வே – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வேகம் 1
வேசற்று 1
வேசற்றேன் 1
வேட்கை 4
வேட்கையில் 1
வேட்டை 1
வேட 1
வேடங்கள் 1
வேடம் 2
வேடர் 2
வேடருக்கும் 1
வேண்டா 5
வேண்டாத 1
வேண்டாம் 1
வேண்டாவோ 7
வேண்டி 3
வேண்டிட 1
வேண்டிய 2
வேண்டில் 2
வேண்டிலேன் 1
வேண்டின் 2
வேண்டினர்க்கு 1
வேண்டு 2
வேண்டும் 20
வேண்டுமே 1
வேண்டுவ 6
வேண்டுவன 1
வேண்டுவனே 1
வேண்டுவேன் 2
வேண்டேன் 1
வேண்டேனை 1
வேணி 1
வேத 11
வேதக 1
வேதகமாய் 1
வேதகமே 1
வேதத்திலே 1
வேதம் 5
வேதமுடன் 2
வேதமே 2
வேதன் 1
வேதனும் 1
வேதனை 1
வேதனைக்கு 1
வேதனைக்கும் 1
வேதனைகள் 1
வேதாகம 1
வேதாகமங்கள் 1
வேதாகமத்தின் 1
வேதாந்த 20
வேதாந்தம் 1
வேதாந்தமே 1
வேதாவை 1
வேதிசெய்து 1
வேதித்து 1
வேதியன் 1
வேதியனே 1
வேந்தர் 1
வேந்தரே 1
வேந்தன் 2
வேப்பங்காய் 1
வேம்பு 1
வேரற 1
வேரை 1
வேல் 1
வேலை 5
வேலை_இலா 1
வேழமாம் 1
வேள் 3
வேளை 2
வேளைக்கு 1
வேளையில் 3
வேளையிலும் 1
வேறதாம் 1
வேறதாய் 1
வேறா 1
வேறாகி 1
வேறாய் 1
வேறு 32
வேறுபடு 1
வேறுபடும் 1
வேறும் 9
வேறுவேறாகி 1
வேறோ 4

வேகம் (1)

திக்கொடு திக்_அந்தமும் மன_வேகம் என்னவே சென்று ஓடி ஆடி வருவீர் செம்பொன் மக மேருவொடு குண மேரு என்னவே திகழ் துருவம் அளவு அளாவி – தாயு:7 57/1
மேல்


வேசற்று (1)

விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன் மெய் சிலிர்த்து இரு கை கூப்பி விண் மாரி என என் இரு கண் மாரி பெய்யவே வேசற்று அயர்ந்தேன் இனி யான் – தாயு:9 83/2
மேல்


வேசற்றேன் (1)

வீணே பிறந்து இறந்து வேசற்றேன் ஆசை அற – தாயு:46 1345/1
மேல்


வேட்கை (4)

விடக்கு துருத்தியை கரு மருந்து கூட்டை வெட்டவெட்ட தளிர்க்கும் வேட்கை மரம் உறுகின்ற சுடுகாட்டை முடிவிலே மெய் போல் இருந்து பொய்யாம் – தாயு:11 101/3
விடுத்தவாறும் கண்ணீரொடு கம்பலை விலகுமாறும் என் வேட்கை ப்ரவாகத்தை – தாயு:31 556/3
வெம் சேல் எனும் விழியார் வேட்கை நஞ்சுக்கு அஞ்சினரை – தாயு:45 1087/1
விண்டு மொழி குளறி வேட்கை மது மொண்டுதரும் – தாயு:45 1140/1
மேல்


வேட்கையில் (1)

விட திரள் அனைய காம வேட்கையில் அழுந்தி மாயை – தாயு:21 300/3
மேல்


வேட்டை (1)

வேட்டை புல புலையர் மேவாத வண்ணம் மன – தாயு:45 1147/1
மேல்


வேட (1)

ஆங்காரம் ஆன குல வேட வெம் பேய் பாழ்த்த ஆணவத்தினும் வலிது காண் அறிவினை மயக்கிடும் நடு அறியவொட்டாது யாதொன்று தொடினும் அதுவாய் – தாயு:5 45/1
மேல்


