ஞா – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞாதுரு 1
ஞாதுருவின் 1
ஞாதுருவும் 1
ஞாதுருவே 1
ஞாயிறு 1
ஞாலத்தை 1
ஞாலம் 3
ஞாலம்-தனக்கு 1
ஞான 53
ஞான_நாயகனே 1
ஞான_வாரி 1
ஞான_வாரிதியே 1
ஞானத்தால் 1
ஞானத்தை 1
ஞானம் 26
ஞானம்-தனை 1
ஞானம்-அதின் 1
ஞானம்-அது 1
ஞானம்_இலேற்கு 1
ஞானமாம் 2
ஞானமும் 1
ஞானமே 2
ஞானமோ 1
ஞானா 1
ஞானாக்கினியாய் 1
ஞானாகாரத்தினொடு 1
ஞானிகள் 1
ஞானிகளுக்கு 1
ஞானிகளும் 1
ஞானியர்-தம் 1

ஞாதுரு (1)

நல் தவ துணையே ஆனந்த_கடலே ஞாதுரு ஞான ஞேயங்கள் – தாயு:22 309/2
மேல்


ஞாதுருவின் (1)

நாடுதலும் அற்று மேல் கீழ் நடு பக்கம் என நண்ணுதலும் அற்று விந்து நாதம் மற்று ஐ வகை பூத பேதமும் அற்று ஞாதுருவின் ஞானம் அற்று – தாயு:4 33/2
மேல்


ஞாதுருவும் (1)

ஞானாகாரத்தினொடு ஞேயம் அற்ற ஞாதுருவும் நழுவாமல் நழுவி நிற்கும் – தாயு:14 153/3
மேல்


ஞாதுருவே (1)

நாதமே நாதாந்த வெளியே சுத்த ஞாதுருவே ஞானமே ஞேயமே நல் – தாயு:41 605/1
மேல்


ஞாயிறு (1)

எங்கு எழுந்து என் ஞாயிறு இயம்பாய் பராபரமே – தாயு:43 777/2
மேல்


ஞாலத்தை (1)

ஞாலத்தை மெய் எனவே நம்பிநம்பி நாளும் என்றன் – தாயு:43 819/1
மேல்


ஞாலம் (3)

கண் அகல் ஞாலம் மதிக்க தானே உள்ளங்கையில் நெல்லி கனி போல காட்சியாக – தாயு:14 139/3
மல்லல் மா ஞாலம் காக்க வருபவர் கடவுள் என்னில் – தாயு:15 170/2
பாலன் பசிக்கு இரங்கி பாற்கடலை ஞாலம் மெச்ச – தாயு:28 502/2
மேல்


ஞாலம்-தனக்கு (1)

ஞாலம்-தனக்கு உரையார் நல்லோர் பராபரமே – தாயு:43 826/2
மேல்


ஞான (53)

