அ – முதல் சொற்கள், பாண்டிக்கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆக்கி 2
ஆக்கிய 3
ஆக 4
ஆகத்து 1
ஆகம் 2
ஆகி 3
ஆகுதல் 1
ஆங்கு 4
ஆங்கும் 1
ஆட்டிய 1
ஆடக 1
ஆடல் 1
ஆடலின் 2
ஆடலும் 2
ஆடவர்கள் 2
ஆடாள் 1
ஆடி 3
ஆடிக்-கொல் 1
ஆடிடமே 2
ஆடிய 5
ஆடு 7
ஆடுதும் 1
ஆடுதுமே 1
ஆடும் 4
ஆடுவன் 2
ஆம் 4
ஆம்-கொல் 1
ஆம்பல் 1
ஆமாறு 1
ஆமான் 1
ஆய் 4
ஆய்_இழைக்கே 1
ஆய்_இழையே 2
ஆய்கின்ற 1
ஆய 2
ஆயத்தவருக்கு 2
ஆயத்தவரை 1
ஆயத்திடை 3
ஆயத்து 1
ஆயவன் 1
ஆயிரம் 1
ஆயின 1
ஆயினது 1
ஆயினும் 4
ஆயும் 2
ஆர் 127
ஆர்க்கின்ற 1
ஆர்க்கும் 1
ஆர்த்தது 1
ஆர்த்தன 2
ஆர்ப்ப 3
ஆர்வித்து 1
ஆர 1
ஆரணங்கினை 1
ஆரணங்கே 1
ஆரத்து 1
ஆரம் 1
ஆரமிழ்து 1
ஆரும் 1
ஆருயிர் 1
ஆருயிரே 3
ஆலித்து 1
ஆவண 1
ஆவது 2
ஆவதை 1
ஆவி 2
ஆவியும் 1
ஆழ 1
ஆழம் 1
ஆழி 2
ஆள் 2
ஆள்வித்த 1
ஆளே 1
ஆளையும் 1
ஆற்றலினார் 1
ஆற்றியதே 1
ஆற்றுக்குடி 11
ஆற்றுக்குடியில் 2
ஆற்றுக்குடியுள் 1
ஆற்றும்-கொல் 1
ஆற்றேன் 2
ஆறலைக்கும் 1
ஆறு 2

ஆக்கி (2)

பல்லவம் ஆக்கி தன் பாவை வளர்க்கின்ற பைம் குரவே – பாண்டிக்கோவை:17 214/4
ஓதம் கடைந்து அமரர்க்கு அமுது ஆக்கி உண கொடுத்து – பாண்டிக்கோவை:17 256/1

மேல்

ஆக்கிய (3)

சிறியாள் இவள்-தன்னை இப்படி ஆக்கிய தீங்கினுக்கே – பாண்டிக்கோவை:14 154/4
ஆக்கிய வேந்தர் அமர் நாடு அடைய தன் அம் சுடர் வாள் – பாண்டிக்கோவை:18 264/3
ஆக்கிய செல்வது காதலித்தார் நமர் ஆர் அமருள் – பாண்டிக்கோவை:18 265/2

மேல்

ஆக (4)

மணி நிறம் பொன் நிறம் ஆக என் ஆவி வருந்துவதே – பாண்டிக்கோவை:1 11/4
ஆர் அணங்கு ஆயினும் ஆக இ செவ்வேள் அறிவிலனே – பாண்டிக்கோவை:14 156/4
மன் அணங்கு ஆயினும் ஆக இ செவ்வேள் மதியிலனே – பாண்டிக்கோவை:14 157/4
சென்றால் அது பிரிது ஆக இவ் ஊரவர் சிந்திப்பரே – பாண்டிக்கோவை:17 232/4

மேல்

ஆகத்து (1)

வள முலை வால் முறுவல் தையல் ஆகத்து வந்து அரும்பும் – பாண்டிக்கோவை:14 171/3

மேல்

ஆகம் (2)

புன வேய் அனைய மென் தோளிதன் ஆகம் புணர்ந்தது எல்லாம் – பாண்டிக்கோவை:2 18/3
மை ஏர் தடம் கண் மடந்தை மெல் ஆகம் புணர்ந்து எல்லாம் – பாண்டிக்கோவை:2 20/3

மேல்

ஆகி (3)

வட்கிலன் ஆகி எவ்வாறு மொழிவன் இ மாற்றங்களே – பாண்டிக்கோவை:12 130/4
வார் அணி பூம் கழல் அண்ணல் என் ஆகி வலிக்கின்றதே – பாண்டிக்கோவை:16 191/4
சென்றார் வரவிற்கு தூது ஆகி வந்தது தென் புலிப்பை – பாண்டிக்கோவை:18 286/2

மேல்

ஆகுதல் (1)

குலத்திற்கும் தக்கது அன்றால் இன்னை ஆகுதல் கோல்_வளையே – பாண்டிக்கோவை:18 337/4

மேல்

ஆங்கு (4)

பொதியிலின் ஆங்கு உனை நீங்கிய போது ஒரு பூம் சுனை-வாய் – பாண்டிக்கோவை:8 85/3
நீடு நினைந்து சென்றான் நென்னல் ஆங்கு ஒர் நெடுந்தகையே – பாண்டிக்கோவை:11 110/4
நின்று ஆங்கு எதிர்ந்தார் குருதியுள் ஆழ நெடுங்களத்து – பாண்டிக்கோவை:17 207/1
நிரந்து ஆங்கு எதிர்ந்தார் அவிய நெல்வேலி தன் நீள் சிலை-வாய் – பாண்டிக்கோவை:18 315/1

மேல்

ஆங்கும் (1)

ஆங்கும் வரும் அன்னதால் இன்ன நாள் அவள் ஆர் அருளே – பாண்டிக்கோவை:10 100/4

மேல்

ஆட்டிய (1)

எங்கையை தீம் புனல் ஆட்டிய ஈரம் புலர்த்தி வந்தும் – பாண்டிக்கோவை:18 302/3

மேல்

ஆடக (1)

