கோ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கோங்கின் (1)

தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின்
குவி முகிழ் இள முலை கொட்டி விரி மலர் – திரு 34,35

மேல்


கோட்டன் (1)

குழலன் கோட்டன் குறும் பல் இயத்தன் – திரு 209

மேல்


கோட்டு (4)

பெரும் கல் விடர் அளை செறிய கரும் கோட்டு
ஆமா நல் ஏறு சிலைப்ப சேணின்று – திரு 314,315
இரு கோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர – நெடு 35
கரும் கோட்டு சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப – நெடு 70
பூ துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல் – நெடு 145

மேல்


கோடல் (1)

புலம் பெயர் புலம்பொடு கலங்கி கோடல்
நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ – நெடு 5,6

மேல்


கோடு (2)

கோடு வாய்வைத்து கொடு மணி இயக்கி – திரு 246
முத்து உடை வான் கோடு தழீஇ தத்து_உற்று – திரு 305

மேல்


கோத்த (1)

வாள் தோள் கோத்த வன்கண் காளை – நெடு 182

மேல்


கோதை (2)

இணைத்த கோதை அணைத்த கூந்தல் – திரு 200
கூந்தல் மகளிர் கோதை புனையார் – நெடு 53

மேல்


கோபத்து (1)

கோபத்து அன்ன தோயா பூ துகில் – திரு 15

மேல்


கோயில் (1)

நளி மலை சிலம்பின் சிலம்பும் கோயில்
யவனர் இயற்றிய வினை மாண் பாவை – நெடு 100,101

மேல்


கோல் (2)

ஆர்கலி முனைஇய கொடும் கோல் கோவலர் – நெடு 3
இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு – நெடு 74

மேல்


கோவலர் (1)

ஆர்கலி முனைஇய கொடும் கோல் கோவலர்
ஏறு உடை இன நிரை வேறு புலம் பரப்பி – நெடு 3,4

மேல்


கோழி (2)

கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி – திரு 38
கோழி வய பெடை இரிய கேழலொடு – திரு 311

மேல்


கோள் (2)

கன்று கோள் ஒழிய கடிய வீசி – நெடு 11
நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து – நெடு 82

மேல்