அகநானூறு 326-350

  
#326 மருதம் பரணர்#326 மருதம் பரணர்
ஊரல் அம் வாய் உருத்த தித்திஊரல் அம் வாய் உருத்த தித்தி
பேர் அமர் மழை கண் பெரும் தோள் சிறு நுதல்பேர் அமர் மழை கண் பெரும் தோள் சிறு நுதல்
நல்லள் அம்ம குறு_மகள் செல்வர்நல்லள் அம்ம குறு_மகள் செல்வர்
கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
நெடும் கொடி நுடங்கும் அட்டவாயில்நெடும் கொடி நுடங்கும் அட்டவாயில்
இரும் கதிர் கழனி பெரும் கவின் அன்னஇரும் கதிர் கழனி பெரும் கவின் அன்ன
நலம் பாராட்டி நடை எழில் பொலிந்துநலம் பாராட்டி நடை எழில் பொலிந்து
விழவில் செலீஇயர் வேண்டும் வென் வேல்விழவில் செலீஇயர் வேண்டும் வென் வேல்
இழை அணி யானை சோழர் மறவன்இழை அணி யானை சோழர் மறவன்
கழை அளந்து அறியா காவிரி படப்பைகழை அளந்து அறியா காவிரி படப்பை
புனல் மலி புதவின் போஒர் கிழவோன்புனல் மலி புதவின் போஒர் கிழவோன்
பழையன் ஓக்கிய வேல் போல்பழையன் ஓக்கிய வேல் போல்
பிழையல கண் அவள் நோக்கியோர் திறத்தேபிழையல கண் அவள் நோக்கியோர் திறத்தே
  
#327 பாலை மருங்கூர் பாகை சாத்தன் பூதனார்#327 பாலை மருங்கூர் பாகை சாத்தன் பூதனார்
இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
நன் பகல் அமையமும் இரவும் போலநன் பகல் அமையமும் இரவும் போல
வேறு_வேறு இயல ஆகி மாறு எதிர்ந்துவேறு_வேறு இயல ஆகி மாறு எதிர்ந்து
உள என உணர்ந்தனை ஆயின் ஒரூஉம்உள என உணர்ந்தனை ஆயின் ஒரூஉம்
இன்னா வெம் சுரம் நன் நசை துரப்பஇன்னா வெம் சுரம் நன் நசை துரப்ப
துன்னலும் தகுமோ துணிவு இல் நெஞ்சேதுன்னலும் தகுமோ துணிவு இல் நெஞ்சே
நீ செல வலித்தனை ஆயின் யாவதும்நீ செல வலித்தனை ஆயின் யாவதும்
நினைதலும் செய்தியோ எம்மே கனை கதிர்நினைதலும் செய்தியோ எம்மே கனை கதிர்
ஆவி அம் வரி நீர் என நசைஇஆவி அம் வரி நீர் என நசைஇ
மா தவ பரிக்கும் மரல் திரங்கு நனம் தலைமா தவ பரிக்கும் மரல் திரங்கு நனம் தலை
களர் கால் யாத்த கண் அகல் பரப்பின்களர் கால் யாத்த கண் அகல் பரப்பின்
செம் வரை கொழி நீர் கடுப்ப அரவின்செம் வரை கொழி நீர் கடுப்ப அரவின்
அம் வரி உரிவை அணவரும் மருங்கின்அம் வரி உரிவை அணவரும் மருங்கின்
புற்று அரை யாத்த புலர் சினை மரத்தபுற்று அரை யாத்த புலர் சினை மரத்த
மை நிற உருவின் மணி கண் காக்கைமை நிற உருவின் மணி கண் காக்கை
பைம் நிணம் கவரும் படு பிண கவலைபைம் நிணம் கவரும் படு பிண கவலை
சென்றோர் செல் புறத்து இரங்கார் கொன்றோர்சென்றோர் செல் புறத்து இரங்கார் கொன்றோர்
கோல் கழிபு இரங்கும் அதரகோல் கழிபு இரங்கும் அதர
வேய் பயில் அழுவம் இறந்த பின்னேவேய் பயில் அழுவம் இறந்த பின்னே
  
#328 குறிஞ்சி மதுரை பண்ட வாணிகன் இளந்தேவனார்#328 குறிஞ்சி மதுரை பண்ட வாணிகன் இளந்தேவனார்
வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு வயிரியர்வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு வயிரியர்
முழவு அதிர்ந்து அன்ன முழக்கத்து ஏறோடுமுழவு அதிர்ந்து அன்ன முழக்கத்து ஏறோடு
உரவு பெயல் பொழிந்த நள்ளென் யாமத்துஉரவு பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து
அரவின் பைம் தலை இடறி பானாள்அரவின் பைம் தலை இடறி பானாள்
இரவின் வந்து எம் இடை முலை முயங்கிஇரவின் வந்து எம் இடை முலை முயங்கி
துனி கண் அகல வளைஇ கங்குலின்துனி கண் அகல வளைஇ கங்குலின்
இனிதின் இயைந்த நண்பு அவர் முனிதல்இனிதின் இயைந்த நண்பு அவர் முனிதல்
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின்தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின்
இலங்கு வளை நெகிழ பரந்து படர் அலைப்ப யாம்இலங்கு வளை நெகிழ பரந்து படர் அலைப்ப யாம்
முயங்கு-தொறும் முயங்கு-தொறும் உயங்க முகந்து கொண்டுமுயங்கு-தொறும் முயங்கு-தொறும் உயங்க முகந்து கொண்டு
அடக்குவம்-மன்னோ தோழி மட பிடிஅடக்குவம்-மன்னோ தோழி மட பிடி
மழை தவழ் சிலம்பில் கடும் சூல் ஈன்றுமழை தவழ் சிலம்பில் கடும் சூல் ஈன்று
கழை தின் யாக்கை விழை களிறு தைவரகழை தின் யாக்கை விழை களிறு தைவர
வாழை அம் சிலம்பில் துஞ்சும்வாழை அம் சிலம்பில் துஞ்சும்
சாரல் நாடன் சாயல் மார்பேசாரல் நாடன் சாயல் மார்பே
  
