பூ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பூ 2
பூ_உலகில் 1
பூங்காவன 1
பூங்காவேனும் 1
பூசல் 1
பூசி 1
பூசிக்கும் 1
பூசியே 1
பூசை 7
பூசைசெய்தால் 1
பூசைசெய்வார் 1
பூசைபண்ணி 1
பூசையா 1
பூட்டிவைத்து 1
பூட்டு 1
பூட்டும் 1
பூண் 1
பூண்ட 3
பூண்டது 1
பூண்டு 1
பூண 1
பூணிலேன் 1
பூணும் 1
பூத்த 6
பூத்து 2
பூத 6
பூதங்கள் 2
பூதத்தாலே 1
பூதநாதன் 1
பூதம் 12
பூதமாய் 2
பூதமும் 1
பூதமே 1
பூதமொடு 1
பூதலயம் 1
பூம் 3
பூமண்டலாதிக்கமும் 1
பூமி 13
பூமிக்குள் 2
பூமியிடை 1
பூமியில் 1
பூமியிலிருந்து 1
பூமியின் 1
பூமியினை 1
பூமியே 1
பூமியை 2
பூர்த்தி 2
பூர்த்தியான 2
பூரண 13
பூரணத்தில் 2
பூரணத்துக்கு 1
பூரணம் 6
பூரணமாக 2
பூரணமாம் 3
பூரணமாய் 6
பூரணமே 2
பூரணன் 1
பூரணன்-பால் 1
பூரணானந்த 7
பூரணி 1
பூராயம் 3
பூராயமா 1
பூராயமாக 2
பூராயமாய் 3
பூரிக்க 1
பூரித்த 2
பூரை 1
பூவில் 1
பூவை 4
பூவையரை 2

பூ (2)

பூ_உலகில் வளர் அருணகிரியே மற்றை புண்ணியர்காள் ஓ என்பேன் புரை ஒன்று இல்லா – தாயு:14 162/3
பூ விற்கும் வான் கடையில் புல் விற்போர் போல ஒன்றை – தாயு:33 563/3
மேல்


பூ_உலகில் (1)

பூ_உலகில் வளர் அருணகிரியே மற்றை புண்ணியர்காள் ஓ என்பேன் புரை ஒன்று இல்லா – தாயு:14 162/3
மேல்


பூங்காவன (1)

பூங்காவன நிழலும் புத்தமுதும் சாந்தபதம் – தாயு:28 527/1
மேல்


பூங்காவேனும் (1)

காரேனும் கற்பக பூங்காவேனும் உனக்கு உவமை காட்டப்போமோ – தாயு:26 400/3
மேல்


பூசல் (1)

பூசல் என்று போமோ புகலாய் பராபரமே – தாயு:43 823/2
மேல்


பூசி (1)

விளங்க வெண்_நீறு பூசி விரி சடை கங்கை தாங்கி – தாயு:15 168/1
மேல்


பூசிக்கும் (1)

பூசிக்கும் தான் நிறைந்து பூரணமாய் யோசித்து – தாயு:28 491/2
மேல்


பூசியே (1)

பொற்பினொடு கை காலில் வள் உகிர் படைத்தலால் போந்து இடை ஒடுக்கமுறலால் பொலிவான வெண்_நீறு பூசியே அருள்கொண்டு பூரித்த எண் நீர்மையால் – தாயு:7 65/1
மேல்


பூசை (7)

பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே பாவித்து இறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அ பனி மலர் எடுக்க மனமும் – தாயு:6 52/1
நண்ணேன் அலாமல் இரு கை-தான் குவிக்க எனில் நாணும் என் உளம் நிற்றி நீ நான் கும்பிடும் போது அரை கும்பிடு ஆதலால் நான் பூசை செய்யல் முறையோ – தாயு:6 52/2
பண்ணல் பூசை பகர்வது மந்திரம் – தாயு:18 226/2
தென்புலத்தாரோடு இருந்து செய் பூசை கொண்டருளே – தாயு:29 550/4
மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே – தாயு:43 786/2
கல் ஏன் மலர் ஏன் கனிந்த அன்பே பூசை என்ற – தாயு:44 1038/1
பூசை செய ஆசை பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1310/2
மேல்