வேடங்கள் (1)

வேறுபடு வேடங்கள் கொள்ள அறிவார் ஒன்றை மெணமெணென்று அகம் வேறதாம் வித்தை அறிவார் எமை போலவே சந்தை போல் மெய்ந்நூல் விரிக்க அறிவார் – தாயு:8 69/2
மேல்


வேடம் (2)

பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி இ பொய் வேடம் மிகுதி காட்டி பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நல் குணம் எலாம் போக்கிலே போகவிட்டு – தாயு:5 40/2
மெய்த்த குலம் கல்வி புனை வேடம் எலாம் ஓடவிட்ட – தாயு:45 1250/1
மேல்


வேடர் (2)

ஐவர் என்ற புல வேடர் கொட்டம்-அது அடங்க மர்க்கடவன் முட்டியாய் அடவி நின்று மலை அருகில் நின்று சருகு ஆதி தின்று பனி வெயிலினால் – தாயு:13 125/1
வாயில் ஓர் ஐந்தில் புலன் எனும் வேடர் வந்து எனை ஈர்த்து வெம் காம – தாயு:22 306/1
மேல்


வேடருக்கும் (1)

அஞ்சு புல வேடருக்கும் ஆற்றேன் பராபரமே – தாயு:43 900/2
மேல்


வேண்டா (5)

உள்ளபடி என்னவும் நீ மற்று ஒன்றை தொடர்ந்திட்டு உளம் கருத வேண்டா நிஷ்களங்க மதி ஆகி – தாயு:17 190/1
பொய் வந்து உழலும் சமய நெறி புகுத வேண்டா முத்தி தரும் – தாயு:30 554/3
துச்சன் என வேண்டா இ தொல் உலகில் அல்லல் கண்டால் – தாயு:43 687/1
ஈனம் தரும் நாடு இது நமக்கு வேண்டா என்று – தாயு:45 1177/1
வேண்டா விருப்பும் வெறுப்பும் அந்த வில்லங்கத்தாலே விளையும் சனனம் – தாயு:54 1444/1
மேல்


வேண்டாத (1)

முத்தி நெறி வேண்டாத மூடனேன் ஆ கெடுவேன் – தாயு:33 567/2
மேல்


வேண்டாம் (1)

கைவிடவும் வேண்டாம் என் கண்ணே பராபரமே – தாயு:43 694/2
மேல்


வேண்டாவோ (7)

பிரிவு_அற்று இருக்க வேண்டாவோ பேயேற்கு இனி நீ பேசாயே – தாயு:20 283/4
பண்டும் இன்றும் நின்ற என்னை பார்த்து இரங்க வேண்டாவோ – தாயு:49 1379/2
போதனை தந்து ஐயா புலப்படுத்த வேண்டாவோ – தாயு:49 1380/2
நின்னை அறிந்து என் அறிவை நீங்கி நிற்க வேண்டாவோ – தாயு:49 1381/2
வெள்ளம் எனக்கு ஐயா வெளிப்படுத்த வேண்டாவோ – தாயு:49 1382/2
தொண்டனேற்கு இன்பம் தொகுத்து இரங்க வேண்டாவோ – தாயு:49 1383/2
வாராய் எனவும் வழிகாட்ட வேண்டாவோ – தாயு:49 1384/2
மேல்


வேண்டி (3)

கரந்து நின் கண்ணால் துயில்பெறல் வேண்டி கருதினேன் கருத்து இது-தானே – தாயு:19 276/4
ஆனந்தம் வேண்டி அலந்தேன் பராபரமே – தாயு:43 655/2
தொடுத்தது ஒன்றை யான் வேண்டி சொல்லேன் பராபரமே – தாயு:43 854/2
மேல்


வேண்டிட (1)

தாரணி உள்ள மட்டுமே வணங்க தமியனேன் வேண்டிட தகுமே – தாயு:19 272/4
மேல்


வேண்டிய (2)