#329 பாலை உறையூர் முதுகூத்தனார்#329 பாலை உறையூர் முதுகூத்தனார்
பூ கணும் நுதலும் பசப்ப நோய் கூர்ந்துபூ கணும் நுதலும் பசப்ப நோய் கூர்ந்து
ஈங்கு யான் வருந்தவும் நீங்குதல் துணிந்துஈங்கு யான் வருந்தவும் நீங்குதல் துணிந்து
வாழ்தல் வல்லுநர் ஆயின் காதலர்வாழ்தல் வல்லுநர் ஆயின் காதலர்
குவிந்த குரம்பை அம் குடி சீறூர்குவிந்த குரம்பை அம் குடி சீறூர்
படு மணி இயம்ப பகல் இயைந்து உமணர்படு மணி இயம்ப பகல் இயைந்து உமணர்
கொடு நுகம் பிணித்த செம் கயிற்று ஒழுகைகொடு நுகம் பிணித்த செம் கயிற்று ஒழுகை
பகடு அயா கொள்ளும் வெம் முனை துகள் தொகுத்துபகடு அயா கொள்ளும் வெம் முனை துகள் தொகுத்து
எறி வளி சுழற்றும் அத்தம் சிறிது அசைந்துஎறி வளி சுழற்றும் அத்தம் சிறிது அசைந்து
ஏகுவர்-கொல்லோ தாமே பாய் கொள்புஏகுவர்-கொல்லோ தாமே பாய் கொள்பு
உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரி குருளைஉறு வெரிந் ஒடிக்கும் சிறு வரி குருளை
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்டநெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில்கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில்
புலி புக்கு ஈனும் வறும் சுனைபுலி புக்கு ஈனும் வறும் சுனை
பனி படு சிமைய பல் மலை இறந்தேபனி படு சிமைய பல் மலை இறந்தே
  
#330 நெய்தல் உலோச்சனார்#330 நெய்தல் உலோச்சனார்
கழி பூ குற்றும் கானல் அல்கியும்கழி பூ குற்றும் கானல் அல்கியும்
வண்டல் பாவை வரி மணல் அயர்ந்தும்வண்டல் பாவை வரி மணல் அயர்ந்தும்
இன்புற புணர்ந்தும் இளி வர பணிந்தும்இன்புற புணர்ந்தும் இளி வர பணிந்தும்
தன் துயர் வெளிப்பட தவறு இல் நம் துயர்தன் துயர் வெளிப்பட தவறு இல் நம் துயர்
அறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடுஅறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடு
செல்லும் அன்னோ மெல்லம்புலம்பன்செல்லும் அன்னோ மெல்லம்புலம்பன்
செல்வோன் பெயர் புறத்து இரங்கி முன் நின்றுசெல்வோன் பெயர் புறத்து இரங்கி முன் நின்று
தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம்தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம்
எய்தின்று-கொல்லோ தானே எய்தியும்எய்தின்று-கொல்லோ தானே எய்தியும்
காமம் செப்ப நாண் இன்று-கொல்லோகாமம் செப்ப நாண் இன்று-கொல்லோ
உதுவ காண் அவர் ஊர்ந்த தேரேஉதுவ காண் அவர் ஊர்ந்த தேரே
குப்பை வெண் மணல் குவவு மிசையானும்குப்பை வெண் மணல் குவவு மிசையானும்
எக்கர் தாழை மடல்_வயினானும்எக்கர் தாழை மடல்_வயினானும்
ஆய் கொடி பாசடும்பு பரிய ஊர்பு இழிபுஆய் கொடி பாசடும்பு பரிய ஊர்பு இழிபு
சிறுகுடி பரதவர் பெரும் கடல் மடுத்தசிறுகுடி பரதவர் பெரும் கடல் மடுத்த
கடும் செலல் கொடும் திமில் போலகடும் செலல் கொடும் திமில் போல
நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மேநிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே
  
  
#331 பாலை மாமூலனார்#331 பாலை மாமூலனார்
நீடு நிலை அரைய செம் குழை இருப்பைநீடு நிலை அரைய செம் குழை இருப்பை
கோடு கடைந்து அன்ன கொள்ளை வான் பூகோடு கடைந்து அன்ன கொள்ளை வான் பூ
ஆடு பரந்து அன்ன ஈனல் எண்கின்ஆடு பரந்து அன்ன ஈனல் எண்கின்
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில்தோடு சினை உரீஇ உண்ட மிச்சில்
பைம் குழை தழையர் பழையர் மகளிர்பைம் குழை தழையர் பழையர் மகளிர்
கண் திரள் நீள் அமை கடிப்பின் தொகுத்துகண் திரள் நீள் அமை கடிப்பின் தொகுத்து
குன்றக சிறுகுடி மறுகு-தொறும் மறுகும்குன்றக சிறுகுடி மறுகு-தொறும் மறுகும்
சீறூர் நாடு பல பிறக்கு ஒழியசீறூர் நாடு பல பிறக்கு ஒழிய
சென்றோர் அன்பு இலர் தோழி என்றும்சென்றோர் அன்பு இலர் தோழி என்றும்
அரும் துறை முற்றிய கரும் கோட்டு சீறியாழ்அரும் துறை முற்றிய கரும் கோட்டு சீறியாழ்
பாணர் ஆர்ப்ப பல் கலம் உதவிபாணர் ஆர்ப்ப பல் கலம் உதவி
நாள்_அவை இருந்த நனை மகிழ் திதியன்நாள்_அவை இருந்த நனை மகிழ் திதியன்
வேளிரொடு பொரீஇய கழித்தவேளிரொடு பொரீஇய கழித்த
வாள் வாய் அன்ன வறும் சுரம் இறந்தேவாள் வாய் அன்ன வறும் சுரம் இறந்தே
  
#332 குறிஞ்சி கபிலர்#332 குறிஞ்சி கபிலர்
முளை வளர் முதல மூங்கில் முருக்கிமுளை வளர் முதல மூங்கில் முருக்கி
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானைகிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கியநீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய
பொரு முரண் உழுவை தொலைச்சி கூர் நுனைபொரு முரண் உழுவை தொலைச்சி கூர் நுனை
குருதி செம் கோட்டு அழி துளி கழாஅகுருதி செம் கோட்டு அழி துளி கழாஅ
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலிகல் முகை அடுக்கத்து மென்மெல இயலி
செறு பகை வாட்டிய செம்மலொடு அறு கால்செறு பகை வாட்டிய செம்மலொடு அறு கால்
யாழ் இசை பறவை இமிர பிடி புணர்ந்துயாழ் இசை பறவை இமிர பிடி புணர்ந்து
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன்வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன்
நின் புரை தக்க சாயலன் என நீநின் புரை தக்க சாயலன் என நீ
அன்பு உரைத்து அடங்க கூறிய இன் சொல்அன்பு உரைத்து அடங்க கூறிய இன் சொல்
வாய்த்தன வாழி தோழி வேட்டோர்க்குவாய்த்தன வாழி தோழி வேட்டோர்க்கு
அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின்அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின்
வண்டு இடை படாஅ முயக்கமும்வண்டு இடை படாஅ முயக்கமும்
தண்டா காதலும் தலை நாள் போன்மேதண்டா காதலும் தலை நாள் போன்மே
  
