நொ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நொ 1
நொச்சி 19
நொச்சியும் 4
நொசி 3
நொசிப்பின் 1
நொசிவு 1
நொடி 11
நொடிகுவது 1
நொடிகுவென் 1
நொடித்து 3
நொடிதல் 1
நொடிதி 1
நொடிப்பு 1
நொடியவும் 1
நொடியா 1
நொடியாய் 1
நொடியால் 1
நொடியிடை 1
நொடியில் 8
நொடியின் 1
நொடியினின் 1
நொடிவான் 1
நொடிவிடுவு 1
நொடிவு 1
நொடுத்த 1
நொடுத்து 4
நொடை 13
நொடைமை 1
நொண்டு 2
நொதுமல் 6
நொதுமலர் 6
நொதுமலாட்டிக்கு 1
நொதுமலாளர் 3
நொதுமலாளன் 2
நொதுமலாளனை 1
நொந்த 1
நொந்ததன் 1
நொந்தவர் 1
நொந்தன 2
நொந்தனர் 1
நொந்தனள் 1
நொந்தனன் 1
நொந்தனென் 4
நொந்தனை 1
நொந்தாய் 1
நொந்தார் 1
நொந்தாள் 1
நொந்தான் 1
நொந்திலர் 1
நொந்திலென் 1
நொந்தீவார் 1
நொந்து 44
நொந்து_நொந்து 5
நொந்துநொந்து 1
நொந்தும் 1
நொந்துளேன் 1
நொந்தேம் 1
நொப்பமே-கொல் 1
நொய் 2
நொய்தா 2
நொய்தாய் 1
நொய்தால் 1
நொய்தில் 1
நொய்திலனால் 1
நொய்தின் 41
நொய்தினில் 3
நொய்தினின் 11
நொய்தினை 1
நொய்து 13
நொய்ய 7
நொய்யது 1
நொய்யவே 1
நொய்யள் 1
நொய்யார் 1
நொவ் 3
நொவ்வல் 1
நொவ்விதின் 1
நொவ்வு 2
நொள்ளை 1
நொறில் 7
நொறுக்கி 1

நொ (1)

தாஅல் அம் சிறை நொ பறை வாவல் – குறு 172/1

மேல்


நொச்சி (19)

மனை நொச்சி நிழல் ஆங்கண் – பொரு 185
மயில் அடி இலைய மா குரல் நொச்சி
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ – நற் 115/5,6
ஒண் குரல் நொச்சி தெரியல் சூடி – நற் 200/2
மனை மா நொச்சி மீமிசை மா சினை – நற் 246/3
நொச்சி மா அரும்பு அன்ன கண்ண – நற் 267/1
மணி குரல் நொச்சி தெரியல் சூடி – நற் 293/1
மயில் அடி இலைய மா குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த – குறு 138/3,4
கூடுதல் வேட்கையான் குறி பார்த்து குரல் நொச்சி
பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக – கலி 46/12,13
மனை இள நொச்சி மௌவல் வால் முகை – அகம் 21/1
தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும் – அகம் 23/11
நொச்சி வேலி தித்தன் உறந்தை – அகம் 122/21
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ – அகம் 165/10
நுனை குழைத்து அலமரும் நொச்சி
மனை கெழு பெண்டு யான் ஆகுக-மன்னே – அகம் 203/17,18
நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும் – அகம் 259/14
கூழை நொச்சி கீழது என் மகள் – அகம் 275/17
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய – அகம் 367/4
கரும் குரல் நொச்சி கண் ஆர் குரூஉ தழை – புறம் 271/2
மணி துணர்ந்து அன்ன மா குரல் நொச்சி
போது விரி பன் மரனுள்ளும் சிறந்த – புறம் 272/1,2
உழிஞையை துடைக்க நொச்சி உச்சியில் கொண்டது உன் ஊர் – கம்.யுத்1:13 12/4

மேல்


நொச்சியும் (4)

ஓரை ஆயமும் நொச்சியும் காண்-தொறும் – நற் 143/3
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே – நற் 184/9
மயில் அடி அன்ன மா குரல் நொச்சியும்
கடி உடை வியல் நகர் காண்வர தோன்ற – நற் 305/2,3
மௌவலொடு மலர்ந்த மா குரல் நொச்சியும்
அம் வரி அல்குல் ஆயமும் உள்ளாள் – அகம் 117/1,2

மேல்


நொசி (3)

நுடங்கு நொசி நுசுப்பார் நூழில் தலைக்கொள்ள – பரி 9/49
நுணங்கு எழில் ஒண் தித்தி நுழை நொசி மட மருங்குல் – கலி 60/3
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர் – அகம் 229/11

மேல்


நொசிப்பின் (1)

