கு – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

குகை 1
குகையூடு 1
குடக்கொடு 1
குடத்துள் 1
குடி 4
குடிகெட 1
குடிகெடுக்க 1
குடிகெடுக்கும் 1
குடிகொண்ட 12
குடிகொண்டது 1
குடிகொள்ளுதே 1
குடியா 1
குடியாய் 2
குடியிருந்து 1
குடிலம் 1
குடிலில் 1
குடும்ப 1
குடும்பன் 1
குடை 2
குண்டலி 3
குண்டலியை 1
குண்டலியோ 1
குண்டலினி-பால் 1
குண்டு 1
குண 10
குண_கேட்டை 1
குண_கேடர் 1
குண_சாந்தரே 1
குண_சாந்தன் 1
குண_முகிலே 1
குண_மேருவே 1
குணக்கு 1
குணங்கள் 1
குணசந்த்ரராம் 1
குணத்தார் 1
குணத்தை 2
குணத்தோய 1
குணத்தோர்க்கு 1
குணம் 24
குணம்_இலா 1
குணம்_இலாத 1
குணமும் 5
குணாதீத 1
குத்திர 1
குதர்க்கம் 2
குதலை 1
குதிக்கின்ற 1
குதித்து 1
குப்பையிடை 1
கும்ப 1
கும்பம் 1
கும்பிட்டு 2
கும்பிடு 1
கும்பிடும் 1
கும்பிபாகம் 1
கும்பியின் 1
கும்பியை 1
குமிழி 1
குமிழையும் 1
குரங்காய் 1
குரங்கின் 1
குரங்கு 2
குரவன் 1
குரு 22
குரு_பார்வை 1
குருநாதன் 2
குருலிங்க 1
குருவாம் 1
குருவாய் 6
குருவான 1
குருவி 1
குருவும் 4
குருவே 43
குருவை 1
குரை 3
குரோதமோ 1
குல 1
குலம் 4
குலம்_இலான் 1
குலவாநின்ற 1
குலவுகின்ற 1
குலவுறு 1
குலாலனார் 1
குலாவி 1
குலாவு 3
குலாவும் 1
குலை 1
குலைந்து 1
குலையாது 1
குலையாமலே 1
குவலயம் 1
குவிக்க 1
குவிக்கும் 1
குவித்த 1
குவித்திடு 1
குவித்து 7
குவிதலுடன் 1
குவிப்பேன் 1
குவிய 1
குழல் 2
குழல்_காட்டில் 1
குழலினர் 1
குழவியை 1
குழறி 1
குழாத்துடனே 1
குழியும் 1
குழு 1
குழைந்து 4
குழைய 4
குழையில் 1
குளறி 4
குளறியே 2
குளறுபடை 1
குளறும் 1
குளிகை 1
குளிர் 2
குற்ற 1
குற்றம் 5
குற்றம்_அற 1
குற்றேவல் 1
குறி 10
குறி-தான் 1
குறி_இலான் 1
குறிக்கும் 2
குறிகளோடு 1
குறித்தவிதம் 1
குறித்தாய் 1
குறித்தாய்_இலையே 1
குறித்து 1
குறிப்பினையே 1
குறிப்பு 5
குறியாத 2
குறியால் 1
குறியில் 1
குறியும் 2
குறியேற்கு 1
குறுக்கும் 1
குறுக்கே 1
குறுக 1
குறுகல் 1
குறுகி 2
குறுகின் 1
குறுகுமோ 1
குறும்பு 1
குறை 2
குறைசொல்ல 1
குறைந்தபடி 1
குறைந்து 1
குறைய 1
குறையா 2
குறையும் 2
குறையுமோ 1
குறையோ 1
குறைவில்லை 1
குறைவு 13
குறைவு_அற 2
குறைவு_இல் 1
குறைவு_இலா 3
குறைவு_இலான் 1
குறைவு_இலேனே 1
குறைவும் 1
குறைவையாது 1
குறைவோ 1
குன்றமே 1
குன்றா 1
குன்றாத 1
குன்றிடாத 1
குன்று 1
குன்றும் 1
குன்றே 4

குகை (1)

கரு மருவு குகை அனைய காயத்தின் நடுவுள் களிம்பு தோய் செம்பு அனைய யான் காண் தக இருக்க நீ ஞான அனல் மூட்டியே கனிவு பெற உள் உருக்கி – தாயு:4 32/1
மேல்

குகையூடு (1)

கைத்தலம் நக படை விரித்த புலி சிங்கமொடு கரடி நுழை நூழை கொண்ட கான மலை உச்சியில் குகையூடு இருந்தும் என் கரதலம் ஆமலகம் என்ன – தாயு:11 105/3
மேல்

குடக்கொடு (1)

குடக்கொடு குணக்கு ஆதி திக்கினை உழக்கூடு கொள்ளல் போல் ஐந்து பூதம் கூடும் சுருங்கு இலை சாலேகம் ஒன்பது குலாவு நடை_மனையை நாறும் – தாயு:11 101/1
மேல்

குடத்துள் (1)

ஒரு வனவன் யானை கெட குடத்துள் செம் கை ஓட்டுதல் போல் நான் பேதை உப்போடு அப்பை – தாயு:14 160/1
மேல்

குடி (4)

குடி முழுதும் பிழைக்கும் ஒரு குறையும் இல்லை எடுத்த கோலம் எல்லாம் நன்று ஆகும் குறைவு நிறைவு அறவே – தாயு:17 191/2
நாட்டினான் ஆனந்த நாட்டில் குடி வாழ்க்கை – தாயு:28 535/3
கொத்தடிமையான குடி நான் பராபரமே – தாயு:43 783/2
குன்றே நின் தாள் கீழ் குடி பெறவும் காண்பேனோ – தாயு:46 1327/2
மேல்

குடிகெட (1)

குடிகெட வேண்டில் பணி அற நிற்றல் குணம் என புன்னகை காட்டி – தாயு:19 278/3
மேல்

குடிகெடுக்க (1)

குடிகெடுக்க துசம்கட்டிக்கொண்ட மோனகுருவே என் தெய்வமே கோது_இலாதபடி – தாயு:16 177/2
மேல்

குடிகெடுக்கும் (1)

குடிகெடுக்கும் பாழ் மடிமை கூறு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1155/2
மேல்

குடிகொண்ட (12)

திரு_அருள் முடிக்க இ தேகமொடு காண்பனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 111/4
செப்பு அரிய முத்தியாம் கரை சேரவும் கருணைசெய்வையோ சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 112/4
சிந்தை-தான் தெளியாது சுழலும் வகை என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 113/4
தேடாது அழிக்க ஒரு மதி வந்தது என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 114/4
தேடாது தேடுவோர் தேட்டு அற்ற தேட்டமே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 115/4
சிறியேன் மயங்கி மிக அறிவின்மை ஆவனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 116/4
தீராது விடுவதிலை நடுவான கடவுளே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 117/4
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 118/4
செல்லாதடா என்று பேசுவாய் அது தந்த செல்வமே சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 119/4
தென்-பாலின் முகம் ஆகி வட ஆல் இருக்கின்ற செல்வமே சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 120/4
சித்தி நிலை முத்தி நிலை விளைகின்ற பூமியே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 121/4
சிந்தை குடிகொண்ட அருள் தேவே பராபரமே – தாயு:43 758/2
மேல்

குடிகொண்டது (1)

சித்தம் மிசை குடிகொண்டது ஈகையொடு இரக்கம் என் சென்மத்து நான் அறிகிலேன் சீலமொடு தவ விரதம் ஒரு கனவிலாயினும் தெரிசனம் கண்டும் அறியேன் – தாயு:8 75/2
மேல்

குடிகொள்ளுதே (1)

சிந்தை குடிகொள்ளுதே மலம் மாயை கன்மம் திரும்புமோ தொடு_வழக்காய் சென்மம் வருமோ எனவும் யோசிக்குதே மனது சிரத்தை எனும் வாளும் உதவி – தாயு:2 8/3
மேல்

குடியா (1)

வைத்திடு இங்கு என்னை நின் அடி குடியா மறை முடி இருந்த வான் பொருளே – தாயு:24 358/4
மேல்

குடியாய் (2)

நந்தி அடி கீழ் குடியாய் நாம் அணைவது எந்நாளோ – தாயு:45 1095/2
அடிகள் அடி கீழ் குடியாய் யாம் வாழா வண்ணம் – தாயு:45 1155/1
மேல்

குடியிருந்து (1)

வண் துளபம் அணி மார்பன் புதல்வனோடும் மனைவியொடும் குடியிருந்து வணங்கி போற்றும் – தாயு:24 333/3
மேல்

