வை – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வை 2
வைக்க 3
வைக்கவிலையோ 1
வைக்கவும் 1
வைக்கவேண்டும் 1
வைக்கின்ற 3
வைக்கும் 1
வைகி 1
வைகியும் 1
வைகியே 1
வைகினும் 1
வைகும் 1
வைச்சிருக்கும் 1
வைத்த 17
வைத்தது 3
வைத்ததும் 1
வைத்ததை 1
வைத்தவர்கள் 1
வைத்தனனே 1
வைத்தனையே 1
வைத்தனையோ 1
வைத்தாய் 3
வைத்தார் 2
வைத்தார்க்கு 1
வைத்தாரும் 1
வைத்தால் 1
வைத்தான் 1
வைத்திடவும் 1
வைத்திடா 1
வைத்திடாயோ 1
வைத்திடு 1
வைத்திடும் 2
வைத்திருக்க 1
வைத்திருந்த 3
வைத்திருந்தும் 1
வைத்திலேன் 1
வைத்திலையே 1
வைத்து 14
வைத்துக்கட்டு 1
வைத்துக்கொண்டு 2
வைத்தும் 1
வைத்துவைத்து 3
வைதிக 2
வைதிகமாம் 1
வைப்பது 11
வைப்பாம் 1
வைப்பாய் 1
வைப்பார் 1
வைப்பாளன் 1
வைப்பீர் 1
வைப்பே 1
வைப்பை 3
வையக 1
வையகத்தார் 1
வையகத்தே 1
வையகத்தோர் 1
வையம் 3
வையாதே 1
வையாய் 4
வைரமான 1
வைவதுவும் 1

வை (2)

உணர்த்தி மோன ஒண் சுடர் வை வாள் தந்த – தாயு:21 293/3
பாச சாலங்கள் எலாம் பற்று விட ஞான வை வாள் – தாயு:43 811/1
மேல்


வைக்க (3)

சோற்றை சுமத்தி நீ பந்தித்து வைக்க துருத்திக்குள் மது என்னவே துள்ளி துடித்து என்ன பேறு பெற்றேன் அருள் தோய நீ பாய்ச்சல்செய்து – தாயு:39 587/2
வாய் பேசா ஊமை என வைக்க என்றோ நீ மௌன – தாயு:43 761/1
தந்திரத்தை வைக்க தகாதோ பராபரமே – தாயு:43 951/2
மேல்


வைக்கவிலையோ (1)

வாழாது வாழவே இராமன் அடியால் சிலையும் மட மங்கை ஆகவிலையோ மணிமந்த்ரம் ஆதியால் வேண்டு சித்திகள் உலக மார்க்கத்தில் வைக்கவிலையோ
பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 12/3,4
மேல்


வைக்கவும் (1)

கால் வைக்கவும் கனவு கண்டேன் பராபரமே – தாயு:43 966/2
மேல்


வைக்கவேண்டும் (1)

அடி எடுத்து என் முடியில் இன்னம் வைக்கவேண்டும் அடி முடி ஒன்று இல்லாத அகண்ட வாழ்வே – தாயு:16 177/4
மேல்


வைக்கின்ற (3)

பார் ஆதி அண்டங்கள் அத்தனையும் வைக்கின்ற பரவெளியின் உண்மை காட்டி பற்று மன_வெளி காட்டி மன_வெளியினில் தோய்ந்த பாவியேன் பரிசு காட்டி – தாயு:9 84/1
வட கயிறு வெள் நரம்பா என்பு தசையினால் மதவேள் விழா நடத்த வைக்கின்ற கைத்தேரை வெண்ணீர் செந்நீர் கணீர் மல நீர் புண் நீர் இறைக்கும் – தாயு:11 101/2
மத்த வெறியினர் வேண்டும் மால் என்று தள்ளவும் எம்மாலும் ஒரு சுட்டும் அறவே வைக்கின்ற வைப்பாளன் மெளன தேசிகன் என்ன வந்த நின் அருள் வழி காண் – தாயு:12 121/2
மேல்


வைக்கும் (1)

தூக்கி வைக்கும் தாளை தொழுதிடும் நாள் எந்நாளோ – தாயு:45 1085/2
மேல்


வைகி (1)

