ந – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நக 1
நகர் 1
நகரும் 1
நகைசெய்யவே 1
நகைப்பு 1
நகையார் 1
நகையார்களொடு 1
நகையாவள் 1
நச்சென்று 1
நஞ்சமே 1
நஞ்சு 1
நஞ்சுக்கு 1
நட்டணையதா 1
நட்டநடுவே 1
நட்பாம் 1
நட்பினை 1
நட்பு 2
நட்பே 4
நட்பை 2
நடக்கலாம் 1
நடக்கவிட்டான் 1
நடக்கவொட்டாது 1
நடக்கினும் 1
நடக்கை 1
நடக்கையே 1
நடத்த 2
நடத்தலாம் 1
நடத்தி 1
நடத்திடும் 1
நடத்தினானே 1
நடத்தும் 3
நடத்தை 1
நடந்து 2
நடப்பன 1
நடப்பிக்கும் 1
நடம் 5
நடம்செய் 1
நடமாடும் 1
நடன 1
நடனம் 1
நடிக்கின்றாய் 1
நடிக்கும் 3
நடித்ததோ 1
நடித்திடின் 1
நடித்து 1
நடித்தேன் 1
நடு 9
நடுக்கம் 1
நடுக்குற 1
நடுவதே 1
நடுவாகவே 1
நடுவாய் 2
நடுவான 1
நடுவிலோ 3
நடுவும் 2
நடுவுமாய் 1
நடுவுள் 2
நடுவுறு 1
நடுவூடு 1
நடுவே 6
நடை 6
நடை_மனையை 1
நடைமனையை 1
நடையிலே 1
நண் 1
நண்ணாதது 1
நண்ணாது 1
நண்ணானோ 1
நண்ணி 1
நண்ணிட 1
நண்ணிய 2
நண்ணுகின்ற 1
நண்ணுகின்றவர் 1
நண்ணுங்கால் 1
நண்ணுதலும் 1
நண்ணும் 2
நண்ணேன் 1
நண்பனை 1
நணுகும் 1
நணுகுவேனோ 1
நதி 4
நதிகளிடை 1
நந்தா 1
நந்தி 2
நம் 6
நம்-தமக்கு 1
நம்-தமையே 1
நம்-பால் 2
நம்ப 1
நம்பால் 1
நம்பி 4
நம்பிநம்பி 1
நம்பினேன் 3
நம்பினோர்கள் 1
நம்பு 1
நம்புகின்றேன் 1
நம்பும் 1
நம்மால் 1
நம்மை 1
நமக்காக 1
நமக்கு 4
நமக்கெனவே 1
நமது 7
நமன் 3
நமனான 1
நமனை 1
நமை 2
நயக்கும் 1
நயத்தால் 1
நயன 1
நயனங்கள் 1
நரகமும் 2
நரகு 2
நரம்பா 1
நரம்பு 2
நரி 1
நரிகள் 1
நல் 86
நல்_குணத்தார் 1
நல்_புத்தி 1
நல்_வினை 1
நல்கவேண்டும் 1
நல்கி 1
நல்கியது 1
நல்கினவர் 1
நல்கும் 3
நல்குமே 1
நல்குவது 1
நல்குவாயோ 1
நல்ல 15
நல்லது 2
நல்லவர்க்கே 1
நல்லவர்கள் 2
நல்லவன் 1
நல்லார்கள் 2
நல்லோர் 8
நல்லோர்கள் 1
நல 3
நலத்த 1
நலத்து 1
நலத்தோய் 2
நலம் 14
நலம்-தான் 1
நலமும் 2
நலமே 1
நலன் 1
நலிந்தவுடன் 1
நவ 5
நவநாத 2
நவம் 1
நவமாய் 1
நவில் 1
நவிலாய் 2
நவிலுவேன் 1
நவை 1
நழுவாமல் 1
நழுவி 2
நழுவிடினும் 1
நழுவியே 1
நழுவின் 1
நறவம் 1
நறும் 1
நறை 1
நன்கு 1
நன்மை 7
நன்மைகள் 1
நன்மையாம் 1
நன்மையும் 2
நன்மையை 1
நன்றா 1
நன்றாய் 3
நன்று 11
நன்றே 3
நன்றொடு 1
நன்றோ 6
நன்னர் 1
நனி 2

நக (1)

கைத்தலம் நக படை விரித்த புலி சிங்கமொடு கரடி நுழை நூழை கொண்ட கான மலை உச்சியில் குகையூடு இருந்தும் என் கரதலம் ஆமலகம் என்ன – தாயு:11 105/3
மேல்


நகர் (1)

பேற்றை பகுத்து அருளி எனை ஆள வல்லையோ பெரிய அகிலாண்ட கோடி பெற்ற நாயகி பெரிய கபிலை மா நகர் மருவு பெரியநாயகி அம்மையே – தாயு:39 587/4
மேல்


நகரும் (1)

நாடும் நகரும் நிசான் நாட்டிய பாளயமும் – தாயு:43 867/1
மேல்


நகைசெய்யவே (1)

சுற்றி நகைசெய்யவே உலையவிட்டாய் எனில் சொல்ல இனி வாயும் உண்டோ சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 82/4
மேல்


நகைப்பு (1)

கண்டார் நகைப்பு உயிர் வாழ்க்கை இரு கண் காண நீங்கவும் கண்டோம் துயில்-தான் – தாயு:54 1436/1
மேல்


நகையார் (1)

முருந்து இள நகையார் பார முலை முகம் தழுவி செவ் வாய் – தாயு:36 572/1
மேல்


நகையார்களொடு (1)

முத்தமிழ் முழக்கமுடன் முத்த நகையார்களொடு முத்துமுத்தாய் குலாவி மோகத்து இருந்தும் என் யோகத்தின் நிலை நின்று மூச்சை பிடித்து அடைத்து – தாயு:11 105/2
மேல்


நகையாவள் (1)

கன்னிகை ஒருத்தி சிற்றின்பம் வேம்பு என்னினும் கைக்கொள்வள் பக்குவத்தில் கணவன் அருள் பெறின் முனே சொன்னவாறு என் என கருதி நகையாவள் அது போல் – தாயு:9 77/3
மேல்


நச்சென்று (1)

நச்சென்று அறிந்து அருளை நண்ணும் நாள் எந்நாளோ – தாயு:45 1134/2
மேல்


நஞ்சமே (1)

நாறும் நல் சாந்த நீறு நஞ்சமே அமுதா கொண்ட – தாயு:21 298/2
மேல்


நஞ்சு (1)

வெள்ளத்தை மாற்றி விடக்கு உண்பார் நஞ்சு ஊட்டும் – தாயு:33 562/3
மேல்


நஞ்சுக்கு (1)

வெம் சேல் எனும் விழியார் வேட்கை நஞ்சுக்கு அஞ்சினரை – தாயு:45 1087/1
மேல்


நட்டணையதா (1)

நட்டணையதா கற்ற கல்வியும் விவேகமும் நல் நிலயமாக உன்னி நான் என்று நீ என்று இரண்டு இல்லை என்னவே நடுவே முளைத்த மனதை – தாயு:6 50/3
மேல்


நட்டநடுவே (1)

நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் கருதி நாடில் அருவு என்பர் சிலபேர் – தாயு:2 9/2
மேல்


நட்பாம் (1)

எந்நாளும் உடலிலே உயிராம் உனை போல் இருக்கவிலையோ மனது எனும் யானும் என் நட்பாம் பிராணனும் எமை சடம்-அது என்று உனை சித்து என்றுமே – தாயு:9 88/1
மேல்


நட்பினை (1)

ஞான கருணாகர முகம் கண்ட போதிலே நவநாத சித்தர்களும் உன் நட்பினை விரும்புவார் சுகர் வாமதேவர் முதல் ஞானிகளும் உனை மெச்சுவார் – தாயு:5 43/3
மேல்


நட்பு (2)

அற்றவர்க்கு அறாத நட்பு உடை கலப்பே அநேகமாய் நின் அடிக்கு அன்பு – தாயு:22 309/3
நாள் ஏற நாள் ஏற வார்த்திகம் எனும் கூற்றின் நட்பு ஏற உள் உடைந்து நயனங்கள் அற்றது ஓர் ஊர் ஏறு போலவே நானிலம்-தனில் அலையவோ – தாயு:37 584/2
மேல்


நட்பே (4)

யோகானுபூதி பெற்ற அன்பர் ஆவிக்கு உறுதுணையே என்_அளவும் உகந்த நட்பே
வாகு ஆரும்படிக்கு இசை கிண்கிணி வாய் என்ன மலர்ந்த மலரிடை வாசம் வயங்குமா போல் – தாயு:14 132/2,3
ஆறு அனைத்தும் புகும் கடல் போல் சமயகோடி அத்தனையும் தொடர்ந்து புகும் ஆதி நட்பே – தாயு:14 134/4
நாடும் பொருளான நட்பே பராபரமே – தாயு:43 651/2
நாட்டத்தினூடு வந்த நட்பே பராபரமே – தாயு:43 947/2
மேல்


நட்பை (2)

பொய்யர்-தம் நட்பை விடுவது என்றோ பரிபூரணமே – தாயு:27 453/4
மண் ஆவார் நட்பை மதியேன் பராபரமே – தாயு:43 688/2
மேல்


நடக்கலாம் (1)

சந்ததமும் இளமையோடு இருக்கலாம் மற்று ஒரு சரீரத்தினும் புகுதலாம் சலம் மேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம் தன் நிகர்_இல் சித்தி பெறலாம் – தாயு:12 118/3
மேல்


நடக்கவிட்டான் (1)

பின்னே நடக்கவிட்டான் பேர்_அருளை நாடாதார்க்கு – தாயு:28 502/3
மேல்


நடக்கவொட்டாது (1)

ஏதும் நடக்கவொட்டாது என்னே பராபரமே – தாயு:43 1008/2
மேல்


நடக்கினும் (1)

