நெ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெக்கு 2
நெக்குநெக்குருகப்பண்ணி 1
நெக்குநெக்குருகி 1
நெக்குருக 1
நெக்குருகாத 1
நெக்குருகி 1
நெக்குருகிடவும் 1
நெக்குருகேன் 1
நெகிடிக்கென 1
நெகிழ 2
நெஞ்ச 5
நெஞ்சக 1
நெஞ்சகத்தில் 2
நெஞ்சகம் 2
நெஞ்சகமாம் 1
நெஞ்சகமான 1
நெஞ்சகமே 1
நெஞ்சத்தாலே 1
நெஞ்சத்தினூடே 1
நெஞ்சத்து 1
நெஞ்சம் 27
நெஞ்சமாகிய 1
நெஞ்சமும் 1
நெஞ்சமே 7
நெஞ்சமேனும் 1
நெஞ்சர் 1
நெஞ்சர்க்கு 1
நெஞ்சரும் 1
நெஞ்சன் 3
நெஞ்சனுக்கு 1
நெஞ்சனுக்கும் 1
நெஞ்சனை 1
நெஞ்சாலே 1
நெஞ்சில் 3
நெஞ்சினர் 1
நெஞ்சினர்கள் 1
நெஞ்சினன் 1
நெஞ்சு 8
நெஞ்சு-அது 1
நெஞ்சு_உடையேனுக்கு 1
நெஞ்சும் 2
நெஞ்சுருகி 1
நெஞ்சே 37
நெஞ்சை 3
நெஞ்சோ 5
நெட்டிலே 1
நெட்டு 1
நெட்டு_ஊரர் 1
நெட்டுயிர்த்து 4
நெடிது 3
நெடிய 4
நெடு 2
நெடுமையும் 1
நெருப்பு 1
நெல் 1
நெல்லி 3
நெல்லில் 1
நெறி 58
நெறி-தான் 1
நெறி-தானும் 1
நெறி-தானே 1
நெறி_உடையான் 1
நெறிக்காம் 1
நெறிக்கு 5
நெறிக்கே 1
நெறிக்கேனும் 1
நெறிகள் 1
நெறியாக 2
நெறியாம் 5
நெறியாய் 1
நெறியால் 1
நெறியாளர் 1
நெறியான 1
நெறியில் 2
நெறியின் 1
நெறியினிலும் 1
நெறியும் 1
நெறியே 1
நெறியே-தான் 1
நெறியை 7
நெறியோ 1
நெறியோர் 1

நெக்கு (2)

என்பு எலாம் நெக்கு உடைய ரோமம் சிலிர்ப்ப உடல் இளக மனது அழலின் மெழுகாய் இடையறாது உருக வரும் மழை போல் இரங்கியே இரு விழிகள் நீர் இறைப்ப – தாயு:9 80/1
ஆடாதும் ஆடி நெஞ்சுருகி நெக்கு ஆடவே அமலமே ஏகமே எம் ஆதியே சோதியே எங்கு நிறை கடவுளே அரசே என கூவி நான் – தாயு:12 115/2
மேல்


நெக்குநெக்குருகப்பண்ணி (1)

நெஞ்சனை வலிதின் மேன்மேல் நெக்குநெக்குருகப்பண்ணி
அஞ்சலிசெய்யும் கையும் அருவி நீர் விழியுமாக – தாயு:21 295/2,3
மேல்


நெக்குநெக்குருகி (1)

பண் ஆரும் இசையினொடு பாடி படித்து அருள் பான்மை நெறி நின்று தவறா பக்குவ விசேஷராய் நெக்குநெக்குருகி பணிந்து எழுந்து இரு கை கூப்பி – தாயு:6 48/3
மேல்


நெக்குருக (1)

உடல் குழைய என்பு எலாம் நெக்குருக விழி நீர்கள் ஊற்று என வெதும்பி ஊற்ற ஊசி காந்தத்தினை கண்டு அணுகல் போலவே ஓர் உறவும் உன்னிஉன்னி – தாயு:6 55/1
மேல்


நெக்குருகாத (1)

கண் ஆர நீர் மல்கி உள்ளம் நெக்குருகாத கள்ளனேன் ஆனாலுமோ கை குவித்து ஆடியும் பாடியும் விடாமலே கண் பனி தாரை காட்டி – தாயு:10 93/1
மேல்


நெக்குருகி (1)

இந்த நிலை தெளிய நான் நெக்குருகி வாடிய இயற்கை திரு_உளம் அறியுமே இ நிலையிலே சற்று இருக்க என்றால் மடமை இத சத்ருவாக வந்து – தாயு:2 8/2
மேல்


நெக்குருகிடவும் (1)

கல்லால் ஏய் இருந்த நெஞ்சும் கல்_ஆல் முக்கண் கனியே நெக்குருகிடவும் காண்பேன்-கொல்லோ – தாயு:40 594/2
மேல்


நெக்குருகேன் (1)

தரும் பேர்_இன்ப பொருளே நின்றன்னை நினைந்து நெக்குருகேன்
இரும்போ கல்லோ மரமோ என் இதயம் யாது என்று அறியேனே – தாயு:23 314/3,4
மேல்


நெகிடிக்கென (1)

கானகம் இலங்கு புலி பசுவொடு குலாவும் நின் கண் காண மத யானை நீ கைகாட்டவும் கையால் நெகிடிக்கென பெரிய கட்டை மிக ஏந்தி வருமே – தாயு:5 43/1
மேல்


நெகிழ (2)

மிக வளர வந்த அருள் மெய்யே அகம் நெகிழ
பாரீர் ஒரு சொற்படியே அனுபவத்தை – தாயு:28 469/2,3
மெள்ளமெள்ள கை நெகிழ விட்டாய் பராபரமே – தாயு:43 969/2
மேல்


நெஞ்ச (5)

நின்ற நிலையும் அது நெஞ்ச பிறப்பும் அது – தாயு:28 534/3
ஆயிரம் சொன்னாலும் அறியாத வஞ்ச நெஞ்ச
பேயரொடு கூடில் பிழை காண் பராபரமே – தாயு:43 830/1,2
திண்ணிய நெஞ்ச பறவை சிக்க குழல்_காட்டில் – தாயு:45 1128/1
ஆழ் ஆழி என்ன அளவுபடா வஞ்ச நெஞ்ச
பாழான மாதர் மயல் பற்று ஒழிவது எந்நாளோ – தாயு:45 1137/1,2
பஞ்சாய் பறக்கும் நெஞ்ச பாவியை நீ கூவி ஐயா – தாயு:46 1335/1
மேல்


