பா – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பாக்கியங்கள் 1
பாக்கியம் 1
பாக்யமான 1
பாகத்தினால் 1
பாகம் 2
பாகமோ 1
பாகாய் 2
பாகு 1
பாகுமோ 1
பாகே 1
பாகோ 1
பாங்காய் 1
பாங்கால் 1
பாங்கியை 1
பாங்கில் 1
பாங்கு 3
பாங்குபெற 1
பாங்குறும் 1
பாச 8
பாச_கடற்குளே 1
பாசத்துள் 1
பாசபந்த 1
பாசம் 3
பாசம்-ஆனதை 1
பாசம்வையேன் 1
பாசாடவிக்குளே 1
பாசாடவியை 1
பாசி 1
பாட்டின் 2
பாட்டு 2
பாட்டுக்கோ 1
பாட்டை 1
பாட 1
பாடாது 1
பாடி 7
பாடிய 1
பாடியும் 1
பாடினேன் 1
பாடு 2
பாடுகின்ற 1
பாடுகின்றேன் 1
பாடுவதும் 1
பாண்ட 1
பாண்டமான 1
பாண்டமோ 1
பாத்திரத்துக்கு 1
பாத 5
பாதக 2
பாதகத்தவரும் 1
பாதம் 2
பாதமே 2
பாதரசம் 1
பாதரசமாய் 1
பாதனே 1
பாதி 2
பாதுகாத்து 1
பாதை 1
பாப 1
பாம்பு 2
பாமாலைக்கே 1
பாய் 3
பாய்ச்சல்செய்து 1
பாய்ச்சி 1
பாய்ச்சிடும் 1
பாய்ந்ததுவே 1
பாய 1
பாயாதோ 2
பார் 34
பார்-மினோ 2
பார்க்க 3
பார்க்கவொட்டாமல் 1
பார்க்கில் 2
பார்க்கின் 6
பார்க்கின்ற 1
பார்க்கினும் 1
பார்க்குங்கால் 1
பார்க்கும் 12
பார்த்த 5
பார்த்தவன் 1
பார்த்தன 1
பார்த்தனையே 1
பார்த்தாயோ 1
பார்த்தால் 1
பார்த்தாலும் 3
பார்த்திருக்க 1
பார்த்திருந்தால் 2
பார்த்திலாயோ 1
பார்த்து 6
பார்த்துப்பார்த்து 1
பார்த்தும் 1
பார்த்தேன் 2
பார்ப்பது 3
பார்ப்பதே 1
பார்ப்பவரை 1
பார்வை 3
பார 2
பாரகமும் 1
பாரத்தனம் 1
பாரதத்தினும் 1
பாரம் 2
பாராட்டி 1
பாராட்டியானாலும் 1
பாராதது 1
பாராதி-தனில் 1
பாராது 1
பாராதே 2
பாராமல் 7
பாராய் 3
பாராயண 1
பாராயோ 4
பாரிசத்திலும் 1
பாரித்த 1
பாரில் 2
பாரினிடை 1
பாரீர் 1
பாருபார் 1
பாரும் 1
பாரே 1
பாரேன் 3
பாரொடு 1
பால் 5
பாலம் 1
பாலர் 1
பாலருடன் 1
பாலரொடு 1
பாலன் 1
பாலிப்பது 2
பாலைவனத்தில் 1
பாலொடு 1
பாலோ 1
பாவங்கள் 1
பாவம் 5
பாவமொடு 1
பாவனை 1
பாவனைசெய்யும் 1
பாவனையேனும் 1
பாவி 13
பாவிக்க 1
பாவிக்கமாட்டேன் 1
பாவிக்கின் 1
பாவிக்கு 1
பாவிக்கும் 2
பாவித்திடினும் 1
பாவித்து 2
பாவித்தேன் 1
பாவியேம் 1
பாவியேற்கு 2
பாவியேன் 7
பாவியேனே 1
பாவியை 3
பாவை 3
பாவையர் 1
பாழ் 13
பாழ்த்த 10
பாழ்பட 1
பாழ்ம் 6
பாழாக்கி 1
பாழாக்கும் 1
பாழாகாவாறு 1
பாழாகி 1
பாழாம் 1
பாழான 4
பாழில் 2
பாழிலே 1
பாழை 1
பாளயமும் 1
பாற்கடலை 1
பான்மை 7
பான்மையினை 1
பான்மையும் 1
பான்மையேம் 1
பான்மையை 1
பானுவே 2

பாக்கியங்கள் (1)

பாக்கியங்கள் எல்லாம் பழுத்து மனம் பழுத்தோர் – தாயு:45 1255/1
மேல்

பாக்கியம் (1)

படி மிசை மெளனி ஆகி நீ ஆள பாக்கியம் என் செய்தேன் பரனே – தாயு:19 278/4
மேல்

பாக்யமான (1)

பட்டவர்த்தனர் பராவு சக்ரதர பாக்யமான சுபயோகமும் பார காவிய கவித்வ நான்மறை பராயணம்செய் மதியூகமும் – தாயு:38 586/3
மேல்

பாகத்தினால் (1)

பாகத்தினால் கவிதை பாடி படிக்கவோ பத்தி நெறி இல்லை வேத பாராயண பனுவல் மூவர் செய் பனுவல்-அது பகரவோ இசையும் இல்லை – தாயு:11 102/1
மேல்

பாகம் (2)

பாகம் மிக அருள ஒரு சத்தி வந்து பதித்தது என்-கொல் நான் எனும் அ பான்மை என்-கொல் – தாயு:14 145/4
பச்சை நிறமாய் சிவந்த பாகம் கலந்து உலகை – தாயு:45 1089/1
மேல்

பாகமோ (1)

பாகமோ பெற உனை பாட அறியேன் மலபரிபாகம் வரவும் மனதில் பண்புமோ சற்றும் இலை நியமமோ செய்திட பாவியேன் பாப ரூப – தாயு:37 583/1
மேல்

பாகாய் (2)

தேன் ஆகி பால் ஆகி கனியாய் கன்னல் செழும் பாகாய் கற்கண்டாய் திகழ்ந்த ஒன்றே – தாயு:16 179/4
கன்னல் தரும் பாகாய் கருப்பு வட்டாய் கற்கண்டாய் – தாயு:43 883/1
மேல்

பாகு (1)

இன் அமுது கனி பாகு கற்கண்டு சீனி தேன் என ருசித்திட வலிய வந்து இன்பம் கொடுத்த நினை எந்நேரம் நின் அன்பர் இடையறாது உருகி நாடி – தாயு:9 77/1
மேல்

பாகுமோ (1)

சுத்த நித்த இயல் பாகுமோ உனது விசுவ மாயை நடுவாகவே சொல்ல வேண்டும் வகை நல்ல காதி கதை சொல்லும் மாயையினும் இல்லை என் – தாயு:13 130/3
மேல்

பாகே (1)

தெள்ளி மறை வடியிட்ட அமுத பிழம்பே தெளிந்த தேனே சீனியே திவ்ய ரசம் யாவும் திரண்டு ஒழுகு பாகே தெவிட்டாத ஆனந்தமே – தாயு:6 54/3
மேல்

பாகோ (1)

பாகோ மெழுகோ பகராய் பராபரமே – தாயு:43 665/2
மேல்

பாங்காய் (1)

பாங்காய் நடத்தும் பொருளே அகண்ட பரசிவமே – தாயு:27 409/4
மேல்

பாங்கால் (1)

பாசம்வையேன் நின் கருணை பாங்கால் பராபரமே – தாயு:43 874/2
மேல்

பாங்கியை (1)

பாங்கியை சேர்ந்தார் இறைக்கு பண்போ சொல் பைங்கிளியே – தாயு:44 1051/2
மேல்

பாங்கில் (1)

பற்றுவன அற்றிடு நிராசை என்று ஒரு பூமி பற்றி பிடிக்கும் யோக பாங்கில் பிராணலயம் என்னும் ஒரு பூமி இவை பற்றின் மனம் அறும் என்னவே – தாயு:9 82/1
மேல்

பாங்கு (3)

பாராய் உனை கொல்லுவேன் வெல்லுவேன் அருள் பாங்கு கொண்டே – தாயு:27 450/4
பாங்கு பெற செய்வது உன் மேல் பாரம் பராபரமே – தாயு:43 954/2
பாங்கு கண்டால் அன்றோ பலன் காண்பேன் பைங்கிளியே – தாயு:44 1054/2
மேல்

பாங்குபெற (1)

பழுத்திடும் பக்குவர் அறிவர் அவத்தை ஐந்தில் பாங்குபெற கருவி நிற்கும் பரிசு-தானே – தாயு:24 347/4
மேல்

பாங்குறும் (1)