விந்தைபெற அறு_சுவையில் வந்தது என அமுது உண்ணும் வேளையிலும் மாலை கந்தம் வெள்ளிலை அடைக்காய் விரும்பி வேண்டிய வண்ணம் விளையாடி விழி துயிலினும் – தாயு:11 110/3
வேண்டிய நாள் என்னோடும் பழகிய நீ எனை பிரிந்த விசாரத்தாலே – தாயு:26 399/1
மேல்


வேண்டில் (2)

பிறியாமல் தண் அருளே கோயில் ஆன பெரிய பரம் பதி-அதனை பெறவே வேண்டில்
நெறியாக கூறுவன் கேள் எந்த நாளும் நிர்க்குணம் நிற்கு உளம் வாய்த்து நீடு வாழ்க – தாயு:14 150/2,3
குடிகெட வேண்டில் பணி அற நிற்றல் குணம் என புன்னகை காட்டி – தாயு:19 278/3
மேல்


வேண்டிலேன் (1)

துன்பமாய் அலையவோ உலக நடை ஐய ஒரு சொப்பனத்திலும் வேண்டிலேன் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 80/4
மேல்


வேண்டின் (2)

வான் காண வேண்டின் மலை ஏறல் ஒக்கும் உன்னை – தாயு:43 735/1
அன்று என்றும் ஆம் என்றும் உண்டோ உனக்கு ஆனந்தம் வேண்டின் அறிவு ஆகி சற்றே – தாயு:54 1450/1
மேல்


வேண்டினர்க்கு (1)

முடிவு_இலா வீட்டின் வாழ்க்கை வேண்டினர்க்கு உன் மோனம் அல்லால் வழி உண்டோ – தாயு:19 281/2
மேல்


வேண்டு (2)

வாழாது வாழவே இராமன் அடியால் சிலையும் மட மங்கை ஆகவிலையோ மணிமந்த்ரம் ஆதியால் வேண்டு சித்திகள் உலக மார்க்கத்தில் வைக்கவிலையோ – தாயு:2 12/3
வேண்டு விருப்பொடு வெறுப்பு சமீபம் தூரம் விலகல் அணுகுதல் முதலாம் விவகாரங்கள் – தாயு:14 144/3
மேல்


வேண்டும் (20)

சீராய் இருக்க நினது அருள் வேண்டும் ஐயனே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 34/4
வீணிலே அலையாமல் மலை_இலக்கு ஆக நீர் வெளிப்பட தோற்றல் வேண்டும் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 63/4
மத்த வெறியினர் வேண்டும் மால் என்று தள்ளவும் எம்மாலும் ஒரு சுட்டும் அறவே வைக்கின்ற வைப்பாளன் மெளன தேசிகன் என்ன வந்த நின் அருள் வழி காண் – தாயு:12 121/2
சுத்த நித்த இயல் பாகுமோ உனது விசுவ மாயை நடுவாகவே சொல்ல வேண்டும் வகை நல்ல காதி கதை சொல்லும் மாயையினும் இல்லை என் – தாயு:13 130/3
வான் முக முளரி என்கோ மற்று என்கோ விளம்பல் வேண்டும் – தாயு:15 165/4
நின்ற தன்மைக்கு இரங்கும் வயிராக்கியன் அல்லேன் நிவர்த்தி அவை வேண்டும் இந்த நீலனுக்கே – தாயு:16 180/2
வேண்டும் சீர் அருள் மெய்_அன்பர்க்கே அன்பு – தாயு:18 208/1
நிற்றல் வேண்டும் நிருவிகற்ப சுகம் – தாயு:18 229/3
வேண்டும் யாவும் இறந்து வெளியிடை – தாயு:18 258/1
செயலாக முடித்திடல் வேண்டும் சச்சிதானந்த சற்குருவே – தாயு:19 279/4
மறம் மலி உலக வாழ்க்கையே வேண்டும் வந்து நின் அன்பர்-தம் பணியாம் – தாயு:22 308/1
துறவு-அது வேண்டும் மெளனியாய் எனக்கு தூய நல் அருள் தரின் இன்னம் – தாயு:22 308/3
பிறவியும் வேண்டும் யான் எனது இறக்கப்பெற்றவர் பெற்றிடும் பேறே – தாயு:22 308/4
விடத்தை காத்திட்ட கண்டத்தோய் நின் அருள் வேண்டும் – தாயு:24 348/4
தன்னது வழி அற்று என்-உழை கிடப்ப தண் அருள் வரம்-அது வேண்டும் – தாயு:24 361/4
சிறுமை கெட பெருமையின் நின் சென்ம தேயத்தினில் நீ செல்லல் வேண்டும் – தாயு:26 398/4
வீடும் என்-பால் தொடர்ச்சியோ இடைவிடாமல் மிக்க கதி வீடு அன்றோ விளங்கல் வேண்டும் – தாயு:41 603/2
அடிமைகொளல் வேண்டும் அரசே பராபரமே – தாயு:43 836/2
நின்னை சரண்புகுந்தால் நீ காக்கல் வேண்டும் அல்லால் – தாயு:43 898/1
வெள்ள மலர் கருணை வேண்டும் பராபரமே – தாயு:43 1003/2
மேல்