நெஞ்சக (1)

இரும்பு நேர் நெஞ்சக கள்வன் ஆனாலும் உனை இடைவிட்டு நின்றது உண்டோ என்று நீ அன்று யான் உன் அடிமை அல்லவோ யாதேனும் அறியா வெறும் – தாயு:9 83/3
மேல்


நெஞ்சகத்தில் (2)

நெஞ்சகத்தில் வாழ்வார் நினைக்கின் வேறு என்று அணையார் – தாயு:44 1059/1
நெஞ்சகத்தில் ஐயா நீ நேர்பெறவும் காண்பேனோ – தாயு:46 1332/2
மேல்


நெஞ்சகம் (2)

நீ அன்றி நான் ஆர் நினைவு ஆர் என் நெஞ்சகம் ஆர் – தாயு:43 845/1
நெஞ்சகம் வேறாகி நினை கூட எண்ணுகின்ற – தாயு:51 1397/1
மேல்


நெஞ்சகமாம் (1)

நிற்பர் அம்போருகன் மால் பணி நீதர் என் நெஞ்சகமாம்
கல் பரந்தாங்கு கரைந்திட வான் ஒத்த காட்சி நல்கும் – தாயு:27 402/2,3
மேல்


நெஞ்சகமான (1)

கார் ஆரும் ஆணவ காட்டை களைந்து அறக்கண்டு அகங்காரம் என்னும் கல்லை பிளந்து நெஞ்சகமான பூமி வெளி காண திருத்தி மேன்மேல் – தாயு:8 72/1
மேல்


நெஞ்சகமே (1)

நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே – தாயு:43 786/1
மேல்


நெஞ்சத்தாலே (1)

வல் நெஞ்சத்தாலே நான் வாழ்வு இழந்தேன் பைங்கிளியே – தாயு:44 1056/2
மேல்


நெஞ்சத்தினூடே (1)

நெஞ்சத்தினூடே நினைவாய் நினைவூடும் – தாயு:33 566/1
மேல்


நெஞ்சத்து (1)

நல் நெஞ்சத்து அன்பர் எல்லாம் நாதரை சேர்ந்து இன்பு அணைந்தார் – தாயு:44 1056/1
மேல்


நெஞ்சம் (27)

நேசானுசாரியாய் விவகரிப்பேன் அந்த நினைவையும் மறந்த போது நித்திரைகொள்வேன் தேகம் நீங்கும் என எண்ணிலோ நெஞ்சம் துடித்து அயருவேன் – தாயு:2 4/2
சிற்றறிவு அது அன்றியும் எவரேனும் ஒரு மொழி திடுக்கென்று உரைத்த போது சிந்தை செவியாகவே பறையறைய உதர வெம் தீ நெஞ்சம் அளவளாவ – தாயு:5 46/2
படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குற பாடி ஆடி குதித்து பனி மதி முகத்திலே நிலவு அனைய புன்னகை பரப்பி ஆர்த்தார்த்து எழுந்து – தாயு:6 55/2
கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும் என் கல்_நெஞ்சம் உருகவிலையே கருணைக்கு இணங்காத வன்மையையும் நான்முகன் கற்பிக்க ஒரு கடவுளோ – தாயு:9 79/1
இனி ஏது எமக்கு உன் அருள் வருமோ என கருதி ஏங்குதே நெஞ்சம் ஐயோ இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லையே – தாயு:11 104/1
கல் மார்க்க நெஞ்சம் உள எனக்கும்-தானே கண்டவுடன் ஆனந்தம் காண்டல் ஆகும் – தாயு:14 143/4
பூராயமா மேல் ஒன்று அறியா வண்ணம் புண்ணாளர் போல் நெஞ்சம் புலம்பி உள்ளே – தாயு:14 155/3
நின்றாயே மாயை எனும் திரையை நீக்கி நின்னை யார் அறிய வல்லார் நினைப்போர் நெஞ்சம்
மன்று ஆக இன்ப_கூத்து ஆட வல்ல மணியே என் கண்ணே மா மருந்தே நால்வர்க்கு – தாயு:16 182/2,3
தெருளத்தெருள அன்பர் நெஞ்சம் தித்தித்து உருக தெவிட்டாத – தாயு:23 319/3
தன் நெஞ்சம் நினைப்பு ஒழியாது அறிவு_இலி நான் ஞானம் எனும் தன்மை பேச – தாயு:24 325/1
உன் நெஞ்சம் மகிழ்ந்து ஒரு சொல் உரைத்தனையே அதனை உன்னி உருகேன் ஐயா – தாயு:24 325/2
கல் நெஞ்சோ அலது மண்ணாங்கட்டி நெஞ்சோ எனது நெஞ்சம் கருதில்-தானே – தாயு:24 325/4
நல்லார்கள் அவையகத்தே இருக்கவைத்தாய் நன்னர் நெஞ்சம் தன்னலமும் நணுகுவேனோ – தாயு:24 345/2
வாட்டம்_இல் நெஞ்சம் கிண்ணமா சேர்த்து வாய்மடுத்து அருந்தினன் ஆங்கே – தாயு:24 360/3
நின்றதாய் நிலை நின்றிடும் அறிஞ என் நெஞ்சம்
மன்றதாய் இன்ப உருக்கொடு நடித்திடின் வாழ்வேன் – தாயு:25 373/3,4
தொடக்கும் என் நெஞ்சம் மனம் அற்ற பூரண தொட்டிக்குளே – தாயு:27 412/3
நீ உண்டு நின்னை சரண் புக நான் உண்டு என் நெஞ்சம் ஐயா – தாயு:27 421/3
தடையால் தளையிட்டு நெஞ்சம் புண் ஆக தளரவைத்தாய் – தாயு:27 455/3
சொல்லாலே வாய் துடிப்பது அல்லால் நெஞ்சம் துடித்து இரு கண் நீர் அருவி சொரிய தேம்பி – தாயு:40 594/1
உற்றவர்க்கே கண்ணீர் கம்பலை உண்டாகும் உறாதவரே கல்_நெஞ்சம் உடையர் ஆவார் – தாயு:41 595/2
கரக்கும் இயல்பு_உடையேன் பாழ் நெஞ்சம் எந்தாய் கரும்_தாதோ வல் உருக்கோ கரிய கல்லோ – தாயு:42 635/2
என்பு உருகி நெஞ்சம் இளகி கரைந்துகரைந்து – தாயு:43 656/1
எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணிஎண்ணி ஏழை நெஞ்சம்
புண்ணாக செய்தது இனி போதும் பராபரமே – தாயு:43 670/1,2
அழுக்காற்றால் நெஞ்சம் அழுங்கிய புன் மாக்கள் – தாயு:43 932/1
ஏங்கி இடையும் நெஞ்சம் ஏழையை நீ வா என்றே – தாயு:43 954/1
கல்லாத நெஞ்சம் கரைந்து உருக எ தொழிற்கும் – தாயு:47 1352/1
உற்றுவிடும் நெஞ்சம் உனை ஒன்றி நிற்பது எப்படியோ – தாயு:51 1406/2
மேல்