நடக்கினும் ஓடினும் நிற்கினும் வேறு ஒரு நாட்டம் இன்றி – தாயு:27 412/1
மேல்


நடக்கை (1)

என்னே நடக்கை இனி – தாயு:28 502/4
மேல்


நடக்கையே (1)

கல்லை ஆம் இ கருமி நடக்கையே – தாயு:18 200/4
மேல்


நடத்த (2)

வட கயிறு வெள் நரம்பா என்பு தசையினால் மதவேள் விழா நடத்த வைக்கின்ற கைத்தேரை வெண்ணீர் செந்நீர் கணீர் மல நீர் புண் நீர் இறைக்கும் – தாயு:11 101/2
பத்தியாய் நெடிது நம்பும் என்னை ஒரு மையல் தந்து அகில மாயையை பாருபார் என நடத்த வந்தது என் பாரதத்தினும் இது உள்ளதோ – தாயு:13 130/2
மேல்


நடத்தலாம் (1)

கந்துக மத கரியை வசமா நடத்தலாம் கரடி வெம் புலி வாயையும் கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம் கட்செவி எடுத்து ஆட்டலாம் – தாயு:12 118/1
மேல்


நடத்தி (1)

நடத்தி இ உலகை எல்லாம் நாத நீ நிறைந்த தன்மை – தாயு:21 300/1
மேல்


நடத்திடும் (1)

பொய் முடங்கு தொழில் யாததற்கும் நல சாரதி தொழில் நடத்திடும் புத்தி யூகம் அறிவு_அற்ற மூகம் இவை பொருள் என கருதும் மருளன் யான் – தாயு:13 125/3
மேல்


நடத்தினானே (1)

வானவர் இறைஞ்ச மன்றுள் வயங்கிய நடத்தினானே – தாயு:21 299/4
மேல்


நடத்தும் (3)

பாங்காய் நடத்தும் பொருளே அகண்ட பரசிவமே – தாயு:27 409/4
நடத்தும் முறை கண்டு பணி நாம் விடுவது எந்நாளோ – தாயு:45 1193/2
ஞான மத யானை நடத்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1284/2
மேல்


நடத்தை (1)

நடத்தை காட்டி எவ்வுயிரையும் நடப்பிக்கும் நலத்தோய் – தாயு:24 352/4
மேல்


நடந்து (2)

ஆரண மார்க்கத்து ஆகம வாசி அற்புதமாய் நடந்து அருளும் – தாயு:19 272/1
அடியிட்ட செந்தமிழின் அருமையிட்டு ஆரூரில் அரிவையோர் பரவை வாயில் அம்மட்டும் அடியிட்டு நடை நடந்து அருள் அடிகள் அடி ஈது முடி ஈது என – தாயு:37 581/3
மேல்


நடப்பன (1)

தெரிவாக ஊர்வன நடப்பன பறப்பன செயல் கொண்டு இருப்பன முதல் தேகங்கள் அத்தனையும் மோகம்கொள் பெளதிகம் சென்மித்த ஆங்கு இறக்கும் – தாயு:2 5/1
மேல்


நடப்பிக்கும் (1)

நடத்தை காட்டி எவ்வுயிரையும் நடப்பிக்கும் நலத்தோய் – தாயு:24 352/4
மேல்


நடம் (5)

ஈசா பொதுவில் நடம் ஆடும் இறைவா குறையா இன் அமுதே – தாயு:20 284/4
புண்டரிகபுரத்தினில் நாதாந்த மெளன போதாந்த நடம் புரியும் புனித வாழ்வே – தாயு:24 333/4
குழு காண நின்று நடம் ஆடும் தில்லை கொழும் சுடரே – தாயு:27 434/4
தேடுவேன் நின் அருளை தேடும் முன்னே எய்தில் நடம்
ஆடுவேன் ஆனந்தம் ஆவேன் பராபரமே – தாயு:43 995/1,2
ஞான நடம் கண்டு நடிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1229/2
மேல்


நடம்செய் (1)

தானே அகண்டாகார மயம்-தன்னில் எழுந்து பொது நடம்செய்
வானே மாய பிறப்பு_அறுப்பான் வந்து உன் அடிக்கே கரம் கூப்பி – தாயு:20 287/1,2
மேல்


நடமாடும் (1)

துளி ஆட மன்றுள் நடமாடும் முக்கண் சுடர் கொழுந்தே – தாயு:27 406/4
மேல்


நடன (1)

காகமோடு கழுகு அலகை நாய் நரிகள் சுற்று சோறிடு துருத்தியை கால் இரண்டு நவ வாசல் பெற்று வளர் காமவேள் நடன சாலையை – தாயு:13 122/1
மேல்


நடனம் (1)

குறைவு_இலா வணம் நிறைந்து கோது_இலா நடனம் செய்வான் – தாயு:15 169/3
மேல்


நடிக்கின்றாய் (1)

உம்பர் இம்பர்க்கும் உள-கணே நடிக்கின்றாய் உன்றன் – தாயு:25 378/2
மேல்


நடிக்கும் (3)

உளம் பெறும் துணையே பொதுவினில் நடிக்கும் உண்மையே உள்ளவாறு இதுவே – தாயு:19 274/4
நாத தற்பர சிற்பர வடிவமாய் நடிக்கும்
நீத நிர்க்குண நினை அன்றி ஒன்றும் நான் நினையேன் – தாயு:25 366/3,4
ஞான நடம் கண்டு நடிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1229/2
மேல்


நடித்ததோ (1)

அண்ணா பரஞ்சோதி அப்பா உனக்கு அடிமை யான் எனவும் மேல் எழுந்த அன்பாகி நாடகம் நடித்ததோ குறைவில்லை அகிலமும் சிறிது அறியுமேல் – தாயு:10 93/2
மேல்


நடித்திடின் (1)

மன்றதாய் இன்ப உருக்கொடு நடித்திடின் வாழ்வேன் – தாயு:25 373/4
மேல்


நடித்து (1)

தற்பரமாம் சிற்பரம் ஆகி மன்றம்-தனில் நடித்து
நிற்பர் அம்போருகன் மால் பணி நீதர் என் நெஞ்சகமாம் – தாயு:27 402/1,2
மேல்


நடித்தேன் (1)

தரையிலே நடித்தேன் என்ன தன்மையே – தாயு:18 232/4
மேல்


நடு (9)

நாடுதலும் அற்று மேல் கீழ் நடு பக்கம் என நண்ணுதலும் அற்று விந்து நாதம் மற்று ஐ வகை பூத பேதமும் அற்று ஞாதுருவின் ஞானம் அற்று – தாயு:4 33/2
போதமாய் ஆதி நடு அந்தமும் இலாததாய் புனிதமாய் அவிகாரமாய் போக்கு_வரவு இல்லாத இன்பமாய் நின்ற நின் பூரணம் புகலிடம்-அதா – தாயு:4 35/1
ஆங்காரம் ஆன குல வேட வெம் பேய் பாழ்த்த ஆணவத்தினும் வலிது காண் அறிவினை மயக்கிடும் நடு அறியவொட்டாது யாதொன்று தொடினும் அதுவாய் – தாயு:5 45/1
முன் நிலை ஒழிந்திட அகண்டிதாகாரமாய் மூதறிவு மேல் உதிப்ப முன்பினொடு கீழ் மேல் நடு பக்கம் என்னாமல் முற்றும் ஆனந்த நிறைவே – தாயு:10 99/3
ஐந்து பூதம் ஒரு கானல்_நீர் என அடங்க வந்த பெரு வானமே ஆதி அந்தம் நடு ஏதும் இன்றி அருளாய் நிறைந்து இலகு சோதியே – தாயு:13 124/1
எந்த நாளும் நடு ஆகி நின்று ஒளிரும் ஆதியே கருணை நீதியே எந்தையே என இடைந்திடைந்து உருகும் எளியனேன் கவலை தீரவும் – தாயு:13 124/3
அந்தோ ஈது அதிசயம் இ சமயம் போல் இன்று அறிஞர் எல்லாம் நடு அறிய அணிமா ஆதி – தாயு:14 142/1
ஆகிய சற்காரிய ஊகத்துக்கு ஏற்ற அமலமாய் நடு ஆகி அனந்த சத்தி – தாயு:14 145/1
பூதம் முதலாகவே நாத பரியந்தமும் பொய் என்று எனை காட்டி என் போதத்தின் நடு ஆகி அடி ஈறும் இல்லாத போக பூரண வெளிக்குள் – தாயு:37 580/1
மேல்


நடுக்கம் (1)

நாட்பட்டு அலைந்த நடுக்கம் எலாம் தீர உனக்கு – தாயு:43 895/1
மேல்


நடுக்குற (1)

படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குற பாடி ஆடி குதித்து பனி மதி முகத்திலே நிலவு அனைய புன்னகை பரப்பி ஆர்த்தார்த்து எழுந்து – தாயு:6 55/2
மேல்


நடுவதே (1)

நன்று தீது அற வைத்த நடுவதே – தாயு:18 202/4
மேல்


நடுவாகவே (1)

சுத்த நித்த இயல் பாகுமோ உனது விசுவ மாயை நடுவாகவே சொல்ல வேண்டும் வகை நல்ல காதி கதை சொல்லும் மாயையினும் இல்லை என் – தாயு:13 130/3
மேல்


நடுவாய் (2)

ஆதியாய் நடுவாய் அந்தமாய் பந்தம் யாவும் அற்று அகம் புறம் நிறைந்த – தாயு:22 305/1
நாதனை நாதாதீத நண்பனை நடுவாய் நின்ற – தாயு:36 574/1
மேல்


நடுவான (1)

தீராது விடுவதிலை நடுவான கடவுளே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 117/4
மேல்


நடுவிலோ (3)