நெறியின் வைகி வளர் செல்வமும் உதவி நோய்கள் அற்ற சுக வாழ்க்கையாய் நியமம் ஆதி நிலை நின்று ஞான நெறி நிஷ்டை கூடவும் எந்நாளுமே – தாயு:13 128/2
மேல்


வைகியும் (1)

தீயினிடை வைகியும் தோயம்-அதில் மூழ்கியும் தேகங்கள் என்பெலும்பாய் தெரிய நின்றும் சென்னி மயிர்கள் கூடா குருவி தெற்ற வெயிலூடு இருந்தும் – தாயு:8 70/2
மேல்


வைகியே (1)

விரவும் அறு_சுவையினோடு வேண்டுவ புசித்து அரையில் வேண்டுவ எலாம் உடுத்து மேடை மாளிகை ஆதி வீட்டினிடை வைகியே வேறு ஒரு வருத்தம் இன்றி – தாயு:10 97/3
மேல்


வைகினும் (1)

கொந்து அவிழ் மலர் சோலை நல் நீழல் வைகினும் குளிர் தீம் புனல் கை அள்ளி கொள்ளுகினும் அ நீரிடை திளைத்து ஆடினும் குளிர் சந்த வாடை மடவார் – தாயு:11 110/1
மேல்


வைகும் (1)

கோலம் படைத்து கல்_ஆல் அடி கீழ் வைகும் கோவுக்கு அன்பாம் – தாயு:27 435/3
மேல்


வைச்சிருக்கும் (1)

வைச்சிருக்கும் மாதர் மயக்கு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1133/2
மேல்


வைத்த (17)

ஆசைக்கு ஓர் அளவு இல்லை அகிலம் எல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக அம் பொன் மிக வைத்த பேரும் – தாயு:2 13/1
தேசுபெற நீ வைத்த சின்முத்திராங்குச செம் கைக்கு உளே அடக்கி சின்மயானந்த சுக_வெள்ளம் படிந்து நின் திரு_அருள் பூர்த்தியான – தாயு:5 37/3
வந்தது ஓர் வாழ்வும் ஓர் இந்த்ரஜால கோலம் வஞ்சனை பொறாமை லோபம் வைத்த மனமாம் கிருமி சேர்ந்த மல_பாண்டமோ வஞ்சனை இலாத கனவே – தாயு:12 113/2
சென்றிடவே பொருளை வைத்த நாவலோய் நம் சிவன் அப்பா என்ற அருள் செல்வ தேவே – தாயு:14 161/4
நன்று தீது அற வைத்த நடுவதே – தாயு:18 202/4
வைத்த தேகம் வருந்த வருந்திடும் – தாயு:18 203/1
வைத்த ஐய அருள் செம்பொன் சோதியே – தாயு:18 203/4
வைத்த அருள் மௌன வள்ளலையே நித்தம் அன்பு – தாயு:28 488/2
வைத்த மவுனத்தாலே மாயை மனம் இறந்து – தாயு:28 540/3
பார் ஆதி வைத்த பதியே பராபரமே – தாயு:33 560/4
வைத்த பொருள் உடல் ஆவி மூன்றும் நின் கைவசம் எனவே யான் கொடுக்க வாங்கிக்கொண்டு – தாயு:41 601/1
மாடு மக்கள் சிற்றிடையார் செம்பொன் ஆடை வைத்த கன தனம் மேடை மாட கூடம் – தாயு:41 603/1
ஓகோ உனை பிரிந்தார் உள்ளம் கனலில் வைத்த
பாகோ மெழுகோ பகராய் பராபரமே – தாயு:43 665/1,2
வான் ஆதி நீ எனவே வைத்த மறை என்னையும் நீ – தாயு:43 743/1
வைத்த கர்ப்பூரம் போல் வயங்கும் பராபரமே – தாயு:43 880/2
வைத்த சுவர் அலம்பின் மண் போமோ மாயையினோர்க்கு – தாயு:43 929/1
மால் வைத்த சிந்தை மயக்கு_அற என் சென்னி மிசை – தாயு:43 966/1
மேல்


வைத்தது (3)

என்னை இலக்காக வைத்தது என்னே பராபரமே – தாயு:43 901/2
மண்ணான வீட்டில் என்னை வைத்தது என்னோ பைங்கிளியே – தாயு:44 1078/2
பித்தன் இன்று பேசவே வைத்தது என்ன வாரமே – தாயு:53 1417/2
மேல்


