நெ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

நெஞ்சத்து (1)

நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப – திரு 65

மேல்


நெஞ்சமொடு (1)

கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒரு முகம் – திரு 100

மேல்


நெஞ்சின் (1)

நல் யாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின்
மென் மொழி மேவலர் இன் நரம்பு உளர – திரு 141,142

மேல்


நெடிது (1)

உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா – நெடு 163

மேல்


நெடியவும் (1)

குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி – நெடு 154

மேல்


நெடியன் (1)

கொடியன் நெடியன் தொடி அணி தோளன் – திரு 211

மேல்


நெடு (9)

சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் – திரு 46
விண் பொரு நெடு வரை குறிஞ்சி கிழவ – திரு 267
பரிசிலர் தாங்கும் உரு கெழு நெடு வேஎள் – திரு 273
விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த – திரு 299
ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை – நெடு 86
நெடு மயிர் எகின தூ நிற ஏற்றை – நெடு 91
நிலவு பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து – நெடு 95
பின் அமை நெடு வீழ் தாழ துணை துறந்து – நெடு 137
நெடு நீர் வார் குழை களைந்தென குறும் கண் – நெடு 139

மேல்


நெடும் (5)

செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடும் கொடி – திரு 67
நெடும் பெரும் சிமையத்து நீல பைம் சுனை – திரு 253
ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – நெடு 30
ஒலி நெடும் பீலி ஒல்க மெல் இயல் – நெடு 98
செம்பு இயன்று அன்ன செய்வு_உறு நெடும் சுவர் – நெடு 112

மேல்


நெய் (2)

ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை – நெடு 86
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து – நெடு 102

மேல்


நெய்தல் (1)

கள் கமழ் நெய்தல் ஊதி எல் பட – திரு 74

மேல்


நெய்யோடு (1)

நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்து – திரு 228

மேல்


நெருப்பு (2)

தண் நறும் தகர முளரி நெருப்பு அமைத்து – நெடு 55
பகு வாய் தடவில் செம் நெருப்பு ஆர – நெடு 66

மேல்


நெல்லின் (1)

வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க – நெடு 22

மேல்


நெல்லும் (1)

நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது – நெடு 43

மேல்