அண்ட முடி-தன்னிலோ பகிரண்டம்-அதனிலோ அலரி மண்டல நடுவிலோ அனல் நடுவிலோ அமிர்த மதி நடுவிலோ அன்பர் அகம் உருகி மலர்கள் தூவி – தாயு:9 86/1
அண்ட முடி-தன்னிலோ பகிரண்டம்-அதனிலோ அலரி மண்டல நடுவிலோ அனல் நடுவிலோ அமிர்த மதி நடுவிலோ அன்பர் அகம் உருகி மலர்கள் தூவி – தாயு:9 86/1
அண்ட முடி-தன்னிலோ பகிரண்டம்-அதனிலோ அலரி மண்டல நடுவிலோ அனல் நடுவிலோ அமிர்த மதி நடுவிலோ அன்பர் அகம் உருகி மலர்கள் தூவி – தாயு:9 86/1
மேல்


நடுவும் (2)

அந்தம் இல்லை ஆதி இல்லை நடுவும் இல்லை அகமும் இல்லை புறமும் இல்லை அனைத்தும் இல்லை – தாயு:14 151/4
அடி முடியும் நடுவும் அற்ற பரவெளி மேற்கொண்டால் அத்துவித ஆனந்த சித்தம் உண்டாம் நமது – தாயு:17 191/1
மேல்


நடுவுமாய் (1)

பின்னும் முன்னுமாய் நடுவுமாய் யாவினும் பெரியது – தாயு:25 376/1
மேல்


நடுவுள் (2)

கவ்வு மலம் ஆகின்ற நாகபாசத்தினால் கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை கடிது அகல வலிய வரும் ஞான சஞ்சீவியே கதியான பூமி நடுவுள்
செவ்விதின் வளர்ந்து ஓங்கு திவ்ய குண_மேருவே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 28/3,4
கரு மருவு குகை அனைய காயத்தின் நடுவுள் களிம்பு தோய் செம்பு அனைய யான் காண் தக இருக்க நீ ஞான அனல் மூட்டியே கனிவு பெற உள் உருக்கி – தாயு:4 32/1
மேல்


நடுவுறு (1)

நாட்டம் மூன்று உடைய செம் நிற மணியே நடுவுறு நாயக விளக்கே – தாயு:24 360/1
மேல்


நடுவூடு (1)

துரிய நடுவூடு இருந்த பெரிய பொருள் யாது அதனை தொழுதல்செய்வாம் – தாயு:3 21/4
மேல்


நடுவே (6)

நட்டணையதா கற்ற கல்வியும் விவேகமும் நல் நிலயமாக உன்னி நான் என்று நீ என்று இரண்டு இல்லை என்னவே நடுவே முளைத்த மனதை – தாயு:6 50/3
நான் நான் இங்கு எனும் அகந்தை எனக்கு ஏன் வைத்தாய் நல்_வினை தீ_வினை எனவே நடுவே நாட்டி – தாயு:16 179/1
நான் எனவும் நீ எனவும் இரு தன்மை நாடாமல் நடுவே சும்மா-தான் – தாயு:24 353/1
செல்லாது என் சிந்தை நடுவே கிடந்து திகைத்து விம்மி – தாயு:27 429/3
நான் என இங்கு ஒன்றை நடுவே முளைக்கவிட்டு இங்கு – தாயு:28 533/3
நாம் பிரமம் என்றால் நடுவே ஒன்று உண்டாமால் – தாயு:45 1305/1
மேல்


நடை (6)

தன் நிகர்_இல் லோபாதி பாழ்ம் பேய் பிடித்திட தரணி மிசை லோகாயதன் சமய நடை சாராமல் வேதாந்த சித்தாந்த சமரச சிவாநுபூதி – தாயு:5 40/3
பொய் திகழும் உலக நடை என் சொல்கேன் என் சொல்கேன் பொழுதுபோக்கு ஏது என்னிலோ பொய் உடல் நிமித்தம் புசிப்பு கலைந்திடல் புசித்த பின் கண்ணுறங்கல் – தாயு:7 61/1
துன்பமாய் அலையவோ உலக நடை ஐய ஒரு சொப்பனத்திலும் வேண்டிலேன் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 80/4
குடக்கொடு குணக்கு ஆதி திக்கினை உழக்கூடு கொள்ளல் போல் ஐந்து பூதம் கூடும் சுருங்கு இலை சாலேகம் ஒன்பது குலாவு நடை_மனையை நாறும் – தாயு:11 101/1
கவ்வை அற்ற நடை பயில அன்பர் அடி கண்டதே அருளின் வடிவமா கண்ட யாவையும் அகண்டம் என்ன இரு கை குவித்து மலர் தூவியே – தாயு:13 129/2
அடியிட்ட செந்தமிழின் அருமையிட்டு ஆரூரில் அரிவையோர் பரவை வாயில் அம்மட்டும் அடியிட்டு நடை நடந்து அருள் அடிகள் அடி ஈது முடி ஈது என – தாயு:37 581/3
மேல்


நடை_மனையை (1)

குடக்கொடு குணக்கு ஆதி திக்கினை உழக்கூடு கொள்ளல் போல் ஐந்து பூதம் கூடும் சுருங்கு இலை சாலேகம் ஒன்பது குலாவு நடை_மனையை நாறும் – தாயு:11 101/1
மேல்


நடைமனையை (1)

நாற்ற சடலத்தை ஒன்பது வாசல் நடைமனையை
சோற்று பசையினை மு_மல பாண்ட தொடக்கறையை – தாயு:27 418/1,2
மேல்


நடையிலே (1)

தெட்டிலே வலிய மட மாதர் வாய் வெட்டிலே சிற்றிடையிலே நடையிலே சேல் ஒத்த விழியிலே பால் ஒத்த மொழியிலே சிறுபிறை நுதல் கீற்றிலே – தாயு:37 579/1
மேல்


நண் (1)

ஞான நெறிக்கு ஏற்ற குரு நண் அரிய சித்தி முத்தி – தாயு:28 541/1
மேல்


நண்ணாதது (1)

நண்ணாதது ஒன்று இல்லை எல்லா நலமும் நமக்கு உளவே – தாயு:27 413/4
மேல்


நண்ணாது (1)

நன்று ஆகி தீது ஆகி மற்றும் ஆகி நாசமுடன் உற்பத்தி நண்ணாது ஆகி – தாயு:14 137/2
மேல்


நண்ணானோ (1)

நாதன் ஒரு தரம் உலகம் பார்க்க இச்சை நண்ணானோ என்றுஎன்றே நானா ஆகி – தாயு:14 163/3
மேல்


நண்ணி (1)

விளையும் சிவானந்த பூமி அந்த வெட்டவெளி நண்ணி துட்ட இருளாம் – தாயு:54 1435/1
மேல்


நண்ணிட (1)

பண் ஒளிக்கும் உள் ஒளியாம் பான்மையினை நண்ணிட உன் – தாயு:28 480/2
மேல்


நண்ணிய (2)

நன்று என சொல நண்ணிய நன்மையை – தாயு:18 265/2
நண்ணிய பேர்_இன்ப சுகம் நான் அணைவது எந்நாளோ – தாயு:45 1227/2
மேல்


நண்ணுகின்ற (1)

நண்ணுகின்ற நின் அருள் எனக்கு எந்த நாள் நணுகும் – தாயு:25 384/2
மேல்


நண்ணுகின்றவர் (1)

நண்ணுகின்றவர் நான் தொழும் தெய்வமே – தாயு:18 268/4
மேல்


நண்ணுங்கால் (1)

நான் தான் எனும் மயக்கம் நண்ணுங்கால் என் ஆணை – தாயு:28 540/1
மேல்


நண்ணுதலும் (1)

நாடுதலும் அற்று மேல் கீழ் நடு பக்கம் என நண்ணுதலும் அற்று விந்து நாதம் மற்று ஐ வகை பூத பேதமும் அற்று ஞாதுருவின் ஞானம் அற்று – தாயு:4 33/2
மேல்


நண்ணும் (2)

நாமம் மறந்து அருளை நண்ணும் நாள் எந்நாளோ – தாயு:45 1130/2
நச்சென்று அறிந்து அருளை நண்ணும் நாள் எந்நாளோ – தாயு:45 1134/2
மேல்


நண்ணேன் (1)

நண்ணேன் அலாமல் இரு கை-தான் குவிக்க எனில் நாணும் என் உளம் நிற்றி நீ நான் கும்பிடும் போது அரை கும்பிடு ஆதலால் நான் பூசை செய்யல் முறையோ – தாயு:6 52/2
மேல்


நண்பனை (1)

நாதனை நாதாதீத நண்பனை நடுவாய் நின்ற – தாயு:36 574/1
மேல்


நணுகும் (1)

நண்ணுகின்ற நின் அருள் எனக்கு எந்த நாள் நணுகும்
மண்ணும் விண்ணும் மற்று உள்ளன பூதமும் மாறா – தாயு:25 384/2,3
மேல்


நணுகுவேனோ (1)

நல்லார்கள் அவையகத்தே இருக்கவைத்தாய் நன்னர் நெஞ்சம் தன்னலமும் நணுகுவேனோ
இல்லாளியாய் உலகோடு உயிரை ஈன்றிட்டு எண் அரிய யோகினுக்கும் இவனே என்ன – தாயு:24 345/2,3
மேல்


நதி (4)

துப்பு இதழ் மடந்தையர் மயல் சண்டமாருத சுழல் வந்துவந்து அடிப்ப சோராத ஆசையாம் கானாறு வான் நதி சுரந்தது என மேலும் ஆர்ப்ப – தாயு:12 112/2
திரையும் திரையும் நதி சென்னியனை நாவால் – தாயு:28 471/3
நதி உண்ட கடல் என சமயத்தை உண்ட பர ஞான ஆனந்த ஒளியே நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே நான் எனும் அகந்தை தீர்த்து என் – தாயு:37 578/3
மாறுபடும் கருத்து இல்லை முடிவு_இல் மோன_வாரிதியில் நதி திரள் போல் வயங்கிற்று அம்மா – தாயு:42 630/2
மேல்


நதிகளிடை (1)

பத்தி நெறி நிலைநின்றும் நவ கண்ட பூமி பரப்பை வலமாக வந்தும் பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும் பசி_தாகம் இன்றி எழுநா – தாயு:4 36/1
மேல்


