அகநானூறு 276-300

  
#276 மருதம் பரணர்#276 மருதம் பரணர்
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்தநீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த
வாளை வெண் போத்து உணீஇய நாரை தன்வாளை வெண் போத்து உணீஇய நாரை தன்
அடி அறிவுறுதல் அஞ்சி பைபயஅடி அறிவுறுதல் அஞ்சி பைபய
கடி இலம் புகூஉம் கள்வன் போலகடி இலம் புகூஉம் கள்வன் போல
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடுசாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு
ஆவது ஆக இனி நாண் உண்டோஆவது ஆக இனி நாண் உண்டோ
வருக தில் அம்ம எம் சேரி சேரவருக தில் அம்ம எம் சேரி சேர
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காணஅரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண
தாரும் தானையும் பற்றி ஆரியர்தாரும் தானையும் பற்றி ஆரியர்
பிடி பயின்று தரூஉம் பெரும் களிறு போலபிடி பயின்று தரூஉம் பெரும் களிறு போல
தோள் கந்து ஆக கூந்தலின் பிணித்து அவன்தோள் கந்து ஆக கூந்தலின் பிணித்து அவன்
மார்பு கடி கொள்ளேன் ஆயின் ஆர்வு_உற்றுமார்பு கடி கொள்ளேன் ஆயின் ஆர்வு_உற்று
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல்இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல்
பரந்து வெளிப்படாது ஆகிபரந்து வெளிப்படாது ஆகி
வருந்துக தில்ல யாய் ஓம்பிய நலனேவருந்துக தில்ல யாய் ஓம்பிய நலனே
  
#277 பாலை கருவூர் நன்மார்பன்#277 பாலை கருவூர் நன்மார்பன்
தண் கதிர் மண்டிலம் அவிர் அற சாஅய்தண் கதிர் மண்டிலம் அவிர் அற சாஅய்
பகல் அழி தோற்றம் போல பையெனபகல் அழி தோற்றம் போல பையென
நுதல் ஒளி கரப்பவும் ஆள்வினை தரும்-மார்நுதல் ஒளி கரப்பவும் ஆள்வினை தரும்-மார்
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆகதவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக
கடையல் அம் குரல வாள் வரி உழுவைகடையல் அம் குரல வாள் வரி உழுவை
பேழ் வாய் பிணவின் விழு பசி நோனாதுபேழ் வாய் பிணவின் விழு பசி நோனாது
இரும் பனம் செறும்பின் அன்ன பரூஉ மயிர்இரும் பனம் செறும்பின் அன்ன பரூஉ மயிர்
சிறு கண் பன்றி வரு_திறம் பார்க்கும்சிறு கண் பன்றி வரு_திறம் பார்க்கும்
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனம் தலைஅத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனம் தலை
பொத்து உடை மரத்த புகர் படு நீழல்பொத்து உடை மரத்த புகர் படு நீழல்
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும்ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும்
ஈரம் இல் வெம் சுரம் இறந்தோர் நம்_வயின்ஈரம் இல் வெம் சுரம் இறந்தோர் நம்_வயின்
வாரா அளவை ஆய்_இழை கூர் வாய்வாரா அளவை ஆய்_இழை கூர் வாய்
அழல் அகைந்து அன்ன காமர் துதை மயிர்அழல் அகைந்து அன்ன காமர் துதை மயிர்
மனை உறை கோழி மறன் உடை சேவல்மனை உறை கோழி மறன் உடை சேவல்
போர் புரி எருத்தம் போல கஞலியபோர் புரி எருத்தம் போல கஞலிய
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்திபொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில்சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில்
வந்தன்று அம்ம தானேவந்தன்று அம்ம தானே
வாரார் தோழி நம் காதலோரேவாரார் தோழி நம் காதலோரே
  
#278 குறிஞ்சி#278 குறிஞ்சி
குண கடல் முகந்த கொள்ளை வானம்குண கடல் முகந்த கொள்ளை வானம்
பணை கெழு வேந்தர் பல் படை தானைபணை கெழு வேந்தர் பல் படை தானை
தோல் நிரைத்து அனைய ஆகி வலன் ஏர்புதோல் நிரைத்து அனைய ஆகி வலன் ஏர்பு
கோல் நிமிர் கொடியின் வசி பட மின்னிகோல் நிமிர் கொடியின் வசி பட மின்னி
உரும் உரறு அதிர் குரல் தலைஇ பானாள்உரும் உரறு அதிர் குரல் தலைஇ பானாள்
பெரு மலை மீமிசை முற்றின ஆயின்பெரு மலை மீமிசை முற்றின ஆயின்
வாள் இலங்கு அருவி தாஅய் நாளைவாள் இலங்கு அருவி தாஅய் நாளை
இரு வெதிர் அம் கழை ஒசிய தீண்டிஇரு வெதிர் அம் கழை ஒசிய தீண்டி
வருவது மாதோ வண் பரி உந்திவருவது மாதோ வண் பரி உந்தி
நனி பெரும் பரப்பின் நம் ஊர் முன்துறைநனி பெரும் பரப்பின் நம் ஊர் முன்துறை
பனி பொரு மழை கண் சிவப்ப பானாள்பனி பொரு மழை கண் சிவப்ப பானாள்
முனி படர் அகல மூழ்குவம்-கொல்லோமுனி படர் அகல மூழ்குவம்-கொல்லோ
மணி மருள் மேனி ஆய் நலம் தொலையமணி மருள் மேனி ஆய் நலம் தொலைய
தணிவு அரும் துயரம் செய்தோன்தணிவு அரும் துயரம் செய்தோன்
அணி கிளர் நெடு வரை ஆடிய நீரேஅணி கிளர் நெடு வரை ஆடிய நீரே
  
