இ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இகந்து 1
இகல் 2
இகலொடு 1
இசை 4
இசைப்ப 1
இட்ட 1
இட்டு 2
இட 1
இட_வயின் 1
இடி 1
இடித்து 1
இடுபு 4
இடும்பை 1
இடை 6
இணர் 4
இணை 3
இணைத்த 1
இணைப்பு 1
இணைப்பு_உறு 1
இதழ் 4
இமிழ் 1
இமைக்கும் 2
இமைப்ப 1
இமைப்பின் 1
இமையா 1
இயக்கி 1
இயங்கும் 1
இயத்தன் 1
இயம் 3
இயல் 4
இயல்பினர் 1
இயல்பினின் 1
இயல 1
இயவுள் 1
இயற்கை 2
இயற்றா 1
இயற்றி 1
இயற்றிய 1
இயன்ற 2
இயன்று 1
இரட்ட 1
இரட்டி 2
இரட்டும் 1
இரண்டு 2
இரவலன் 1
இரவும் 1
இரிய 1
இரீஇ 1
இரு 7
இரு_மூன்று 1
இருந்த 1
இருப்ப 1
இருபிறப்பாளர் 1
இரும் 7
இரும்பு 2
இருவர் 1
இருள் 4
இல் 12
இல்லா 1
இலை 3
இழிதரும் 1
இழுமென 1
இழை 3
இள 2
இளநீர் 1
இளமை 1
இறந்து 1
இறால் 1
இறை 1
இறைஞ்சிய 1
இன் 10
இன்புறு 1
இன்றி 2
இன்று 2
இன்னா 1
இன்னே 3
இன 1
இனிது 1
இனியவும் 1

இகந்து (1)

சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி – திரு 19

மேல்


இகல் (2)

பகலில் தோன்றும் இகல் இல் காட்சி – திரு 166
இகல் மீக்கூறும் ஏந்து எழில் வரி நுதல் – நெடு 116

மேல்


இகலொடு (1)

பல உடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும் – திரு 131,132

மேல்


இசை (4)

எய்யா நல் இசை செ வேல் சேஎய் – திரு 61
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க – திரு 240
நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேராள – திரு 270
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை
நளி மலை சிலம்பின் சிலம்பும் கோயில் – நெடு 99,100

மேல்


இசைப்ப (1)

வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல – திரு 120

மேல்


இட்ட (1)

மணி புறத்து இட்ட மா தாள் பிடியொடு – நெடு 178

மேல்


இட்டு (2)

நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி – நெடு 76,77
இணை அணை மேம்பட பாய் அணை இட்டு
காடி கொண்ட கழுவு_உறு கலிங்கத்து – நெடு 133,134

மேல்


இட (1)

புடை வீழ் அம் துகில் இட_வயின் தழீஇ – நெடு 181

மேல்


இட_வயின் (1)

புடை வீழ் அம் துகில் இட_வயின் தழீஇ – நெடு 181

மேல்


இடி (1)

உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு – திரு 121

மேல்


இடித்து (1)

உரும் இடித்து அன்ன குரலினர் விழுமிய – திரு 172

மேல்


இடுபு (4)

செம் கால் வெட்சி சீறிதழ் இடை இடுபு
பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி – திரு 21,22
பைம் கொடி நறை காய் இடை இடுபு வேலன் – திரு 190
செம் கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு
சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை – திரு 202,203
கூர் உளி குயின்ற ஈர் இலை இடை இடுபு
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்ப – நெடு 119,120

மேல்


இடும்பை (1)

கடும் சினம் கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும் அறியா இயல்பினர் மேவர – திரு 135,136

மேல்


இடை (6)

செம் கால் வெட்சி சீறிதழ் இடை இடுபு – திரு 21
வளி கிளர்ந்து அன்ன செலவினர் வளி இடை
தீ எழுந்து அன்ன திறலினர் தீ பட – திரு 170,171
பைம் கொடி நறை காய் இடை இடுபு வேலன் – திரு 190
செம் கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு – திரு 202
கூர் உளி குயின்ற ஈர் இலை இடை இடுபு – நெடு 119
புடை திரண்டு இருந்த குடத்த இடை திரண்டு – நெடு 121

மேல்


இணர் (4)

உளை பூ மருதின் ஒள் இணர் அட்டி – திரு 28
தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் – திரு 34
அவுணர் நல் வலம் அடங்க கவிழ் இணர்
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து – திரு 59,60
செம் கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு – திரு 202

மேல்


இணை (3)

துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி – திரு 20
துணை மாண் கதவம் பொருத்தி இணை மாண்டு – நெடு 81
இணை அணை மேம்பட பாய் அணை இட்டு – நெடு 133

மேல்


இணைத்த (1)

இணைத்த கோதை அணைத்த கூந்தல் – திரு 200

மேல்


இணைப்பு (1)

இணைப்பு_உறு பிணையல் வளைஇ துணை தக – திரு 30

மேல்


இணைப்பு_உறு (1)