நந்தா (1)

சோதியே நந்தா சுக வடிவே தூ வெளியே – தாயு:47 1359/1
மேல்


நந்தி (2)

எந்தை வட ஆல் பரமகுரு வாழ்க வாழ அருளிய நந்தி மரபு வாழ்க என்று அடியர் மனம் மகிழ வேதாகம துணிபு இரண்டு இல்லை ஒன்று என்னவே – தாயு:5 38/3
நந்தி அடி கீழ் குடியாய் நாம் அணைவது எந்நாளோ – தாயு:45 1095/2
மேல்


நம் (6)

கார் அனந்தம் கோடி வருஷித்தது என அன்பர் கண்ணும் விண்ணும் தேக்கவே கருது அரிய ஆனந்த_மழை பொழியும் முகிலை நம் கடவுளை துரிய வடிவை – தாயு:1 2/3
சென்றிடவே பொருளை வைத்த நாவலோய் நம் சிவன் அப்பா என்ற அருள் செல்வ தேவே – தாயு:14 161/4
சித்த மவுனி வட-பால் மவுனி நம் தீபகுண்ட – தாயு:27 426/1
மனமே நம் போல உண்டோ சுத்த மூடர் இ வையகத்தே – தாயு:27 437/4
ஒன்றும் அற நில் என்று உணர்த்திய நம் மோனகுரு-தன் – தாயு:28 478/1
ஓராமல் மந்திரமும் உன்னாமல் நம் பரனை – தாயு:45 1295/1
மேல்


நம்-தமக்கு (1)

தேசிகர் கோனான திறன் மவுனி நம்-தமக்கு
வாசிகொடுக்க மகிழும் நாள் எந்நாளோ – தாயு:45 1313/1,2
மேல்


நம்-தமையே (1)

நாள் அவங்கள் போகாமல் நாள்-தோறும் நம்-தமையே
ஆள வந்தார் தாளின் கீழ் ஆள் புகுந்தாய் மீள உன்னை – தாயு:28 523/1,2
மேல்


நம்-பால் (2)

கரு ஒன்றும் மேனி நம்-பால் காட்டாது அருள் என்று – தாயு:28 482/2
சாலோகம் ஆதி சவுக்கியமும் விட்ட நம்-பால்
மேலான ஞான இன்பம் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1220/1,2
மேல்


நம்ப (1)

நல் நலத்த நின் நல் பதம் துணை என நம்ப
சொன்னவர்க்கு எனால் ஆம் கைம்மாறு இல்லை என் சொல்வேன் – தாயு:25 370/3,4
மேல்


நம்பால் (1)

அல் ஆர்ந்த மேனியொடு குண்டு கண் பிறை எயிற்று ஆபாச வடிவமான அந்தகா நீ ஒரு பகட்டால் பகட்டுவது அடாதடா காசு நம்பால்
செல்லாதடா என்று பேசுவாய் அது தந்த செல்வமே சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 119/3,4
மேல்


நம்பி (4)

புன் புலால் மயிர் தோல் நரம்பு என்பு மொய்த்திடு புலை குடிலில் அருவருப்பு பொய் அல்லவே இதனை மெய் என்று நம்பி என் புந்தி செலுமோ பாழிலே – தாயு:9 80/3
நம்பி வா எனின் நான் என்-கொல் செய்வதே – தாயு:18 204/4
நாடியே இந்த உலகத்தை மெய் என நம்பி
தேடினேன் வெறும் தீமையே என் இனி செய்வேன் – தாயு:25 379/3,4
மின் அனைய பொய் உடலை மெய் என்று நம்பி ஐயோ – தாயு:43 814/1
மேல்


நம்பிநம்பி (1)

ஞாலத்தை மெய் எனவே நம்பிநம்பி நாளும் என்றன் – தாயு:43 819/1
மேல்


நம்பினேன் (3)

மற்று எனக்கு ஐய நீ சொன்ன ஒரு வார்த்தையினை மலை_இலக்கு என நம்பினேன் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 46/4
நான் ஏது என்று இங்கு அறியேனே நம்பினேன் கண்டு அருள்வாயே – தாயு:20 289/4
நம்பினேன் இனி புரப்பது எ காலமோ நவிலாய் – தாயு:25 378/4
மேல்


நம்பினோர்கள் (1)

சித்தம் இப்படி மயங்குமோ அருளை நம்பினோர்கள் பெறு பேறு இதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 130/4
மேல்


நம்பு (1)

முற்றும் துணை என நம்பு கண்டாய் சுத்த மூட நெஞ்சே – தாயு:27 457/4
மேல்


நம்புகின்றேன் (1)

தொல் நீர்மையாளர்க்கு மானுடன் வகுத்த அருள் துணை என்று நம்புகின்றேன் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 81/4
மேல்


நம்பும் (1)

பத்தியாய் நெடிது நம்பும் என்னை ஒரு மையல் தந்து அகில மாயையை பாருபார் என நடத்த வந்தது என் பாரதத்தினும் இது உள்ளதோ – தாயு:13 130/2
மேல்


நம்மால் (1)

வான் ஆக அ முதலே நிற்கும் நிலை நம்மால் மதிப்பு அரிதாம் என மோனம் வைத்ததும் உன் மனமே – தாயு:17 193/3
மேல்


நம்மை (1)

பூராயம் நம்மை புலப்படுத்தவேண்டி அன்றோ – தாயு:29 547/2
மேல்


நமக்காக (1)

அருள் பாய் நமக்காக ஆள வந்தார் பொன் அடி கீழ் – தாயு:29 545/3
மேல்


நமக்கு (4)

நண்ணாதது ஒன்று இல்லை எல்லா நலமும் நமக்கு உளவே – தாயு:27 413/4
சுத்தன் நமக்கு என்றும் துணை – தாயு:28 508/4
இருப்பாய் இருந்திட பேர்_இன்ப வெளிக்கே நமக்கு
குரு_பார்வை அல்லாமல் கூட கிடைத்திடுமோ – தாயு:29 545/1,2
ஈனம் தரும் நாடு இது நமக்கு வேண்டா என்று – தாயு:45 1177/1
மேல்


நமக்கெனவே (1)

எல்லாம் நமக்கெனவே ஈந்தனையே ஈந்தபடி – தாயு:28 513/3
மேல்


நமது (7)

மானத விகற்பம் அற வென்று நிற்பது நமது மரபு என்ற பரமகுருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 41/4
எக்காலமும் தனக்கென்ன ஒரு செயல் இலா ஏழை நீ என்று இருந்திட்டு எனது ஆவி உடல் பொருளும் மெளனியாய் வந்து கை ஏற்று நமது என்ற அன்றே – தாயு:8 76/1
சாதித்த சாதனமும் யோகியர்கள் நமது என்று சங்கிப்பர் ஆதலாலே தன்னிலே தானாய் அயர்ந்துவிடுவோம் என தனி இருந்திடின் அங்ஙனே – தாயு:9 85/3
சிரம்_அளவு எழுப்பியும் நீரினிடை மூழ்கியும் தேகம் நமது அல்ல என்று சிற்சுக அபேக்ஷையாய் நின் அன்பர் யோகம் செலுத்தினார் யாம் பாவியேம் – தாயு:10 97/2
சிறியன் ஏழை நமது அடிமை என்று உனது திரு_உளத்தினில் இருந்ததோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 128/4
அடி முடியும் நடுவும் அற்ற பரவெளி மேற்கொண்டால் அத்துவித ஆனந்த சித்தம் உண்டாம் நமது
குடி முழுதும் பிழைக்கும் ஒரு குறையும் இல்லை எடுத்த கோலம் எல்லாம் நன்று ஆகும் குறைவு நிறைவு அறவே – தாயு:17 191/1,2
நல் நிலை வாய்க்கும் எண்_சித்தியும் காணும் நமது அல்லவே – தாயு:27 423/4
மேல்


நமன் (3)

இனமே துணை என்று இருந்தோம் நமன் வரின் என் செய்குவோம் – தாயு:27 437/3
வஞ்ச நமன் வாதனைக்கும் வன் பிறவி வேதனைக்கும் – தாயு:43 756/1
கட்டும் நமன் செங்கோல் கடா அடிக்கும் கோலாக – தாயு:45 1185/1
மேல்


நமனான (1)

நாற்றை பதித்தது என ஞானமாம் பயிர்-அதனை நாட்டி புல பட்டியும் நமனான தீப்பூடும் அணுகாமல் முன் நின்று நாடு சிவபோகமான – தாயு:39 587/3
மேல்


நமனை (1)

ஏர் இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு இடர் உற உறுக்கி இடர் தீர்த்து இரவு பகல் இல்லாத பேர்_இன்ப வீட்டினில் இசைந்து துயில்கொள்-மின் என்று – தாயு:4 31/3
மேல்


நமை (2)

சுற்றமோ நமை காக்கும் சொலாய் நெஞ்சே – தாயு:18 270/2
உண்டோ நமை போல வஞ்சர் மலம் ஊறி ததும்பும் உடலை மெய் என்று – தாயு:54 1443/1
மேல்


நயக்கும் (1)

நயக்கும் ஒன்றன்-பால் ஒன்று இலை எனல் நல வழக்கே – தாயு:24 356/2
மேல்


நயத்தால் (1)

பேராமல் நின்ற பரவெளியிலே மன_வெளி பிறங்குவது அலாது ஒன்றினும் பின்னமுற மருவாது நல் நயத்தால் இனி பேர்_இன்ப முத்தி நிலையும் – தாயு:12 117/2
மேல்


நயன (1)

நனி பெரும் குடிலம் காட்டும் நயன வேல் கரிய கூந்தல் – தாயு:21 301/3
மேல்


நயனங்கள் (1)

நாள் ஏற நாள் ஏற வார்த்திகம் எனும் கூற்றின் நட்பு ஏற உள் உடைந்து நயனங்கள் அற்றது ஓர் ஊர் ஏறு போலவே நானிலம்-தனில் அலையவோ – தாயு:37 584/2
மேல்