#333 பாலை கல்லாடனார்#333 பாலை கல்லாடனார்
யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்து அன்ன நின்யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்து அன்ன நின்
ஆக மேனி அம் பசப்பு ஊரஆக மேனி அம் பசப்பு ஊர
அழிவு பெரிது உடையை ஆகி அவர்_வயின்அழிவு பெரிது உடையை ஆகி அவர்_வயின்
பழி தலைத்தருதல் வேண்டுதி மொழி கொண்டுபழி தலைத்தருதல் வேண்டுதி மொழி கொண்டு
தாங்கல் ஒல்லுமோ மற்றே ஆங்கு நின்தாங்கல் ஒல்லுமோ மற்றே ஆங்கு நின்
எவ்வம் பெருமை உரைப்பின் செய்பொருள்எவ்வம் பெருமை உரைப்பின் செய்பொருள்
வயங்காது ஆயினும் பயம் கெட தூக்கிவயங்காது ஆயினும் பயம் கெட தூக்கி
நீடலர் வாழி தோழி கோடையில்நீடலர் வாழி தோழி கோடையில்
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாதுகுருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது
தூம்பு உடை துய் தலை கூம்புபு திரங்கியதூம்பு உடை துய் தலை கூம்புபு திரங்கிய
வேனில் வெளிற்று பனை போல கை எடுத்துவேனில் வெளிற்று பனை போல கை எடுத்து
யானை பெரு நிரை வானம் பயிரும்யானை பெரு நிரை வானம் பயிரும்
மலை சேண் இகந்தனர் ஆயினும் நிலைபெயர்ந்துமலை சேண் இகந்தனர் ஆயினும் நிலைபெயர்ந்து
நாள் இடைப்படாமை வருவர் நமர் எனநாள் இடைப்படாமை வருவர் நமர் என
பயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியாதுபயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியாது
நின் வாய் இன் மொழி நன் வாய் ஆகநின் வாய் இன் மொழி நன் வாய் ஆக
வருவர் ஆயினோ நன்றே வாராதுவருவர் ஆயினோ நன்றே வாராது
அவணர் காதலர் ஆயினும் இவண் நம்அவணர் காதலர் ஆயினும் இவண் நம்
பசலை மாய்தல் எளிது-மன் தில்லபசலை மாய்தல் எளிது-மன் தில்ல
சென்ற தேஎத்து செய்_வினை முற்றிசென்ற தேஎத்து செய்_வினை முற்றி
மறுதரல் உள்ளத்தர் எனினும்மறுதரல் உள்ளத்தர் எனினும்
குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினேகுறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே
  
#334 முல்லை மதுரை கூத்தனார்#334 முல்லை மதுரை கூத்தனார்
ஓடா நல் ஏற்று உரிவை தைஇயஓடா நல் ஏற்று உரிவை தைஇய
ஆடு கொள் முரசம் இழுமென முழங்கஆடு கொள் முரசம் இழுமென முழங்க
நாடு திறை கொண்டனம் ஆயின் பாகநாடு திறை கொண்டனம் ஆயின் பாக
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடுபாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு
பெரும் களிற்று தட கை புரைய கால் வீழ்த்துபெரும் களிற்று தட கை புரைய கால் வீழ்த்து
இரும் பிடி தொழுதியின் ஈண்டுவன குழீஇஇரும் பிடி தொழுதியின் ஈண்டுவன குழீஇ
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும்வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும்
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறிகழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி
பெயல் தொடங்கின்றால் வானம் வானின்பெயல் தொடங்கின்றால் வானம் வானின்
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்பவயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப
நால் உடன் பூண்ட கால் நவில் புரவிநால் உடன் பூண்ட கால் நவில் புரவி
கொடிஞ்சி நெடும் தேர் கடும் பரி தவிராதுகொடிஞ்சி நெடும் தேர் கடும் பரி தவிராது
இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்துஇன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்பநோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப
ஈண்டே காண கடவு-மதி பூ கேழ்ஈண்டே காண கடவு-மதி பூ கேழ்
பொலிவன அமர்த்த உண்கண்பொலிவன அமர்த்த உண்கண்
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலேஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே
  
#335 பாலை மதுரை தத்தம் கண்ணனார்#335 பாலை மதுரை தத்தம் கண்ணனார்
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
அருள் நன்கு உடையர் ஆயினும் ஈதல்அருள் நன்கு உடையர் ஆயினும் ஈதல்
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல்பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல்
யானும் அறிவென்-மன்னே யானை தன்யானும் அறிவென்-மன்னே யானை தன்
கொல் மருப்பு ஒடிய குத்தி சினம் சிறந்துகொல் மருப்பு ஒடிய குத்தி சினம் சிறந்து
இன்னா வேனில் இன் துணை ஆரஇன்னா வேனில் இன் துணை ஆர
முளி சினை மராஅத்து பொளி பிளந்து ஊட்டமுளி சினை மராஅத்து பொளி பிளந்து ஊட்ட
புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெம் சுரம்புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெம் சுரம்
அரிய அல்ல-மன் நமக்கே விரி தார்அரிய அல்ல-மன் நமக்கே விரி தார்
ஆடு கொள் முரசின் அடு போர் செழியன்ஆடு கொள் முரசின் அடு போர் செழியன்
மாட மூதூர் மதில் புறம் தழீஇமாட மூதூர் மதில் புறம் தழீஇ
நீடு வெயில் உழந்த குறி இறை கணை கால்நீடு வெயில் உழந்த குறி இறை கணை கால்
தொடை அமை பன் மலர் தோடு பொதிந்து யாத்ததொடை அமை பன் மலர் தோடு பொதிந்து யாத்த
குடை ஓர் அன்ன கோள் அமை எருத்தின்குடை ஓர் அன்ன கோள் அமை எருத்தின்
பாளை பற்று இழிந்து ஒழிய புறம் சேர்புபாளை பற்று இழிந்து ஒழிய புறம் சேர்பு
வாள் வடித்து அன்ன வயிறு உடை பொதியவாள் வடித்து அன்ன வயிறு உடை பொதிய
நாள் உற தோன்றிய நயவரு வனப்பின்நாள் உற தோன்றிய நயவரு வனப்பின்
ஆரத்து அன்ன அணி கிளர் புது பூஆரத்து அன்ன அணி கிளர் புது பூ
வார்_உறு கவரியின் வண்டு உண விரியவார்_உறு கவரியின் வண்டு உண விரிய
முத்தின் அன்ன வெள் வீ தாஅய்முத்தின் அன்ன வெள் வீ தாஅய்
அலகின் அன்ன அரி நிறத்து ஆலிஅலகின் அன்ன அரி நிறத்து ஆலி
நகை நனி வளர்க்கும் சிறப்பின் தகை மிகநகை நனி வளர்க்கும் சிறப்பின் தகை மிக
பூவொடு வளர்ந்த மூவா பசும் காய்பூவொடு வளர்ந்த மூவா பசும் காய்
நீரினும் இனிய ஆகி கூர் எயிற்றுநீரினும் இனிய ஆகி கூர் எயிற்று
அமிழ்தம் ஊறும் செம் வாய்அமிழ்தம் ஊறும் செம் வாய்
ஒண் தொடி குறு_மகள் கொண்டனம் செலினேஒண் தொடி குறு_மகள் கொண்டனம் செலினே
  