குடிலம் (1)

நனி பெரும் குடிலம் காட்டும் நயன வேல் கரிய கூந்தல் – தாயு:21 301/3
மேல்

குடிலில் (1)

புன் புலால் மயிர் தோல் நரம்பு என்பு மொய்த்திடு புலை குடிலில் அருவருப்பு பொய் அல்லவே இதனை மெய் என்று நம்பி என் புந்தி செலுமோ பாழிலே – தாயு:9 80/3
மேல்

குடும்ப (1)

கூறாநின்ற இடர் கவலை குடும்ப கூத்துள் துளைந்து தடுமாறாநின்ற – தாயு:20 288/1
மேல்

குடும்பன் (1)

ஈடாகவே யாறு வீட்டினில் நிரம்பியே இலகி வளர் பிராணன் என்னும் இரு நிதியினை கட்டி யோகபரன் ஆகாமல் ஏழை குடும்பன் ஆகி – தாயு:12 114/3
மேல்

குடை (2)

மை திகழும் முகில் இனம் குடை நிழற்றிட வட்ட வரையினொடு செம்பொன் மேரு மால் வரையின் முதுகூடும் யோகதண்ட கோல் வரைந்து சய விருது காட்டி – தாயு:7 61/3
தெச விதம்-அதாய் நின்ற நாதங்கள் ஓலிட சிங்காசனாதிபர்களாய் திக்கு திக்_அந்தமும் பூரண மதி குடை திகழ்ந்திட வசந்த காலம் – தாயு:7 62/2
மேல்

குண்டலி (3)

பண்ணுவது நன்மை இ நிலை பதியும் மட்டுமே பதியாய் இருந்த தேக பவுரி குலையாமலே கவுரி குண்டலி ஆயி பண்ணவி-தன் அருளினாலே – தாயு:7 60/3
கரு மருவு காயத்தை நிர்மலமதாகவே கமலாசனாதி சேர்த்து காலை பிடித்து அனலை அம்மை குண்டலி அடி கலை மதியினூடு தாக்கி – தாயு:12 111/2
குத்திர மெய் புற்றகத்து குண்டலி பாம்பு ஒன்று ஆட்டும் – தாயு:45 1231/1
மேல்

குண்டலியை (1)

இயல் அறிந்து வளர் மூல குண்டலியை இனிது இறைஞ்சி அவள் அருளினால் எல்லை_அற்று வளர் சோதி மூல அனல் எங்கள் மோன மனு முறையிலே – தாயு:13 127/2
மேல்

குண்டலியோ (1)

குறியாத ஆனந்த கோவோ அமுது அருள் குண்டலியோ
சிறியேன் படும் துயர் கண்டு கல்_ஆல் நிழல் சேர்ந்ததுவே – தாயு:27 430/3,4
மேல்

குண்டலினி-பால் (1)

இன்னம் பிறப்பதற்கு இடம் என்னில் இ உடலம் இறவாது இருப்ப மூலத்து எழும் அங்கி அமிர்து ஒழுகும் மதி மண்டலத்தில் உற என் அம்மை குண்டலினி-பால்
பின்னம் பிறக்காது சேய் என வளர்த்திட பேயேனை நல்கவேண்டும் பிறவாத நெறி எனக்கு உண்டு என்னின் இம்மையே பேசு கர்ப்பூர தீபம் – தாயு:11 108/1,2
மேல்

குண்டு (1)

அல் ஆர்ந்த மேனியொடு குண்டு கண் பிறை எயிற்று ஆபாச வடிவமான அந்தகா நீ ஒரு பகட்டால் பகட்டுவது அடாதடா காசு நம்பால் – தாயு:12 119/3
மேல்

குண (10)

செவ்விதின் வளர்ந்து ஓங்கு திவ்ய குண_மேருவே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 28/4
சிந்தை அறியார்க்கு ஈது போதிப்பது அல்லவே செப்பினும் வெகு தர்க்கமாம் திவ்ய குண மார்க்கண்டர் சுகர் ஆதி முனிவோர்கள் சித்தாந்த நித்யர் அலரோ – தாயு:6 53/2
திக்கொடு திக்_அந்தமும் மன_வேகம் என்னவே சென்று ஓடி ஆடி வருவீர் செம்பொன் மக மேருவொடு குண மேரு என்னவே திகழ் துருவம் அளவு அளாவி – தாயு:7 57/1
மெய் திகழும் அஷ்டாங்க யோக பூமிக்குள் வளர் வேந்தரே குண_சாந்தரே வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 61/4
சொன்னவன் யாவன் அவன் முத்தி சித்திகள் எலாம் தோய்ந்த நெறியே படித்தீர் சொல்லும் என அவர் நீங்கள் சொன்ன அவையில் சிறிது தோய்ந்த குண_சாந்தன் எனவே – தாயு:7 64/3
கொல்லாமை எத்தனை குண_கேட்டை நீக்கும் அ குணம் ஒன்றும் ஒன்றிலேன்-பால் கோரம் எத்தனை பக்ஷபாதம் எத்தனை வன்_குணங்கள் எத்தனை கொடிய பாழ்ம் – தாயு:8 67/1
அத்தனை குண_கேடர் கண்டதா கேட்டதா அவனி மிசை உண்டோ சொலாய் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 75/4
துர்_குண கடல் சோங்கு அன்ன பாவியேற்கு – தாயு:18 199/3
அருளை பொழியும் குண_முகிலே அறிவானந்த தார் அமுதே – தாயு:23 319/4
குன்றா பொருளே குண பெரும் கடலே – தாயு:55 1451/4
மேல்

குண_கேட்டை (1)

கொல்லாமை எத்தனை குண_கேட்டை நீக்கும் அ குணம் ஒன்றும் ஒன்றிலேன்-பால் கோரம் எத்தனை பக்ஷபாதம் எத்தனை வன்_குணங்கள் எத்தனை கொடிய பாழ்ம் – தாயு:8 67/1
மேல்

குண_கேடர் (1)

அத்தனை குண_கேடர் கண்டதா கேட்டதா அவனி மிசை உண்டோ சொலாய் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 75/4
மேல்

குண_சாந்தரே (1)

மெய் திகழும் அஷ்டாங்க யோக பூமிக்குள் வளர் வேந்தரே குண_சாந்தரே வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 61/4
மேல்

குண_சாந்தன் (1)

சொன்னவன் யாவன் அவன் முத்தி சித்திகள் எலாம் தோய்ந்த நெறியே படித்தீர் சொல்லும் என அவர் நீங்கள் சொன்ன அவையில் சிறிது தோய்ந்த குண_சாந்தன் எனவே – தாயு:7 64/3
மேல்

குண_முகிலே (1)

அருளை பொழியும் குண_முகிலே அறிவானந்த தார் அமுதே – தாயு:23 319/4
மேல்

குண_மேருவே (1)

செவ்விதின் வளர்ந்து ஓங்கு திவ்ய குண_மேருவே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 28/4
மேல்

குணக்கு (1)

குடக்கொடு குணக்கு ஆதி திக்கினை உழக்கூடு கொள்ளல் போல் ஐந்து பூதம் கூடும் சுருங்கு இலை சாலேகம் ஒன்பது குலாவு நடை_மனையை நாறும் – தாயு:11 101/1
மேல்

குணங்கள் (1)

கொல்லாமை எத்தனை குண_கேட்டை நீக்கும் அ குணம் ஒன்றும் ஒன்றிலேன்-பால் கோரம் எத்தனை பக்ஷபாதம் எத்தனை வன்_குணங்கள் எத்தனை கொடிய பாழ்ம் – தாயு:8 67/1
மேல்

குணசந்த்ரராம் (1)

ஆராயும் வேளையில் பிரமாதி ஆனாலும் ஐய ஒரு செயலும் இல்லை அமைதியொடு பேசாத பெருமை பெறு குணசந்த்ரராம் என இருந்த பேரும் – தாயு:2 6/1
மேல்

குணத்தார் (1)

நல்_குணத்தார் கைகோத்து நான் திரிவது எந்நாளோ – தாயு:45 1243/2
மேல்

குணத்தை (2)

இ குணத்தை நல்கியது ஆர் எந்தாய் பராபரமே – தாயு:43 801/2
கல் குணத்தை போன்ற வஞ்சக்காரர்கள் கைகோவாமல் – தாயு:45 1243/1
மேல்

குணத்தோய (1)

கூறு அரும் குணத்தோய உன்றன் குரை கழல் குறுகின் அல்லால் – தாயு:21 298/3
மேல்

குணத்தோர்க்கு (1)