நரகமும் (2)

சீர் அனந்தம் சொர்க்க நரகமும் அனந்தம் நல் தெய்வமும் அனந்த பேதம் திகழ்கின்ற சமயமும் அனந்தம் அதனால் ஞான சிற்சத்தியால் உணர்ந்து – தாயு:1 2/2
மேலும் நரகமும் மேதகு சுவர்க்கமும் – தாயு:55 1451/24
மேல்


நரகு (2)

கன்மம் ஏது கடு நரகு ஏது மேல் – தாயு:18 242/1
கன்ம நெறி தப்பில் கடு நரகு என்று எந்நாளும் – தாயு:45 1299/1
மேல்


நரம்பா (1)

வட கயிறு வெள் நரம்பா என்பு தசையினால் மதவேள் விழா நடத்த வைக்கின்ற கைத்தேரை வெண்ணீர் செந்நீர் கணீர் மல நீர் புண் நீர் இறைக்கும் – தாயு:11 101/2
மேல்


நரம்பு (2)

புன் புலால் மயிர் தோல் நரம்பு என்பு மொய்த்திடு புலை குடிலில் அருவருப்பு பொய் அல்லவே இதனை மெய் என்று நம்பி என் புந்தி செலுமோ பாழிலே – தாயு:9 80/3
புன் புலால் நரம்பு என்பு உடை பொய் உடல் – தாயு:18 206/1
மேல்


நரி (1)

காக்கை நரி செந்நாய் கழுகு ஒருநாள் கூடி உண்டு – தாயு:45 1118/1
மேல்


நரிகள் (1)

காகமோடு கழுகு அலகை நாய் நரிகள் சுற்று சோறிடு துருத்தியை கால் இரண்டு நவ வாசல் பெற்று வளர் காமவேள் நடன சாலையை – தாயு:13 122/1
மேல்


நல் (86)

சீர் அனந்தம் சொர்க்க நரகமும் அனந்தம் நல் தெய்வமும் அனந்த பேதம் திகழ்கின்ற சமயமும் அனந்தம் அதனால் ஞான சிற்சத்தியால் உணர்ந்து – தாயு:1 2/2
ஐ வகை எனும் பூதம் ஆதியை வகுத்து அதனுள் அசர சர பேதமான யாவையும் வகுத்து நல் அறிவையும் வகுத்து மறை ஆதி_நூலையும் வகுத்து – தாயு:4 29/1
பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி இ பொய் வேடம் மிகுதி காட்டி பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நல் குணம் எலாம் போக்கிலே போகவிட்டு – தாயு:5 40/2
நட்டணையதா கற்ற கல்வியும் விவேகமும் நல் நிலயமாக உன்னி நான் என்று நீ என்று இரண்டு இல்லை என்னவே நடுவே முளைத்த மனதை – தாயு:6 50/3
இங்கு அற்றபடி அங்கும் என அறியும் நல் அறிஞர் எக்காலமும் உதவுவார் இன்_சொல் தவறார் பொய்மையாம் இழுக்கு உரையார் இரங்குவார் கொலைகள் பயிலார் – தாயு:6 56/1
மிக்க சித்திகள் எலாம் வல்ல நீர் அடிமை முன் விளங்கு வரு சித்தி இலிரோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 57/4
பாட்டு அளி துதைந்து வளர் கற்பக நல் நீழலை பாரினிடை வரவழைப்பீர் பத்ம_நிதி சங்க_நிதி இரு பாரிசத்திலும் பணிசெய்யும் தொழிலாளர் போல் – தாயு:7 58/1
மீட்டிடவும் வல்ல நீர் என் மன_கல்லை அனல் மெழுகு ஆக்கி வைப்பது அரிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 58/4
பாரொடு நல் நீர் ஆதி ஒன்றொடு ஒன்றாகவே பற்றி லயம் ஆம் போதினில் பரவெளியின் மருவுவீர் கற்பாந்த வெள்ளம் பரந்திடின் அதற்கும் ஈதே – தாயு:7 59/1
ஊர் என விளங்குவீர் பிரமாதி முடிவில் விடை ஊர்தி அருளால் உலவுவீர் உலகங்கள் கீழ்மேலவாக பெரும் காற்று உலாவின் நல் தாரணையினால் – தாயு:7 59/3
மேரு என அசையாமல் நிற்க வல்லீர் உமது மே தக்க சித்தி எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 59/4
விண் நிலவும் மதி அமுதம் ஒழியாது பொழியவே வேண்டுவேன் உமது அடிமை நான் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 60/4
மெய் திகழும் அஷ்டாங்க யோக பூமிக்குள் வளர் வேந்தரே குண_சாந்தரே வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 61/4
விஜய ஜய ஜய என்ன ஆசி சொலவே கொலுவிருக்கும் நும் பெருமை எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 62/4
வீணிலே அலையாமல் மலை_இலக்கு ஆக நீர் வெளிப்பட தோற்றல் வேண்டும் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 63/4
மின்னல் பெறவே சொல்ல அ சொல் கேட்டு அடிமை மனம் விகசிப்பது எந்த நாளோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 64/4
வெற்பினிடை உறைதலால் தவராஜசிங்கம் என மிக்கோர் உமை புகழ்வர் காண் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 65/4
வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகை வந்த வித்தை என் முத்தி தருமோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 66/4
சுமை எடு-மின் என்று-தான் சும்மாடுமாய் எமை சுமையாளும் ஆக்கி நாளும் துர்_புத்தி பண்ணி உள நல்_புத்தி யாவையும் சூறையிட்டு இந்த்ரஜாலம் – தாயு:11 103/2
கொந்து அவிழ் மலர் சோலை நல் நீழல் வைகினும் குளிர் தீம் புனல் கை அள்ளி கொள்ளுகினும் அ நீரிடை திளைத்து ஆடினும் குளிர் சந்த வாடை மடவார் – தாயு:11 110/1
மரு மலர் சோலை செறி நல் நீழல் மலை ஆதி மன்னு முனிவர் கேவலமாய் மந்த்ரமாலிகை சொல்லும் இயம நியமாதியாம் மார்க்கத்தில் நின்றுகொண்டு – தாயு:12 111/1
குறி-தான் அளித்தனை நல் மரவுரி கொள் அந்தண கோலமாய் அசபா நலம் கூறின பின் மெளனியாய் சும்மா இருக்க நெறி கூட்டினை எலாம் இருக்க – தாயு:12 116/3
பேராமல் நின்ற பரவெளியிலே மன_வெளி பிறங்குவது அலாது ஒன்றினும் பின்னமுற மருவாது நல் நயத்தால் இனி பேர்_இன்ப முத்தி நிலையும் – தாயு:12 117/2
புத்தமிர்த போகமும் கற்பக நல் நீழலில் பொலிவுற இருக்கும் இயல்பும் பொன்_உலகில் அயிராவதத்து ஏறு வரிசையும் பூமண்டலாதிக்கமும் – தாயு:12 121/1
பிறிவு இலாத வணம் நின்றிடாதபடி பல நிறம் கவரும் உபலமாய் பெரிய மாயையில் அழுந்தி நின்னது ப்ரசாத நல் அருள் மறந்திடும் – தாயு:13 123/3
மெய் வருந்து தவம் இல்லை நல் சரியை கிரியை யோகம் எனும் மூன்றதாய் மேவுகின்ற சவுபான நல் நெறி விரும்பவில்லை உலகத்திலே – தாயு:13 125/2
மெய் வருந்து தவம் இல்லை நல் சரியை கிரியை யோகம் எனும் மூன்றதாய் மேவுகின்ற சவுபான நல் நெறி விரும்பவில்லை உலகத்திலே – தாயு:13 125/2
தெய்வ நல் அருள் படைத்த அன்பரொடு சேரவும் கருணை கூர்வையோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 125/4
திண்ணிய நல் அறிவால் இ சமயத்து அன்றோ செப்பு அரிய சித்திமுத்தி சேர்ந்தார் என்றும் – தாயு:14 139/4
துளங்கு நல் நுதல்_கண் தோன்ற சுழல் வளி நெடு மூச்சு ஆக – தாயு:15 168/2
நல் மாலையா எடுத்து சொன்னார் நல்லோர் நலம் அறிந்து கல்லாத நானும் சொன்னேன் – தாயு:16 175/2
நான் நான் இங்கு எனும் அகந்தை எனக்கு ஏன் வைத்தாய் நல்_வினை தீ_வினை எனவே நடுவே நாட்டி – தாயு:16 179/1
நல் துணையே அருள் தாயே இன்பமான நாதாந்த பரம்பொருளே நாரணாதி – தாயு:16 181/3
சுற்றமுமாய் நல் அன்பர்-தமை சேய் ஆக தொழும்புகொளும் கனா கனமே சோதி_குன்றே – தாயு:16 181/4
அரும்போ நல் மணம் காட்டும் காம_ரசம் கன்னி அறிவாளோ அபக்குவர்க்கோ அ நலம்-தான் விளங்கும் – தாயு:17 192/4
நிற்கும் நல் நிலை நிற்கப்பெற்றார் அருள் – தாயு:18 199/1
தக்க கேள்வியில் சார்ந்த நல் பூமியின் – தாயு:18 219/1
நாய்க்கும் இன்பம் உண்டோ நல் அடியரை – தாயு:18 235/3
செகங்கள் எங்கும் திரிந்து நல் மோனத்தை – தாயு:18 237/3
நைவர் என்பதும் நல் பர தற்பர – தாயு:18 269/2
பின் செயல் யாது நினைவு_இன்றி கிடப்பேன் பித்தனேன் நல் நிலை பெற நின்றன் – தாயு:19 279/3
நாறும் நல் சாந்த நீறு நஞ்சமே அமுதா கொண்ட – தாயு:21 298/2
மோனமே முதலே முத்தி நல் வித்தே முடிவு_இலா இன்பமே செய்யும் – தாயு:22 307/3
துறவு-அது வேண்டும் மெளனியாய் எனக்கு தூய நல் அருள் தரின் இன்னம் – தாயு:22 308/3
நல் தவ துணையே ஆனந்த_கடலே ஞாதுரு ஞான ஞேயங்கள் – தாயு:22 309/2
பொய்யும் அவாவும் அழுக்காறும் புடைபட்டு ஓடும் நல் நெறியாம் – தாயு:23 317/2
நேசமும் நல் வாசமும் போய் புலனாய் இல் கொடுமை பற்றி நிற்பர் அந்தோ – தாயு:24 322/3
வாழி சோபனம் வாழி நல் அன்பர்கள் – தாயு:24 326/1
நல் நிலை ஈது அன்றி இலை சுகம் என்றே சுகர் முதலோர் நாடினாரே – தாயு:24 329/4
உன்னை போன்ற நல் பரம் பொருள் இல்லை என்று ஓர்ந்து – தாயு:24 340/2
விடத்தை நல் அமிர்தா உண்டு பொன் பொது வெளிக்கே – தாயு:24 352/3
நான் பொருள் ஆனேன் நல்ல நல் அரசே நான் இறந்திருப்பது நாட்டம் – தாயு:24 359/4
நல் நலத்த நின் நல் பதம் துணை என நம்ப – தாயு:25 370/3
நல் நலத்த நின் நல் பதம் துணை என நம்ப – தாயு:25 370/3
ஏய்ந்த நல் அருள்_பெற்றவர்க்கு ஏவலாய் எளியேன் – தாயு:25 386/1
எண் தரும் நல் அகிலாண்ட கோடியை தன் அருள் வெளியில் இலக வைத்துக்கொண்டு – தாயு:26 390/3
வாழ்வு அனைத்தும் தந்த இன்ப மா கடலை நல் அமிர்தை மணியை பொன்னை – தாயு:26 393/1
கிடக்கினும் செவ்விது இருக்கினும் நல் அருள் கேள்வியிலே – தாயு:27 412/2
சொல்லால் துதித்தும் நல் பச்சிலை தூவியும் தொண்டர் இனம் – தாயு:27 422/2
நல் நிலை வாய்க்கும் எண்_சித்தியும் காணும் நமது அல்லவே – தாயு:27 423/4
நில்லேன் நல் யோக நெறியும் செயேன் அருள் நீதி ஒன்றும் – தாயு:27 431/3
பழி பழியாம் நல் அருளால் பார்த்து ஓர் மொழி உனக்கே – தாயு:28 515/2
எல்லாம் நல் மோன வடிவே – தாயு:28 532/4
எடுத்த தேகம் பொருள் ஆவி மூன்றும் நீ எனக்கு ஒன்று இல்லை என மோன நல் நெறி – தாயு:31 556/1
அகம் எலாம் குழைந்து ஆனந்தமாக நல் அறிஞர் – தாயு:32 558/2
சகம் எலாம் பெற நல் அருள் உதரமா சமைந்தோய் – தாயு:32 558/4
போக்கொடு வரவும் இன்றி புனித நல் அருள் ஆனந்தம் – தாயு:35 570/3
வேத முதலான நல் ஆகம தன்மையை விளக்கும் உள்_கண்_இலார்க்கும் மிக்க நின் மகிமையை கேளாத செவிடர்க்கும் வீறு வாதம் புகலுவாய் – தாயு:37 580/3
நாத வடிவாகிய மஹா மந்த்ர ரூபியே நாதாந்த வெட்டவெளியே நல் சமயமான பயிர் தழைய வரும் மேகமே ஞான ஆனந்த மயிலே – தாயு:37 585/3
அட்ட சித்தியும் நல் அன்பருக்கு அருள விருது கட்டிய பொன் அன்னமே அண்ட கோடி புகழ் காவை வாழும் அகிலாண்டநாயகி என் அம்மையே – தாயு:38 586/4
நாதமே நாதாந்த வெளியே சுத்த ஞாதுருவே ஞானமே ஞேயமே நல்
வேதமே வேத முடிவான மோன வித்தே இங்கு என்னை இனி விட்டிடாதே – தாயு:41 605/1,2
போலே கருவி நல் நூல் போதம் பராபரமே – தாயு:43 821/2
கல் எறிய பாசி கலைந்து நல் நீர் காணும் நல்லோர் – தாயு:43 849/1
தானே ஆம் நல் நிலையை தந்த அருள் ஆனந்த – தாயு:43 1005/1
நல் போத இன்பு வர நாள் செலுமோ பைங்கிளியே – தாயு:44 1049/2
நல் நெஞ்சத்து அன்பர் எல்லாம் நாதரை சேர்ந்து இன்பு அணைந்தார் – தாயு:44 1056/1
நாள் அவங்கள் போகாமல் நல் நெறியை காட்டி எமை – தாயு:45 1101/1
செல்லாமல் நல் நெறியில் சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1154/2
நல்_குணத்தார் கைகோத்து நான் திரிவது எந்நாளோ – தாயு:45 1243/2
நல் நெறியை கண்டு உரிமை நாம் செய்வது எந்நாளோ – தாயு:45 1260/2
உன்னி நல் நெறியை சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1262/2
கண் நிறைந்த சோதியை நாம் காண வா நல் அறிவே – தாயு:50 1385/2
சத்தான உண்மை-தனை சார வா நல் அறிவே – தாயு:50 1386/2
பங்கயத்துள் வண்டாய் பயன் பெற வா நல் அறிவே – தாயு:50 1387/2
தோன்ற அருள் வெளியில் தோன்ற வா நல் அறிவே – தாயு:50 1388/2
தாக்கும் நல் ஆனந்த சோதி அணு-தன்னில் சிறிய எனை தன் அருளால் – தாயு:54 1438/1
மேல்