#279 பாலை இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார்#279 பாலை இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார்
நட்டோர் இன்மையும் கேளிர் துன்பமும்நட்டோர் இன்மையும் கேளிர் துன்பமும்
ஒட்டாது உறையுநர் பெருக்கமும் காணூஉஒட்டாது உறையுநர் பெருக்கமும் காணூஉ
ஒரு பதி வாழ்தல் ஆற்றுப தில்லஒரு பதி வாழ்தல் ஆற்றுப தில்ல
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கியபொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
மென் முலை முற்றம் கடவாதோர் எனமென் முலை முற்றம் கடவாதோர் என
நள்ளென் கங்குலும் பகலும் இயைந்து_இயைந்துநள்ளென் கங்குலும் பகலும் இயைந்து_இயைந்து
உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரிஉள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி
ஆள்வினை மாரியின் அவியா நாளும்ஆள்வினை மாரியின் அவியா நாளும்
கடறு உழந்து இவணம் ஆக படர் உழந்துகடறு உழந்து இவணம் ஆக படர் உழந்து
யாங்கு ஆகுவள்-கொல் தானே தீம் தொடையாங்கு ஆகுவள்-கொல் தானே தீம் தொடை
விளரி நரம்பின் நயவரு சீறியாழ்விளரி நரம்பின் நயவரு சீறியாழ்
மலி பூ பொங்கர் மகிழ் குரல் குயிலொடுமலி பூ பொங்கர் மகிழ் குரல் குயிலொடு
புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும்புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும்
நம் உடை மதுகையள் ஆகி அணி நடைநம் உடை மதுகையள் ஆகி அணி நடை
அன்ன மாண் பெடையின் மென்மெல இயலிஅன்ன மாண் பெடையின் மென்மெல இயலி
கையறு நெஞ்சினள் அடைதரும்கையறு நெஞ்சினள் அடைதரும்
மை ஈர் ஓதி மாஅயோளேமை ஈர் ஓதி மாஅயோளே
  
#280 நெய்தல் அம்மூவனார்#280 நெய்தல் அம்மூவனார்
பொன் அடர்ந்து அன்ன ஒள் இணர் செருந்திபொன் அடர்ந்து அன்ன ஒள் இணர் செருந்தி
பன் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்பன் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்
திணி மணல் அடைகரை அலவன் ஆட்டிதிணி மணல் அடைகரை அலவன் ஆட்டி
அசையினள் இருந்த ஆய் தொடி குறு_மகள்அசையினள் இருந்த ஆய் தொடி குறு_மகள்
நலம் சால் விழு பொருள் கலம் நிறை கொடுப்பினும்நலம் சால் விழு பொருள் கலம் நிறை கொடுப்பினும்
பெறல் அரும்-குரையள் ஆயின் அறம் தெரிந்துபெறல் அரும்-குரையள் ஆயின் அறம் தெரிந்து
நாம் உறை தேஎம் மரூஉ பெயர்ந்து அவனொடுநாம் உறை தேஎம் மரூஉ பெயர்ந்து அவனொடு
இரு நீர் சேர்ப்பின் உப்பு உடன் உழுதும்இரு நீர் சேர்ப்பின் உப்பு உடன் உழுதும்
பெரு_நீர் குட்டம் புணையொடு புக்கும்பெரு_நீர் குட்டம் புணையொடு புக்கும்
படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பின்படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பின்
தருகுவன்-கொல்லோ தானே விரி திரைதருகுவன்-கொல்லோ தானே விரி திரை
கண் திரள் முத்தம் கொண்டு ஞாங்கர்கண் திரள் முத்தம் கொண்டு ஞாங்கர்
தேன் இமிர் அகன் கரை பகுக்கும்தேன் இமிர் அகன் கரை பகுக்கும்
கானல் அம் பெரும் துறை பரதவன் எமக்கேகானல் அம் பெரும் துறை பரதவன் எமக்கே
  
  
  
  
  
  
#281 பாலை மாமூலனார்#281 பாலை மாமூலனார்
செய்வது தெரிந்திசின் தோழி அல்கலும்செய்வது தெரிந்திசின் தோழி அல்கலும்
அகலுள் ஆண்மை அச்சு அற கூறியஅகலுள் ஆண்மை அச்சு அற கூறிய
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாதுசொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலிஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி
வான் போழ் வல் வில் சுற்றி நோன் சிலைவான் போழ் வல் வில் சுற்றி நோன் சிலை
அம் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல்அம் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல்
கனை குரல் இசைக்கும் விரை செலல் கடும் கணைகனை குரல் இசைக்கும் விரை செலல் கடும் கணை
முரண் மிகு வடுகர் முன் உற மோரியர்முரண் மிகு வடுகர் முன் உற மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்குதென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண் உற ஓங்கிய பனி இரும் குன்றத்துவிண் உற ஓங்கிய பனி இரும் குன்றத்து
ஒண் கதிர் திகிரி உருளிய குறைத்தஒண் கதிர் திகிரி உருளிய குறைத்த
அறை இறந்து அவரோ சென்றனர்அறை இறந்து அவரோ சென்றனர்
பறை அறைந்து அன்ன அலர் நமக்கு ஒழித்தேபறை அறைந்து அன்ன அலர் நமக்கு ஒழித்தே
  
#282 குறிஞ்சி தொல் கபிலன்#282 குறிஞ்சி தொல் கபிலன்
பெரு மலை சிலம்பின் வேட்டம் போகியபெரு மலை சிலம்பின் வேட்டம் போகிய
செறி மடை அம்பின் வல் வில் கானவன்செறி மடை அம்பின் வல் வில் கானவன்
பொருது தொலை யானை வெண் கோடு கொண்டுபொருது தொலை யானை வெண் கோடு கொண்டு
நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன்நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன்
கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்பகண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப
வை நுதி வான் மருப்பு ஒடிய உக்கவை நுதி வான் மருப்பு ஒடிய உக்க
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடுதெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டுமூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு
சாந்தம் பொறை_மரம் ஆக நறை நார்சாந்தம் பொறை_மரம் ஆக நறை நார்
வேங்கை கண்ணியன் இழிதரும் நாடற்குவேங்கை கண்ணியன் இழிதரும் நாடற்கு
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்துஇன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து
எந்தையும் எதிர்ந்தனன் கொடையே அலர் வாய்எந்தையும் எதிர்ந்தனன் கொடையே அலர் வாய்
அம்பல் ஊரும் அவனொடு மொழியும்அம்பல் ஊரும் அவனொடு மொழியும்
சாய் இறை திரண்ட தோள் பாராட்டிசாய் இறை திரண்ட தோள் பாராட்டி
யாயும் அவனே என்னும் யாமும்யாயும் அவனே என்னும் யாமும்
வல்லே வருக வரைந்த நாள் எனவல்லே வருக வரைந்த நாள் என
நல் இறை மெல் விரல் கூப்பிநல் இறை மெல் விரல் கூப்பி
இல் உறை கடவுட்கு ஓக்குதும் பலியேஇல் உறை கடவுட்கு ஓக்குதும் பலியே
  
