பி – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிச்சை 1
பிசாசை 1
பிடி 1
பிடிக்க 1
பிடிக்கும் 1
பிடித்ததையே 1
பிடித்திட 1
பிடித்து 9
பிடித்துக்கொண்டு 1
பிடித்தேன் 1
பிண்ட 1
பிண்டம் 1
பிண்டமுமாய் 1
பிணம் 1
பிணியும் 1
பித்தர் 3
பித்தன் 3
பித்தனேன் 1
பித்தனை 1
பித்தாக்கி 1
பித்தாகவோ 1
பித்தாகி 1
பித்து 2
பித்தேற்றிவிட்டாய் 1
பித்தேற்றும் 1
பிதற்றி 1
பிதற்றிடும் 1
பிதற்றிய 1
பிதற்று 1
பிதற்றுதல் 1
பிதற்றுமவர் 1
பிதா 1
பிதாவும் 1
பிதுங்க 1
பிரகிருதிக்கு 1
பிரணவ 1
பிரபஞ்சம் 1
பிரமம் 1
பிரமமே 10
பிரமாண்டமாக 1
பிரமாதி 3
பிரமாதி-தம்மொடு 1
பிரமாதியேனும் 1
பிரவாகமே 1
பிராணம் 1
பிராணலயம் 1
பிராணவாயு 1
பிராணன் 1
பிராணனும் 1
பிராணனோடு 1
பிரான் 9
பிரான்-தன் 1
பிரானே 1
பிரிகிலாது 1
பிரித்தான் 1
பிரித்தே 1
பிரிதல் 1
பிரிந்த 3
பிரிந்தார் 1
பிரிந்து 3
பிரிய 1
பிரியா 4
பிரியாத 2
பிரியாது 1
பிரியாமல் 1
பிரியார் 1
பிரிவாக 1
பிரிவு 2
பிரிவு_அற்று 1
பிரிவு_அற 1
பிரிவும் 1
பிலிற்றும் 1
பிழம்பாய் 1
பிழம்பே 1
பிழம்பை 1
பிழை 2
பிழைக்க 1
பிழைக்கும் 3
பிழைத்தனர் 1
பிழைத்தேனே 1
பிழைப்பதற்கு 1
பிழைப்பது 2
பிழைப்பனோ 1
பிழைப்பு 1
பிழைப்பேன் 1
பிழைப்பேனோ 1
பிழைப்போரையும் 1
பிழையேனோ 1
பிள்ளை 4
பிள்ளைக்கும் 1
பிள்ளையை 1
பிளந்து 1
பிறக்க 2
பிறக்கவிலையோ 1
பிறக்காது 1
பிறக்கின்ற 2
பிறக்கும் 1
பிறகே 1
பிறங்கியதும் 1
பிறங்கும் 1
பிறங்குவது 1
பிறத்தல் 1
பிறந்த 1
பிறந்ததும் 1
பிறந்திட 1
பிறந்து 3
பிறப்பதற்கு 1
பிறப்பது 1
பிறப்பிடமாய் 1
பிறப்பு 5
பிறப்பு_அறுப்பான் 1
பிறப்புக்கு 1
பிறப்பும் 2
பிறப்பை 1
பிறப்போ 1
பிறர் 1
பிறரையே 1
பிறவா 1
பிறவாத 1
பிறவாதோ 1
பிறவாமை 3
பிறவார் 1
பிறவி 12
பிறவி-தனில் 1
பிறவி-தான் 1
பிறவி_வேலை 1
பிறவியில் 1
பிறவியும் 1
பிறவியை 1
பிறவும்-தான் 1
பிறவுமே 2
பிறழாது 1
பிறிது 1
பிறிதும் 1
பிறியா 1
பிறியாத 1
பிறியாது 2
பிறியாமல் 1
பிறியும் 3
பிறிவு 3
பிறிவுற்று 1
பிறை 4
பின் 12
பின்தொடர்ந்து 1
பின்புற்று 1
பின்னம் 3
பின்னம்_அற 1
பின்னமுற 1
பின்னர் 2
பின்னிலை 1
பின்னும் 6
பின்னே 6
பின்னை 4
பின்னைத்-தான் 1
பின்னையும் 1
பினும் 1
பினை 1

பிச்சை (1)

கேட்டது கொடுத்து வர நிற்கவைப்பீர் பிச்சை கேட்டு பிழைப்போரையும் கிரீட_பதி ஆக்குவீர் கற்பாந்த வெள்ளம் ஒரு கேணியிடை குறுக வைப்பீர் – தாயு:7 58/2
மேல்


பிசாசை (1)

ஆசா பிசாசை துரத்தி ஐயன் அடி_இணை கீழே அடக்கிக்கொண்டாண்டி – தாயு:54 1424/2
மேல்


பிடி (1)

சொல்லாலே பயன் இல்லை சொல் முடிவை தானே தொடர்ந்து பிடி மர்க்கடம் போல் தொட்டது பற்றா நில் – தாயு:17 187/3
மேல்


பிடிக்க (1)

வாள் பட்ட காயம் இந்த காயம் என்றோ வன் கூற்றும் உயிர் பிடிக்க வரும் அ நீதி – தாயு:42 614/2
மேல்


பிடிக்கும் (1)

பற்றுவன அற்றிடு நிராசை என்று ஒரு பூமி பற்றி பிடிக்கும் யோக பாங்கில் பிராணலயம் என்னும் ஒரு பூமி இவை பற்றின் மனம் அறும் என்னவே – தாயு:9 82/1
மேல்


பிடித்ததையே (1)

பிடித்ததையே தாபிக்கும் பேர்_ஆணவத்தை – தாயு:43 941/1
மேல்


பிடித்திட (1)

தன் நிகர்_இல் லோபாதி பாழ்ம் பேய் பிடித்திட தரணி மிசை லோகாயதன் சமய நடை சாராமல் வேதாந்த சித்தாந்த சமரச சிவாநுபூதி – தாயு:5 40/3
மேல்


பிடித்து (9)

முத்தமிழ் முழக்கமுடன் முத்த நகையார்களொடு முத்துமுத்தாய் குலாவி மோகத்து இருந்தும் என் யோகத்தின் நிலை நின்று மூச்சை பிடித்து அடைத்து – தாயு:11 105/2
கரு மருவு காயத்தை நிர்மலமதாகவே கமலாசனாதி சேர்த்து காலை பிடித்து அனலை அம்மை குண்டலி அடி கலை மதியினூடு தாக்கி – தாயு:12 111/2
அ பரிசாளரும் அஃதே பிடித்து ஆலிப்பால் அடுத்த அ நூல்களும் விரித்தே அனுமான் ஆதி – தாயு:14 140/2
கூட்டி பிடித்து வினை வழியே கூத்தாட்டினையே நினது அருளால் – தாயு:20 291/2
காற்றை பிடித்து மண் கரகத்து அடைத்தபடி கன்ம புனற்குள் ஊறும் கடைகெட்ட நவ வாயில் பெற்ற பசு மண்கல காயத்துள் எனை இருத்தி – தாயு:39 587/1
வைத்திடும் காலை பிடித்து கண்ணின் மார்பில் வைத்து அணைத்துக்கொண்டு கையால் வளைத்து கட்டி – தாயு:41 599/1
கால் பிடித்து மூல கனலை மதி மண்டலத்தின் – தாயு:43 788/1
காற்றை பிடித்து அலைந்தேன் கண்டாய் பராபரமே – தாயு:43 852/2
வந்து பிடித்து ஆட்ட வழக்கோ பராபரமே – தாயு:43 886/2
மேல்