நெஞ்சமாகிய (1)

பார் அணங்கோடு சுழல் நெஞ்சமாகிய பாதரசம் – தாயு:27 425/3
மேல்


நெஞ்சமும் (1)

கல்லாத அறிவும் மேல் கேளாத கேள்வியும் கருணை சிறிதேதும் இல்லா காட்சியும் கொலை களவு கள் காமம் மாட்சியா காதலித்திடும் நெஞ்சமும்
பொல்லாத பொய்ம்மொழியும் அல்லாது நன்மைகள் பொருந்து குணம் ஏதும் அறியேன் புருஷர் வடிவானதே அல்லாது கனவிலும் புருஷார்த்தம் ஏதும் இல்லேன் – தாயு:5 42/1,2
மேல்


நெஞ்சமே (7)

நினைக்கவோ அறியாது என்றன் நெஞ்சமே – தாயு:18 209/4
ஆட்டுவான் இறை என அறிந்து நெஞ்சமே
தேட்டம் ஒன்று அற அருள் செயலில் நிற்றியேல் – தாயு:24 324/2,3
காலம் படைக்க தவம் படையாது என்-கொல் கல்_நெஞ்சமே – தாயு:27 435/4
கள்ளம் பொருந்தும் மட நெஞ்சமே கொடும் காலர் வந்தால் – தாயு:27 441/1
பொல்லா மயக்கத்தில் ஆழ்ந்து ஆவது என்ன புகல் நெஞ்சமே – தாயு:27 445/4
நெஞ்சமே என் போல நீ அழுந்த வாராயோ – தாயு:29 546/4
நீதனை கலந்து நிற்க நெஞ்சமே நீ வா என்றால் – தாயு:36 574/2
மேல்


நெஞ்சமேனும் (1)

எ நெஞ்சமேனும் இரங்குமே நின் அருட்கு – தாயு:43 833/1
மேல்


நெஞ்சர் (1)

நெஞ்சர் நேய நெஞ்சில் கொண்டிருப்பது எந்நாளோ – தாயு:45 1254/2
மேல்


நெஞ்சர்க்கு (1)

வாவா என்றவர்க்கு அருளும் கருணை எந்தாய் வன்_நெஞ்சர்க்கு இரங்குவது எவ்வாறு நீயே – தாயு:41 596/2
மேல்


நெஞ்சரும் (1)

கல்_நெஞ்சரும் உளரோ காட்டாய் பராபரமே – தாயு:43 833/2
மேல்


நெஞ்சன் (3)

நெஞ்சன் என நிற்கவைத்தாய் நீதியோ தற்பரமே – தாயு:28 474/3
பொய் குவித்த நெஞ்சன் அருள் பொற்பு அறிந்து திக்கு அனைத்தும் – தாயு:43 927/1
மாசு_ஆன நெஞ்சன் இவன் வஞ்சன் என்றோ வாய் திறந்து – தாயு:51 1394/1
மேல்


நெஞ்சனுக்கு (1)

கடல் மடை திறந்து அனைய அன்பர் அன்புக்கு எளியை கல்_நெஞ்சனுக்கு எளியையோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 55/4
மேல்


நெஞ்சனுக்கும் (1)

நெஞ்சனுக்கும் உண்டோ நெறி-தான் பராபரமே – தாயு:43 675/2
மேல்


நெஞ்சனை (1)

நெஞ்சனை வலிதின் மேன்மேல் நெக்குநெக்குருகப்பண்ணி – தாயு:21 295/2
மேல்


நெஞ்சாலே (1)

மடம் பெறு பாழ் நெஞ்சாலே அஞ்சாதே நிராசை மன் இடமே இடம் அந்த மா நிலத்தே பொருளும் – தாயு:17 188/2
மேல்


நெஞ்சில் (3)

நெஞ்சில் உணர்த்தும் நிறைவே பராபரமே – தாயு:43 759/2
கிட்டு ஊராய் நெஞ்சில் கிளர்வார் தழுவ என்றால் – தாயு:44 1044/1
நெஞ்சர் நேய நெஞ்சில் கொண்டிருப்பது எந்நாளோ – தாயு:45 1254/2
மேல்


நெஞ்சினர் (1)

களம் பெறு வஞ்ச நெஞ்சினர் காணா காட்சியே சாட்சியே அறிஞர் – தாயு:19 274/3
மேல்


நெஞ்சினர்கள் (1)

பொய் வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே பொய் இலா மெய்யர் அறிவில் போத பரிபூரண அகண்டிதாகாரமாய் போக்கு_வரவு அற்ற பொருளே – தாயு:4 29/3
மேல்


நெஞ்சினன் (1)

மர பான்மை நெஞ்சினன் யான் வேண்டுவ கேட்டு இரங்கு எனவே மெளனத்தோடு அந்தர – தாயு:24 323/3
மேல்


நெஞ்சு (8)

நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் நெடு நாள் இருந்த பேரும் நிலையாகவே இனும் காயகற்பம் தேடி நெஞ்சு புண் ஆவர் எல்லாம் – தாயு:2 13/2
நெஞ்சு உகந்து உனை நேசித்த மார்க்கண்டர்க்கு – தாயு:18 210/1
இரந்து நெஞ்சு உடைந்து கண் துயில்பெறாமல் இருந்ததும் என் கணில் இருட்டை – தாயு:19 276/3
அழுக்கு ஆர்ந்த நெஞ்சு_உடையேனுக்கு ஐயா நின் அருள் வழங்கின் – தாயு:27 434/1
பூண கருதும் நெஞ்சு போற்ற கரம் எழும்பும் – தாயு:28 488/3
கலங்காத நெஞ்சு உடைய ஞான தீரர் கடவுள் உனை காணவே காயம் ஆதி – தாயு:42 626/1
நெஞ்சு அழுத்தி ஒன்றாகி நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1311/2
தொண்டர் கண்டு சொரி கணீர் கண்ட நெஞ்சு கரையுமே – தாயு:53 1419/2
மேல்