ஆடக மாடம் கடந்து அறியாத என் ஆரணங்கே – பாண்டிக்கோவை:17 210/4

மேல்

ஆடல் (1)

ஆடல் நெடும் கொடி அரிகேசரி அம் தண் பொன்னி – பாண்டிக்கோவை:18 343/3

மேல்

ஆடலின் (2)

பந்து ஆடலின் இடை நொந்து-கொல் பைம்_குழல் வெண் மணல் மேல் – பாண்டிக்கோவை:6 79/3
வந்து ஆடலின் அடி நொந்து-கொல் வாள் நுதல் வாடியதே – பாண்டிக்கோவை:6 79/4

மேல்

ஆடலும் (2)

மணி நிற மாமயில் ஆடலும் காண்டும் வல்லத்து வென்ற – பாண்டிக்கோவை:11 112/2
நிரை வளர் மா மயில் ஆடலும் காண்டும் நிகர் மலைந்தார் – பாண்டிக்கோவை:11 113/2

மேல்

ஆடவர்கள் (2)

அடல் ஏறு அயில் மன்னன் தெவ் முனை போல் மெலிந்து ஆடவர்கள்
கடல் ஏறிய கழி காமம் பெருகின் கரும் பனையின் – பாண்டிக்கோவை:10 92/2,3
அரு நெடும் காமம் பெருகுவதாய் விடின் ஆடவர்கள்
கரு நெடும் பெண்ணை செம் கேழ் மடல் ஊர கருதுவரே – பாண்டிக்கோவை:10 93/3,4

மேல்

ஆடாள் (1)

ஆடாள் புனலும் மேல் ஊசலும் ஈது அவள் ஆர் அருளே – பாண்டிக்கோவை:10 101/4

மேல்

ஆடி (3)

வீங்கிய தண் புனல் ஆடி விளையாட்டு அயர் பொழுதில் – பாண்டிக்கோவை:13 152/2
சேணும் அகலாது உடன் என்னொடு ஆடி திரிந்துவந்த – பாண்டிக்கோவை:16 200/3
விண் இவர் குன்றத்து அருவி சென்று ஆடி ஒர் வேங்கையின் கீழ் – பாண்டிக்கோவை:17 261/3

மேல்

ஆடிக்-கொல் (1)

திருந்திய ஊசல் சென்று ஆடிக்-கொல் சேவூர் செரு அடர்த்த – பாண்டிக்கோவை:6 80/2

மேல்

ஆடிடமே (2)

அருள் போல் குளிர்ந்து அன்னமும் துன்னும் நீர்த்து எங்கள் ஆடிடமே – பாண்டிக்கோவை:14 162/4
ஆவியும் போல இனிதாய் உளது எங்கள் ஆடிடமே – பாண்டிக்கோவை:14 163/4

மேல்

ஆடிய (5)

விரை ஆடிய கண்ணி வேந்த நீ வாடுதி விண்டு எதிர்ந்த – பாண்டிக்கோவை:5 77/2
விரை ஆடிய கண்ணி வேந்தன் விசாரிதன் கொல்லி விண் தோய் – பாண்டிக்கோவை:7 81/1
வரை ஆடிய புனம் காவலும் மானின் வழி வரவும் – பாண்டிக்கோவை:7 81/2
நிரை ஆடிய குழலாட்கும் இவற்கும் நினைப்பின் இல்லை – பாண்டிக்கோவை:7 81/3
தண் தாரவன் கொல்லி தாழ் சுனை ஆடிய தான் அகன்றாள் – பாண்டிக்கோவை:8 88/2

மேல்

ஆடு (7)

ஆடு இயல் யானை அரிகேசரி தெவ்வர் போல் அழுங்கி – பாண்டிக்கோவை:3 24/3
அடி வண்ணம் தாமரை ஆடு அரவு அல்குல் அரத்தம் அங்கை – பாண்டிக்கோவை:3 38/1
அன்னம்-தனை ஆரணங்கினை ஆடு அமை தோளியை ஏழ் – பாண்டிக்கோவை:3 40/3
கொந்து ஆடு இரும் பொழில்-வாய் பண்ணை ஆயத்து கோல மென் பூம் – பாண்டிக்கோவை:6 79/2
ஆடு இயல் மா நெடும் தேர் மன்னர் ஆற்றுக்குடி அழிய – பாண்டிக்கோவை:12 129/1
பை நின்ற ஆடு அரவு ஏர் அல்குலாள் செல்ல நாள் பணித்த – பாண்டிக்கோவை:14 180/1
ஆடு இயல் யானை அரிகேசரி தெவ்வர் போல் அகன்று – பாண்டிக்கோவை:18 313/3

மேல்

ஆடுதும் (1)

வரை வளர் மான் நீர் அருவியும் ஆடுதும் வாள்_நுதலே – பாண்டிக்கோவை:11 113/4

மேல்

ஆடுதுமே (1)

அணி நிற மால் வரை தூ நீர் ஆடுதுமே – பாண்டிக்கோவை:11 112/4

மேல்

ஆடும் (4)

ஆடும் அலவன் புகழ்ந்து என்னை நோக்கி அறிவு ஒழிய – பாண்டிக்கோவை:11 110/3
வளையார் வன முலையார் வண்டல் ஆடும் வரி நெடும் கண் – பாண்டிக்கோவை:12 124/3
கொந்து அணங்கு ஈர்ம் பிண்டி யாங்கள் நின்று ஆடும் குளிர் பொழிலே – பாண்டிக்கோவை:15 183/4
ஆடும் நிலைமையை அல்லை அவரோடு அம் பூம் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:18 346/3

மேல்

ஆடுவன் (2)

நீர் மன்னும் நீல நெடும் சுனை ஆடுவன் நேர்_இழையே – பாண்டிக்கோவை:8 84/4
உண்டாம் எனில் தையல் யானும் சென்று ஆடுவன் ஒண் சுனையே – பாண்டிக்கோவை:8 86/4

மேல்

ஆம் (4)