பிடித்துக்கொண்டு (1)

சித்தம் மிசை புக இருத்தி பிடித்துக்கொண்டு தியக்கம்_அற இன்ப சுகம் சேர்வது என்றோ – தாயு:41 599/2
மேல்


பிடித்தேன் (1)

பேய்_அனேன் திரு_அடி இணை தாமரை பிடித்தேன்
நாயனே எனை ஆள் உடை முக்கண் நாயகனே – தாயு:24 341/3,4
மேல்


பிண்ட (1)

பார்க்கின் அண்ட பிண்ட பரப்பு அனைத்தும் நின் செயலே – தாயு:43 752/1
மேல்


பிண்டம் (1)

அண்ட பிண்டம் காணேன் அகமும் புறமும் ஒன்றா – தாயு:43 914/1
மேல்


பிண்டமுமாய் (1)

அண்டமுமாய் பிண்டமுமாய் அளவு_இலாத ஆர் உயிர்க்கு ஓர் உயிராய் அமர்ந்தாயானால் – தாயு:24 333/1
மேல்


பிணம் (1)

நித்திரையில் செத்த பிணம் நேரும் உடற்கு இச்சைவையா – தாயு:43 832/1
மேல்


பிணியும் (1)

வயதும் பட எழுந்து பிணியும் திமிதிமென்று – தாயு:56 1452/50
மேல்


பித்தர் (3)

பாலரொடு பேயர் பித்தர் பான்மை என நிற்பதுவே – தாயு:43 778/1
பித்தர் இறை என்று அறிந்து பேதை-பால் தூது அனுப்புவித்த – தாயு:45 1109/1
பித்தர் பயம் தீர்ந்து பிழைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1143/2
மேல்


பித்தன் (3)

பித்தன் நான் அருள் பெற்றும் திடம் இலேன் – தாயு:18 203/2
பித்தன் நான் என்னும் பிதற்று ஒழிவது எந்நாளோ – தாயு:45 1120/2
பித்தன் இன்று பேசவே வைத்தது என்ன வாரமே – தாயு:53 1417/2
மேல்


பித்தனேன் (1)

பின் செயல் யாது நினைவு_இன்றி கிடப்பேன் பித்தனேன் நல் நிலை பெற நின்றன் – தாயு:19 279/3
மேல்


பித்தனை (1)

பித்தனை ஏதும் அறியா பேதையனை ஆண்ட உனக்கு – தாயு:43 769/1
மேல்


பித்தாக்கி (1)

பித்தாக்கி இன்பம் பெருகவைத்தால் ஆகாதோ – தாயு:47 1356/2
மேல்


பித்தாகவோ (1)

பேராது நிற்றி நீ சும்மா இருந்து-தான் பேர்_இன்பம் எய்திடாமல் பேய்_மனதை அண்டியே தாய்_இலா பிள்ளை போல் பித்தாகவோ மனதை நான் – தாயு:11 100/3
மேல்


பித்தாகி (1)

பின்புற்று அழும் சேய் என விழி நீர் பெருக்கிப்பெருக்கி பித்தாகி
துன்ப_கடல் விட்டு அகல்வேனோ சொரூபானந்த சுடர் கொழுந்தே – தாயு:20 285/3,4
மேல்


பித்து (2)

பித்து ஆனால் உண்டோ பிறப்பு – தாயு:28 505/4
பித்து ஆனேன் மெத்தவும் நான் பேதை பராபரமே – தாயு:43 690/2
மேல்


பித்தேற்றிவிட்டாய் (1)

என் புலன் மயங்கவே பித்தேற்றிவிட்டாய் இரங்கி ஒரு வழியாயினும் இன்ப_வெள்ளமாக வந்து உள்ளம் களிக்கவே எனை நீ கலந்தது உண்டோ – தாயு:9 78/2
மேல்


பித்தேற்றும் (1)

தூய பனி திங்கள் சுடுவது என பித்தேற்றும்
மாய மடவார் மயக்கு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1138/1,2
மேல்


பிதற்றி (1)

பேசா இடும்பைகள் பேசி சுத்த பேய் அங்கம் ஆகி பிதற்றி திரிந்தேன் – தாயு:54 1424/1
மேல்


பிதற்றிடும் (1)

பின் ஏதும் அறியாமல் ஒன்றை விட்டு ஒன்றை பிதற்றிடும் சில சமயமேல் பேசு அரிய ஒளி என்றும் வெளி என்றும் நாதாதி பிறவுமே நிலயம் என்றும் – தாயு:10 90/2
மேல்


பிதற்றிய (1)

பெருமைக்கே இறுமாந்து பிதற்றிய
கருமிக்கு ஐய கதியும் உண்டாம்-கொலோ – தாயு:18 230/1,2
மேல்


பிதற்று (1)

பித்தன் நான் என்னும் பிதற்று ஒழிவது எந்நாளோ – தாயு:45 1120/2
மேல்


பிதற்றுதல் (1)

பேயினும் கடையன் ஆகி பிதற்றுதல் செய்தல் நன்றோ – தாயு:36 577/2
மேல்


பிதற்றுமவர் (1)

மெளனமொடு இருந்தது ஆர் என் போல் உடம்பு எலாம் வாயாய் பிதற்றுமவர் ஆர் மனது எனவும் ஒரு மாயை எங்கே இருந்து வரும் வன்மையொடு இரக்கம் எங்கே – தாயு:10 89/2
மேல்


பிதா (1)

மனைவி புதல்வர் அன்னை பிதா மாடு வீடு என்றிடும் மயக்கம்-தனையும் – தாயு:23 313/3
மேல்


பிதாவும் (1)

தாயும் பிதாவும் தமரும் குருவும் தனி முதலும் – தாயு:27 443/3
மேல்


பிதுங்க (1)

சோற்று துருத்தி சுமை சுமப்ப கண் பிதுங்க
காற்றை பிடித்து அலைந்தேன் கண்டாய் பராபரமே – தாயு:43 852/1,2
மேல்


பிரகிருதிக்கு (1)

முக்குணத்தால் எல்லாம் முளைக்க பிரகிருதிக்கு
இ குணத்தை நல்கியது ஆர் எந்தாய் பராபரமே – தாயு:43 801/1,2
மேல்