#336 மருதம் பாவை கொட்டிலார்#336 மருதம் பாவை கொட்டிலார்
குழல் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைகுழல் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலை
பாசி பரப்பில் பறழொடு வதிந்தபாசி பரப்பில் பறழொடு வதிந்த
உண்ணா பிணவின் உயக்கம் சொலியஉண்ணா பிணவின் உயக்கம் சொலிய
நாள்_இரை தரீஇய எழுந்த நீர்நாய்நாள்_இரை தரீஇய எழுந்த நீர்நாய்
வாளையொடு உழப்ப துறை கலுழ்ந்தமையின்வாளையொடு உழப்ப துறை கலுழ்ந்தமையின்
தெண் கள் தேறல் மாந்தி மகளிர்தெண் கள் தேறல் மாந்தி மகளிர்
நுண் செயல் அம் குடம் இரீஇ பண்பின்நுண் செயல் அம் குடம் இரீஇ பண்பின்
மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்
காஞ்சி நீழல் குரவை அயரும்காஞ்சி நீழல் குரவை அயரும்
தீம் பெரும் பொய்கை துறை கேழ் ஊரன்தீம் பெரும் பொய்கை துறை கேழ் ஊரன்
தேர் தர வந்த நேர் இழை மகளிர்தேர் தர வந்த நேர் இழை மகளிர்
ஏசுப என்ப என் நலனே அதுவேஏசுப என்ப என் நலனே அதுவே
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினபாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சின
கொல் களிற்று யானை நல்கல் மாறேகொல் களிற்று யானை நல்கல் மாறே
தாமும் பிறரும் உளர் போல் சேறல்தாமும் பிறரும் உளர் போல் சேறல்
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்
யான் அவண் வாராமாறே வரினே வான் இடையான் அவண் வாராமாறே வரினே வான் இடை
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போலசுடரொடு திரிதரும் நெருஞ்சி போல
என்னொடு திரியான் ஆயின் வென் வேல்என்னொடு திரியான் ஆயின் வென் வேல்
மாரி அம்பின் மழை தோல் சோழர்மாரி அம்பின் மழை தோல் சோழர்
வில் ஈண்டு குறும்பின் வல்லத்து புற மிளைவில் ஈண்டு குறும்பின் வல்லத்து புற மிளை
ஆரியர் படையின் உடைக என்ஆரியர் படையின் உடைக என்
நேர் இறை முன்கை வீங்கிய வளையேநேர் இறை முன்கை வீங்கிய வளையே
  
#337 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ#337 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
சாரல் யாஅத்து உயர் சினை குழைத்தசாரல் யாஅத்து உயர் சினை குழைத்த
மாரி ஈர்ம் தளிர் அன்ன மேனிமாரி ஈர்ம் தளிர் அன்ன மேனி
பேர் அமர் மழை கண் புலம் கொண்டு ஒழியபேர் அமர் மழை கண் புலம் கொண்டு ஒழிய
ஈங்கு பிரிந்து உறைதல் இனிது அன்று ஆகலின்ஈங்கு பிரிந்து உறைதல் இனிது அன்று ஆகலின்
அவணது ஆக பொருள் என்று உமணர்அவணது ஆக பொருள் என்று உமணர்
கண நிரை அன்ன பல் கால் குறும் பொறைகண நிரை அன்ன பல் கால் குறும் பொறை
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலைதூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலை
படை உடை கையர் வரு_திறம் நோக்கிபடை உடை கையர் வரு_திறம் நோக்கி
உண்ணா மருங்குல் இன்னோன் கையதுஉண்ணா மருங்குல் இன்னோன் கையது
பொன் ஆகுதலும் உண்டு என கொன்னேபொன் ஆகுதலும் உண்டு என கொன்னே
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கிதிறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி
செம் கோல் அம்பினர் கை நொடியா பெயரசெம் கோல் அம்பினர் கை நொடியா பெயர
கொடி விடு குருதி தூங்கு குடர் கறீஇகொடி விடு குருதி தூங்கு குடர் கறீஇ
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றைவரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை
வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலைவெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை
கள்ளி நீழல் கதறு வதியகள்ளி நீழல் கதறு வதிய
மழை கண்மாறிய வெம் காட்டு ஆரிடைமழை கண்மாறிய வெம் காட்டு ஆரிடை
எமியம் கழிதந்தோயே பனி இருள்எமியம் கழிதந்தோயே பனி இருள்
பெரும் கலி வானம் தலைஇயபெரும் கலி வானம் தலைஇய
இரும் குளிர் வாடையொடு வருந்துவள் எனவேஇரும் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே
  