நொசிப்பின் ஏழ் உறு முனிவர் நனி உணர்ந்து – பரி 5/37

மேல்


நொசிவு (1)

நொசிவு உடை வில்லின் ஒசியா நெஞ்சின் – பதி 45/3

மேல்


நொடி (11)

நொடி தரு பாணிய பதலையும் பிறவும் – மலை 11
குன்ற குறவனொடு குறு நொடி பயிற்றும் – நற் 341/5
கவை முட கள்ளி காய் விடு கடு நொடி
துதை மென் தூவி துணை புறவு இரிக்கும் – குறு 174/2,3
அமை கண் விடு நொடி கண கலை அகற்றும் – அகம் 47/7
நொடி விடு கல்லின் போகி அகன் துறை – அகம் 256/3
பரதனும் இளவலும் ஒரு_நொடி பகிராது – கம்.பால:5 126/1
உறைவிடம் அமைவிப்பேன் ஒரு நொடி வரை உம்மை – கம்.அயோ:8 36/3
ஆக்குவென் ஓர் நொடி வரையில் அழகு அமைவென் அருள்கூறும் – கம்.ஆரண்:6 122/2
உழையர் ஓடி ஒரு நொடி ஓங்கல் மேல் – கம்.ஆரண்:7 23/2
நூறு_ஆயிரம் வடி வெம் கணை நொடி ஒன்றினின் விடுவான் – கம்.யுத்4:37 53/1
நுங்குகின்றது இ உலகை ஓர் நொடி வரை என்ன – கம்.யுத்4:37 98/1

மேல்


நொடிகுவது (1)

நொடிகுவது உளது என நுவல்வதாயினான் – கம்.யுத்3:24 81/4

மேல்


நொடிகுவென் (1)

நொடிகுவென் யான் அது நுவல்வது எங்ஙனம் – கம்.அயோ:11 90/2

மேல்


நொடித்து (3)

துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்து ஆங்கு – பெரும் 459
பெரும் காட்டு கொற்றிக்கு பேய் நொடித்து ஆங்கு – கலி 89/8
நொடித்து என சிவந்த மெல் விரல் திருகுபு – அகம் 176/24

மேல்


நொடிதல் (1)

நொந்தவர் நோவு தீர்க்க சிறிது அன்றோ நொடிதல் முன்னே – கம்.யுத்4:32 42/3

மேல்


நொடிதி (1)

நொடிதி நின் குறை என் என்றலும் நுவன்றனன்-அரோ – கம்.கிட்:5 5/3

மேல்


நொடிப்பு (1)

நூறும் இரு நூறும் நொடிப்பு அளவின் – கம்.யுத்3:20 98/1

மேல்


நொடியவும் (1)

சென்றது நொடியவும் விடாஅன் நசை தர – மலை 545

மேல்


நொடியா (1)

செம் கோல் அம்பினர் கை நொடியா பெயர – அகம் 337/13

மேல்


நொடியாய் (1)

நுழைவாய் மலர்வாய் நொடியாய் கொடியே – கம்.கிட்:10 54/2

மேல்


நொடியால் (1)

நுதியால் பல நுதலால் பல நொடியால் பல பயிலும் – கம்.யுத்2:18 157/3

மேல்


நொடியிடை (1)

பொற்றை மாடங்கள் கோடி ஓர் நொடியிடை புக்கான் – கம்.சுந்:2 135/4

மேல்


நொடியில் (8)

நுங்குவர் உலகை ஓர் நொடியில் என்றனர் – கம்.பால:5 16/4
விரைஞ்சு ஒரு நொடியில் இ அனிக வேலையை – கம்.அயோ:14 39/2
உன்னற்கு அரிய உடுபதியும் இரவும் ஒழிந்த ஒரு நொடியில்
பன்னற்கு அரிய பகலவனும் பகலும் வந்து பரந்தவால் – கம்.ஆரண்:10 116/3,4
நொய்தினின் வென்று பற்றி தருகுவென் நொடியில் நுன்-பால் – கம்.சுந்:10 4/4
நூறும் ஐம்பதும் ஒரு தொடை தொடுத்து ஒரு நொடியில்
கூறு திக்கையும் விசும்பையும் மறைத்தனன் கொடியோன் – கம்.யுத்2:16 236/3,4
நூற்று இதழ் கமலக்கண்ணன் அகற்றுவென் நொடியில் என்றான் – கம்.யுத்3:21 26/4
உண்டு வெள்ளம் ஓர் எழுபது மருந்து ஒரு நொடியில்
கொண்டு வந்தது மேருவுக்கு அப்புறம் குதித்து – கம்.யுத்3:30 47/3,4
நூற்று கோடி அம்பு எய்தனன் இராவணன் நொடியில் – கம்.யுத்4:37 99/4