வைத்ததும் (1)

வான் ஆக அ முதலே நிற்கும் நிலை நம்மால் மதிப்பு அரிதாம் என மோனம் வைத்ததும் உன் மனமே – தாயு:17 193/3
மேல்


வைத்ததை (1)

சொல்லை என்-பால் வைத்ததை என் சொல்வேன் பராபரமே – தாயு:43 963/2
மேல்


வைத்தவர்கள் (1)

வைத்தவர்கள் வாழி குரு வாழி பராபரமே – தாயு:43 1017/2
மேல்


வைத்தனனே (1)

துன்ற வைத்தனனே அருள் சோதி நீ – தாயு:18 202/2
மேல்


வைத்தனையே (1)

மாறாத கவலையுடன் சுழல என்னை வைத்தனையே பரமே நின் மகிமை நன்றே – தாயு:42 609/2
மேல்


வைத்தனையோ (1)

மாயை பெரும் படைக்கே இலக்கா எனை வைத்தனையோ
நீ எப்படி வகுத்தாலும் நன்றே நின் பெரும் கருணை – தாயு:27 401/2,3
மேல்


வைத்தாய் (3)

நான் நான் இங்கு எனும் அகந்தை எனக்கு ஏன் வைத்தாய் நல்_வினை தீ_வினை எனவே நடுவே நாட்டி – தாயு:16 179/1
ஊன் ஆரும் உடல் சுமை என் மீது ஏன் வைத்தாய் உயிர் எனவும் என்னை ஒன்றா உள் ஏன் வைத்தாய் – தாயு:16 179/2
ஊன் ஆரும் உடல் சுமை என் மீது ஏன் வைத்தாய் உயிர் எனவும் என்னை ஒன்றா உள் ஏன் வைத்தாய்
ஆனாமையாய் அகில நிகில பேதம் அனைத்தின் உள்ளும் தான் ஆகி அறிவு ஆனந்த – தாயு:16 179/2,3
மேல்


வைத்தார் (2)

நேரே-தான் இரவு பகல் கோடா வண்ணம் நித்தம் வர உங்களை இ நிலைக்கே வைத்தார்
ஆரே அங்கு அவர் பெருமை என்னே என்பேன் அடிக்கின்ற காற்றே நீ யாராலே-தான் – தாயு:14 157/1,2
கரையும் இன்றி உன்னை வைத்தார் யாரே என்பென் கானகத்தின் பைங்கிளிகாள் கமலம் மேவும் – தாயு:14 159/2
மேல்


வைத்தார்க்கு (1)

ஆவிக்குள் நின்ற உனக்கு அன்பு_வைத்தார்க்கு அஞ்சல் என்பாய் – தாயு:33 563/2
மேல்


வைத்தாரும் (1)

வைத்தாரும் உண்டோ என் வாழ்வே பராபரமே – தாயு:43 879/2
மேல்


வைத்தால் (1)

வாழ்த்தும் நின் அருள் வாரம் வைத்தால் அன்றி – தாயு:18 214/1
மேல்


வைத்தான் (1)

தன் பாதம் சென்னியில் வைத்தான் என்னை தான் அறிந்தேன் மனம்-தான் இறந்தேனே – தாயு:54 1430/2
மேல்


வைத்திடவும் (1)

வாங்கினையே வேறும் உண்மை வைத்திடவும் கேட்டிடவும் – தாயு:28 536/3
மேல்


வைத்திடா (1)

வாடாது வாடும் என் முக வாட்டமும் கண்டு வாடா என கருணை நீ வைத்திடா வண்ணமே சங்கேதமா இந்த வன்மையை வளர்ப்பித்தது ஆர் – தாயு:12 115/3
மேல்


வைத்திடாயோ (1)

வாராயோ இன்னம் ஒரு காலானாலும் மலர் கால் என் சென்னி மிசை வைத்திடாயோ – தாயு:41 598/2
மேல்


வைத்திடு (1)

வைத்திடு இங்கு என்னை நின் அடி குடியா மறை முடி இருந்த வான் பொருளே – தாயு:24 358/4
மேல்


வைத்திடும் (2)