நெஞ்சு-அது (1)

எந்த நிலை பேசினும் இணங்கவிலை அல்லால் இறப்பொடு பிறப்பை உள்ளே எண்ணினால் நெஞ்சு-அது பகீரெனும் துயிலுறாது இரு விழியும் இரவு_பகலாய் – தாயு:4 30/3
மேல்


நெஞ்சு_உடையேனுக்கு (1)

அழுக்கு ஆர்ந்த நெஞ்சு_உடையேனுக்கு ஐயா நின் அருள் வழங்கின் – தாயு:27 434/1
மேல்


நெஞ்சும் (2)

வாடிய என் நெஞ்சும் முக வாட்டமும் நீ கண்டிலையோ – தாயு:33 565/2
கல்லால் ஏய் இருந்த நெஞ்சும் கல்_ஆல் முக்கண் கனியே நெக்குருகிடவும் காண்பேன்-கொல்லோ – தாயு:40 594/2
மேல்


நெஞ்சுருகி (1)

ஆடாதும் ஆடி நெஞ்சுருகி நெக்கு ஆடவே அமலமே ஏகமே எம் ஆதியே சோதியே எங்கு நிறை கடவுளே அரசே என கூவி நான் – தாயு:12 115/2
மேல்


நெஞ்சே (37)

குருவை முக்கண் எம் கோவை பணி நெஞ்சே
கரு இருக்கின்ற கன்மம் இங்கு இல்லையே – தாயு:18 241/3,4
பாதமே கதி மற்று இலை பாழ் நெஞ்சே – தாயு:18 243/4
மற்று உனக்கு மயக்கம் என் வல் நெஞ்சே
கற்றை வார் சடை கண்_நுதலோன் அருள் – தாயு:18 244/1,2
ஒருவரே துணை என்று உணராய் நெஞ்சே
வருவரே கொடும் காலர்கள் வந்து எதிர் – தாயு:18 266/2,3
சுற்றமோ நமை காக்கும் சொலாய் நெஞ்சே
கற்றை வார் சடை கண்_நுதல் பாதமே – தாயு:18 270/2,3
முன்னிலைச்சுட்டு ஒழிதி என பல காலும் நெஞ்சே நான் மொழிந்தேனே நின்றன் – தாயு:24 329/1
சேது மேவிய ராம_நாயகன்-தனை சிந்தை செய் மட நெஞ்சே – தாயு:24 332/4
எண்ணாதது எண்ணிய நெஞ்சே துயர் ஒழி என் இரண்டு – தாயு:27 413/1
முன்னிலைச்சுட்டு ஒழி நெஞ்சே நின் போதம் முளைக்கில் ஐயோ – தாயு:27 423/1
சின்மய முத்திரை கையே மெய் ஆக தெளிந்த நெஞ்சே
நின் மயம் என் மயம் எல்லாம் நிறைந்த நிராமயமே – தாயு:27 442/3,4
வாராய் நெஞ்சே உன்றன் துன்_மார்க்கம் யாவையும் வைத்துக்கட்டு இங்கு – தாயு:27 450/1
போதத்திலே சற்றும் வைத்திலையே வெறும் புன்மை நெஞ்சே
வேதத்திலே தர்க்க வாதத்திலே விளங்காது விந்து – தாயு:27 451/2,3
முற்றும் துணை என நம்பு கண்டாய் சுத்த மூட நெஞ்சே – தாயு:27 457/4
நிற்கும் திரு_அருளில் நெஞ்சே யாம் நிற்பது அல்லால் – தாயு:28 461/3
பாராயோ நெஞ்சே பகர் – தாயு:28 470/4
மோகாதி அல்லலிலே மூழ்கினையே நெஞ்சே இ – தாயு:28 476/3
கல்லும் உருகாதோ கல்_நெஞ்சே பொல்லாத – தாயு:28 499/2
காட்டாமல் நிற்கும் கருத்து அறிந்தால் நெஞ்சே உன் – தாயு:28 523/3
இழுக்கடித்தாய் நெஞ்சே நீ என் கலைகள் சோர – தாயு:28 524/3
எங்கும் சிவமே இரண்டு அற்று நிற்கில் நெஞ்சே
தங்கும் சுகம் நீ சலியாதே அங்கு இங்கு என்று – தாயு:28 525/1,2
மெய்யை பொய் என்றிடவும் மெய் அணையா பொய் நெஞ்சே
பொய்யைத்-தான் மெய் எனவும் போகுமோ ஐயம்_அற – தாயு:28 526/1,2
சொல்லை மறவாமல் தோய்ந்தால் நெஞ்சே உன்னால் – தாயு:28 530/3
ஆசான் மவுனி அளித்தான் நெஞ்சே உனை ஓர் – தாயு:28 531/3
பெற்றோமே நெஞ்சே பெரும் பிறவி சாராமல் – தாயு:28 542/3
பாசத்துள் செல்லாதே பல்காலும் பாழ் நெஞ்சே – தாயு:29 543/4
தாழாயோ எந்தை அருள் தாள் கீழ் நெஞ்சே எனை போல் – தாயு:29 544/3
மருள் பேயர் போல் இருக்க வா கண்டாய் வஞ்ச நெஞ்சே – தாயு:29 545/4
ஓராயோ நெஞ்சே உருகாயோ உற்றிருந்து – தாயு:29 547/3
ஓயாமல் உன்னி உருகும் நெஞ்சே அ நிலைக்கே – தாயு:29 548/3
சந்ததம் நெஞ்சே பரத்தில் சாரின் இன்பம் உண்டாமே – தாயு:29 549/4
உன் புலத்தை ஓரின் அருட்கு ஒப்பு ஆவாய் நெஞ்சே நீ – தாயு:29 550/3
பொருளோடு யான் இருக்க போய் ஒளித்த நெஞ்சே நீ – தாயு:29 551/2
அவ்விடத்தே உன்னை நெஞ்சே ஆராயில் கண்டிலனே – தாயு:29 552/2
மன்னை பொருள் எனவே வாழாமல் பாழ் நெஞ்சே
பொன்னை புவியை மட பூவையரை மெய் எனவே – தாயு:34 569/2,3
குற்றம் என்று என் நெஞ்சே கொதிக்கும் பராபரமே – தாயு:43 672/2
மாசு_அற்ற அன்பர் நெஞ்சே மாறாத பெட்டகமா – தாயு:46 1318/1
ஆண்டான் உரைத்தபடியே சற்றும் அசையாது இருந்துகொள் அறிவு ஆகி நெஞ்சே – தாயு:54 1444/2
மேல்