பூசைசெய்தால் (1)

பஞ்ச_சுத்தி செய்து நின்னை பாவித்து பூசைசெய்தால்
விஞ்சிய ஞானம் விளங்கும் பராபரமே – தாயு:43 789/1,2
மேல்


பூசைசெய்வார் (1)

சிட்டர் உனை பூசைசெய்வார் பராபரமே – தாயு:43 787/2
மேல்


பூசைபண்ணி (1)

விண்ணுக்கும் விண் ஆகி மேவும் உனக்கு யான் பூசைபண்ணி
நிற்குமாறு பகராய் பராபரமே – தாயு:43 785/1,2
மேல்


பூசையா (1)

உள் உறையில் என் ஆவி நைவேத்தியம் ப்ராணன் ஓங்கும் மதி தூப தீபம் ஒருக்காலம் அன்று இது சதா_கால பூசையா ஒப்புவித்தேன் கருணைகூர் – தாயு:6 54/2
மேல்


பூட்டிவைத்து (1)

பூட்டிவைத்து வஞ்ச பொறி வழியே என்றனை நீ – தாயு:43 1023/1
மேல்


பூட்டு (1)

பூட்டு அற்று தேகம் அற்று போகும் முன்னே நின் அருளை – தாயு:43 930/1
மேல்


பூட்டும் (1)

மின் அனைய பொய் உடலை நிலை என்றும் மை இலகு விழி கொண்டு மையல் பூட்டும் மின்னார்கள் இன்பமே மெய் என்றும் வளர் மாடம் மேல்வீடு சொர்க்கம் என்றும் – தாயு:5 40/1
மேல்


பூண் (1)

நீர்க்குமிழி பூண் அமைத்து நின்றாலும் நில்லா மெய் – தாயு:45 1117/1
மேல்


பூண்ட (3)

பூண்ட அளவைகள் மன வாக்கு ஆதி எல்லாம் பொருந்தாமல் அகம் புறமும் புணர்க்கை ஆகி – தாயு:14 144/4
பூண்ட நான் என் புலம் அறியாததோ – தாயு:18 208/2
பூண்ட அன்பர்-தம் பொன் பணி வாய்க்குமேல் – தாயு:18 258/3
மேல்


பூண்டது (1)

பூண்டது என்ன கன்மம் புகலாய் பராபரமே – தாயு:43 955/2
மேல்


பூண்டு (1)

உண்டு உடுத்து பூண்டு இங்கு உலகத்தார் போல் திரியும் – தாயு:43 779/1
மேல்


பூண (1)

பூண கருதும் நெஞ்சு போற்ற கரம் எழும்பும் – தாயு:28 488/3
மேல்


பூணிலேன் (1)

பூணிலேன் இற்றை நாள் கற்றதும் கேட்டதும் போக்கிலே போகவிட்டு பொய் உலகன் ஆயினேன் நாயினும் கடையான புன்மையேன் இன்னம் இன்னம் – தாயு:7 63/3
மேல்


பூணும் (1)

பூணும் கோலம் பொருந்தி உள் நிற்கவே – தாயு:18 198/4
மேல்


பூத்த (6)

படி இருள் அகல சின்மயம் பூத்த பசும் கொம்பை அடக்கி ஓர் கல்_ஆல் – தாயு:19 281/3
தனி வளர் பொருளே மாறா தண் அரும் கருணை பூத்த
இனிய கற்பகமே முக்கண் எந்தையே நினக்கு அன்பு இன்றி – தாயு:21 301/1,2
தொழும் தாதையே வெண்_பொடி பூத்த மேனி சுக பொருளே – தாயு:27 407/4
பைம் பயிரை நாடும் உன் போல் பார் பூத்த பைங்கொடி சேர் – தாயு:44 1065/1
நீர் பூத்த வேணி நிலவு எறிப்ப மன்று ஆடும் – தாயு:45 1083/1
கார் பூத்த கண்டனை யான் காணும் நாள் எந்நாளோ – தாயு:45 1083/2
மேல்