கந்து அணங்கு ஆம் மத யானை கழல் மன்னன் கார் பொதியில் – பாண்டிக்கோவை:15 183/2
என்னால் இது செய்க என்று என் சொல்லல் ஆம் இகல் பாழி வென்ற – பாண்டிக்கோவை:16 197/1
கோல் புரை தண்மைய ஆம் நும்மொடு ஏகின் இ கொம்பினுக்கே – பாண்டிக்கோவை:16 198/4
நிழல் அணி தண்மைய ஆம் நும்மொடு ஏகின் எம் நேர்_இழைக்கே – பாண்டிக்கோவை:16 199/4

மேல்

ஆம்-கொல் (1)

என்-பால் படரொடு என் ஆம்-கொல் இருஞ்சிறை ஏற்ற மன்னர் – பாண்டிக்கோவை:18 270/3

மேல்

ஆம்பல் (1)

நாறும் தகைமையவே அணி ஆம்பல் நறு மலரே – பாண்டிக்கோவை:1 4/4

மேல்

ஆமாறு (1)

ஆமாறு அறிபவர் யாரோ விதியை அம் தீம் தமிழ்நர் – பாண்டிக்கோவை:4 55/1

மேல்

ஆமான் (1)

ஆமான் அனைய மெல் நோக்கி அழுங்கல் அகன்று சென்ற – பாண்டிக்கோவை:18 330/1

மேல்

ஆய் (4)

நல் வளர் கூந்தற்கு யான் கொணர்ந்தேன் மலர் ஆய்_இழையே – பாண்டிக்கோவை:5 75/4
ஆய் போல் அருளும் கொடை அரிகேசரி அம் பொதியில் – பாண்டிக்கோவை:12 142/1
அருள் தான் அலராய் விளைகின்றதால் மற்று இவ் ஆய்_இழைக்கே – பாண்டிக்கோவை:15 190/4
அளியும் பெறாது நெஞ்சே நைய நின்ற இவ் ஆய்_இழையே – பாண்டிக்கோவை:18 321/4

மேல்

ஆய்_இழைக்கே (1)

அருள் தான் அலராய் விளைகின்றதால் மற்று இவ் ஆய்_இழைக்கே – பாண்டிக்கோவை:15 190/4

மேல்

ஆய்_இழையே (2)

நல் வளர் கூந்தற்கு யான் கொணர்ந்தேன் மலர் ஆய்_இழையே – பாண்டிக்கோவை:5 75/4
அளியும் பெறாது நெஞ்சே நைய நின்ற இவ் ஆய்_இழையே – பாண்டிக்கோவை:18 321/4

மேல்

ஆய்கின்ற (1)

ஆய்கின்ற தீம் தமிழ் வேந்தன் அரிகேசரி அணி வான் – பாண்டிக்கோவை:3 30/1

மேல்

ஆய (2)

காவி வென்று ஆய கண்ணாய் அல்லையேல் ஒன்று கட்டுரையாய் – பாண்டிக்கோவை:4 49/3
துனிதான் அகல மண் காத்து தொடு பொறி ஆய கெண்டை – பாண்டிக்கோவை:5 58/1

மேல்

ஆயத்தவருக்கு (2)

அம் மை தடம் கண் என் ஆயத்தவருக்கு அறி-மின்களே – பாண்டிக்கோவை:17 225/4
ஓடு அரி வாள் கண் என் ஆயத்தவருக்கு உரை-மின்களே – பாண்டிக்கோவை:17 226/4

மேல்

ஆயத்தவரை (1)

ஆயத்தவரை நினைந்து கணீர் கொண்டு அலமந்தவே – பாண்டிக்கோவை:16 201/4

மேல்

ஆயத்திடை (3)

ஆயத்திடை இதுவோ திரிகின்றது என் ஆருயிரே – பாண்டிக்கோவை:2 21/4
என் உயிர் ஆயத்திடை இதுவோ நின்று இயங்குவதே – பாண்டிக்கோவை:2 22/4
ஏய்கின்ற ஆயத்திடை ஓர் இளம்_கொடி கண்டேன் உள்ளம் – பாண்டிக்கோவை:3 30/3

மேல்

ஆயத்து (1)

கொந்து ஆடு இரும் பொழில்-வாய் பண்ணை ஆயத்து கோல மென் பூம் – பாண்டிக்கோவை:6 79/2

மேல்

ஆயவன் (1)

கூற்றம் அவர்க்கு ஆயவன் கொல்லி சாரல் கொங்கு உண்டு உழல்வாய் – பாண்டிக்கோவை:1 9/2

மேல்

ஆயிரம் (1)

அட்டான் அரிகேசரி ஐயம் ஆயிரம் யானை முன் நாள் – பாண்டிக்கோவை:18 276/2

மேல்

ஆயின (1)

ஆயின சீர் அரிகேசரிக்கு அன்று அளநாட்டு உடைந்து – பாண்டிக்கோவை:14 169/3

மேல்

ஆயினது (1)

இரவும் வரவு என்ன ஊனம் என்று ஆயினது இன் அருளே – பாண்டிக்கோவை:17 253/4

மேல்

ஆயினும் (4)

பொய்யே இனி மெய்மை ஆயினும் இல்லை புணர் திறமே – பாண்டிக்கோவை:2 20/4
ஆர் அணங்கு ஆயினும் ஆக இ செவ்வேள் அறிவிலனே – பாண்டிக்கோவை:14 156/4
மன் அணங்கு ஆயினும் ஆக இ செவ்வேள் மதியிலனே – பாண்டிக்கோவை:14 157/4
அழல் அணி வெம்மைய ஆயினும் கானம் அவன் குடையின் – பாண்டிக்கோவை:16 199/3

மேல்

ஆயும் (2)

ஆயும் தமிழ் அரிகேசரி கூடல் அகல் நகர்-வாய் – பாண்டிக்கோவை:16 194/3
ஆயும் தமிழ் மன்னன் செங்கோல் அரிகேசரி முனை போல் – பாண்டிக்கோவை:17 239/1

மேல்

ஆர் (127)