#283 பாலை மதுரை மருதன் இளநாகனார்#283 பாலை மதுரை மருதன் இளநாகனார்
நன் நெடும் கதுப்பொடு பெரும் தோள் நீவியநன் நெடும் கதுப்பொடு பெரும் தோள் நீவிய
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும்நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும்
செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவிசெலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி
பல் கவர் மருப்பின் முது மான் போக்கிபல் கவர் மருப்பின் முது மான் போக்கி
சில் உணா தந்த சீறூர் பெண்டிர்சில் உணா தந்த சீறூர் பெண்டிர்
திரி வயின் தெவுட்டும் சேண் புல குடிஞைதிரி வயின் தெவுட்டும் சேண் புல குடிஞை
பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்-தொறும்பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்-தொறும்
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்குபோகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு
அரிய ஆகும் என்னாமை கரி மரம்அரிய ஆகும் என்னாமை கரி மரம்
கண் அகை இளம் குழை கால் முதல் கவினிகண் அகை இளம் குழை கால் முதல் கவினி
விசும்புடன் இருண்டு வெம்மை நீங்கவிசும்புடன் இருண்டு வெம்மை நீங்க
பசும் கண் வானம் பாய் தளி பொழிந்து எனபசும் கண் வானம் பாய் தளி பொழிந்து என
புல் நுகும்பு எடுத்த நன் நெடும் கானத்துபுல் நுகும்பு எடுத்த நன் நெடும் கானத்து
ஊட்டு_உறு பஞ்சி பிசிர் பரந்து அன்னஊட்டு_உறு பஞ்சி பிசிர் பரந்து அன்ன
வண்ண மூதாய் தண் நிலம் வரிப்பவண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப
இனிய ஆகுக தணிந்தேஇனிய ஆகுக தணிந்தே
இன்னா நீப்பின் நின்னொடு செலற்கேஇன்னா நீப்பின் நின்னொடு செலற்கே
  
#284 முல்லை இடைக்காடனார்#284 முல்லை இடைக்காடனார்
சிறியிலை நெல்லி காய் கண்டு அன்னசிறியிலை நெல்லி காய் கண்டு அன்ன
குறு விழி கண்ண கூரல் அம் குறு முயல்குறு விழி கண்ண கூரல் அம் குறு முயல்
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபுமுடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு
குடந்தை அம் செவிய கோள் பவர் ஒடுங்கிகுடந்தை அம் செவிய கோள் பவர் ஒடுங்கி
இன் துயில் எழுந்து துணையொடு போகிஇன் துயில் எழுந்து துணையொடு போகி
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும்முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும்
புன்_புலம் தழீஇய பொறை முதல் சிறுகுடிபுன்_புலம் தழீஇய பொறை முதல் சிறுகுடி
தினை கள் உண்ட தெறி கோல் மறவர்தினை கள் உண்ட தெறி கோல் மறவர்
விசைத்த வில்லர் வேட்டம் போகிவிசைத்த வில்லர் வேட்டம் போகி
முல்லை படப்பை புல்வாய் கெண்டும்முல்லை படப்பை புல்வாய் கெண்டும்
காமர் புறவினதுவே காமம்காமர் புறவினதுவே காமம்
நம்மினும் தான் தலைமயங்கியநம்மினும் தான் தலைமயங்கிய
அம் மா அரிவை உறைவு இன் ஊரேஅம் மா அரிவை உறைவு இன் ஊரே
  
#285 பாலை காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்#285 பாலை காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
ஒழிய செல்-மார் செல்ப என்று நாம்ஒழிய செல்-மார் செல்ப என்று நாம்
அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்துஅழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து
எவ்வம் இகந்து சேண் அகல வை எயிற்றுஎவ்வம் இகந்து சேண் அகல வை எயிற்று
ஊன் நசை பிணவின் உறு பசி களைஇயர்ஊன் நசை பிணவின் உறு பசி களைஇயர்
காடு தேர் மட பிணை அலற கலையின்காடு தேர் மட பிணை அலற கலையின்
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றைஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை
வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய பயில் வரிவெயில் புலந்து இளைக்கும் வெம்மைய பயில் வரி
இரும் புலி வேங்கை கரும் தோல் அன்னஇரும் புலி வேங்கை கரும் தோல் அன்ன
கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கைகல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறிஉலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவைஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை
ஆடு செவி நோக்கும் அத்தம் பணை தோள்ஆடு செவி நோக்கும் அத்தம் பணை தோள்
குவளை உண்கண் இவளும் நம்மொடுகுவளை உண்கண் இவளும் நம்மொடு
வரூஉம் என்றனரே காதலர்வரூஉம் என்றனரே காதலர்
வாராய் தோழி முயங்குகம் பலவேவாராய் தோழி முயங்குகம் பலவே
  
#286 மருதம் ஓரம்போகியார்#286 மருதம் ஓரம்போகியார்
வெள்ளி விழு தொடி மென் கருப்பு உலக்கைவெள்ளி விழு தொடி மென் கருப்பு உலக்கை
வள்ளி நுண் இடை வயின்_வயின் நுடங்கவள்ளி நுண் இடை வயின்_வயின் நுடங்க
மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇமீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ
காஞ்சி நீழல் தமர் வளம் பாடிகாஞ்சி நீழல் தமர் வளம் பாடி
ஊர் குறு_மகளிர் குறு_வழி விறந்தஊர் குறு_மகளிர் குறு_வழி விறந்த
வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின்வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின்
தாழ் சினை உறங்கும் தண் துறை ஊரதாழ் சினை உறங்கும் தண் துறை ஊர
விழையா உள்ளம் விழையும் ஆயினும்விழையா உள்ளம் விழையும் ஆயினும்
என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்குஎன்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு
அறனும் பொருளும் வழாமை நாடிஅறனும் பொருளும் வழாமை நாடி
தன் தகவு உடைமை நோக்கி மற்று அதன்தன் தகவு உடைமை நோக்கி மற்று அதன்
பின் ஆகும்மே முன்னியது முடித்தல்பின் ஆகும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம் அதனால்அனைய பெரியோர் ஒழுக்கம் அதனால்
அரிய பெரியோர் தெரியும்_காலைஅரிய பெரியோர் தெரியும்_காலை
நும்மோர் அன்னோர் மாட்டும் இன்னநும்மோர் அன்னோர் மாட்டும் இன்ன
பொய்யொடு மிடைந்தவை தோன்றின்பொய்யொடு மிடைந்தவை தோன்றின்
மெய் யாண்டு உளதோ இ உலகத்தானேமெய் யாண்டு உளதோ இ உலகத்தானே
  