மேல்


நொடியின் (1)

நோய்க்கும் நோய் தரு வினைக்கும் நின் பெரும் பெயர் நொடியின்
நீக்குவாய் உனை நினைக்குவார் பிறப்பு என நீங்கும் – கம்.யுத்4:37 122/3,4

மேல்


நொடியினின் (1)

கொண்டு அணைந்தனன் நொடியினின் அரக்கர்-தம்_கோமான் – கம்.யுத்4:41 3/4

மேல்


நொடிவான் (1)

நின்று உன்னி வந்த நிலை என்-கொல் என்று நெடியோன் விளம்ப நொடிவான் – கம்.ஆரண்:13 65/4

மேல்


நொடிவிடுவு (1)

நொடிவிடுவு அன்ன காய் விடு கள்ளி – நற் 314/9

மேல்


நொடிவு (1)

நோக்கினான் நெடிது நின்றான் நொடிவு அரும் கமலத்து அண்ணல் – கம்.கிட்:3 18/1

மேல்


நொடுத்த (1)

பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅ – அகம் 340/14

மேல்


நொடுத்து (4)

கடுங்கண் வேழத்து கோடு நொடுத்து உண்ணும் – குறு 100/4
துடி கண் கொழும் குறை நொடுத்து உண்டு ஆடி – அகம் 196/3
மீன் நொடுத்து நெல் குவைஇ – புறம் 343/1
நெடும் கழை தூண்டில் விடு மீன் நொடுத்து
கிணை_மகள் அட்ட பாவல் புளிங்கூழ் – புறம் 399/15,16

மேல்


நொடை (13)

நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி – பெரும் 141
நொடை நவில் நெடும் கடை அடைத்து மட மதர் – மது 622
கள்ளோர் களி நொடை நுவல இல்லோர் – மது 662
நறவு நொடை கொடியொடு – பட் 180
பறி புறத்து இட்ட பால் நொடை இடையன் – நற் 142/4
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின் – நற் 254/6
பொன் உடை நியமத்து பிழி நொடை கொடுக்கும் – பதி 30/12
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு – அகம் 60/4
நறவு நொடை நெல்லின் நாள்_மகிழ் அயரும் – அகம் 61/10
நறவு நொடை நல் இல் புதவு முதல் பிணிக்கும் – அகம் 83/8
மகிழ் நொடை பெறாஅராகி நனை கவுள் – அகம் 245/10
நார் அரி நறவின் மகிழ் நொடை கூட்டும் – அகம் 296/9
நொடை நறவின் – புறம் 352/8

மேல்


நொடைமை (1)

அரும் கள் நொடைமை தீர்ந்த பின் மகிழ் சிறந்து – பதி 68/11

மேல்


நொண்டு (2)

இரும் பிணர் தட கை நீட்டி நீர் நொண்டு
பெரும் கை யானை பிடி எதிர் ஓடும் – நற் 186/2,3
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு
மனை புறந்தருதி ஆயின் எனையதூஉம் – அகம் 230/7,8

மேல்


நொதுமல் (6)

நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை – நற் 54/7
நொதுமல் கழறும் இ அழுங்கல் ஊரே – குறு 12/6
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே – குறு 251/7
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல் நின் – அகம் 39/4
நொதுமல் விருந்தினம் போல இவள் – அகம் 112/18
நொதுமல் திண் திறல் அரக்கனது இலங்கையை நுவன்றேன் – கம்.யுத்1:5 67/1

மேல்


நொதுமலர் (6)

உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின் – நற் 11/3
அழாஅதீமோ நொதுமலர் தலையே – நற் 13/2
இது மற்று எவனோ நொதுமலர் தலையே – குறு 171/4
நொதுமலர் போல கதுமென வந்து – குறு 294/3
நோய் இலை இவட்கு என நொதுமலர் பழிக்கும்-கால் – கலி 59/19
நொதுமலர் போல பிரியின் கதுமென – அகம் 300/11

மேல்


நொதுமலாட்டிக்கு (1)

நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே – நற் 118/11

மேல்


நொதுமலாளர் (3)

நொதுமலாளர் கொள்ளார் இவையே – ஐங் 187/1
நொதுமலாளர் அது கண்ணோடாது – அகம் 398/16
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது – புறம் 35/31

மேல்


நொதுமலாளன் (2)

நொதுமலாளன் கதுமென தாக்கலின் – நற் 50/5
நொதுமலாளன் நெஞ்சு அற பெற்ற என் – அகம் 17/8

மேல்


நொதுமலாளனை (1)

யாரையும் அல்லை நொதுமலாளனை
அனைத்தால் கொண்க நம் இடையே நினைப்பின் – நற் 395/2,3

மேல்


நொந்த (1)