பிரணவ (1)

தெய்வ மறை முடிவான பிரணவ சொரூபியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 29/4
மேல்


பிரபஞ்சம் (1)

விதிக்கும் பிரபஞ்சம் எல்லாம் சுத்த வெயில் மஞ்சள் என்னவே வேதாகமங்கள் – தாயு:54 1448/1
மேல்


பிரமம் (1)

நாம் பிரமம் என்றால் நடுவே ஒன்று உண்டாமால் – தாயு:45 1305/1
மேல்


பிரமமே (10)

ஏகமான பொயை மெய் என கருதி ஐய வையம் மிசை வாடவோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 122/4
சிறியனேனும் உனை வந்து அணைந்து சுகமாய் இருப்பது இனி என்று காண் தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 123/4
சிந்தையானதை அறிந்து நீ உன் அருள்செய்ய நானும் இனி உய்வனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 124/4
தெய்வ நல் அருள் படைத்த அன்பரொடு சேரவும் கருணை கூர்வையோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 125/4
தேகமே நழுவி நானுமோ நழுவின் பின்னை உய்யும் வகை உள்ளதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 126/4
செயம் மிகுந்து வரு சித்த யோக நிலை பெற்று ஞான நெறி அடைவனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 127/4
சிறியன் ஏழை நமது அடிமை என்று உனது திரு_உளத்தினில் இருந்ததோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 128/4
திவ்ய அன்புருவம் ஆகி அன்பரொடும் இன்ப வீட்டினில் இருப்பனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 129/4
சித்தம் இப்படி மயங்குமோ அருளை நம்பினோர்கள் பெறு பேறு இதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 130/4
தென் முகத்தின் முகமாய் இருந்த கொலு எ முகத்தினும் வணங்குவேன் தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 131/4
மேல்


பிரமாண்டமாக (1)

மகத்துவமா பிரமாண்டமாக செய்யும் வல்லவா நீ நினைத்தவாறே எல்லாம் – தாயு:40 593/2
மேல்


பிரமாதி (3)

ஆராயும் வேளையில் பிரமாதி ஆனாலும் ஐய ஒரு செயலும் இல்லை அமைதியொடு பேசாத பெருமை பெறு குணசந்த்ரராம் என இருந்த பேரும் – தாயு:2 6/1
இந்த்ராதி தேவதைகள் பிரமாதி கடவுளர் இருக்கு ஆதி வேத முனிவர் எண் அரிய கணநாதர் நவநாத சித்தர்கள் இரவி மதி ஆதியோர்கள் – தாயு:6 53/3
ஊர் என விளங்குவீர் பிரமாதி முடிவில் விடை ஊர்தி அருளால் உலவுவீர் உலகங்கள் கீழ்மேலவாக பெரும் காற்று உலாவின் நல் தாரணையினால் – தாயு:7 59/3
மேல்


பிரமாதி-தம்மொடு (1)

தாங்காது மொழி பேசும் அரிகர பிரமாதி-தம்மொடு சமானம் என்னும் தடை அற்ற தேரில் அஞ்சுரு ஆணி போலவே தன்னில் அசையாது நிற்கும் – தாயு:5 45/2
மேல்


பிரமாதியேனும் (1)

உற உடலை எடுத்தவரில் பிரமாதியேனும் உனை ஒழிந்து தள்ளற்கு – தாயு:26 398/1
மேல்


பிரவாகமே (1)

தாகத்திலே வாய்க்கும் அமிர்த பிரவாகமே தன்னம் தனி பெருமையே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 102/4
மேல்


பிராணம் (1)

சுழுத்தி இதயம்-தனில் பிராணம் சித்தம் சொல் அரிய புருடனுடன் மூன்றது ஆகும் – தாயு:24 347/1
மேல்


பிராணலயம் (1)

பற்றுவன அற்றிடு நிராசை என்று ஒரு பூமி பற்றி பிடிக்கும் யோக பாங்கில் பிராணலயம் என்னும் ஒரு பூமி இவை பற்றின் மனம் அறும் என்னவே – தாயு:9 82/1
மேல்


பிராணவாயு (1)

வட்டமிட்டு ஒளிர் பிராணவாயு எனும் நிகளமோடு கமனம்செயும் மனம் எனும் பெரிய மத்த யானையை என் வசம் அடக்கிடின் மு_மண்டலத்து – தாயு:38 586/1
மேல்


பிராணன் (1)

ஈடாகவே யாறு வீட்டினில் நிரம்பியே இலகி வளர் பிராணன் என்னும் இரு நிதியினை கட்டி யோகபரன் ஆகாமல் ஏழை குடும்பன் ஆகி – தாயு:12 114/3
மேல்


பிராணனும் (1)

எந்நாளும் உடலிலே உயிராம் உனை போல் இருக்கவிலையோ மனது எனும் யானும் என் நட்பாம் பிராணனும் எமை சடம்-அது என்று உனை சித்து என்றுமே – தாயு:9 88/1
மேல்


பிராணனோடு (1)

வழுத்திய நாபியில் துரியம் பிராணனோடு மன்னு புருடனும் கூட வயங்காநிற்கும் – தாயு:24 347/2
மேல்


பிரான் (9)

நாத கீதன் என் நாதன் முக்கண் பிரான்
வேத வேதியன் வெள் விடை ஊர்தி மெய் – தாயு:18 243/1,2
திரை கடந்தவர் தேடும் முக்கண் பிரான்
பரை நிறைந்த பரப்பு எங்ஙன் அங்ஙனே – தாயு:18 245/2,3
தூண்டுவார் அற்ற சோதி பிரான் நின்-பால் – தாயு:18 258/2
கண்ணே உறங்குக என் ஆணை முக்கண் கருணை பிரான்
தண் ஆர் கருணை மவுனத்தினால் முத்தி சாதிக்கலாம் – தாயு:27 413/2,3
தாக்கற்கு உபாயம் சமைத்த பிரான் காக்கும் உயிர் – தாயு:28 477/2
எவ்விடத்தும் பூரணமாம் எந்தை பிரான் தண் அருளே – தாயு:29 552/1
எட்ட தொலையாத எந்தை பிரான் சந்நிதியில் – தாயு:45 1280/1
மாயா விகார மலம் அகல எந்தை பிரான்
நேயானுபூதி நிலை பெறவும் காண்பேனோ – தாயு:46 1319/1,2
தொல்லை பிறவி துயர் கெடவும் எந்தை பிரான்
மல்லல் கருணை வழங்கிடவும் காண்பேனோ – தாயு:46 1333/1,2
மேல்


பிரான்-தன் (1)

அ உயிர் போல் எவ்வுயிரும் ஆன பிரான்-தன் அடிமை – தாயு:45 1312/1
மேல்


பிரானே (1)

ஆதி பிரானே என் அல்லல் இருள் அகல – தாயு:47 1362/1
மேல்


பிரிகிலாது (1)