#287 பாலை குடவாயிற்கீரத்தனார்#287 பாலை குடவாயிற்கீரத்தனார்
தொடி அணி முன்கை தொகு விரல் குவைஇதொடி அணி முன்கை தொகு விரல் குவைஇ
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆகபடிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக
நோம்-கொல் அளியள் தானே தூங்கு நிலைநோம்-கொல் அளியள் தானே தூங்கு நிலை
மரை ஏறு சொறிந்த மா தாள் கந்தின்மரை ஏறு சொறிந்த மா தாள் கந்தின்
சுரை இவர் பொதியில் அம் குடி சீறூர்சுரை இவர் பொதியில் அம் குடி சீறூர்
நாள்_பலி மறந்த நரை கண் இட்டிகைநாள்_பலி மறந்த நரை கண் இட்டிகை
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்துபுரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடைஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை
துணை புறா இரிக்கும் தூய் மழை நனம் தலைதுணை புறா இரிக்கும் தூய் மழை நனம் தலை
கணை கால் அம் பிணை ஏறு புறம் நக்ககணை கால் அம் பிணை ஏறு புறம் நக்க
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்தஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த
அல்கு_உறு வரி நிழல் அசையினம் நோக்கஅல்கு_உறு வரி நிழல் அசையினம் நோக்க
அரம்பு வந்து அலைக்கும் மாலைஅரம்பு வந்து அலைக்கும் மாலை
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமேநிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே
  
#288 குறிஞ்சி விற்றூற்று மூதெயினனார்#288 குறிஞ்சி விற்றூற்று மூதெயினனார்
செல்-மதி சிறக்க நின் உள்ளம் நின் மலைசெல்-மதி சிறக்க நின் உள்ளம் நின் மலை
ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினைஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை
சாரல் வேங்கை படு சினை புது பூசாரல் வேங்கை படு சினை புது பூ
முருகு முரண் கொள்ளும் உருவ கண்ணியைமுருகு முரண் கொள்ளும் உருவ கண்ணியை
எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல்எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல்
எவ்வம் கூரிய வைகலும் வருவோய்எவ்வம் கூரிய வைகலும் வருவோய்
கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின்கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின்
எண்மை செய்தனை ஆகுவை நண்ணிஎண்மை செய்தனை ஆகுவை நண்ணி
கொடியோர் குறுகும் நெடி இரும் குன்றத்துகொடியோர் குறுகும் நெடி இரும் குன்றத்து
இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவிஇட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி
அரு வரை இழிதரும் வெரு வரு படாஅர்அரு வரை இழிதரும் வெரு வரு படாஅர்
கயம் தலை மந்தி உயங்கு பசி களைஇயர்கயம் தலை மந்தி உயங்கு பசி களைஇயர்
பார்ப்பின் தந்தை பழ சுளை தொடினும்பார்ப்பின் தந்தை பழ சுளை தொடினும்
நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்துநனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து
மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அறமகளிர் மாங்காட்டு அற்றே துகள் அற
கொந்தொடு உதிர்த்த கதுப்பின்கொந்தொடு உதிர்த்த கதுப்பின்
அம் தீம் கிளவி தந்தை காப்பேஅம் தீம் கிளவி தந்தை காப்பே
  
#289 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்#289 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்
சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர்சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர்
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல்உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல்
நெடு நிலை நடுகல் நாள் பலி கூட்டும்நெடு நிலை நடுகல் நாள் பலி கூட்டும்
சுரன் இடை விலங்கிய மரன் ஓங்கு இயவின்சுரன் இடை விலங்கிய மரன் ஓங்கு இயவின்
வந்து வினை வலித்த நம்_வயின் என்றும்வந்து வினை வலித்த நம்_வயின் என்றும்
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாதுதெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிதுநெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது
அவிழினும் உயவும் ஆய் மட தகுவிஅவிழினும் உயவும் ஆய் மட தகுவி
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்தசேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த
திண் சுவர் நோக்கி நினைந்து கண் பனிதிண் சுவர் நோக்கி நினைந்து கண் பனி
நெகிழ் நூல் முத்தின் முகிழ் முலை தெறிப்பநெகிழ் நூல் முத்தின் முகிழ் முலை தெறிப்ப
மை அற விரிந்த படை அமை சேக்கைமை அற விரிந்த படை அமை சேக்கை
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ
மையல் கொண்ட மதன் அழி இருக்கையள்மையல் கொண்ட மதன் அழி இருக்கையள்
பகு வாய் பல்லி படு-தொறும் பரவிபகு வாய் பல்லி படு-தொறும் பரவி
நல்ல கூறு என நடுங்கிநல்ல கூறு என நடுங்கி
புல்லென் மாலையொடு பொரும்-கொல் தானேபுல்லென் மாலையொடு பொரும்-கொல் தானே
  