கோட்டம்_இல் குணத்தோர்க்கு எளிய நிர்க்குணமே கோது_இலா அமிர்தமே நின்னை – தாயு:24 360/2
மேல்

குணம் (24)

பேசாத ஆனந்தம் நிட்டைக்கும் அறிவு_இலா பேதைக்கும் வெகு தூரமே பேய்_குணம் அறிந்து இந்த நாய்க்கும் ஒரு வழி பெரிய பேர்_இன்ப நிட்டை அருள்வாய் – தாயு:2 4/3
பூதலயம் ஆகின்ற மாயை முதல் என்பர் சிலர் பொறி புலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர் கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம் என்பர் சிலபேர் – தாயு:2 9/1
கோது_இல் அமுது ஊற்று அரும்பி குணம் குறி ஒன்று அற தன்னை கொடுத்து காட்டும் – தாயு:3 15/3
வெவ்விய குணம் பல இருக்க என் அறிவூடு மெய்யன் நீ வீற்றிருக்க விதி இல்லை என்னிலோ பூரணன் எனும் பெயர் விரிக்கில் உரை வேறும் உளதோ – தாயு:4 28/2
கூடுதலுடன் பிரிதல் அற்று நிர்த்தொந்தமாய் குவிதலுடன் விரிதல் அற்று குணம் அற்று வரவினொடு போக்கு அற்று நிலையான குறி அற்று மலமும் அற்று – தாயு:4 33/1
பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி இ பொய் வேடம் மிகுதி காட்டி பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நல் குணம் எலாம் போக்கிலே போகவிட்டு – தாயு:5 40/2
பொல்லாத பொய்ம்மொழியும் அல்லாது நன்மைகள் பொருந்து குணம் ஏதும் அறியேன் புருஷர் வடிவானதே அல்லாது கனவிலும் புருஷார்த்தம் ஏதும் இல்லேன் – தாயு:5 42/2
கொல்லாமை எத்தனை குண_கேட்டை நீக்கும் அ குணம் ஒன்றும் ஒன்றிலேன்-பால் கோரம் எத்தனை பக்ஷபாதம் எத்தனை வன்_குணங்கள் எத்தனை கொடிய பாழ்ம் – தாயு:8 67/1
குறிகளோடு குணம் ஏதும் இன்றி அனல் ஒழுக நின்றிடும் இரும்பு அனல் கூடல் இன்றி அதுவாயிருந்தபடி கொடிய ஆணவ அறைக்கு உளே – தாயு:13 123/1
தொந்த ரூபமுடன் அரூபம் ஆதி குறி குணம் இறந்து வளர் வஸ்துவே துரியமே துரிய உயிரினுக்கு உணர்வு தோன்ற நின்று அருள் சுபாவமே – தாயு:13 124/2
விமல முதல் குணம் ஆகி நூற்றெட்டு ஆதி வேதம் எடுத்தெடுத்து உரைத்த விருத்திக்கு ஏற்க – தாயு:14 136/1
ஐந்து புலன் ஐம்_பூதம் கரணம் ஆதி அடுத்த குணம் அத்தனையும் அல்லை அல்லை – தாயு:14 149/2
படி முழுதும் விண் முழுதும் தந்தாலும் களியா பாலருடன் உன்மத்தர் பசாசர் குணம் வருமே – தாயு:17 191/4
கோலம் இன்றி குணம் இன்றி நின் அருள் – தாயு:18 197/1
என் குணம் கண்டு என் பெயர் சொல்வதே – தாயு:18 199/4
குடிகெட வேண்டில் பணி அற நிற்றல் குணம் என புன்னகை காட்டி – தாயு:19 278/3
குலம்_இலான் குணம் குறி_இலான் குறைவு_இலான் கொடிதாம் – தாயு:24 351/1
குணம்_இலாத பொய் வஞ்சனுக்கு எந்தை நிர்க்குணமா – தாயு:25 369/3
குற்றம் குறைந்து குணம் மேலிடும் என்பர் கூட்டத்தையே – தாயு:27 457/3
கூறு ஆய ஐம்_பூத சுமையை தாங்கி குணம்_இலா மனம் எனும் பேய் குரங்கின் பின்னே – தாயு:42 609/1
குற்றம் குறைய குணம் மேலிட அருளை – தாயு:43 938/1
கோட்டாலையான குணம் இறந்த நிர்க்குணத்தோர் – தாயு:45 1247/1
குற்றம்_அற கைகாட்டும் கருத்தை கண்டு குணம் குறி அற்று இன்ப நிட்டை கூட அன்றோ – தாயு:52 1415/2
கொண்டார் போல் போனாலும் போகும் இதில் குணம் ஏது நலம் ஏது கூறாய் நீ தோழி – தாயு:54 1436/2
மேல்

குணம்_இலா (1)

கூறு ஆய ஐம்_பூத சுமையை தாங்கி குணம்_இலா மனம் எனும் பேய் குரங்கின் பின்னே – தாயு:42 609/1
மேல்

குணம்_இலாத (1)

குணம்_இலாத பொய் வஞ்சனுக்கு எந்தை நிர்க்குணமா – தாயு:25 369/3
மேல்

குணமும் (5)

இயல்பு என்றும் திரியாமல் இயமம் ஆதி எண்_குணமும் காட்டி அன்பால் இன்பம் ஆகி – தாயு:14 141/1
என்றும்என்றும் இ நெறியோர் குணமும் இல்லை இடுக்குவார் கைப்பிள்ளை ஏதோ ஏதோ – தாயு:16 180/3
குறியும் குணமும் அற கூடாத கூட்டத்து – தாயு:28 539/1
கூறும் குணமும் இல்லா கொள்கையினார் என் கவலை – தாயு:44 1045/1
குறியும் குணமும் அன்றி நிறைவும் குறைவும் அன்றி – தாயு:56 1452/3
மேல்

குணாதீத (1)

நாரணி மனாதீத நாயகி குணாதீத நாதாந்த சத்தி என்று உன் நாமமே உச்சரித்திடும் அடியர் நாமமே நான் உச்சரிக்க வசமோ – தாயு:37 582/2
மேல்

குத்திர (1)

குத்திர மெய் புற்றகத்து குண்டலி பாம்பு ஒன்று ஆட்டும் – தாயு:45 1231/1
மேல்

குதர்க்கம் (2)

கொடுக்கின்றோர்கள்-பால் குறைவையாது யான் எனும் குதர்க்கம்
விடுக்கின்றோர்கள்-பால் பிரிகிலாது உள் அன்பு விடாதே – தாயு:24 327/1,2
தர்க்கமிட்டு பாழாம் சமய குதர்க்கம் விட்டு – தாயு:45 1252/1
மேல்

குதலை (1)

கூறாதது என்னோ குதலை மொழி பைங்கிளியே – தாயு:44 1029/2
மேல்

குதிக்கின்ற (1)

கொள்ளி தேள் கொட்டி குதிக்கின்ற பேய் குரங்காய் – தாயு:43 807/1
மேல்

குதித்து (1)

படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குற பாடி ஆடி குதித்து பனி மதி முகத்திலே நிலவு அனைய புன்னகை பரப்பி ஆர்த்தார்த்து எழுந்து – தாயு:6 55/2
மேல்

குப்பையிடை (1)

சன்னல்பின்னலான சகலம் எனும் குப்பையிடை
முன்னவன் ஞான கனலை மூட்டும் நாள் எந்நாளோ – தாயு:45 1167/1,2
மேல்

கும்ப (1)

முத்து அனைய மூரலும் பவள வாய் இன்_சொலும் முகத்து இலகு பசுமஞ்சளும் மூர்ச்சிக்க விரக சன்னதம் ஏற்ற இரு கும்ப முலையின் மணி மாலை நால – தாயு:10 98/1
மேல்

கும்பம் (1)

வாயில் கும்பம் போல் கிடந்து புரள்வேன் வானின் மதி கதிரை முன்னிலையா வைத்து நேரே – தாயு:14 156/4
மேல்

கும்பிட்டு (2)

குரு மணி இழைத்திட்ட சிங்காதனத்தின் மிசை கொலு வீற்றிருக்கும் நின்னை கும்பிட்டு அனந்தம் முறை தெண்டனிட்டு என் மன குறை எலாம் தீரும் வண்ணம் – தாயு:5 44/3
கொள்ளைகொண்ட கண்ணீரும் கம்பலையும் ஆகி கும்பிட்டு சகம் பொய் என தம்பட்டமடியே – தாயு:17 190/4
மேல்