நொந்த சிந்தை இளையவன் நோக்கினான் – கம்.அயோ:10 53/2

மேல்


நொந்ததன் (1)

நொந்ததன் தலையும் நோய் மிகும் துறைவ – ஐங் 160/3

மேல்


நொந்தவர் (1)

நொந்தவர் நோவு தீர்க்க சிறிது அன்றோ நொடிதல் முன்னே – கம்.யுத்4:32 42/3

மேல்


நொந்தன (2)

நொந்தன ஆயின் கண்டது மொழிவல் – குறு 273/4
நொய்து என அரக்கனை நெருங்க நொந்தன
செய்தனன் இராகவன் அமரர் தேறினார் – கம்.யுத்4:37 83/3,4

மேல்


நொந்தனர் (1)

நொந்தனர் தளர்ந்தனர் நுவல்வது ஓர்கிலார் – கம்.கிட்:11 109/4

மேல்


நொந்தனள் (1)

நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளி – புறம் 160/23

மேல்


நொந்தனன் (1)

நொந்தனன் இராமன் என்னும் நுண்மையும் நொய்தின் நோக்கி – கம்.யுத்3:24 6/3

மேல்


நொந்தனென் (4)

நொந்தனென் இராமன் என் நோவை நீக்குவான் – கம்.அயோ:1 26/2
நொந்தனென் ஆதலின் நுவல்வது ஆயினேன் – கம்.யுத்1:2 73/4
நொந்தனென் யான் அலாதார் யார் அவை நோற்ககிற்பார் – கம்.யுத்2:16 23/4
நொந்தனென் ஆக்கை நொய்தின் ஆற்றி மேல் நுவல்வென் என்னா – கம்.யுத்2:19 207/3

மேல்


நொந்தனை (1)

நொந்தனை அதுதான் நிற்க நின் முகம் நோக்கி கூற்றம் – கம்.கிட்:7 147/3

மேல்


நொந்தாய் (1)

பெண்பால் ஒரு நீ பசி பீழை ஒறுக்க நொந்தாய்
உண்பாய் எனது ஆக்கையை யான் உதவற்கு நேர்வல் – கம்.சுந்:1 56/1,2

மேல்


நொந்தார் (1)

நூறிட மாருதி நொந்தார்
ஊறிட ஊன் இடு புண்ணீர் – கம்.சுந்:13 50/1,2

மேல்


நொந்தாள் (1)

விழுந்தாள் நொந்தாள் வெம் குருதி செம்புனல் வெள்ளத்து – கம்.சுந்:2 90/1

மேல்


நொந்தான் (1)

தீ ஒத்தான் திறத்தில் என்னே செயல் என சிந்தை நொந்தான் – கம்.யுத்3:21 29/4

மேல்


நொந்திலர் (1)

அரிய நொந்திலர் அலத்தக சீறடி அயர்ந்தார் – கம்.யுத்3:20 63/4

மேல்


நொந்திலென் (1)

நொந்திலென் இனையது ஒன்றும் நுவன்றிலென் மனிதன் நோன்மை – கம்.யுத்2:19 288/3

மேல்


நொந்தீவார் (1)

நோ_தக்காய் என நின்னை நொந்தீவார் இல்-வழி – கலி 73/6

மேல்


நொந்து (44)