விடுக்கின்றோர்கள்-பால் பிரிகிலாது உள் அன்பு விடாதே – தாயு:24 327/2
மேல்


பிரித்தான் (1)

அந்நாளில் எவனோ பிரித்தான் அதை கேட்ட அன்று முதல் இன்று வரையும் அநியாயமாய் எமை அடக்கி குறுக்கே அடர்ந்து அரசுபண்ணி எங்கள் – தாயு:9 88/2
மேல்


பிரித்தே (1)

அடக்கி புலனை பிரித்தே அவன் ஆகிய மேனியில் அன்பை வளர்த்தேன் – தாயு:54 1425/1
மேல்


பிரிதல் (1)

கூடுதலுடன் பிரிதல் அற்று நிர்த்தொந்தமாய் குவிதலுடன் விரிதல் அற்று குணம் அற்று வரவினொடு போக்கு அற்று நிலையான குறி அற்று மலமும் அற்று – தாயு:4 33/1
மேல்


பிரிந்த (3)

இனம் பிரிந்த மான் போல் நான் இடையா வண்ணம் இன்பமுற அன்பர் பக்கல் இருத்திவைத்து – தாயு:14 133/3
வேண்டிய நாள் என்னோடும் பழகிய நீ எனை பிரிந்த விசாரத்தாலே – தாயு:26 399/1
கண்ணுள் மணி போல் இன்பம் காட்டி எனை பிரிந்த
திண்ணியரும் இன்னம் வந்து சேர்வாரோ பைங்கிளியே – தாயு:44 1036/1,2
மேல்


பிரிந்தார் (1)

ஓகோ உனை பிரிந்தார் உள்ளம் கனலில் வைத்த – தாயு:43 665/1
மேல்


பிரிந்து (3)

இறைவனே உனை பிரிந்து இங்கு இருக்கிலேன் இருக்கிலேனே – தாயு:21 293/4
சேராமல் சிற்றினத்தை பிரிந்து எந்நாளும் திரு_அடி பேர்_இனத்துடனே சேரா வண்ணம் – தாயு:41 600/1
வாதியாநின்ற வினை பகையை வென்ற வாழ்வே இங்கு உனை பிரிந்து மயங்குகின்றேன் – தாயு:42 628/2
மேல்


பிரிய (1)

விட்டு பிரிய இடம் வேறோ பராபரமே – தாயு:43 973/2
மேல்


பிரியா (4)

ஆயும் அறிவு ஆகி உன்னை பிரியா வண்ணம் அணைந்து சுகம் பெற்ற அன்பர் ஐயோ என்ன – தாயு:14 156/1
மன்னிய உறவே உன்னை நான் பிரியா வண்ணம் என் மனம் எனும் கருவி – தாயு:24 361/3
நீக்க பிரியா நினைக்க மறக்க கூடா – தாயு:45 1198/1
பிரியா வண்ணம் உரிமையின் வளர்க்க – தாயு:55 1451/19
மேல்


பிரியாத (2)

பிரியாத பேர்_ஒளி பிறக்கின்ற அருள் அருள்_பெற்றோர்கள் பெற்ற பெருமை பிறவாமை என்றைக்கும் இறவாமையாய் வந்து பேசாமையாகும் எனவே – தாயு:2 5/3
விட்டு பிரியாத மேலான அத்துவித – தாயு:28 465/3
மேல்


பிரியாது (1)

எந்தெந்த நாளும் எனை பிரியாது என் உயிராய் – தாயு:43 758/1
மேல்


பிரியாமல் (1)

நின்றதற்கோ என் ஐயா நீக்கி பிரியாமல்
கொன்றதற்கோ பேசா குறி – தாயு:28 538/3,4
மேல்


பிரியார் (1)

கற்றார் உனை பிரியார் கண்டாய் பராபரமே – தாயு:43 1011/2
மேல்


பிரிவாக (1)

ஐந்து வகை ஆகின்ற பூதம் முதல் நாதமும் அடங்க வெளி ஆக வெளி செய்து அறியாமை அறிவு ஆதி பிரிவாக அறிவார்கள் அறிவாக நின்ற நிலையில் – தாயு:5 38/1
மேல்


பிரிவு (2)

ஏதும் இன்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவு_அற நின்று இயக்கம்செய்யும் – தாயு:3 18/2
பிரிவு_அற்று இருக்க வேண்டாவோ பேயேற்கு இனி நீ பேசாயே – தாயு:20 283/4
மேல்


பிரிவு_அற்று (1)

பிரிவு_அற்று இருக்க வேண்டாவோ பேயேற்கு இனி நீ பேசாயே – தாயு:20 283/4
மேல்


பிரிவு_அற (1)

ஏதும் இன்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவு_அற நின்று இயக்கம்செய்யும் – தாயு:3 18/2
மேல்


பிரிவும் (1)

தொந்தம் இல்லை நீக்கம் இல்லை பிரிவும் இல்லை சொல்லும் இல்லை இரா_பகலாம் தோற்றம் இல்லை – தாயு:14 151/3
மேல்


பிலிற்றும் (1)

தேன் முகம் பிலிற்றும் பைந்தாள் செய்ய பங்கயத்தின் மேவும் – தாயு:15 165/1
மேல்


பிழம்பாய் (1)

பெரு நிலமாய தூய பேர்_ஒளி பிழம்பாய் நின்றும் – தாயு:21 294/2
மேல்


பிழம்பே (1)

தெள்ளி மறை வடியிட்ட அமுத பிழம்பே தெளிந்த தேனே சீனியே திவ்ய ரசம் யாவும் திரண்டு ஒழுகு பாகே தெவிட்டாத ஆனந்தமே – தாயு:6 54/3
மேல்


பிழம்பை (1)

சோதியாய் இருள் பிழம்பை சூறையாடும் தூ வெளியே எனை தொடர்ந்துதொடர்ந்து எந்நாளும் – தாயு:42 628/1
மேல்


பிழை (2)

ஓயாது பெறுவர் என முறையிட்டதால் பின்னர் உளறுவது கருமம் அன்றாம் உபய நெறி ஈது என்னின் உசித நெறி எந்த நெறி உலகிலே பிழை பொறுக்கும் – தாயு:11 107/3
பேயரொடு கூடில் பிழை காண் பராபரமே – தாயு:43 830/2
மேல்


பிழைக்க (1)

பேசா அநுபூதியை அடியேன் பெற்று பிழைக்க பேர்_அருளால் – தாயு:20 284/1
மேல்


பிழைக்கும் (3)

குடி முழுதும் பிழைக்கும் ஒரு குறையும் இல்லை எடுத்த கோலம் எல்லாம் நன்று ஆகும் குறைவு நிறைவு அறவே – தாயு:17 191/2
பெண்கள் மயல் தப்பி பிழைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1131/2
பித்தர் பயம் தீர்ந்து பிழைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1143/2
மேல்