#290 நெய்தல் நக்கீரர்#290 நெய்தல் நக்கீரர்
குடுமி கொக்கின் பைம் கால் பேடைகுடுமி கொக்கின் பைம் கால் பேடை
இரும் சேற்று அள்ளல் நாள்_புலம் போகியஇரும் சேற்று அள்ளல் நாள்_புலம் போகிய
கொழு மீன் வல்சி புன் தலை சிறாஅர்கொழு மீன் வல்சி புன் தலை சிறாஅர்
நுண் ஞாண் அம் வலை சேவல் பட்டு எனநுண் ஞாண் அம் வலை சேவல் பட்டு என
அல்கு_உறு பொழுதின் மெல்கு இரை மிசையாதுஅல்கு_உறு பொழுதின் மெல்கு இரை மிசையாது
பைதல் பிள்ளை தழீஇ ஒய்யெனபைதல் பிள்ளை தழீஇ ஒய்யென
அம் கண் பெண்ணை அன்பு உற நரலும்அம் கண் பெண்ணை அன்பு உற நரலும்
சிறு பல் தொல் குடி பெரு_நீர் சேர்ப்பன்சிறு பல் தொல் குடி பெரு_நீர் சேர்ப்பன்
கழி சேர் புன்னை அழி பூ கானல்கழி சேர் புன்னை அழி பூ கானல்
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து நம்தணவா நெஞ்சமொடு தமியன் வந்து நம்
மணவா முன்னும் எவனோ தோழிமணவா முன்னும் எவனோ தோழி
வெண் கோட்டு யானை விறல் போர் குட்டுவன்வெண் கோட்டு யானை விறல் போர் குட்டுவன்
தெண் திரை பரப்பின் தொண்டி முன்துறைதெண் திரை பரப்பின் தொண்டி முன்துறை
சுரும்பு உண மலர்ந்த பெரும் தண் நெய்தல்சுரும்பு உண மலர்ந்த பெரும் தண் நெய்தல்
மணி ஏர் மாண் நலம் ஒரீஇமணி ஏர் மாண் நலம் ஒரீஇ
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணேபொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே
  
  
  
  
  
  
#291 பாலை பாலை பாடிய பெரும் கடுங்கோ#291 பாலை பாலை பாடிய பெரும் கடுங்கோ
வானம் பெயல் வளம் கரப்ப கானம்வானம் பெயல் வளம் கரப்ப கானம்
உலறி இலை இல ஆக பல உடன்உலறி இலை இல ஆக பல உடன்
ஏறு உடை ஆயத்து இனம் பசி தெறுப்பஏறு உடை ஆயத்து இனம் பசி தெறுப்ப
கயன் அற வறந்த கோடையொடு நயன் அறகயன் அற வறந்த கோடையொடு நயன் அற
பெரு வரை நிவந்த மருங்கில் கொடு வரிபெரு வரை நிவந்த மருங்கில் கொடு வரி
புலியொடு பொருது சினம் சிறந்து வலியோடுபுலியொடு பொருது சினம் சிறந்து வலியோடு
உரவு களிறு ஒதுங்கிய மருங்கில் பரூஉ பரல்உரவு களிறு ஒதுங்கிய மருங்கில் பரூஉ பரல்
சிறு பல் மின்மினி கடுப்ப எ வாயும்சிறு பல் மின்மினி கடுப்ப எ வாயும்
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடைநிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை
எருவை இரும் சிறை இரீஇய விரி இணர்எருவை இரும் சிறை இரீஇய விரி இணர்
தாது உண் தும்பி முரல் இசை கடுப்பதாது உண் தும்பி முரல் இசை கடுப்ப
பரியினது உயிர்க்கும் அம்பினர் வெருவரபரியினது உயிர்க்கும் அம்பினர் வெருவர
உவலை சூடிய தலையர் கவலைஉவலை சூடிய தலையர் கவலை
ஆர்த்து உடன் அரும் பொருள் வவ்வலின் யாவதும்ஆர்த்து உடன் அரும் பொருள் வவ்வலின் யாவதும்
சாத்து இடை வழங்கா சேண் சிமை அதரசாத்து இடை வழங்கா சேண் சிமை அதர
சிறியிலை நெல்லி தீம் சுவை திரள் காய்சிறியிலை நெல்லி தீம் சுவை திரள் காய்
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்றுஉதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளிபுள்ளி அம் பிணை உணீஇய உள்ளி
அறு மருப்பு ஒழித்த தலைய தோல் பொதிஅறு மருப்பு ஒழித்த தலைய தோல் பொதி
மறு மருப்பு இளம் கோடு அதிர கூஉம்மறு மருப்பு இளம் கோடு அதிர கூஉம்
சுடர் தெற வருந்திய அரும் சுரம் இறந்து ஆங்குசுடர் தெற வருந்திய அரும் சுரம் இறந்து ஆங்கு
உள்ளினை வாழிய நெஞ்சே போது எனஉள்ளினை வாழிய நெஞ்சே போது என
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல்புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல்
நல் எழில் மழை கண் நம் காதலிநல் எழில் மழை கண் நம் காதலி
மெல் இறை பணை தோள் விளங்கும் மாண் கவினேமெல் இறை பணை தோள் விளங்கும் மாண் கவினே
  
#292 குறிஞ்சி கபிலர்#292 குறிஞ்சி கபிலர்
கூறாய் செய்வது தோழி வேறு உணர்ந்துகூறாய் செய்வது தோழி வேறு உணர்ந்து
அன்னையும் பொருள் உகுத்து அலமரும் மென் முறிஅன்னையும் பொருள் உகுத்து அலமரும் மென் முறி
சிறு குளகு அருந்து தாய் முலை பெறாஅசிறு குளகு அருந்து தாய் முலை பெறாஅ
மறி கொலைப்படுத்தல் வேண்டி வெறி புரிமறி கொலைப்படுத்தல் வேண்டி வெறி புரி
ஏதில் வேலன் கோதை துயல்வரஏதில் வேலன் கோதை துயல்வர
தூங்கும் ஆயின் அதூஉம் நாணுவல்தூங்கும் ஆயின் அதூஉம் நாணுவல்
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல் புலம் படர்ந்துஇலங்கு வளை நெகிழ்ந்த செல்லல் புலம் படர்ந்து
இரவின் மேயல் மரூஉம் யானைஇரவின் மேயல் மரூஉம் யானை
கால் வல் இயக்கம் ஒற்றி நடுநாள்கால் வல் இயக்கம் ஒற்றி நடுநாள்
வரை இடை கழுதின் வன் கை கானவன்வரை இடை கழுதின் வன் கை கானவன்
கடு விசை கவணின் எறிந்த சிறு கல்கடு விசை கவணின் எறிந்த சிறு கல்
உடு உறு கணையின் போகி சாரல்உடு உறு கணையின் போகி சாரல்
வேங்கை விரி இணர் சிதறி தேன் சிதையூஉவேங்கை விரி இணர் சிதறி தேன் சிதையூஉ
பலவின் பழத்துள் தங்கும்பலவின் பழத்துள் தங்கும்
மலை கெழு நாடன் மணவா_காலேமலை கெழு நாடன் மணவா_காலே
  