நல்_குணத்தார் (1)

நல்_குணத்தார் கைகோத்து நான் திரிவது எந்நாளோ – தாயு:45 1243/2
மேல்


நல்_புத்தி (1)

சுமை எடு-மின் என்று-தான் சும்மாடுமாய் எமை சுமையாளும் ஆக்கி நாளும் துர்_புத்தி பண்ணி உள நல்_புத்தி யாவையும் சூறையிட்டு இந்த்ரஜாலம் – தாயு:11 103/2
மேல்


நல்_வினை (1)

நான் நான் இங்கு எனும் அகந்தை எனக்கு ஏன் வைத்தாய் நல்_வினை தீ_வினை எனவே நடுவே நாட்டி – தாயு:16 179/1
மேல்


நல்கவேண்டும் (1)

பின்னம் பிறக்காது சேய் என வளர்த்திட பேயேனை நல்கவேண்டும் பிறவாத நெறி எனக்கு உண்டு என்னின் இம்மையே பேசு கர்ப்பூர தீபம் – தாயு:11 108/2
மேல்


நல்கி (1)

ஆனந்தம் தந்து என் அறிவை எல்லாம் உண்டு அவசம் நல்கி
மோனம்-தனை விளைத்தால் இனி யாது மொழிகுவதே – தாயு:27 414/3,4
மேல்


நல்கியது (1)

இ குணத்தை நல்கியது ஆர் எந்தாய் பராபரமே – தாயு:43 801/2
மேல்


நல்கினவர் (1)

ஆதிக்கம் நல்கினவர் ஆர் இந்த மாயைக்கு என் அறிவு அன்றி இடம் இல்லையோ அந்தரப்புஷ்பமும் கானலின் நீரும் ஓர் அவசரத்து உபயோகமோ – தாயு:5 39/1
மேல்


நல்கும் (3)

கல் பரந்தாங்கு கரைந்திட வான் ஒத்த காட்சி நல்கும்
பொற்பு அரமாய் என் வினை கரும்_தாதை பொடிசெய்ததே – தாயு:27 402/3,4
தன் பொறியாக நல்கும் தலைவ நின் அலது ஓர் தெய்வம் – தாயு:36 571/3
ஆன முத்தி நல்கும் என அன்புறுவது எந்நாளோ – தாயு:45 1300/2
மேல்


நல்குமே (1)

உற்ற மா தவர்க்கு உண்மையை நல்குமே
மற்றும் வேறு உள மார்க்கம் எலாம் எடுத்து – தாயு:18 271/2,3
மேல்


நல்குவது (1)

போதனை நீ நல்குவது எப்போதோ பராபரமே – தாயு:43 934/2
மேல்


நல்குவாயோ (1)

ஞானமும் தெவிட்டா இன்ப நன்மையும் நல்குவாயோ
பால் நலம் கவர்ந்த தீம் சொல் பச்சிளம் கிள்ளை காண – தாயு:21 299/2,3
மேல்


நல்ல (15)

சொல்லால் முழக்கியது மிக்க உபகாரமா சொல்லிறந்தவரும் விண்டு சொன்னவையும் இவை நல்ல குருவான பேரும் தொகுத்த நெறி-தானும் இவையே – தாயு:6 49/2
கள்ளன் அறிவூடுமே மெள்ளமெள வெளியாய் கலக்க வரும் நல்ல உறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 54/4
சுத்த நித்த இயல் பாகுமோ உனது விசுவ மாயை நடுவாகவே சொல்ல வேண்டும் வகை நல்ல காதி கதை சொல்லும் மாயையினும் இல்லை என் – தாயு:13 130/3
நான் பொருள் ஆனேன் நல்ல நல் அரசே நான் இறந்திருப்பது நாட்டம் – தாயு:24 359/4
பொருந்தும் நாள் நல்ல புண்ணியம் செய்த நாள் பொருந்தாது – தாயு:25 375/2
சுகம் ஆகும் ஞானம் திரு_மேனியாம் நல்ல தொண்டர்-தங்கள் – தாயு:27 408/1
மொண்டே அருந்தி இளைப்பாறினேன் நல்ல முத்தி பெற்றுக்கொண்டேன் – தாயு:27 427/3
கூட்டி நின்று ஆட்டினையே பரமே நல்ல கூத்து இதுவே – தாயு:27 448/4
இனத்தாரே நல்ல இனத்தார் கனத்த புகழ் – தாயு:28 479/2
அல்லும்_பகலும் அரற்றுவது என் நல்ல சிவ – தாயு:28 484/2
வந்த வழி நல்ல வழி – தாயு:28 514/4
இடம் கானம் நல்ல பொருள் இன்பம் எனக்கு ஏவல் – தாயு:28 528/1
சுத்தர்களே நல்ல துறவோர் பராபரமே – தாயு:43 832/2
ஆகும் நெறி நல்ல நெறி ஐயா பராபரமே – தாயு:43 992/2
தாயினும் நல்ல தயாளுவே நின்னை உன்னி – தாயு:46 1329/1
மேல்