பிழைத்தனர் (1)

எல்லாம் பிழைத்தனர் அன்பு அற்ற நான் இனி ஏது செய்வேன் – தாயு:27 422/3
மேல்


பிழைத்தேனே (1)

பெற்றேனே பெற்று பிழைத்தேனே சன்ம அல்லல் – தாயு:28 500/3
மேல்


பிழைப்பதற்கு (1)

இன்ப மயமாய் உலகம் எல்லாம் பிழைப்பதற்கு உன் – தாயு:29 550/1
மேல்


பிழைப்பது (2)

இரவு_பகல் ஏழையர்கள் சையோகம் ஆயினோம் எப்படி பிழைப்பது உரையாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 97/4
கொண்டோ பிழைப்பது இங்கு ஐயோ அருள் கோலத்தை மெய் என்று கொள்ளவேண்டாவோ – தாயு:54 1443/2
மேல்


பிழைப்பனோ (1)

சீலம் இன்றி சிறியன் பிழைப்பனோ
ஆலம் உண்டும் அமிர்து உருவாய் வந்த – தாயு:18 197/2,3
மேல்


பிழைப்பு (1)

செத்த பிழைப்பு ஆனது எங்கள் செய்கை பராபரமே – தாயு:43 948/2
மேல்


பிழைப்பேன் (1)

என்னினோ யான் பிழைப்பேன் எனக்கு இனி யார் உன்_போல்வார் இல்லைஇல்லை – தாயு:26 397/3
மேல்


பிழைப்பேனோ (1)

எத்தால் பிழைப்பேனோ எந்தையே நின் அருட்கே – தாயு:43 690/1
மேல்


பிழைப்போரையும் (1)

கேட்டது கொடுத்து வர நிற்கவைப்பீர் பிச்சை கேட்டு பிழைப்போரையும் கிரீட_பதி ஆக்குவீர் கற்பாந்த வெள்ளம் ஒரு கேணியிடை குறுக வைப்பீர் – தாயு:7 58/2
மேல்


பிழையேனோ (1)

பாயாதோ நானும் பயிராய் பிழையேனோ
ஓயாமல் உன்னி உருகும் நெஞ்சே அ நிலைக்கே – தாயு:29 548/2,3
மேல்


பிள்ளை (4)

பேராது நிற்றி நீ சும்மா இருந்து-தான் பேர்_இன்பம் எய்திடாமல் பேய்_மனதை அண்டியே தாய்_இலா பிள்ளை போல் பித்தாகவோ மனதை நான் – தாயு:11 100/3
பிள்ளை மதி செம்_சடையான் பேசா பெருமையினான் – தாயு:28 504/1
பெற்றவட்கே தெரியும் அந்த வருத்தம் பிள்ளை பெறா பேதை அறிவாளோ பேர்_ஆனந்தம் – தாயு:41 595/1
தாய் இருந்தும் பிள்ளை தளர்ந்தால் போல் எவ்விடத்தும் – தாயு:43 984/1
மேல்


பிள்ளைக்கும் (1)

பிள்ளைக்கும் சொல்லாத பெற்றி கண்டாய் ஐயனே – தாயு:28 519/3
மேல்


பிள்ளையை (1)

சொல்லானதில் சற்றும் வாராத பிள்ளையை தொட்டில் வைத்து ஆட்டிஆட்டி தொடையினை கிள்ளல் போல் சங்கற்பம் ஒன்றில் தொடுக்கும் தொடுத்து அழிக்கும் – தாயு:10 92/1
மேல்


பிளந்து (1)

கார் ஆரும் ஆணவ காட்டை களைந்து அறக்கண்டு அகங்காரம் என்னும் கல்லை பிளந்து நெஞ்சகமான பூமி வெளி காண திருத்தி மேன்மேல் – தாயு:8 72/1
மேல்


பிறக்க (2)

மெய்யில் சிவம் பிறக்க மேவும் இன்பம் போல் மாதர் – தாயு:45 1141/1
வந்து பிறக்க மனம் இறப்பது எந்நாளோ – தாயு:45 1148/2
மேல்


பிறக்கவிலையோ (1)

பெருமை பெறு பூரணம் குறையுமோ பூதங்கள் பேய் கோலமாய் விதண்டை பேசுமோ அலது தான் பரிபாக காலம் பிறக்கவிலையோ தொல்லையாம் – தாயு:10 95/3
மேல்


பிறக்காது (1)

பின்னம் பிறக்காது சேய் என வளர்த்திட பேயேனை நல்கவேண்டும் பிறவாத நெறி எனக்கு உண்டு என்னின் இம்மையே பேசு கர்ப்பூர தீபம் – தாயு:11 108/2
மேல்


பிறக்கின்ற (2)

பிரியாத பேர்_ஒளி பிறக்கின்ற அருள் அருள்_பெற்றோர்கள் பெற்ற பெருமை பிறவாமை என்றைக்கும் இறவாமையாய் வந்து பேசாமையாகும் எனவே – தாயு:2 5/3
பிறக்கின்ற தன்மை பிறத்தல் ஒப்பாகும் இ பேய் பிறவி – தாயு:27 447/2
மேல்


பிறக்கும் (1)

பின்னிலை சன்மம் பிறக்கும் கண்டாய் இந்த பேய்த்தனம் ஏன் – தாயு:27 423/2
மேல்


பிறகே (1)

காடு கரையும் மன_குரங்கு கால்விட்டு ஓட அதன் பிறகே
ஓடும் தொழிலால் பயன் உளதோ ஒன்றாய் பலவாய் உயிர்க்கு உயிராய் – தாயு:30 553/1,2
மேல்


பிறங்கியதும் (1)

ஒளியாய் பிறங்கியதும் உண்டோ பராபரமே – தாயு:43 825/2
மேல்


பிறங்கும் (1)

பெரிய அண்டங்கள் எத்தனை அமைத்து அவில் பிறங்கும்
உரிய பல் உயிர் எத்தனை அமைத்து அவைக்கு உறுதி – தாயு:25 368/1,2
மேல்


பிறங்குவது (1)

பேராமல் நின்ற பரவெளியிலே மன_வெளி பிறங்குவது அலாது ஒன்றினும் பின்னமுற மருவாது நல் நயத்தால் இனி பேர்_இன்ப முத்தி நிலையும் – தாயு:12 117/2
மேல்


பிறத்தல் (1)

பிறக்கின்ற தன்மை பிறத்தல் ஒப்பாகும் இ பேய் பிறவி – தாயு:27 447/2
மேல்


பிறந்த (1)

பெற்றிலேன் மோனம் பிறந்த அன்றே மோனம் அல்லால் – தாயு:28 537/3
மேல்


பிறந்ததும் (1)

சிந்தை பிறந்ததும் ஆங்கே அந்த சிந்தை இறந்து தெளிந்ததும் ஆங்கே – தாயு:54 1440/1
மேல்


பிறந்திட (1)

