க – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கச்சினன் 1
கட்டளை 1
கட்டிய 1
கடந்த 1
கடம்பும் 1
கடல் 2
கடவுள் 1
கடாவ 1
கடி 2
கடிகை 1
கடிகை_நூல் 1
கடிந்த 1
கடிய 1
கடு 1
கடுக்கும் 1
கடுப்ப 4
கடும் 4
கடுவொடு 1
கடை 1
கண் 11
கண்டு 5
கண்டு_உழி 1
கண்ணி 4
கண்ணியன் 2
கணம் 1
கணவ 1
கணவன் 1
கணவீர 1
கணை 1
கதவம் 2
கதிர் 3
கதுப்பின் 1
கந்து 1
கம்மியன் 2
கமம் 1
கமழ் 5
கமழ 1
கமுகின் 1
கயல் 1
கயிறு 1
கரும் 5
கருவொடு 1
கல் 2
கல்லென் 1
கலங்க 1
கலங்கி 1
கலாவ 2
கலி 2
கலி_மா 1
கலிங்கத்து 2
கலிங்கமொடு 1
கலித்த 1
கலிழ்ந்து 1
கலுழ்ந்து 1
கலை 1
கவர 1
கவிழ் 1
கவின் 3
கவின்று 1
கவுள் 1
கவைஇ 1
கவைஇய 1
கழல் 1
கழலினன் 1
கழி 1
கழிந்த 1
கழிப்பிய 1
கழுவு 1
கழுவு_உறு 1
கள் 2
களத்து 1
களம் 4
களனும் 1
களி 1
களிற்று 1
களிறு 1
களைந்தென 1
களையா 1
கற்ப 1
கற்பின் 1
கற்றோர் 1
கற்றோர்க்கு 1
கறங்க 2
கறவை 1
கறி 1
கறுவு 1
கன்று 1
கன்னல் 1
கனைந்து 1

கச்சினன் (1)

கச்சினன் கழலினன் செச்சை கண்ணியன் – திரு 208

மேல்


கட்டளை (1)

நேர் வாய் கட்டளை திரியாது திண் நிலை – நெடு 62

மேல்


கட்டிய (1)

மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன் – திரு 214

மேல்


கடந்த (1)

மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து – திரு 272

மேல்


கடம்பும் (1)

சதுக்கமும் சந்தியும் புது பூ கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்து உடை நிலையினும் – திரு 225,226

மேல்


கடல் (2)

பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆஅங்கு – திரு 2
பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு – திரு 45

மேல்


கடவுள் (1)

ஆல்_கெழு_கடவுள் புதல்வ மால் வரை – திரு 256

மேல்


கடாவ (1)

அங்குசம் கடாவ ஒரு கை இரு கை – திரு 110

மேல்


கடி (2)

கடி உடை வியல் நகர் சிறு குறும் தொழுவர் – நெடு 49
ஆடவர் குறுகா அரும் கடி வரைப்பின் – நெடு 107

மேல்


கடிகை (1)

வலம்புரி வளையொடு கடிகை_நூல் யாத்து – நெடு 142

மேல்


கடிகை_நூல் (1)

வலம்புரி வளையொடு கடிகை_நூல் யாத்து – நெடு 142

மேல்


கடிந்த (1)

கடும் சினம் கடிந்த காட்சியர் இடும்பை – திரு 135

மேல்


கடிய (1)

கன்று கோள் ஒழிய கடிய வீசி – நெடு 11

மேல்


கடு (1)

படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை – திரு 80

மேல்


கடுக்கும் (1)

பொன் உரை கடுக்கும் திதலையர் இன் நகை – திரு 145

மேல்


கடுப்ப (4)

தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் – திரு 34
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்ப
புடை திரண்டு இருந்த குடத்த இடை திரண்டு – நெடு 120,121
வாளை பகு வாய் கடுப்ப வணக்கு_உறுத்து – நெடு 143
புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல் – நெடு 147

மேல்


கடும் (4)

கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க – திரு 49
கடும் சினம் கடிந்த காட்சியர் இடும்பை – திரு 135
அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் – திரு 149
கயல் அறல் எதிர கடும் புனல் சாஅய் – நெடு 18

மேல்


கடுவொடு (1)

கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று – திரு 148

மேல்


கடை (1)

செ விரல் கடை கண் சேர்த்தி சில தெறியா – நெடு 165

மேல்


கண் (11)

சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின் – திரு 48
கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க – திரு 49
கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை – திரு 53
கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர் – திரு 75
உமை அமர்ந்து விளங்கும் இமையா மு கண்
மூவெயில் முருக்கிய முரண் மிகு செல்வனும் – திரு 153,154
அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த – நெடு 21
பூ குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழை கண்
மடவரல் மகளிர் பிடகை பெய்த – நெடு 38,39
தகடு கண் புதைய கொளீஇ துகள் தீர்ந்து – நெடு 127
வேட்டம் பொறித்து வியன் கண் கானத்து – நெடு 129
நெடு நீர் வார் குழை களைந்தென குறும் கண்
வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின் – நெடு 139,140
செ விரல் கடை கண் சேர்த்தி சில தெறியா – நெடு 165

