பு – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் புக்கில் புக்கீமோ புகர் புகர்முகம் புகர்ப்பு புகர்படு புகர்வை புகரி புகல் புகல்வரு(தல்) புகல்வி புகல்வு புகவு புகழ்மை புகழது புகற்சி புகா புகார் புங்கவம் புட்டகம் புட்டில் புடை புடைப்பு புடைபெயர் புடையல் புண்ணியம் புணர் புணர்ச்சி புணர்த்து புணர்ப்பு புணர்வி புணர்வு புணரி புணை புணைவன் புத்தி புத்து புத்தேள் புத்தேளிர் புதல் புதவம் புதவு புதா புதுவ புதுவது புதுவர் புதுவிர் புதுவை புதுவோர் புதை புந்தி புய் புயல் புயலேறு புர புரந்தரன் புரவலன் புரவலை புரவி புரவு புரி புரிசை புரிநூல் புரிவு புரீஇ புருவை புரை புரைஇ புரைபடல் புரைமை புரைய புரையர் புரையுநர் புரையோர் புரைவது புல் புல்லல் புல்லாள் புல்லாளர் புல்லி புல்லிகை புல்லியார் புல்லீயாய் புல்லு புல்லென்…

Read More

பீ – முதல் சொற்கள்

கீழே உள்ளசொல்லின்மேல்சொடுக்கவும் பீடர்பீடுபீர்பீரம்பீரைபீலிபீள் பீடர் (பெ) பெருமையுடையவர், Persons of eminence சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில்ஓடா பீடர் உள்_வழி இறுத்து – பதி 45/13,14 சோறு வேறு ஊன் வேறு என்று பிரிக்கமுடியாதபடி ஊன் குழையச் சமைத்த உணவினைபகைவருக்குப் புறங்கொடுத்து ஓடாத பெருமையையுடைவர்களுக்கு அவர்கள் இருக்குமிடங்களில் அளித்து, மேல் பீடு (பெ) பெருமை, greatness, honour பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லதுஆடவர் குறுகா அரும் கடி வரைப்பின் – நெடு 106,107 பெருமை பொருந்தின தலைமையினையுடைய மன்னனைத் தவிர(மற்ற)ஆண்கள் கிட்டே(யும்)வராத கடும் காவலையுடைய மனைக்கட்டுக்களின் மேல் பீர் (பெ) பீர்க்கங்கொடி, sponge-gourd தோளே தொடி நெகிழ்ந்தனவே நுதலேபீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே – நற் 197/1,2 தோள்கள் தம் தோள்வளைகள் நெகிழ்ந்துபோகுபடி ஆயின; நெற்றியும்பற்றியேறும் பீர்க்கங்கொடியின் மலரைப் போன்று பசலை…

Read More

பி – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் பிசிர் பிட்டன் பிட்டை பிடகை பிடர் பிடவம் பிடவு பிடவூர் பிடி பிண்டம் பிண்டன் பிண்டி பிண பிணக்கு பிணங்கு பிணர் பிணவல் பிணவு பிணன் பிணா பிணி பிணிமுகம் பிணை பிணையல் பித்திகம் பித்திகை பித்தை பிதிர் பிதிர்வு பிதிர்வை பிரசம் பிரண்டை பிரப்பு பிரம்பு பிரமம் பிரிபு பிரியல் பிரியலம் பிரியலர் பிரியலன் பிருங்கலாதன் பிலிற்று பிழா பிழி பிழை பிழைப்பு பிளவை பிளிறு பிற்படு பிற்றை பிறக்கிடு பிறக்கு பிறங்கடை பிறங்கல் பிறங்கு பிறழ் பிறள் பிறன் பிறிது பின்பனி பின்றை பின்னிலை பின்னு பிசிர் 1. (வி) துளியாகச் சிதறு, sprinkle, drizzle, சிம்பு சிம்பாக உடைந்துபோ, break with frayed ends – 2. (பெ) 1. நீர்த்துளி, drop of water,…