இகம் எலாம் எனை பிறந்திட செய்தது ஏன் எந்தாய் – தாயு:25 385/4
மேல்


பிறந்து (3)

எண்ணாதே பாழில் இறந்து பிறந்து உழலப்பண்ணாதே – தாயு:28 525/3
என்னே நான் பிறந்து உழல வந்த ஆறு இங்கு எனக்கென ஓர் செயல் இலையே ஏழையேன்-பால் – தாயு:42 632/1
வீணே பிறந்து இறந்து வேசற்றேன் ஆசை அற – தாயு:46 1345/1
மேல்


பிறப்பதற்கு (1)

இன்னம் பிறப்பதற்கு இடம் என்னில் இ உடலம் இறவாது இருப்ப மூலத்து எழும் அங்கி அமிர்து ஒழுகும் மதி மண்டலத்தில் உற என் அம்மை குண்டலினி-பால் – தாயு:11 108/1
மேல்


பிறப்பது (1)

இல்லை பிறப்பது எனக்கே – தாயு:28 530/4
மேல்


பிறப்பிடமாய் (1)

பெருவெளியாய் ஐம்_பூதம் பிறப்பிடமாய் பேசாத பெரிய மோனம் – தாயு:3 16/1
மேல்


பிறப்பு (5)

சாதி குலம் பிறப்பு இறப்பு பந்தம் முத்தி அரு உருவ தன்மை நாமம் – தாயு:3 18/1
வானே மாய பிறப்பு_அறுப்பான் வந்து உன் அடிக்கே கரம் கூப்பி – தாயு:20 287/2
பொய்யாம் பிறப்பு இறப்பு போம் – தாயு:28 467/4
பித்து ஆனால் உண்டோ பிறப்பு – தாயு:28 505/4
உந்து பிறப்பு இறப்பை உற்றுவிடாது எந்தை அருள் – தாயு:45 1148/1
மேல்


பிறப்பு_அறுப்பான் (1)

வானே மாய பிறப்பு_அறுப்பான் வந்து உன் அடிக்கே கரம் கூப்பி – தாயு:20 287/2
மேல்


பிறப்புக்கு (1)

எண்ணிய எண்ணம் எல்லாம் இறப்பு மேல் பிறப்புக்கு ஆசைபண்ணி – தாயு:36 575/1
மேல்


பிறப்பும் (2)

நின்ற நிலையும் அது நெஞ்ச பிறப்பும் அது – தாயு:28 534/3
இறப்பும் பிறப்பும் பொருந்த எனக்கு எவ்வணம் வந்தது என்று எண்ணி யான் பார்க்கில் – தாயு:54 1431/1
மேல்


பிறப்பை (1)

எந்த நிலை பேசினும் இணங்கவிலை அல்லால் இறப்பொடு பிறப்பை உள்ளே எண்ணினால் நெஞ்சு-அது பகீரெனும் துயிலுறாது இரு விழியும் இரவு_பகலாய் – தாயு:4 30/3
மேல்


பிறப்போ (1)

எத்தனை பிறப்போ எத்தனை இறப்போ எளியேனேற்கு இதுவரை அமைத்து – தாயு:24 358/1
மேல்


பிறர் (1)

பொய்த்த மொழி அல்லால் மருந்துக்கும் மெய்ம் மொழி புகன்றிடேன் பிறர் கேட்கவே போதிப்பது அல்லாது சும்மா இருந்து அருள் பொருந்திடா பேதை நானே – தாயு:8 75/3
மேல்


பிறரையே (1)

தந்தை தாய் முதலான அகில ப்ரபஞ்சம்-தனை தந்தது எனது ஆசையோ தன்னையே நோவனோ பிறரையே நோவனோ தற்காலம்-அதை நோவனோ – தாயு:2 10/3
மேல்


பிறவா (1)

பேச்சாகா மோனம் பிறவா முளைத்தது என்றற்கு – தாயு:43 712/1
மேல்


பிறவாத (1)

பின்னம் பிறக்காது சேய் என வளர்த்திட பேயேனை நல்கவேண்டும் பிறவாத நெறி எனக்கு உண்டு என்னின் இம்மையே பேசு கர்ப்பூர தீபம் – தாயு:11 108/2
மேல்


பிறவாதோ (1)

பேதம் அபேதம் கெடவும் ஒரு பேசாமை பிறவாதோ ஆல் அடியில் பெரிய மோன – தாயு:14 163/2
மேல்


பிறவாமை (3)

பிரியாத பேர்_ஒளி பிறக்கின்ற அருள் அருள்_பெற்றோர்கள் பெற்ற பெருமை பிறவாமை என்றைக்கும் இறவாமையாய் வந்து பேசாமையாகும் எனவே – தாயு:2 5/3
பினை ஒன்றும் இலை அந்த இன்பம் எனும் நிலயம் பெற்றாரே பிறவாமை பெற்றார் மற்றும் தான் – தாயு:17 185/3
பெற்றோம் பிறவாமை பேசாமையாய் இருக்க – தாயு:28 501/1
மேல்


பிறவார் (1)

பேச்சு_அற்றவரே பிறவார் பராபரமே – தாயு:43 989/2
மேல்


பிறவி (12)

எண் அரிய பிறவி-தனில் மானுட பிறவி-தான் யாதினும் அரிதரிது காண் இ பிறவி தப்பினால் எ பிறவி வாய்க்குமோ ஏது வருமோ அறிகிலேன் – தாயு:7 60/1
எண் அரிய பிறவி-தனில் மானுட பிறவி-தான் யாதினும் அரிதரிது காண் இ பிறவி தப்பினால் எ பிறவி வாய்க்குமோ ஏது வருமோ அறிகிலேன் – தாயு:7 60/1
கண்ட பல பொருளிலோ காணாத நிலை என கண்ட சூனியம்-அதனிலோ காலம் ஒரு மூன்றிலோ பிறவி நிலை-தன்னிலோ கருவி கரணங்கள் ஓய்ந்த – தாயு:9 86/3
இ பிறவி என்னும் ஓர் இருள்_கடலில் மூழ்கி நான் என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு இரு_வினை எனும் திரையின் எற்றுண்டு புற்புதம் என கொங்கை வரிசை காட்டும் – தாயு:12 112/1
தொல்லையாம் பிறவி_வேலை தொலைந்திடாது இருள் நீங்காது – தாயு:15 170/3
பிறக்கின்ற தன்மை பிறத்தல் ஒப்பாகும் இ பேய் பிறவி
இருக்கின்ற எல்லைக்கு அளவு இல்லையே இந்த சன்ம அல்லல் – தாயு:27 447/2,3
பெற்றோமே நெஞ்சே பெரும் பிறவி சாராமல் – தாயு:28 542/3
வஞ்ச நமன் வாதனைக்கும் வன் பிறவி வேதனைக்கும் – தாயு:43 756/1
துன்புறுதல் வன் பிறவி துக்கம் பராபரமே – தாயு:43 949/2
வெய்ய பிறவி வெயில் வெப்பம் எல்லாம் விட்டு அகல – தாயு:45 1189/1
வாதை பிறவி வளை கடலை நீந்த ஐயன் – தாயு:45 1190/1
தொல்லை பிறவி துயர் கெடவும் எந்தை பிரான் – தாயு:46 1333/1
மேல்