நெஞ்சை (3)

இரும்போ கல்லோ மரமோ என்னும் நெஞ்சை கனல் மேல் இட்ட மெழுகா உருக்கும் இன்ப_வெள்ளம் ஆகி – தாயு:17 192/2
நேரே நினது அருள் என் நெஞ்சை கவரின் ஒன்றும் – தாயு:43 734/1
கலக்கமுற நெஞ்சை கலக்கி திரும்ப – தாயு:43 959/1
மேல்


நெஞ்சோ (5)

வன் நெஞ்சோ இரங்காத மர நெஞ்சோ இருப்பு நெஞ்சோ வைரமான – தாயு:24 325/3
வன் நெஞ்சோ இரங்காத மர நெஞ்சோ இருப்பு நெஞ்சோ வைரமான – தாயு:24 325/3
வன் நெஞ்சோ இரங்காத மர நெஞ்சோ இருப்பு நெஞ்சோ வைரமான – தாயு:24 325/3
கல் நெஞ்சோ அலது மண்ணாங்கட்டி நெஞ்சோ எனது நெஞ்சம் கருதில்-தானே – தாயு:24 325/4
கல் நெஞ்சோ அலது மண்ணாங்கட்டி நெஞ்சோ எனது நெஞ்சம் கருதில்-தானே – தாயு:24 325/4
மேல்


நெட்டிலே (1)

நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே நின் அடியர் கூட்டத்திலே நிலைபெற்ற அன்பிலே மலைவு அற்ற மெய்ஞ்ஞான ஞேயத்திலே உன் இரு தாள் – தாயு:37 579/3
மேல்


நெட்டு (1)

நெட்டு_ஊரர் ஆவர் அவர் நேசம் என்னோ பைங்கிளியே – தாயு:44 1044/2
மேல்


நெட்டு_ஊரர் (1)

நெட்டு_ஊரர் ஆவர் அவர் நேசம் என்னோ பைங்கிளியே – தாயு:44 1044/2
மேல்


நெட்டுயிர்த்து (4)

நேராக ஒரு கோபம் ஒரு வேளை வர அந்த நிறைவு ஒன்றும் இல்லாமலே நெட்டுயிர்த்து தட்டழிந்து உளறுவார் வசன நிர்வாகர் என்ற பேரும் – தாயு:2 6/2
நிகர்_இல் பசு பதி ஆன பொருளை நாடி நெட்டுயிர்த்து பேர்_அன்பால் நினைதல்செய்வாம் – தாயு:3 25/4
நீராளமாய் உருகி கண்ணீர் சோர நெட்டுயிர்த்து மெய்ம்மறந்து ஓர் நிலையாய் நிற்பேன் – தாயு:14 155/4
நீராய் கசிந்து உருகி நெட்டுயிர்த்து நின்றேனை – தாயு:43 870/1
மேல்


நெடிது (3)

காய் இலை உதிர்ந்த கனி சருகு புனல் மண்டிய கடும் பசி தனக்கு அடைத்தும் கார் வரையின் முழையில் கருங்கல் போல் அசையாது கண் மூடி நெடிது இருந்தும் – தாயு:8 70/1
நியம லக்ஷணமும் இயம லக்ஷணமும் ஆசனாதி வித பேதமும் நெடிது உணர்ந்து இதய_பத்ம பீடம் மிசை நின்று இலங்கும் அஜபா நலத்து – தாயு:13 127/1
பத்தியாய் நெடிது நம்பும் என்னை ஒரு மையல் தந்து அகில மாயையை பாருபார் என நடத்த வந்தது என் பாரதத்தினும் இது உள்ளதோ – தாயு:13 130/2
மேல்


நெடிய (4)

நீரில் உறை வண்டாய் துவண்டு சிவயோக நிலை நிற்பீர் விகற்பமாகி நெடிய முகில் ஏழும் பரந்து வருஷிக்கிலோ நிலவு மதி மண்டலமதே – தாயு:7 59/2
பற்பல விதம் கொண்ட புலி கலையின் உரியது படைத்து ப்ரதாபம் உறலால் பனி வெயில்கள் புகுதாமல் நெடிய வான் தொடர் நெடிய பரு மர வனங்கள் ஆரும் – தாயு:7 65/3
பற்பல விதம் கொண்ட புலி கலையின் உரியது படைத்து ப்ரதாபம் உறலால் பனி வெயில்கள் புகுதாமல் நெடிய வான் தொடர் நெடிய பரு மர வனங்கள் ஆரும் – தாயு:7 65/3
நெடிய வான் என எங்கும் நிறைந்து ஒளிர் – தாயு:18 227/3
மேல்


நெடு (2)

நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் நெடு நாள் இருந்த பேரும் நிலையாகவே இனும் காயகற்பம் தேடி நெஞ்சு புண் ஆவர் எல்லாம் – தாயு:2 13/2
துளங்கு நல் நுதல்_கண் தோன்ற சுழல் வளி நெடு மூச்சு ஆக – தாயு:15 168/2
மேல்


நெடுமையும் (1)

நீண்ட நெடுமையும் அகல குறுக்கும் காட்டா நிறை பரிபூரண அறிவாய் நித்தம் ஆகி – தாயு:14 144/2
மேல்


நெருப்பு (1)

ஏறு மயிர் பாலம் உணர்வு இந்த விடயங்கள் நெருப்பு
ஆறு எனவும் நன்றாய் அறிந்தேன் பராபரமே – தாயு:43 809/1,2
மேல்


நெல் (1)

மரவுரி உடுத்தும் மலை வன நெல் கொறித்தும் உதிர்வன சருகு வாயில் வந்தால் வன் பசி தவிர்த்தும் அனல் வெயில் ஆதி மழையால் வருந்தியும் மூல அனலை – தாயு:10 97/1
மேல்