Read More

பா – முதல் சொற்கள்

கீழே உள்ளசொல்லின்மேல்சொடுக்கவும் பாபாஅய்பாஅர்பாஅல்பாக்கம்பாகம்பாகர்பாகல்பாகன்பாகுபாகுடிபாங்கர்பாங்குபாசடகுபாசடும்புபாசடைபாசம்பாசரும்புபாசவர்பாசவல்பாசறைபாசிபாசிலைபாசிழைபாசினம்பாசுவல்பாட்டம்பாட்டிபாடலிபாடித்தைபாடினிபாடுபாடுகம்பாடுகோபாடுதும்பாடுநர்பாடுவல்பாடுவிபாண்பாண்டிபாண்டில்பாண்டியம்பாணர்பாணிபாத்தரு(தல்)பாத்திபாதிரிபாந்தள்பாப்புபாய்பாய்க்குநர்பாயம்பாயல்பார்பார்நடைபார்ப்பனன்பார்ப்பார்பார்ப்பான்பார்ப்புபார்வல்பார்வைபாரம்பாராட்டுபாரிபால்பால்நிறவண்ணன்பாலைபாவல்பாவுபாவைபாவைவிளக்குபாழ்பாழ்படுபாழிபாளைபாற்படுபாற்றுபாறுபாறுபடுபானம்பானாள் பா (பெ) 1. பரப்பு, expanse, பரவுதல், spreading out2. நெசவுப்பா, பாவு நூல், warp 1 பருவ வானத்து பா மழை கடுப்ப – பெரும் 190 மாரிக்காலத்து விசும்பிடத்தே பரவிய முகிலை ஒப்ப பா அமை இதணம் ஏறி பாசினம்வணர் குரல் சிறுதினை கடிய – நற் 373/7,8 பரப்பு அமைந்த பரண் மீது ஏறி, பச்சைக் கிளிகளின் கூட்டத்தைவளைந்த கதிர்களைக் கொண்ட சிறுதினையில் படியாதவாறு ஓட்டுவதற்கு படு மணி இரட்டும் பா அடி பணை தாள்நெடு நல் யானையும் தேரும் மாவும் – புறம் 72/3,4 ஒலிக்கும் மணி இரு மருங்கும் ஒன்றோடொன்று மாறி இசைக்கும் பரந்த அடியினையும் பெரிய காலினையுமுடையஉயர்ந்த நல்ல யானையினையும்தேரையும் குதிரையையும் 2 துகில் ஆய் செய்கை பா விரிந்து அன்ன – அகம்…

