சூ – முதல் சொற்கள், பாண்டிக்கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


சூட்ட (1)

தாள் நெடும் போது அவை சூட்ட அற்றோ அ தடம் சுனையே – பாண்டிக்கோவை:8 89/4

மேல்

சூட்டிய (1)

சென்றான் கரும் கயல் சூட்டிய சென்னி செம்பொன் வரை போல் – பாண்டிக்கோவை:3 35/2

மேல்

சூடா (2)

அடி நாள்_மலர் இணை சூடா மடந்தையர் போல் அயர்ந்தே – பாண்டிக்கோவை:5 73/4
தாள் இணையாம் மலர் சூடா அரசரை சங்கமங்கை – பாண்டிக்கோவை:13 151/1

மேல்

சூடாள் (1)

நீடிய வார் குழல் நீலமும் சூடாள் நினைந்து நின்றாள் – பாண்டிக்கோவை:12 129/3

மேல்

சூடி (2)

பொரும் கண்ணி சூடி வந்தார் பாட பூலந்தை பொன் முடி மேல் – பாண்டிக்கோவை:5 78/1
பொரும் கண்ணி சூடி வந்தார் பட பூலந்தை பொன் முடி மேல் – பாண்டிக்கோவை:14 179/1

மேல்

சூடிய (1)

தண் பூ மலர் தும்பை சூடிய தார் மன்னன் நேரி என்னும் – பாண்டிக்கோவை:7 83/2

மேல்

சூலம் (1)

சூலம் துடைக்கும் நும் ஊர் மணி மாட துகில் கொடியே தலைவன் – பாண்டிக்கோவை:2 16/4

மேல்

சூழ் (18)

தோழி என் ஆருயிர் என்பது காட்டும் செறி பொழில் சூழ்
கோழியும் வானவன் வஞ்சியும் கொண்டவன் வண்டு அறை தார் – பாண்டிக்கோவை:2 17/2,3
வண்டு உறை வார் பொழில் சூழ் நறையாற்று மன் ஓட வை வேல் – பாண்டிக்கோவை:3 25/1
தோய்கின்ற முத்தக்குடை மன்னன் கொல்லி அம் சூழ் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:3 30/2
மண்ணகம் காலால் அளந்தவன் மாறன் மலர் பொழில் சூழ்
கண் அகன் காவிரிநாடு அனையீர் இ கமழ் நறவ – பாண்டிக்கோவை:4 52/1,2
துன்னும் கொடி மிசை ஏந்திய கோன் கொல்லி சூழ் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:4 57/2
உய்ய நெஞ்சு எவ்வகை ஒன்றையும் காண்பன் ஒலி கடல் சூழ்
வையகம் காவலன் மாறன் குமரியின்-வாய் இரை தேர் – பாண்டிக்கோவை:5 76/2,3
மீனவன் கோல பொழில் சூழ் பொதியில் எம் வெற்பிடத்தே – பாண்டிக்கோவை:10 94/4
உலம் மன்னு தோள் அண்ணல் ஊரக்கொளாய்-கொல் ஒலி திரை சூழ்
நில மன்னன் நேரியன் மாறன் நெடுங்களத்து அட்ட திங்கள் – பாண்டிக்கோவை:10 96/2,3
மன்னை மறைத்த எம் கோன் வையம் சூழ் பௌவ நீர் புலவு-தன்னை – பாண்டிக்கோவை:12 119/2
துளை ஆர் கரும் கை களிறு உந்தினான் தொண்டி சூழ் துறை-வாய் – பாண்டிக்கோவை:12 124/2
கோன் அவன் ஆரம் புனைந்தவன் சூழ் பொழில் கொல்லியின்-வாய் – பாண்டிக்கோவை:12 134/2
துணி நிற வேல் கொண்ட கோன் கொல்லி சாரலின் சூழ் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:15 185/2
விண்டார் பட செற்ற கோன் வையை சூழ் வியல் நாட்டகம் போல் – பாண்டிக்கோவை:16 204/2
பொன் பிதிர்ந்தால் அன்ன மின்மினி சூழ் புற்றின் முற்றிய சோற்று – பாண்டிக்கோவை:17 246/3
உரவும் கடல் சூழ் உலகு உடை வேந்தன் உசிதன் ஒன்னார் – பாண்டிக்கோவை:17 253/1
தொழித்து ஆர் சிறை வண்டு அறை குழலாய் கங்கை சூழ் சடை மேல் – பாண்டிக்கோவை:18 305/1
தண் துறை சூழ் வயல் ஊரன் பெரிதும் தகவிலனே – பாண்டிக்கோவை:18 314/4
குலம் முற்றும் வாட வை வேல் கொண்ட மாறன் குரை கடல் சூழ்
நிலம் முற்றும் செங்கோலவன் தமிழ்நாடு அன்ன நேர்_இழையே – பாண்டிக்கோவை:18 332/3,4

மேல்

சூழ்ந்த (1)

மா விரி தானை எம் கோன் கொல்லி சூழ்ந்த வரையகமே – பாண்டிக்கோவை:14 165/4

மேல்

சூழ்ந்து (1)

காவி அம் தண் துறை சூழ்ந்து கடையல் கறுத்தவர் மேல் – பாண்டிக்கோவை:14 163/1

மேல்

சூழல் (1)

இடு வில் புருவத்தவள் நின்ற சூழல் இது உதுவாம் – பாண்டிக்கோவை:17 219/3

மேல்

சூழி (1)

சூழி களிற்றின் துனைக திண் தேர் துயர் தோன்றின்று காண் – பாண்டிக்கோவை:18 279/2

மேல்

சூளிகை (1)

வடி கண்ணி வாட வள மணி மாளிகை சூளிகை மேல் – பாண்டிக்கோவை:18 282/3

மேல்