பாங்குறும் பேர்_இன்பம் படைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1226/2
மேல்

பாச (8)

பாச_கடற்குளே வீழாமல் மனது அற்ற பரிசுத்த நிலையை அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 13/4
பாச இருள் தன் நிழல் என சுளித்து ஆர்த்து மேல் பார்த்து பரந்த மனதை பாரித்த கவளமாய் பூரிக்க உண்டு முகபடாம் அன்ன மாயை நூறி – தாயு:5 37/2
கடம் பெறு மா மத யானை என்னவும் நீ பாச கட்டான நிகளபந்த கட்டு அவிழ பாரே – தாயு:17 188/4
ஒக்கல் தாய் தந்தை மகவு எனும் பாச கட்டுடனே – தாயு:25 387/3
பரவு அரிய பரசிவமாய் அது எனலாய் நான் எனலாய் பாச சாலம் – தாயு:26 395/1
பாச சாலங்கள் எலாம் பற்று விட ஞான வை வாள் – தாயு:43 811/1
பாச பந்தம் செய்த துன்பம் பாராமல் எம் இறைவர் – தாயு:44 1062/1
பாச நிகளங்கள் எல்லாம் பஞ்சாக செஞ்செவே – தாயு:47 1364/1
மேல்

பாச_கடற்குளே (1)

பாச_கடற்குளே வீழாமல் மனது அற்ற பரிசுத்த நிலையை அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 13/4
மேல்

பாசத்துள் (1)

பாசத்துள் செல்லாதே பல்காலும் பாழ் நெஞ்சே – தாயு:29 543/4
மேல்

பாசபந்த (1)

என வெளி கண்டே இருக்கவும் பாசபந்த
இனமே துணை என்று இருந்தோம் நமன் வரின் என் செய்குவோம் – தாயு:27 437/2,3
மேல்

பாசம் (3)

பாசம் போய் நின்றவர் போல் பாராட்டியானாலும் – தாயு:43 676/1
கேடு_இல் பசு பாசம் எல்லாம் கீழ்ப்படவும் தானே மேல் – தாயு:45 1196/1
பாசம் அகலாமல் பதியில் கலவாமல் – தாயு:45 1286/1
மேல்

பாசம்-ஆனதை (1)

மோகம் ஆதி தரு பாசம்-ஆனதை அறிந்துவிட்டு உனையும் எனையுமே முழுது உணர்ந்து பரமான இன்ப_வெளம் மூழ்கவேண்டும் இது இன்றியே – தாயு:13 126/3
மேல்

பாசம்வையேன் (1)

பாசம்வையேன் நின் கருணை பாங்கால் பராபரமே – தாயு:43 874/2
மேல்

பாசாடவிக்குளே (1)

பாசாடவிக்குளே செல்லாதவர்க்கு அருள் பழுத்து ஒழுகு தேவதருவே பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 4/4
மேல்

பாசாடவியை (1)

பாசாடவியை கடந்த அன்பர் பற்றும் அகண்ட பரப்பான – தாயு:20 284/3
மேல்

பாசி (1)

கல் எறிய பாசி கலைந்து நல் நீர் காணும் நல்லோர் – தாயு:43 849/1
மேல்

பாட்டின் (2)

இரு நிலனாய் தீ ஆகி என்ற திரு_பாட்டின் – தாயு:45 1257/1
என்னுடைய தோழனுமாய் என்ற திரு_பாட்டின் – தாயு:45 1260/1
மேல்

பாட்டு (2)

பாட்டு அளி துதைந்து வளர் கற்பக நல் நீழலை பாரினிடை வரவழைப்பீர் பத்ம_நிதி சங்க_நிதி இரு பாரிசத்திலும் பணிசெய்யும் தொழிலாளர் போல் – தாயு:7 58/1
பாட்டு அளி நறவம் உண்டு அயர்ந்தது போல் பற்று அயர்ந்து இருப்பது எ நாளோ – தாயு:24 360/4
மேல்

பாட்டுக்கோ (1)

பாட்டுக்கோ அன்பினுக்கோ பத்திக்கோ அன்பர்-தங்கள் – தாயு:43 999/1
மேல்

பாட்டை (1)

மார்க்கண்டர்க்காக மறலி பட்ட பாட்டை உன்னி – தாயு:43 763/1
மேல்

பாட (1)

பாகமோ பெற உனை பாட அறியேன் மலபரிபாகம் வரவும் மனதில் பண்புமோ சற்றும் இலை நியமமோ செய்திட பாவியேன் பாப ரூப – தாயு:37 583/1
மேல்

பாடாது (1)

பாடாது பாடி படித்து அளவு_இல் சமயமும் பஞ்சுபடு சொல்லன் இவனை பார்-மினோ பார்-மினோ என்று சபை கூடவும் பரமார்த்தம் இது என்னவே – தாயு:12 115/1
மேல்

பாடி (7)

பண் ஆரும் இசையினொடு பாடி படித்து அருள் பான்மை நெறி நின்று தவறா பக்குவ விசேஷராய் நெக்குநெக்குருகி பணிந்து எழுந்து இரு கை கூப்பி – தாயு:6 48/3
படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குற பாடி ஆடி குதித்து பனி மதி முகத்திலே நிலவு அனைய புன்னகை பரப்பி ஆர்த்தார்த்து எழுந்து – தாயு:6 55/2
பாகத்தினால் கவிதை பாடி படிக்கவோ பத்தி நெறி இல்லை வேத பாராயண பனுவல் மூவர் செய் பனுவல்-அது பகரவோ இசையும் இல்லை – தாயு:11 102/1
பாடாது பாடி படித்து அளவு_இல் சமயமும் பஞ்சுபடு சொல்லன் இவனை பார்-மினோ பார்-மினோ என்று சபை கூடவும் பரமார்த்தம் இது என்னவே – தாயு:12 115/1
பவ்வ வெண் திரை கொழித்த தண் தரளம் விழி உதிர்ப்ப மொழி குளறியே பாடி ஆடி உள் உடைந்துடைந்து எழுது பாவை ஒத்து அசைதல் இன்றியே – தாயு:13 129/3
பாடி ஆடி நின்று இரங்கி நின் பத_மலர் முடி மேல் – தாயு:25 379/1
பாடி படித்து உலகில் பாராட்டி நிற்பதற்கோ – தாயு:43 683/1
மேல்

பாடிய (1)

பாடிய நான் கண்டாய் பதியே பராபரமே – தாயு:33 565/4
மேல்

பாடியும் (1)

கண் ஆர நீர் மல்கி உள்ளம் நெக்குருகாத கள்ளனேன் ஆனாலுமோ கை குவித்து ஆடியும் பாடியும் விடாமலே கண் பனி தாரை காட்டி – தாயு:10 93/1
மேல்

பாடினேன் (1)

அரும் பொனே மணியே என் அன்பே என் அன்பான அறிவே என் அறிவில் ஊறும் ஆனந்த_வெள்ளமே என்றுஎன்று பாடினேன் ஆடினேன் நாடிநாடி – தாயு:9 83/1
மேல்

பாடு (2)

கண்டிலையோ யான் படும் பாடு எல்லாம் மூன்று கண் இருந்தும் தெரியாதோ கசிந்து உள் அன்பு ஆர் – தாயு:42 627/1
விஞ்சு புல பாடு அனைத்தும் வீறு துன்பம்செய்ய வந்த – தாயு:43 900/1
மேல்

பாடுகின்ற (1)

பாடுகின்ற பனுவலோர்கள் தேடுகின்ற செல்வமே – தாயு:53 1416/1
மேல்

பாடுகின்றேன் (1)

கற்பனையா பாடுகின்றேன் கண்ணீரும்_கம்பலையும் – தாயு:43 976/1
மேல்

பாடுவதும் (1)

ஆடுவதும் பாடுவதும் ஆனந்தமாக நின்னை – தாயு:43 776/1
மேல்

பாண்ட (1)

சோற்று பசையினை மு_மல பாண்ட தொடக்கறையை – தாயு:27 418/2
மேல்

பாண்டமான (1)

வஞ்சனை அழுக்காறு ஆதி வைத்திடும் பாண்டமான
நெஞ்சனை வலிதின் மேன்மேல் நெக்குநெக்குருகப்பண்ணி – தாயு:21 295/1,2
மேல்

பாண்டமோ (1)

வந்தது ஓர் வாழ்வும் ஓர் இந்த்ரஜால கோலம் வஞ்சனை பொறாமை லோபம் வைத்த மனமாம் கிருமி சேர்ந்த மல_பாண்டமோ வஞ்சனை இலாத கனவே – தாயு:12 113/2
மேல்

பாத்திரத்துக்கு (1)