வஞ்சனை அழுக்காறு ஆதி வைத்திடும் பாண்டமான – தாயு:21 295/1
வைத்திடும் காலை பிடித்து கண்ணின் மார்பில் வைத்து அணைத்துக்கொண்டு கையால் வளைத்து கட்டி – தாயு:41 599/1
மேல்


வைத்திருக்க (1)

இல்லா இடத்தே எனை சும்மா வைத்திருக்க
கல்லாய் நீ-தான் ஓர் கவி – தாயு:28 472/3,4
மேல்


வைத்திருந்த (3)

வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயம் ஆகி மன வாக்கு எட்டா – தாயு:3 14/3
வந்து ஆடி திரிபவர்க்கும் பேசா மோனம் வைத்திருந்த மாதவர்க்கும் மற்றும் மற்றும் – தாயு:14 142/2
மண் ஆதி பூதம் எல்லாம் வைத்திருந்த நின் நிறைவை – தாயு:43 1006/1
மேல்


வைத்திருந்தும் (1)

வாயினால் பேசா மௌனத்தை வைத்திருந்தும்
தாய்_இலார் போல் நான் தளர்ந்தேன் பராபரமே – தாயு:43 691/1,2
மேல்


வைத்திலேன் (1)

எல்லை உன்னி எனை அங்கு வைத்திலேன்
வல்லை நீ என்னை வா என்றிடாவிடின் – தாயு:18 200/2,3
மேல்


வைத்திலையே (1)

போதத்திலே சற்றும் வைத்திலையே வெறும் புன்மை நெஞ்சே – தாயு:27 451/2
மேல்


வைத்து (14)

சொல்லானதில் சற்றும் வாராத பிள்ளையை தொட்டில் வைத்து ஆட்டிஆட்டி தொடையினை கிள்ளல் போல் சங்கற்பம் ஒன்றில் தொடுக்கும் தொடுத்து அழிக்கும் – தாயு:10 92/1
வைத்து எமை மயக்கி இரு கண் வலையை வீசியே மாயா விலாச மோக_வாரிதியில் ஆழ்த்திடும் பாழான சிற்றிடை மடந்தையர்கள் சிற்றின்பமோ – தாயு:10 98/2
வெம் தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்று உண்ணலாம் வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம் விண்ணவரை ஏவல்கொளலாம் – தாயு:12 118/2
வயம் மிகுந்து வரும் அமிர்த மண்டல மதிக்கு உளே மதியை வைத்து நான் வாய்மடுத்து அமிர்த_வாரியை பருகி மன்னும் ஆர் அமிர்த வடிவமாய் – தாயு:13 127/3
அயர்வு_அற சென்னியில் வைத்து ராஜாங்கத்தில் அமர்ந்தது வைதிக சைவம் அழகு இது அந்தோ – தாயு:14 141/4
வாயில் கும்பம் போல் கிடந்து புரள்வேன் வானின் மதி கதிரை முன்னிலையா வைத்து நேரே – தாயு:14 156/4
நேசிக்கும் சிந்தை நினைவுக்குள் உன்னை வைத்து
பூசிக்கும் தான் நிறைந்து பூரணமாய் யோசித்து – தாயு:28 491/1,2
ஏதும் அற நில் என்று உபாயமா வைத்து நினைவு எல்லாம் செய் வல்ல சித்தாம் இன்ப உருவை தந்த அன்னையே நின்னையே எளியேன் மறந்து உய்வனோ – தாயு:37 580/2
வைத்திடும் காலை பிடித்து கண்ணின் மார்பில் வைத்து அணைத்துக்கொண்டு கையால் வளைத்து கட்டி – தாயு:41 599/1
தாய் ஆன தண் அருளை நிரம்ப வைத்து தமியேனை புரவாமல் தள்ளித்தள்ளிப்போய் – தாயு:42 633/1
வஞ்சனையும் பொய்யும் உள்ளே வைத்து அழுக்காறாய் உளறும் – தாயு:43 675/1
வாரம் வைத்து காத்தனை நீ வாழி பராபரமே – தாயு:43 862/2
வாய் திறவா வண்ணம் எனை வைத்து ஆண்டார்க்கு என் துயரை – தாயு:44 1073/1
நின்ற நிலையே நிலையா வைத்து ஆனந்த நிலை தானே நிருவிகற்ப நிலையும் ஆகி – தாயு:52 1413/1
மேல்


வைத்துக்கட்டு (1)