Read More

ப – முதல் சொற்கள்

கீழே உள்ளசொல்லின்மேல்சொடுக்கவும் பஃறிபஃறுளிபஃறேர்பக்குபகடுபகர்பகர்நர்பகர்பவர்பகர்வர்பகர்வுபகல்பகல்கெழுசெல்வன்பகலோன்பகழிபகற்குறிபகன்றைபகார்பகுபகுத்தூண்பகைபங்கம்பங்குபங்குனிபச்சிலைபச்சிறாபச்சூன்பச்சைபசபசப்புபசலைபசிப்பிணிமருத்துவன்பசுபசும்பசும்கண்கடவுள்பசும்பாம்புபசும்பிடிபசுமபொன்பசுமஞ்சள்பசைபஞ்சவர்பஞ்சவன்பஞ்சாய்பஞ்சிபஞ்சுரம்பட்டம்பட்டிபட்டினம்படப்புபடப்பைபடம்படர்படர்தரு(தல்)படல்படலம்படலைபடாகைபடாம்படாமைபடார்படிபடிக்கால்படிமகன்படிமம்படிமைபடியோர்படிவம்படிவுபடிறுபடின்படீஇபடீஇயபடீஇயர்படுபடுகர்படுநர்படுமலைபடூஉம்படைபடைஞர்படைப்புபண்பண்டம்பண்டரங்கம்பண்டாரம்பண்டுபண்டைபண்ணன்பண்ணியம்பண்ணுபண்ணுநபண்ணைபணவைபணிபணிபுபணியம்பணிலம்பணீஇயர்பணைபணையம்பத்தர்பத்தல்பதடிபதணம்பதப்பர்பதம்பதலைபதவுபதன்பதாகைபதிபதிபழகுபதிவதம்பதிற்றுபதின்மர்பதுக்குபதுக்கைபதுமம்பதைபதைப்புபதைபதைப்புபந்தர்பம்புபம்பைபயபயந்தோள்பயப்புபயம்பயம்புபயலைபயறுபயிர்பயிர்ப்புபயில்பயில்வுறுபயிற்றுபயின்பயினிபரபரங்குன்றம்பரடுபரணன்பரத்தமைபரத்தரு(தல்)பரத்தன்பரத்தைபரத்தைமைபரதர்பரதவர்பரப்புபரம்பரல்பரவல்பரவுபரவைபராஅம்பராஅய்பராரைபராவுபரிபரிமாபரிகாரம்பரிசம்பரிசில்பரிசிலர்பரிசுபரிதிபரிப்புபரியரைபரியல்பரியூஉபரிவுபரிவேட்புபரீஇபருதிபருதிஅம்செல்வன்பருந்துபருமம்பருவரல்பருவரு(தல்)பருவூர்பரூஉபரேர்பரைஇபல்பல்கதிர்ச்செல்வன்பல்கால்பறவைபல்குபல்சாலைமுதுகுடுமிபல்லவம்பல்லவர்பல்லான்குன்றுபல்லியம்பலகைபலம்பலவுபலாசம்பலிபவ்வம்பவத்திரிபவர்பவழம்பவளம்பழங்கண்பழம்பழம்படு(தல்)பழமொழிபழன்பழனம்பழிச்சுபழுபழுதுபழுதுளிபழுநுபழுப்புபழுனுபழூஉபழையர்பழையன்பழையன்மாறன்பழையோள்பள்ளிபள்ளிகொள்(ளல்)பள்ளிபுகு(தல்)பளிங்கம்பளிங்குபளிதம்பறந்தலைபறம்புபறழ்பறிபறிமுறைபறைபறையன்பன்மைபன்னல்பன்னுபனம்பனிபனிச்சைபனிப்புபனிற்றுபனுவல்பனைக்கொடியோன்பனைமீன்பனையம் பஃறி (பெ) படகு, boat வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றிநெல்லொடு வந்த வல் வாய் பஃறிபணை நிலை புரவியின் அணை முதல் பிணிக்கும்கழி சூழ் படப்பை – பட் 29-32 வெள்ளை(வெளேர் என்ற) உப்பின் விலையைச் சொல்லி(விற்று, அதற்கு மாற்றாக வாங்கிய)நெல்லைக் கொண்டுவந்த, கெட்டியான விளிம்புகளையுடைய படகுகளைகொட்டில் பந்தியில் நிறுத்தப்படும் குதிரைகளை(க் கட்டிவைப்பதை)ப் போன்று — கட்டுத்தறிகளில் கட்டிவைக்கும்உப்பங்கழி சூழ்ந்த ஊர்ப்புறங்களையும் மேல் பஃறுளி (பெ) குமரியாற்றின் தெற்கேயிருந்து கடலால் கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் ஒரு யாறு.An ancient river south of the river Kumari, said to have been swallowed by sea;இதனை, பல் + துளி எனப் பிரிப்பர். எம் கோ வாழிய குடுமி தம் கோசெம் நீர் பசும்_பொன் வயிரியர்க்கு ஈத்தமுந்நீர் விழவின் நெடியோன்நன் நீர் பஃறுளி…

Read More

நௌ – முதல் சொற்கள்

நௌவி (பெ) ஒரு மான் வகை, a kind of deer பெரும் கவின் பெற்ற சிறு தலை நௌவி மட கண் பிணையொடு மறுகுவன உகள – மது 275,276 பெரும் அழகைப் பெற்ற சிறிய தலையையுடைய நௌவிமான் மடப்பத்தையுடைய கண்ணையுடைய பிணையோடே சுழல்வனவாய் துள்ள,