வேண்டுமே (1)

தெண்டன் என் பொய்ம்மை தீர்த்திடல் வேண்டுமே – தாயு:18 257/4
மேல்


வேண்டுவ (6)

போனகம் இருக்கின்ற சாலையிடை வேண்டுவ புசித்தற்கு இருக்குமது போல் புருஷர் பெறு தர்மாதி வேதமுடன் ஆகமம் புகலும் அதினால் ஆம் பயன் – தாயு:5 41/1
விரவும் அறு_சுவையினோடு வேண்டுவ புசித்து அரையில் வேண்டுவ எலாம் உடுத்து மேடை மாளிகை ஆதி வீட்டினிடை வைகியே வேறு ஒரு வருத்தம் இன்றி – தாயு:10 97/3
விரவும் அறு_சுவையினோடு வேண்டுவ புசித்து அரையில் வேண்டுவ எலாம் உடுத்து மேடை மாளிகை ஆதி வீட்டினிடை வைகியே வேறு ஒரு வருத்தம் இன்றி – தாயு:10 97/3
வேண்டுவ படைத்தாய் நுந்தை விதிப்படி புரந்தான் அத்தை – தாயு:15 166/1
இரப்பான் அங்கு ஒருவன் அவன் வேண்டுவ கேட்டு அருள்செய் என ஏசற்றே-தான் – தாயு:24 323/1
மர பான்மை நெஞ்சினன் யான் வேண்டுவ கேட்டு இரங்கு எனவே மெளனத்தோடு அந்தர – தாயு:24 323/3
மேல்


வேண்டுவன (1)

நாள் இது வரைக்கும் உன் அடிமை கூடவே சனனம் ஆனதோ அநந்தம் உண்டு நல சனன மீது இதனுள் அறிய_வேண்டுவன அறியலாம் – தாயு:13 126/2
மேல்


வேண்டுவனே (1)

என்றைக்கும் வேண்டுவனே யான் – தாயு:28 492/4
மேல்


வேண்டுவேன் (2)

விண் நிலவும் மதி அமுதம் ஒழியாது பொழியவே வேண்டுவேன் உமது அடிமை நான் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 60/4
வேண்டுவேன் இந்த உடல் மெய் உணரா பொய்யன் நான் – தாயு:28 493/3
மேல்


வேண்டேன் (1)

அன்றைக்கு உடல் வேண்டேன் ஐயா இ ஆக்கையையே – தாயு:28 492/3
மேல்


வேண்டேனை (1)

பொய் பணி வேண்டேனை பொருட்படுத்தி அண்ணல் என்-பால் – தாயு:44 1067/1
மேல்


வேணி (1)

நீர் பூத்த வேணி நிலவு எறிப்ப மன்று ஆடும் – தாயு:45 1083/1
மேல்


வேத (11)