வாராய் நெஞ்சே உன்றன் துன்_மார்க்கம் யாவையும் வைத்துக்கட்டு இங்கு – தாயு:27 450/1
மேல்


வைத்துக்கொண்டு (2)

வாராயோ என் ப்ராணநாதா என்பேன் வளைத்துவளைத்து எனை நீயா வைத்துக்கொண்டு
பூராயமா மேல் ஒன்று அறியா வண்ணம் புண்ணாளர் போல் நெஞ்சம் புலம்பி உள்ளே – தாயு:14 155/2,3
எண் தரும் நல் அகிலாண்ட கோடியை தன் அருள் வெளியில் இலக வைத்துக்கொண்டு
நின்ற அற்புதத்தை எவராலும் நிச்சயிக்க கூடா ஒன்றை – தாயு:26 390/3,4
மேல்


வைத்தும் (1)

ஆக்கி அளித்து துடைக்கும் தொழில் அத்தனை வைத்தும் எள்ளத்தனையேனும் – தாயு:54 1439/1
மேல்


வைத்துவைத்து (3)

வைத்துவைத்து பார்ப்பவரை தான் ஆக எந்நாளும் வளர்த்து காக்கும் – தாயு:26 396/3
வான் அந்தம் மண்ணின் அந்தம் வைத்துவைத்து பார்க்க எனக்கு – தாயு:43 648/1
வந்ததையும் போனவையும் வைத்துவைத்து பார்த்திருந்தால் – தாயு:43 808/1
மேல்


வைதிக (2)

வாயார உண்ட பேர் வாழ்த்துவதும் நொந்த பேர் வைவதுவும் எங்கள் உலக வாய்பாடு நிற்க நின் வைதிக ஒழுங்கு நினை வாழ்த்தினால் பெறு பேறு-தான் – தாயு:11 107/2
அயர்வு_அற சென்னியில் வைத்து ராஜாங்கத்தில் அமர்ந்தது வைதிக சைவம் அழகு இது அந்தோ – தாயு:14 141/4
மேல்


வைதிகமாம் (1)

வைதிகமாம் சைவ மவுனி மவுனத்து அளித்த – தாயு:45 1105/1
மேல்


வைப்பது (11)

மீட்டிடவும் வல்ல நீர் என் மன_கல்லை அனல் மெழுகு ஆக்கி வைப்பது அரிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 58/4
புங்க வெண்_கோட்டானை பதம் புந்தி வைப்பது எந்நாளோ – தாயு:45 1091/2
செம் சரண சேவடியை சிந்தை வைப்பது எந்நாளோ – தாயு:45 1092/2
ஆள வந்த கோலங்கட்கு அன்பு வைப்பது எந்நாளோ – தாயு:45 1101/2
கொள் செம் கையர் தாள் வாரம் வைப்பது எந்நாளோ – தாயு:45 1108/2
இ மல காயத்துள் இகழ்ச்சி வைப்பது எந்நாளோ – தாயு:45 1124/2
அவ்வாறாய் நின்ற பொருட்கு அன்பு வைப்பது எந்நாளோ – தாயு:45 1211/2
அடுத்தோர் அடுத்த பொருட்கு ஆர்வம் வைப்பது எந்நாளோ – தாயு:45 1248/2
அற்றவர்கட்கு அற்ற பொருட்கு அன்பு வைப்பது எந்நாளோ – தாயு:45 1251/2
ஆறும் உணர்ந்தோர் உணர்வுக்கு அன்பு வைப்பது எந்நாளோ – தாயு:45 1253/2
செவ் அறிவை நாடி மிக சிந்தை வைப்பது எந்நாளோ – தாயு:45 1256/2
மேல்


வைப்பாம் (1)

அண்டருக்கும் எய்ப்பில் வைப்பாம் ஆர் அமுதை என் அகத்தில் – தாயு:45 1199/1
மேல்


வைப்பாய் (1)

எனக்கு ஓர் சுதந்திரம் இல்லை அப்பா எனக்கு எய்ப்பில் வைப்பாய்
மன கோது அகற்றும் பரம்பொருளே என்னை வாழ்வித்திட – தாயு:27 416/1,2
மேல்


வைப்பார் (1)