கும்பிடு (1)

நண்ணேன் அலாமல் இரு கை-தான் குவிக்க எனில் நாணும் என் உளம் நிற்றி நீ நான் கும்பிடும் போது அரை கும்பிடு ஆதலால் நான் பூசை செய்யல் முறையோ – தாயு:6 52/2
மேல்

கும்பிடும் (1)

நண்ணேன் அலாமல் இரு கை-தான் குவிக்க எனில் நாணும் என் உளம் நிற்றி நீ நான் கும்பிடும் போது அரை கும்பிடு ஆதலால் நான் பூசை செய்யல் முறையோ – தாயு:6 52/2
மேல்

கும்பிபாகம் (1)

மு_மல சேறு ஆன முழு கும்பிபாகம் எனும் – தாயு:45 1124/1
மேல்

கும்பியின் (1)

துடியிட்ட வெம்_வினையை ஏவினான் பாவி நான் தொடரிட்ட தொழில்கள் எல்லாம் துண்டிட்ட சாண் கும்பியின் பொருட்டாய் அது உன் தொண்டர் பணி செய்வது என்றோ – தாயு:37 581/2
மேல்

கும்பியை (1)

மோக ஆசை முறியிட்ட பெட்டியை மு_மலம் மிகுந்து ஒழுகு கேணியை மொய்த்து வெம் கிருமி தத்து கும்பியை முடங்கல் ஆர் கிடை சரக்கினை – தாயு:13 122/2
மேல்

குமிழி (1)

ஐந்து வகை ஆகின்ற பூத பேதத்தினால் ஆகின்ற ஆக்கை நீர் மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான் அறியாத காலம் எல்லாம் – தாயு:4 30/1
மேல்

குமிழையும் (1)

காதில் ஓலையை வரைந்து மேல் குமிழையும் கறுவி வேள் கருநீல – தாயு:24 332/1
மேல்

குரங்காய் (1)

கொள்ளி தேள் கொட்டி குதிக்கின்ற பேய் குரங்காய்
கள்ள மனம் துள்ளுவது என் கண்டோ பராபரமே – தாயு:43 807/1,2
மேல்

குரங்கின் (1)

கூறு ஆய ஐம்_பூத சுமையை தாங்கி குணம்_இலா மனம் எனும் பேய் குரங்கின் பின்னே – தாயு:42 609/1
மேல்

குரங்கு (2)

மறுகி சுழலும் மன_குரங்கு மாள வாளா இருப்பேனோ – தாயு:24 334/2
காடு கரையும் மன_குரங்கு கால்விட்டு ஓட அதன் பிறகே – தாயு:30 553/1
மேல்

குரவன் (1)

கூர்த்த அறிவால் அறிய கூடாது என குரவன்
தேர்த்தபடி-தானே திரிந்தேன் பராபரமே – தாயு:43 904/1,2
மேல்

குரு (22)

குரு அருளால் காட்டிடவும் அன்பரை கோத்து அற விழுங்கிக்கொண்டு அப்பாலும் – தாயு:3 16/3
வந்து அருளும் குரு மெளனி மலர்_தாளை அநுதினமும் வழுத்தல்செய்வாம் – தாயு:3 19/4
நீதி பெறும் குரு ஆகி மன வாக்கு எட்டா நிச்சயமாய் சொச்சமதாய் நிமலம் ஆகி – தாயு:3 24/2
குரு மணி இழைத்திட்ட சிங்காதனத்தின் மிசை கொலு வீற்றிருக்கும் நின்னை கும்பிட்டு அனந்தம் முறை தெண்டனிட்டு என் மன குறை எலாம் தீரும் வண்ணம் – தாயு:5 44/3
சத்தம் அற எனை ஆண்ட குரு மெளனி கையினால் தமியனேற்கு உதவு பொருளே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 106/4
அந்தணர் நால்வர் காண அருள் குரு ஆகி வந்த – தாயு:15 174/1
குரு மொழியே மலை_இலக்கு மற்றை மொழி எல்லாம் கோடு இன்றி வட்டு_ஆடல் கொள்வது ஒக்கும் கண்டாய் – தாயு:17 186/2
குரு உரு ஆகி மெளனியாய் மெளன கொள்கையை உணர்த்தினை அதனால் – தாயு:19 280/1
ஆண்ட குரு மெளனி-தன்னால் யான் எனது அற்று அவன் அருள் நான் ஆவேன் பூவில் – தாயு:26 399/3
கொல்லா விரதியர் நேர்நின்ற முக்கண் குரு மணியே – தாயு:27 422/4
சிந்தை குழைந்து சுகம் சேர குரு அருளால் – தாயு:28 514/3
ஆனவரே சொன்னால் அவனே குரு எனக்கு – தாயு:28 522/3
குரு ஆகி தண் அருளை கூறும் முன்னே மோனா – தாயு:28 536/1
ஞான நெறிக்கு ஏற்ற குரு நண் அரிய சித்தி முத்தி – தாயு:28 541/1
தானம் தருமம் தழைத்த குரு மானமொடு – தாயு:28 541/2
தாய் எனவும் வந்து என்னை தந்த குரு என் சிந்தை – தாயு:28 541/3
கோயில் என வாழும் குரு – தாயு:28 541/4
குரு_பார்வை அல்லாமல் கூட கிடைத்திடுமோ – தாயு:29 545/2
குரு வழி நின்றார்க்கும் உண்டோ கூறாய் பராபரமே – தாயு:43 991/2
வைத்தவர்கள் வாழி குரு வாழி பராபரமே – தாயு:43 1017/2
குரு லிங்க சங்கமமா கொண்ட திரு_மேனி – தாயு:45 1314/1
குரு வடிவான குறைவு_இலா நிறைவே – தாயு:55 1451/2
மேல்

குரு_பார்வை (1)

குரு_பார்வை அல்லாமல் கூட கிடைத்திடுமோ – தாயு:29 545/2
மேல்

குருநாதன் (2)

வந்த குருநாதன் அருள் வாய்க்குமோ பைங்கிளியே – தாயு:44 1047/2
அன்பருக்கு அன்பான மெய்யன் ஐயன் ஆனந்த மோனன் அருள் குருநாதன்
தன் பாதம் சென்னியில் வைத்தான் என்னை தான் அறிந்தேன் மனம்-தான் இறந்தேனே – தாயு:54 1430/1,2
மேல்

குருலிங்க (1)

குருலிங்க சங்கமமா கொண்ட திரு_மேனி – தாயு:28 482/1
மேல்

குருவாம் (1)

ஆனாலும் மனம் சடம் என்று அழுங்காதே உண்மை அறிவித்த இடம் குருவாம் அருள் இலது ஒன்று இலையே – தாயு:17 193/4
மேல்

குருவாய் (6)

அறிவில் நின்று குருவாய் உணர்த்தியதும் அன்றி மோனகுரு ஆகியே அகிலம் மீது வர வந்த சீர் அருளை ஐய ஐய இனி என் சொல்கேன் – தாயு:13 128/3
ஆராமை கண்டு இங்கு அருள் குருவாய் நீ ஒரு கால் – தாயு:33 560/1
ஆதியந்தம் நீ குருவாய் ஆண்டது அல்லால் நின்னை அன்றி – தாயு:43 875/1
பந்தம் எலாம் தீர பரஞ்சோதி நீ குருவாய்
வந்த வடிவை மறவேன் பராபரமே – தாயு:43 961/1,2
மை காட்டும் மாயை மயக்கம்_அற நீ குருவாய்
கைகாட்டவும் கனவு கண்டேன் பராபரமே – தாயு:43 965/1,2
குருவாய் உணர்த்தி ஒருவர் போல் அனைவரும் – தாயு:55 1451/28
மேல்

குருவான (1)

சொல்லால் முழக்கியது மிக்க உபகாரமா சொல்லிறந்தவரும் விண்டு சொன்னவையும் இவை நல்ல குருவான பேரும் தொகுத்த நெறி-தானும் இவையே – தாயு:6 49/2
மேல்

குருவி (1)

தீயினிடை வைகியும் தோயம்-அதில் மூழ்கியும் தேகங்கள் என்பெலும்பாய் தெரிய நின்றும் சென்னி மயிர்கள் கூடா குருவி தெற்ற வெயிலூடு இருந்தும் – தாயு:8 70/2
மேல்

குருவும் (4)