பிறவி-தனில் (1)

எண் அரிய பிறவி-தனில் மானுட பிறவி-தான் யாதினும் அரிதரிது காண் இ பிறவி தப்பினால் எ பிறவி வாய்க்குமோ ஏது வருமோ அறிகிலேன் – தாயு:7 60/1
மேல்


பிறவி-தான் (1)

எண் அரிய பிறவி-தனில் மானுட பிறவி-தான் யாதினும் அரிதரிது காண் இ பிறவி தப்பினால் எ பிறவி வாய்க்குமோ ஏது வருமோ அறிகிலேன் – தாயு:7 60/1
மேல்


பிறவி_வேலை (1)

தொல்லையாம் பிறவி_வேலை தொலைந்திடாது இருள் நீங்காது – தாயு:15 170/3
மேல்


பிறவியில் (1)

ஏழு பிறவியில் தாழாது ஓங்கும் – தாயு:55 1451/10
மேல்


பிறவியும் (1)

பிறவியும் வேண்டும் யான் எனது இறக்கப்பெற்றவர் பெற்றிடும் பேறே – தாயு:22 308/4
மேல்


பிறவியை (1)

பெண்ணொடு ஆண் முதலாம் என் பிறவியை
எண்ணவோ அரிது ஏழை கதி பெறும் – தாயு:18 249/2,3
மேல்


பிறவும்-தான் (1)

வாரி ஏழும் மலையும் பிறவும்-தான்
சீரிதான நின் சின்மயத்தே என்றால் – தாயு:18 211/1,2
மேல்


பிறவுமே (2)

பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் பேசில் அருள் என்பர் சிலபேர் பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் பிறவுமே மொழிவர் இவையால் – தாயு:2 9/3
பின் ஏதும் அறியாமல் ஒன்றை விட்டு ஒன்றை பிதற்றிடும் சில சமயமேல் பேசு அரிய ஒளி என்றும் வெளி என்றும் நாதாதி பிறவுமே நிலயம் என்றும் – தாயு:10 90/2
மேல்


பிறழாது (1)

அகமும் புறமும் இன்றி முறை பிறழாது
குறியும் குணமும் அன்றி நிறைவும் குறைவும் அன்றி – தாயு:56 1452/2,3
மேல்


பிறிது (1)

பிறிது ஒன்றில் ஆசை இன்றி பெற்றிருந்தேன் என்ற – தாயு:45 1266/1
மேல்


பிறிதும் (1)

பொல்லாத சேய் எனில் தாய் தள்ளல் நீதமோ புகலிடம் பிறிதும் உண்டோ பொய் வார்த்தை சொல்லிலோ திரு_அருட்கு அயலுமாய் புன்மையேன் ஆவன் அந்தோ – தாயு:9 79/3
மேல்


பிறியா (1)

பிறியா அருள் நிலையும் பெற்றேன் பராபரமே – தாயு:43 1007/2
மேல்


பிறியாத (1)

பிறியாத தண் அருள் சிவஞானியாய் வந்து பேசு அரிய வாசியாலே பேர்_இன்ப உண்மையை அளித்தனை என் மனது அற பேர்_அம்பல கடவுளாய் – தாயு:12 116/1
மேல்


பிறியாது (2)

பிறியாது அறிவித்த பேர்_அறிவாம் சுத்த பேர்_ஒளியோ – தாயு:27 430/2
பிறியாது உயிர்க்குயிராய் பின்னம்_அற ஓங்கும் – தாயு:43 974/1
மேல்


பிறியாமல் (1)

பிறியாமல் தண் அருளே கோயில் ஆன பெரிய பரம் பதி-அதனை பெறவே வேண்டில் – தாயு:14 150/2
மேல்


பிறியும் (3)

பிறியும் தரமோ நீ என்னை பெம்மானே பேர்_இன்பம்-அதாய் – தாயு:23 315/2
பிறியும் தன்மை இல்லா வகை கலக்கின்ற பெரியோய் – தாயு:25 367/4
அறியும் தரமும் அன்று பிறியும் தரமும் அன்று – தாயு:56 1452/24
மேல்


பிறிவு (3)

பிறிவு இலாத வணம் நின்றிடாதபடி பல நிறம் கவரும் உபலமாய் பெரிய மாயையில் அழுந்தி நின்னது ப்ரசாத நல் அருள் மறந்திடும் – தாயு:13 123/3
பிறிவு அற ஆனந்த மயம் பெற்று குறி அவிழ்ந்தால் – தாயு:28 492/2
அறிவு அறிவாய் நின்றுவிட ஆங்கே பிறிவு அறவும் – தாயு:28 539/2
மேல்


பிறிவுற்று (1)

பிறிவுற்று இருக்கும் பெரும் கருணை பெம்மானே எம்பெருமானே – தாயு:24 334/4
மேல்


பிறை (4)

அல் ஆர்ந்த மேனியொடு குண்டு கண் பிறை எயிற்று ஆபாச வடிவமான அந்தகா நீ ஒரு பகட்டால் பகட்டுவது அடாதடா காசு நம்பால் – தாயு:12 119/3
கொழுந்து திகழ் வெண் பிறை சடில கோவே மன்றில் கூத்து ஆடற்கு – தாயு:20 286/1
முறை உணர்ந்தார் யாதை முயல்வார் பிறை அணிந்த – தாயு:28 506/2
வளரும் பிறை குறைந்தபடி மதி சோர – தாயு:56 1452/48
மேல்


பின் (12)