#338 குறிஞ்சி மதுரை கணக்காயனார்#338 குறிஞ்சி மதுரை கணக்காயனார்
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும்குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும்
மறம் கெழு தானை அரசருள்ளும்மறம் கெழு தானை அரசருள்ளும்
அறம் கடைப்பிடித்த செங்கோலுடன் அமர்அறம் கடைப்பிடித்த செங்கோலுடன் அமர்
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள்மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள்
பலர் புகழ் திருவின் பசும் பூண் பாண்டியன்பலர் புகழ் திருவின் பசும் பூண் பாண்டியன்
அணங்கு உடை உயர் நிலை பொருப்பின் கவாஅன்அணங்கு உடை உயர் நிலை பொருப்பின் கவாஅன்
சினை ஒண் காந்தள் நாறும் நறு நுதல்சினை ஒண் காந்தள் நாறும் நறு நுதல்
துணை ஈர் ஓதி மாஅயோள் வயின்துணை ஈர் ஓதி மாஅயோள் வயின்
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்றநுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற
முயங்கல் இயையாது ஆயினும் என்றும்முயங்கல் இயையாது ஆயினும் என்றும்
வயவு உறு நெஞ்சத்து உயவு துணை ஆகவயவு உறு நெஞ்சத்து உயவு துணை ஆக
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும்ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும்
துன் அரும் துப்பின் வென் வேல் பொறையன்துன் அரும் துப்பின் வென் வேல் பொறையன்
அகல் இரும் கானத்து கொல்லி போலஅகல் இரும் கானத்து கொல்லி போல
தவாஅலியரோ நட்பே அவள்_வயின்தவாஅலியரோ நட்பே அவள்_வயின்
அறாஅலியரோ தூதே பொறாஅர்அறாஅலியரோ தூதே பொறாஅர்
விண் பொர கழித்த திண் பிடி ஒள் வாள்விண் பொர கழித்த திண் பிடி ஒள் வாள்
புனிற்று ஆன் தரவின் இளையர் பெருமகன்புனிற்று ஆன் தரவின் இளையர் பெருமகன்
தொகு போர் சோழன் பொருள் மலி பாக்கத்துதொகு போர் சோழன் பொருள் மலி பாக்கத்து
வழங்கல் ஆனா பெரும் துறைவழங்கல் ஆனா பெரும் துறை
முழங்கு இரு முந்நீர் திரையினும் பலவேமுழங்கு இரு முந்நீர் திரையினும் பலவே
  
#339 பாலை நரை முடி நெட்டையார்#339 பாலை நரை முடி நெட்டையார்
வீங்கு விசை பிணித்த விரை பரி நெடும் தேர்வீங்கு விசை பிணித்த விரை பரி நெடும் தேர்
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில்நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில்
பாம்பு என முடுகு நீர் ஓட கூம்பிபாம்பு என முடுகு நீர் ஓட கூம்பி
பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்பபற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப
அற்சிரம் நின்றன்றால் பொழுதே முற்படஅற்சிரம் நின்றன்றால் பொழுதே முற்பட
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்துஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து
ஆண்மை வாங்க காமம் தட்பஆண்மை வாங்க காமம் தட்ப
கவை படு நெஞ்சம் கண்_கண் அகையகவை படு நெஞ்சம் கண்_கண் அகைய
இரு தலை கொள்ளி இடை நின்று வருந்திஇரு தலை கொள்ளி இடை நின்று வருந்தி
ஒரு தலை படாஅ உறவி போன்றனம்ஒரு தலை படாஅ உறவி போன்றனம்
நோம்-கொல் அளியள் தானே யாக்கைக்குநோம்-கொல் அளியள் தானே யாக்கைக்கு
உயிர் இயைந்து அன்ன நட்பின் அ உயிர்உயிர் இயைந்து அன்ன நட்பின் அ உயிர்
வாழ்தல் அன்ன காதல்வாழ்தல் அன்ன காதல்
சாதல் அன்ன பிரிவு அரியோளேசாதல் அன்ன பிரிவு அரியோளே
  
#340 நெய்தல் நக்கீரர்#340 நெய்தல் நக்கீரர்
பன் நாள் எவ்வம் தீர பகல் வந்துபன் நாள் எவ்வம் தீர பகல் வந்து
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பிபுன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி
மாலை மால் கொள நோக்கி பண் ஆய்ந்துமாலை மால் கொள நோக்கி பண் ஆய்ந்து
வலவன் வண் தேர் இயக்க நீயும்வலவன் வண் தேர் இயக்க நீயும்
செலவு விருப்பு_உறுதல் ஒழிக தில் அம்மசெலவு விருப்பு_உறுதல் ஒழிக தில் அம்ம
செல்லா நல் இசை பொலம் பூண் திரையன்செல்லா நல் இசை பொலம் பூண் திரையன்
பல் பூ கானல் பவத்திரி அன இவள்பல் பூ கானல் பவத்திரி அன இவள்
நல் எழில் இள நலம் தொலைய ஒல்லெனநல் எழில் இள நலம் தொலைய ஒல்லென
கழியே ஓதம் மல்கின்று வழியேகழியே ஓதம் மல்கின்று வழியே
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்
சென்றோர் மன்ற மான்றன்று பொழுது எனசென்றோர் மன்ற மான்றன்று பொழுது என
நின் திறத்து அவலம் வீட இன்று இவண்நின் திறத்து அவலம் வீட இன்று இவண்
சேப்பின் எவனோ பூ கேழ் புலம்பசேப்பின் எவனோ பூ கேழ் புலம்ப
பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅபசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅ
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கேதயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே
வடவர் தந்த வான் கேழ் வட்டம்வடவர் தந்த வான் கேழ் வட்டம்
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்தியகுட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டு இமிர் நறும் சாந்து அணிகுவம் திண் திமில்வண்டு இமிர் நறும் சாந்து அணிகுவம் திண் திமில்
எல்லு தொழில் மடுத்த வல் வினை பரதவர்எல்லு தொழில் மடுத்த வல் வினை பரதவர்
கூர் உளி கடு விசை மாட்டலின் பாய்பு உடன்கூர் உளி கடு விசை மாட்டலின் பாய்பு உடன்
கோள் சுறா கிழித்த கொடு முடி நெடு வலைகோள் சுறா கிழித்த கொடு முடி நெடு வலை
தண் கடல் அசை வளி எறி-தொறும் வினை விட்டுதண் கடல் அசை வளி எறி-தொறும் வினை விட்டு
முன்றில் தாழை தூங்கும்முன்றில் தாழை தூங்கும்
தெண் கடல் பரப்பின் எம் உறைவு இன் ஊர்க்கேதெண் கடல் பரப்பின் எம் உறைவு இன் ஊர்க்கே
  