Read More

நோ – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் நோ நோக்கம் நோக்கல் நோக்கு நோதல் நோல் நோவல் நோவு நோற்றோர் நோன் நோன்மை நோன்றல் நோனார் நோ (வி) 1. துன்புறு, be grieved 2. வருந்து, be anguished 3. நொந்துபோ, வேதனைப்படு, feel pain, pain struck 1. நோ இனி வாழிய நெஞ்சே ———————— ————– ——— வலை மான் மழை கண் குறு_மகள் சில் மொழி துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே – நற் 190 துன்புற்று நலிந்துபோவாய்! வாழ்க! நெஞ்சமே ———————- —————- ———— வலைப்பட்ட மானைப்போன்ற, குளிர்ச்சியான கண்களையுடைய சிறுமகளின் சில சொற்களே பேசும் பவளம் போன்ற வாயினில் தோன்றும் சிரிப்பினால் மகிழ்ந்துபோன நீ! – 2. நோ_தக்கன்றே காமம் யாவதும் நன்று என உணரார் மாட்டும் சென்றே நிற்கும்…

Read More

நொ – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் நொ நொச்சி நொசி நொசிப்பு நொசிவு நொடி நொடிவிடுவு நொடு நொடை நொடைமை நொண்டு நொதுமல் நொதுமலர் நொதுமலாட்டி நொதுமலாளர் நொதுமலாளன் நொந்தீவார் நொய் நொய்து நொய்யார் நொவ்வல் நொவ்விதின் நொவ்வு நொள்ளை நொ (பெ) நொய்ம்மை, மென்மை, softness, tenderness தாஅல் அம் சிறை நொ பறை வாவல் – குறு 172/1 வலிமையான அழகிய சிறகுகளையும், மென்மையான பறத்தலையும் கொண்ட வௌவால் மேல் நொச்சி (பெ) ஒரு சிறு மரம், a multi-leaved chaste tree 1. இது இன்றைக்கும் காட்டுநிலங்களின் வேலியோரம் வளர்ந்திருக்கும். சங்ககாலத்தில் இது வீடுகளில் வளர்க்கப்பட்டது. மனை நொச்சி நிழல் ஆங்கண் – பொரு 185 மனை மா நொச்சி மீமிசை மா சினை – நற் 246/3 மனை இள நொச்சி…

Read More

நை – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் நை நைவரு(தல்) நைவளம் நை (வி) 1. அழி, ruin, destroy 2. வருந்து, be distressed 3. (துணி) இற்றுப்போ, இழை இழையாகப்பிரி, (cloth) be worn out 4. சுட்டுப்பொசுக்கு, சுட்டு வதக்கு, roast and make dwindle 1. நனம் தலை பேரூர் எரியும் நைக்க – புறம் 57/7 அகன்ற இடம் அமைந்த பெரிய ஊரினைத் தீ எரிப்பதானாலும் எரித்து அழிக்கட்டும் 2. நொந்து நகுவன போல் நந்தின கொம்பு நைந்து உள்ளி உகுவது போலும் என் நெஞ்சு – கலி 33/16,17 இதுகாறும் நொந்திருந்த மரக்கிளைகள் இப்போது நம்மைப்பார்த்துச் சிரிப்பது போல் மலர்களால் நிறைந்துள்ளன, வருந்தி அதை நினைந்து உடைந்து சிதறுவது போல் ஆனது என் நெஞ்சம் 3. நைந்து கரை பறைந்த…

Read More

நே – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் நே நேடு நேமி நேமிஅம்செல்வன் நேமியான் நேர் நேர்கோல் நேர்தல் நேர்நிர நேர்நிறுத்து நேர்படு நேரார் நேரி நே (பெ) ஈரம், கருணை, mercy, gracev நேமி உய்த்த நேஎ நெஞ்சின் – புறம் 3/4 சக்கரத்தைச் செலுத்திய ஈரமுடைய நெஞ்சினையும் மேல் நேடு (வி) தேடு, seek, look out for வையை மடுத்தால் கடல் என தெய்ய நெறி மணல் நேடினர் செல்ல சொல் ஏற்று – பரி 20/42,43 வையை கடலில் சென்று புகுந்தாற்போல அலையலையாய்க் கிடந்த அந்த மணற்பரப்பில் தேடியவராகச் செல்ல மேல் நேமி (பெ) 1. தேர் உருளை, wheel of a chariot 2. திருமால் கையிலுள்ள சக்கராயுதம், the discuss in the hands of Lord Vishnu 3.…

Read More