கை – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கை (18)

செறுநர் தேய்த்த செல் உறழ் தட கை
மறு இல் கற்பின் வாள்_நுதல் கணவன் – திரு 5,6
கை புனைந்து இயற்றா கவின் பெறு வனப்பின் – திரு 17
ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை – திரு 108
ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை
நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை – திரு 108,109
நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை
அங்குசம் கடாவ ஒரு கை இரு கை – திரு 109,110
அங்குசம் கடாவ ஒரு கை இரு கை – திரு 110
அங்குசம் கடாவ ஒரு கை இரு கை
ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை – திரு 110,111
ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை
மார்பொடு விளங்க ஒரு கை – திரு 111,112
மார்பொடு விளங்க ஒரு கை
தாரொடு பொலிய ஒரு கை – திரு 112,113
தாரொடு பொலிய ஒரு கை
கீழ் வீழ் தொடியொடு மீமிசை கொட்ப ஒரு கை – திரு 113,114
கீழ் வீழ் தொடியொடு மீமிசை கொட்ப ஒரு கை
பாடு இன் படு மணி இரட்ட ஒரு கை – திரு 114,115
பாடு இன் படு மணி இரட்ட ஒரு கை
நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒரு கை – திரு 115,116
நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒரு கை
வான் அர_மகளிர்க்கு வதுவை சூட்ட – திரு 116,117
தாழ் பெரும் தட கை உயர்த்த யானை – திரு 158
வேல் கெழு தட கை சால் பெரும் செல்வ – திரு 265
கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க – நெடு 8
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து – நெடு 102
நீள் திரள் தட கை நிலம் மிசை புரள – நெடு 170

மேல்


கைதொழுது (1)

நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர – நெடு 43,44

மேல்


கைதொழூஉ (1)

கைதொழூஉ பரவி கால் உற வணங்கி – திரு 252

மேல்


கைம்மிக (1)

செம் முக செவிலியர் கைம்மிக குழீஇ – நெடு 153

மேல்


கையற்று (1)

இரவும் பகலும் மயங்கி கையற்று
மதலை பள்ளி மாறுவன இருப்ப – நெடு 47,48

மேல்


கையன் (1)

சுவல் மிசை அமைத்த கையன் முகன் அமர்ந்து – நெடு 183

மேல்


கையின் (2)

ஒண் தொடி தட கையின் ஏந்தி வெருவர – திரு 54
முழவு உறழ் தட கையின் இயல ஏந்தி – திரு 215

மேல்


கையினர் (1)

உச்சி கூப்பிய கையினர் தன் புகழ்ந்து – திரு 185

மேல்


கையும் (1)

ஆங்கு அ பன்னிரு கையும் பாற்பட இயற்றி – திரு 118

மேல்


கைவல் (2)

கைவல் கம்மியன் கவின் பெற புனைந்த – நெடு 57
கைவல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து – நெடு 85

மேல்