நெல்லி (3)

கைத்தலம் விளங்கும் ஒரு நெல்லி அம் கனி என கண்ட வேதாகமத்தின் காட்சி புருஷார்த்தம் அதில் மாட்சி பெறு முத்தி-அது கருதின் அனுமானம் ஆதி – தாயு:11 106/1
கண் அகல் ஞாலம் மதிக்க தானே உள்ளங்கையில் நெல்லி கனி போல காட்சியாக – தாயு:14 139/3
கைக்குள் வளர் நெல்லி கனியே பராபரமே – தாயு:43 643/2
மேல்


நெல்லில் (1)

நெல்லில் பதர் போல் நிற்பார் பராபரமே – தாயு:43 931/2
மேல்


நெறி (58)

பூராயமாய் உணர ஊகம்-அது தந்ததும் பொய் உடலை நிலை அன்று என போத நெறி தந்ததும் சாசுவத ஆனந்த போகமே வீடு என்னவே – தாயு:2 11/2
சங்கர சுயம்புவே சம்புவே எனவும் மொழி தழுதழுத்திட வணங்கும் சன்மார்க்க நெறி இலா துன்மார்க்கனேனையும் தண் அருள் கொடுத்து ஆள்வையோ – தாயு:4 26/2
புந்தி மகிழ் உற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன் பூராயமாக நினது அருள் வந்து உணர்த்த இவை போன வழி தெரியவில்லை – தாயு:4 30/2
பத்தி நெறி நிலைநின்றும் நவ கண்ட பூமி பரப்பை வலமாக வந்தும் பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும் பசி_தாகம் இன்றி எழுநா – தாயு:4 36/1
வந்த குருவே வீறு சிவஞான சித்தி நெறி மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 38/4
ஞான நெறி முக்ய நெறி காட்சி அனுமானம் முதல் நானாவிதங்கள் தேர்ந்து நான் நான் என குளறுபடை புடைபெயர்ந்திடவும் நான்கு சாதனமும் ஓர்ந்திட்டு – தாயு:5 41/2
ஞான நெறி முக்ய நெறி காட்சி அனுமானம் முதல் நானாவிதங்கள் தேர்ந்து நான் நான் என குளறுபடை புடைபெயர்ந்திடவும் நான்கு சாதனமும் ஓர்ந்திட்டு – தாயு:5 41/2
பண் ஆரும் இசையினொடு பாடி படித்து அருள் பான்மை நெறி நின்று தவறா பக்குவ விசேஷராய் நெக்குநெக்குருகி பணிந்து எழுந்து இரு கை கூப்பி – தாயு:6 48/3
கற்றை அம் சடை மெளனி தானே கனிந்த கனி கனிவிக்க வந்த கனி போல் கண்டது இ நெறி என திரு_உள கனிவினொடு கனிவாய் திறந்தும் ஒன்றை – தாயு:9 82/2
எத்தனை விகாதம் வரும் என்று சுகர் சென்ற நெறி இ உலகம் அறியாததோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 98/4
பாகத்தினால் கவிதை பாடி படிக்கவோ பத்தி நெறி இல்லை வேத பாராயண பனுவல் மூவர் செய் பனுவல்-அது பகரவோ இசையும் இல்லை – தாயு:11 102/1
சமய நெறி காணாத சாக்ஷி நீ சூக்ஷ்மமா தமியனேற்கு உளவு புகலாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 103/4
ஓயாது பெறுவர் என முறையிட்டதால் பின்னர் உளறுவது கருமம் அன்றாம் உபய நெறி ஈது என்னின் உசித நெறி எந்த நெறி உலகிலே பிழை பொறுக்கும் – தாயு:11 107/3
ஓயாது பெறுவர் என முறையிட்டதால் பின்னர் உளறுவது கருமம் அன்றாம் உபய நெறி ஈது என்னின் உசித நெறி எந்த நெறி உலகிலே பிழை பொறுக்கும் – தாயு:11 107/3
ஓயாது பெறுவர் என முறையிட்டதால் பின்னர் உளறுவது கருமம் அன்றாம் உபய நெறி ஈது என்னின் உசித நெறி எந்த நெறி உலகிலே பிழை பொறுக்கும் – தாயு:11 107/3
பின்னம் பிறக்காது சேய் என வளர்த்திட பேயேனை நல்கவேண்டும் பிறவாத நெறி எனக்கு உண்டு என்னின் இம்மையே பேசு கர்ப்பூர தீபம் – தாயு:11 108/2
மின்னும்படிக்கு அகண்டாகார அன்னை-பால் வினையேனை ஒப்புவித்து வீட்டு நெறி கூட்டிடுதல் மிகவும் நன்று இவை அன்றி விவகாரம் உண்டு என்னிலோ – தாயு:11 108/3
கோடாது எனை கண்டு எனக்குள் நிறை சாந்த வெளி கூடி இன்பாதீதமும் கூடினேனோ சரியை கிரியையில் முயன்று நெறி கூடினேனோ அல்லன் யான் – தாயு:12 114/2
குறி-தான் அளித்தனை நல் மரவுரி கொள் அந்தண கோலமாய் அசபா நலம் கூறின பின் மெளனியாய் சும்மா இருக்க நெறி கூட்டினை எலாம் இருக்க – தாயு:12 116/3
மெய் வருந்து தவம் இல்லை நல் சரியை கிரியை யோகம் எனும் மூன்றதாய் மேவுகின்ற சவுபான நல் நெறி விரும்பவில்லை உலகத்திலே – தாயு:13 125/2
செயம் மிகுந்து வரு சித்த யோக நிலை பெற்று ஞான நெறி அடைவனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 127/4
நெறியின் வைகி வளர் செல்வமும் உதவி நோய்கள் அற்ற சுக வாழ்க்கையாய் நியமம் ஆதி நிலை நின்று ஞான நெறி நிஷ்டை கூடவும் எந்நாளுமே – தாயு:13 128/2
பன்முக சமய நெறி படைத்தவரும் யாங்களே கடவுள் என்றிடும் பாதகத்தவரும் வாத தர்க்கமிடு படிறரும் தலை வணங்கிட – தாயு:13 131/1
செப்பு அரிய சமய நெறி எல்லாம் தந்தம் தெய்வமே தெய்வம் எனும் செயற்கையான – தாயு:14 140/1
சந்தான கற்பகம் போல் அருளை காட்ட தக்க நெறி இ நெறியே-தான் சன்மார்க்கம் – தாயு:14 142/4
கலை பலவாம் நெறி என்றும் தர்க்கம் என்றும் கடல் உறும் நுண்மணல் எண்ணி காணும் போதும் – தாயு:14 147/4
சொற்ற சொற்கள் சுகாரம்பமோ நெறி
நிற்றல் வேண்டும் நிருவிகற்ப சுகம் – தாயு:18 229/2,3
ஒருத்தர் ஆர் உளப்பாடு உணர்பவர் யாவர் உலகவர் பல் நெறி எனக்கு – தாயு:19 277/3
கோனே என்னை புரக்கும் நெறி குறித்தாய்_இலையே கொடியேனை – தாயு:20 289/2
அன்று நால்வருக்கும் ஒளி நெறி காட்டும் அன்பு உடை சோதியே செம்பொன் – தாயு:22 310/1
வான் என வயங்கி ஒன்று இரண்டு என்னா மார்க்கமா நெறி தந்து மாறா – தாயு:22 311/3
நினையும் நினைவுக்கு எட்டாத நெறி பெற்று உணர்ந்த நெறியாளர் – தாயு:23 313/1
நெறி நின்று ஒழுக விசாரித்தால் நினக்கோ இல்லை எனக்காமே – தாயு:23 315/4
மயக்கு சிந்தனை தெளிவு என இரு நெறி வகுப்பான் – தாயு:24 356/1
கற்கும் நெறி யாது இனிமேல் காண் – தாயு:28 461/4
பொருந்தும் புனிதர்-பால் தீது நெறி
செல்லுமோ செல்லாதே செல்லும் இடம் இன்பம் அலால் – தாயு:28 473/2,3
கொணடவரும் அன்னவரே கூறு அரிய முத்தி நெறி
கண்டவரும் அன்னவரே காண் – தாயு:28 479/3,4
வெறியாய் மயங்கவும் ஏன் விட்டாய் நெறி மயங்கி – தாயு:28 494/2
ஊசல் சுழல் போல் உலக நெறி வாதனையால் – தாயு:29 543/3
பொய் வந்து உழலும் சமய நெறி புகுத வேண்டா முத்தி தரும் – தாயு:30 554/3
எடுத்த தேகம் பொருள் ஆவி மூன்றும் நீ எனக்கு ஒன்று இல்லை என மோன நல் நெறி
கொடுத்த போது கொடுத்தது அன்றோ பினும் குளறி நான் என்று கூத்தாட மாயையை – தாயு:31 556/1,2
முத்தி நெறி வேண்டாத மூடனேன் ஆ கெடுவேன் – தாயு:33 567/2
நின்றாயே நினை பெறுமாறு எவ்வாறு ஆங்கே நின் அருள் கொண்டு அறிவது அல்லால் நெறி வேறு உண்டோ – தாயு:42 607/2
நெறி பார்க்கின் நின்னை அன்றி அகிலம் வேறோ நிலம் நீர் தீ கால் வானும் நீ அலாத – தாயு:42 608/1
நீதி எங்கே மறை எங்கே மண் விண் எங்கே நித்தியராம் அவர்கள் எங்கே நெறி தப்பாத – தாயு:42 615/1
பற்று அற்று இருக்கும் நெறி பற்றில் கடல் மலையும் – தாயு:43 877/1
நெறி நிற்பார் யாரே நிகழ்த்தாய் பராபரமே – தாயு:43 885/2
சித்தி நெறி கேட்டல் செக மயக்கம் சன்மம்_அற – தாயு:43 902/1
முத்தி நெறி கேட்டல் முறை காண் பராபரமே – தாயு:43 902/2
சொல்லும் சமய நெறி சுற்றுக்குளே சுழலும் – தாயு:43 940/1
ஆகும் நெறி நல்ல நெறி ஐயா பராபரமே – தாயு:43 992/2
ஆகும் நெறி நல்ல நெறி ஐயா பராபரமே – தாயு:43 992/2
உலக நெறி போல் சடலம் ஓய உயிர் முத்தி – தாயு:43 993/1
உன்னாமல் ஒன்று இரண்டு என்று ஓராமல் வீட்டு நெறி
சொன்னார் வரவும் வகை சொல்லாய் நீ பைங்கிளியே – தாயு:44 1031/1,2
நின்றுவிடும் என்ற நெறி நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1264/2
நெறி_உடையான் சொல்லில் நிலைநிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1266/2
கன்ம நெறி தப்பில் கடு நரகு என்று எந்நாளும் – தாயு:45 1299/1
நன்மை தரும் ஞான நெறி நான் அணைவது எந்நாளோ – தாயு:45 1299/2
மேல்