#341 பாலை ஆவூர் மூலங்கிழார்#341 பாலை ஆவூர் மூலங்கிழார்
உய் தகை இன்றால் தோழி பைபயஉய் தகை இன்றால் தோழி பைபய
கோங்கும் கொய் குழை உற்றன குயிலும்கோங்கும் கொய் குழை உற்றன குயிலும்
தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்
நாடு ஆர் காவிரி கோடு தோய் மலிர் நிறைநாடு ஆர் காவிரி கோடு தோய் மலிர் நிறை
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள்கழை அழி நீத்தம் சாஅய வழி நாள்
மழை கழிந்து அன்ன மா கால் மயங்கு அறல்மழை கழிந்து அன்ன மா கால் மயங்கு அறல்
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறுபதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு
மதவு உடை நாக்கொடு அசை வீட பருகிமதவு உடை நாக்கொடு அசை வீட பருகி
குறும் கால் காஞ்சி கோதை மெல் இணர்குறும் கால் காஞ்சி கோதை மெல் இணர்
பொன் தகை நுண் தாது உறைப்ப தொக்கு உடன்பொன் தகை நுண் தாது உறைப்ப தொக்கு உடன்
குப்பை வார் மணல் எக்கர் துஞ்சும்குப்பை வார் மணல் எக்கர் துஞ்சும்
யாணர் வேனில்-மன் இதுயாணர் வேனில்-மன் இது
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கேமாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே
  
#342 குறிஞ்சி மதுரை கணக்காயனார்#342 குறிஞ்சி மதுரை கணக்காயனார்
ஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலைஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலை
புணர்ந்தோர் போல போற்று-மதி நினக்கு யான்புணர்ந்தோர் போல போற்று-மதி நினக்கு யான்
கிளைஞன் அல்லெனோ நெஞ்சே தெனாஅதுகிளைஞன் அல்லெனோ நெஞ்சே தெனாஅது
வெல் போர் கவுரியர் நன் நாட்டு உள்ளதைவெல் போர் கவுரியர் நன் நாட்டு உள்ளதை
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின்மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின்
ஆ கொள் மூதூர் களவர் பெருமகன்ஆ கொள் மூதூர் களவர் பெருமகன்
ஏவல் இளையர் தலைவன் மேவார்ஏவல் இளையர் தலைவன் மேவார்
அரும் குறும்பு எறிந்த ஆற்றலொடு பருந்து படஅரும் குறும்பு எறிந்த ஆற்றலொடு பருந்து பட
பல் செரு கடந்த செல் உறழ் தட கைபல் செரு கடந்த செல் உறழ் தட கை
கெடாஅ நல் இசை தென்னன் தொடாஅகெடாஅ நல் இசை தென்னன் தொடாஅ
நீர் இழி மருங்கில் கல் அளை கரந்த அம்நீர் இழி மருங்கில் கல் அளை கரந்த அம்
வரை அர_மகளிரின் அரியள்வரை அர_மகளிரின் அரியள்
அம் வரி அல்குல் அணையா_காலேஅம் வரி அல்குல் அணையா_காலே
  
#343 பாலை மதுரை மருதன் இளநாகனார்#343 பாலை மதுரை மருதன் இளநாகனார்
வாங்கு அமை புரையும் வீங்கு இறை பணை தோள்வாங்கு அமை புரையும் வீங்கு இறை பணை தோள்
சில் சுணங்கு அணிந்த பல் பூண் மென் முலைசில் சுணங்கு அணிந்த பல் பூண் மென் முலை
நல் எழில் ஆகம் புல்லுதல் நயந்துநல் எழில் ஆகம் புல்லுதல் நயந்து
மரம் கோள் உமண்_மகன் பேரும் பருதிமரம் கோள் உமண்_மகன் பேரும் பருதி
புன் தலை சிதைத்த வன் தலை நடுகல்புன் தலை சிதைத்த வன் தலை நடுகல்
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்கண்ணி வாடிய மண்ணா மருங்குல்
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து அகூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து அ
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும்ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும்
கண் பொரி கவலைய கானத்து ஆங்கண்கண் பொரி கவலைய கானத்து ஆங்கண்
நனம் தலை யாஅத்து அம் தளிர் பெரும் சினைநனம் தலை யாஅத்து அம் தளிர் பெரும் சினை
இல் போல் நீழல் செல் வெயில் ஒழி-மார்இல் போல் நீழல் செல் வெயில் ஒழி-மார்
நெடும் செவி கழுதை குறும் கால் ஏற்றைநெடும் செவி கழுதை குறும் கால் ஏற்றை
புறம் நிறை பண்டத்து பொறை அசாஅ களைந்தபுறம் நிறை பண்டத்து பொறை அசாஅ களைந்த
பெயர் படை கொள்ளார்க்கு உயவு துணை ஆகிபெயர் படை கொள்ளார்க்கு உயவு துணை ஆகி
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய் பெயர்ந்து நின்றுஉயர்ந்த ஆள்வினை புரிந்தோய் பெயர்ந்து நின்று
உள்ளினை வாழி என் நெஞ்சே கள்ளின்உள்ளினை வாழி என் நெஞ்சே கள்ளின்
மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழை கண்மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழை கண்
சின் மொழி பொலிந்த துவர் வாய்சின் மொழி பொலிந்த துவர் வாய்
பல் மாண் பேதையின் பிரிந்த நீயேபல் மாண் பேதையின் பிரிந்த நீயே
  
#344 முல்லை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்#344 முல்லை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
வள மழை பொழிந்த வால் நிற களரிவள மழை பொழிந்த வால் நிற களரி
உளர்தரு தண் வளி உறு-தொறும் நிலவு எனஉளர்தரு தண் வளி உறு-தொறும் நிலவு என
தொகு முகை விரிந்த முட கால் பிடவின்தொகு முகை விரிந்த முட கால் பிடவின்
வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் மகளிர்வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் மகளிர்
கை மாண் தோணி கடுப்ப பையெனகை மாண் தோணி கடுப்ப பையென
மயில்_இனம் பயிலும் மரம் பயில் கானம்மயில்_இனம் பயிலும் மரம் பயில் கானம்
எல் இடை உறாஅ அளவை வல்லேஎல் இடை உறாஅ அளவை வல்லே
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்ககழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க
நிழல் ஒளிப்பு அன்ன நிமிர் பரி புரவிநிழல் ஒளிப்பு அன்ன நிமிர் பரி புரவி
வயக்கு_உறு கொடிஞ்சி பொலிய வள்பு ஆய்ந்துவயக்கு_உறு கொடிஞ்சி பொலிய வள்பு ஆய்ந்து
இயக்கு-மதி வாழியோ கை உடை வலவஇயக்கு-மதி வாழியோ கை உடை வலவ
பயப்பு உறு படர் அட வருந்தியபயப்பு உறு படர் அட வருந்திய
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவேநயப்பு இன் காதலி நகை முகம் பெறவே
  