கெட அன்றோ ஓர் பாத்திரத்துக்கு ஆடல் அல்லால் – தாயு:28 521/3
மேல்

பாத (5)

பாத நித்திய பரம்பர நிரந்தர பரம – தாயு:25 366/2
அழுந்தாத வண்ணம் நின் பாத புணை தந்து அருள்வது என்றோ – தாயு:27 407/2
வெள்ள செம் பாத புணையே அல்லால் கதி வேறு இல்லையே – தாயு:27 441/4
பாதக சிந்தை பெற்ற பதகன் உன் பாத நீழல் – தாயு:36 573/2
பாத புணை இணையை பற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1190/2
மேல்

பாதக (2)

பாதக கருங்கல் மனம் கோயிலா பரிந்து – தாயு:25 382/2
பாதக சிந்தை பெற்ற பதகன் உன் பாத நீழல் – தாயு:36 573/2
மேல்

பாதகத்தவரும் (1)

பன்முக சமய நெறி படைத்தவரும் யாங்களே கடவுள் என்றிடும் பாதகத்தவரும் வாத தர்க்கமிடு படிறரும் தலை வணங்கிட – தாயு:13 131/1
மேல்

பாதம் (2)

பாவியேன் இனி என் செய்கேன் பரமனே பணிந்து உன் பாதம்
சேவியேன் விழி நீர் மல்க சிவசிவ என்று தேம்பி – தாயு:22 303/1,2
தன் பாதம் சென்னியில் வைத்தான் என்னை தான் அறிந்தேன் மனம்-தான் இறந்தேனே – தாயு:54 1430/2
மேல்

பாதமே (2)

பாதமே கதி மற்று இலை பாழ் நெஞ்சே – தாயு:18 243/4
கற்றை வார் சடை கண்_நுதல் பாதமே
பற்று-அது ஆயில் பர சுகம் பற்றுமே – தாயு:18 270/3,4
மேல்

பாதரசம் (1)

பார் அணங்கோடு சுழல் நெஞ்சமாகிய பாதரசம்
மாரணமாய்விடும் எண்_சித்தி முத்தியும் வாய்ந்திடுமே – தாயு:27 425/3,4
மேல்

பாதரசமாய் (1)

பாதரசமாய் மனது சஞ்சலப்படும் அலால் பரம சுக நிஷ்டை பெறுமோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 9/4
மேல்

பாதனே (1)

தில்லையில் திகழும் திரு_பாதனே – தாயு:18 240/4
மேல்

பாதி (2)

திங்கள் பாதி திகழ பணி அணி – தாயு:18 225/3
பாதி விருத்தத்தால் இ பார் விருத்தம் ஆக உண்மை – தாயு:45 1098/1
மேல்

பாதுகாத்து (1)

பந்தம்_அற மெய்ஞ்ஞான தீரமும் தந்து எனை பாதுகாத்து அருள்செய்குவாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 8/4
மேல்

பாதை (1)

மயக்குறும் என் மனம் அணுகா பாதை காட்டி வல்_வினையை பறித்தனையே வாழ்வே நான் என் – தாயு:42 629/1
மேல்

பாப (1)

பாகமோ பெற உனை பாட அறியேன் மலபரிபாகம் வரவும் மனதில் பண்புமோ சற்றும் இலை நியமமோ செய்திட பாவியேன் பாப ரூப – தாயு:37 583/1
மேல்

பாம்பு (2)

குத்திர மெய் புற்றகத்து குண்டலி பாம்பு ஒன்று ஆட்டும் – தாயு:45 1231/1
வாதனையோடு ஆடும் மன பாம்பு மாய ஒரு – தாயு:49 1380/1
மேல்

பாமாலைக்கே (1)

பல் மாலை திரள் இருக்க தமை உணர்ந்தோர் பாமாலைக்கே நீ-தான் பக்ஷம் என்று – தாயு:16 175/1
மேல்

பாய் (3)

படருறு சோதி கருணை அம் கடலே பாய் இருள் படுகரில் கிடக்க – தாயு:19 273/3
பாய் அ புலி முனம் மான் கன்றை காட்டும்படி அகில – தாயு:27 401/1
அருள் பாய் நமக்காக ஆள வந்தார் பொன் அடி கீழ் – தாயு:29 545/3
மேல்

பாய்ச்சல்செய்து (1)

சோற்றை சுமத்தி நீ பந்தித்து வைக்க துருத்திக்குள் மது என்னவே துள்ளி துடித்து என்ன பேறு பெற்றேன் அருள் தோய நீ பாய்ச்சல்செய்து
நாற்றை பதித்தது என ஞானமாம் பயிர்-அதனை நாட்டி புல பட்டியும் நமனான தீப்பூடும் அணுகாமல் முன் நின்று நாடு சிவபோகமான – தாயு:39 587/2,3
மேல்

பாய்ச்சி (1)

பார் ஆதி அறியாத மோனமாம் வித்தை பதித்து அன்பு நீர் ஆகவே பாய்ச்சி அது பயிராகும் மட்டும் மா மாயை வன் பறவை அணுகாத வண்ணம் – தாயு:8 72/2
மேல்

பாய்ச்சிடும் (1)

கண் ஆறு பாய்ச்சிடும் என் காதல்_வெள்ளம் கண்டிலையோ – தாயு:33 564/2
மேல்

பாய்ந்ததுவே (1)

பவமே விளைக்க என்றோ வெளிமான் என பாய்ந்ததுவே – தாயு:27 410/4
மேல்

பாய (1)

சிங்கத்தை ஒத்து என்னை பாய வரு வினையினை சேதிக்க வரு சிம்புளே சிந்தாகுல திமிரம் அகல வரு பானுவே தீனனேன் கரையேறவே – தாயு:6 56/3
மேல்

பாயாதோ (2)

பாயாதோ நானும் பயிராய் பிழையேனோ – தாயு:29 548/2
பாயாதோ ஐயா பகராய் பராபரமே – தாயு:43 664/2
மேல்

பார் (34)

பார் ஆதி அறியாத மோனமே இடைவிடா பற்றாக நிற்க அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 11/4
பார் ஆதி அறியாத மோனமாம் வித்தை பதித்து அன்பு நீர் ஆகவே பாய்ச்சி அது பயிராகும் மட்டும் மா மாயை வன் பறவை அணுகாத வண்ணம் – தாயு:8 72/2
பார் ஆதி அண்டங்கள் அத்தனையும் வைக்கின்ற பரவெளியின் உண்மை காட்டி பற்று மன_வெளி காட்டி மன_வெளியினில் தோய்ந்த பாவியேன் பரிசு காட்டி – தாயு:9 84/1
பார் ஆதி ககன பரப்பும் உண்டோ என்று படர் வெளியது ஆகி எழுநா பரிதி மதி காணா சுயஞ்சோதியாய் அண்ட பகிரண்ட உயிர் எவைக்கும் – தாயு:11 100/1
பார் ஆதி விண் அனைத்தும் நீயா சிந்தை பரிய மடலா எழுதி பார்த்துப்பார்த்து – தாயு:14 155/1
பார் ஆதி அண்டம் எலாம் படர் கானல்_சலம் போல் பார்த்தனையே முடிவில் நின்று பார் எது-தான் நின்றது – தாயு:17 189/1
பார் ஆதி அண்டம் எலாம் படர் கானல்_சலம் போல் பார்த்தனையே முடிவில் நின்று பார் எது-தான் நின்றது – தாயு:17 189/1
பார் ஆதியாக எழு மண்டலத்தில் நின் மகிமை பகரலாமோ – தாயு:26 400/4
பார் அணங்கோடு சுழல் நெஞ்சமாகிய பாதரசம் – தாயு:27 425/3
உற்று பார் மோனன் ஒரு சொல்லே உண்மை நன்றாய் – தாயு:28 460/3
பற்றி பார் மற்ற எல்லாம் பாழ் – தாயு:28 460/4
பார் ஆதி பூதம் எல்லாம் பார்க்குங்கால் அ பரத்தின் – தாயு:28 461/1
பார்த்த இடம் எல்லாம் நீ பார் – தாயு:28 515/4
பார் அனைத்தும் பொய் எனவே பட்டினத்துப்பிள்ளையை போல் – தாயு:28 516/1
பார் ஆதி வைத்த பதியே பராபரமே – தாயு:33 560/4
பாழாகாவாறு முகம் பார் நீ பராபரமே – தாயு:33 561/4
பத்தி நெறிக்கேனும் முகம் பார் நீ பராபரமே – தாயு:33 567/4
பார் ஆதி ஆண்ட பதியே பராபரமே – தாயு:43 636/2
பட முடியாது என்னை முகம் பார் நீ பராபரமே – தாயு:43 667/2
பற்ற நொந்தேன் என்னை முகம் பார் நீ பராபரமே – தாயு:43 693/2
பார் ஆதி நீயா பகர்ந்தால் அகம் எனவும் – தாயு:43 739/1
பார் அறியாது அண்ட பரப்பு அறியாது உன் பெருமை – தாயு:43 748/1
பார் ஏறாது ஆண்டானை பற்றுவனோ பைங்கிளியே – தாயு:44 1053/2
பார் ஆசை அற்று இறையை பற்று அற நான் பற்றி நின்ற – தாயு:44 1063/1
பைம் பயிரை நாடும் உன் போல் பார் பூத்த பைங்கொடி சேர் – தாயு:44 1065/1
பாதி விருத்தத்தால் இ பார் விருத்தம் ஆக உண்மை – தாயு:45 1098/1
நில்லாமல் நின்று அருளை நேரே பார் என்ற ஒரு – தாயு:45 1104/1
தாங்கிய பார் விண் ஆதி தானே ஞானாக்கினியாய் – தாயு:45 1309/1
பாராமல் பார் என நீ பக்ஷம்வைத்தால் ஆகாதோ – தாயு:47 1368/2
தள் என சொல்லி என் ஐயன் என்னை தான் ஆக்கிக்கொண்ட சமர்த்தை பார் தோழி – தாயு:54 1428/2
பார் ஆதி பூதம் நீ அல்லை உன்னி பார் இந்திரியம் கரணம் நீ அல்லை – தாயு:54 1429/1
பார் ஆதி பூதம் நீ அல்லை உன்னி பார் இந்திரியம் கரணம் நீ அல்லை – தாயு:54 1429/1
அருளால் எவையும் பார் என்றான் அத்தை அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன் – தாயு:54 1433/1
பார் முதல் அண்ட பரப்பு எலாம் நிறுவி – தாயு:55 1451/8
மேல்

