ர – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

ரகசியம் (3)

பிரம ரகசியம் பேசி என் உளத்தே – திருமுறை6:81 4615/1047
பரம ரகசியம் பகர்ந்து எனது உளத்தே – திருமுறை6:81 4615/1049
சிவ ரகசியம் எலாம் தெரிவித்து எனக்கே – திருமுறை6:81 4615/1051

மேல்


ரசம் (2)

ஆதரவோடு இயல் மவுன சுவை மேன்மேல் கொண்டு ஆனந்த ரசம் ஒழுக்கி அன்பால் என்றும் – திருமுறை3:5 2114/3
ஊன் அந்தம் அற கொளும் போது இனிக்க ரசம் தருமோ உண கசந்து குமட்டி எதிரெடுத்திட நேர்ந்திடுமோ – திருமுறை6:11 3382/3

மேல்


ரசம்-தனிலே (2)

வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற நின்று ஓங்கிய செங்கரும்பு இரதம் கலந்து – திருமுறை6:137 5630/1
வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற உள் பிழிந்து எடுத்த கரும்பு இரதம் கலந்தே – திருமுறை6:142 5752/1

மேல்


ரசமே (1)

கந்தா என்று உரைப்பவர்-தம் கருத்துள் ஊறும் கனி ரசமே கரும்பே கற்கண்டே நல் சீர் – திருமுறை1:7 124/3

மேல்


ரஞ்சக (1)

பார தத்துவ பஞ்சக ரஞ்சக பாத சத்துவ சங்கஜ பங்கஜ பால நித்திய அம்பக நம்பக பாச புத்தக பண்டித கண்டித – திருமுறை6:114 5174/1

மேல்


ரஞ்சித (3)

அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா – திருமுறை6:113 5074/2
சித குஞ்சித பத ரஞ்சித சிவ சுந்தர சிவ மந்திர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர – திருமுறை6:114 5175/2
கொஞ்சு இதம் மேவும் ரஞ்சித பாதம் – திருமுறை6:116 5221/3

மேல்


ரத்தினமே (1)

ராமீசம் வாழ் சீவ ரத்தினமே பூ மீது – திருமுறை3:2 1962/400

மேல்


ரத்னமே (1)

சேமம் மிகு மா மறையின் ஓம் எனும் அருள்_பத திறன் அருளி மலயமுனிவன் சிந்தனையின் வந்தனை உவந்த மெய்ஞ்ஞான சிவ தேசிக சிகா ரத்னமே
தாமம் ஒளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 6/3,4

மேல்


ரவி (1)

மன் ஆகி மலை ஆகி கடலும் ஆகி மதி ஆகி ரவி ஆகி மற்றும் ஆகி – திருமுறை3:5 2082/2

மேல்