#345 பாலை குடவாயில் கீரத்தனார்#345 பாலை குடவாயில் கீரத்தனார்
விசும்பு தளி பொழிந்து வெம்மை நீங்கிவிசும்பு தளி பொழிந்து வெம்மை நீங்கி
தண் பதம் படுதல் செல்க என பன் மாண்தண் பதம் படுதல் செல்க என பன் மாண்
நாம் செல விழைந்தனம் ஆக ஓங்கு புகழ்நாம் செல விழைந்தனம் ஆக ஓங்கு புகழ்
கான்_அமர்_செல்வி அருளலின் வெண் கால்கான்_அமர்_செல்வி அருளலின் வெண் கால்
பல் படை புரவி எய்திய தொல் இசைபல் படை புரவி எய்திய தொல் இசை
நுணங்கு நுண் பனுவல் புலவன் பாடியநுணங்கு நுண் பனுவல் புலவன் பாடிய
இன மழை தவழும் ஏழில் குன்றத்துஇன மழை தவழும் ஏழில் குன்றத்து
கரும் கால் வேங்கை செம் பூ பிணையல்கரும் கால் வேங்கை செம் பூ பிணையல்
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும்ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும்
சின் நாள் கழிக என்று முன்_நாள்சின் நாள் கழிக என்று முன்_நாள்
நம்மொடு பொய்த்தனர் ஆயினும் தம்மொடுநம்மொடு பொய்த்தனர் ஆயினும் தம்மொடு
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலை-மார்திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலை-மார்
மா முறி ஈன்று மர கொம்பு அகைப்பமா முறி ஈன்று மர கொம்பு அகைப்ப
உறை கழிந்து உலந்த பின்றை பொறையஉறை கழிந்து உலந்த பின்றை பொறைய
சிறு வெள் அருவி துவலையின் மலர்ந்தசிறு வெள் அருவி துவலையின் மலர்ந்த
கரும் கால் நுணவின் பெரும் சினை வான் பூகரும் கால் நுணவின் பெரும் சினை வான் பூ
செம் மணல் சிறு நெறி கம்மென வரிப்பசெம் மணல் சிறு நெறி கம்மென வரிப்ப
காடு கவின் பெறுக தோழி ஆடு வளிக்குகாடு கவின் பெறுக தோழி ஆடு வளிக்கு
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ்ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ்
கல் கண் சீக்கும் அத்தம்கல் கண் சீக்கும் அத்தம்
அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவேஅல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே
  
#346 மருதம் நக்கீரர்#346 மருதம் நக்கீரர்
நகை நன்று அம்ம தானே இறை மிசைநகை நன்று அம்ம தானே இறை மிசை
மாரி சுதையின் ஈர்ம் புறத்து அன்னமாரி சுதையின் ஈர்ம் புறத்து அன்ன
கூரல் கொக்கின் குறும் பறை சேவல்கூரல் கொக்கின் குறும் பறை சேவல்
வெள்ளி வெண் தோடு அன்ன கயல் குறித்துவெள்ளி வெண் தோடு அன்ன கயல் குறித்து
கள் ஆர் உவகை கலி மகிழ் உழவர்கள் ஆர் உவகை கலி மகிழ் உழவர்
காஞ்சி அம் குறும் தறி குத்தி தீம் சுவைகாஞ்சி அம் குறும் தறி குத்தி தீம் சுவை
மென் கழை கரும்பின் நன் பல மிடைந்துமென் கழை கரும்பின் நன் பல மிடைந்து
பெரும் செய் நெல்லின் பாசவல் பொத்திபெரும் செய் நெல்லின் பாசவல் பொத்தி
வருத்தி கொண்ட வல் வாய் கொடும் சிறைவருத்தி கொண்ட வல் வாய் கொடும் சிறை
மீது அழி கடு நீர் நோக்கி பைப்பயமீது அழி கடு நீர் நோக்கி பைப்பய
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊரபார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர
யாம் அது பேணின்றோ இலமே நீ நின்யாம் அது பேணின்றோ இலமே நீ நின்
பண் அமை நல் யாழ் பாணனொடு விசி பிணிபண் அமை நல் யாழ் பாணனொடு விசி பிணி
மண் ஆர் முழவின் கண் அதிர்ந்து இயம்பமண் ஆர் முழவின் கண் அதிர்ந்து இயம்ப
மகிழ் துணை சுற்றமொடு மட்டு மாந்திமகிழ் துணை சுற்றமொடு மட்டு மாந்தி
எம் மனை வாராய் ஆகி முன்_நாள்எம் மனை வாராய் ஆகி முன்_நாள்
நும் மனை சேர்ந்த ஞான்றை அ மனைநும் மனை சேர்ந்த ஞான்றை அ மனை
குறும் தொடி மடந்தை உவந்தனள் நெடும் தேர்குறும் தொடி மடந்தை உவந்தனள் நெடும் தேர்
இழை அணி யானை பழையன்மாறன்இழை அணி யானை பழையன்மாறன்
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்
வெள்ள தானையொடு வேறு புலத்து இறுத்தவெள்ள தானையொடு வேறு புலத்து இறுத்த
கிள்ளிவளவன் நல் அமர் சாஅய்கிள்ளிவளவன் நல் அமர் சாஅய்
கடும் பரி புரவியொடு களிறு பல வவ்விகடும் பரி புரவியொடு களிறு பல வவ்வி
ஏதில் மன்னர் ஊர் கொளஏதில் மன்னர் ஊர் கொள
கோதைமார்பன் உவகையின் பெரிதேகோதைமார்பன் உவகையின் பெரிதே
  