சீர் அனந்தம் சொர்க்க நரகமும் அனந்தம் நல் தெய்வமும் அனந்த பேதம் திகழ்கின்ற சமயமும் அனந்தம் அதனால் ஞான சிற்சத்தியால் உணர்ந்து – தாயு:1 2/2
பேர்_அனந்தம் பேசி மறை அனந்தம் சொலும் பெரிய மெளனத்தின் வைப்பை பேசு அரும் அனந்த பத ஞான ஆனந்தமாம் பெரிய பொருளை பணிகுவாம் – தாயு:1 2/4
வரும் இடமாய் மனம் ஆதிக்கு எட்டாத பேர்_இன்ப மயமாய் ஞான
குரு அருளால் காட்டிடவும் அன்பரை கோத்து அற விழுங்கிக்கொண்டு அப்பாலும் – தாயு:3 16/2,3
விண் ஆதி பூதம் எல்லாம் தன் அகத்தில் அடக்கி வெறு வெளியாய் ஞான
கண்ணார கண்ட அன்பர் கண்ணூடே ஆனந்த_கடலாய் வேறு ஒன்று – தாயு:3 22/1,2
கவ்வு மலம் ஆகின்ற நாகபாசத்தினால் கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை கடிது அகல வலிய வரும் ஞான சஞ்சீவியே கதியான பூமி நடுவுள் – தாயு:4 28/3
கரு மருவு குகை அனைய காயத்தின் நடுவுள் களிம்பு தோய் செம்பு அனைய யான் காண் தக இருக்க நீ ஞான அனல் மூட்டியே கனிவு பெற உள் உருக்கி – தாயு:4 32/1
வாசம் உறு சற்சாரம் மீது என்னை ஒரு ஞான மத்தகஜம் என வளர்த்தாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 37/4
மா திக்கொடு அண்ட பரப்பு எலாம் அறியவே வந்து அருளும் ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 39/4
மன்ன ஒரு சொல் கொண்டு எனை தடுத்தாண்டு அன்பின் வாழ்வித்த ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 40/4
ஞான நெறி முக்ய நெறி காட்சி அனுமானம் முதல் நானாவிதங்கள் தேர்ந்து நான் நான் என குளறுபடை புடைபெயர்ந்திடவும் நான்கு சாதனமும் ஓர்ந்திட்டு – தாயு:5 41/2
ஞான கருணாகர முகம் கண்ட போதிலே நவநாத சித்தர்களும் உன் நட்பினை விரும்புவார் சுகர் வாமதேவர் முதல் ஞானிகளும் உனை மெச்சுவார் – தாயு:5 43/3
இரு_வினைகள் அற்று இரவு_பகல் என்பது அறியாத ஏகாந்த மோன ஞான இன்ப நிஷ்டையர் கோடி மணிமந்த்ர சித்தி நிலை எய்தினர்கள் கோடி சூழ – தாயு:5 44/2
தற்பர விஸ்வாதீத வ்யோம பரிபூரண சதானந்த ஞான பகவ சம்பு சிவ சங்கர சர்வேச என்று நான் சர்வ_காலமும் நினைவனோ – தாயு:6 47/2
மை விடா செழும் நீலகண்ட குருவே விஷ்ணு வடிவான ஞான குருவே மலர் மேவி மறை ஓதும் நான்முக குருவே மதங்கள்-தொறும் நின்ற குருவே – தாயு:6 51/3
கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றும் அறிவில்லாத என் கர்மத்தை என் சொல்கேன் மதியை என் சொல்லுகேன் கைவல்ய ஞான நீதி – தாயு:7 66/1
ஆதார ஆதேயம் முழுதும் நீ ஆதலால் அகிலம் மீது என்னை ஆட்டி ஆடல் கண்டவனும் நீ ஆடுகின்றவனும் நீ அருளும் நீ மெளன ஞான
தாதாவும் நீ பெற்ற தாய் தந்தை-தாமும் நீ தமரும் நீ யாவும் நீ காண் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 109/3,4
செயம் மிகுந்து வரு சித்த யோக நிலை பெற்று ஞான நெறி அடைவனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 127/4