#293 பாலை காவன்முல்லை பூதனார்#293 பாலை காவன்முல்லை பூதனார்
இலை ஒழித்து உலறிய புன் தலை உலவைஇலை ஒழித்து உலறிய புன் தலை உலவை
வலை வலந்து அனைய ஆக பல உடன்வலை வலந்து அனைய ஆக பல உடன்
சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின்சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின்
துகில் ஆய் செய்கை பா விரிந்து அன்னதுகில் ஆய் செய்கை பா விரிந்து அன்ன
வெயில் அவிர்பு நுடங்கும் வெவ்வெம் களரிவெயில் அவிர்பு நுடங்கும் வெவ்வெம் களரி
குயில் கண் அன்ன குரூஉ காய் முற்றிகுயில் கண் அன்ன குரூஉ காய் முற்றி
மணி காசு அன்ன மால் நிற இரும் கனிமணி காசு அன்ன மால் நிற இரும் கனி
உகாஅ மென் சினை உதிர்வன கழியும்உகாஅ மென் சினை உதிர்வன கழியும்
வேனில் வெம் சுரம் தமியர் தாமேவேனில் வெம் சுரம் தமியர் தாமே
செல்ப என்ப தோழி யாமேசெல்ப என்ப தோழி யாமே
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்தபண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த
நெஞ்சு அமர் குழவி போல நொந்து நொந்துநெஞ்சு அமர் குழவி போல நொந்து நொந்து
இன்னா மொழிதும் என்பஇன்னா மொழிதும் என்ப
என் மயங்கினர்-கொல் நம் காதலோரேஎன் மயங்கினர்-கொல் நம் காதலோரே
  
#294 முல்லை கழார்க்கீரன் எயிற்றியார்#294 முல்லை கழார்க்கீரன் எயிற்றியார்
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கிமங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி
துள்ளு பெயல் கழிந்த பின்றை புகை உறதுள்ளு பெயல் கழிந்த பின்றை புகை உற
புள்ளி நுண் துவலை பூ அகம் நிறையபுள்ளி நுண் துவலை பூ அகம் நிறைய
காதலர் பிரிந்த கையறு மகளிர்காதலர் பிரிந்த கையறு மகளிர்
நீர் வார் கண்ணின் கருவிளை மலரநீர் வார் கண்ணின் கருவிளை மலர
துய் தலை பூவின் புதல் இவர் ஈங்கைதுய் தலை பூவின் புதல் இவர் ஈங்கை
நெய் தோய்த்து அன்ன நீர் நனை அம் தளிர்நெய் தோய்த்து அன்ன நீர் நனை அம் தளிர்
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வரஇரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர
அவரை பைம் பூ பயில அகல் வயல்அவரை பைம் பூ பயில அகல் வயல்
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்சகதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச
சிதர் சினை தூங்கும் அற்சிர அரைநாள்சிதர் சினை தூங்கும் அற்சிர அரைநாள்
காய் சின வேந்தன் பாசறை நீடிகாய் சின வேந்தன் பாசறை நீடி
நம் நோய் அறியா அறன் இலாளர்நம் நோய் அறியா அறன் இலாளர்
இ நிலை களைய வருகுவர்-கொல் எனஇ நிலை களைய வருகுவர்-கொல் என
ஆனாது எறிதரும் வாடையொடுஆனாது எறிதரும் வாடையொடு
நோனேன் தோழி என் தனிமையானேநோனேன் தோழி என் தனிமையானே
  
#295 பாலை மாமூலனார்#295 பாலை மாமூலனார்
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்பநிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப
குன்று கோடு அகைய கடும் கதிர் தெறுதலின்குன்று கோடு அகைய கடும் கதிர் தெறுதலின்
என்றூழ் நீடிய வேய் படு நனம் தலைஎன்றூழ் நீடிய வேய் படு நனம் தலை
நிலவு நிற மருப்பின் பெரும் கை சேர்த்திநிலவு நிற மருப்பின் பெரும் கை சேர்த்தி
வேங்கை வென்ற வெருவரு பணை தோள்வேங்கை வென்ற வெருவரு பணை தோள்
ஓங்கல் யானை உயங்கி மதம் தேம்பிஓங்கல் யானை உயங்கி மதம் தேம்பி
பல் மர ஒரு சிறை பிடியொடு வதியும்பல் மர ஒரு சிறை பிடியொடு வதியும்
கல் உடை அதர கானம் நீந்திகல் உடை அதர கானம் நீந்தி
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர்கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர்
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ முரம்பு இடித்துஉயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ முரம்பு இடித்து
அகல் இடம் குழித்த அகல் வாய் கூவல்அகல் இடம் குழித்த அகல் வாய் கூவல்
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும்ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும்
புடையல் அம் கழல் கால் புல்லி குன்றத்துபுடையல் அம் கழல் கால் புல்லி குன்றத்து
நடை அரும் கானம் விலங்கி நோன் சிலைநடை அரும் கானம் விலங்கி நோன் சிலை
தொடை அமை பகழி துவன்று நிலை வடுகர்தொடை அமை பகழி துவன்று நிலை வடுகர்
பிழி ஆர் மகிழர் கலி சிறந்து ஆர்க்கும்பிழி ஆர் மகிழர் கலி சிறந்து ஆர்க்கும்
மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும்மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும்
பழி தீர் மாண் நலம் தருகுவர் மாதோபழி தீர் மாண் நலம் தருகுவர் மாதோ
மாரி பித்திகத்து ஈர் இதழ் புரையும்மாரி பித்திகத்து ஈர் இதழ் புரையும்
அம் கலுழ் கொண்ட செம் கடை மழை கண்அம் கலுழ் கொண்ட செம் கடை மழை கண்
மணம் கமழ் ஐம்பால் மடந்தை நின்மணம் கமழ் ஐம்பால் மடந்தை நின்
அணங்கு நிலைபெற்ற தட மென் தோளேஅணங்கு நிலைபெற்ற தட மென் தோளே
  
