பெ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

பெடை (1)

கோழி வய பெடை இரிய கேழலொடு – திரு 311

மேல்


பெடையொடு (1)

இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது – நெடு 46

மேல்


பெய்த (1)

மடவரல் மகளிர் பிடகை பெய்த
செவ்வி அரும்பின் பைம் கால் பித்திகத்து – நெடு 39,40

மேல்


பெய்ம்-மார் (1)

பல் இரும் கூந்தல் சில் மலர் பெய்ம்-மார்
தண் நறும் தகர முளரி நெருப்பு அமைத்து – நெடு 54,55

மேல்


பெயர் (5)

அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக – திரு 269
பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள் – திரு 274
புலம் பெயர் புலம்பொடு கலங்கி கோடல் – நெடு 5
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து – நெடு 78
பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில் – நெடு 123

மேல்


பெயரா (1)

வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா
நிணம் தின் வாயள் துணங்கை தூங்க – திரு 55,56

மேல்


பெயரிய (3)

நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை – திரு 18
நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து – நெடு 82
கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல் – நெடு 114

மேல்


பெயல் (5)

தலை பெயல் தலைஇய தண் நறும் கானத்து – திரு 9
பொய்யா வானம் புது பெயல் பொழிந்து என – நெடு 2
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை – நெடு 19
அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த – நெடு 21
காதலர் பிரிந்தோர் புலம்ப பெயல் கனைந்து – நெடு 71

மேல்


பெரிது (2)

வாழிய பெரிது என்று ஏத்தி பலர் உடன் – திரு 39
விரை உறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து – திரு 188

மேல்


பெரியோர் (1)

பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள் – திரு 274

மேல்


பெரு (1)

பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு – திரு 50

மேல்


பெருந்தகை (1)

பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது – நெடு 106

மேல்


பெரும் (17)

பெரும் தண் சண்பகம் செரீஇ கரும் தகட்டு – திரு 27
பெரும் தண் கண்ணி மிலைந்த சென்னியன் – திரு 44
தாழ் பெரும் தட கை உயர்த்த யானை – திரு 158
நால் பெரும் தெய்வத்து நன் நகர் நிலைஇய – திரு 160
சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை – திரு 203
பெரும் தண் கணவீர நறும் தண் மாலை – திரு 236
நெடும் பெரும் சிமையத்து நீல பைம் சுனை – திரு 253
வேல் கெழு தட கை சால் பெரும் செல்வ – திரு 265
அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக – திரு 269
பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள் – திரு 274
இரும் பிடி குளிர்ப்ப வீசி பெரும் களிற்று – திரு 304
பெரும் கல் விடர் அளை செறிய கரும் கோட்டு – திரு 314
மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன் – நெடு 7
கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை – நெடு 24
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து – நெடு 78
பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில் – நெடு 123
களிறு களம் படுத்த பெரும் செய் ஆடவர் – நெடு 171

மேல்


பெரும (1)

வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என – திரு 285

மேல்


பெற (2)

சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி – திரு 283
கைவல் கம்மியன் கவின் பெற புனைந்த – நெடு 57

மேல்


பெறல் (2)

அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக – திரு 269
பெறல் அரும் பரிசில் நல்கு-மதி பல உடன் – திரு 295

மேல்


பெறீஇயர் (1)

ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர்
மீன் பூத்து அன்ன தோன்றலர் மீன் சேர்பு – திரு 168,169

மேல்


பெறு (4)

கை புனைந்து இயற்றா கவின் பெறு வனப்பின் – திரு 17
நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை – திரு 109
உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொள்-மார் – திரு 173
காடும் காவும் கவின் பெறு துருத்தியும் – திரு 223

மேல்


பெறுதி (1)

இன்னே பெறுதி நீ முன்னிய வினையே – திரு 66

மேல்