கீ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீண்டு (1)

விதம் யாவும் கடந்து அவித்தை எனும் இருளை கீண்டு எழுந்து விமலம் ஆகி – தாயு:26 392/3
மேல்


கீதன் (1)

நாத கீதன் என் நாதன் முக்கண் பிரான் – தாயு:18 243/1
மேல்


கீழ் (21)

நாடுதலும் அற்று மேல் கீழ் நடு பக்கம் என நண்ணுதலும் அற்று விந்து நாதம் மற்று ஐ வகை பூத பேதமும் அற்று ஞாதுருவின் ஞானம் அற்று – தாயு:4 33/2
முன் நிலை ஒழிந்திட அகண்டிதாகாரமாய் மூதறிவு மேல் உதிப்ப முன்பினொடு கீழ் மேல் நடு பக்கம் என்னாமல் முற்றும் ஆனந்த நிறைவே – தாயு:10 99/3
தனந்தனி சின்மாத்திரமாய் கீழ் மேல் காட்டா சத் அசத்தாய் அருள் கோயில் தழைத்த தேவே – தாயு:14 133/2
அன்று ஆலின் கீழ் இருந்து மோன ஞானம் அமைத்த சின்முத்திரை கடலே அமரர் ஏறே – தாயு:16 182/4
கல்_ஆலின் கீழ் இருந்த செக்கர் மேனி கற்பகமே பராபரமே கைலை வாழ்வே – தாயு:24 345/4
ஆரா அமுது என மோனம் வகித்து கல்_ஆல் நிழல் கீழ்
பேராது நால்வருடன் வாழ் முக்கண் உடை பேர்_அரசே – தாயு:27 420/1,2
கோலம் படைத்து கல்_ஆல் அடி கீழ் வைகும் கோவுக்கு அன்பாம் – தாயு:27 435/3
கல்_ஆலின் கீழ் இருந்து கற்பித்தான் ஓர் வசனம் – தாயு:28 504/3
ஆள வந்தார் தாளின் கீழ் ஆள் புகுந்தாய் மீள உன்னை – தாயு:28 523/2
தாழாயோ எந்தை அருள் தாள் கீழ் நெஞ்சே எனை போல் – தாயு:29 544/3
அருள் பாய் நமக்காக ஆள வந்தார் பொன் அடி கீழ்
மருள் பேயர் போல் இருக்க வா கண்டாய் வஞ்ச நெஞ்சே – தாயு:29 545/3,4
அஞ்சல்அஞ்சல் என்று இரங்கும் ஆனந்த மா கடல் கீழ்
நெஞ்சமே என் போல நீ அழுந்த வாராயோ – தாயு:29 546/3,4
வாரா வரவாய் வட நிழல் கீழ் வீற்றிருந்த – தாயு:29 547/1
திக்கொடு கீழ் மேலும் திரு_அருளாம் பொற்பு_அறிந்தோர் – தாயு:43 643/1
எண் திசை கீழ் மேலான எல்லாம் பெருவெளியா – தாயு:43 768/1
நந்தி அடி கீழ் குடியாய் நாம் அணைவது எந்நாளோ – தாயு:45 1095/2
அடிகள் அடி கீழ் குடியாய் யாம் வாழா வண்ணம் – தாயு:45 1155/1
எட்டு திசை கீழ் மேல் எங்கும் பெருகி வரும் – தாயு:45 1180/1
ஆராரும் காணாத அற்புதனார் பொன் படி கீழ்
நீர் ஆர் நிழல் போல் நிலாவும் நாள் எந்நாளோ – தாயு:45 1279/1,2
மேலொடு கீழ் இல்லாத வித்தகனார்-தம்முடனே – தாயு:45 1293/1
குன்றே நின் தாள் கீழ் குடி பெறவும் காண்பேனோ – தாயு:46 1327/2
மேல்


கீழ்ப்பட (1)

மேற்கொண்ட வாயுவும் கீழ்ப்பட மூலத்து வெம் தழலை – தாயு:27 428/1
மேல்


கீழ்ப்படவும் (1)

கேடு_இல் பசு பாசம் எல்லாம் கீழ்ப்படவும் தானே மேல் – தாயு:45 1196/1
மேல்


கீழ்ப்படாது (1)

கேவலத்தில் நான் கிடந்து கீழ்ப்படாது இன்ப அருள் – தாயு:46 1316/1
மேல்


கீழ்மேலவாக (1)

ஊர் என விளங்குவீர் பிரமாதி முடிவில் விடை ஊர்தி அருளால் உலவுவீர் உலகங்கள் கீழ்மேலவாக பெரும் காற்று உலாவின் நல் தாரணையினால் – தாயு:7 59/3
மேல்


கீழாக (1)

கெட்ட வழி ஆணவ பேய் கீழாக மேலான – தாயு:43 787/1
மேல்


கீழும் (1)

திரு மருவு கல்_ஆல் அடி கீழும் வளர்கின்ற சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 32/4
மேல்


கீழே (3)

நீதியாய் கல்_ஆலின் நீழலின் கீழே இருந்து – தாயு:28 509/1
ஐய நின் தாள் கீழே அடிமை நின்றால் ஆகாதோ – தாயு:47 1372/2
ஆசா பிசாசை துரத்தி ஐயன் அடி_இணை கீழே அடக்கிக்கொண்டாண்டி – தாயு:54 1424/2
மேல்


கீழொடு (1)

கேவல சகலம் இன்றி கீழொடு மேலாய் எங்கும் – தாயு:24 336/1
மேல்


கீற்றிலே (1)

தெட்டிலே வலிய மட மாதர் வாய் வெட்டிலே சிற்றிடையிலே நடையிலே சேல் ஒத்த விழியிலே பால் ஒத்த மொழியிலே சிறுபிறை நுதல் கீற்றிலே
பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனை கந்த பொடியிலே அடியிலே மேல் பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே புந்தி-தனை நுழைய விட்டு – தாயு:37 579/1,2

மேல்