வ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வகுத்து 1
வகை 2
வகையின் 1
வசிந்து 1
வட்டம் 2
வட்டமொடு 1
வடந்தை 1
வடவர் 1
வடு 1
வண் 4
வண்டின் 1
வண்டு 2
வணக்கு 1
வணக்கு_உறுத்து 1
வணங்க 1
வணங்கி 1
வணங்கு 1
வதியும் 1
வதுவை 1
வந்தனென் 1
வந்து 2
வந்தோன் 1
வம்பு 1
வய 2
வய_மான் 1
வயல் 2
வயிர் 2
வயின் 7
வரம் 1
வரம்பு 1
வரவு 1
வரி 5
வரு 2
வருகுவர் 1
வருட 1
வரை 6
வரைப்பின் 2
வல் 1
வல்லோன் 1
வல 1
வலந்தன 1
வலம் 2
வலம்புரி 3
வலன் 2
வலி 2
வழாஅ 1
வழாஅது 1
வழித்த 1
வழிபட 1
வழுக்காது 1
வள் 1
வள்ளி 1
வள்ளியொடு 1
வளி 4
வளை 1
வளையொடு 1
வளைஇ 4
வளைஇய 1
வறிது 1
வறு 1
வன்கண் 1
வனப்பின் 1

வகுத்து (1)

பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து
ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின் – நெடு 78,79

மேல்


வகை (2)

நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை – திரு 86
மூன்று வகை குறித்த முத்தீ செல்வத்து – திரு 181

மேல்


வகையின் (1)

அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி – திரு 58

மேல்


வசிந்து (1)

வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள் – திரு 106

மேல்


வட்டம் (2)

வடவர் தந்த வான் கேழ் வட்டம்
தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப – நெடு 51,52
செம் கேழ் வட்டம் சுருக்கி கொடும் தறி – நெடு 58

மேல்


வட்டமொடு (1)

ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை – திரு 111

மேல்


வடந்தை (1)

வடந்தை தண் வளி எறி-தொறும் நுடங்கி – நெடு 173

மேல்


வடவர் (1)

வடவர் தந்த வான் கேழ் வட்டம் – நெடு 51

மேல்


வடு (1)

வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் – திரு 78

மேல்


வண் (4)

வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர் – திரு 31
வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள் – திரு 106
வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என – திரு 285
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க – நெடு 22

மேல்


வண்டின் (1)

அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும் – திரு 76

மேல்


வண்டு (2)

குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி – திரு 199
வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து – நெடு 33

மேல்


வணக்கு (1)

வாளை பகு வாய் கடுப்ப வணக்கு_உறுத்து – நெடு 143

மேல்


வணக்கு_உறுத்து (1)

வாளை பகு வாய் கடுப்ப வணக்கு_உறுத்து
செ விரல் கொளீஇய செம் கேழ் விளக்கத்து – நெடு 143,144

மேல்


வணங்க (1)

வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க
முழு_முதல் கமுகின் மணி உறழ் எருத்தின் – நெடு 22,23

மேல்


வணங்கி (1)

கைதொழூஉ பரவி கால் உற வணங்கி
நெடும் பெரும் சிமையத்து நீல பைம் சுனை – திரு 252,253

மேல்


வணங்கு (1)

வானோர் வணங்கு வில் தானை தலைவ – திரு 260

மேல்


வதியும் (1)

புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு – நெடு 166

மேல்


வதுவை (1)

வான் அர_மகளிர்க்கு வதுவை சூட்ட – திரு 117

மேல்


வந்தனென் (1)

நின் அடி உள்ளி வந்தனென் நின்னொடு – திரு 279

மேல்


வந்து (2)

அந்தர கொட்பினர் வந்து உடன் காண – திரு 174
வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்தி – திரு 288

மேல்


வந்தோன் (1)

வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என – திரு 285

மேல்


வம்பு (1)

வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின் – நெடு 150

மேல்


வய (2)

கோழி வய பெடை இரிய கேழலொடு – திரு 311
ஊட்டு_உறு பல் மயிர் விரைஇ வய_மான் – நெடு 128

மேல்


வய_மான் (1)

ஊட்டு_உறு பல் மயிர் விரைஇ வய_மான்
வேட்டம் பொறித்து வியன் கண் கானத்து – நெடு 128,129

மேல்


வயல் (2)

இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த – திரு 72
அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த – நெடு 21

மேல்


வயிர் (2)

வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல – திரு 120
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை – நெடு 99

மேல்


வயின் (7)

தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து – திரு 23
மாடம் மலி மறுகின் கூடல் குட வயின்
இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த – திரு 71,72
வல வயின் உயரிய பலர் புகழ் திணி தோள் – திரு 152
வாரண கொடியொடு வயின் பட நிறீஇ – திரு 219
இரு கோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர – நெடு 35
வில் கிடந்து அன்ன கொடிய பல் வயின்
வெள்ளி அன்ன விளங்கு சுதை உரீஇ – நெடு 109,110
புடை வீழ் அம் துகில் இட_வயின் தழீஇ – நெடு 181

மேல்


வரம் (1)

காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே ஒரு முகம் – திரு 94

மேல்


வரம்பு (1)

தாம் வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு – திரு 134

மேல்


வரவு (1)

அஞ்சல் ஓம்பு-மதி அறிவல் நின் வரவு என – திரு 291

மேல்


வரி (5)

வரி புனை பந்தொடு பாவை தூங்க – திரு 68
வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் – திரு 78
பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை – திரு 150
செம் வரி நாரையோடு எ வாயும் கவர – நெடு 17
இகல் மீக்கூறும் ஏந்து எழில் வரி நுதல் – நெடு 116

மேல்


வரு (2)

வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க – நெடு 22
கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ – நெடு 69

மேல்


வருகுவர் (1)

இன்னே வருகுவர் இன் துணையோர் என – நெடு 155

மேல்


வருட (1)

மெல் இயல் மகளிர் நல் அடி வருட
நரை விராவு_உற்ற நறு மென் கூந்தல் – நெடு 151,152

மேல்


வரை (6)

மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் – திரு 12
ஆல்_கெழு_கடவுள் புதல்வ மால் வரை
மலை_மகள் மகனே மாற்றோர் கூற்றே – திரு 256,257
விண் பொரு நெடு வரை குறிஞ்சி கிழவ – திரு 267
விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த – திரு 299
வரை கண்டு அன்ன தோன்றல வரை சேர்பு – நெடு 108
வரை கண்டு அன்ன தோன்றல வரை சேர்பு – நெடு 108

மேல்


வரைப்பின் (2)

ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின்
பரு இரும்பு பிணித்து செவ்வரக்கு உரீஇ – நெடு 79,80
ஆடவர் குறுகா அரும் கடி வரைப்பின்
வரை கண்டு அன்ன தோன்றல வரை சேர்பு – நெடு 107,108

மேல்


வல் (1)

கொடும் தொழில் வல் வில் கொலைஇய கானவர் – திரு 194

மேல்


வல்லோன் (1)

சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன்
கூர் உளி குயின்ற ஈர் இலை இடை இடுபு – நெடு 118,119

மேல்


வல (1)

வல வயின் உயரிய பலர் புகழ் திணி தோள் – திரு 152

மேல்


வலந்தன (1)

சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க – நெடு 59

மேல்


வலம் (2)

அவுணர் நல் வலம் அடங்க கவிழ் இணர் – திரு 59
ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை – திரு 111

மேல்


வலம்புரி (3)

தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து – திரு 23
வலம்புரி புரையும் வால் நரை முடியினர் – திரு 127
வலம்புரி வளையொடு கடிகை_நூல் யாத்து – நெடு 142

மேல்


வலன் (2)

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு – திரு 1
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ – நெடு 1

மேல்


வலி (2)

மத வலி நிலைஇய மா தாள் கொழு விடை – திரு 232
முடலை யாக்கை முழு வலி மாக்கள் – நெடு 32

மேல்


வழாஅ (1)

மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம் – திரு 95,96

மேல்


வழாஅது (1)

இரு_மூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர் சுட்டிய பல் வேறு தொல் குடி – திரு 177,178

மேல்


வழித்த (1)

நுண் சேறு வழித்த நோன் நிலை திரள் கால் – நெடு 157

மேல்


வழிபட (1)

வேண்டுநர் வேண்டி ஆங்கு எய்தினர் வழிபட
ஆண்டு_ஆண்டு உறைதலும் அறிந்த ஆறே – திரு 248,249

மேல்


வழுக்காது (1)

இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு – நெடு 74

மேல்


வள் (1)

வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி – திரு 8

மேல்


வள்ளி (1)

வெள்ளி வள்ளி வீங்கு இறை பணை தோள் – நெடு 36

மேல்


வள்ளியொடு (1)

மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே – திரு 102

மேல்


வளி (4)

வளி கிளர்ந்து அன்ன செலவினர் வளி இடை – திரு 170
வளி கிளர்ந்து அன்ன செலவினர் வளி இடை – திரு 170
வேனில் பள்ளி தென்_வளி தரூஉம் – நெடு 61
வடந்தை தண் வளி எறி-தொறும் நுடங்கி – நெடு 173

மேல்


வளை (1)

வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல – திரு 120

மேல்


வளையொடு (1)

வலம்புரி வளையொடு கடிகை_நூல் யாத்து – நெடு 142

மேல்


வளைஇ (4)

இணைப்பு_உறு பிணையல் வளைஇ துணை தக – திரு 30
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புது பெயல் பொழிந்து என – நெடு 1,2
ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின் – நெடு 79
உருவ பல் பூ ஒரு கொடி வளைஇ
கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல் – நெடு 113,114

மேல்


வளைஇய (1)

இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து – திரு 293

மேல்


வறிது (1)

வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின் – நெடு 140

மேல்


வறு (1)

ஊறா வறு முலை கொளீஇய கால் திருத்தி – நெடு 158

மேல்


வன்கண் (1)

வாள் தோள் கோத்த வன்கண் காளை – நெடு 182

மேல்


வனப்பின் (1)

கை புனைந்து இயற்றா கவின் பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை – திரு 17,18

மேல்