#296 மருதம் மதுரை பேராலவாயார்#296 மருதம் மதுரை பேராலவாயார்
கோதை இணர குறும் கால் காஞ்சிகோதை இணர குறும் கால் காஞ்சி
போது அவிழ் நறும் தாது அணிந்த கூந்தல்போது அவிழ் நறும் தாது அணிந்த கூந்தல்
அரி மதர் மழை கண் மாஅயோளொடுஅரி மதர் மழை கண் மாஅயோளொடு
நெருநையும் கமழ் பொழில் துஞ்சி இன்றும்நெருநையும் கமழ் பொழில் துஞ்சி இன்றும்
பெரு நீர் வையை அவளொடு ஆடிபெரு நீர் வையை அவளொடு ஆடி
புலரா மார்பினை வந்து நின்று எம்_வயின்புலரா மார்பினை வந்து நின்று எம்_வயின்
கரத்தல் கூடுமோ மற்றே பரப்பில்கரத்தல் கூடுமோ மற்றே பரப்பில்
பன் மீன் கொள்பவர் முகந்த இப்பிபன் மீன் கொள்பவர் முகந்த இப்பி
நார் அரி நறவின் மகிழ் நொடை கூட்டும்நார் அரி நறவின் மகிழ் நொடை கூட்டும்
பேர் இசை கொற்கை பொருநன் வென் வேல்பேர் இசை கொற்கை பொருநன் வென் வேல்
கடும் பகட்டு யானை நெடும் தேர் செழியன்கடும் பகட்டு யானை நெடும் தேர் செழியன்
மலை புரை நெடு நகர் கூடல் நீடியமலை புரை நெடு நகர் கூடல் நீடிய
மலிதரு கம்பலை போலமலிதரு கம்பலை போல
அலர் ஆகின்று அது பலர் வாய் பட்டேஅலர் ஆகின்று அது பலர் வாய் பட்டே
  
#297 பாலை மதுரை மருதன் இளநாகனார்#297 பாலை மதுரை மருதன் இளநாகனார்
பானாள் கங்குலும் பெரும் புன் மாலையும்பானாள் கங்குலும் பெரும் புன் மாலையும்
ஆனா நோயொடு அழி படர் கலங்கிஆனா நோயொடு அழி படர் கலங்கி
நம்_வயின் இனையும் இடும்பை கைம்மிகநம்_வயின் இனையும் இடும்பை கைம்மிக
என்னை ஆகுமோ நெஞ்சே நம்_வயின்என்னை ஆகுமோ நெஞ்சே நம்_வயின்
இரும் கவின் இல்லா பெரும் புன் தாடிஇரும் கவின் இல்லா பெரும் புன் தாடி
கடுங்கண் மறவர் பகழி மாய்த்து எனகடுங்கண் மறவர் பகழி மாய்த்து என
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்
பெயர் பயம் படர தோன்று குயில் எழுத்துபெயர் பயம் படர தோன்று குயில் எழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லாது அசைவுடன்இயைபுடன் நோக்கல் செல்லாது அசைவுடன்
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும்ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும்
சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின்சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின்
நீர் முள் வேலி புலவு நாறு முன்றில்நீர் முள் வேலி புலவு நாறு முன்றில்
எழுதி அன்ன கொடி படு வெருகின்எழுதி அன்ன கொடி படு வெருகின்
பூளை அன்ன பொங்கு மயிர் பிள்ளைபூளை அன்ன பொங்கு மயிர் பிள்ளை
மதி சூழ் மீனின் தாய் வழிப்படூஉம்மதி சூழ் மீனின் தாய் வழிப்படூஉம்
சிறுகுடி மறவர் சே கோள் தண்ணுமைக்குசிறுகுடி மறவர் சே கோள் தண்ணுமைக்கு
எருவை சேவல் இரும் சிறை பெயர்க்கும்எருவை சேவல் இரும் சிறை பெயர்க்கும்
வெரு வரு கானம் நம்மொடுவெரு வரு கானம் நம்மொடு
வருவல் என்றோள் மகிழ் மட நோக்கேவருவல் என்றோள் மகிழ் மட நோக்கே
  
#298 குறிஞ்சி மதுரை பண்ட வாணிகன் இளந்தேவனார்#298 குறிஞ்சி மதுரை பண்ட வாணிகன் இளந்தேவனார்
பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறுபயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு
வயம் தொழில் தரீஇயர் வலன் ஏர் விளங்கிவயம் தொழில் தரீஇயர் வலன் ஏர் விளங்கி
மல்கு கடல் தோன்றி ஆங்கு மல்கு படமல்கு கடல் தோன்றி ஆங்கு மல்கு பட
மணி மருள் மாலை மலர்ந்த வேங்கைமணி மருள் மாலை மலர்ந்த வேங்கை
ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெரும் சினைஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெரும் சினை
தண் துளி அசை வளி தைவரும் நாடதண் துளி அசை வளி தைவரும் நாட
கொன்று சினம் தணியாது வென்று முரண் சாம்பாதுகொன்று சினம் தணியாது வென்று முரண் சாம்பாது
இரும் பிடி தொழுதியின் இனம் தலைமயங்காதுஇரும் பிடி தொழுதியின் இனம் தலைமயங்காது
பெரும் பெயல் கடாஅம் செருக்கி வள மலைபெரும் பெயல் கடாஅம் செருக்கி வள மலை
இரும் களிறு இயல்வரும் பெரும் காட்டு இயவின்இரும் களிறு இயல்வரும் பெரும் காட்டு இயவின்
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்திஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி
தாழ் பூ கோதை ஊது வண்டு இரீஇதாழ் பூ கோதை ஊது வண்டு இரீஇ
மென் பிணி அவிழ்ந்த அரைநாள் இரவு இவண்மென் பிணி அவிழ்ந்த அரைநாள் இரவு இவண்
நீ வந்ததனினும் இனிது ஆகின்றேநீ வந்ததனினும் இனிது ஆகின்றே
தூவல் கள்ளின் துனை தேர் எந்தைதூவல் கள்ளின் துனை தேர் எந்தை
கடி உடை வியல் நகர் ஓம்பினள் உறையும்கடி உடை வியல் நகர் ஓம்பினள் உறையும்
யாய் அறிவுறுதல் அஞ்சி பானாள்யாய் அறிவுறுதல் அஞ்சி பானாள்
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன்காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன்
யான் நின் கொடுமை கூற நினைபு ஆங்குயான் நின் கொடுமை கூற நினைபு ஆங்கு
இனையல் வாழி தோழி நம் துறந்தவர்இனையல் வாழி தோழி நம் துறந்தவர்
நீடலர் ஆகி வருவர் வல்லெனநீடலர் ஆகி வருவர் வல்லென
கங்குல் உயவு துணை ஆகியகங்குல் உயவு துணை ஆகிய
துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவேதுஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே
  