ஒன்று ஒருவரை நான் கேட்க உணர்வு இல்லை குருவும் இல்லை – தாயு:15 172/4
தொழும் தெய்வமும் நீ குருவும் நீ துணை நீ தந்தை தாயும் நீ – தாயு:20 286/3
தாயும் பிதாவும் தமரும் குருவும் தனி முதலும் – தாயு:27 443/3
அவனே பரமும் அவனே குருவும்
அவனே அகிலம் அனைத்தும் அவனே தாம் – தாயு:28 522/1,2
மேல்

குருவே (43)

செங்கமல பீடம் மேல் கல்_ஆல் அடிக்குள் வளர் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 26/4
தேக்கி திளைக்க நீ முன் நிற்பது என்று காண் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 27/4
செவ்விதின் வளர்ந்து ஓங்கு திவ்ய குண_மேருவே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 28/4
தெய்வ மறை முடிவான பிரணவ சொரூபியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 29/4
செம் தழலின் மெழுகான தங்கம் இவை என்-கொலோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 30/4
சீர் இட்ட உலகு அன்னை வடிவான எந்தையே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 31/4
திரு மருவு கல்_ஆல் அடி கீழும் வளர்கின்ற சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 32/4
தேடுதலும் அற்ற இடம் நிலை என்ற மெளனியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 33/4
சீராய் இருக்க நினது அருள் வேண்டும் ஐயனே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 34/4
தீது_இல் அருள் கொண்டு இனி உணர்த்தி எனை ஆள்வையோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 35/4
சித்திசெய்தும் ஞானம் அலது கதி கூடுமோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 36/4
வாசம் உறு சற்சாரம் மீது என்னை ஒரு ஞான மத்தகஜம் என வளர்த்தாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 37/4
வாசம் உறு சற்சாரம் மீது என்னை ஒரு ஞான மத்தகஜம் என வளர்த்தாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 37/4
வந்த குருவே வீறு சிவஞான சித்தி நெறி மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 38/4

மா திக்கொடு அண்ட பரப்பு எலாம் அறியவே வந்து அருளும் ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 39/4

மன்ன ஒரு சொல் கொண்டு எனை தடுத்தாண்டு அன்பின் வாழ்வித்த ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 40/4

மானத விகற்பம் அற வென்று நிற்பது நமது மரபு என்ற பரமகுருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 41/4
மானத விகற்பம் அற வென்று நிற்பது நமது மரபு என்ற பரமகுருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 41/4
வல்லான் எனும் பெயர் உனக்கு உள்ளதே இந்த வஞ்சகனை ஆள நினையாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 42/4
வல்லான் எனும் பெயர் உனக்கு உள்ளதே இந்த வஞ்சகனை ஆள நினையாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 42/4
வானகமும் மண்ணகமும் வந்து எதிர் வணங்கிடும் உன் மகிமை-அது சொல்ல எளிதோ மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 43/4
வானகமும் மண்ணகமும் வந்து எதிர் வணங்கிடும் உன் மகிமை-அது சொல்ல எளிதோ மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 43/4
மரு மலர் எடுத்து உன் இரு தாளை அர்ச்சிக்க எனை வா என்று அழைப்பது எந்நாள் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 44/4
மரு மலர் எடுத்து உன் இரு தாளை அர்ச்சிக்க எனை வா என்று அழைப்பது எந்நாள் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 44/4
வாங்கா நிலாது அடிமை போராட முடியுமோ மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 45/4

மற்று எனக்கு ஐய நீ சொன்ன ஒரு வார்த்தையினை மலை_இலக்கு என நம்பினேன் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 46/4
மற்று எனக்கு ஐய நீ சொன்ன ஒரு வார்த்தையினை மலை_இலக்கு என நம்பினேன் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 46/4
கற்பனை அற காண முக்கணுடன் வடநிழல் கண்ணூடு இருந்த குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 47/4
மை விடா செழும் நீலகண்ட குருவே விஷ்ணு வடிவான ஞான குருவே மலர் மேவி மறை ஓதும் நான்முக குருவே மதங்கள்-தொறும் நின்ற குருவே – தாயு:6 51/3

மை விடா செழும் நீலகண்ட குருவே விஷ்ணு வடிவான ஞான குருவே மலர் மேவி மறை ஓதும் நான்முக குருவே மதங்கள்-தொறும் நின்ற குருவே
கைவிடாதே என்ற அன்பருக்கு அன்பாய் கருத்தூடு உணர்த்து குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 51/3,4
கைவிடாதே என்ற அன்பருக்கு அன்பாய் கருத்தூடு உணர்த்து குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 51/4
ஞான குருவே நவில் – தாயு:28 489/4
மேல்

குருவை (1)

குருவை முக்கண் எம் கோவை பணி நெஞ்சே – தாயு:18 241/3
மேல்

குரை (3)

கூறு அரும் குணத்தோய உன்றன் குரை கழல் குறுகின் அல்லால் – தாயு:21 298/3
கொழும் தாது உறை மலர் கோதையர் மோக குரை கடலில் – தாயு:27 407/1
குன்று குழியும் வனமும் மலையும் குரை கடலும் – தாயு:27 432/3
மேல்

குரோதமோ (1)

மோகமோ மதமோ குரோதமோ லோபமோ முற்றும் மாற்சரியமோ-தான் முறியிட்டு எனை கொள்ளும் நிதியமோ தேட எனின் மூசு வரி வண்டு போல – தாயு:37 583/3
மேல்

குல (1)

ஆங்காரம் ஆன குல வேட வெம் பேய் பாழ்த்த ஆணவத்தினும் வலிது காண் அறிவினை மயக்கிடும் நடு அறியவொட்டாது யாதொன்று தொடினும் அதுவாய் – தாயு:5 45/1
மேல்

குலம் (4)

சாதி குலம் பிறப்பு இறப்பு பந்தம் முத்தி அரு உருவ தன்மை நாமம் – தாயு:3 18/1
மத்த மத கரி முகில் குலம் என்ன நின்று இலகு வாயிலுடன் மதி அகடு தோய் மாட கூட சிகரம் மொய்த்த சந்திரகாந்த மணி மேடை உச்சி மீது – தாயு:11 105/1
குலம்_இலான் குணம் குறி_இலான் குறைவு_இலான் கொடிதாம் – தாயு:24 351/1
மெய்த்த குலம் கல்வி புனை வேடம் எலாம் ஓடவிட்ட – தாயு:45 1250/1
மேல்

குலம்_இலான் (1)

குலம்_இலான் குணம் குறி_இலான் குறைவு_இலான் கொடிதாம் – தாயு:24 351/1
மேல்

குலவாநின்ற (1)

கூறு அனைத்தும் கடந்த எல்லை சேடம் ஆகி குறைவு_அற நின்றிடும் நிறைவே குலவாநின்ற
ஆறு அனைத்தும் புகும் கடல் போல் சமயகோடி அத்தனையும் தொடர்ந்து புகும் ஆதி நட்பே – தாயு:14 134/3,4
மேல்

குலவுகின்ற (1)

பருவம் குலவுகின்ற மட மங்கையர் தொடங்கு – தாயு:56 1452/29
மேல்

குலவுறு (1)

கோன் ஆக ஒரு முதல் இங்கு உண்டு எனவும் யூகம் கூட்டியதும் சக முடிவில் குலவுறு மெய்ஞ்ஞான – தாயு:17 193/2
மேல்

குலாலனார் (1)

மாக இந்த்ர தனு மின்னை ஒத்து இலக வேதம் ஓதிய குலாலனார் வனைய வெய்ய தடிகாரனான யமன் வந்து அடிக்கும் ஒரு மண்_கலத்து – தாயு:13 122/3
மேல்

குலாவி (1)

முத்தமிழ் முழக்கமுடன் முத்த நகையார்களொடு முத்துமுத்தாய் குலாவி மோகத்து இருந்தும் என் யோகத்தின் நிலை நின்று மூச்சை பிடித்து அடைத்து – தாயு:11 105/2
மேல்

குலாவு (3)

குடக்கொடு குணக்கு ஆதி திக்கினை உழக்கூடு கொள்ளல் போல் ஐந்து பூதம் கூடும் சுருங்கு இலை சாலேகம் ஒன்பது குலாவு நடை_மனையை நாறும் – தாயு:11 101/1
வெள்ளம் குலாவு சடை வெள்ள கருணையினான் – தாயு:28 487/1
கள்ளம் குலாவு வஞ்ச கள்ளனேன் உள்ளத்தில் – தாயு:28 487/2
மேல்

குலாவும் (1)

கானகம் இலங்கு புலி பசுவொடு குலாவும் நின் கண் காண மத யானை நீ கைகாட்டவும் கையால் நெகிடிக்கென பெரிய கட்டை மிக ஏந்தி வருமே – தாயு:5 43/1
மேல்