வந்தன்று போலும் தோழி நொந்து_நொந்து – நற் 177/8
வந்தன்று போலும் தோழி நொந்து_நொந்து – நற் 177/8
யார்க்கு நொந்து உரைக்கோ யானே ஊர் கடல் – நற் 211/1
புனை இழை நெகிழ விம்மி நொந்து_நொந்து – நற் 286/5
புனை இழை நெகிழ விம்மி நொந்து_நொந்து – நற் 286/5
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்-கொல் – நற் 324/2
யார்க்கு நொந்து உரைக்கோ யானே பல் நாள் – நற் 396/9
வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே – குறு 65/5
அழாஅற்கோ இனியே நோய் நொந்து உறைவி – குறு 192/2
புனை இழை நெகிழ சாஅய் நொந்து_நொந்து – ஐங் 467/1
புனை இழை நெகிழ சாஅய் நொந்து_நொந்து – ஐங் 467/1
நொந்து_நொந்து உயவும் உள்ளமொடு – ஐங் 491/2
நொந்து_நொந்து உயவும் உள்ளமொடு – ஐங் 491/2
நொந்து அவள் மாற்றாள் இவள் என நோக்க – பரி 20/35
நொந்து நகுவன போல் நந்தின கொம்பு நைந்து உள்ளி – கலி 33/16
என் உழை வந்து நொந்து உரையாமை பெறுகற்பின் – கலி 77/15
நிலை பால் அறியினும் நின் நொந்து நின்னை – கலி 87/7
இனைந்து நொந்து அழுதனள் நினைந்து நீடு உயிர்த்தனள் – கலி 142/60
பந்து வழி படர்குவள் ஆயினும் நொந்து நனி – அகம் 153/3
நெஞ்சு அமர் குழவி போல நொந்து நொந்து – அகம் 293/12
நெஞ்சு அமர் குழவி போல நொந்து நொந்து
இன்னா மொழிதும் என்ப – அகம் 293/12,13
எம் நொந்து புலக்கும்-கொல் மாஅயோளே – அகம் 304/21
தண் புனல் பூசல் அல்லது நொந்து
களைக வாழி வளவ என்று நின் – புறம் 42/7,8
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து_நொந்து – புறம் 68/3
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து_நொந்து – புறம் 68/3
ஆகம் நொந்து நின்று தாரை அம் மதில்-கண் வீசுமே – கம்.பால:3 14/4
பெண்கள் தாம் தம்மின் நொந்து பேதுறுகின்ற காலை – கம்.பால:21 7/2
நொந்து உளாரையும் நோவு அகன்றாரையும் – கம்.அயோ:2 16/3
மக்கள் குரல் என்று அயர்வென் மனம் நொந்து அவண் வந்தனெனால் – கம்.அயோ:4 75/4
என்று கூறி நொந்து இடரின் மூழ்கும் அ – கம்.அயோ:11 130/1
காணா மனம் நொந்து கவன்றனனால் – கம்.ஆரண்:2 25/1
எல்லியும் பகலும் நொந்து இரங்கி ஆற்றலெம் – கம்.ஆரண்:3 13/2
ஆவி சால நொந்து நொந்து அழுங்குவானும் ஆயினான் – கம்.ஆரண்:10 92/4
ஆவி சால நொந்து நொந்து அழுங்குவானும் ஆயினான் – கம்.ஆரண்:10 92/4
அங்கம் நொந்து அலசிய விலையின் ஆய் வளை – கம்.கிட்:1 11/3
சிந்தியா நொந்து தேய் பொழுது தெறு சீத நீர் – கம்.கிட்:1 38/3
நொந்து அயர்த்தவர் அனையர் நோ உற சிறியர் அலர் – கம்.கிட்:2 6/2
இருந்து நோக்கி நொந்து இறைவன் சிந்தியா – கம்.கிட்:3 35/2
என்ன நொந்து இன்னன பன்னி ஏங்கியே – கம்.கிட்:6 26/1
உள்ளம் நொந்து அனுங்கி வெய்ய கூற்றமும் உறுவது உன்ன – கம்.சுந்:10 17/2
புந்தி நொந்து இராமனும் உயிர்ப்ப பூம் கணை – கம்.யுத்1:5 2/2
நொந்து சூரியன் கான்முளை நோக்கினான் – கம்.யுத்2:15 53/4
அசும்பு சிந்தி நொந்து உலைவுற தோள் புடைத்து ஆர்த்தான் – கம்.யுத்4:35 28/4
நூபுரம் புலம்பிட சிலம்பு நொந்து அழ – கம்.யுத்4:38 14/1

மேல்


நொந்து_நொந்து (5)

வந்தன்று போலும் தோழி நொந்து_நொந்து
எழுது எழில் உண்கண் பாவை – நற் 177/8,9
புனை இழை நெகிழ விம்மி நொந்து_நொந்து
இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை நினையின் – நற் 286/5,6
புனை இழை நெகிழ சாஅய் நொந்து_நொந்து
இனையல் வாழியோ இகுளை வினை-வயின் – ஐங் 467/1,2
நொந்து_நொந்து உயவும் உள்ளமொடு – ஐங் 491/2
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து_நொந்து
ஈங்கு எவன் செய்தியோ பாண பூண் சுமந்து – புறம் 68/3,4

மேல்


நொந்துநொந்து (1)

உரம் குடைந்து நொந்துநொந்து உளைந்துஉளைந்து ஒடுங்கினான் – கம்.ஆரண்:10 93/4

மேல்


நொந்தும் (1)

நொந்தும் நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் – குறு 211/2

மேல்


நொந்துளேன் (1)

நோக்கி நோக்கி அரிது என நொந்துளேன்
பாக்கியம் பெரும் பித்தும் பயக்குமோ – கம்.யுத்4:40 13/3,4

மேல்


நொந்தேம் (1)

வந்து இங்கு அணுகாய் என்னோ வந்தது என்றே நொந்தேம்
சந்தம் கமழும் தோளாய் தழுவிக்கொள வா எனவே – கம்.அயோ:4 79/3,4

மேல்


நொப்பமே-கொல் (1)

அ நொப்பமே-கொல் பிறிதே-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 253/4

மேல்


நொய் (2)