#299 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்#299 பாலை எயினந்தை மகனார் இளங்கீரனார்
எல்லையும் இரவும் வினை_வயின் பிரிந்தஎல்லையும் இரவும் வினை_வயின் பிரிந்த
முன்னம் முன் உறுபு அடைய உள்ளியமுன்னம் முன் உறுபு அடைய உள்ளிய
பதி மறந்து உறைதல் வல்லுநம் ஆயினும்பதி மறந்து உறைதல் வல்லுநம் ஆயினும்
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றேஅது மறந்து உறைதல் அரிது ஆகின்றே
கடு வளி எடுத்த கால் கழி தேக்கு இலைகடு வளி எடுத்த கால் கழி தேக்கு இலை
நெடு விளி பருந்தின் வெறி எழுந்து ஆங்குநெடு விளி பருந்தின் வெறி எழுந்து ஆங்கு
விசும்பு கண் புதைய பாஅய் பல உடன்விசும்பு கண் புதைய பாஅய் பல உடன்
அகல் இடம் செல்லுநர் அறிவு கெட தாஅய்அகல் இடம் செல்லுநர் அறிவு கெட தாஅய்
கவலை கரக்கும் காடு அகல் அத்தம்கவலை கரக்கும் காடு அகல் அத்தம்
செய்பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்து எனசெய்பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்து என
வைகு நிலை மதியம் போல பையெனவைகு நிலை மதியம் போல பையென
புலம்பு கொள் அவலமொடு புது கவின் இழந்தபுலம்பு கொள் அவலமொடு புது கவின் இழந்த
நலம் கெழு திரு முகம் இறைஞ்சி நிலம் கிளையாநலம் கெழு திரு முகம் இறைஞ்சி நிலம் கிளையா
நீரொடு பொருத ஈர் இதழ் மழை கண்நீரொடு பொருத ஈர் இதழ் மழை கண்
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்பஇகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப
கால் நிலை செல்லாது கழி படர் கலங்கிகால் நிலை செல்லாது கழி படர் கலங்கி
நா நடுக்கு_உற்ற நவிலா கிளவியொடுநா நடுக்கு_உற்ற நவிலா கிளவியொடு
அறல் மருள் கூந்தலின் மறையினள் திறல் மாண்டுஅறல் மருள் கூந்தலின் மறையினள் திறல் மாண்டு
திருந்துக மாதோ நும் செலவு என வெய்து_உயிராதிருந்துக மாதோ நும் செலவு என வெய்து_உயிரா
பருவரல் எவ்வமொடு அழிந்தபருவரல் எவ்வமொடு அழிந்த
பெரு விதுப்பு உறுவி பேது உறு நிலையேபெரு விதுப்பு உறுவி பேது உறு நிலையே
  
#300 நெய்தல் உலோச்சனார்#300 நெய்தல் உலோச்சனார்
நாள் வலை முகந்த கோள் வல் பரதவர்நாள் வலை முகந்த கோள் வல் பரதவர்
நுணங்கு மணல் ஆங்கண் உணங்க பெய்ம்-மார்நுணங்கு மணல் ஆங்கண் உணங்க பெய்ம்-மார்
பறி கொள் கொள்ளையர் மறுக உக்கபறி கொள் கொள்ளையர் மறுக உக்க
மீன் ஆர் குருகின் கானல் அம் பெரும் துறைமீன் ஆர் குருகின் கானல் அம் பெரும் துறை
எல்லை தண் பொழில் சென்று என செலீஇயர்எல்லை தண் பொழில் சென்று என செலீஇயர்
தேர் பூட்டு அயர ஏஎய் வார் கோல்தேர் பூட்டு அயர ஏஎய் வார் கோல்
செறி தொடி திருத்தி பாறு மயிர் நீவிசெறி தொடி திருத்தி பாறு மயிர் நீவி
செல் இனி மடந்தை நின் தோழியொடு மனை எனசெல் இனி மடந்தை நின் தோழியொடு மனை என
சொல்லிய அளவை தான் பெரிது கலுழ்ந்துசொல்லிய அளவை தான் பெரிது கலுழ்ந்து
தீம் ஆயினள் இவள் ஆயின் தாங்காதுதீம் ஆயினள் இவள் ஆயின் தாங்காது
நொதுமலர் போல பிரியின் கதுமெனநொதுமலர் போல பிரியின் கதுமென
பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல் அதனால்பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல் அதனால்
சேணின் வருநர் போல பேணாசேணின் வருநர் போல பேணா
இரும் கலி யாணர் எம் சிறுகுடி தோன்றின்இரும் கலி யாணர் எம் சிறுகுடி தோன்றின்
வல் எதிர் கொண்டு மெல்லிதின் வினைஇவல் எதிர் கொண்டு மெல்லிதின் வினைஇ
துறையும் மான்றன்று பொழுதே சுறவும்துறையும் மான்றன்று பொழுதே சுறவும்
ஓதம் மல்கலின் மாறு ஆயினவேஓதம் மல்கலின் மாறு ஆயினவே
எல்லின்று தோன்றல் செல்லாதீம் எனஎல்லின்று தோன்றல் செல்லாதீம் என
எமர் குறை கூற தங்கி ஏமுறஎமர் குறை கூற தங்கி ஏமுற
இளையரும் புரவியும் இன்புற நீயும்இளையரும் புரவியும் இன்புற நீயும்
இல் உறை நல் விருந்து அயர்தல்இல் உறை நல் விருந்து அயர்தல்
ஒல்லுதும் பெரும நீ நல்குதல் பெறினேஒல்லுதும் பெரும நீ நல்குதல் பெறினே
  

Related posts