குலை (1)

மனை இன்புற இருந்த இனமும் குலை குலைந்து – தாயு:56 1452/54
மேல்

குலைந்து (1)

மனை இன்புற இருந்த இனமும் குலை குலைந்து
கலகம்செய இருண்ட யமன் வரும் வேளை – தாயு:56 1452/54,55
மேல்

குலையாது (1)

பட்டப்பகல் பொழுதை இருள் என்ற மருளர்-தம் பக்ஷமோ எனது பக்ஷம் பார்த்த இடம் எங்கணும் கோத்த நிலை குலையாது பரமவெளியாக ஒரு சொல் – தாயு:6 50/1
மேல்

குலையாமலே (1)

பண்ணுவது நன்மை இ நிலை பதியும் மட்டுமே பதியாய் இருந்த தேக பவுரி குலையாமலே கவுரி குண்டலி ஆயி பண்ணவி-தன் அருளினாலே – தாயு:7 60/3
மேல்

குவலயம் (1)

கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க – தாயு:43 689/1
மேல்

குவிக்க (1)

நண்ணேன் அலாமல் இரு கை-தான் குவிக்க எனில் நாணும் என் உளம் நிற்றி நீ நான் கும்பிடும் போது அரை கும்பிடு ஆதலால் நான் பூசை செய்யல் முறையோ – தாயு:6 52/2
மேல்

குவிக்கும் (1)

திக்கு அனைத்தும் கை குவிக்கும் சின்மயராம் தன்மையர்க்கே – தாயு:28 478/3
மேல்

குவித்த (1)

பொய் குவித்த நெஞ்சன் அருள் பொற்பு அறிந்து திக்கு அனைத்தும் – தாயு:43 927/1
மேல்

குவித்திடு (1)

கந்தருவர் கின்னரர்கள் மற்றையர்கள் யாவரும் கை குவித்திடு தெய்வமே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 53/4
மேல்

குவித்து (7)

சோதியை என் உயிர் துணையை நாடி கண்ணீர் சொரிய இரு கரம் குவித்து தொழுதல்செய்வாம் – தாயு:3 24/4
கண் ஆர நீர் மல்கி உள்ளம் நெக்குருகாத கள்ளனேன் ஆனாலுமோ கை குவித்து ஆடியும் பாடியும் விடாமலே கண் பனி தாரை காட்டி – தாயு:10 93/1
கவ்வை அற்ற நடை பயில அன்பர் அடி கண்டதே அருளின் வடிவமா கண்ட யாவையும் அகண்டம் என்ன இரு கை குவித்து மலர் தூவியே – தாயு:13 129/2
தேடிய நின் சீர் அருளை திக்கு அனைத்தும் கை குவித்து
பாடிய நான் கண்டாய் பதியே பராபரமே – தாயு:33 565/3,4
கை குவித்து நிற்பது எந்த காலம் பராபரமே – தாயு:43 927/2
கையும் குவித்து இரண்டு கண் அருவி பெய்ய அருள் – தாயு:47 1372/1
கண்ட வடிவு எல்லாம் நின் காட்சி என்றே கை குவித்து
பண்டும் இன்றும் நின்ற என்னை பார்த்து இரங்க வேண்டாவோ – தாயு:49 1379/1,2
மேல்

குவிதலுடன் (1)

கூடுதலுடன் பிரிதல் அற்று நிர்த்தொந்தமாய் குவிதலுடன் விரிதல் அற்று குணம் அற்று வரவினொடு போக்கு அற்று நிலையான குறி அற்று மலமும் அற்று – தாயு:4 33/1
மேல்

குவிப்பேன் (1)

செய கடவேன் செயல் எல்லாம் நினதே என்று செம் கை குவிப்பேன் அல்லால் செயல் வேறு இல்லை – தாயு:42 629/2
மேல்

குவிய (1)

பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 12/4
மேல்

குழல் (2)

திண்ணிய நெஞ்ச பறவை சிக்க குழல்_காட்டில் – தாயு:45 1128/1
பருகும்படி துணிந்து குழல் அழகு ஆக – தாயு:56 1452/34
மேல்

குழல்_காட்டில் (1)

திண்ணிய நெஞ்ச பறவை சிக்க குழல்_காட்டில்
கண்ணிவைப்போர் மாயம் கடக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1128/1,2
மேல்

குழலினர் (1)

அல்லை ஒத்த குழலினர் ஆசையால் – தாயு:18 240/2
மேல்

குழவியை (1)

கார் இட்ட ஆணவ கருவறையில் அறிவு அற்ற கண் இலா குழவியை போல் கட்டுண்டு இருந்த எமை வெளியில்விட்டு அல்லலாம் காப்பிட்டு அதற்கு இசைந்த – தாயு:4 31/1
மேல்

குழறி (1)

உள் நிறைந்த பேர்_அன்பால் உள் உருகி மொழி குழறி உவகையாகி – தாயு:3 23/3
மேல்

குழாத்துடனே (1)

கொய்யும் புது மலர் இட்டு மெய் அன்பர் குழாத்துடனே
கையும் சிரம் மிசை கூப்பி நின்று ஆடி கசிந்து உருகி – தாயு:27 403/2,3
மேல்

குழியும் (1)

குன்று குழியும் வனமும் மலையும் குரை கடலும் – தாயு:27 432/3
மேல்

குழு (1)

குழு காண நின்று நடம் ஆடும் தில்லை கொழும் சுடரே – தாயு:27 434/4
மேல்

குழைந்து (4)

எவ்வுயிர் திரளும் உலகில் என் உயிர் என குழைந்து உருகி நன்மையாம் இதம் உரைப்ப எனது என்ற யாவையும் எடுத்து எறிந்து மத யானை போல் – தாயு:13 129/1
அங்கம் குழைந்து உள் உருகும் அன்பாளர்க்கு அணைகடந்து – தாயு:27 452/3
சிந்தை குழைந்து சுகம் சேர குரு அருளால் – தாயு:28 514/3
அகம் எலாம் குழைந்து ஆனந்தமாக நல் அறிஞர் – தாயு:32 558/2
மேல்

குழைய (4)

உடல் குழைய என்பு எலாம் நெக்குருக விழி நீர்கள் ஊற்று என வெதும்பி ஊற்ற ஊசி காந்தத்தினை கண்டு அணுகல் போலவே ஓர் உறவும் உன்னிஉன்னி – தாயு:6 55/1
உள்ளம் குழைய உடல் குழைய உள் இருந்த – தாயு:43 996/1
உள்ளம் குழைய உடல் குழைய உள் இருந்த – தாயு:43 996/1
கள்ளம் குழைய என்று காண்பேன் பராபரமே – தாயு:43 996/2
மேல்

குழையில் (1)

தேக செயல்-தானும் சிந்தையுடனே குழையில்
யோக நிலை ஞானிகளுக்கு ஒப்புவதோ மோக நிலை – தாயு:28 510/1,2
மேல்

குளறி (4)

நான் ஆகி நின்றவனும் நீ ஆகி நின்றிடவும் நான் என்பது அற்றிடாதே நான்நான் என குளறி நானா விகாரியாய் நான் அறிந்து அறியாமையாய் – தாயு:8 73/2
உன்னிய கருத்து அவிழ உரை குளறி உடல் எங்கும் ஓய்ந்து அயர்ந்து அவசமாகி உணர்வு அரிய பேர்_இன்ப அநுபூதி உணர்விலே உணர்வார்கள் உள்ளபடி காண் – தாயு:9 77/2
கொடுத்த போது கொடுத்தது அன்றோ பினும் குளறி நான் என்று கூத்தாட மாயையை – தாயு:31 556/2
விண்டு மொழி குளறி வேட்கை மது மொண்டுதரும் – தாயு:45 1140/1
மேல்

குளறியே (2)

யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும் உள்ளதே போதும் நான் நான் என குளறியே ஒன்றை விட்டு ஒன்று பற்றி – தாயு:2 13/3
பவ்வ வெண் திரை கொழித்த தண் தரளம் விழி உதிர்ப்ப மொழி குளறியே பாடி ஆடி உள் உடைந்துடைந்து எழுது பாவை ஒத்து அசைதல் இன்றியே – தாயு:13 129/3
மேல்

குளறுபடை (1)

ஞான நெறி முக்ய நெறி காட்சி அனுமானம் முதல் நானாவிதங்கள் தேர்ந்து நான் நான் என குளறுபடை புடைபெயர்ந்திடவும் நான்கு சாதனமும் ஓர்ந்திட்டு – தாயு:5 41/2
மேல்