விரிவாய பூதங்கள் ஒன்றோடொன்றாய் அழியும் மேற்கொண்ட சேடம் அதுவே வெறு வெளி நிராலம்பம் நிறை சூன்யம் உபசாந்த வேத வேதாந்த ஞானம் – தாயு:2 5/2
சந்ததமும் வேத மொழி யாதொன்று பற்றின் அது தான் வந்து முற்றும் எனலால் சகம் மீது இருந்தாலும் மரணம் உண்டு என்பது சதா_நிஷ்டர் நினைவதில்லை – தாயு:6 53/1
இந்த்ராதி தேவதைகள் பிரமாதி கடவுளர் இருக்கு ஆதி வேத முனிவர் எண் அரிய கணநாதர் நவநாத சித்தர்கள் இரவி மதி ஆதியோர்கள் – தாயு:6 53/3
பாகத்தினால் கவிதை பாடி படிக்கவோ பத்தி நெறி இல்லை வேத பாராயண பனுவல் மூவர் செய் பனுவல்-அது பகரவோ இசையும் இல்லை – தாயு:11 102/1
வேத வேதியன் வெள் விடை ஊர்தி மெய் – தாயு:18 243/2
இரவு பகல் நினைப்பு மறப்பு எனும் தொந்தம் அறியார்கள் இதயம் வேத
சிரம் என வாழ் பராபரத்தை ஆனந்தம் நீங்காத சிதாகாசத்தை – தாயு:26 395/3,4
சொல்லுமோ வேத தொனி – தாயு:28 473/4
வேத முதலாய் விளங்கும் சிவ வடிவாம் – தாயு:28 476/1
தண் நாறு சாந்தபத தற்பரமே நால் வேத
பண் நாறும் இன்ப பதியே பராபரமே – தாயு:33 564/3,4
வேத முதலான நல் ஆகம தன்மையை விளக்கும் உள்_கண்_இலார்க்கும் மிக்க நின் மகிமையை கேளாத செவிடர்க்கும் வீறு வாதம் புகலுவாய் – தாயு:37 580/3
வேதமே வேத முடிவான மோன வித்தே இங்கு என்னை இனி விட்டிடாதே – தாயு:41 605/2
மேல்


வேதக (1)

வேதக சின்மாத்திரமாய் எம்_அனோர்க்கும் வெளியாக வந்த ஒன்றே விமல வாழ்வே – தாயு:14 135/4
மேல்


வேதகமாய் (1)

வெல்ல உண்டு இங்கு உன்னையும் தான் ஆக கொண்டு வேதகமாய் பேசாமை விளங்கும்-தானே – தாயு:14 152/4
மேல்


வேதகமே (1)

விளங்க எனக்கு உள்ளுள்ளே விளங்காநின்ற வேதகமே போதகமே விமல வாழ்வே – தாயு:41 604/1
மேல்


வேதத்திலே (1)

வேதத்திலே தர்க்க வாதத்திலே விளங்காது விந்து – தாயு:27 451/3
மேல்


வேதம் (5)

எல்லாம் உன் அடிமையே எல்லாம் உன் உடைமையே எல்லாம் உன்னுடைய செயலே எங்கணும் வியாபி நீ என்று சொலும் இயல்பு என்று இருக்கு ஆதி வேதம் எல்லாம் – தாயு:6 49/1
மாக இந்த்ர தனு மின்னை ஒத்து இலக வேதம் ஓதிய குலாலனார் வனைய வெய்ய தடிகாரனான யமன் வந்து அடிக்கும் ஒரு மண்_கலத்து – தாயு:13 122/3
விமல முதல் குணம் ஆகி நூற்றெட்டு ஆதி வேதம் எடுத்தெடுத்து உரைத்த விருத்திக்கு ஏற்க – தாயு:14 136/1
வேதம் எத்தனை அத்தனை சிரத்தினும் விளங்கும் – தாயு:25 366/1
மின்னை நிகர்த்திட அழியா சொரூபானந்த சுடரை வேதம் ஆதி – தாயு:26 394/2
மேல்


வேதமுடன் (2)

போனகம் இருக்கின்ற சாலையிடை வேண்டுவ புசித்தற்கு இருக்குமது போல் புருஷர் பெறு தர்மாதி வேதமுடன் ஆகமம் புகலும் அதினால் ஆம் பயன் – தாயு:5 41/1
வேதமுடன் ஆகம புராணம் இதிகாசம் முதல் வேறும் உள கலைகள் எல்லாம் மிக்காக அத்துவித துவித மார்க்கத்தையே விரிவாய் எடுத்துரைக்கும் – தாயு:10 91/1
மேல்