பொய் திகழும் உலக நடை என் சொல்கேன் என் சொல்கேன் பொழுதுபோக்கு ஏது என்னிலோ பொய் உடல் நிமித்தம் புசிப்பு கலைந்திடல் புசித்த பின் கண்ணுறங்கல் – தாயு:7 61/1
எந்த நாள் கருணைக்கு உரித்தாகும் நாள் எனவும் என் இதயம் எனை வாட்டுதே ஏதென்று சொல்லுவேன் முன்னொடு பின் மலைவு அறவும் இற்றை வரை யாது பெற்றேன் – தாயு:9 87/1
பின் ஏதும் அறியாமல் ஒன்றை விட்டு ஒன்றை பிதற்றிடும் சில சமயமேல் பேசு அரிய ஒளி என்றும் வெளி என்றும் நாதாதி பிறவுமே நிலயம் என்றும் – தாயு:10 90/2
அறிவாய் இருந்திடும் நாத ஒலி காட்டியே அமிர்த ப்ரவாக சித்தி அருளினை அலாது திரு_அம்பலமும் ஆகி எனை ஆண்டனை பின் எய்தி நெறியாய் – தாயு:12 116/2
குறி-தான் அளித்தனை நல் மரவுரி கொள் அந்தண கோலமாய் அசபா நலம் கூறின பின் மெளனியாய் சும்மா இருக்க நெறி கூட்டினை எலாம் இருக்க – தாயு:12 116/3
மின் போலும் இடை ஒடியும்ஒடியும் என மொழிதல் போல் மென் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப வீங்கி புடைத்து விழ சுமை அன்ன கொங்கை மட மின்னார்கள் பின் ஆவலால் – தாயு:12 120/1
எறி திரை கடல் நிகர்த்த செல்வம் மிக அல்லல் என்று ஒருவர் பின் செலாது இல்லை என்னும் உரை பேசிடாது உலகில் எவரும் ஆம் என மதிக்கவே – தாயு:13 128/1
பின் செயல் யாது நினைவு_இன்றி கிடப்பேன் பித்தனேன் நல் நிலை பெற நின்றன் – தாயு:19 279/3
பின்னம் அற நில்லாத பின் – தாயு:28 495/4
முன்னொடு பின் பக்கம் முடி அடி நாப்பண் அற நின்றன்னொடு – தாயு:43 706/1
முன் நினைக்க பின் மறைக்கும் மூட இருள் ஆ கெடுவேன் – தாயு:51 1399/1
களையை களைந்து பின் பார்த்தேன் ஐயன் களை அன்றி வேறு ஒன்றும் கண்டிலன் தோழி – தாயு:54 1435/2
மேல்


பின்தொடர்ந்து (1)

பேதை பருவத்தே பின்தொடர்ந்து என் பக்குவமும் – தாயு:44 1064/1
மேல்


பின்புற்று (1)

பின்புற்று அழும் சேய் என விழி நீர் பெருக்கிப்பெருக்கி பித்தாகி – தாயு:20 285/3
மேல்


பின்னம் (3)

பின்னம் பிறக்காது சேய் என வளர்த்திட பேயேனை நல்கவேண்டும் பிறவாத நெறி எனக்கு உண்டு என்னின் இம்மையே பேசு கர்ப்பூர தீபம் – தாயு:11 108/2
பின்னம் அற நில்லாத பின் – தாயு:28 495/4
பிறியாது உயிர்க்குயிராய் பின்னம்_அற ஓங்கும் – தாயு:43 974/1
மேல்


பின்னம்_அற (1)

பிறியாது உயிர்க்குயிராய் பின்னம்_அற ஓங்கும் – தாயு:43 974/1
மேல்


பின்னமுற (1)

பேராமல் நின்ற பரவெளியிலே மன_வெளி பிறங்குவது அலாது ஒன்றினும் பின்னமுற மருவாது நல் நயத்தால் இனி பேர்_இன்ப முத்தி நிலையும் – தாயு:12 117/2
மேல்


பின்னர் (2)

ஓயாது பெறுவர் என முறையிட்டதால் பின்னர் உளறுவது கருமம் அன்றாம் உபய நெறி ஈது என்னின் உசித நெறி எந்த நெறி உலகிலே பிழை பொறுக்கும் – தாயு:11 107/3
ஓங்கி நிறைந்தது கண்டால் பின்னர் ஒன்று என்று இரண்டு என்று உரைத்திடலாமோ – தாயு:54 1441/2
மேல்


பின்னிலை (1)

பின்னிலை சன்மம் பிறக்கும் கண்டாய் இந்த பேய்த்தனம் ஏன் – தாயு:27 423/2
மேல்


பின்னும் (6)

பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் பேசில் அருள் என்பர் சிலபேர் பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் பிறவுமே மொழிவர் இவையால் – தாயு:2 9/3
ஆதரவுவையாமல் அறிவினை மறைப்பது நின் அருள் பின்னும் அறிவு_இன்மை தீர்த்து அறிவித்து நிற்பது நின் அருள் ஆகில் எளியனேற்கு அறிவு ஆவதே அறிவு இலா – தாயு:4 35/2
பின்னும் முன்னுமாய் நடுவுமாய் யாவினும் பெரியது – தாயு:25 376/1
பின்னும் உடல் சுமையா பேசும் வழக்கதனால் – தாயு:28 496/1
சாதி எங்கே ஒழுக்கம் எங்கே யாங்கள் எங்கே தற்பர நீ பின்னும் ஒன்றை சமைப்பதானால் – தாயு:42 615/2
எனக்குள் நீ என்றும் இயற்கையா பின்னும்
உனக்குள் நான் என்ற உறுதி கொள்வது எந்நாளோ – தாயு:45 1269/1,2
மேல்


பின்னே (6)

பின்னே நடக்கவிட்டான் பேர்_அருளை நாடாதார்க்கு – தாயு:28 502/3
கூறு ஆய ஐம்_பூத சுமையை தாங்கி குணம்_இலா மனம் எனும் பேய் குரங்கின் பின்னே
மாறாத கவலையுடன் சுழல என்னை வைத்தனையே பரமே நின் மகிமை நன்றே – தாயு:42 609/1,2
முன்னே செய் வினை எனவும் பின்னே வந்து மூளும் வினை எனவும் வர முறை ஏன் எந்தாய் – தாயு:42 632/2
சேதம் உறின் யாது பின்னே செல்லும் பராபரமே – தாயு:43 817/2
கைவிளக்கின் பின்னே போய் காண்பார் போல் மெய்ஞ்ஞான – தாயு:45 1195/1
மெய் விளக்கின் பின்னே போய் மெய் காண்பது எந்நாளோ – தாயு:45 1195/2
மேல்


பின்னை (4)

தேகமே நழுவி நானுமோ நழுவின் பின்னை உய்யும் வகை உள்ளதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 126/4
பின்னை உய்கிலன் பேதையன் ஆவியே – தாயு:18 195/4
பின்னை ஒரு பற்றும் உண்டோ பேசாய் பராபரமே – தாயு:43 729/2
பின்னை உன்னால் பெற்ற நலம் பேசேன் பராபரமே – தாயு:43 760/2
மேல்


பின்னைத்-தான் (1)

பின்னைத்-தான் நின்றன் அருள் பெற்ற மா தவ பெரியோர் – தாயு:25 364/3
மேல்


பின்னையும் (1)

ஆர் அணி சடை கடவுள் ஆரணி என புகழ அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயிலே – தாயு:37 582/3
மேல்


பினும் (1)

கொடுத்த போது கொடுத்தது அன்றோ பினும் குளறி நான் என்று கூத்தாட மாயையை – தாயு:31 556/2
மேல்


பினை (1)

பினை ஒன்றும் இலை அந்த இன்பம் எனும் நிலயம் பெற்றாரே பிறவாமை பெற்றார் மற்றும் தான் – தாயு:17 185/3

மேல்