நெறி-தான் (1)

நெஞ்சனுக்கும் உண்டோ நெறி-தான் பராபரமே – தாயு:43 675/2
மேல்


நெறி-தானும் (1)

சொல்லால் முழக்கியது மிக்க உபகாரமா சொல்லிறந்தவரும் விண்டு சொன்னவையும் இவை நல்ல குருவான பேரும் தொகுத்த நெறி-தானும் இவையே – தாயு:6 49/2
மேல்


நெறி-தானே (1)

ஞான நெறி-தானே நழுவிடினும் மு பதத்துள் – தாயு:45 1300/1
மேல்


நெறி_உடையான் (1)

நெறி_உடையான் சொல்லில் நிலைநிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1266/2
மேல்


நெறிக்காம் (1)

நெறிகள் தாம் பலபலவுமாய் அந்தந்த நெறிக்காம்
செறியும் தெய்வமும் பலபல ஆகவும் செறிந்தால் – தாயு:25 367/1,2
மேல்


நெறிக்கு (5)

வாதமிடும் சமய நெறிக்கு அரியது ஆகி மெளனத்தோர்-பால் வெளியாய் வயங்காநின்ற – தாயு:3 24/3
நல்லவன் சாருவாகன் நான் சொலும் நெறிக்கு வீணில் – தாயு:15 173/2
மருள் எனக்கு இல்லை முன்பின் வரும் நெறிக்கு இ வழக்கு – தாயு:24 357/3
ஞான நெறிக்கு ஏற்ற குரு நண் அரிய சித்தி முத்தி – தாயு:28 541/1
சித்தி நெறிக்கு என் கடவேன் சீர் அடியார்க்கு ஏவல்செயும் – தாயு:33 567/3
மேல்