மேல்


கண்டு (5)

பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆஅங்கு – திரு 2
மயில் கண்டு அன்ன மட நடை மகளிரொடு – திரு 205
முந்து நீ கண்டு_உழி முகன் அமர்ந்து ஏத்தி – திரு 251
வரை கண்டு அன்ன தோன்றல வரை சேர்பு – நெடு 108
மணி கண்டு அன்ன மா திரள் திண் காழ் – நெடு 111

மேல்


கண்டு_உழி (1)

முந்து நீ கண்டு_உழி முகன் அமர்ந்து ஏத்தி – திரு 251

மேல்


கண்ணி (4)

பெரும் தண் கண்ணி மிலைந்த சென்னியன் – திரு 44
குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல் – திரு 199,200
நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ – நெடு 6
படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் – நெடு 31

மேல்


கண்ணியன் (2)

வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன்
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின் – திரு 192,193
கச்சினன் கழலினன் செச்சை கண்ணியன்
குழலன் கோட்டன் குறும் பல் இயத்தன் – திரு 208,209

மேல்


கணம் (1)

அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும் – திரு 76

மேல்


கணவ (1)

மங்கையர் கணவ மைந்தர் ஏறே – திரு 264

மேல்


கணவன் (1)

மறு இல் கற்பின் வாள்_நுதல் கணவன்
கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை – திரு 6,7

மேல்


கணவீர (1)

பெரும் தண் கணவீர நறும் தண் மாலை – திரு 236

மேல்


கணை (1)

கணை கால் வாங்கிய நுசுப்பின் பணை தோள் – திரு 14

மேல்


கதவம் (2)

போர் வாய் கதவம் தாழொடு துறப்ப – நெடு 63
துணை மாண் கதவம் பொருத்தி இணை மாண்டு – நெடு 81

மேல்


கதிர் (3)

பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம் ஒரு முகம் – திரு 92
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க – நெடு 22
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம் – நெடு 73

மேல்


கதுப்பின் (1)

உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய் – திரு 47

மேல்


கந்து (1)

மன்றமும் பொதியிலும் கந்து உடை நிலையினும் – திரு 226

மேல்


கம்மியன் (2)

கைவல் கம்மியன் கவின் பெற புனைந்த – நெடு 57
கைவல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து – நெடு 85

மேல்


கமம் (1)

கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை – திரு 7

மேல்


கமழ் (5)

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 24
தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் – திரு 34
கள் கமழ் நெய்தல் ஊதி எல் பட – திரு 74
மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி – திரு 290
தண் கமழ் அலர் இறால் சிதைய நன் பல – திரு 300

மேல்


கமழ (1)

அ இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து – நெடு 41

மேல்


கமுகின் (1)

முழு_முதல் கமுகின் மணி உறழ் எருத்தின் – நெடு 23

மேல்


கயல் (1)

கயல் அறல் எதிர கடும் புனல் சாஅய் – நெடு 18

மேல்


கயிறு (1)

நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு – நெடு 76

மேல்


கரும் (5)

பெரும் தண் சண்பகம் செரீஇ கரும் தகட்டு – திரு 27
கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை – திரு 53
கறி கொடி கரும் துணர் சாய பொறி புற – திரு 309
பெரும் கல் விடர் அளை செறிய கரும் கோட்டு – திரு 314
கரும் கோட்டு சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப – நெடு 70

மேல்


கருவொடு (1)

கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல் – நெடு 114

மேல்


கல் (2)

பெரும் கல் விடர் அளை செறிய கரும் கோட்டு – திரு 314
கொள் உறழ் நறும் கல் பல கூட்டு மறுக – நெடு 50

மேல்


கல்லென் (1)

கல்லென் துவலை தூவலின் யாவரும் – நெடு 64

மேல்


கலங்க (1)

பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு – திரு 45

மேல்


கலங்கி (1)

புலம் பெயர் புலம்பொடு கலங்கி கோடல் – நெடு 5

மேல்


கலாவ (2)

ஆசினி முது சுளை கலாவ மீமிசை – திரு 301
நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ
மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன் – நெடு 6,7

மேல்


கலி (2)

கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை – நெடு 99
பருமம் களையா பாய் பரி கலி_மா – நெடு 179

மேல்


கலி_மா (1)

பருமம் களையா பாய் பரி கலி_மா
இரும் சேற்று தெருவின் எறி துளி விதிர்ப்ப – நெடு 179,180

மேல்


கலிங்கத்து (2)

நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை – திரு 109
காடி கொண்ட கழுவு_உறு கலிங்கத்து
தோடு அமை தூ மடி விரித்த சேக்கை – நெடு 134,135

மேல்


கலிங்கமொடு (1)