நெறியின் வைகி வளர் செல்வமும் உதவி நோய்கள் அற்ற சுக வாழ்க்கையாய் நியமம் ஆதி நிலை நின்று ஞான நெறி நிஷ்டை கூடவும் எந்நாளுமே – தாயு:13 128/2
குன்றாத மூ_உருவாய் அருவாய் ஞான கொழுந்து ஆகி அறு_சமய கூத்தும் ஆடி – தாயு:16 182/1
ஞான தெய்வத்தை நாடுவன் நான் எனும் – தாயு:18 216/3
ஞான பூரண நாதனை நாடியே – தாயு:18 220/3
வளம் பெறு ஞான_வாரி வாய்மடுத்து மண்ணையும் விண்ணையும் தெரியாது – தாயு:19 274/1
குறைவு_இலா நிறைவாய் ஞான கோது_இல் ஆனந்த_வெள்ள – தாயு:21 293/1
நாயகம் ஆகி ஒளிவிடு மணியே நாதனே ஞான_வாரிதியே – தாயு:22 306/4
நல் தவ துணையே ஆனந்த_கடலே ஞாதுரு ஞான ஞேயங்கள் – தாயு:22 309/2
ஞான நாயக நான்மறை நாயக நலம் சேர் – தாயு:25 381/2
பதம் மூன்றும் கடந்தவர்க்கு மேலான ஞான பத பரிசு காட்டி – தாயு:26 392/1
ஞான மயம் பெற்றோர்கள் நாம் இல்லை என்பர் அந்தோ – தாயு:28 484/3
ஞான குருவே நவில் – தாயு:28 489/4
உள்ளமே ஞான ஒளி – தாயு:28 503/4
சனகாதி ஆய தவத்தோர்க்கு ஞான
தினகரனாம் மௌன சிவன் – தாயு:28 509/3,4
துய்த்துவிடு ஞான சுகம் – தாயு:28 540/4
ஞான நெறிக்கு ஏற்ற குரு நண் அரிய சித்தி முத்தி – தாயு:28 541/1
நதி உண்ட கடல் என சமயத்தை உண்ட பர ஞான ஆனந்த ஒளியே நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே நான் எனும் அகந்தை தீர்த்து என் – தாயு:37 578/3
நாத வடிவாகிய மஹா மந்த்ர ரூபியே நாதாந்த வெட்டவெளியே நல் சமயமான பயிர் தழைய வரும் மேகமே ஞான ஆனந்த மயிலே – தாயு:37 585/3
ஞான_நாயகனே நின் மோன ஞான நாட்டம் உற்று வாழ்ந்திருக்கும் நாள் எ நாளோ – தாயு:42 613/2
ஞான_நாயகனே நின் மோன ஞான நாட்டம் உற்று வாழ்ந்திருக்கும் நாள் எ நாளோ – தாயு:42 613/2
கலங்காத நெஞ்சு உடைய ஞான தீரர் கடவுள் உனை காணவே காயம் ஆதி – தாயு:42 626/1
பாச சாலங்கள் எலாம் பற்று விட ஞான வை வாள் – தாயு:43 811/1
மன்னும் கலை ஞான மார்க்கம் பராபரமே – தாயு:43 822/2
தானே சுபாவம் தலைப்பட நின்றால் ஞான
வானோனவரும் வருவாரோ பைங்கிளியே – தாயு:44 1081/1,2
முன்னவன் ஞான கனலை மூட்டும் நாள் எந்நாளோ – தாயு:45 1167/2
மேலான ஞான இன்பம் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1220/2
ஞான நடம் கண்டு நடிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1229/2
ஞான மத யானை நடத்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1284/2
நன்மை தரும் ஞான நெறி நான் அணைவது எந்நாளோ – தாயு:45 1299/2
ஞான நெறி-தானே நழுவிடினும் மு பதத்துள் – தாயு:45 1300/1
நாட்டம்_அற எந்தை சுத்த ஞான வெளி காண்பேனோ – தாயு:46 1326/2
நாத நீ நீக்க ஒரு ஞான விளக்கு இல்லையோ – தாயு:48 1373/2
நாடுகின்ற ஞான மன்றில் ஆடுகின்ற அழகனே – தாயு:53 1416/2
அன்னை போல அருள் மிகுத்து மன்னும் ஞான வரதனே – தாயு:53 1420/1
ஏசற்று இருக்க மாசு_அற்ற ஞான
நலமும் காட்டினை ஞானம்_இலேற்கு – தாயு:55 1451/36,37
ஞான வெளியிடை மேவும் உயிராய் – தாயு:56 1452/7
மேல்