பார்-மினோ (2)

பாடாது பாடி படித்து அளவு_இல் சமயமும் பஞ்சுபடு சொல்லன் இவனை பார்-மினோ பார்-மினோ என்று சபை கூடவும் பரமார்த்தம் இது என்னவே – தாயு:12 115/1
பாடாது பாடி படித்து அளவு_இல் சமயமும் பஞ்சுபடு சொல்லன் இவனை பார்-மினோ பார்-மினோ என்று சபை கூடவும் பரமார்த்தம் இது என்னவே – தாயு:12 115/1
மேல்

பார்க்க (3)

நாதன் ஒரு தரம் உலகம் பார்க்க இச்சை நண்ணானோ என்றுஎன்றே நானா ஆகி – தாயு:14 163/3
பாராயோ அ உருவை பார்க்க நிறைவாய்விடுமே – தாயு:29 547/4
வான் அந்தம் மண்ணின் அந்தம் வைத்துவைத்து பார்க்க எனக்கு – தாயு:43 648/1
மேல்

பார்க்கவொட்டாமல் (1)

திரும்பி பார்க்கவொட்டாமல் திரு_அடி – தாயு:18 217/2
மேல்

பார்க்கில் (2)

பாராதி-தனில் உள்ள செயல் எலாம் முடிவிலே பார்க்கில் நின் செயல் அல்லவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 6/4
இறப்பும் பிறப்பும் பொருந்த எனக்கு எவ்வணம் வந்தது என்று எண்ணி யான் பார்க்கில்
மறப்பும் நினைப்புமாய் நின்ற வஞ்ச மாயா மனத்தால் வளர்ந்தது தோழி – தாயு:54 1431/1,2
மேல்

பார்க்கின் (6)

அண்ட பகிரண்டமும் மாயா விகாரமே அ மாயை இல்லாமையே ஆம் என்னும் அறிவும் உண்டு அப்பாலும் அறிகின்ற அறிவினனை அறிந்து பார்க்கின்
எண் திசை விளக்கும் ஒரு தெய்வ அருள் அல்லாமல் இல்லை எனும் நினைவு உண்டு இங்கு யான் எனது அற துரிய நிறைவாகி நிற்பதே இன்பம் எனும் அன்பும் உண்டு – தாயு:2 7/1,2
நெறி பார்க்கின் நின்னை அன்றி அகிலம் வேறோ நிலம் நீர் தீ கால் வானும் நீ அலாத – தாயு:42 608/1
வேறுபடும் சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின் விளங்கு பரம்பொருளே நின் விளையாட்டு அல்லால் – தாயு:42 630/1
பார்க்கின் அண்ட பிண்ட பரப்பு அனைத்தும் நின் செயலே – தாயு:43 752/1
பார்க்கின் அன்பர்க்கு என்ன பயம் காண் பராபரமே – தாயு:43 763/2
பார்க்கின் அணு போல் கிடந்த பாழ்ம் சிந்தை மாளின் என்னை – தாயு:43 998/1
மேல்

பார்க்கின்ற (1)

பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே பாவித்து இறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அ பனி மலர் எடுக்க மனமும் – தாயு:6 52/1
மேல்

பார்க்கினும் (1)

என்னது யான் என்னல் அற்றோர் எங்கிருந்து பார்க்கினும் நின் – தாயு:43 851/1
மேல்

பார்க்குங்கால் (1)

பார் ஆதி பூதம் எல்லாம் பார்க்குங்கால் அ பரத்தின் – தாயு:28 461/1
மேல்

பார்க்கும் (12)

பாசாடவிக்குளே செல்லாதவர்க்கு அருள் பழுத்து ஒழுகு தேவதருவே பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 4/4
பரிவாய் எனக்கு நீ அறிவிக்க வந்ததே பரிபாக காலம் அலவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 5/4
பாராதி-தனில் உள்ள செயல் எலாம் முடிவிலே பார்க்கில் நின் செயல் அல்லவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 6/4
பண்டை உள கர்மமே கர்த்தா எனும் பெயர் பக்ஷம் நான் இச்சிப்பனோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 7/4
பந்தம்_அற மெய்ஞ்ஞான தீரமும் தந்து எனை பாதுகாத்து அருள்செய்குவாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 8/4
பாதரசமாய் மனது சஞ்சலப்படும் அலால் பரம சுக நிஷ்டை பெறுமோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 9/4
பந்தமானது தந்த வினையையே நோவனோ பரமார்த்தம் ஏதும் அறியேன் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 10/4
பார் ஆதி அறியாத மோனமே இடைவிடா பற்றாக நிற்க அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 11/4
பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 12/4
பாச_கடற்குளே வீழாமல் மனது அற்ற பரிசுத்த நிலையை அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 13/4
பார்க்கும் இடம் எல்லாம் என் பார்வை பராபரமே – தாயு:43 839/2
பார்க்கும் இடத்து இதன் மேல் பற்று அறுவது எந்நாளோ – தாயு:45 1117/2
மேல்

பார்த்த (5)

பட்டப்பகல் பொழுதை இருள் என்ற மருளர்-தம் பக்ஷமோ எனது பக்ஷம் பார்த்த இடம் எங்கணும் கோத்த நிலை குலையாது பரமவெளியாக ஒரு சொல் – தாயு:6 50/1
பல் மார்க்க நெறியினிலும் கண்டதில்லை பகர்வு அரிய தில்லை மன்றுள் பார்த்த போது அங்கு – தாயு:14 143/2
பார்த்த இடம் எல்லாம் நீ பார் – தாயு:28 515/4
பார்த்த இடம் எல்லாம் பரவெளியாய் தோன்ற ஒரு – தாயு:43 647/1
பற்றிய பற்று அற உள்ளே தன்னை பற்ற சொன்னான் பற்றி பார்த்த இடத்தே – தாயு:54 1423/1
மேல்

பார்த்தவன் (1)

பார்த்தவன் நான் என்னை முகம் பாராய் பராபரமே – தாயு:43 666/2
மேல்

பார்த்தன (1)

பார்த்தன எல்லாம் அழியும் அதனால் சுட்டி பாராதே பார்த்திருக்க பரமே மோன – தாயு:42 621/1
மேல்

பார்த்தனையே (1)

பார் ஆதி அண்டம் எலாம் படர் கானல்_சலம் போல் பார்த்தனையே முடிவில் நின்று பார் எது-தான் நின்றது – தாயு:17 189/1
மேல்

பார்த்தாயோ (1)

பண்ணியது எம் அண்ணல் மயல் பார்த்தாயோ பைங்கிளியே – தாயு:44 1076/2
மேல்

பார்த்தால் (1)

சீரை பார்த்தால் கருணை செய்வாரோ பைங்கிளியே – தாயு:44 1033/2
மேல்

பார்த்தாலும் (3)

எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அ உயிராய் – தாயு:43 719/1
என் போல் எளியவரும் எங்கெங்கும் பார்த்தாலும்
உன் போல் வலியவரும் உண்டோ பராபரமே – தாயு:43 751/1,2
எங்கெங்கும் பார்த்தாலும் இன்பு உருவாய் நீக்கம் இன்றி – தாயு:45 1207/1
மேல்

பார்த்திருக்க (1)

பார்த்தன எல்லாம் அழியும் அதனால் சுட்டி பாராதே பார்த்திருக்க பரமே மோன – தாயு:42 621/1
மேல்

பார்த்திருந்தால் (2)

பாராமல் உள்ளபடி பார்த்திருந்தால் வாராதோ – தாயு:28 517/2
வந்ததையும் போனவையும் வைத்துவைத்து பார்த்திருந்தால்
சிந்தை இதம் அகிதம் சேரும் பராபரமே – தாயு:43 808/1,2
மேல்

பார்த்திலாயோ (1)

பற்றுமோ சற்றும் இல்லை ஐயோஐயோ பாவி படும் கண் கலக்கம் பார்த்திலாயோ – தாயு:42 620/2
மேல்

பார்த்து (6)

பாச இருள் தன் நிழல் என சுளித்து ஆர்த்து மேல் பார்த்து பரந்த மனதை பாரித்த கவளமாய் பூரிக்க உண்டு முகபடாம் அன்ன மாயை நூறி – தாயு:5 37/2
பழி பழியாம் நல் அருளால் பார்த்து ஓர் மொழி உனக்கே – தாயு:28 515/2
பாராயோ என்னை முகம் பார்த்து ஒரு கால் என் கவலை – தாயு:43 663/1
வெய்ய புவி பார்த்து விழித்திருந்த அல்லல் அற – தாயு:45 1188/1
பாராமல் பார்த்து பழகும் நாள் எந்நாளோ – தாயு:45 1295/2
பண்டும் இன்றும் நின்ற என்னை பார்த்து இரங்க வேண்டாவோ – தாயு:49 1379/2
மேல்

பார்த்துப்பார்த்து (1)

பார் ஆதி விண் அனைத்தும் நீயா சிந்தை பரிய மடலா எழுதி பார்த்துப்பார்த்து
வாராயோ என் ப்ராணநாதா என்பேன் வளைத்துவளைத்து எனை நீயா வைத்துக்கொண்டு – தாயு:14 155/1,2
மேல்

பார்த்தும் (1)

பாவி படும் கண் கலக்கம் பார்த்தும் இரங்காது இருந்தால் – தாயு:43 896/1
மேல்

பார்த்தேன் (2)

அருளால் எவையும் பார் என்றான் அத்தை அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன்
இருளான பொருள் கண்டது அல்லால் கண்ட என்னையும் கண்டிலன் என்னேடி தோழி – தாயு:54 1433/1,2
களையை களைந்து பின் பார்த்தேன் ஐயன் களை அன்றி வேறு ஒன்றும் கண்டிலன் தோழி – தாயு:54 1435/2
மேல்

பார்ப்பது (3)

ஒப்ப விரித்து உரைப்பர் இங்ஙன் பொய் மெய் என்ன ஒன்று இலை ஒன்று என பார்ப்பது ஒவ்வாது ஆர்க்கும் – தாயு:14 140/3
பார்ப்பது அல்லால் வேறும் ஒன்றை பாரேன் பராபரமே – தாயு:43 838/2
பரமா பரவெளியா பார்ப்பது அல்லால் மற்று எவர்க்கும் – தாயு:43 994/1
மேல்

பார்ப்பதே (1)

பாராது பார்ப்பதே ஏது சாதனம் அற்ற பரம அநுபூதி வாய்க்கும் பண்பு என்று உணர்த்தியது பாராமல் அ நிலை பதிந்த நின் பழ அடியார்-தம் – தாயு:4 34/3
மேல்

பார்ப்பவரை (1)

வைத்துவைத்து பார்ப்பவரை தான் ஆக எந்நாளும் வளர்த்து காக்கும் – தாயு:26 396/3
மேல்

பார்வை (3)

குரு_பார்வை அல்லாமல் கூட கிடைத்திடுமோ – தாயு:29 545/2
பாழ் வலையை கிழித்து உதறி செயல் போய் வாழ பரமே நின் ஆனந்த பார்வை எங்கே – தாயு:42 611/2
பார்க்கும் இடம் எல்லாம் என் பார்வை பராபரமே – தாயு:43 839/2
மேல்

பார (2)

முருந்து இள நகையார் பார முலை முகம் தழுவி செவ் வாய் – தாயு:36 572/1
பட்டவர்த்தனர் பராவு சக்ரதர பாக்யமான சுபயோகமும் பார காவிய கவித்வ நான்மறை பராயணம்செய் மதியூகமும் – தாயு:38 586/3
மேல்

பாரகமும் (1)

பாரகமும் விண்ணகமும் பற்றாக நிற்பது அருள் – தாயு:43 737/1
மேல்

பாரத்தனம் (1)

பாரத்தனம் பேசல் பண்போ பராபரமே – தாயு:43 906/2
மேல்

பாரதத்தினும் (1)

பத்தியாய் நெடிது நம்பும் என்னை ஒரு மையல் தந்து அகில மாயையை பாருபார் என நடத்த வந்தது என் பாரதத்தினும் இது உள்ளதோ – தாயு:13 130/2
மேல்

பாரம் (2)

நேராக நின்று விளை போகம் புசித்து உய்ந்த நின் அன்பர் கூட்டம் எய்த நினைவின்படிக்கு நீ முன் நின்று காப்பதே நின் அருள் பாரம் என்றும் – தாயு:8 72/3
பாங்கு பெற செய்வது உன் மேல் பாரம் பராபரமே – தாயு:43 954/2
மேல்

பாராட்டி (1)

பாடி படித்து உலகில் பாராட்டி நிற்பதற்கோ – தாயு:43 683/1
மேல்

பாராட்டியானாலும் (1)

பாசம் போய் நின்றவர் போல் பாராட்டியானாலும்
மோசம்போனேன் நான் முறையோ பராபரமே – தாயு:43 676/1,2
மேல்

பாராதது (1)

பாராதது என்னோ பகராய் பராபரமே – தாயு:43 870/2
மேல்

பாராதி-தனில் (1)

பாராதி-தனில் உள்ள செயல் எலாம் முடிவிலே பார்க்கில் நின் செயல் அல்லவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 6/4
மேல்

பாராது (1)

பாராது பார்ப்பதே ஏது சாதனம் அற்ற பரம அநுபூதி வாய்க்கும் பண்பு என்று உணர்த்தியது பாராமல் அ நிலை பதிந்த நின் பழ அடியார்-தம் – தாயு:4 34/3
மேல்

பாராதே (2)

பார்த்தன எல்லாம் அழியும் அதனால் சுட்டி பாராதே பார்த்திருக்க பரமே மோன – தாயு:42 621/1
பாராதே நின்று பதையாதே சும்மா-தான் – தாயு:49 1384/1
மேல்

பாராமல் (7)

பாராது பார்ப்பதே ஏது சாதனம் அற்ற பரம அநுபூதி வாய்க்கும் பண்பு என்று உணர்த்தியது பாராமல் அ நிலை பதிந்த நின் பழ அடியார்-தம் – தாயு:4 34/3
வாழ்வு அனைத்தும் மயக்கம் என தேர்ந்தேன் தேர்ந்தவாறே நான் அப்பால் ஓர் வழி பாராமல்
தாழ்வு பெற்று இங்கு இருந்தேன் ஈது என்ன மாயம் தடையுற்றால் மேல்_கதியும் தடை-அது ஆமே – தாயு:16 178/1,2
பாராமல் உள்ளபடி பார்த்திருந்தால் வாராதோ – தாயு:28 517/2
ஊரை பாராமல் எனக்கு உள்ளகத்து நாயகனார் – தாயு:44 1033/1
பாச பந்தம் செய்த துன்பம் பாராமல் எம் இறைவர் – தாயு:44 1062/1
பாராமல் பார்த்து பழகும் நாள் எந்நாளோ – தாயு:45 1295/2
பாராமல் பார் என நீ பக்ஷம்வைத்தால் ஆகாதோ – தாயு:47 1368/2
மேல்

பாராய் (3)

பாராய் உனை கொல்லுவேன் வெல்லுவேன் அருள் பாங்கு கொண்டே – தாயு:27 450/4
பேயேற்கும் தனக்கென ஓர் அன்பும் உண்டோ பெம்மானே இன்னம் அன்பு பெருக பாராய் – தாயு:41 597/2
பார்த்தவன் நான் என்னை முகம் பாராய் பராபரமே – தாயு:43 666/2
மேல்