தூ வடி வேல் மன்னன் கன்னி துறை சுரும்பு ஆர் குவளை – பாண்டிக்கோவை:1 3/2
பொன் ஆர் புனை கழல் பூழியன் பூலந்தை பூ அழிய – பாண்டிக்கோவை:1 12/1
மின் ஆர் அயில் கொண்ட வேந்தன் விசாரிதன் வெண் திரை மேல் – பாண்டிக்கோவை:1 12/2
திணி நிற நீள் தோள் அரசு உக தென்ன நறையாற்று மின் ஆர்
துணி நிற வேல் கொண்ட கோன் தொண்டி அன்னாய் துயரல் எம் ஊர் – பாண்டிக்கோவை:2 14/1,2
கயில் அணி ஆர் கழல் காவலர் ஓட கடையல் வென்ற – பாண்டிக்கோவை:3 23/1
அளை ஆர் அரவின் குருளை அணங்க அறிவு அழிந்து – பாண்டிக்கோவை:3 27/1
துளை ஆர் நெடும் கை களிறு நடுங்கி துயர்வது போல் – பாண்டிக்கோவை:3 27/2
வளை ஆர் முனை எயிற்றார் மன்னன் மாறன் வண் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:3 27/3
அலை ஆர் கழல் மன்னர் ஆற்றுக்குடி அழல் ஏற செற்ற – பாண்டிக்கோவை:3 28/1
கொலை ஆர் அயில் படை கொற்றவன் கூடல் அன்னார் ஒருவர் – பாண்டிக்கோவை:3 28/2
வண்டு ஆர் குழலவளே இவள் மால் நீர் மணற்றிமங்கை – பாண்டிக்கோவை:3 42/2
மன் ஏர் அழிய மணற்றி வென்றான் கன்னி ஆர் துறை-வாய் – பாண்டிக்கோவை:3 46/3
கரும்பு ஆர் மொழி மட மாதரை கண்ணுற்று முன் அணைந்த – பாண்டிக்கோவை:4 56/3
சுரும்பு ஆர் இரும் பொழிலே இன்னும் யான் சென்று துன்னுவனே – பாண்டிக்கோவை:4 56/4
ஆர் மன்னு வேல் அரிகேசரி அம் தண் புகார் அனைய – பாண்டிக்கோவை:5 59/3
அறை ஆர் கழல் மன்னர் ஆற்றுக்குடி அமர் சாய்ந்து அழிய – பாண்டிக்கோவை:5 62/1
கறை ஆர் அயில் கொண்ட கோன் கன்னி கார் புனம் காக்கின்ற வான் – பாண்டிக்கோவை:5 62/2
பிறை ஆர் சிறு நுதல் பெண் ஆரமிழ்து அன்ன பெய் வளையீர் – பாண்டிக்கோவை:5 62/3
கன மாண் வன முலை கை ஆர் வரி வளை காரிகையீர் – பாண்டிக்கோவை:5 66/3
நெறிந்து ஆர் கமழ் குஞ்சியானோடு இவளிடை நின்றது எல்லாம் – பாண்டிக்கோவை:5 70/3
கொடி ஆர் நுணுகு இடை தான் புனை கோலம் என குலவும்படி – பாண்டிக்கோவை:5 73/1
வடிவு ஆர் இலங்கு அயில் மன்னரை வென்ற வழுதி செம்பொன் – பாண்டிக்கோவை:5 73/3
கந்து ஆர் அடு களி யானை கழல் நெடுமாறன் கன்னி – பாண்டிக்கோவை:6 79/1
வண் பூம் சிலம்பின் வரை புனம் நீங்கான் வரும் சுரும்பு ஆர்
ஒண் பூம் தழையும் தரும் அறியேன் இவன் உள்ளியதே – பாண்டிக்கோவை:7 83/3,4
வண்டு ஆர் குழலவள் வந்தால் இயங்கு வரை அணங்கே – பாண்டிக்கோவை:8 88/4
வாள் நெடும் கண்ணும் சிவப்ப செவ் வாயும் விளர்ப்ப வண்டு ஆர்
தாள் நெடும் போது அவை சூட்ட அற்றோ அ தடம் சுனையே – பாண்டிக்கோவை:8 89/3,4
கொலை ஆர் சிலை மன்னன் கோன் நெடுமாறன் தென் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:9 90/2
இலவு ஆர் துவர் வாய் மடந்தை நம் ஈர்ம் புனத்து இன்று கண்டேன் – பாண்டிக்கோவை:9 90/3
புலவு ஆர் குருதி அளைந்த வெம் கோட்டு ஒர் பொரு களிறே – பாண்டிக்கோவை:9 90/4
ஆங்கும் வரும் அன்னதால் இன்ன நாள் அவள் ஆர் அருளே – பாண்டிக்கோவை:10 100/4
காடு ஆர் கரு வரையும் கலி வானும் கடையல் அன்று – பாண்டிக்கோவை:10 101/1
ஏடு ஆர் மலர் குழலாள் எங்கு நிற்பினும் என்னை அன்றி – பாண்டிக்கோவை:10 101/3
ஆடாள் புனலும் மேல் ஊசலும் ஈது அவள் ஆர் அருளே – பாண்டிக்கோவை:10 101/4
கொடி ஆர் நெடு மதில் கோட்டாற்று அரண் கொண்ட கோன் பொதியில் – பாண்டிக்கோவை:11 103/1
கடி ஆர் புனத்து அயல் வைகலும் காண்பல் கருத்து உரையான் – பாண்டிக்கோவை:11 103/2
அடி ஆர் கழலன் அலங்கல் அம் கண்ணியன் மண் அளந்த – பாண்டிக்கோவை:11 103/3
அரும்பு ஆர் தழையும் கொண்டு யான் சொன்ன பொய்யை மெய் என்று அகலான் – பாண்டிக்கோவை:11 107/2
சுரும்பு ஆர் கரும் குழலாய் அறியேன் இனி சொல்லுவதே – பாண்டிக்கோவை:11 107/4
நீயே உரையாய் விரை ஆர் அலங்கல் நெடுந்தகையே – பாண்டிக்கோவை:12 121/4
புரைத்து ஆர் அமர்செய்து பூலந்தை பட்ட புல்லாத மன்னர் – பாண்டிக்கோவை:12 122/1
குரைத்து ஆர் குருதி புனல் கண்ட கொன் கொல்லி பாவை அன்ன – பாண்டிக்கோவை:12 122/2
நிரைத்து ஆர் கரு மென் குழலிக்கு நீயே நெடுந்துறைவா – பாண்டிக்கோவை:12 122/3