ஞான_நாயகனே (1)

ஞான_நாயகனே நின் மோன ஞான நாட்டம் உற்று வாழ்ந்திருக்கும் நாள் எ நாளோ – தாயு:42 613/2
மேல்


ஞான_வாரி (1)

வளம் பெறு ஞான_வாரி வாய்மடுத்து மண்ணையும் விண்ணையும் தெரியாது – தாயு:19 274/1
மேல்


ஞான_வாரிதியே (1)

நாயகம் ஆகி ஒளிவிடு மணியே நாதனே ஞான_வாரிதியே – தாயு:22 306/4
மேல்


ஞானத்தால் (1)

வாசக ஞானத்தால் வருமோ சுகம் பாழ்த்த – தாயு:43 823/1
மேல்


ஞானத்தை (1)

ஓது அரிய துவிதமே அத்துவித ஞானத்தை உண்டுபணும் ஞானம் ஆகும் ஊகம் அனுபவ வசனம் மூன்றுக்கும் ஒவ்வும் ஈது உலகவாதிகள் சம்மதம் – தாயு:10 91/2
மேல்


ஞானம் (26)

விரிவாய பூதங்கள் ஒன்றோடொன்றாய் அழியும் மேற்கொண்ட சேடம் அதுவே வெறு வெளி நிராலம்பம் நிறை சூன்யம் உபசாந்த வேத வேதாந்த ஞானம்
பிரியாத பேர்_ஒளி பிறக்கின்ற அருள் அருள்_பெற்றோர்கள் பெற்ற பெருமை பிறவாமை என்றைக்கும் இறவாமையாய் வந்து பேசாமையாகும் எனவே – தாயு:2 5/2,3
நாடுதலும் அற்று மேல் கீழ் நடு பக்கம் என நண்ணுதலும் அற்று விந்து நாதம் மற்று ஐ வகை பூத பேதமும் அற்று ஞாதுருவின் ஞானம் அற்று – தாயு:4 33/2
சித்திசெய்தும் ஞானம் அலது கதி கூடுமோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 36/4
நல்லோர் உரைக்கிலோ கர்மம் முக்கியம் என்று நாட்டுவேன் கர்மம் ஒருவன் நாட்டினாலோ பழய ஞானம் முக்கியம் என்று நவிலுவேன் வடமொழியிலே – தாயு:7 66/2
ஓது அரிய துவிதமே அத்துவித ஞானத்தை உண்டுபணும் ஞானம் ஆகும் ஊகம் அனுபவ வசனம் மூன்றுக்கும் ஒவ்வும் ஈது உலகவாதிகள் சம்மதம் – தாயு:10 91/2
வல்லாளராய் இமய நியமாதி மேற்கொண்ட மா தவர்க்கு ஏவல்செய்து மனதின்படிக்கு எலாம் சித்தி பெறலாம் ஞானம் வாய்க்கும் ஒரு மனு எனக்கு இங்கு – தாயு:10 96/3
கல்லாத அறிவில் கடைப்பட்ட நான் அன்று கையினால் உண்மை ஞானம் கற்பித்த நின் அருளினுக்கு என்ன கைம்மாறு காட்டுவேன் குற்றேவல் நான் – தாயு:12 119/2
நான் என நிற்கும் ஞானம் ஞானம் அன்று அந்த ஞானம் – தாயு:15 171/1
நான் என நிற்கும் ஞானம் ஞானம் அன்று அந்த ஞானம் – தாயு:15 171/1
நான் என நிற்கும் ஞானம் ஞானம் அன்று அந்த ஞானம்
மோனமாய் இருக்கவொட்டா மோனம் இன்றாகவே-தான் – தாயு:15 171/1,2
அன்று ஆலின் கீழ் இருந்து மோன ஞானம் அமைத்த சின்முத்திரை கடலே அமரர் ஏறே – தாயு:16 182/4
தன் நெஞ்சம் நினைப்பு ஒழியாது அறிவு_இலி நான் ஞானம் எனும் தன்மை பேச – தாயு:24 325/1
அழுத்திடும் மூலம்-தன்னில் துரியாதீதம் அதனிடையே புருடன் ஒன்றி அமரும் ஞானம்
பழுத்திடும் பக்குவர் அறிவர் அவத்தை ஐந்தில் பாங்குபெற கருவி நிற்கும் பரிசு-தானே – தாயு:24 347/3,4
சுகம் ஆகும் ஞானம் திரு_மேனியாம் நல்ல தொண்டர்-தங்கள் – தாயு:27 408/1
தானம் தவம் ஞானம் சாற்று அரிய சித்தி முத்தி – தாயு:28 529/1
ஞானம் அருளும் அது நானும் அது வான் ஆதி – தாயு:28 534/2
புலம் காணார் நான் ஒருவன் ஞானம் பேசி பொய் கூடு காத்தது என்ன புதுமை கண்டாய் – தாயு:42 626/2
யோகியர்க்கே ஞானம் ஒழுங்கு ஆம் பேர்_அன்பான – தாயு:43 725/1
விஞ்சிய ஞானம் விளங்கும் பராபரமே – தாயு:43 789/2
சொல் உணரின் ஞானம் வந்து தோன்றும் பராபரமே – தாயு:43 849/2
மோனம் தரு ஞானம் ஊட்டி எனக்கு உவட்டா – தாயு:43 980/1
குறைவு_இல் அருள் ஞானம் முதல் கொற்றங்குடி அடிகள் – தாயு:45 1100/1
ஞானம் எனும் அஞ்சனத்தை நான் பெறுவது எந்நாளோ – தாயு:45 1191/2
சடத்துள் உயிர் போல் எமக்கு தான் உயிராய் ஞானம்
நடத்தும் முறை கண்டு பணி நாம் விடுவது எந்நாளோ – தாயு:45 1193/1,2
திரு_அருள் ஞானம் சிறந்து அருள் கொழிக்கும் – தாயு:55 1451/1
நலமும் காட்டினை ஞானம்_இலேற்கு – தாயு:55 1451/37
மேல்