பூத்து (2)

எக்கணும் தொழ யாவையும் பூத்து காய்த்து – தாயு:18 219/3
விண் கருணை பூத்து என்ன மேவி உயிர்க்கு உயிராய் – தாயு:43 952/1
மேல்


பூத (6)

ஐந்து வகை ஆகின்ற பூத பேதத்தினால் ஆகின்ற ஆக்கை நீர் மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான் அறியாத காலம் எல்லாம் – தாயு:4 30/1
நாடுதலும் அற்று மேல் கீழ் நடு பக்கம் என நண்ணுதலும் அற்று விந்து நாதம் மற்று ஐ வகை பூத பேதமும் அற்று ஞாதுருவின் ஞானம் அற்று – தாயு:4 33/2
புவனம் படைப்பது என் கர்த்தவியம் எவ்விடம் பூத பேதங்கள் எவிடம் பொய் மெய் இதம் அகிதமே வரும் நன்மை தீமையொடு பொறை பொறாமையும் எவ்விடம் – தாயு:10 89/3
புலியின் அதள்_உடையான் பூத படையான் – தாயு:28 483/1
கூறு ஆய ஐம்_பூத சுமையை தாங்கி குணம்_இலா மனம் எனும் பேய் குரங்கின் பின்னே – தாயு:42 609/1
பூத முதல் நாதம் வரை பொய் என்ற மெய்யர் எல்லாம் – தாயு:43 1014/1
மேல்


பூதங்கள் (2)

விரிவாய பூதங்கள் ஒன்றோடொன்றாய் அழியும் மேற்கொண்ட சேடம் அதுவே வெறு வெளி நிராலம்பம் நிறை சூன்யம் உபசாந்த வேத வேதாந்த ஞானம் – தாயு:2 5/2
பெருமை பெறு பூரணம் குறையுமோ பூதங்கள் பேய் கோலமாய் விதண்டை பேசுமோ அலது தான் பரிபாக காலம் பிறக்கவிலையோ தொல்லையாம் – தாயு:10 95/3
மேல்


பூதத்தாலே (1)

ஐம்_பூதத்தாலே அலக்கழிந்த தோஷம் அற – தாயு:45 1142/1
மேல்


பூதநாதன் (1)

எம் பூதநாதன் அருள் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1142/2
மேல்


பூதம் (12)

பெருவெளியாய் ஐம்_பூதம் பிறப்பிடமாய் பேசாத பெரிய மோனம் – தாயு:3 16/1
விண் ஆதி பூதம் எல்லாம் தன் அகத்தில் அடக்கி வெறு வெளியாய் ஞான – தாயு:3 22/1
ஐ வகை எனும் பூதம் ஆதியை வகுத்து அதனுள் அசர சர பேதமான யாவையும் வகுத்து நல் அறிவையும் வகுத்து மறை ஆதி_நூலையும் வகுத்து – தாயு:4 29/1
ஐந்து வகை ஆகின்ற பூதம் முதல் நாதமும் அடங்க வெளி ஆக வெளி செய்து அறியாமை அறிவு ஆதி பிரிவாக அறிவார்கள் அறிவாக நின்ற நிலையில் – தாயு:5 38/1
குடக்கொடு குணக்கு ஆதி திக்கினை உழக்கூடு கொள்ளல் போல் ஐந்து பூதம் கூடும் சுருங்கு இலை சாலேகம் ஒன்பது குலாவு நடை_மனையை நாறும் – தாயு:11 101/1
ஐந்து பூதம் ஒரு கானல்_நீர் என அடங்க வந்த பெரு வானமே ஆதி அந்தம் நடு ஏதும் இன்றி அருளாய் நிறைந்து இலகு சோதியே – தாயு:13 124/1
ஐந்து புலன் ஐம்_பூதம் கரணம் ஆதி அடுத்த குணம் அத்தனையும் அல்லை அல்லை – தாயு:14 149/2
வானே முதல் ஆம் பெரும் பூதம் வகுத்து புரந்து மாற்ற வல்ல – தாயு:20 289/1
பார் ஆதி பூதம் எல்லாம் பார்க்குங்கால் அ பரத்தின் – தாயு:28 461/1
பூதம் முதலாகவே நாத பரியந்தமும் பொய் என்று எனை காட்டி என் போதத்தின் நடு ஆகி அடி ஈறும் இல்லாத போக பூரண வெளிக்குள் – தாயு:37 580/1
மண் ஆதி பூதம் எல்லாம் வைத்திருந்த நின் நிறைவை – தாயு:43 1006/1
பார் ஆதி பூதம் நீ அல்லை உன்னி பார் இந்திரியம் கரணம் நீ அல்லை – தாயு:54 1429/1
மேல்