நொய் மர விறகின் ஞெகிழி மாட்டி – மலை 446
தாளித நொய் நூல் சரணத்தர் மேகலை – பரி 10/10

மேல்


நொய்தா (2)

புல் நுனை நீரின் நொய்தா போதலே புரிந்து நின்ற – கம்.ஆரண்:12 68/1
நூல்முகம் நுனிந்த நெறி நூறு வர நொய்தா
மேல் முகம் நிமிர்ந்து வெயில் காலொடு விழுங்கா – கம்.கிட்:14 56/1,2

மேல்


நொய்தாய் (1)

நொய்தாய் வர வேகமும் நொய்திலனால் – கம்.ஆரண்:14 62/3

மேல்


நொய்தால் (1)

நொய்தால் அம்ம தானே மை அற்று – புறம் 75/10

மேல்


நொய்தில் (1)

நொய்தில் அன்னவை நீக்கவும் நோக்குதிர் – கம்.கிட்:11 27/3

மேல்


நொய்திலனால் (1)

நொய்தாய் வர வேகமும் நொய்திலனால்
எய்தாது ஒழியான் இது என்னை-கொலாம் – கம்.ஆரண்:14 62/3,4

மேல்


நொய்தின் (41)

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் எனை – கம்.பால:0 8/1
நோற்றனள் நங்கையும் நொய்தின் ஐயன் வில் – கம்.பால:13 1/3
நுடங்கிய மின் என நொய்தின் எய்தினாள் – கம்.பால:13 56/3
வரி சிலை இது நீ நொய்தின் வாங்குதி ஆயின் மைந்த – கம்.பால:24 31/2
நூல் தட மார்பனும் நொய்தின் எய்த போய் – கம்.அயோ:2 32/2
நூற்று இதழ் கமலத்தில் நொய்தின் யாவையும் – கம்.அயோ:14 119/3
நொய்தின் இ உலகு எலாம் நுழையும் நோன்மையாள் – கம்.ஆரண்:6 3/3
நொய்தின் அங்கு அவன் நொறில் பரி தேர் பட நூறி – கம்.ஆரண்:8 20/3
இலங்கை மா நகர் நொய்தின் சென்று எய்தினாள் – கம்.ஆரண்:9 31/4
நொய்தின் ஏறினர் அதனின் நோன்மை சால் கவி அரசு – கம்.கிட்:2 1/2
நொய்தின் அங்கு அவன் கொணர்வென் நோன்மையாய் – கம்.கிட்:3 52/2
சிதைவு_இல செய்து நொய்தின் தீர்வு_அரும் பிறவி தீர்தி – கம்.கிட்:7 141/4
வெறியன எய்தி நொய்தின் வெம் துயர் கடலின் வீழ்ந்தேன் – கம்.கிட்:9 12/4
நொய்தின் நோன் கதவும் முது வாயிலும் – கம்.கிட்:11 36/1
நொய்தின் கூடிய சேனை நூறு_ஆயிரகோடி – கம்.கிட்:12 21/1
நொய்தின் அ மலை நீங்கி நுமரொடும் – கம்.கிட்:13 15/1
செய்யு-மின் ஒன்றோ செய் வகை நொய்தின் செய வல்லீர் – கம்.கிட்:17 1/4
நொய்தின் ஆர் அமுதம் கொண்ட நோன்மையே நுவலும் நாகர் – கம்.சுந்:1 21/2
முள் வாய் பொருப்பின் முழை எய்தி மிக நொய்தின்
உள் வாழ் அர கொடு எழு திண் கலுழன் ஒத்தான் – கம்.சுந்:1 71/3,4
இற்றை இ பகலில் நொய்தின் இருவரை ஒரு கையாலே – கம்.சுந்:3 143/3
எரி படு துகிலின் நொய்தின் இற்றது கடி கா என்றார் – கம்.சுந்:6 56/4
கொல்லலிர் குரங்கை நொய்தின் பற்றுதிர் கொணர்திர் என்றான் – கம்.சுந்:7 2/4
நொய்தின் வெல்வது அரிதோ என்னா முறுவல் உக நக்கான் – கம்.சுந்:8 45/2
மிடல் தொழிலான் விடு தேரொடு நொய்தின்
எடுத்து ஒருவன்-தனை விண்ணில் எறிந்தான் – கம்.சுந்:9 53/3,4
ஆயினும் ஐய நொய்தின் ஆண்_தொழில் குரங்கை யானே – கம்.சுந்:11 12/1
நூறு நூறு போர் வாளி ஓர் தொடை கொடு நொய்தின்
மாறு இல் வெம் சினத்து இராவணன் மகன் சிலை வளைத்தான் – கம்.சுந்:11 46/1,2
நொய்தின் இட்ட வன் தறி பறித்து உடல் எரி நுழைய – கம்.சுந்:13 30/2
தொழுது எழு கையன் நொய்தின் தோன்றினன் வழுத்தும் சொல்லான் – கம்.யுத்1:7 1/4
இனிது அரும் தவம் நொய்தின் இயற்றலால் – கம்.யுத்1:8 30/2
நூல் வரை வழி செய்தானுக்கு அ நிலை நொய்தின் சொன்னான் – கம்.யுத்1:9 14/4
நல் நகர் நொய்தின் செய்தான் தாதையும் நாண் உட்கொண்டான் – கம்.யுத்1:9 15/4
நூறு கோல் நொய்தின் எய்தான் அவை உடல் நுழைதலோடும் – கம்.யுத்2:15 138/3
இடுக்கு ஒன்றும் காணார் காண்பது எய்த கோல் நொய்தின் எய்தி – கம்.யுத்2:15 152/3
காவல விடுதி இன்று இ கையறு கவலை நொய்தின் – கம்.யுத்2:16 38/4
நொய்தின் கடிது எதிர் உற்றன நூறு_ஆயிரம் மாறா – கம்.யுத்2:18 161/2
குறு நின்றது பறித்து எடுத்து அவனை எய்தி நொய்தின் இது கூறினான் – கம்.யுத்2:19 78/4
நொந்தனென் ஆக்கை நொய்தின் ஆற்றி மேல் நுவல்வென் என்னா – கம்.யுத்2:19 207/3
வணங்கி நீ ஐய நொய்தின் மாண்டனர் மக்கள் என்ன – கம்.யுத்3:22 3/1
நொந்தனன் இராமன் என்னும் நுண்மையும் நொய்தின் நோக்கி – கம்.யுத்3:24 6/3
மாம் தளிர் எய்த நொய்தின் மயங்கினர் மழலை சொல்லார் – கம்.யுத்3:25 8/4
அவளின் தோன்றினர் ஐ_இரு கோடியர் நொய்தின்
திவள பாற்கடல் வறள்பட தேக்கினர் சில நாள் – கம்.யுத்3:30 14/3,4

