நு – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

நுண் (3)

பொரு திரை கடல் நுண் மணல் எண்ணினும் புகல – தாயு:24 339/3
உடல் எத்தனை அத்தனை கடல் நுண் மணல் ஒக்கும் இந்த – தாயு:27 438/2
நோக்காமல் நோக்கி நிற்கும் நுண் அறிவு காண்பேனோ – தாயு:46 1340/2
மேல்


நுண்ணிய (2)

நொய்யன் நுண்ணிய அறிவிலன் ஒன்றை நூறு ஆக்கும் – தாயு:25 372/3
நோக்கற்கு அரிதான நுண்ணிய வான் மோன நிலை – தாயு:28 477/1
மேல்


நுண்ணியோரே (1)

நோக்கு கரணம் புருடன் உடனே கூட நுவல்வர் இருபத்தைந்தா நுண்ணியோரே – தாயு:24 346/4
மேல்


நுண்மணல் (1)

கலை பலவாம் நெறி என்றும் தர்க்கம் என்றும் கடல் உறும் நுண்மணல் எண்ணி காணும் போதும் – தாயு:14 147/4
மேல்


நுதல் (5)

துளங்கு நல் நுதல்_கண் தோன்ற சுழல் வளி நெடு மூச்சு ஆக – தாயு:15 168/2
கங்கை வார் சடை கண்_நுதல் எந்தையே – தாயு:18 225/4
கற்றை வார் சடை கண்_நுதல் பாதமே – தாயு:18 270/3
திலக வாள் நுதல் பைம்_தொடி கண் இணை தேக்க நாடகம்செய்து அடியார்க்கு எலாம் – தாயு:24 328/3
தெட்டிலே வலிய மட மாதர் வாய் வெட்டிலே சிற்றிடையிலே நடையிலே சேல் ஒத்த விழியிலே பால் ஒத்த மொழியிலே சிறுபிறை நுதல் கீற்றிலே – தாயு:37 579/1
மேல்


நுதல்_கண் (1)

துளங்கு நல் நுதல்_கண் தோன்ற சுழல் வளி நெடு மூச்சு ஆக – தாயு:15 168/2
மேல்


நுதலினில் (1)

சாக்கிரமா நுதலினில் இந்திரியம் பத்தும் சத்தாதி வசனாதி வாயு பத்தும் – தாயு:24 346/1
மேல்


நுதலே (1)

களங்கரகித பொருளே என்னை நீங்கா கண்_நுதலே நாதாந்த காட்சி பேறே – தாயு:41 604/2
மேல்


நுதலோன் (1)

கற்றை வார் சடை கண்_நுதலோன் அருள் – தாயு:18 244/2
மேல்


நுந்தை (2)

வேண்டுவ படைத்தாய் நுந்தை விதிப்படி புரந்தான் அத்தை – தாயு:15 166/1
தந்தை நீ எம்மை காக்கும் தலைவனே நுந்தை அன்றோ – தாயு:15 174/3
மேல்


நும் (2)

விஜய ஜய ஜய என்ன ஆசி சொலவே கொலுவிருக்கும் நும் பெருமை எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 62/4
பேராதே சுழல்கின்றாய் என்பேன் வந்து பெய்கின்ற முகில்காள் எம் பெருமான் நும் போல் – தாயு:14 157/3
மேல்


நுவல்வர் (1)

நோக்கு கரணம் புருடன் உடனே கூட நுவல்வர் இருபத்தைந்தா நுண்ணியோரே – தாயு:24 346/4
மேல்


நுழை (1)

கைத்தலம் நக படை விரித்த புலி சிங்கமொடு கரடி நுழை நூழை கொண்ட கான மலை உச்சியில் குகையூடு இருந்தும் என் கரதலம் ஆமலகம் என்ன – தாயு:11 105/3
மேல்


நுழைய (1)

பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனை கந்த பொடியிலே அடியிலே மேல் பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே புந்தி-தனை நுழைய விட்டு – தாயு:37 579/2

மேல்