ஞானம்-தனை (1)

ஞானம்-தனை அணைய நல்லோர் பராபரமே – தாயு:43 793/2
மேல்


ஞானம்-அதின் (1)

சன்மார்க்கம் ஞானம்-அதின் பொருளும் வீறு சமய சங்கேத பொருளும் தான் என்று ஆக – தாயு:14 143/1
மேல்


ஞானம்-அது (1)

சொல் மயக்கம்-அது தீர அங்கை கொடு மோன ஞானம்-அது உணர்த்தியே சுத்த நித்த அருள் இயல்பு-அதாக உள சோமசேகர கிர்பாளுவாய் – தாயு:13 131/3
மேல்


ஞானம்_இலேற்கு (1)

நலமும் காட்டினை ஞானம்_இலேற்கு
நிலையும் காட்டுதல் நின் அருள் கடனே – தாயு:55 1451/37,38
மேல்


ஞானமாம் (2)

கதி உண்டு ஞானமாம் கதிர் உண்டு சதிர் உண்டு காயசித்திகளும் உண்டு கறை உண்ட கண்டர்-பால் அம்மை நின் தாளில் கருத்து ஒன்றும் உண்டாகுமேல் – தாயு:37 578/2
நாற்றை பதித்தது என ஞானமாம் பயிர்-அதனை நாட்டி புல பட்டியும் நமனான தீப்பூடும் அணுகாமல் முன் நின்று நாடு சிவபோகமான – தாயு:39 587/3
மேல்


ஞானமும் (1)

ஞானமும் தெவிட்டா இன்ப நன்மையும் நல்குவாயோ – தாயு:21 299/2
மேல்


ஞானமே (2)

ஞானமே வடிவாய் தேடுவார் தேடும் நாட்டமே நாட்டத்துள் நிறைந்த – தாயு:22 307/1
நாதமே நாதாந்த வெளியே சுத்த ஞாதுருவே ஞானமே ஞேயமே நல் – தாயு:41 605/1
மேல்


ஞானமோ (1)

தேகமோ திடம் இல்லை ஞானமோ கனவிலும் சிந்தியேன் பேர்_இன்பமோ சேர என்றால் கள்ள மனதுமோ மெத்தவும் சிந்திக்குது என் செய்குவேன் – தாயு:37 583/2
மேல்


ஞானா (1)

வான் ஆதி மாயை வழங்காதோ ஞானா கேள் – தாயு:28 518/2
மேல்


ஞானாக்கினியாய் (1)

தாங்கிய பார் விண் ஆதி தானே ஞானாக்கினியாய்
ஓங்கும் யோக உணர்வு உற்றிடும் நாள் எந்நாளோ – தாயு:45 1309/1,2
மேல்


ஞானாகாரத்தினொடு (1)

ஞானாகாரத்தினொடு ஞேயம் அற்ற ஞாதுருவும் நழுவாமல் நழுவி நிற்கும் – தாயு:14 153/3
மேல்


ஞானிகள் (1)

முதிய ஞானிகள் மோன பொருள் அது – தாயு:18 222/2
மேல்


ஞானிகளுக்கு (1)

யோக நிலை ஞானிகளுக்கு ஒப்புவதோ மோக நிலை – தாயு:28 510/2
மேல்


ஞானிகளும் (1)

ஞான கருணாகர முகம் கண்ட போதிலே நவநாத சித்தர்களும் உன் நட்பினை விரும்புவார் சுகர் வாமதேவர் முதல் ஞானிகளும் உனை மெச்சுவார் – தாயு:5 43/3
மேல்


ஞானியர்-தம் (1)

சீலம் மிகு ஞானியர்-தம் செய்கை பராபரமே – தாயு:43 778/2

மேல்