துளை ஆர் கரும் கை களிறு உந்தினான் தொண்டி சூழ் துறை-வாய் – பாண்டிக்கோவை:12 124/2
தேன் நக விண்ட வண்டு ஆர் கண்ணியாய் சிறிது உண்டு தெவ்வர் – பாண்டிக்கோவை:12 137/2
துடி ஆர் இடை வடி வேல் கண் மடந்தை தன் சொல் அறிந்தால் – பாண்டிக்கோவை:12 138/1
கடி ஆர் கமழ் கண்ணியாய் கொள்வல் யான் களத்தூரில் வென்ற – பாண்டிக்கோவை:12 138/2
வடி ஆர் இலங்கு இலை வேல் மன்னன் வான் ஏற அணிந்த வென்றி – பாண்டிக்கோவை:12 138/3
கறங்குவது என்று மொழியாய் கழி ஆர் கரும் கடலே – பாண்டிக்கோவை:13 143/4
கந்து ஆர் களிறு கடாய் செந்நிலத்தை கறுத்து எதிர்ந்து – பாண்டிக்கோவை:13 146/1
பந்து ஆர் விரலி தன் பாவைக்கு வேண்ட பைம் போது ஓருவர் – பாண்டிக்கோவை:13 146/3
வெவ் வினை ஆர் படை வேந்தர்கள் வெண்மாத்து இடைப்பட வென்று – பாண்டிக்கோவை:13 148/1
பொன் ஆர் புனல் எம்மை வாங்கும் பொழுது அங்கு ஒர் பூம் கணை வேள் – பாண்டிக்கோவை:13 153/3
அன்னான் ஒருவன் அணைந்து எமக்கு செய்த ஆர் அருளே – பாண்டிக்கோவை:13 153/4
வண்டு ஆர் இரும் பொழில் வல்லத்து தென்னற்கு மாறு எதிர்ந்த – பாண்டிக்கோவை:14 155/1
ஆர் அணங்கு ஆயினும் ஆக இ செவ்வேள் அறிவிலனே – பாண்டிக்கோவை:14 156/4
ஒளி ஆர் திரு நுதலாளை எளியள் என்று உன்னி வந்து – பாண்டிக்கோவை:14 160/1
களி ஆர் களிற்று கழல் நெடுமாறன் கடி முனை மேல் – பாண்டிக்கோவை:14 160/3
ஏர் ஆர் குழல் மடவாளை எளியள் என்று உன்னி வந்து – பாண்டிக்கோவை:14 161/1
கார் ஆர் களிற்று கழல் நெடுமாறன் கழல் பணிந்து – பாண்டிக்கோவை:14 161/3
தூவி அம்பு எய்தவன் தொண்டி வண்டு ஆர் புன்னை தூ மலர்கள் – பாண்டிக்கோவை:14 163/2
மருங்கு அழி நீர் மூழ்க கண்ட எம் கோன் தொண்டி கானல் வண்டு ஆர்
கரும் கழி மேய்ந்த செம் கால் வெள்ளை அன்னம் கதிரொடும் தம் – பாண்டிக்கோவை:14 168/2,3
திரை ஆர் குருதி புனல் மூழ்க செந்நிலத்து அன்று வென்ற – பாண்டிக்கோவை:14 174/1
உரை ஆர் பெரும் புகழ் செங்கோல் உசிதன் ஒண் பூம் பொதியில் – பாண்டிக்கோவை:14 174/2
வரை ஆர் தினை புனம் கால் கொய்ய நல் நாள் வரைந்து நின்ற – பாண்டிக்கோவை:14 174/3
விரை ஆர் மலர் இள வேங்காய் நினக்கு விடை இல்லையே – பாண்டிக்கோவை:14 174/4
வரை பால் அடைய செற்றான் வையை அன்னாள் திறத்து வண்டு ஆர்
விரை பால் நறும் கண்ணியாய் பொய்மை நீ சொல்லின் மெய்ம்மை என்பது – பாண்டிக்கோவை:14 182/2,3
மலர் ஆர் மணி முடி மான் தேர் வரோதயன் வஞ்சி அன்னாட்கு – பாண்டிக்கோவை:15 189/3
அலராய் விளைகின்றதால் அண்ணல் நீ செய்த ஆர் அருளே – பாண்டிக்கோவை:15 189/4
மின் ஆர் அயில் படை செங்கோல் விசாரிதன் வீங்கு ஒலி நீர் – பாண்டிக்கோவை:16 197/2
வண்டு ஆர் பொழிலும் மணி அறல் யாறும் மருங்கு அணைந்து – பாண்டிக்கோவை:16 204/3
அலை மன்னு பைம் கழல் செங்கோல் அரிகேசரி அளி ஆர்
இலை மன்னு மாலை முத்தக்குடையான் இகல் வேந்தரை போல் – பாண்டிக்கோவை:17 206/1,2
குன்று ஆர் சுடரோன் மறைந்தனன் கூர் வேல் விடலை தங்கி – பாண்டிக்கோவை:17 207/3
நெல் ஆர் கழனி நெடுங்களத்து அன்று நிகர் மலைந்த – பாண்டிக்கோவை:17 215/3
நிழல் ஆர் குடையொடு தண்ணீர் கரகம் நெறிப்பட கொண்டு – பாண்டிக்கோவை:17 216/1
அழல் ஆர் அரும் சுரத்தூடு வருகின்ற அந்தணிர்காள் – பாண்டிக்கோவை:17 216/2
குடை ஆர் நிழல் உறி சேர் கரகத்தொடு குன்றிடத்து – பாண்டிக்கோவை:17 217/1
கல் ஆர் திரள் தோள் விடலையை ஈன்ற கனம்_குழையே – பாண்டிக்கோவை:17 230/4
அன்பு எதிர்ந்தாலும் வருதல் பொல்லாது ஐய ஆர் அமருள் – பாண்டிக்கோவை:17 246/1
நஞ்சு ஆர் இலங்கு இலை வேல் கொண்ட தென்னவன் நாடு அனைய – பாண்டிக்கோவை:17 255/2
பஞ்சு ஆர் அகல் அல்குல்-பால் பகல் வந்தால் பழி பெரிதாம் – பாண்டிக்கோவை:17 255/3
மஞ்சு ஆர் சிலம்பா வரவு என்ன ஊனம் மயங்கு இருளே – பாண்டிக்கோவை:17 255/4
பொன் ஆர் கழல் நெடுமாறன் குமரி அம் பூம் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:17 260/2
மின் ஆர் மணி நெடும் தேர் கங்குல் வந்து ஒன்று மீண்டது உண்டே – பாண்டிக்கோவை:17 260/3
ஆக்கிய செல்வது காதலித்தார் நமர் ஆர் அமருள் – பாண்டிக்கோவை:18 265/2