குளறும் (1)

நான்நான் என குளறும் நாட்டத்தால் என்னை விட்டு – தாயு:43 891/1
மேல்

குளிகை (1)

பருவம்-அது அறிந்து நின் அருளான குளிகை கொடு பரிசித்து வேதிசெய்து பத்து_மாற்று தங்கம் ஆக்கியே பணிகொண்ட பக்ஷத்தை என் சொல்லுகேன் – தாயு:4 32/2
மேல்

குளிர் (2)

கொந்து அவிழ் மலர் சோலை நல் நீழல் வைகினும் குளிர் தீம் புனல் கை அள்ளி கொள்ளுகினும் அ நீரிடை திளைத்து ஆடினும் குளிர் சந்த வாடை மடவார் – தாயு:11 110/1
கொந்து அவிழ் மலர் சோலை நல் நீழல் வைகினும் குளிர் தீம் புனல் கை அள்ளி கொள்ளுகினும் அ நீரிடை திளைத்து ஆடினும் குளிர் சந்த வாடை மடவார் – தாயு:11 110/1
மேல்

குற்ற (1)

குற்ற சமய குறும்பு அடர்ந்து தற்போதம் – தாயு:45 1251/1
மேல்

குற்றம் (5)

குற்றம் குறைந்து குணம் மேலிடும் என்பர் கூட்டத்தையே – தாயு:27 457/3
குற்றம் என்று என் நெஞ்சே கொதிக்கும் பராபரமே – தாயு:43 672/2
எத்தன்மை குற்றம் இயற்றிடினும் தாய் பொறுக்கும் – தாயு:43 715/1
குற்றம் குறைய குணம் மேலிட அருளை – தாயு:43 938/1
குற்றம்_அற கைகாட்டும் கருத்தை கண்டு குணம் குறி அற்று இன்ப நிட்டை கூட அன்றோ – தாயு:52 1415/2
மேல்

குற்றம்_அற (1)

குற்றம்_அற கைகாட்டும் கருத்தை கண்டு குணம் குறி அற்று இன்ப நிட்டை கூட அன்றோ – தாயு:52 1415/2
மேல்

குற்றேவல் (1)

கல்லாத அறிவில் கடைப்பட்ட நான் அன்று கையினால் உண்மை ஞானம் கற்பித்த நின் அருளினுக்கு என்ன கைம்மாறு காட்டுவேன் குற்றேவல் நான் – தாயு:12 119/2
மேல்

குறி (10)

கோது_இல் அமுது ஊற்று அரும்பி குணம் குறி ஒன்று அற தன்னை கொடுத்து காட்டும் – தாயு:3 15/3
கூடுதலுடன் பிரிதல் அற்று நிர்த்தொந்தமாய் குவிதலுடன் விரிதல் அற்று குணம் அற்று வரவினொடு போக்கு அற்று நிலையான குறி அற்று மலமும் அற்று – தாயு:4 33/1
தொந்த ரூபமுடன் அரூபம் ஆதி குறி குணம் இறந்து வளர் வஸ்துவே துரியமே துரிய உயிரினுக்கு உணர்வு தோன்ற நின்று அருள் சுபாவமே – தாயு:13 124/2
குறி அற்று அகண்டாதீதமய கோது_இல் அமுதே நினை குறுகி – தாயு:20 283/3
குலம்_இலான் குணம் குறி_இலான் குறைவு_இலான் கொடிதாம் – தாயு:24 351/1
பிறிவு அற ஆனந்த மயம் பெற்று குறி அவிழ்ந்தால் – தாயு:28 492/2
கொன்றதற்கோ பேசா குறி – தாயு:28 538/4
குறி யாதும் இல்லை என்றால் யாங்கள் வேறோ கோதை ஒரு கூறு_உடையாய் கூறாய் கூறாய் – தாயு:42 608/2
குறி ஏது எனக்கு உளவு கூறாய் பராபரமே – தாயு:43 798/2
குற்றம்_அற கைகாட்டும் கருத்தை கண்டு குணம் குறி அற்று இன்ப நிட்டை கூட அன்றோ – தாயு:52 1415/2
மேல்

குறி-தான் (1)

குறி-தான் அளித்தனை நல் மரவுரி கொள் அந்தண கோலமாய் அசபா நலம் கூறின பின் மெளனியாய் சும்மா இருக்க நெறி கூட்டினை எலாம் இருக்க – தாயு:12 116/3
மேல்

குறி_இலான் (1)

குலம்_இலான் குணம் குறி_இலான் குறைவு_இலான் கொடிதாம் – தாயு:24 351/1
மேல்

குறிக்கும் (2)

கொண்டு அறியேன் முத்தி குறிக்கும் தரமும் உண்டோ – தாயு:33 568/2
குறியாத வண்ணம் குறிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1294/2
மேல்

குறிகளோடு (1)

குறிகளோடு குணம் ஏதும் இன்றி அனல் ஒழுக நின்றிடும் இரும்பு அனல் கூடல் இன்றி அதுவாயிருந்தபடி கொடிய ஆணவ அறைக்கு உளே – தாயு:13 123/1
மேல்

குறித்தவிதம் (1)

குறித்தவிதம் ஆதியால் கூடும் வினை எல்லாம் – தாயு:45 1161/1
மேல்

குறித்தாய் (1)

கோனே என்னை புரக்கும் நெறி குறித்தாய்_இலையே கொடியேனை – தாயு:20 289/2
மேல்

குறித்தாய்_இலையே (1)

கோனே என்னை புரக்கும் நெறி குறித்தாய்_இலையே கொடியேனை – தாயு:20 289/2
மேல்

குறித்து (1)

இடம் பொருள் ஏவலை குறித்து மடம் புகு நாய் எனவே எங்கே நீ அகப்பட்டாய் இங்கே நீ வாடா – தாயு:17 188/1
மேல்

குறிப்பினையே (1)

கொண்டு அறிவேன் எந்தை நினை கூடும் குறிப்பினையே – தாயு:51 1391/2
மேல்

குறிப்பு (5)

ஒருவர் என் உளத்து உள்ளும் குறிப்பு அறிந்து – தாயு:18 212/1
சிந்தை நோக்கம் தெரிந்து குறிப்பு எலாம் – தாயு:18 248/3
கோன் இங்கு ஈந்த குறிப்பு அதனால் வெறும் – தாயு:18 251/3
என்றும் அடைந்தோர்கட்கு இரங்கார் குறிப்பு அனைத்தும் – தாயு:43 937/1
கோனூடு அடங்கும் குறிப்பு அறிவது எந்நாளோ – தாயு:45 1275/2
மேல்

குறியாத (2)

குறியாத ஆனந்த கோவோ அமுது அருள் குண்டலியோ – தாயு:27 430/3
குறியாத வண்ணம் குறிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1294/2
மேல்

குறியால் (1)

நெறியான போது அதுவாய் நிற்கும் குறியால்
சத் அசத்து அருள் உணர்த்த தான் உணராநின்ற – தாயு:28 481/2,3
மேல்

குறியில் (1)

குறியில் அறிவு வந்து கூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1272/2
மேல்

குறியும் (2)

குறியும் குணமும் அற கூடாத கூட்டத்து – தாயு:28 539/1
குறியும் குணமும் அன்றி நிறைவும் குறைவும் அன்றி – தாயு:56 1452/3
மேல்

குறியேற்கு (1)

குறியேற்கு அறிவு என்ற கோலம் வறிதேயாம் – தாயு:28 463/2
மேல்

குறுக்கும் (1)

நீண்ட நெடுமையும் அகல குறுக்கும் காட்டா நிறை பரிபூரண அறிவாய் நித்தம் ஆகி – தாயு:14 144/2
மேல்

குறுக்கே (1)

அந்நாளில் எவனோ பிரித்தான் அதை கேட்ட அன்று முதல் இன்று வரையும் அநியாயமாய் எமை அடக்கி குறுக்கே அடர்ந்து அரசுபண்ணி எங்கள் – தாயு:9 88/2
மேல்

குறுக (1)

கேட்டது கொடுத்து வர நிற்கவைப்பீர் பிச்சை கேட்டு பிழைப்போரையும் கிரீட_பதி ஆக்குவீர் கற்பாந்த வெள்ளம் ஒரு கேணியிடை குறுக வைப்பீர் – தாயு:7 58/2
மேல்

குறுகல் (1)

நீட்சி குறுகல் இல்லா நித்ய சுகாரம்ப சக – தாயு:43 945/1
மேல்

குறுகி (2)