நெறிக்கே (1)

வீறு அனைத்தும் இ நெறிக்கே என்ன என்னை மேவு என்ற வரத்தே பாழ் வெய்ய மாயை – தாயு:14 134/2
மேல்


நெறிக்கேனும் (1)

பத்தி நெறிக்கேனும் முகம் பார் நீ பராபரமே – தாயு:33 567/4
மேல்


நெறிகள் (1)

நெறிகள் தாம் பலபலவுமாய் அந்தந்த நெறிக்காம் – தாயு:25 367/1
மேல்


நெறியாக (2)

நெறியாக கூறுவன் கேள் எந்த நாளும் நிர்க்குணம் நிற்கு உளம் வாய்த்து நீடு வாழ்க – தாயு:14 150/3
புத்தி நெறியாக உனை போற்றி பல காலும் – தாயு:33 567/1
மேல்


நெறியாம் (5)

ஆன நெறியாம் சரியை ஆதி சோபானம் உற்று அணுபக்ஷ சம்புபக்ஷம் ஆம் இரு விகற்பமும் மாயாதி சேவையும் அறிந்து இரண்டு ஒன்று என்னும் ஓர் – தாயு:5 41/3
பொய்யும் அவாவும் அழுக்காறும் புடைபட்டு ஓடும் நல் நெறியாம்
மெய்யும் அறிவும் பெறும் பேறும் விளங்கும் எனக்கு உன் அடியார்-பால் – தாயு:23 317/2,3
என்னுடை உயிரே என் உளத்து அறிவே என்னுடை அன்பு எனும் நெறியாம்
கன்னல் முக்கனி தேன் கண்டு அமிர்து என்ன கலந்து எனை மேவிட கருணை – தாயு:24 361/1,2
மாலை வளர்ந்து என்னை வளர்த்து இறைவர் பல் நெறியாம்
பாலைவனத்தில் விட்ட பாவம் என்னோ பைங்கிளியே – தாயு:44 1070/1,2
நெறியாம் உரை உணர்ந்து நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1268/2
மேல்


நெறியாய் (1)

அறிவாய் இருந்திடும் நாத ஒலி காட்டியே அமிர்த ப்ரவாக சித்தி அருளினை அலாது திரு_அம்பலமும் ஆகி எனை ஆண்டனை பின் எய்தி நெறியாய்
குறி-தான் அளித்தனை நல் மரவுரி கொள் அந்தண கோலமாய் அசபா நலம் கூறின பின் மெளனியாய் சும்மா இருக்க நெறி கூட்டினை எலாம் இருக்க – தாயு:12 116/2,3
மேல்


நெறியால் (1)

நின்னைத்-தான் நிகர் ஆர் என வாழ்த்துவர் நெறியால் – தாயு:25 364/4
மேல்


நெறியாளர் (1)

நினையும் நினைவுக்கு எட்டாத நெறி பெற்று உணர்ந்த நெறியாளர்
வினையை கரைக்கும் பரம இன்ப_வெள்ள பெருக்கே நினது அருளால் – தாயு:23 313/1,2
மேல்


நெறியான (1)

நெறியான போது அதுவாய் நிற்கும் குறியால் – தாயு:28 481/2
மேல்


நெறியில் (2)

நெறியில் புகுதாது ஓர்படித்தாய் நின்ற நிலையும் தெரியாது – தாயு:20 283/2
செல்லாமல் நல் நெறியில் சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1154/2
மேல்


நெறியின் (1)

நெறியின் வைகி வளர் செல்வமும் உதவி நோய்கள் அற்ற சுக வாழ்க்கையாய் நியமம் ஆதி நிலை நின்று ஞான நெறி நிஷ்டை கூடவும் எந்நாளுமே – தாயு:13 128/2
மேல்


நெறியினிலும் (1)

பல் மார்க்க நெறியினிலும் கண்டதில்லை பகர்வு அரிய தில்லை மன்றுள் பார்த்த போது அங்கு – தாயு:14 143/2
மேல்


நெறியும் (1)

நில்லேன் நல் யோக நெறியும் செயேன் அருள் நீதி ஒன்றும் – தாயு:27 431/3
மேல்


நெறியே (1)

சொன்னவன் யாவன் அவன் முத்தி சித்திகள் எலாம் தோய்ந்த நெறியே படித்தீர் சொல்லும் என அவர் நீங்கள் சொன்ன அவையில் சிறிது தோய்ந்த குண_சாந்தன் எனவே – தாயு:7 64/3
மேல்


நெறியே-தான் (1)

சந்தான கற்பகம் போல் அருளை காட்ட தக்க நெறி இ நெறியே-தான் சன்மார்க்கம் – தாயு:14 142/4
மேல்


நெறியை (7)

துங்கம் மிகு பக்குவ சனகன் முதல் முனிவோர்கள் தொழுது அருகில் வீற்றிருப்ப சொல் அரிய நெறியை ஒரு சொல்லால் உணர்த்தியே சொரூபாநுபூதி காட்டி – தாயு:4 26/3
போனால் அதிட்ட வலி வெல்ல எளிதோ பகல் பொழுது புகும் முன் கண் மூடி பொய் துகில்கொள்வான்-தனை எழுப்ப வசமோ இனி போதிப்பது எந்த நெறியை
ஆனாலும் என் கொடுமை அநியாயம் அநியாயம் ஆர்-பால் எடுத்து மொழிவேன் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 73/3,4
இருளை துரந்திட்டு ஒளி நெறியை என்னுள் பதிப்பது என்று-கொலோ – தாயு:23 319/2
சொல்லாலும் பொருளாலும் அளவையாலும் தொடரவொண்ணா அருள் நெறியை தொடர்ந்து நாடி – தாயு:24 345/1
நாள் அவங்கள் போகாமல் நல் நெறியை காட்டி எமை – தாயு:45 1101/1
நல் நெறியை கண்டு உரிமை நாம் செய்வது எந்நாளோ – தாயு:45 1260/2
உன்னி நல் நெறியை சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1262/2
மேல்


நெறியோ (1)

நின்னை மறக்கை நெறியோ பராபரமே – தாயு:43 814/2
மேல்


நெறியோர் (1)

என்றும்என்றும் இ நெறியோர் குணமும் இல்லை இடுக்குவார் கைப்பிள்ளை ஏதோ ஏதோ – தாயு:16 180/3

மேல்