பாராயண (1)

பாகத்தினால் கவிதை பாடி படிக்கவோ பத்தி நெறி இல்லை வேத பாராயண பனுவல் மூவர் செய் பனுவல்-அது பகரவோ இசையும் இல்லை – தாயு:11 102/1
மேல்

பாராயோ (4)

பாராயோ நெஞ்சே பகர் – தாயு:28 470/4
பாராயோ அ உருவை பார்க்க நிறைவாய்விடுமே – தாயு:29 547/4
பாராயோ என் துயரம் எல்லாம் ஐயா பகரும் முன்னே தெரியாதோ பாவியேன் முன் – தாயு:41 598/1
பாராயோ என்னை முகம் பார்த்து ஒரு கால் என் கவலை – தாயு:43 663/1
மேல்

பாரிசத்திலும் (1)

பாட்டு அளி துதைந்து வளர் கற்பக நல் நீழலை பாரினிடை வரவழைப்பீர் பத்ம_நிதி சங்க_நிதி இரு பாரிசத்திலும் பணிசெய்யும் தொழிலாளர் போல் – தாயு:7 58/1
மேல்

பாரித்த (1)

பாச இருள் தன் நிழல் என சுளித்து ஆர்த்து மேல் பார்த்து பரந்த மனதை பாரித்த கவளமாய் பூரிக்க உண்டு முகபடாம் அன்ன மாயை நூறி – தாயு:5 37/2
மேல்

பாரில் (2)

பாரில் கண்டவை யாவும் பருகினை – தாயு:18 223/2
படையாத என்னை படைத்து இந்த பாரில் படர்ந்த வினை – தாயு:27 455/2
மேல்

பாரினிடை (1)

பாட்டு அளி துதைந்து வளர் கற்பக நல் நீழலை பாரினிடை வரவழைப்பீர் பத்ம_நிதி சங்க_நிதி இரு பாரிசத்திலும் பணிசெய்யும் தொழிலாளர் போல் – தாயு:7 58/1
மேல்

பாரீர் (1)

பாரீர் ஒரு சொற்படியே அனுபவத்தை – தாயு:28 469/3
மேல்

பாருபார் (1)

பத்தியாய் நெடிது நம்பும் என்னை ஒரு மையல் தந்து அகில மாயையை பாருபார் என நடத்த வந்தது என் பாரதத்தினும் இது உள்ளதோ – தாயு:13 130/2
மேல்

பாரும் (1)

சேணும் பாரும் திரிபவர் காண்பரோ – தாயு:18 198/2
மேல்

பாரே (1)

கடம் பெறு மா மத யானை என்னவும் நீ பாச கட்டான நிகளபந்த கட்டு அவிழ பாரே – தாயு:17 188/4
மேல்

பாரேன் (3)

கதி கண்டு கொள்ளவும் நின் அருள்கூர் இந்த கதி அன்றி உறங்கேன் மேல் கருமம் பாரேன் – தாயு:14 154/4
பாரேன் சுகமும் படைப்பேன் பராபரமே – தாயு:43 734/2
பார்ப்பது அல்லால் வேறும் ஒன்றை பாரேன் பராபரமே – தாயு:43 838/2
மேல்

பாரொடு (1)

பாரொடு நல் நீர் ஆதி ஒன்றொடு ஒன்றாகவே பற்றி லயம் ஆம் போதினில் பரவெளியின் மருவுவீர் கற்பாந்த வெள்ளம் பரந்திடின் அதற்கும் ஈதே – தாயு:7 59/1
மேல்

பால் (5)

தேன் ஆகி பால் ஆகி கனியாய் கன்னல் செழும் பாகாய் கற்கண்டாய் திகழ்ந்த ஒன்றே – தாயு:16 179/4
பால் நலம் கவர்ந்த தீம் சொல் பச்சிளம் கிள்ளை காண – தாயு:21 299/3
பால் உடையாய் செம் கண் பணியாய் என் சென்னியின் மேல் – தாயு:28 507/3
தெட்டிலே வலிய மட மாதர் வாய் வெட்டிலே சிற்றிடையிலே நடையிலே சேல் ஒத்த விழியிலே பால் ஒத்த மொழியிலே சிறுபிறை நுதல் கீற்றிலே – தாயு:37 579/1
விண்ணவர்-தம் பால் அமுதம் வேப்பங்காய் ஆக என்-பால் – தாயு:44 1076/1
மேல்

பாலம் (1)

ஏறு மயிர் பாலம் உணர்வு இந்த விடயங்கள் நெருப்பு – தாயு:43 809/1
மேல்

பாலர் (1)

மத்தர் பேயரொடு பாலர் தன்மை-அது மருவியே துரிய வடிவமாய் மன்னு தேசமொடு காலம் ஆதியை மறந்து நின் அடியர் அடியிலே – தாயு:13 130/1
மேல்

பாலருடன் (1)

படி முழுதும் விண் முழுதும் தந்தாலும் களியா பாலருடன் உன்மத்தர் பசாசர் குணம் வருமே – தாயு:17 191/4
மேல்

பாலரொடு (1)

பாலரொடு பேயர் பித்தர் பான்மை என நிற்பதுவே – தாயு:43 778/1
மேல்

பாலன் (1)

பாலன் பசிக்கு இரங்கி பாற்கடலை ஞாலம் மெச்ச – தாயு:28 502/2
மேல்

பாலிப்பது (2)

பள்ளமே வீழாது எனை கரையேற்றி பாலிப்பது உன் அருள் பரமே – தாயு:19 275/4
பண்ணவர்கள் பத்தர் அருள் பாலிப்பது எந்நாளோ – தாயு:45 1115/2
மேல்

பாலைவனத்தில் (1)

பாலைவனத்தில் விட்ட பாவம் என்னோ பைங்கிளியே – தாயு:44 1070/2
மேல்

பாலொடு (1)

பாலொடு நீர் போல் கலந்து பண்பு உறுவது எந்நாளோ – தாயு:45 1293/2
மேல்

பாலோ (1)

கற்கண்டோ தேனோ கனி ரசமோ பாலோ என் – தாயு:28 466/1
மேல்

பாவங்கள் (1)

புண்ணிய பாவங்கள் பொருந்தா மெய் அன்பர் எல்லாம் – தாயு:45 1227/1
மேல்

பாவம் (5)

என் போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள் இருவர்களில் ஒருவர் உண்டோ என் செய்கேன் அம்மம்ம என் பாவம் என் கொடுமை ஏது என்று எடுத்து மொழிவேன் – தாயு:12 120/2
பாழில் திரிவது என்ன பாவம் பராபரமே – தாயு:43 671/2
பாவம் என்றால் ஏதும் பயம் இன்றி செய்ய இந்த – தாயு:43 986/1
பாலைவனத்தில் விட்ட பாவம் என்னோ பைங்கிளியே – தாயு:44 1070/2
வீண் பாவம் போய் அதுவாய் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1290/2
மேல்

பாவமொடு (1)

பெத்தமொடு முத்தியும் பாவமொடு அபாவமும் பேதமொடு அபேத நிலையும் பெருமையொடு சிறுமையும் அருமையுடன் எளிமையும் பெண்ணினுடன் ஆணும் மற்றும் – தாயு:8 71/2
மேல்

பாவனை (1)

நான் காண பாவனை செய் நாட்டம் பராபரமே – தாயு:43 735/2
மேல்

பாவனைசெய்யும் (1)

தீன் பொருளான அமிர்தமே நின்னை சிந்தையில் பாவனைசெய்யும்
நான் பொருள் ஆனேன் நல்ல நல் அரசே நான் இறந்திருப்பது நாட்டம் – தாயு:24 359/3,4
மேல்

பாவனையேனும் (1)

எல்லாம் உதவும் உனை ஒன்றில் பாவனையேனும் செய்து – தாயு:27 431/1
மேல்

பாவி (13)

