என்பு உடை பொய் உடல் – தாயு:18 206/1
புன் மலத்து புழு அன்ன பாவியேன் – தாயு:18 231/3
புன் செயல் மாயை மயக்கின் என் செயலா பொருந்துவேன் அஃது ஒரு காலம் – தாயு:19 279/2
இடத்தை காத்திட்ட சுவா என புன் புலால் இறைச்சி – தாயு:24 348/1
அழுக்காற்றால் நெஞ்சம் அழுங்கிய புன் மாக்கள் – தாயு:43 932/1
புன் மலத்தை சேர்ந்து மலபோதம் பொருந்துதல் போய் – தாயு:45 1158/1
மேல்


புன்மை (3)

அளவு_இல் ஆனந்தம் அளித்தனை அறிவு_இலா புன்மை
களவு நாயினேற்கு இ வணம் அமைத்தனை கருத்து – தாயு:25 363/2,3
போதத்திலே சற்றும் வைத்திலையே வெறும் புன்மை நெஞ்சே – தாயு:27 451/2
புகல் அரிய நின் விளையாட்டு என்னே எந்தாய் புன்மை அறிவு உடைய என்னை பொருளா பண்ணி – தாயு:42 634/1
மேல்


புன்மையே (1)

பொய்யிலே சுழன்றேன் என்ன புன்மையே – தாயு:18 205/4
மேல்


புன்மையேன் (5)

பொய் விடா பொய்யினேன் உள்ளத்து இருந்து தான் பொய்யான பொய்யை எல்லாம் பொய் எனா வண்ணமே புகலவைத்தாய் எனில் புன்மையேன் என் செய்குவேன் – தாயு:6 51/2
பூணிலேன் இற்றை நாள் கற்றதும் கேட்டதும் போக்கிலே போகவிட்டு பொய் உலகன் ஆயினேன் நாயினும் கடையான புன்மையேன் இன்னம் இன்னம் – தாயு:7 63/3
பொய்யினேன் புலையினேன் கொலையினேன் நின் அருள் புலப்பட அறிந்து நிலையா புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மை போல் பொருள் அலா பொருளை நாடும் – தாயு:8 74/1
பொல்லாத சேய் எனில் தாய் தள்ளல் நீதமோ புகலிடம் பிறிதும் உண்டோ பொய் வார்த்தை சொல்லிலோ திரு_அருட்கு அயலுமாய் புன்மையேன் ஆவன் அந்தோ – தாயு:9 79/3
போதியா வண்ணம் கைவிடல் முறையோ புன்மையேன் என் செய்கேன் மனமோ – தாயு:22 305/3
மேல்


புன்னகை (2)

படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குற பாடி ஆடி குதித்து பனி மதி முகத்திலே நிலவு அனைய புன்னகை பரப்பி ஆர்த்தார்த்து எழுந்து – தாயு:6 55/2
குடிகெட வேண்டில் பணி அற நிற்றல் குணம் என புன்னகை காட்டி – தாயு:19 278/3
மேல்


புனல் (9)

கண் நிறைந்த புனல் உகுப்ப கரம் முகிழ்ப்ப நின் அருளை கருத்தில்வைப்பாம் – தாயு:3 23/4
மத்தியிடை நின்றும் உதிர் சருகு புனல் வாயு வினை வன் பசி-தனக்கு அடைத்தும் மவுனத்து இருந்தும் உயர் மலை முழை-தனில் புக்கும் மன்னு தசநாடி முற்றும் – தாயு:4 36/2
காய் இலை உதிர்ந்த கனி சருகு புனல் மண்டிய கடும் பசி தனக்கு அடைத்தும் கார் வரையின் முழையில் கருங்கல் போல் அசையாது கண் மூடி நெடிது இருந்தும் – தாயு:8 70/1
கொந்து அவிழ் மலர் சோலை நல் நீழல் வைகினும் குளிர் தீம் புனல் கை அள்ளி கொள்ளுகினும் அ நீரிடை திளைத்து ஆடினும் குளிர் சந்த வாடை மடவார் – தாயு:11 110/1
பொய் ஆர் உலக நிலை அல்ல கானல் புனல் எனவே – தாயு:27 419/1
பள்ளத்தின் வீழும் புனல் போல் படிந்து உன் பரம இன்ப – தாயு:27 440/3
பலி இரந்தும் எல்லாம் பரிப்பான் மலி புனல் சேர் – தாயு:28 483/2
பள்ளங்கள்-தோறும் பரந்த புனல் போல் உலகில் – தாயு:51 1398/1
புனல் ஒன்றிட அமிழ்ந்து மடிவு இலது ஊதை – தாயு:56 1452/9
மேல்


புனலே (1)

கான் முயல்_கொம்பே என்கோ கானல் அம் புனலே என்கோ – தாயு:15 165/3
மேல்


புனற்குள் (1)

காற்றை பிடித்து மண் கரகத்து அடைத்தபடி கன்ம புனற்குள் ஊறும் கடைகெட்ட நவ வாயில் பெற்ற பசு மண்கல காயத்துள் எனை இருத்தி – தாயு:39 587/1
மேல்


புனித (5)

பொருள் அனைத்தும் தரும் பொருளே கருணை நீங்கா பூரணமாய் நின்ற ஒன்றே புனித வாழ்வே – தாயு:14 138/2
புண்டரிகபுரத்தினில் நாதாந்த மெளன போதாந்த நடம் புரியும் புனித வாழ்வே – தாயு:24 333/4
புனித நீ அறியாதது ஒன்று உள்ளதோ புகலாய் – தாயு:25 374/4
பொன்னை விரித்திடும் உலகத்து உம்பரும் இம்பரும் பரவும் புனித மெய்யை – தாயு:26 394/4
போக்கொடு வரவும் இன்றி புனித நல் அருள் ஆனந்தம் – தாயு:35 570/3
மேல்


புனிதம் (1)

பொய் கண்டார் காணா புனிதம் எனும் அத்துவித – தாயு:45 1097/1
மேல்


புனிதமாய் (1)

போதமாய் ஆதி நடு அந்தமும் இலாததாய் புனிதமாய் அவிகாரமாய் போக்கு_வரவு இல்லாத இன்பமாய் நின்ற நின் பூரணம் புகலிடம்-அதா – தாயு:4 35/1
மேல்


புனிதர்-பால் (1)

பொருந்தும் புனிதர்-பால் தீது நெறி – தாயு:28 473/2
மேல்


புனிதரின் (1)

பொதியும் சென்னி புனிதரின் பொன் அடி – தாயு:18 264/2
மேல்


புனிதன் (1)

பொன்_முடியான் முக்கண் புனிதன் சரண்புகுந்தோர்க்கு – தாயு:28 483/3
மேல்


புனை (3)

பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனை கந்த பொடியிலே அடியிலே மேல் பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே புந்தி-தனை நுழைய விட்டு – தாயு:37 579/2
மெய்த்த குலம் கல்வி புனை வேடம் எலாம் ஓடவிட்ட – தாயு:45 1250/1
சிறு கிண்கிணி சிலம்பு புனை தண்டைகள் முழங்கும் – தாயு:56 1452/38

மேல்