மேல்


நொய்தினில் (3)

நூக்கி நொய்தினில் வெய்து இழையேல் என நுவலா – கம்.ஆரண்:6 86/2
நினைந்த மாத்திரத்து எய்தின நொய்தினில் நெருப்பு உகு பகு வாயால் – கம்.யுத்1:3 88/2
நொய்தினில் துளக்கி ஐய நுன் எதிர் நும்முனோனை – கம்.யுத்2:16 166/2

மேல்


நொய்தினின் (11)

மேகம் எனும்படி நொய்தினின் வெய்யாள் – கம்.ஆரண்:14 58/4
நூக்கினான் அ கதவினை நொய்தினின் – கம்.கிட்:11 34/4
நொய்தினின் சேனை பின்பு ஒழிய நோன் கழல் – கம்.கிட்:11 123/2
தனையன் நொய்தினின் தயரதன் புதல்வனை சார்ந்தான் – கம்.கிட்:12 28/2
நுழைந்து நொய்தினின் மெய் உற நோக்கினான் – கம்.சுந்:2 167/3
நொய்தினின் வென்று பற்றி தருகுவென் நொடியில் நுன்-பால் – கம்.சுந்:10 4/4
நொய்தினின் அடைத்து மான தானையான் நுவன்ற நம் ஊர் – கம்.யுத்1:9 66/2
நூறும் ஆயிரமும் கணை நொய்தினின்
வேறு வேறு படுதலின் வெம்பியே – கம்.யுத்2:15 70/1,2
நெடும் கையும் தலையும் பிய்யா நொய்தினின் நிமிர்ந்து போனான் – கம்.யுத்2:18 220/3
நொய்தினின் சென்று கூடி இராவணி உளைவை நோக்கி – கம்.யுத்2:19 170/1
நொய்தினின் இயற்ற நோன்பின் மாதவர் நுனித்து காட்ட – கம்.யுத்4:42 15/3

மேல்


நொய்தினை (1)

நூறி நொய்தினை ஆகி நுழைதியோ – கம்.சுந்:12 99/2

மேல்


நொய்து (13)

