ந – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

நகர் (5)

நால் பெரும் தெய்வத்து நன் நகர் நிலைஇய – திரு 160
நளி மலை சிலம்பில் நன் நகர் வாழ்த்தி – திரு 238
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர்
ஆடு_களம் சிலம்ப பாடி பல உடன் – திரு 244,245
கடி உடை வியல் நகர் சிறு குறும் தொழுவர் – நெடு 49
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து – நெடு 90

மேல்


நகை (3)

நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை – திரு 86
மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே – திரு 102
பொன் உரை கடுக்கும் திதலையர் இன் நகை
பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் – திரு 145,146

மேல்


நசை (1)

நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப – திரு 65

மேல்


நசையுநர்க்கு (1)

நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேராள – திரு 270

மேல்


நடுங்க (1)

கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க
மா மேயல் மறப்ப மந்தி கூர – நெடு 8,9

மேல்


நடை (4)

படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை
கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின் – திரு 80,81
ஈர்_இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை
தாழ் பெரும் தட கை உயர்த்த யானை – திரு 157,158
மயில் கண்டு அன்ன மட நடை மகளிரொடு – திரு 205
மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ – திரு 310

மேல்


நயந்தனை (1)

செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன் – திரு 64

மேல்


நயந்து (1)

வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என – திரு 285

மேல்


நயன் (1)

நல் யாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின் – திரு 141

மேல்


நரம்பு (2)

மென் மொழி மேவலர் இன் நரம்பு உளர – திரு 142
நரம்பு ஆர்த்து அன்ன இன் குரல் தொகுதியொடு – திரு 212

மேல்


நரை (2)

வலம்புரி புரையும் வால் நரை முடியினர் – திரு 127
நரை விராவு_உற்ற நறு மென் கூந்தல் – நெடு 152

மேல்


நல் (7)

அவுணர் நல் வலம் அடங்க கவிழ் இணர் – திரு 59
எய்யா நல் இசை செ வேல் சேஎய் – திரு 61
நல் யாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின் – திரு 141
அறு_நான்கு இரட்டி இளமை நல் யாண்டு – திரு 179
ஆமா நல் ஏறு சிலைப்ப சேணின்று – திரு 315
கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல் – நெடு 114
மெல் இயல் மகளிர் நல் அடி வருட – நெடு 151

மேல்


நல்கு-மதி (1)

பெறல் அரும் பரிசில் நல்கு-மதி பல உடன் – திரு 295

மேல்


நல்லவும் (1)

இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி – திரு 286

மேல்


நலம் (4)

நலம் புரி கொள்கை புலம் பிரிந்து உறையும் – திரு 63
நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை – திரு 109
மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி – திரு 290
புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு – நெடு 166

மேல்


நலிய (1)

மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன் – நெடு 7

மேல்


நவில் (2)

ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை – திரு 180
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை – நெடு 169

மேல்


நவில (1)

நா இயல் மருங்கில் நவில பாடி – திரு 187

மேல்


நவின்ற (1)

நல் யாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின் – திரு 141

மேல்


நவின்று (1)

ஆங்கு அ மூவிரு முகனும் முறை நவின்று ஒழுகலின் – திரு 103

மேல்


நள்ளென் (1)

நள்ளென் யாமத்தும் பள்ளிகொள்ளான் – நெடு 186

மேல்


நளி (3)

நளி மலை சிலம்பில் நன் நகர் வாழ்த்தி – திரு 238
நளி கொள் சிமைய விரவு மலர் வியன் கா – நெடு 27
நளி மலை சிலம்பின் சிலம்பும் கோயில் – நெடு 100

மேல்


நறு (4)

விரை உறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து – திரு 188
சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து – திரு 235
நாக நறு மலர் உதிர யூகமொடு – திரு 302
நரை விராவு_உற்ற நறு மென் கூந்தல் – நெடு 152

மேல்


நறும் (10)

தலை பெயல் தலைஇய தண் நறும் கானத்து – திரு 9
நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை – திரு 33
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின் – திரு 193
விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறும் கான் – திரு 198
முடித்த குல்லை இலை உடை நறும் பூ – திரு 201
குறும்பொறி கொண்ட நறும் தண் சாயல் – திரு 213
பெரும் தண் கணவீர நறும் தண் மாலை – திரு 236
நறும் புகை எடுத்து குறிஞ்சி பாடி – திரு 239
கொள் உறழ் நறும் கல் பல கூட்டு மறுக – நெடு 50
தண் நறும் தகர முளரி நெருப்பு அமைத்து – நெடு 55

மேல்


நறை (1)

பைம் கொடி நறை காய் இடை இடுபு வேலன் – திரு 190

மேல்


நன் (9)

என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன் பகல் – திரு 130
நால் பெரும் தெய்வத்து நன் நகர் நிலைஇய – திரு 160
நளி மலை சிலம்பில் நன் நகர் வாழ்த்தி – திரு 238
பலர் புகழ் நன் மொழி புலவர் ஏறே – திரு 268
அன்பு உடை நன் மொழி அளைஇ விளிவு இன்று – திரு 292
தண் கமழ் அலர் இறால் சிதைய நன் பல – திரு 300
நன் பொன் மணி நிறம் கிளர பொன் கொழியா – திரு 306
நன் நுதல் உலறிய சின் மெல் ஓதி – நெடு 138
தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல் – நெடு 174

மேல்


நன்னர் (1)

நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப – திரு 65

மேல்


நனி (1)

இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி – திரு 286

மேல்