ஆக்கை எனும் இடிகரையை மெய் என்ற பாவி நான் அத்துவித வாஞ்சை ஆதல் அரிய கொம்பில் தேனை முடவன் இச்சித்தபடி ஆகும் அறிவு அவிழ இன்பம் – தாயு:4 27/1
சிந்தை துயர் என்று ஒரு பாவி சினந்துசினந்து போர் முயங்க – தாயு:23 318/1
பொருளை பூவை பூவையரை பொருள் என்று எண்ணும் ஒரு பாவி
இருளை துரந்திட்டு ஒளி நெறியை என்னுள் பதிப்பது என்று-கொலோ – தாயு:23 319/1,2
பற்றுகின்றனர் எந்தை நின் அடியர் யான் பாவி
முற்றும் மாயமாம் சகத்தையே மெய் என முதல்-தான் – தாயு:25 389/2,3
துடியிட்ட வெம்_வினையை ஏவினான் பாவி நான் தொடரிட்ட தொழில்கள் எல்லாம் துண்டிட்ட சாண் கும்பியின் பொருட்டாய் அது உன் தொண்டர் பணி செய்வது என்றோ – தாயு:37 581/2
உண்டோ நீ படைத்த உயிர் திரளில் என் போல் ஒரு பாவி தேகாதி உலகம் பொய்யா – தாயு:42 618/1
பற்றுமோ சற்றும் இல்லை ஐயோஐயோ பாவி படும் கண் கலக்கம் பார்த்திலாயோ – தாயு:42 620/2
பாவி படும் கண் கலக்கம் பார்த்தும் இரங்காது இருந்தால் – தாயு:43 896/1
தன் செயலால் ஒன்றும் இலை தான் என்றால் நான் பாவி
நின் செயலாய் நில்லா நினைவு ஏன் பராபரமே – தாயு:43 922/1,2
உள்ளது உணரா உணர்வு_இலி மா பாவி என்றோ – தாயு:43 969/1
பாவி பஞ்ச வண்ணம் பகர்ந்து வா பைங்கிளியே – தாயு:44 1072/2
நான் என்ற பாவி தலை நாணும் நாள் எந்நாளோ – தாயு:45 1121/2
எள்ளத்தனையும் இரக்கம் இலா வன் பாவி
உள்ளத்தும் எந்தை உலவிடவும் காண்பேனோ – தாயு:46 1331/1,2
மேல்

பாவிக்க (1)

ஆதலின் எனக்கு இனி சரியை ஆதிகள் போதும் யாதொன்று பாவிக்க நான் அது ஆதலால் உன்னை நான் என்று பாவிக்கின் அத்துவித மார்க்கம் உறலாம் – தாயு:10 91/3
மேல்

பாவிக்கமாட்டேன் (1)

பாவிக்கமாட்டேன் பதியே பராபரமே – தாயு:33 563/4
மேல்

பாவிக்கின் (1)

ஆதலின் எனக்கு இனி சரியை ஆதிகள் போதும் யாதொன்று பாவிக்க நான் அது ஆதலால் உன்னை நான் என்று பாவிக்கின் அத்துவித மார்க்கம் உறலாம் – தாயு:10 91/3
மேல்

பாவிக்கு (1)

உன் பொன் அடி நீழல் கண்டால் அன்றி பாவிக்கு இந்த – தாயு:27 408/3
மேல்

பாவிக்கும் (2)

விழுகின்ற பாவிக்கும் தன் தாள் புணையை வியந்து அளித்தான் – தாயு:27 433/2
பாவிக்கும் கிட்டுமோ சொல்லாய் நீ பைங்கிளியே – தாயு:44 1027/2
மேல்

பாவித்திடினும் (1)

ஏது பாவித்திடினும் அது ஆகி வந்து அருள்செய் எந்தை நீ குறையும் உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 91/4
மேல்

பாவித்து (2)

பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே பாவித்து இறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அ பனி மலர் எடுக்க மனமும் – தாயு:6 52/1
பஞ்ச_சுத்தி செய்து நின்னை பாவித்து பூசைசெய்தால் – தாயு:43 789/1
மேல்

பாவித்தேன் (1)

என் நிறைவே பாவித்தேன் என்னே பராபரமே – தாயு:43 897/2
மேல்

பாவியேம் (1)

சிரம்_அளவு எழுப்பியும் நீரினிடை மூழ்கியும் தேகம் நமது அல்ல என்று சிற்சுக அபேக்ஷையாய் நின் அன்பர் யோகம் செலுத்தினார் யாம் பாவியேம்
விரவும் அறு_சுவையினோடு வேண்டுவ புசித்து அரையில் வேண்டுவ எலாம் உடுத்து மேடை மாளிகை ஆதி வீட்டினிடை வைகியே வேறு ஒரு வருத்தம் இன்றி – தாயு:10 97/2,3
மேல்

பாவியேற்கு (2)

துர்_குண கடல் சோங்கு அன்ன பாவியேற்கு
என் குணம் கண்டு என் பெயர் சொல்வதே – தாயு:18 199/3,4
பவம் புரிந்திடும் பாவியேற்கு அருள் நிலை பதிய – தாயு:25 388/1
மேல்

பாவியேன் (7)

பார் ஆதி அண்டங்கள் அத்தனையும் வைக்கின்ற பரவெளியின் உண்மை காட்டி பற்று மன_வெளி காட்டி மன_வெளியினில் தோய்ந்த பாவியேன் பரிசு காட்டி – தாயு:9 84/1
பாவியேன் உள பான்மையை கண்டு நீ – தாயு:18 196/3
புன் மலத்து புழு அன்ன பாவியேன்
கல் மனத்தை கரைக்க கடவதே – தாயு:18 231/3,4
பாவியேன் இனி என் செய்கேன் பரமனே பணிந்து உன் பாதம் – தாயு:22 303/1
பாகமோ பெற உனை பாட அறியேன் மலபரிபாகம் வரவும் மனதில் பண்புமோ சற்றும் இலை நியமமோ செய்திட பாவியேன் பாப ரூப – தாயு:37 583/1
பாராயோ என் துயரம் எல்லாம் ஐயா பகரும் முன்னே தெரியாதோ பாவியேன் முன் – தாயு:41 598/1
தினையத்தனையும் தெளிவு அறியா பாவியேன்
நினைவில் பரம்பொருள் நீ நேர்பெறவும் காண்பேனோ – தாயு:46 1350/1,2
மேல்

பாவியேனே (1)

பவம்-தனை ஈட்டிஈட்டி பதைக்கின்றேன் பாவியேனே – தாயு:22 302/4
மேல்

பாவியை (3)

பாவியை நீ வா என்று அழைத்தால் ஆகாதோ – தாயு:20 288/2
உற்றுஉற்று நாடி உளம் மருண்ட பாவியை நீ – தாயு:43 681/1
பஞ்சாய் பறக்கும் நெஞ்ச பாவியை நீ கூவி ஐயா – தாயு:46 1335/1
மேல்

பாவை (3)

பவ்வ வெண் திரை கொழித்த தண் தரளம் விழி உதிர்ப்ப மொழி குளறியே பாடி ஆடி உள் உடைந்துடைந்து எழுது பாவை ஒத்து அசைதல் இன்றியே – தாயு:13 129/3
உடைந்துடைந்து எழுது சித்திர_பாவை ஒத்து நான் அசைவு_அற நிற்ப – தாயு:22 304/3
தோல்_பாவை நாலு ஆள் சுமை ஆகும் சீவன் ஒன்று இங்கு – தாயு:43 818/1
மேல்

பாவையர் (1)

பழுதுண்டு பாவையர் மோக விகார பரவையிடை – தாயு:27 433/1
மேல்

பாழ் (13)

வீறு அனைத்தும் இ நெறிக்கே என்ன என்னை மேவு என்ற வரத்தே பாழ் வெய்ய மாயை – தாயு:14 134/2
பாழ் அவதிப்பட எனக்கு முடியாது எல்லாம் படைத்து அளித்து துடைக்க வல்ல பரிசினானே – தாயு:16 178/4
மடம் பெறு பாழ் நெஞ்சாலே அஞ்சாதே நிராசை மன் இடமே இடம் அந்த மா நிலத்தே பொருளும் – தாயு:17 188/2
ஈன பாழ் கெட என்றும் இருப்பனே – தாயு:18 216/4
பாதமே கதி மற்று இலை பாழ் நெஞ்சே – தாயு:18 243/4
கள்ளமே துரக்கும் தூ வெளி பரப்பே கரு என கிடந்த பாழ் மாய – தாயு:19 275/3
பற்றி பார் மற்ற எல்லாம் பாழ் – தாயு:28 460/4
பாசத்துள் செல்லாதே பல்காலும் பாழ் நெஞ்சே – தாயு:29 543/4
அடைவு கெட்ட பாழ் மாயை ஆழியிலே இன்னம் அல்லல்பட – தாயு:33 559/3
மன்னை பொருள் எனவே வாழாமல் பாழ் நெஞ்சே – தாயு:34 569/2
பாழ் வலையை கிழித்து உதறி செயல் போய் வாழ பரமே நின் ஆனந்த பார்வை எங்கே – தாயு:42 611/2
கரக்கும் இயல்பு_உடையேன் பாழ் நெஞ்சம் எந்தாய் கரும்_தாதோ வல் உருக்கோ கரிய கல்லோ – தாயு:42 635/2
குடிகெடுக்கும் பாழ் மடிமை கூறு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1155/2
மேல்

பாழ்த்த (10)

