சா – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

சாஅய் (1)

கயல் அறல் எதிர கடும் புனல் சாஅய்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை – நெடு 18,19

மேல்


சாந்து (1)

நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின் – திரு 193

மேல்


சாந்தொடு (1)

தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப – நெடு 52

மேல்


சாய் (2)

இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன – திரு 312
வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின் – நெடு 150

மேல்


சாய (1)

கறி கொடி கரும் துணர் சாய பொறி புற – திரு 309

மேல்


சாயல் (2)

குறும்பொறி கொண்ட நறும் தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன் – திரு 213,214
மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல் – நெடு 37

மேல்


சாரா (1)

ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து – நெடு 75

மேல்


சால் (2)

வேல் கெழு தட கை சால் பெரும் செல்வ – திரு 265
அணங்கு சால் உயர் நிலை தழீஇ பண்டை தன் – திரு 289

மேல்


சாலேகம் (1)

முத்து உடை சாலேகம் நாற்றி குத்து_உறுத்து – நெடு 125

மேல்


சாறு (1)

சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி – திரு 283

மேல்


சான்ற (1)

தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் – திரு 287

மேல்