வார் ஆர் முரசின் விரை சேர் மலர் முடி மன்னவற்கா – பாண்டிக்கோவை:18 266/1
வாம் மான் நெடும் தேர் வய மன்னர் வாள் முனை ஆர்க்கும் வண்டு ஆர்
தேமா நறும் கண்ணியாய் சென்று தோன்றும்-கொல் சேரலர்-தம் – பாண்டிக்கோவை:18 269/1,2
கடி ஆர் இரும் பொழில்-கண் அன்று வாட்டி இன்றும் கலவா – பாண்டிக்கோவை:18 272/1
வடி ஆர் அயில் நெடுமாறன் எம் கோன் கொல்லி வண்டு இமிர் பூம் – பாண்டிக்கோவை:18 272/3
கொடி ஆர் இடை மட மான் பிணை நோக்கி குழை முகமே – பாண்டிக்கோவை:18 272/4
பட்டு ஆர் அகல் அல்குல் பாவையும் காணும்-கொல் பாழி வெம் போர் – பாண்டிக்கோவை:18 276/1
கட்டு ஆர் கமழ் கண்ணி போல் மலர்கின்றன கார் பிடவே – பாண்டிக்கோவை:18 276/4
மடை ஆர் குவளை நெடும் கண் பனி மல்க வந்து வஞ்சி – பாண்டிக்கோவை:18 287/1
கல் ஆர் சுரம் செல்வதே நினைந்தார் நமர் காய்ந்து எதிர்ந்த – பாண்டிக்கோவை:18 288/2
வார் ஆர் சிறுபறை பூண்டு மணி காசு உடுத்து தந்தை – பாண்டிக்கோவை:18 300/1
அங்கையின் சீறடி தீண்டி செய்யீர் செய்யும் ஆர் அருளே – பாண்டிக்கோவை:18 302/4
வார்ந்து ஆர் கரு மென் குழல் மங்கை மா நிதிக்கு என்று அகன்ற – பாண்டிக்கோவை:18 304/1
தொழித்து ஆர் சிறை வண்டு அறை குழலாய் கங்கை சூழ் சடை மேல் – பாண்டிக்கோவை:18 305/1
தனி ஆர் தகை நலம் வாட்டும்-கொல் ஆற்றுக்குடி தனது – பாண்டிக்கோவை:18 308/1
கனி ஆர் களவின் அக முள் கதிர் முத்தம் கோப்பன போல் – பாண்டிக்கோவை:18 308/3
பனி ஆர் சிதர் துளி மேற்கொண்டு நிற்கும் பருவங்களே – பாண்டிக்கோவை:18 308/4
மஞ்சு ஆர் இரும் பொழில் வல்லத்து வாள் மன்னர் போர் அழித்த – பாண்டிக்கோவை:18 311/1
பஞ்சு ஆர் அகல் அல்குலாள் தன்மை சொல்லும் பணை முலை மேல் – பாண்டிக்கோவை:18 311/3
பொன் ஆர் புனல் அணி ஊரன் வந்து உன் இல் புறங்கடையான் – பாண்டிக்கோவை:18 312/1
மின் ஆர் அயில் மன்னன் தென் புனல் நாடு அன்ன மெல்_இயலே – பாண்டிக்கோவை:18 312/4
பரந்து ஆர் வரு புனல் ஊரன்-தன் பண்பின்மை எங்களையும் – பாண்டிக்கோவை:18 315/3
வரிய வண்டு ஆர் தொங்கல் மான் தேர் வரோதயன் வல்லத்து ஒன்னார் – பாண்டிக்கோவை:18 318/1
மை ஆர் தடம் கண் வரும் பனி சோர வருந்தி நின்று இ – பாண்டிக்கோவை:18 322/1
நெய் ஆர் குழலாள் இனைய நறையாற்று நின்று வென்ற – பாண்டிக்கோவை:18 322/2
கை ஆர் கொடும் சிலை செங்கோல் கலிமதன் காய் கலிக்கு – பாண்டிக்கோவை:18 322/3
கொல் ஆர் அயில் படை கோன் நெடுமாறன் குளந்தை வென்ற – பாண்டிக்கோவை:18 324/3
மை ஆர் தடம் கண் மடந்தை வருந்தற்க வாள் முனை மேல் – பாண்டிக்கோவை:18 328/1
நெய் ஆர் அயிலவர் காண பொழிந்த நெடுங்களத்து – பாண்டிக்கோவை:18 328/2
கை ஆர் சிலை மன்னன் கன்னி நல் நீர் கொடை கார் முகிலே – பாண்டிக்கோவை:18 328/4
கொடி ஆர் மதில் கோட்டாற்று அரசர் குழாம் சிதைத்த – பாண்டிக்கோவை:18 329/1
வடி ஆர் அயில் படை வானவன் மாறன் வண் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:18 329/2
துடி ஆர் இடையாய் வருந்தல் பிரிந்த துளங்கு ஒளி சேர் – பாண்டிக்கோவை:18 329/3
அடி ஆர் கழலார் அணுக வந்து ஆர்த்தது அகல் விசும்பே – பாண்டிக்கோவை:18 329/4
அறை ஆர் கழல் மன்னன் ஆற்றுக்குடி அழல் ஏற வென்று – பாண்டிக்கோவை:18 333/1
கறை ஆர் அடர் வேல் வலம்கொண்ட கோன் கடல் ஞாலம் அன்னாய் – பாண்டிக்கோவை:18 333/2
இறை ஆர் வரி வளை சேர வந்து ஆர்த்தன ஏர் முகிலே – பாண்டிக்கோவை:18 333/4
கூர் ஆர் அயில் கொண்டு நேரார் வளம் பல கொண்ட வென்றி – பாண்டிக்கோவை:18 336/1
வார் ஆர் கழல் மன்னன் தானே பணிப்பினும் வல்லத்து தன் – பாண்டிக்கோவை:18 336/3
தேன் இறவு ஆர் கண்ணி செம்பியன் மாறன் செழும் குமரி – பாண்டிக்கோவை:18 338/1
வண்டு ஆர் கொடி நின் நுடங்கு இடை போல வணங்குவன – பாண்டிக்கோவை:18 340/3
இடி ஆர் முகில் உரும் ஏந்திய கோன் இரணோதயன்-தன் – பாண்டிக்கோவை:18 348/1
வடி ஆர் அயில் அன்ன கண்ணி-தன் வாட்டம் உணர்ந்து வண் பூம் – பாண்டிக்கோவை:18 348/2
கடி ஆர் கரும் கழி மேய்கின்ற கானல் கலந்து அகன்ற – பாண்டிக்கோவை:18 348/3