பூதமாய் (2)

பொருள் ஆகி அ பொருளை அறி பொறியும் ஆகி ஐம்_புலனுமாய் ஐம்_பூதமாய் புறமுமாய் அகமுமாய் தூரம் சமீபமாய் போக்கொடு வரத்தும் ஆகி – தாயு:8 68/2
வான் ஆதி பூதமாய் அகிலாண்ட கோடியாய் மலை ஆகி வளை கடலுமாய் மதி ஆகி இரவியாய் மற்று உள எலாம் ஆகி வான் கருணை வெள்ளம் ஆகி – தாயு:8 73/1
மேல்


பூதமும் (1)

மண்ணும் விண்ணும் மற்று உள்ளன பூதமும் மாறா – தாயு:25 384/3
மேல்


பூதமே (1)

விண்ணே விண் ஆதி ஆம் பூதமே நாதமே வேதமே வேதாந்தமே மே தக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள் வித்தே அ வித்தின் முளையே – தாயு:6 52/3
மேல்


பூதமொடு (1)

பூதமொடு பழகி வளர் இந்திரியமாம் பேய்கள் புந்தி முதலான பேய்கள் போராடு கோபாதி ராக்ஷச பேய்கள் என் போதத்தை ஊடு அழித்து – தாயு:37 585/1
மேல்


பூதலயம் (1)

பூதலயம் ஆகின்ற மாயை முதல் என்பர் சிலர் பொறி புலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர் கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம் என்பர் சிலபேர் – தாயு:2 9/1
மேல்


பூம் (3)

போதமாய் நின்ற புண்ணியன் பூம் திரு – தாயு:18 243/3
கள் அவிழும் பூம் கொன்றை கண்ணியான் உள்ளபடி – தாயு:28 504/2
பொய் முடங்கும் பூமி சில பொட்டலுற பூம் கமலன் – தாயு:45 1242/1
மேல்


பூமண்டலாதிக்கமும் (1)

புத்தமிர்த போகமும் கற்பக நல் நீழலில் பொலிவுற இருக்கும் இயல்பும் பொன்_உலகில் அயிராவதத்து ஏறு வரிசையும் பூமண்டலாதிக்கமும்
மத்த வெறியினர் வேண்டும் மால் என்று தள்ளவும் எம்மாலும் ஒரு சுட்டும் அறவே வைக்கின்ற வைப்பாளன் மெளன தேசிகன் என்ன வந்த நின் அருள் வழி காண் – தாயு:12 121/1,2
மேல்


பூமி (13)