அம் மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு
புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல் – நெடு 146,147

மேல்


கலித்த (1)

அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க – நெடு 21,22

மேல்


கலிழ்ந்து (1)

கலிழ்ந்து வீழ் அருவி பாடு விறந்து அயல – நெடு 97

மேல்


கலுழ்ந்து (1)

உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிக கலுழ்ந்து
நுண் சேறு வழித்த நோன் நிலை திரள் கால் – நெடு 156,157

மேல்


கலை (1)

மா முக முசு கலை பனிப்ப பூ நுதல் – திரு 303

மேல்


கவர (1)

செம் வரி நாரையோடு எ வாயும் கவர
கயல் அறல் எதிர கடும் புனல் சாஅய் – நெடு 17,18

மேல்


கவிழ் (1)

அவுணர் நல் வலம் அடங்க கவிழ் இணர் – திரு 59

மேல்


கவின் (3)

கை புனைந்து இயற்றா கவின் பெறு வனப்பின் – திரு 17
காடும் காவும் கவின் பெறு துருத்தியும் – திரு 223
கைவல் கம்மியன் கவின் பெற புனைந்த – நெடு 57

மேல்


கவின்று (1)

கிளை கவின்று எழுதரு கீழ் நீர் செ அரும்பு – திரு 29

மேல்


கவுள் (1)

கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க – நெடு 8

மேல்


கவைஇ (1)

சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்ப – திரு 87,88

மேல்


கவைஇய (1)

கிண்கிணி கவைஇய ஒண் செம் சீறடி – திரு 13

மேல்


கழல் (1)

கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க – திரு 49

மேல்


கழலினன் (1)

கச்சினன் கழலினன் செச்சை கண்ணியன் – திரு 208

மேல்


கழி (1)

கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை – திரு 53

மேல்


கழிந்த (1)

பல உடன் கழிந்த உண்டியர் இகலொடு – திரு 131

மேல்


கழிப்பிய (1)

ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை – திரு 180

மேல்


கழுவு (1)

காடி கொண்ட கழுவு_உறு கலிங்கத்து – நெடு 134

மேல்


கழுவு_உறு (1)

காடி கொண்ட கழுவு_உறு கலிங்கத்து – நெடு 134

மேல்


கள் (2)

கள் கமழ் நெய்தல் ஊதி எல் பட – திரு 74
நீடு அமை விளைந்த தே கள் தேறல் – திரு 195

மேல்


களத்து (1)

சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி – திரு 283

மேல்


களம் (4)

வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா – திரு 55
கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒரு முகம் – திரு 100
ஆடு_களம் சிலம்ப பாடி பல உடன் – திரு 245
களிறு களம் படுத்த பெரும் செய் ஆடவர் – நெடு 171

மேல்


களனும் (1)

வேலன் தைஇய வெறி அயர் களனும்
காடும் காவும் கவின் பெறு துருத்தியும் – திரு 222,223

மேல்


களி (1)

இரும் களி பரந்த ஈர வெண் மணல் – நெடு 16

மேல்


களிற்று (1)

இரும் பிடி குளிர்ப்ப வீசி பெரும் களிற்று
முத்து உடை வான் கோடு தழீஇ தத்து_உற்று – திரு 304,305

மேல்


களிறு (1)

களிறு களம் படுத்த பெரும் செய் ஆடவர் – நெடு 171

மேல்


களைந்தென (1)

நெடு நீர் வார் குழை களைந்தென குறும் கண் – நெடு 139

மேல்


களையா (1)

பருமம் களையா பாய் பரி கலி_மா – நெடு 179

மேல்


கற்ப (1)

அகல் இரு விசும்பில் துவலை கற்ப
அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த – நெடு 20,21

மேல்


கற்பின் (1)

மறு இல் கற்பின் வாள்_நுதல் கணவன் – திரு 6

மேல்


கற்றோர் (1)

கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்கு – திரு 133

மேல்


கற்றோர்க்கு (1)

கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்கு
தாம் வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு – திரு 133,134

மேல்


கறங்க (2)

அந்தர பல் இயம் கறங்க திண் காழ் – திரு 119
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க
உருவ பல் பூ தூஉய் வெருவர – திரு 240,241

மேல்


கறவை (1)

பறவை படிவன வீழ கறவை
கன்று கோள் ஒழிய கடிய வீசி – நெடு 10,11

மேல்


கறி (1)

கறி கொடி கரும் துணர் சாய பொறி புற – திரு 309

மேல்


கறுவு (1)

கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒரு முகம் – திரு 100

மேல்


கன்று (1)

கன்று கோள் ஒழிய கடிய வீசி – நெடு 11

மேல்


கன்னல் (1)

தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார் – நெடு 65

மேல்


கனைந்து (1)

காதலர் பிரிந்தோர் புலம்ப பெயல் கனைந்து
கூதிர் நின்றன்றால் போதே மாதிரம் – நெடு 71,72

மேல்