குறி அற்று அகண்டாதீதமய கோது_இல் அமுதே நினை குறுகி
பிரிவு_அற்று இருக்க வேண்டாவோ பேயேற்கு இனி நீ பேசாயே – தாயு:20 283/3,4
நீட்டுக்கு எல்லாம் குறுகி நின்றாய் பராபரமே – தாயு:43 999/2
மேல்

குறுகின் (1)

கூறு அரும் குணத்தோய உன்றன் குரை கழல் குறுகின் அல்லால் – தாயு:21 298/3
மேல்

குறுகுமோ (1)

குன்றும் செடியும் குறுகுமோ ஐயாவே – தாயு:28 494/3
மேல்

குறும்பு (1)

குற்ற சமய குறும்பு அடர்ந்து தற்போதம் – தாயு:45 1251/1
மேல்

குறை (2)

குரு மணி இழைத்திட்ட சிங்காதனத்தின் மிசை கொலு வீற்றிருக்கும் நின்னை கும்பிட்டு அனந்தம் முறை தெண்டனிட்டு என் மன குறை எலாம் தீரும் வண்ணம் – தாயு:5 44/3
கொள்ளைகொண்ட நீ என் குறை தீர் பராபரமே – தாயு:43 871/2
மேல்

குறைசொல்ல (1)

கொஞ்சம் உற்றாய் உன்னை குறைசொல்ல வாயும் உண்டோ – தாயு:29 546/2
மேல்

குறைந்தபடி (1)

வளரும் பிறை குறைந்தபடி மதி சோர – தாயு:56 1452/48
மேல்

குறைந்து (1)

குற்றம் குறைந்து குணம் மேலிடும் என்பர் கூட்டத்தையே – தாயு:27 457/3
மேல்

குறைய (1)

குற்றம் குறைய குணம் மேலிட அருளை – தாயு:43 938/1
மேல்

குறையா (2)

ஈசா பொதுவில் நடம் ஆடும் இறைவா குறையா இன் அமுதே – தாயு:20 284/4
அள்ள குறையா அகண்டிதானந்தம் எனும் – தாயு:49 1382/1
மேல்

குறையும் (2)

ஏது பாவித்திடினும் அது ஆகி வந்து அருள்செய் எந்தை நீ குறையும் உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 91/4
குடி முழுதும் பிழைக்கும் ஒரு குறையும் இல்லை எடுத்த கோலம் எல்லாம் நன்று ஆகும் குறைவு நிறைவு அறவே – தாயு:17 191/2
மேல்

குறையுமோ (1)

பெருமை பெறு பூரணம் குறையுமோ பூதங்கள் பேய் கோலமாய் விதண்டை பேசுமோ அலது தான் பரிபாக காலம் பிறக்கவிலையோ தொல்லையாம் – தாயு:10 95/3
மேல்

குறையோ (1)

ஊழ் வலியோ அல்லது உன்றன் திரு_கூத்தோ இங்கு ஒரு தமியேன் மேல் குறையோ உணர்த்தாய் இன்னம் – தாயு:16 178/3
மேல்

குறைவில்லை (1)

அண்ணா பரஞ்சோதி அப்பா உனக்கு அடிமை யான் எனவும் மேல் எழுந்த அன்பாகி நாடகம் நடித்ததோ குறைவில்லை அகிலமும் சிறிது அறியுமேல் – தாயு:10 93/2
மேல்

குறைவு (13)

கூறு அனைத்தும் கடந்த எல்லை சேடம் ஆகி குறைவு_அற நின்றிடும் நிறைவே குலவாநின்ற – தாயு:14 134/3
குறைவு_இலா வணம் நிறைந்து கோது_இலா நடனம் செய்வான் – தாயு:15 169/3
குடி முழுதும் பிழைக்கும் ஒரு குறையும் இல்லை எடுத்த கோலம் எல்லாம் நன்று ஆகும் குறைவு நிறைவு அறவே – தாயு:17 191/2
எம்பிரான் உய்ந்தேன் உய்ந்தேன் இனி ஒன்றும் குறைவு_இலேனே – தாயு:21 292/4
குறைவு_இலா நிறைவாய் ஞான கோது_இல் ஆனந்த_வெள்ள – தாயு:21 293/1
குலம்_இலான் குணம் குறி_இலான் குறைவு_இலான் கொடிதாம் – தாயு:24 351/1
பராபரமே எனக்கு ஏதும் குறைவு இல்லையே – தாயு:27 427/4
தே என்ற நீ கலந்து கலந்து முத்தி சேர்த்தனையேல் குறைவு ஆமோ செக விலாசம் – தாயு:40 592/2
கோலமே எனை வாவா என்று கூவி குறைவு_அற நின் அருள் கொடுத்தால் குறைவோ சொல்லாய் – தாயு:42 624/2
குறைவு_இல் அருள் ஞானம் முதல் கொற்றங்குடி அடிகள் – தாயு:45 1100/1
கூவி அழைத்து இன்பம் கொடுத்தால் குறைவு ஆமோ – தாயு:51 1403/2
குரு வடிவான குறைவு_இலா நிறைவே – தாயு:55 1451/2
நிறைவில் காட்டியே குறைவு இன்றி வயங்க – தாயு:55 1451/31
மேல்

குறைவு_அற (2)

கூறு அனைத்தும் கடந்த எல்லை சேடம் ஆகி குறைவு_அற நின்றிடும் நிறைவே குலவாநின்ற – தாயு:14 134/3
கோலமே எனை வாவா என்று கூவி குறைவு_அற நின் அருள் கொடுத்தால் குறைவோ சொல்லாய் – தாயு:42 624/2
மேல்

குறைவு_இல் (1)

குறைவு_இல் அருள் ஞானம் முதல் கொற்றங்குடி அடிகள் – தாயு:45 1100/1
மேல்

குறைவு_இலா (3)

குறைவு_இலா வணம் நிறைந்து கோது_இலா நடனம் செய்வான் – தாயு:15 169/3
குறைவு_இலா நிறைவாய் ஞான கோது_இல் ஆனந்த_வெள்ள – தாயு:21 293/1
குரு வடிவான குறைவு_இலா நிறைவே – தாயு:55 1451/2
மேல்

குறைவு_இலான் (1)

குலம்_இலான் குணம் குறி_இலான் குறைவு_இலான் கொடிதாம் – தாயு:24 351/1
மேல்

குறைவு_இலேனே (1)

எம்பிரான் உய்ந்தேன் உய்ந்தேன் இனி ஒன்றும் குறைவு_இலேனே – தாயு:21 292/4
மேல்

குறைவும் (1)

குறியும் குணமும் அன்றி நிறைவும் குறைவும் அன்றி – தாயு:56 1452/3
மேல்

குறைவையாது (1)

கொடுக்கின்றோர்கள்-பால் குறைவையாது யான் எனும் குதர்க்கம் – தாயு:24 327/1
மேல்

குறைவோ (1)

கோலமே எனை வாவா என்று கூவி குறைவு_அற நின் அருள் கொடுத்தால் குறைவோ சொல்லாய் – தாயு:42 624/2
மேல்

குன்றமே (1)

கெடுத்த இன்ப கிளர் மணி குன்றமே – தாயு:18 259/4
மேல்

குன்றா (1)

குன்றா பொருளே குண பெரும் கடலே – தாயு:55 1451/4
மேல்

குன்றாத (1)

குன்றாத மூ_உருவாய் அருவாய் ஞான கொழுந்து ஆகி அறு_சமய கூத்தும் ஆடி – தாயு:16 182/1
மேல்

குன்றிடாத (1)

குன்றிடாத கொழும் சுடரே மணி – தாயு:18 260/1
மேல்

குன்று (1)

குன்று குழியும் வனமும் மலையும் குரை கடலும் – தாயு:27 432/3
மேல்

குன்றும் (1)

குன்றும் செடியும் குறுகுமோ ஐயாவே – தாயு:28 494/3
மேல்

குன்றே (4)

தேகாதி உலகம் எங்கும் கலந்து தானே திகழ் அனந்தானந்த மய தெய்வ குன்றே – தாயு:14 132/4
சுற்றமுமாய் நல் அன்பர்-தமை சேய் ஆக தொழும்புகொளும் கனா கனமே சோதி_குன்றே – தாயு:16 181/4
பெற்றவர் பெற்ற பெரும் தவ_குன்றே பெருகிய கருணை_வாரிதியே – தாயு:22 309/1
குன்றே நின் தாள் கீழ் குடி பெறவும் காண்பேனோ – தாயு:46 1327/2

மேல்