கவ்வு மலம் ஆகின்ற நாகபாசத்தினால் கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை கடிது அகல வலிய வரும் ஞான சஞ்சீவியே கதியான பூமி நடுவுள் – தாயு:4 28/3
பத்தி நெறி நிலைநின்றும் நவ கண்ட பூமி பரப்பை வலமாக வந்தும் பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும் பசி_தாகம் இன்றி எழுநா – தாயு:4 36/1
கார் ஆரும் ஆணவ காட்டை களைந்து அறக்கண்டு அகங்காரம் என்னும் கல்லை பிளந்து நெஞ்சகமான பூமி வெளி காண திருத்தி மேன்மேல் – தாயு:8 72/1
பற்றுவன அற்றிடு நிராசை என்று ஒரு பூமி பற்றி பிடிக்கும் யோக பாங்கில் பிராணலயம் என்னும் ஒரு பூமி இவை பற்றின் மனம் அறும் என்னவே – தாயு:9 82/1
பற்றுவன அற்றிடு நிராசை என்று ஒரு பூமி பற்றி பிடிக்கும் யோக பாங்கில் பிராணலயம் என்னும் ஒரு பூமி இவை பற்றின் மனம் அறும் என்னவே – தாயு:9 82/1
களங்கம்_இல் உருவம்-தானே ககனமாய் பொலிய பூமி
வளர்ந்த தாள் என்ன உள்ளம் மன்று என மறை ஒன்று இன்றி – தாயு:15 168/3,4
இல்லை என்றிடின் இ பூமி இருந்தவாறு இருப்போம் என்னில் – தாயு:15 173/1
ஒன்று இரண்டாய் விவகரிக்கும் விவகாரம் கடந்து ஏழாம் யோக பூமி
நின்று தெளிந்தவர் பேசா மெளன நியாயத்தை நிறை நிறைவை தன்னை – தாயு:26 391/1,2
சீர் ஆரும் தெய்வ திரு_அருளாம் பூமி முதல் – தாயு:43 636/1
பொய் முடங்கும் பூமி சில பொட்டலுற பூம் கமலன் – தாயு:45 1242/1
தன் அரசு நாடாம் சடசால பூமி மிசை – தாயு:51 1409/1
விளையும் சிவானந்த பூமி அந்த வெட்டவெளி நண்ணி துட்ட இருளாம் – தாயு:54 1435/1
வந்த வரவை மறந்து மிக்க மாதர் பொன் பூமி மயக்கத்தில் ஆழும் – தாயு:54 1446/1
மேல்


பூமிக்குள் (2)

விண்ணே விண் ஆதி ஆம் பூதமே நாதமே வேதமே வேதாந்தமே மே தக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள் வித்தே அ வித்தின் முளையே – தாயு:6 52/3
மெய் திகழும் அஷ்டாங்க யோக பூமிக்குள் வளர் வேந்தரே குண_சாந்தரே வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 61/4
மேல்


பூமியிடை (1)

பொல்லாத வாதனை எனும் சப்த பூமியிடை போந்துதலை சுற்றி ஆடும் புருஷனில் அடங்காத பூவை போல் தானே புறம் போந்து சஞ்சரிக்கும் – தாயு:10 92/2
மேல்


பூமியில் (1)

சொல் இறந்து மாண்டவர் போல் தூ மௌன பூமியில் நான் – தாயு:28 527/3
மேல்


பூமியிலிருந்து (1)

புத்தமிர்த போகம் புசித்து விழி இமையாத பொன்_நாட்டும் வந்தது என்றால் போராட்டம் அல்லவோ பேர்_இன்ப முத்தி இ பூமியிலிருந்து காண – தாயு:10 98/3
மேல்


பூமியின் (1)

தக்க கேள்வியில் சார்ந்த நல் பூமியின்
மிக்கதாக விளங்கும் முதல் ஒன்றே – தாயு:18 219/1,2
மேல்


பூமியினை (1)

செம் கிருமி ஆதி செனித்த சென்ம பூமியினை
இங்கு என் உடல் என்னும் இழுக்கு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1119/1,2
மேல்


பூமியே (1)

சித்தி நிலை முத்தி நிலை விளைகின்ற பூமியே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 121/4
மேல்


பூமியை (2)

பொன்னை மாதரை பூமியை நாடிடேன் – தாயு:18 194/1
புரந்தோர் தம் தேசம் என்பார் பூமியை போராடி – தாயு:43 863/1
மேல்


பூர்த்தி (2)

அங்கு இங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தி ஆகி அருளொடு நிறைந்தது எது தன் அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம் – தாயு:1 1/1
மின் மயமான அண்ட வெளி உருவான பூர்த்தி
என் மயம் எனக்கு காட்டாது எனை அபகரிக்க வந்த – தாயு:24 354/2,3
மேல்