இணைப்பு_உறு பிணையல் வளைஇ துணை தக – திரு 30

மேல்


இதழ் (4)

பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி – திரு 22
நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ – நெடு 6
அ இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து – நெடு 41
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரி பனி – நெடு 164

மேல்


இமிழ் (1)

இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க – திரு 240

மேல்


இமைக்கும் (2)

ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி – திரு 3
மாசு அற இமைக்கும் உருவினர் மானின் – திரு 128

மேல்


இமைப்ப (1)

அகலா மீனின் அவிர்வன இமைப்ப
தா இல் கொள்கை தம் தொழில் முடி-மார் – திரு 88,89

மேல்


இமைப்பின் (1)

மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப – திரு 85

மேல்


இமையா (1)

உமை அமர்ந்து விளங்கும் இமையா மு கண் – திரு 153

மேல்


இயக்கி (1)

கோடு வாய்வைத்து கொடு மணி இயக்கி
ஓடா பூட்கை பிணிமுகம் வாழ்த்தி – திரு 246,247

மேல்


இயங்கும் (1)

என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன் பகல் – திரு 130

மேல்


இயத்தன் (1)

குழலன் கோட்டன் குறும் பல் இயத்தன்
தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம் – திரு 209,210

மேல்


இயம் (3)

அந்தர பல் இயம் கறங்க திண் காழ் – திரு 119
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க – திரு 240
முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க – திரு 243

மேல்


இயல் (4)

நா இயல் மருங்கில் நவில பாடி – திரு 187
ஒலி நெடும் பீலி ஒல்க மெல் இயல்
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை – நெடு 98,99
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்ப – நெடு 120
மெல் இயல் மகளிர் நல் அடி வருட – நெடு 151

மேல்


இயல்பினர் (1)

யாவதும் அறியா இயல்பினர் மேவர – திரு 136

மேல்


இயல்பினின் (1)

இரு_மூன்று எய்திய இயல்பினின் வழாஅது – திரு 177

மேல்


இயல (1)

முழவு உறழ் தட கையின் இயல ஏந்தி – திரு 215

மேல்


இயவுள் (1)

பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள்
சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி – திரு 274,275

மேல்


இயற்கை (2)

சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ – திரு 87
நால் வேறு இயற்கை பதினொரு மூவரொடு – திரு 167

மேல்


இயற்றா (1)

கை புனைந்து இயற்றா கவின் பெறு வனப்பின் – திரு 17

மேல்


இயற்றி (1)

ஆங்கு அ பன்னிரு கையும் பாற்பட இயற்றி
அந்தர பல் இயம் கறங்க திண் காழ் – திரு 118,119

மேல்


இயற்றிய (1)

யவனர் இயற்றிய வினை மாண் பாவை – நெடு 101

மேல்


இயன்ற (2)

நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின் – திரு 143
புதுவது இயன்ற மெழுகு செய் பட மிசை – நெடு 159

மேல்


இயன்று (1)

செம்பு இயன்று அன்ன செய்வு_உறு நெடும் சுவர் – நெடு 112

மேல்


இரட்ட (1)

பாடு இன் படு மணி இரட்ட ஒரு கை – திரு 115

மேல்


இரட்டி (2)

ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர் – திரு 168
அறு_நான்கு இரட்டி இளமை நல் யாண்டு – திரு 179

மேல்


இரட்டும் (1)

படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை – திரு 80

மேல்


இரண்டு (2)

ஈர்_இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை – திரு 157
முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ – திரு 230

மேல்


இரவலன் (1)

அளியன்தானே முது வாய் இரவலன்
வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என – திரு 284,285

மேல்


இரவும் (1)

இரவும் பகலும் மயங்கி கையற்று – நெடு 47

மேல்


இரிய (1)

கோழி வய பெடை இரிய கேழலொடு – திரு 311

மேல்


இரீஇ (1)

சில் பலி செய்து பல் பிரப்பு இரீஇ
சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து – திரு 234,235

மேல்


இரு (7)

இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை – திரு 57
அங்குசம் கடாவ ஒரு கை இரு கை – திரு 110
ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை – திரு 111
இரு_மூன்று எய்திய இயல்பினின் வழாஅது – திரு 177
அகல் இரு விசும்பில் துவலை கற்ப – நெடு 20
இரு கோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர – நெடு 35
இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு – நெடு 74

மேல்


இரு_மூன்று (1)

இரு_மூன்று எய்திய இயல்பினின் வழாஅது – திரு 177

மேல்


இருந்த (1)

புடை திரண்டு இருந்த குடத்த இடை திரண்டு – நெடு 121

மேல்


இருப்ப (1)

மதலை பள்ளி மாறுவன இருப்ப
கடி உடை வியல் நகர் சிறு குறும் தொழுவர் – நெடு 48,49

மேல்


இருபிறப்பாளர் (1)

இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல – திரு 182

மேல்


இரும் (7)

இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த – திரு 72
இரும் பிடி குளிர்ப்ப வீசி பெரும் களிற்று – திரு 304
இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன – திரு 312
இரும் களி பரந்த ஈர வெண் மணல் – நெடு 16
பல் இரும் கூந்தல் சில் மலர் பெய்ம்-மார் – நெடு 54
இரும் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப – நெடு 56
இரும் சேற்று தெருவின் எறி துளி விதிர்ப்ப – நெடு 180

மேல்


இரும்பு (2)

இரும்பு செய் விளக்கின் ஈர் திரி கொளீஇ – நெடு 42
பரு இரும்பு பிணித்து செவ்வரக்கு உரீஇ – நெடு 80

மேல்


இருவர் (1)

இருவர் சுட்டிய பல் வேறு தொல் குடி – திரு 178

மேல்


இருள் (4)

இருள் பட பொதுளிய பராரை மராஅத்து – திரு 10
மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க – திரு 91
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து – திரு 293
பல் வேறு பள்ளி-தொறும் பாய் இருள் நீங்க – நெடு 105

மேல்


இல் (12)

மறு இல் கற்பின் வாள்_நுதல் கணவன் – திரு 6
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து – திரு 60
தா இல் கொள்கை தம் தொழில் முடி-மார் – திரு 89
துனி இல் காட்சி முனிவர் முன் புக – திரு 137
புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை – திரு 138
மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க – திரு 147
தாமரை பயந்த தா இல் ஊழி – திரு 164
பகலில் தோன்றும் இகல் இல் காட்சி – திரு 166
தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் – திரு 175
தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம் – திரு 210
கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல்
தசம் நான்கு எய்திய பணை மருள் நோன் தாள் – நெடு 114,115
புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல்
தளிர் ஏர் மேனி தாய சுணங்கின் – நெடு 147,148

மேல்


இல்லா (1)

புரையுநர் இல்லா புலமையோய் என – திரு 280

மேல்


இலை (3)

சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் – திரு 46
முடித்த குல்லை இலை உடை நறும் பூ – திரு 201
கூர் உளி குயின்ற ஈர் இலை இடை இடுபு – நெடு 119

மேல்


இழிதரும் (1)

இழுமென இழிதரும் அருவி – திரு 316

மேல்


இழுமென (1)

இழுமென இழிதரும் அருவி – திரு 316

மேல்


இழை (3)

நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை
சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி – திரு 18,19
இழை அணி சிறப்பின் பழையோள் குழவி – திரு 259
மடை மாண் நுண் இழை பொலிய தொடை மாண்டு – நெடு 124

மேல்


இள (2)

குவி முகிழ் இள முலை கொட்டி விரி மலர் – திரு 35
மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி – திரு 290

மேல்


இளநீர் (1)

இளநீர் விழு குலை உதிர தாக்கி – திரு 308

மேல்


இளமை (1)

அறு_நான்கு இரட்டி இளமை நல் யாண்டு – திரு 179

மேல்


இறந்து (1)

துவலை தண் துளி பேணார் பகல் இறந்து
இரு கோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர – நெடு 34,35

மேல்


இறால் (1)

தண் கமழ் அலர் இறால் சிதைய நன் பல – திரு 300

மேல்


இறை (1)

வெள்ளி வள்ளி வீங்கு இறை பணை தோள் – நெடு 36

மேல்


இறைஞ்சிய (1)

தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல் – நெடு 174

மேல்


இன் (10)

நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப – திரு 65
பாடு இன் படு மணி இரட்ட ஒரு கை – திரு 115
மென் மொழி மேவலர் இன் நரம்பு உளர – திரு 142
பொன் உரை கடுக்கும் திதலையர் இன் நகை – திரு 145
நரம்பு ஆர்த்து அன்ன இன் குரல் தொகுதியொடு – திரு 212
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க – திரு 240
தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை – நெடு 68
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை – நெடு 99
கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல் – நெடு 114
இன்னே வருகுவர் இன் துணையோர் என – நெடு 155

மேல்


இன்புறு (1)

இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது – நெடு 46

மேல்


இன்றி (2)

மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க – திரு 91
மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க – திரு 147

மேல்


இன்று (2)

நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின் – திரு 143
அன்பு உடை நன் மொழி அளைஇ விளிவு இன்று
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து – திரு 292,293

மேல்


இன்னா (1)

இன்னா அரும் படர் தீர விறல் தந்து – நெடு 167

மேல்


இன்னே (3)

இன்னே பெறுதி நீ முன்னிய வினையே – திரு 66
இன்னே வருகுவர் இன் துணையோர் என – நெடு 155
இன்னே முடிக தில் அம்ம மின் அவிர் – நெடு 168

மேல்


இன (1)

ஏறு உடை இன நிரை வேறு புலம் பரப்பி – நெடு 4

மேல்


இனிது (1)

ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி – திரு 93

மேல்


இனியவும் (1)

இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி – திரு 286

மேல்