நூலேணி விண் ஏற நூற்கு பருத்தி வைப்பார்
போலே கருவி நல் நூல் போதம் பராபரமே – தாயு:43 821/1,2
மேல்


வைப்பாளன் (1)

மத்த வெறியினர் வேண்டும் மால் என்று தள்ளவும் எம்மாலும் ஒரு சுட்டும் அறவே வைக்கின்ற வைப்பாளன் மெளன தேசிகன் என்ன வந்த நின் அருள் வழி காண் – தாயு:12 121/2
மேல்


வைப்பீர் (1)

கேட்டது கொடுத்து வர நிற்கவைப்பீர் பிச்சை கேட்டு பிழைப்போரையும் கிரீட_பதி ஆக்குவீர் கற்பாந்த வெள்ளம் ஒரு கேணியிடை குறுக வைப்பீர்
ஓட்டினை எடுத்து ஆயிரத்தெட்டு மாற்றாக ஒளி விடும் பொன் ஆக்குவீர் உரகனும் இளைப்பாற யோக தண்டத்திலே உலகு சுமையாக அருளால் – தாயு:7 58/2,3
மேல்


வைப்பே (1)

அப்பா என் எய்ப்பில் வைப்பே ஆற்றுகிலேன் போற்றி என்று – தாயு:43 660/1
மேல்


வைப்பை (3)

பேர்_அனந்தம் பேசி மறை அனந்தம் சொலும் பெரிய மெளனத்தின் வைப்பை பேசு அரும் அனந்த பத ஞான ஆனந்தமாம் பெரிய பொருளை பணிகுவாம் – தாயு:1 2/4
செகத்தை எல்லாம் அணுவளவும் சிதறா வண்ணம் சேர்த்து அணுவில் வைப்பை அணு திரளை எல்லாம் – தாயு:40 593/1
வைப்பை அழியா நிலையா வையாய் பராபரமே – தாயு:43 704/2
மேல்


வையக (1)

வையக மாதர் சகத்தையும் பொன்னையும் மாயை மல – தாயு:27 453/1
மேல்


வையகத்தார் (1)

வாழ்வு எனவும் தாழ்வு எனவும் இரண்டா பேசும் வையகத்தார் கற்பனையாம் மயக்கம் ஆன – தாயு:42 611/1
மேல்


வையகத்தே (1)

மனமே நம் போல உண்டோ சுத்த மூடர் இ வையகத்தே – தாயு:27 437/4
மேல்


வையகத்தோர் (1)

மெய்யாக ஓர் சொல் விளம்பினர் யார் வையகத்தோர்
சாற்று அரிது என்று ஏசற்றார் தன்_அனையாய் முக்கண் எந்தை – தாயு:28 485/2,3
மேல்


வையம் (3)

ஏகமான பொயை மெய் என கருதி ஐய வையம் மிசை வாடவோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 122/4
வையம் மீதினில் பரம்பரை யாதினும் மருவும் – தாயு:24 350/2
வையம் கன மயக்கம் மாற்றிடவும் காண்பேனோ – தாயு:46 1328/2
மேல்


வையாதே (1)

ஓராதே ஒன்றையும் நீ முன்னிலை வையாதே உள்ளபடி முடியும் எலாம் உள்ளபடி காணே – தாயு:17 189/4
மேல்


வையாய் (4)

வண்ணம் திரு_கருணை வையாய் பராபரமே – தாயு:43 695/2
வரவும் திரு_கருணை வையாய் பராபரமே – தாயு:43 702/2
வைப்பை அழியா நிலையா வையாய் பராபரமே – தாயு:43 704/2
என்றும் என்னை வையாய் இறையே பராபரமே – தாயு:43 925/2
மேல்


வைரமான (1)

வன் நெஞ்சோ இரங்காத மர நெஞ்சோ இருப்பு நெஞ்சோ வைரமான
கல் நெஞ்சோ அலது மண்ணாங்கட்டி நெஞ்சோ எனது நெஞ்சம் கருதில்-தானே – தாயு:24 325/3,4
மேல்


வைவதுவும் (1)

வாயார உண்ட பேர் வாழ்த்துவதும் நொந்த பேர் வைவதுவும் எங்கள் உலக வாய்பாடு நிற்க நின் வைதிக ஒழுங்கு நினை வாழ்த்தினால் பெறு பேறு-தான் – தாயு:11 107/2

மேல்