பூர்த்தியான (2)

தேசுபெற நீ வைத்த சின்முத்திராங்குச செம் கைக்கு உளே அடக்கி சின்மயானந்த சுக_வெள்ளம் படிந்து நின் திரு_அருள் பூர்த்தியான
வாசம் உறு சற்சாரம் மீது என்னை ஒரு ஞான மத்தகஜம் என வளர்த்தாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 37/3,4
அற்புத அகோசர நிவிர்த்தி பெறும் அன்பருக்கு ஆனந்த பூர்த்தியான அத்துவித நிச்சய சொரூப சாக்ஷாத்கார அநுபூதி அநுசூதமும் – தாயு:6 47/3
மேல்


பூரண (13)

அருளானோர்க்கு அகம் புறம் என்று உன்னாத பூரண ஆனந்தம் ஆகி – தாயு:3 20/3
வாக்கு மனம் அணுகாத பூரண பொருள் வந்து வாய்க்கும்படிக்கு உபாயம் வருவித்து உவட்டாத பேர்_இன்பமான சுக_வாரியினை வாய்மடுத்து – தாயு:4 27/3
தெச விதம்-அதாய் நின்ற நாதங்கள் ஓலிட சிங்காசனாதிபர்களாய் திக்கு திக்_அந்தமும் பூரண மதி குடை திகழ்ந்திட வசந்த காலம் – தாயு:7 62/2
பொய்யனேன் சிந்தை பொய் கெட பூரண
மெய்-அதாம் இன்பம் என்று விளைவதே – தாயு:18 201/3,4
என்னை பூரண இன்ப வெளிக்குளே – தாயு:18 218/3
ஞான பூரண நாதனை நாடியே – தாயு:18 220/3
பூரண அறிவில் கண்டிலம் அதனால் போற்றி இ புந்தியோடு இருந்து – தாயு:19 272/3
யான் எனல் காணேன் பூரண நிறைவில் யாதினும் இருந்த பேர்_ஒளி நீ – தாயு:22 311/1
தொடக்கும் என் நெஞ்சம் மனம் அற்ற பூரண தொட்டிக்குளே – தாயு:27 412/3
நினக்கே பரம் நின்னை நீங்காத பூரண நீள் கருணை-தனக்கே – தாயு:27 416/3
அல்லால் மனம் அற பூரண நிட்டையில் ஆழ்ந்தது உண்டோ – தாயு:27 424/2
பூதம் முதலாகவே நாத பரியந்தமும் பொய் என்று எனை காட்டி என் போதத்தின் நடு ஆகி அடி ஈறும் இல்லாத போக பூரண வெளிக்குள் – தாயு:37 580/1
பூரண தேயத்தில் பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1183/2
மேல்


பூரணத்தில் (2)

பூராயமாக அருள் பூரணத்தில் அண்டம் முதல் – தாயு:33 560/3
செப்பு அரிய தண் கருணை சிற்சுகனார் பூரணத்தில்
அப்பினிடை உப்பாய் அணையும் நாள் எந்நாளோ – தாயு:45 1276/1,2
மேல்


பூரணத்துக்கு (1)

ஆனது என்-கொல் ஐயா ஏகதேசம் பூரணத்துக்கு உண்டோ-தான் புகலல்வேண்டும் – தாயு:42 633/2
மேல்


பூரணம் (6)

போதமாய் ஆதி நடு அந்தமும் இலாததாய் புனிதமாய் அவிகாரமாய் போக்கு_வரவு இல்லாத இன்பமாய் நின்ற நின் பூரணம் புகலிடம்-அதா – தாயு:4 35/1
பெருமை பெறு பூரணம் குறையுமோ பூதங்கள் பேய் கோலமாய் விதண்டை பேசுமோ அலது தான் பரிபாக காலம் பிறக்கவிலையோ தொல்லையாம் – தாயு:10 95/3
போக்கினோடு வரவு அற்ற பூரணம்
தாக்கி நின்றவா தன்மயம் ஆம் அதே – தாயு:18 221/3,4
பொருளே நின் பூரணம் மேலிட்ட காலம் போக்கு_வரவு உண்டோ தற்போதம் உண்டோ – தாயு:42 617/1
சும்மா இருப்பதுவே சுட்டு அற்ற பூரணம் என்று – தாயு:43 705/1
போக்கு_வரவு அற்று இருக்கும் சுத்த பூரணம் ஆக்கினான் புதுமை காண் மின்னே – தாயு:54 1438/2
மேல்


