ஒ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

ஒடுங்கிய (1)

கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று – திரு 148

மேல்


ஒண் (3)

கிண்கிணி கவைஇய ஒண் செம் சீறடி – திரு 13
வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர் – திரு 31
ஒண் தொடி தட கையின் ஏந்தி வெருவர – திரு 54

மேல்


ஒப்ப (2)

பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து – நெடு 78
சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன் – நெடு 118

மேல்


ஒரு (20)

இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை – திரு 57
பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம் ஒரு முகம் – திரு 92
பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம் ஒரு முகம் – திரு 92
காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே ஒரு முகம் – திரு 94
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம் – திரு 96
திங்கள் போல திசை விளக்கும்மே ஒரு முகம் – திரு 98
கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒரு முகம் – திரு 100
ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை – திரு 108
ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை – திரு 108
நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை – திரு 109
அங்குசம் கடாவ ஒரு கை இரு கை – திரு 110
ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை – திரு 111
மார்பொடு விளங்க ஒரு கை – திரு 112
தாரொடு பொலிய ஒரு கை – திரு 113
கீழ் வீழ் தொடியொடு மீமிசை கொட்ப ஒரு கை – திரு 114
பாடு இன் படு மணி இரட்ட ஒரு கை – திரு 115
நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒரு கை – திரு 116
ஒரு நீ ஆகி தோன்ற விழுமிய – திரு 294
ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து – நெடு 75
உருவ பல் பூ ஒரு கொடி வளைஇ – நெடு 113

மேல்


ஒருங்கு (1)

ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின் – நெடு 79

மேல்


ஒருவ (1)

செருவில் ஒருவ பொரு விறல் மள்ள – திரு 262

மேல்


ஒருவர் (1)

நான்முக ஒருவர் சுட்டி காண்வர – திரு 165

மேல்


ஒருவன் (1)

ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப – திரு 254

மேல்


ஒல்க (1)

ஒலி நெடும் பீலி ஒல்க மெல் இயல் – நெடு 98

மேல்


ஒல்லாள் (1)

உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிக கலுழ்ந்து – நெடு 156

மேல்


ஒலி (1)

ஒலி நெடும் பீலி ஒல்க மெல் இயல் – நெடு 98

மேல்


ஒலிக்கும் (1)

அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும்
குன்று அமர்ந்து உறைதலும் உரியன் அதாஅன்று – திரு 76,77

மேல்


ஒழி (2)

பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து – நெடு 117
பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து – நெடு 117

மேல்


ஒழிய (1)

கன்று கோள் ஒழிய கடிய வீசி – நெடு 11

மேல்


ஒழுகலின் (1)

ஆங்கு அ மூவிரு முகனும் முறை நவின்று ஒழுகலின்
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் – திரு 103,104

மேல்


ஒழுகி (1)

ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி
காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே ஒரு முகம் – திரு 93,94

மேல்


ஒள் (1)

உளை பூ மருதின் ஒள் இணர் அட்டி – திரு 28

மேல்


ஒளி (1)

ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி
உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள் – திரு 3,4

மேல்


ஒளிறு (1)

ஒளிறு வாள் விழுப்புண் காணிய புறம் போந்து – நெடு 172

மேல்


ஒன்பதிற்று (1)

ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர் – திரு 168

மேல்


ஒன்பது (1)

ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் – திரு 183

மேல்


ஒன்று (1)

உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை – திரு 161

மேல்