நல்லது (2)

நல்லது மாயை-தானும் நான் என வந்து நிற்கும் – தாயு:15 170/4
எந்த உடலேனும் எடுத்த உடல் நல்லது என்று – தாயு:43 812/1
மேல்


நல்லவர்க்கே (1)

நல்லவர்க்கே கொத்தடிமை நான் காண் பராபரமே – தாயு:43 1019/2
மேல்


நல்லவர்கள் (2)

கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றும் அறிவில்லாத என் கர்மத்தை என் சொல்கேன் மதியை என் சொல்லுகேன் கைவல்ய ஞான நீதி – தாயு:7 66/1
கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றும் அறிவில்லாத என் கர்மத்தை என் சொல்கேன் மதியை என் சொல்லுகேன் கைவல்ய ஞான நீதி – தாயு:7 66/1
மேல்


நல்லவன் (1)

நல்லவன் சாருவாகன் நான் சொலும் நெறிக்கு வீணில் – தாயு:15 173/2
மேல்


நல்லார்கள் (2)

நல்லார்கள் அவையகத்தே இருக்கவைத்தாய் நன்னர் நெஞ்சம் தன்னலமும் நணுகுவேனோ – தாயு:24 345/2
நல்லார்கள் மோன நிலை நாடினார் பொல்லாத – தாயு:28 533/2
மேல்


நல்லோர் (8)

நல்லோர் உரைக்கிலோ கர்மம் முக்கியம் என்று நாட்டுவேன் கர்மம் ஒருவன் நாட்டினாலோ பழய ஞானம் முக்கியம் என்று நவிலுவேன் வடமொழியிலே – தாயு:7 66/2
நல் மாலையா எடுத்து சொன்னார் நல்லோர் நலம் அறிந்து கல்லாத நானும் சொன்னேன் – தாயு:16 175/2
ஞானம்-தனை அணைய நல்லோர் பராபரமே – தாயு:43 793/2
ஞாலம்-தனக்கு உரையார் நல்லோர் பராபரமே – தாயு:43 826/2
கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லோர் மற்று – தாயு:43 827/1
செல்லாமை நல்லோர் திறம் காண் பராபரமே – தாயு:43 828/2
கல் எறிய பாசி கலைந்து நல் நீர் காணும் நல்லோர்
சொல் உணரின் ஞானம் வந்து தோன்றும் பராபரமே – தாயு:43 849/1,2
நல்லோர் பொல்லா எனையும் நாடுவரோ பைங்கிளியே – தாயு:44 1038/2
மேல்


நல்லோர்கள் (1)

இரக்கமொடு பொறை ஈதல் அறிவு ஆசாரம் இல்லேன் நான் நல்லோர்கள் ஈட்டம் கண்டால் – தாயு:42 635/1
மேல்


நல (3)

பொய் முடங்கு தொழில் யாததற்கும் நல சாரதி தொழில் நடத்திடும் புத்தி யூகம் அறிவு_அற்ற மூகம் இவை பொருள் என கருதும் மருளன் யான் – தாயு:13 125/3
நாள் இது வரைக்கும் உன் அடிமை கூடவே சனனம் ஆனதோ அநந்தம் உண்டு நல சனன மீது இதனுள் அறிய_வேண்டுவன அறியலாம் – தாயு:13 126/2
நயக்கும் ஒன்றன்-பால் ஒன்று இலை எனல் நல வழக்கே – தாயு:24 356/2
மேல்


நலத்த (1)

நல் நலத்த நின் நல் பதம் துணை என நம்ப – தாயு:25 370/3
மேல்


நலத்து (1)

நியம லக்ஷணமும் இயம லக்ஷணமும் ஆசனாதி வித பேதமும் நெடிது உணர்ந்து இதய_பத்ம பீடம் மிசை நின்று இலங்கும் அஜபா நலத்து
இயல் அறிந்து வளர் மூல குண்டலியை இனிது இறைஞ்சி அவள் அருளினால் எல்லை_அற்று வளர் சோதி மூல அனல் எங்கள் மோன மனு முறையிலே – தாயு:13 127/1,2
மேல்


நலத்தோய் (2)

நடத்தை காட்டி எவ்வுயிரையும் நடப்பிக்கும் நலத்தோய் – தாயு:24 352/4
நவம் கொள் தத்துவ திரை எறி கடல் எனும் நலத்தோய் – தாயு:25 388/4
மேல்


நலம் (14)

குறி-தான் அளித்தனை நல் மரவுரி கொள் அந்தண கோலமாய் அசபா நலம் கூறின பின் மெளனியாய் சும்மா இருக்க நெறி கூட்டினை எலாம் இருக்க – தாயு:12 116/3
இந்த்ராதி போக நலம் பெற்ற பேர்க்கும் இது அன்றி தாயகம் வேறு இல்லை இல்லை – தாயு:14 142/3
நல் மாலையா எடுத்து சொன்னார் நல்லோர் நலம் அறிந்து கல்லாத நானும் சொன்னேன் – தாயு:16 175/2
பால் நலம் கவர்ந்த தீம் சொல் பச்சிளம் கிள்ளை காண – தாயு:21 299/3
கரும்போ தேனோ முக்கனியோ என்ன என்னுள் கலந்து நலம்
தரும் பேர்_இன்ப பொருளே நின்றன்னை நினைந்து நெக்குருகேன் – தாயு:23 314/2,3
ஞான நாயக நான்மறை நாயக நலம் சேர் – தாயு:25 381/2
அலமந்து உழலும் அடிமை நலம் மிகுந்த – தாயு:28 505/2
பின்னை உன்னால் பெற்ற நலம் பேசேன் பராபரமே – தாயு:43 760/2
இழுக்காற்றால் இன்ப நலம் எய்தார் பராபரமே – தாயு:43 932/2
நாடாதே நாடி நலம் பெறுவது எந்நாளோ – தாயு:45 1291/2
அறிந்து இன்ப நலம் சாரவைத்தால் ஆகாதோ – தாயு:47 1353/2
எல்லை_இல் ஆனந்த நலம் இச்சித்தால் ஆகாதோ – தாயு:47 1357/2
கொண்டார் போல் போனாலும் போகும் இதில் குணம் ஏது நலம் ஏது கூறாய் நீ தோழி – தாயு:54 1436/2
நலம் ஏதும் அறியாத என்னை சுத்த நாதாந்த மோனமாம் நாட்டம் தந்தே சஞ்சலம் – தாயு:54 1437/1
மேல்


நலம்-தான் (1)

அரும்போ நல் மணம் காட்டும் காம_ரசம் கன்னி அறிவாளோ அபக்குவர்க்கோ அ நலம்-தான் விளங்கும் – தாயு:17 192/4
மேல்


நலமும் (2)

நண்ணாதது ஒன்று இல்லை எல்லா நலமும் நமக்கு உளவே – தாயு:27 413/4
நலமும் காட்டினை ஞானம்_இலேற்கு – தாயு:55 1451/37
மேல்


நலமே (1)

நாதாந்த மோன நலமே பராபரமே – தாயு:43 841/2
மேல்


நலன் (1)

என் ஆர் அமுதின் நலன் இச்சிப்பது எந்நாளோ – தாயு:45 1084/2
மேல்


நலிந்தவுடன் (1)

நான் என்னும் ஓர் அகந்தை எவர்க்கும் வந்து நலிந்தவுடன் சக மாயை நானா ஆகி – தாயு:14 146/1
மேல்


நவ (5)

பத்தி நெறி நிலைநின்றும் நவ கண்ட பூமி பரப்பை வலமாக வந்தும் பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும் பசி_தாகம் இன்றி எழுநா – தாயு:4 36/1
காகமோடு கழுகு அலகை நாய் நரிகள் சுற்று சோறிடு துருத்தியை கால் இரண்டு நவ வாசல் பெற்று வளர் காமவேள் நடன சாலையை – தாயு:13 122/1
வரவரவும் ஏழைக்கு ஓர் எட்டது ஆன மதத்தொடும் வந்து எதிர்த்த நவ வடிவம் அன்றே – தாயு:16 176/4
காற்றை பிடித்து மண் கரகத்து அடைத்தபடி கன்ம புனற்குள் ஊறும் கடைகெட்ட நவ வாயில் பெற்ற பசு மண்கல காயத்துள் எனை இருத்தி – தாயு:39 587/1
நாற்றம் மிக காட்டும் நவ வாயில் பெற்ற பசும் – தாயு:45 1125/1
மேல்


நவநாத (2)

ஞான கருணாகர முகம் கண்ட போதிலே நவநாத சித்தர்களும் உன் நட்பினை விரும்புவார் சுகர் வாமதேவர் முதல் ஞானிகளும் உனை மெச்சுவார் – தாயு:5 43/3
இந்த்ராதி தேவதைகள் பிரமாதி கடவுளர் இருக்கு ஆதி வேத முனிவர் எண் அரிய கணநாதர் நவநாத சித்தர்கள் இரவி மதி ஆதியோர்கள் – தாயு:6 53/3
மேல்


நவம் (1)

நவம் கொள் தத்துவ திரை எறி கடல் எனும் நலத்தோய் – தாயு:25 388/4
மேல்


நவமாய் (1)