பூரணமாக (2)

தான் என்று ஒரு முதல் பூரணமாக தலைப்பட்டு ஒப்பு_இல் – தாயு:27 414/2
சிந்தித்தது எல்லாம் சிவ பூரணமாக
வந்தித்து வாழ்த்தி வணங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1308/1,2
மேல்


பூரணமாம் (3)

எவ்விடத்தும் பூரணமாம் எந்தை பிரான் தண் அருளே – தாயு:29 552/1
கெட்டி என்று உன் அன்பர் மலம் கெட்டு அயர்ந்தோர் பூரணமாம்
தொட்டிலுக்குள் சேய் போல் துயின்றார் பராபரமே – தாயு:43 713/1,2
எவ்வடிவும் பூரணமாம் எந்தை உரு என்று இசைந்த – தாயு:45 1307/1
மேல்


பூரணமாய் (6)

தெரிவு அரிய பூரணமாய் காரணம் கற்பனை கடந்த செல்வம் ஆகி – தாயு:3 21/2
பொருள் அனைத்தும் தரும் பொருளே கருணை நீங்கா பூரணமாய் நின்ற ஒன்றே புனித வாழ்வே – தாயு:14 138/2
அறிவுக்கு அறிவாய் பூரணமாய் அகண்டானந்த மயம் ஆகி – தாயு:24 334/3
மாண்டு கிடக்கினும் அந்த எல்லையையும் பூரணமாய் வணக்கம்செய்வேன் – தாயு:26 399/2
பூசிக்கும் தான் நிறைந்து பூரணமாய் யோசித்து – தாயு:28 491/2
போகம் எனும் பேர்_இன்ப_வெள்ளம் பொங்கி ததும்பி பூரணமாய்
ஏக உருவாய் கிடக்குது ஐயோ இன்புற்றிட நாம் இனி எடுத்த – தாயு:30 555/2,3
மேல்


பூரணமே (2)

பூரணமே உண்மை பொருள் என்னும் காரணத்தை – தாயு:28 470/2
தான் ஆதல் பூரணமே சாரும் இடம் உண்டு உயிரும் – தாயு:43 893/1
மேல்


பூரணன் (1)

வெவ்விய குணம் பல இருக்க என் அறிவூடு மெய்யன் நீ வீற்றிருக்க விதி இல்லை என்னிலோ பூரணன் எனும் பெயர் விரிக்கில் உரை வேறும் உளதோ – தாயு:4 28/2
மேல்


பூரணன்-பால் (1)

ஊன் பற்றும் என்னோடு உறவு பற்றும் பூரணன்-பால்
வான் பற்றும் கண் போல் மருவும் நாள் எந்நாளோ – தாயு:45 1296/1,2
மேல்


பூரணானந்த (7)

பொற்புற கருதோம் கண்டாய் பூரணானந்த வாழ்வே – தாயு:36 571/4
பொருந்தவும் கதி மேல் உண்டோ பூரணானந்த வாழ்வே – தாயு:36 572/4
போதனைசெய்ய வல்லார் பூரணானந்த வாழ்வே – தாயு:36 573/4
போதனைசெய்தல் நன்றோ பூரணானந்த வாழ்வே – தாயு:36 574/4
புண்ணியம் நினக்கே அன்றோ பூரணானந்த வாழ்வே – தாயு:36 575/4
புத்தி நீ எனக்கு ஒன்று உண்டோ பூரணானந்த வாழ்வே – தாயு:36 576/4
போயினது ஆற்றகில்லேன பூரணானந்த வாழ்வே – தாயு:36 577/4
மேல்


பூரணி (1)

பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி புராந்தகி த்ரியம்பகி எழில் புங்கவி விளங்கு சிவசங்கரி சகஸ்ரதள புஷ்பம் மிசை வீற்றிருக்கும் – தாயு:37 582/1
மேல்


பூராயம் (3)

பூராயம் ஆகவும் நீ மற்று ஒன்றை விரித்து புலம்பாதே சஞ்சலமா புத்தியை நாட்டாதே – தாயு:17 189/3
பூராயம் நம்மை புலப்படுத்தவேண்டி அன்றோ – தாயு:29 547/2
பூராயம் எல்லாம் புகன்று வா பைங்கிளியே – தாயு:44 1063/2
மேல்


பூராயமா (1)

பூராயமா மேல் ஒன்று அறியா வண்ணம் புண்ணாளர் போல் நெஞ்சம் புலம்பி உள்ளே – தாயு:14 155/3
மேல்


பூராயமாக (2)

புந்தி மகிழ் உற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன் பூராயமாக நினது அருள் வந்து உணர்த்த இவை போன வழி தெரியவில்லை – தாயு:4 30/2
பூராயமாக அருள் பூரணத்தில் அண்டம் முதல் – தாயு:33 560/3
மேல்


பூராயமாய் (3)

பூராயமாய் ஒன்று பேசும் இடம் ஒன்றை புலம்புவார் சிவராத்திரி போது துயிலோம் என்ற விரதியரும் அறி துயில் போலே இருந்து துயில்வார் – தாயு:2 6/3
பூராயமாய் உணர ஊகம்-அது தந்ததும் பொய் உடலை நிலை அன்று என போத நெறி தந்ததும் சாசுவத ஆனந்த போகமே வீடு என்னவே – தாயு:2 11/2
பூராயமாய் மனதை போக்க அறியாமல் ஐயோ – தாயு:43 803/1
மேல்


பூரிக்க (1)

பாச இருள் தன் நிழல் என சுளித்து ஆர்த்து மேல் பார்த்து பரந்த மனதை பாரித்த கவளமாய் பூரிக்க உண்டு முகபடாம் அன்ன மாயை நூறி – தாயு:5 37/2
மேல்


பூரித்த (2)

பொற்பினொடு கை காலில் வள் உகிர் படைத்தலால் போந்து இடை ஒடுக்கமுறலால் பொலிவான வெண்_நீறு பூசியே அருள்கொண்டு பூரித்த எண் நீர்மையால் – தாயு:7 65/1
பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனை கந்த பொடியிலே அடியிலே மேல் பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே புந்தி-தனை நுழைய விட்டு – தாயு:37 579/2
மேல்


பூரை (1)

பொய்யில் ஆழும் புலை இனி பூரை காண் – தாயு:18 233/2
மேல்


பூவில் (1)

ஆண்ட குரு மெளனி-தன்னால் யான் எனது அற்று அவன் அருள் நான் ஆவேன் பூவில்
காண் தக எண் சித்தி முத்தி எனக்கு உண்டாம் உன்னால் என் கவலை தீர்வேன் – தாயு:26 399/3,4
மேல்


பூவை (4)

பொல்லாத வாதனை எனும் சப்த பூமியிடை போந்துதலை சுற்றி ஆடும் புருஷனில் அடங்காத பூவை போல் தானே புறம் போந்து சஞ்சரிக்கும் – தாயு:10 92/2
பொருளை பூவை பூவையரை பொருள் என்று எண்ணும் ஒரு பாவி – தாயு:23 319/1
எச்சில் என்று பூவை இகழ்ந்தோர்க்கு உனை போற்ற – தாயு:43 727/1
பொன் ஆரும் மன்றுள் மணி பூவை விழி வண்டு சுற்றும் – தாயு:45 1084/1
மேல்


பூவையரை (2)

பொருளை பூவை பூவையரை பொருள் என்று எண்ணும் ஒரு பாவி – தாயு:23 319/1
பொன்னை புவியை மட பூவையரை மெய் எனவே – தாயு:34 569/3

மேல்