வேதமே (2)

விண்ணே விண் ஆதி ஆம் பூதமே நாதமே வேதமே வேதாந்தமே மே தக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள் வித்தே அ வித்தின் முளையே – தாயு:6 52/3
வேதமே வேத முடிவான மோன வித்தே இங்கு என்னை இனி விட்டிடாதே – தாயு:41 605/2
மேல்


வேதன் (1)

வேலை_இலா வேதன் விதித்த இந்த்ரசால உடல் – தாயு:45 1122/1
மேல்


வேதனும் (1)

மிடியிட்ட வாழ்க்கையால் உப்பு இட்ட கலம் எனவும் மெய் எலாம் உள் உடைந்து வீறிட்ட செல்வர்-தம் தலைவாயில் வாசமாய் வேதனைகள் உற வேதனும்
துடியிட்ட வெம்_வினையை ஏவினான் பாவி நான் தொடரிட்ட தொழில்கள் எல்லாம் துண்டிட்ட சாண் கும்பியின் பொருட்டாய் அது உன் தொண்டர் பணி செய்வது என்றோ – தாயு:37 581/1,2
மேல்


வேதனை (1)

வேதனை வளர்த்திட சதுர்வேத வஞ்சன் விதித்தான் இ அல்லல் எல்லாம் வீழும்படிக்கு உனது மௌன மந்த்ராதிக்ய வித்தையை வியந்து அருள்வையோ – தாயு:37 585/2
மேல்


வேதனைக்கு (1)

போற்றேன் என்றாலும் என்னை புந்தி செயும் வேதனைக்கு இங்கு – தாயு:45 1241/1
மேல்


வேதனைக்கும் (1)

வஞ்ச நமன் வாதனைக்கும் வன் பிறவி வேதனைக்கும்
அஞ்சி உனை அடைந்தேன் ஐயா பராபரமே – தாயு:43 756/1,2
மேல்


வேதனைகள் (1)

மிடியிட்ட வாழ்க்கையால் உப்பு இட்ட கலம் எனவும் மெய் எலாம் உள் உடைந்து வீறிட்ட செல்வர்-தம் தலைவாயில் வாசமாய் வேதனைகள் உற வேதனும் – தாயு:37 581/1
மேல்


வேதாகம (1)

எந்தை வட ஆல் பரமகுரு வாழ்க வாழ அருளிய நந்தி மரபு வாழ்க என்று அடியர் மனம் மகிழ வேதாகம துணிபு இரண்டு இல்லை ஒன்று என்னவே – தாயு:5 38/3
மேல்


வேதாகமங்கள் (1)

விதிக்கும் பிரபஞ்சம் எல்லாம் சுத்த வெயில் மஞ்சள் என்னவே வேதாகமங்கள்
மதிக்கும் அதனை மதியார் அவர் மார்க்கம் துன்_மார்க்கம் சன்_மார்க்கமோ மானே – தாயு:54 1448/1,2
மேல்


வேதாகமத்தின் (1)

கைத்தலம் விளங்கும் ஒரு நெல்லி அம் கனி என கண்ட வேதாகமத்தின் காட்சி புருஷார்த்தம் அதில் மாட்சி பெறு முத்தி-அது கருதின் அனுமானம் ஆதி – தாயு:11 106/1
மேல்


வேதாந்த (20)