#347 பாலை மாமூலனார்#347 பாலை மாமூலனார்
தோளும் தொல் கவின் தொலைய நாளும்தோளும் தொல் கவின் தொலைய நாளும்
நலம் கவர் பசலை நல்கின்று நலியநலம் கவர் பசலை நல்கின்று நலிய
சால் பெரும் தானை சேரலாதன்சால் பெரும் தானை சேரலாதன்
மால் கடல் ஓட்டி கடம்பு அறுத்து இயற்றியமால் கடல் ஓட்டி கடம்பு அறுத்து இயற்றிய
பண் அமை முரசின் கண் அதிர்ந்து அன்னபண் அமை முரசின் கண் அதிர்ந்து அன்ன
கவ்வை தூற்றும் வெவ் வாய் சேரிகவ்வை தூற்றும் வெவ் வாய் சேரி
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழியஅம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய
சென்றனர் ஆயினும் செய்_வினை அவர்க்கேசென்றனர் ஆயினும் செய்_வினை அவர்க்கே
வாய்க்க தில் வாழி தோழி வாயாதுவாய்க்க தில் வாழி தோழி வாயாது
மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்துமழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து
ஒண் கேழ் வய புலி பாய்ந்து என குவவு அடிஒண் கேழ் வய புலி பாய்ந்து என குவவு அடி
வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇவெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மட பிடிகன்று ஒழித்து ஓடிய புன் தலை மட பிடி
கை தலை வைத்த மையல் விதுப்பொடுகை தலை வைத்த மையல் விதுப்பொடு
கெடு மக பெண்டிரின் தேரும்கெடு மக பெண்டிரின் தேரும்
நெடு மர மருங்கின் மலை இறந்தோரேநெடு மர மருங்கின் மலை இறந்தோரே
  
#348 குறிஞ்சி மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்#348 குறிஞ்சி மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
என் ஆவது-கொல் தானே முன்றில்என் ஆவது-கொல் தானே முன்றில்
தேன் தேர் சுவைய திரள் அரை மாஅத்துதேன் தேர் சுவைய திரள் அரை மாஅத்து
கோடைக்கு ஊழ்த்த கமழ் நறும் தீம் கனிகோடைக்கு ஊழ்த்த கமழ் நறும் தீம் கனி
பயிர்ப்பு உறு பலவின் எதிர் சுளை அளைஇபயிர்ப்பு உறு பலவின் எதிர் சுளை அளைஇ
இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல்இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல்
நெடும் கண் ஆடு அமை பழுநி கடும் திறல்நெடும் கண் ஆடு அமை பழுநி கடும் திறல்
பாப்பு கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுபாப்பு கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டு
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி குறவர்கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி குறவர்
முறி தழை மகளிர் மடுப்ப மாந்திமுறி தழை மகளிர் மடுப்ப மாந்தி
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்து_உழிஅடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்து_உழி
யானை வவ்வின தினை என நோனாதுயானை வவ்வின தினை என நோனாது
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇஇளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன்சிலை ஆய்ந்து திரிதரும் நாடன்
நிலையா நன் மொழி தேறிய நெஞ்சேநிலையா நன் மொழி தேறிய நெஞ்சே
  
#349 பாலை மாமூலனார்#349 பாலை மாமூலனார்
அரம் போழ் அம் வளை செறிந்த முன்கைஅரம் போழ் அம் வளை செறிந்த முன்கை
வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலையவரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய
எவன் ஆய்ந்தனர்-கொல் தோழி ஞெமன்ன்எவன் ஆய்ந்தனர்-கொல் தோழி ஞெமன்ன்
தெரிகோல் அன்ன செயிர் தீர் செம்மொழிதெரிகோல் அன்ன செயிர் தீர் செம்மொழி
உலைந்த ஒக்கல் பாடுநர் செலினேஉலைந்த ஒக்கல் பாடுநர் செலினே
உரன் மலி உள்ளமொடு முனை பாழ் ஆகஉரன் மலி உள்ளமொடு முனை பாழ் ஆக
அரும் குறும்பு எறிந்த பெரும் கல் வெறுக்கைஅரும் குறும்பு எறிந்த பெரும் கல் வெறுக்கை
சூழாது சுரக்கும் நன்னன் நன் நாட்டுசூழாது சுரக்கும் நன்னன் நன் நாட்டு
ஏழில் குன்றத்து கவாஅன் கேழ் கொளஏழில் குன்றத்து கவாஅன் கேழ் கொள
திருந்து அரை நிவந்த கரும் கால் வேங்கைதிருந்து அரை நிவந்த கரும் கால் வேங்கை
எரி மருள் கவளம் மாந்தி களிறு தன்எரி மருள் கவளம் மாந்தி களிறு தன்
வரி நுதல் வைத்த வலி தேம்பு தட கைவரி நுதல் வைத்த வலி தேம்பு தட கை
கல் ஊர் பாம்பின் தோன்றும்கல் ஊர் பாம்பின் தோன்றும்
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரேசொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே
  
#350 நெய்தல் சேந்தன் கண்ணனார்#350 நெய்தல் சேந்தன் கண்ணனார்
கழியே சிறு குரல் நெய்தலொடு காவி கூம்பகழியே சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப
எறி திரை ஓதம் தரல் ஆனாதேஎறி திரை ஓதம் தரல் ஆனாதே
துறையே மருங்கின் போகிய மா கவை மருப்பின்துறையே மருங்கின் போகிய மா கவை மருப்பின்
இரும் சேற்று ஈர் அளை அலவன் நீப்பஇரும் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றேவழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே
கொடு நுகம் நுழைந்த கணை கால் அத்திரிகொடு நுகம் நுழைந்த கணை கால் அத்திரி
வடி மணி நெடும் தேர் பூண ஏவாதுவடி மணி நெடும் தேர் பூண ஏவாது
ஏந்து எழில் மழை கண் இவள் குறை ஆகஏந்து எழில் மழை கண் இவள் குறை ஆக
சேந்தனை சென்மோ பெரு_நீர் சேர்ப்பசேந்தனை சென்மோ பெரு_நீர் சேர்ப்ப
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கிஇலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி
வலம்புரி மூழ்கிய வான் திமில் பரதவர்வலம்புரி மூழ்கிய வான் திமில் பரதவர்
ஒலி தலை பணிலம் ஆர்ப்ப கல்லெனஒலி தலை பணிலம் ஆர்ப்ப கல்லென
கலி கெழு கொற்கை எதிர்கொள இழிதரும்கலி கெழு கொற்கை எதிர்கொள இழிதரும்
குவவு மணல் நெடும் கோட்டு ஆங்கண்குவவு மணல் நெடும் கோட்டு ஆங்கண்
உவ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரேஉவ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே
  

Related posts