கண்டன எலாம் அல்ல என்று கண்டனைசெய்து கருவி கரணங்கள் ஓய கண் மூடி ஒரு கணம் இருக்க என்றால் பாழ்த்த கர்மங்கள் போராடுதே – தாயு:2 7/3
ஆங்காரம் ஆன குல வேட வெம் பேய் பாழ்த்த ஆணவத்தினும் வலிது காண் அறிவினை மயக்கிடும் நடு அறியவொட்டாது யாதொன்று தொடினும் அதுவாய் – தாயு:5 45/1
பாழ்த்த சிந்தை பதகனும் உய்வனோ – தாயு:18 214/2
வாழ்வு என வயங்கி என்னை வசம்செய்து மருட்டும் பாழ்த்த
ஊழ்வினை பகுதி கெட்டு இங்கு உன்னையும் கிட்டுவேனோ – தாயு:21 297/1,2
சொல் ஏற பாழ்த்த துளை செவி கொண்டு அல் ஏறு – தாயு:28 474/2
வாதுக்கு வந்து எதிர்த்த மல்லரை போல் பாழ்த்த மனம் – தாயு:43 805/1
வாசக ஞானத்தால் வருமோ சுகம் பாழ்த்த
பூசல் என்று போமோ புகலாய் பராபரமே – தாயு:43 823/1,2
பட்டப்பகல் போல பாழ்த்த சிந்தை மாளின் எல்லாம் – தாயு:43 997/1
நித்திரையும் பாழ்த்த நினைவும் அற்று நிற்பதுவோ – தாயு:43 1021/1
தத்துவமாம் பாழ்த்த சட உருவை தான் சுமந்த – தாயு:45 1171/1
மேல்

பாழ்பட (1)

பல் முத்திரை சமயம் பாழ்பட கல்_ஆல் அடி வாழ் – தாயு:44 1060/1
மேல்

பாழ்ம் (6)

பேரிட்டு மெய் என்று பேசு பாழ்ம் பொய் உடல் பெலக்க விளை அமுதம் ஊட்டி பெரிய புவனத்தினிடை போக்கு_வரவு உறுகின்ற பெரிய விளையாட்டு அமைத்திட்டு – தாயு:4 31/2
தன் நிகர்_இல் லோபாதி பாழ்ம் பேய் பிடித்திட தரணி மிசை லோகாயதன் சமய நடை சாராமல் வேதாந்த சித்தாந்த சமரச சிவாநுபூதி – தாயு:5 40/3
பற்று வெகு விதம் ஆகி ஒன்றை விட்டு ஒன்றனை பற்றி உழல் கிருமி போல பாழ்ம் சிந்தை பெற்ற நான் வெளியாக நின் அருள் பகர்ந்தும் அறியேன் துவிதமோ – தாயு:5 46/1
கொல்லாமை எத்தனை குண_கேட்டை நீக்கும் அ குணம் ஒன்றும் ஒன்றிலேன்-பால் கோரம் எத்தனை பக்ஷபாதம் எத்தனை வன்_குணங்கள் எத்தனை கொடிய பாழ்ம்
கல்லாமை எத்தனை அகந்தை எத்தனை மன கள்ளம் எத்தனை உள்ள சற்காரியம் சொல்லிடினும் அறியாமை எத்தனை கதிக்கென்று அமைத்த அருளில் – தாயு:8 67/1,2
உய்யும்படிக்கு உன் திரு_கருணை ஒன்றை கொடுத்தால் உடையாய் பாழ்ம்
பொய்யும் அவாவும் அழுக்காறும் புடைபட்டு ஓடும் நல் நெறியாம் – தாயு:23 317/1,2
பார்க்கின் அணு போல் கிடந்த பாழ்ம் சிந்தை மாளின் என்னை – தாயு:43 998/1
மேல்

பாழாக்கி (1)

என் அறிவை எல்லாம் பாழாக்கி எனை பாழாக்கும் – தாயு:36 575/2
மேல்

பாழாக்கும் (1)

என் அறிவை எல்லாம் பாழாக்கி எனை பாழாக்கும்
திண்ணிய வினையை கொன்று சிறியனை உய்ய கொண்டால் – தாயு:36 575/2,3
மேல்

பாழாகாவாறு (1)

பாழாகாவாறு முகம் பார் நீ பராபரமே – தாயு:33 561/4
மேல்

பாழாகி (1)

பாழாகி அண்ட பரப்பை எலாம் வாய்மடுத்தும் – தாயு:29 544/1
மேல்

பாழாம் (1)

தர்க்கமிட்டு பாழாம் சமய குதர்க்கம் விட்டு – தாயு:45 1252/1
மேல்

பாழான (4)

பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 12/4
வைத்து எமை மயக்கி இரு கண் வலையை வீசியே மாயா விலாச மோக_வாரிதியில் ஆழ்த்திடும் பாழான சிற்றிடை மடந்தையர்கள் சிற்றின்பமோ – தாயு:10 98/2
பச்சென்ற கொங்கை பசப்பியர் பாழான மயல் – தாயு:45 1134/1
பாழான மாதர் மயல் பற்று ஒழிவது எந்நாளோ – தாயு:45 1137/2
மேல்

பாழில் (2)

எண்ணாதே பாழில் இறந்து பிறந்து உழலப்பண்ணாதே – தாயு:28 525/3
பாழில் திரிவது என்ன பாவம் பராபரமே – தாயு:43 671/2
மேல்

பாழிலே (1)

புன் புலால் மயிர் தோல் நரம்பு என்பு மொய்த்திடு புலை குடிலில் அருவருப்பு பொய் அல்லவே இதனை மெய் என்று நம்பி என் புந்தி செலுமோ பாழிலே
துன்பமாய் அலையவோ உலக நடை ஐய ஒரு சொப்பனத்திலும் வேண்டிலேன் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 80/3,4
மேல்

பாழை (1)

பாழை கடந்து பயிராவது எந்நாளோ – தாயு:45 1139/2
மேல்

பாளயமும் (1)

நாடும் நகரும் நிசான் நாட்டிய பாளயமும்
ஈடு செயுமோ முடிவில் எந்தாய் பராபரமே – தாயு:43 867/1,2
மேல்

பாற்கடலை (1)

பாலன் பசிக்கு இரங்கி பாற்கடலை ஞாலம் மெச்ச – தாயு:28 502/2
மேல்

பான்மை (7)

பகர்வன எல்லாம் ஆகி அல்லது ஆகி பரம் ஆகி சொல் அரிய பான்மை ஆகி – தாயு:3 25/2
பண் ஆரும் இசையினொடு பாடி படித்து அருள் பான்மை நெறி நின்று தவறா பக்குவ விசேஷராய் நெக்குநெக்குருகி பணிந்து எழுந்து இரு கை கூப்பி – தாயு:6 48/3
பாகம் மிக அருள ஒரு சத்தி வந்து பதித்தது என்-கொல் நான் எனும் அ பான்மை என்-கொல் – தாயு:14 145/4
சிந்தை இல்லை நான் என்னும் பான்மை இல்லை தேசம் இல்லை காலம் இல்லை திக்கும் இல்லை – தாயு:14 151/2
மர பான்மை நெஞ்சினன் யான் வேண்டுவ கேட்டு இரங்கு எனவே மெளனத்தோடு அந்தர – தாயு:24 323/3
பான்மை அருள் நிறைவில் இருப்பதுவோ பராபரமே சகச நிட்டை – தாயு:24 323/4
பாலரொடு பேயர் பித்தர் பான்மை என நிற்பதுவே – தாயு:43 778/1
மேல்

பான்மையினை (1)

பண் ஒளிக்கும் உள் ஒளியாம் பான்மையினை நண்ணிட உன் – தாயு:28 480/2
மேல்

பான்மையும் (1)

ஆணும் பெண்ணும் அது எனும் பான்மையும்
பூணும் கோலம் பொருந்தி உள் நிற்கவே – தாயு:18 198/3,4
மேல்

பான்மையேம் (1)

பந்தம் அறும் பளிங்கு அனைய சித்து நீ உன் பக்குவம் கண்டு அறிவிக்கும் பான்மையேம் யாம் – தாயு:14 149/4
மேல்

பான்மையை (1)

பாவியேன் உள பான்மையை கண்டு நீ – தாயு:18 196/3
மேல்

பானுவே (2)

சிங்கத்தை ஒத்து என்னை பாய வரு வினையினை சேதிக்க வரு சிம்புளே சிந்தாகுல திமிரம் அகல வரு பானுவே தீனனேன் கரையேறவே – தாயு:6 56/3
பரை எனும் கிரணம் சூழ்ந்த பானுவே நின்னை பற்றி – தாயு:24 335/3

மேல்