நொய்து அலர் தாமரை நோற்ற நோன்பினால் – கம்.அயோ:2 50/2
நொய்து அலர் வலி தொழில் நுவன்ற மொழி ஒன்றோ – கம்.ஆரண்:10 51/3
சுற்றமும் தொலைந்தது ஐய நொய்து என சுமந்த கையள் – கம்.ஆரண்:10 63/3
ஆயவன் அனைய கூற அரக்கர் கோன் ஐய நொய்து உன் – கம்.ஆரண்:11 35/1
நோக்கினால் ஐய நொய்து இவண் எய்திய நுந்தை – கம்.ஆரண்:13 82/1
நொய்து சென்று உற்றது நுவலகிற்றிலம் – கம்.கிட்:16 8/2
நொய்து அகலும்படி கைகளின் நூறா – கம்.சுந்:9 48/2
தண்டு என கொளலுற்று அது நொய்து என தவிர்ந்தான் – கம்.யுத்1:3 11/4
முதுகு நொய்து என செய்தவன் கனலையும் முனிவோன் – கம்.யுத்1:11 33/2
நோக்கு அறவும் எம்பியர்கள் மாளவும் இ நொய்து இலங்கை – கம்.யுத்2:17 83/1
நொய்து அவன் கவசம் கீறி நுழைவன பிழைப்பு இலாத – கம்.யுத்2:18 192/4
நொய்து என அரக்கனை நெருங்க நொந்தன – கம்.யுத்4:37 83/3
நொய்து என்று ஓதும் தன்மைய ஆக நுழைகிற்ப – கம்.யுத்4:37 138/4

மேல்


நொய்ய (7)

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் எனை – கம்.பால:0 8/1
நையும் நொய்ய மருங்குல் ஓர் நங்கைதான் – கம்.பால:21 35/2
ஐய ஆம் அனிச்ச போதின் அதிகமும் நொய்ய ஆடல் – கம்.பால:22 14/1
நொய்யவே நொய்ய என்றோ பலபட நுவல்வது அம்மா – கம்.பால:22 14/4
மேற்பட மதியம் சூட்டி விளங்குற நிரைத்த நொய்ய
கால் தகை விரல்கள் ஐய கமலமும் பிறவும் கண்டால் – கம்.கிட்:13 33/2,3
ஆல் இலை படிவம் தீட்டும் ஐய நுண் பலகை நொய்ய
பால் நிற தட்டம் வட்ட கண்ணடி பலவும் இன்ன – கம்.கிட்:13 39/1,2
நொய்ய பாசம் புறம் பிணிப்ப நோன்மை இலன் போல் உடல் நுணங்கி – கம்.சுந்:12 117/1

மேல்


நொய்யது (1)

நொய்யது ஆகும் என்று ஆரும் என் காவலின் நுழைந்தார் – கம்.யுத்1:3 54/4

மேல்


நொய்யவே (1)

நொய்யவே நொய்ய என்றோ பலபட நுவல்வது அம்மா – கம்.பால:22 14/4

மேல்


நொய்யள் (1)

நாண் இலள் ஐயள் நொய்யள் நல்லளும் அல்லள் என்றாள் – கம்.ஆரண்:6 39/4

மேல்


நொய்யார் (1)

நொய்யார் நுவலும் பழி நிற்ப தம்மொடு – கலி 24/16

மேல்


நொவ் (3)

நொவ் இடை மடந்தை-தன் இருக்கை நோக்கினான் – கம்.சுந்:3 54/4
நொவ் இடை குயிலே நுவல்க என்றனன் – கம்.சுந்:3 97/3
நொவ் இடை மயில் அனாட்கு நுவன்றுழி வருணன் நோனாது – கம்.யுத்4:41 24/3

மேல்


நொவ்வல் (1)

மையல் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக – அகம் 98/22

மேல்


நொவ்விதின் (1)

விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின்
தவறும் நன்கு அறியாய் ஆயின் எம் போல் – நற் 315/9,10

மேல்


நொவ்வு (2)

அம் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல் – அகம் 281/6
நொவ்வு இயல் பகழி பாய்ந்து என புண் கூர்ந்து – அகம் 388/11

மேல்


நொள்ளை (1)

உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின் – அகம் 53/8,9

மேல்


நொறில் (7)

நொய்தின் அங்கு அவன் நொறில் பரி தேர் பட நூறி – கம்.ஆரண்:8 20/3
நூறொடு நூறு பூண்ட நொறில் வய புரவி நோன் தேர் – கம்.சுந்:10 7/2
நோக்கிய கண்களால் நொறில் கனல் பொறி – கம்.சுந்:12 63/1
நோக்கி வஞ்சன் நொறில் வய மா பரி – கம்.யுத்2:15 54/1
நூறு பத்துடை நொறில் பரி தேரின் மேல் நுன்முன் – கம்.யுத்2:15 217/1
நூறு பத்து உடை பத்தியின் நொறில் பரி பூண்ட – கம்.யுத்2:16 226/3
நூறு கோடி தேர் நொறில் பரி நூற்று இரு கோடி – கம்.யுத்4:32 3/1

மேல்


நொறுக்கி (1)

பற்றி வந்த மரம் வேறுவேறு உற நொறுக்கி நுண் பொடி பரப்பினான் – கம்.யுத்2:19 71/4

மேல்