நூ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

நூல் (8)

மயல் அறு மந்திரம் சிக்ஷை சோதிடாதி மற்று அங்க நூல் வணங்க மெளன மோலி – தாயு:14 141/3
பெருகு வினை கட்டு என்றும் என்னால் கட்டி பேசியது அன்றே அருள் நூல் பேசிற்று அன்றே – தாயு:14 160/4
கற்றும் என் பலன் கற்றிடும் நூல் முறை – தாயு:18 229/1
அ பொருளும் ஆன்மாவும் ஆரண நூல் சொன்னபடி – தாயு:28 475/1
போலே கருவி நல் நூல் போதம் பராபரமே – தாயு:43 821/2
ஓர் உரையால் வாய்க்கும் உண்மைக்கு ஓர் அனந்த நூல் கோடி – தாயு:43 939/1
நோக்கும் மவுனம் இந்த நூல்_அறிவில் உண்டாமோ – தாயு:51 1401/2
பொங்கு விடம் அனைய பொய் நூல் புலம்புவனோ – தாயு:51 1410/2
மேல்


நூல்_அறிவில் (1)

நோக்கும் மவுனம் இந்த நூல்_அறிவில் உண்டாமோ – தாயு:51 1401/2
மேல்


நூல்களும் (2)

அ பரிசாளரும் அஃதே பிடித்து ஆலிப்பால் அடுத்த அ நூல்களும் விரித்தே அனுமான் ஆதி – தாயு:14 140/2
வாத தர்க்கமும் போத நூல்களும்
நிறைவில் காட்டியே குறைவு இன்றி வயங்க – தாயு:55 1451/30,31
மேல்


நூலால் (1)

நொந்தவாறு கண்டு இரங்கவும் இலை கற்ற நூலால்
எந்தவாறு இனி தற்பரா உய்குவேன் ஏழை – தாயு:24 344/3,4
மேல்


நூலில் (1)

நோயும் வெம் கலி பேயும் தொடர நின் நூலில் சொன்ன முறை இயமாதி நான் – தாயு:31 557/1
மேல்


நூலேணி (1)

நூலேணி விண் ஏற நூற்கு பருத்தி வைப்பார் – தாயு:43 821/1
மேல்


நூலையும் (2)

ஐ வகை எனும் பூதம் ஆதியை வகுத்து அதனுள் அசர சர பேதமான யாவையும் வகுத்து நல் அறிவையும் வகுத்து மறை ஆதி_நூலையும் வகுத்து – தாயு:4 29/1
ஐயம்_இல் வீட்டையும் மெய் நூலையும் பொய்யது ஆக எண்ணும் – தாயு:27 453/3
மேல்


நூழை (1)

கைத்தலம் நக படை விரித்த புலி சிங்கமொடு கரடி நுழை நூழை கொண்ட கான மலை உச்சியில் குகையூடு இருந்தும் என் கரதலம் ஆமலகம் என்ன – தாயு:11 105/3
மேல்


நூற்கு (1)

நூலேணி விண் ஏற நூற்கு பருத்தி வைப்பார் – தாயு:43 821/1
மேல்


நூற்றெட்டு (1)

விமல முதல் குணம் ஆகி நூற்றெட்டு ஆதி வேதம் எடுத்தெடுத்து உரைத்த விருத்திக்கு ஏற்க – தாயு:14 136/1
மேல்


நூறி (2)

பாச இருள் தன் நிழல் என சுளித்து ஆர்த்து மேல் பார்த்து பரந்த மனதை பாரித்த கவளமாய் பூரிக்க உண்டு முகபடாம் அன்ன மாயை நூறி
தேசுபெற நீ வைத்த சின்முத்திராங்குச செம் கைக்கு உளே அடக்கி சின்மயானந்த சுக_வெள்ளம் படிந்து நின் திரு_அருள் பூர்த்தியான – தாயு:5 37/2,3
எல் பட விளங்கு ககனத்தில் இமையா விழி இசைந்து மேல் நோக்கம் உறலால் இரவு_பகல் இருளான கன தந்தி பட நூறி இதயம் களித்திடுதலால் – தாயு:7 65/2
மேல்


நூறு (1)

நொய்யன் நுண்ணிய அறிவிலன் ஒன்றை நூறு ஆக்கும் – தாயு:25 372/3

மேல்