செ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செ 5
செச்சை 1
செந்தினை 1
செம் 11
செம்பு 1
செம்மல் 1
செம்மையும் 1
செய் 3
செய்து 1
செய்யன் 1
செய்வினை 1
செய்வு 2
செய்வு_உறு 2
செயலை 1
செயிர் 1
செரீஇ 1
செரு 1
செருவில் 1
செல் 2
செல்வ 2
செல்வத்து 1
செல்வனும் 3
செல்வனொடு 1
செலல் 3
செலவின் 1
செலவினர் 1
செலவு 1
செவ்வரக்கு 1
செவ்வி 1
செவி 1
செவிலியர் 1
செற்றம் 1
செறிய 1
செறுநர் 2
சென்று 1
சென்னி 1
சென்னியன் 1

செ (5)

கிளை கவின்று எழுதரு கீழ் நீர் செ அரும்பு – திரு 29
எய்யா நல் இசை செ வேல் சேஎய் – திரு 61
செய்யன் சிவந்த ஆடையன் செ அரை – திரு 206
செ விரல் கொளீஇய செம் கேழ் விளக்கத்து – நெடு 144
செ விரல் கடை கண் சேர்த்தி சில தெறியா – நெடு 165

மேல்


செச்சை (1)

கச்சினன் கழலினன் செச்சை கண்ணியன் – திரு 208

மேல்


செந்தினை (1)

குருதி செந்தினை பரப்பி குற_மகள் – திரு 242

மேல்


செம் (11)

கிண்கிணி கவைஇய ஒண் செம் சீறடி – திரு 13
செம் கால் வெட்சி சீறிதழ் இடை இடுபு – திரு 21
செம் பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு – திரு 105
செம் கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு – திரு 202
செம் நூல் யாத்து வெண் பொரி சிதறி – திரு 231
செம் வரி நாரையோடு எ வாயும் கவர – நெடு 17
மனை உறை புறவின் செம் கால் சேவல் – நெடு 45
செம் கேழ் வட்டம் சுருக்கி கொடும் தறி – நெடு 58
பகு வாய் தடவில் செம் நெருப்பு ஆர – நெடு 66
செ விரல் கொளீஇய செம் கேழ் விளக்கத்து – நெடு 144
செம் முக செவிலியர் கைம்மிக குழீஇ – நெடு 153

மேல்


செம்பு (1)

செம்பு இயன்று அன்ன செய்வு_உறு நெடும் சுவர் – நெடு 112

மேல்


செம்மல் (1)

சேவடி படரும் செம்மல் உள்ளமொடு – திரு 62

மேல்


செம்மையும் (1)

சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன் – நெடு 118

மேல்


செய் (3)

இரும்பு செய் விளக்கின் ஈர் திரி கொளீஇ – நெடு 42
புதுவது இயன்ற மெழுகு செய் பட மிசை – நெடு 159
களிறு களம் படுத்த பெரும் செய் ஆடவர் – நெடு 171

மேல்


செய்து (1)

சில் பலி செய்து பல் பிரப்பு இரீஇ – திரு 234

மேல்


செய்யன் (1)

செய்யன் சிவந்த ஆடையன் செ அரை – திரு 206

மேல்


செய்வினை (1)

ஐ வேறு உருவின் செய்வினை முற்றிய – திரு 83

மேல்


செய்வு (2)

செவி நேர்பு வைத்த செய்வு_உறு திவவின் – திரு 140
செம்பு இயன்று அன்ன செய்வு_உறு நெடும் சுவர் – நெடு 112

மேல்


செய்வு_உறு (2)

செவி நேர்பு வைத்த செய்வு_உறு திவவின் – திரு 140
செம்பு இயன்று அன்ன செய்வு_உறு நெடும் சுவர் – நெடு 112

மேல்


செயலை (1)

செயலை தண் தளிர் துயல்வரும் காதினன் – திரு 207

மேல்


செயிர் (1)

சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி – திரு 19

மேல்


செரீஇ (1)

பெரும் தண் சண்பகம் செரீஇ கரும் தகட்டு – திரு 27

மேல்


செரு (1)

செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடும் கொடி – திரு 67

மேல்


செருவில் (1)

செருவில் ஒருவ பொரு விறல் மள்ள – திரு 262

மேல்


செல் (2)

செறுநர் தேய்த்த செல் உறழ் தட கை – திரு 5
செறுநர் தேய்த்து செல் சமம் முருக்கி – திரு 99

மேல்


செல்வ (2)

அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ
ஆல்_கெழு_கடவுள் புதல்வ மால் வரை – திரு 255,256
வேல் கெழு தட கை சால் பெரும் செல்வ
குன்றம் கொன்ற குன்றா கொற்றத்து – திரு 265,266

மேல்


செல்வத்து (1)

மூன்று வகை குறித்த முத்தீ செல்வத்து
இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல – திரு 181,182

மேல்


செல்வனும் (3)

புள் அணி நீள் கொடி செல்வனும் வெள் ஏறு – திரு 151
மூவெயில் முருக்கிய முரண் மிகு செல்வனும்
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல் – திரு 154,155
எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும்
நால் பெரும் தெய்வத்து நன் நகர் நிலைஇய – திரு 159,160

மேல்


செல்வனொடு (1)

முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய – நெடு 162

மேல்


செலல் (3)

விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது – திரு 107
விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி – திரு 123
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து – நெடு 161

மேல்


செலவின் (1)

உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள் – திரு 51

மேல்


செலவினர் (1)

வளி கிளர்ந்து அன்ன செலவினர் வளி இடை – திரு 170

மேல்


செலவு (1)

செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன் – திரு 64

மேல்


செவ்வரக்கு (1)

பரு இரும்பு பிணித்து செவ்வரக்கு உரீஇ – நெடு 80

மேல்


செவ்வி (1)

செவ்வி அரும்பின் பைம் கால் பித்திகத்து – நெடு 40

மேல்


செவி (1)

செவி நேர்பு வைத்த செய்வு_உறு திவவின் – திரு 140

மேல்


செவிலியர் (1)

செம் முக செவிலியர் கைம்மிக குழீஇ – நெடு 153

மேல்


செற்றம் (1)

செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும் – திரு 132

மேல்


செறிய (1)

பெரும் கல் விடர் அளை செறிய கரும் கோட்டு – திரு 314

மேல்


செறுநர் (2)

செறுநர் தேய்த்த செல் உறழ் தட கை – திரு 5
செறுநர் தேய்த்து செல் சமம் முருக்கி – திரு 99

மேல்


சென்று (1)

வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக – நெடு 87

மேல்


சென்னி (1)

மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப – திரு 85

மேல்


சென்னியன் (1)

பெரும் தண் கண்ணி மிலைந்த சென்னியன்
பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு – திரு 44,45

மேல்