யா – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

யாக்கை (3)

இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை
அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி – திரு 57,58
குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் – திரு 313
முடலை யாக்கை முழு வலி மாக்கள் – நெடு 32

மேல்


யாக்கையர் (2)

என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன் பகல் – திரு 130
நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின் – திரு 143

மேல்


யாண்டு (1)

அறு_நான்கு இரட்டி இளமை நல் யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை – திரு 179,180

மேல்


யாத்த (3)

வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின் – நெடு 150
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு – நெடு 176
நூல் கால் யாத்த மாலை வெண்குடை – நெடு 184

மேல்


யாத்து (2)

செம் நூல் யாத்து வெண் பொரி சிதறி – திரு 231
வலம்புரி வளையொடு கடிகை_நூல் யாத்து
வாளை பகு வாய் கடுப்ப வணக்கு_உறுத்து – நெடு 142,143

மேல்


யாமத்தும் (1)

நள்ளென் யாமத்தும் பள்ளிகொள்ளான் – நெடு 186

மேல்


யாவதும் (2)

செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்கு – திரு 132,133
யாவதும் அறியா இயல்பினர் மேவர – திரு 136

மேல்


யாவரும் (1)

கல்லென் துவலை தூவலின் யாவரும்
தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார் – நெடு 64,65

மேல்


யாழ் (1)

நல் யாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின் – திரு 141

மேல்


யாறும் (1)

யாறும் குளனும் வேறு பல் வைப்பும் – திரு 224

மேல்


யான் (1)

யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது – திரு 277

மேல்


யானை (2)

தாழ் பெரும் தட கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும் – திரு 158,159
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை
நீள் திரள் தட கை நிலம் மிசை புரள – நெடு 169,170

மேல்