மேல்

ஆர்க்கின்ற (1)

கோமான் கொடி மேல் இடி உரும் ஆர்க்கின்ற கூர்ம் புயலே – பாண்டிக்கோவை:18 330/4

மேல்

ஆர்க்கும் (1)

வாம் மான் நெடும் தேர் வய மன்னர் வாள் முனை ஆர்க்கும் வண்டு ஆர் – பாண்டிக்கோவை:18 269/1

மேல்

ஆர்த்தது (1)

அடி ஆர் கழலார் அணுக வந்து ஆர்த்தது அகல் விசும்பே – பாண்டிக்கோவை:18 329/4

மேல்

ஆர்த்தன (2)

கொடிக்கு அண்ணிதாம் வண்ணம் நண்ணி வந்து ஆர்த்தன கொண்டல்களே – பாண்டிக்கோவை:18 282/4
இறை ஆர் வரி வளை சேர வந்து ஆர்த்தன ஏர் முகிலே – பாண்டிக்கோவை:18 333/4

மேல்

ஆர்ப்ப (3)

கார் அணி வார் முரசு ஆர்ப்ப பிறரும் கருதி வந்தார் – பாண்டிக்கோவை:16 191/3
கார் மலி வார் முரசு ஆர்ப்ப பிறரும் கருதி வந்தார் – பாண்டிக்கோவை:16 193/3
முளி தரு வேல் நல் கண் கானவர் ஆர்ப்ப முகில் கணங்கள் – பாண்டிக்கோவை:18 344/1

மேல்

ஆர்வித்து (1)

பூழித்-தலை இரை ஆர்வித்து தான் நிற்கும் பூம் புறவே – பாண்டிக்கோவை:18 279/4

மேல்

ஆர (1)

முன்தான் முகிழ் முலை ஆர முயங்கி முறுவல் உண்டு – பாண்டிக்கோவை:18 286/1

மேல்

ஆரணங்கினை (1)

அன்னம்-தனை ஆரணங்கினை ஆடு அமை தோளியை ஏழ் – பாண்டிக்கோவை:3 40/3

மேல்

ஆரணங்கே (1)

ஆடக மாடம் கடந்து அறியாத என் ஆரணங்கே – பாண்டிக்கோவை:17 210/4

மேல்

ஆரத்து (1)

குழை வளர் ஆரத்து அருவி அம் சாரல் குறவர்களே – பாண்டிக்கோவை:12 133/4

மேல்

ஆரம் (1)

கோன் அவன் ஆரம் புனைந்தவன் சூழ் பொழில் கொல்லியின்-வாய் – பாண்டிக்கோவை:12 134/2

மேல்

ஆரமிழ்து (1)

பிறை ஆர் சிறு நுதல் பெண் ஆரமிழ்து அன்ன பெய் வளையீர் – பாண்டிக்கோவை:5 62/3

மேல்

ஆரும் (1)

ஆரும் அணி இளம் போந்தையும் வேம்பும் அலர்ந்து தண் தேன் – பாண்டிக்கோவை:18 285/1

மேல்

ஆருயிர் (1)

தோழி என் ஆருயிர் என்பது காட்டும் செறி பொழில் சூழ் – பாண்டிக்கோவை:2 17/2

மேல்

ஆருயிரே (3)

ஆயத்திடை இதுவோ திரிகின்றது என் ஆருயிரே – பாண்டிக்கோவை:2 21/4
அதிசயம் கண்டனையே அதுவே எனது ஆருயிரே – பாண்டிக்கோவை:4 51/4
அறிந்தேன் பல நினைந்து என்னை ஒன்றே இவர் ஆருயிரே – பாண்டிக்கோவை:5 70/4

மேல்

ஆலித்து (1)

பொன் தார் புரவிகள் ஆலித்து வந்து புகுந்தனவே – பாண்டிக்கோவை:18 284/4

மேல்

ஆவண (1)

ஆவண வீதி எல்லாம் நிழல் பாய நின்று அணவருமே – பாண்டிக்கோவை:2 13/4

மேல்

ஆவது (2)

தார் அணங்கு ஆவது அறிந்தும் வெறியின்-கண் தாழ்ந்தமையால் – பாண்டிக்கோவை:14 156/3
செயல் மன்னும் ஆவது சொல்லாய் சிலம்ப தென் பாழி வென்ற – பாண்டிக்கோவை:14 172/1

மேல்

ஆவதை (1)

