நு – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நுசுப்பின் 3
நுடங்கி 2
நுண் 6
நுண்ணிதின் 1
நுதல் 6
நுதி 1
நுவல 1

நுசுப்பின் (3)

கணை கால் வாங்கிய நுசுப்பின் பணை தோள் – திரு 14
குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே – திரு 101,102
வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின்
மெல் இயல் மகளிர் நல் அடி வருட – நெடு 150,151

மேல்


நுடங்கி (2)

வேறு பல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து – திரு 296
வடந்தை தண் வளி எறி-தொறும் நுடங்கி
தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல் – நெடு 173,174

மேல்


நுண் (6)

நுண் பூண் ஆகம் திளைப்ப திண் காழ் – திரு 32
வேங்கை நுண் தாது அப்பி காண்வர – திரு 36
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் – திரு 183
நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு – நெடு 25
மடை மாண் நுண் இழை பொலிய தொடை மாண்டு – நெடு 124
நுண் சேறு வழித்த நோன் நிலை திரள் கால் – நெடு 157

மேல்


நுண்ணிதின் (1)

நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு – நெடு 76

மேல்


நுதல் (6)

மறு இல் கற்பின் வாள்_நுதல் கணவன் – திரு 6
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்
மகர_பகு_வாய் தாழ மண்_உறுத்து – திரு 24,25
வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வர – திரு 78,79
மா முக முசு கலை பனிப்ப பூ நுதல்
இரும் பிடி குளிர்ப்ப வீசி பெரும் களிற்று – திரு 303,304
இகல் மீக்கூறும் ஏந்து எழில் வரி நுதல்
பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து – நெடு 116,117
நன் நுதல் உலறிய சின் மெல் ஓதி – நெடு 138

மேல்


நுதி (1)

வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் – திரு 78

மேல்


நுவல (1)

இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் – திரு 182,183

மேல்