நவமாய் இலங்கிய ஒன்றே இரண்டு_அற்ற நன்மை பெறாது – தாயு:27 410/2
மேல்


நவில் (1)

ஞான குருவே நவில் – தாயு:28 489/4
மேல்


நவிலாய் (2)

நாத தற்பர நான் எவ்வாறு உய்குவேன் நவிலாய் – தாயு:25 365/4
நம்பினேன் இனி புரப்பது எ காலமோ நவிலாய் – தாயு:25 378/4
மேல்


நவிலுவேன் (1)

நல்லோர் உரைக்கிலோ கர்மம் முக்கியம் என்று நாட்டுவேன் கர்மம் ஒருவன் நாட்டினாலோ பழய ஞானம் முக்கியம் என்று நவிலுவேன் வடமொழியிலே – தாயு:7 66/2
மேல்


நவை (1)

தந்திரத்தை மந்திரத்தை சாரின் நவை ஆம் அறிவு என்று – தாயு:45 1288/1
மேல்


நழுவாமல் (1)

ஞானாகாரத்தினொடு ஞேயம் அற்ற ஞாதுருவும் நழுவாமல் நழுவி நிற்கும் – தாயு:14 153/3
மேல்


நழுவி (2)

தேகமே நழுவி நானுமோ நழுவின் பின்னை உய்யும் வகை உள்ளதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 126/4
ஞானாகாரத்தினொடு ஞேயம் அற்ற ஞாதுருவும் நழுவாமல் நழுவி நிற்கும் – தாயு:14 153/3
மேல்


நழுவிடினும் (1)

ஞான நெறி-தானே நழுவிடினும் மு பதத்துள் – தாயு:45 1300/1
மேல்


நழுவியே (1)

நான் ஆன தன்மை நழுவியே எவ்வுயிர்க்கும் – தாயு:45 1201/1
மேல்


நழுவின் (1)

தேகமே நழுவி நானுமோ நழுவின் பின்னை உய்யும் வகை உள்ளதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 126/4
மேல்


நறவம் (1)

பாட்டு அளி நறவம் உண்டு அயர்ந்தது போல் பற்று அயர்ந்து இருப்பது எ நாளோ – தாயு:24 360/4
மேல்


நறும் (1)

நாள் பட்ட கமலம் என்ன இதயம் மேவும் நறும் தேனே துன்_மார்க்க நாரிமார் கண் – தாயு:42 614/1
மேல்


நறை (1)

நறை மலர் தாட்கு அன்பு பெற்று நாம் இருப்பது எந்நாளோ – தாயு:45 1100/2
மேல்


நன்கு (1)

நான் கெடுத்து தேடாமல் நன்கு அறிவது எந்நாளோ – தாயு:45 1176/2
மேல்


நன்மை (7)

பண்ணுவது நன்மை இ நிலை பதியும் மட்டுமே பதியாய் இருந்த தேக பவுரி குலையாமலே கவுரி குண்டலி ஆயி பண்ணவி-தன் அருளினாலே – தாயு:7 60/3
இருள் ஆகி ஒளி ஆகி நன்மை தீமையும் ஆகி இன்று ஆகி நாளை ஆகி என்றுமாய் ஒன்றுமாய் பலவுமாய் யாவுமாய் இவை அல்லவாய நின்னை – தாயு:8 68/3
பொய்யினேன் புலையினேன் கொலையினேன் நின் அருள் புலப்பட அறிந்து நிலையா புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மை போல் பொருள் அலா பொருளை நாடும் – தாயு:8 74/1
புவனம் படைப்பது என் கர்த்தவியம் எவ்விடம் பூத பேதங்கள் எவிடம் பொய் மெய் இதம் அகிதமே வரும் நன்மை தீமையொடு பொறை பொறாமையும் எவ்விடம் – தாயு:10 89/3
நன்மை கூர் முக்கண் நாதன் இருக்கவே – தாயு:18 242/4
நவமாய் இலங்கிய ஒன்றே இரண்டு_அற்ற நன்மை பெறாது – தாயு:27 410/2
நன்மை தரும் ஞான நெறி நான் அணைவது எந்நாளோ – தாயு:45 1299/2
மேல்


நன்மைகள் (1)

பொல்லாத பொய்ம்மொழியும் அல்லாது நன்மைகள் பொருந்து குணம் ஏதும் அறியேன் புருஷர் வடிவானதே அல்லாது கனவிலும் புருஷார்த்தம் ஏதும் இல்லேன் – தாயு:5 42/2
மேல்


நன்மையாம் (1)

எவ்வுயிர் திரளும் உலகில் என் உயிர் என குழைந்து உருகி நன்மையாம் இதம் உரைப்ப எனது என்ற யாவையும் எடுத்து எறிந்து மத யானை போல் – தாயு:13 129/1
மேல்


நன்மையும் (2)

அழுந்தும் பவம் நீ நன்மையும் நீ ஆவி யாக்கை நீ-தானே – தாயு:20 286/4
ஞானமும் தெவிட்டா இன்ப நன்மையும் நல்குவாயோ – தாயு:21 299/2
மேல்


நன்மையை (1)

நன்று என சொல நண்ணிய நன்மையை
ஒன்று என சொன ஒண் பொருளே ஒளி – தாயு:18 265/2,3
மேல்


நன்றா (1)

அல்லாமல் இல்லை என நன்றா அறிந்தேன் அறிந்தபடி நின்று சுகம் நான் ஆகாத வண்ணமே இ வண்ணம் ஆயினேன் அதுவும் நினது அருள் என்னவே – தாயு:6 49/3
மேல்


நன்றாய் (3)

உற்று பார் மோனன் ஒரு சொல்லே உண்மை நன்றாய்
பற்றி பார் மற்ற எல்லாம் பாழ் – தாயு:28 460/3,4
ஆறு எனவும் நன்றாய் அறிந்தேன் பராபரமே – தாயு:43 809/2
திரம் ஏதும் இல்லை நன்றாய் தேர்ந்தேன் பராபரமே – தாயு:43 994/2
மேல்


நன்று (11)

சிந்தை அற நில் என்று சும்மா இருத்தி மேல் சின்மயானந்த வெள்ளம் தேக்கி திளைத்து நான் அதுவாய் இருக்க நீ செய் சித்ரம் மிக நன்று காண் – தாயு:5 38/2
மின்னும்படிக்கு அகண்டாகார அன்னை-பால் வினையேனை ஒப்புவித்து வீட்டு நெறி கூட்டிடுதல் மிகவும் நன்று இவை அன்றி விவகாரம் உண்டு என்னிலோ – தாயு:11 108/3
நன்று ஆகி தீது ஆகி மற்றும் ஆகி நாசமுடன் உற்பத்தி நண்ணாது ஆகி – தாயு:14 137/2
குடி முழுதும் பிழைக்கும் ஒரு குறையும் இல்லை எடுத்த கோலம் எல்லாம் நன்று ஆகும் குறைவு நிறைவு அறவே – தாயு:17 191/2
நன்று தீது அற வைத்த நடுவதே – தாயு:18 202/4
நன்று என சொல நண்ணிய நன்மையை – தாயு:18 265/2
நன்று எனவும் தீது எனவும் எனக்கு இங்கு உண்டோ நான் ஆகி நீ இருந்த நியாயம் சற்றே – தாயு:42 610/1
நன்று அறியேன் தீது அறியேன் நான் என்று நின்றவன் ஆர் – தாயு:43 677/1
எந்த துறவினும் நன்று எந்தாய் பராபரமே – தாயு:43 728/2
தீது எனவும் நன்று எனவும் தேர்ந்து நான் தேர்ந்தபடி – தாயு:43 1008/1
ஒலி நன்று என மகிழ்ந்து செவி கொள நாசி – தாயு:56 1452/39
மேல்


நன்றே (3)

நீ எப்படி வகுத்தாலும் நன்றே நின் பெரும் கருணை – தாயு:27 401/3
மாறாத கவலையுடன் சுழல என்னை வைத்தனையே பரமே நின் மகிமை நன்றே – தாயு:42 609/2
கல்லாக படைத்தாலும் மெத்த நன்றே கரணமுடன் நான் உறவு கலக்கமாட்டேன் – தாயு:42 625/2
மேல்


நன்றொடு (1)

நன்றொடு தீதும் அன்றி நாம் முன்னே பெறும் அவித்தை – தாயு:15 172/2
மேல்


நன்றோ (6)

அநியாயமாய் இந்த உடலை நான் என்று வரும் அந்தகற்கு ஆளாகவோ ஆடி திரிந்து நான் கற்றதும் கேட்டதும் அவலமாய் போதல் நன்றோ
கனியேனும் வறிய செங்காயேனும் உதிர் சருகு கந்த மூலங்களேனும் கனல் வாதை வந்து எய்தின் அள்ளி புசித்து நான் கண் மூடி மெளனி ஆகி – தாயு:11 104/2,3
போதனைசெய்தல் நன்றோ பூரணானந்த வாழ்வே – தாயு:36 574/4
பேயினும் கடையன் ஆகி பிதற்றுதல் செய்தல் நன்றோ
தீயிடை மெழுகாய் நொந்தேன் தெளிவு_இலேன் வீணே காலம் – தாயு:36 577/2,3
நாட்டம் எனக்கு வரல் நன்றோ பராபரமே – தாயு:43 714/2
நாட்டம் இன்றி வாய் பேசல் நன்றோ பராபரமே – தாயு:43 824/2
துன்புறுதல் நன்றோ நீ சொல்லாய் பராபரமே – தாயு:43 889/2
மேல்


நன்னர் (1)

நல்லார்கள் அவையகத்தே இருக்கவைத்தாய் நன்னர் நெஞ்சம் தன்னலமும் நணுகுவேனோ – தாயு:24 345/2
மேல்


நனி (2)

நனி பெரும் குடிலம் காட்டும் நயன வேல் கரிய கூந்தல் – தாயு:21 301/3
நனி இரதம் மாறாது நானும் தனி இருக்க – தாயு:28 537/2

மேல்