மடமகள் ஆவதை இன்று அறிந்தேன் மதி வாள்_நுதலே – பாண்டிக்கோவை:5 74/4

மேல்

ஆவி (2)

மணி நிறம் பொன் நிறம் ஆக என் ஆவி வருந்துவதே – பாண்டிக்கோவை:1 11/4
ஆவி சென்றால் பின்னை யாரோ பெயர்ப்பர் அகலிடத்தே – பாண்டிக்கோவை:4 49/4

மேல்

ஆவியும் (1)

ஆவியும் போல இனிதாய் உளது எங்கள் ஆடிடமே – பாண்டிக்கோவை:14 163/4

மேல்

ஆழ (1)

நின்று ஆங்கு எதிர்ந்தார் குருதியுள் ஆழ நெடுங்களத்து – பாண்டிக்கோவை:17 207/1

மேல்

ஆழம் (1)

ஆழம் உடைய கருமத்திர் போல்திர் அணைந்து அகலீர் – பாண்டிக்கோவை:12 135/2

மேல்

ஆழி (2)

ஆழி கடல் வையம் காக்கின்ற கோன் அரிகேசரி தென் – பாண்டிக்கோவை:15 187/1
ஆழி திருமால் அதிசயற்கு ஆற்றுக்குடி உடைந்தார் – பாண்டிக்கோவை:18 279/1

மேல்

ஆள் (2)

ஆள் நெடும் தானையை ஆற்றுக்குடி வென்ற கோன் பொதியில் – பாண்டிக்கோவை:8 89/1
மன் ஆள் செல செற்ற வானவன் மாறன் வையை துறை-வாய் – பாண்டிக்கோவை:13 153/2

மேல்

ஆள்வித்த (1)

பொரு நில வேந்தரை பொன் உலகு ஆள்வித்த பூ முக வேல் – பாண்டிக்கோவை:2 19/2

மேல்

ஆளே (1)

ஆளே கனலும் கொல் யானை செங்கோல் அரிகேசரி-தன் – பாண்டிக்கோவை:18 303/3

மேல்

ஆளையும் (1)

ஆளையும் சீறும் களிற்று அரிகேசரி தெவ்வரை போல் – பாண்டிக்கோவை:17 220/1

மேல்

ஆற்றலினார் (1)

ஆற்றலினார் மணம்செய்வான் அமைந்தனர் அண்டர்களே – பாண்டிக்கோவை:14 178/4

மேல்

ஆற்றியதே (1)

அரிய மலர் நெடும் கண் கண்டு மால் அண்ணல் ஆற்றியதே – பாண்டிக்கோவை:3 45/4

மேல்

ஆற்றுக்குடி (11)

அணி நிற நீள் முடி வேந்தரை ஆற்றுக்குடி அழிய – பாண்டிக்கோவை:1 11/1
அலை ஆர் கழல் மன்னர் ஆற்றுக்குடி அழல் ஏற செற்ற – பாண்டிக்கோவை:3 28/1
தண் தேன் அறை நறும் தார் மன்னர் ஆற்றுக்குடி தளர – பாண்டிக்கோவை:3 31/1
அறை ஆர் கழல் மன்னர் ஆற்றுக்குடி அமர் சாய்ந்து அழிய – பாண்டிக்கோவை:5 62/1
ஆள் நெடும் தானையை ஆற்றுக்குடி வென்ற கோன் பொதியில் – பாண்டிக்கோவை:8 89/1
ஆடு இயல் மா நெடும் தேர் மன்னர் ஆற்றுக்குடி அழிய – பாண்டிக்கோவை:12 129/1
அன்பு உடை மாதர் கண்டு ஆற்றும்-கொல் ஆற்றுக்குடி அடங்கா – பாண்டிக்கோவை:18 271/1
ஆழி திருமால் அதிசயற்கு ஆற்றுக்குடி உடைந்தார் – பாண்டிக்கோவை:18 279/1
கடி கண்ணி வேந்தரை ஆற்றுக்குடி கன்னி வாகை கொண்டே – பாண்டிக்கோவை:18 282/1
தனி ஆர் தகை நலம் வாட்டும்-கொல் ஆற்றுக்குடி தனது – பாண்டிக்கோவை:18 308/1
அறை ஆர் கழல் மன்னன் ஆற்றுக்குடி அழல் ஏற வென்று – பாண்டிக்கோவை:18 333/1

மேல்

ஆற்றுக்குடியில் (2)

இரும் கழல் வானவன் ஆற்றுக்குடியில் கல் சாய்ந்து அழிய – பாண்டிக்கோவை:1 6/1
அரை அணங்கும் துகிலாள் அல்லள் ஆற்றுக்குடியில் வென்ற – பாண்டிக்கோவை:18 320/1

மேல்

ஆற்றுக்குடியுள் (1)

அளி மன்னு செங்கோல் அதிசயன் ஆற்றுக்குடியுள் வென்ற – பாண்டிக்கோவை:3 47/3

மேல்

ஆற்றும்-கொல் (1)

அன்பு உடை மாதர் கண்டு ஆற்றும்-கொல் ஆற்றுக்குடி அடங்கா – பாண்டிக்கோவை:18 271/1

மேல்

ஆற்றேன் (2)

நின்னின் பிரியேன் பிரியினும் ஆற்றேன் நெடும் பணை தோள் – பாண்டிக்கோவை:1 10/3
அன்னாய் பிரியேன் பிரியினும் ஆற்றேன் அழுங்கற்கவே – பாண்டிக்கோவை:1 12/4

மேல்

ஆறலைக்கும் (1)

கொன்று ஆறலைக்கும் சுரம் அன்பர் நீங்க என் கோல் வளைகள் – பாண்டிக்கோவை:17 232/3

மேல்

ஆறு (2)

ஓடிய ஆறு கண்டு ஒண் சுடர் வை வேல் உறை செறிந்த – பாண்டிக்கோவை:3 24/2
சொல் அவன் பின் சென்ற ஆறு என்ற போழ்து எனக்கு சொல்லுமே – பாண்டிக்கோவை:17 214/3

மேல்