விரிவாய பூதங்கள் ஒன்றோடொன்றாய் அழியும் மேற்கொண்ட சேடம் அதுவே வெறு வெளி நிராலம்பம் நிறை சூன்யம் உபசாந்த வேத வேதாந்த ஞானம் – தாயு:2 5/2
சந்ததமும் எனது செயல் நினது செயல் யான் எனும் தன்மை நினை அன்றி இல்லா தன்மையால் வேறு அலேன் வேதாந்த சித்தாந்த சமரச சுபாவம் இதுவே – தாயு:2 8/1
வாராது எலாம் ஒழிய வருவன எலாம் எய்த மனது சாட்சியதாகவே மருவ நிலை தந்ததும் வேதாந்த சித்தாந்த மரபு சமரசமாகவே – தாயு:2 11/1
அருமை பெறு புகழ் பெற்ற வேதாந்த சித்தாந்தம் ஆதியாம் அந்தம் மீதும் அத்துவித நிலையராய் என்னை ஆண்டு உன் அடிமை ஆனவர்கள் அறிவினூடும் – தாயு:4 32/3
சாதிக்குதே இதனை வெல்லவும் உபாயம் நீ தந்து அருள்வது என்று புகல்வாய் சண்மதஸ்தாபனமும் வேதாந்த சித்தாந்த சமரச நிர்வாக நிலையும் – தாயு:5 39/3
தன் நிகர்_இல் லோபாதி பாழ்ம் பேய் பிடித்திட தரணி மிசை லோகாயதன் சமய நடை சாராமல் வேதாந்த சித்தாந்த சமரச சிவாநுபூதி – தாயு:5 40/3
மிக்க சித்திகள் எலாம் வல்ல நீர் அடிமை முன் விளங்கு வரு சித்தி இலிரோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 57/4
மீட்டிடவும் வல்ல நீர் என் மன_கல்லை அனல் மெழுகு ஆக்கி வைப்பது அரிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 58/4
மேரு என அசையாமல் நிற்க வல்லீர் உமது மே தக்க சித்தி எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 59/4
விண் நிலவும் மதி அமுதம் ஒழியாது பொழியவே வேண்டுவேன் உமது அடிமை நான் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 60/4
மெய் திகழும் அஷ்டாங்க யோக பூமிக்குள் வளர் வேந்தரே குண_சாந்தரே வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 61/4
விஜய ஜய ஜய என்ன ஆசி சொலவே கொலுவிருக்கும் நும் பெருமை எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 62/4
வீணிலே அலையாமல் மலை_இலக்கு ஆக நீர் வெளிப்பட தோற்றல் வேண்டும் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 63/4
மின்னல் பெறவே சொல்ல அ சொல் கேட்டு அடிமை மனம் விகசிப்பது எந்த நாளோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 64/4
வெற்பினிடை உறைதலால் தவராஜசிங்கம் என மிக்கோர் உமை புகழ்வர் காண் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 65/4
வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகை வந்த வித்தை என் முத்தி தருமோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 66/4
தெண்டமிட வரும் மூர்த்தி நிலையிலோ திக்கு திக்_அந்தத்திலோ வெளியிலோ திகழ் விந்து நாத நிலை-தன்னிலோ வேதாந்த சித்தாந்த நிலை-தன்னிலோ – தாயு:9 86/2
நதி உண்ட கடல் என சமயத்தை உண்ட பர ஞான ஆனந்த ஒளியே நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே நான் எனும் அகந்தை தீர்த்து என் – தாயு:37 578/3
வேதாந்த வீட்டில் விளக்கே பராபரமே – தாயு:43 653/2
வீறிய வேதாந்த முதல் மிக்க கலாந்தம் வரை – தாயு:45 1253/1
மேல்


வேதாந்தம் (1)

வேதாந்தம் சித்தாந்தம் வேறு என்னார் கண் களிக்கும் – தாயு:43 841/1
மேல்


வேதாந்தமே (1)

விண்ணே விண் ஆதி ஆம் பூதமே நாதமே வேதமே வேதாந்தமே மே தக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள் வித்தே அ வித்தின் முளையே – தாயு:6 52/3
மேல்


வேதாவை (1)

வேதாவை இ வணம் விதித்தது ஏது என்னின் உன் வினை பகுதி என்பன் அந்த வினை பேச அறியாது நிற்க இவை மனதால் விளைந்ததால் மனதை நாடில் – தாயு:11 109/1
மேல்


வேதிசெய்து (1)

பருவம்-அது அறிந்து நின் அருளான குளிகை கொடு பரிசித்து வேதிசெய்து பத்து_மாற்று தங்கம் ஆக்கியே பணிகொண்ட பக்ஷத்தை என் சொல்லுகேன் – தாயு:4 32/2
மேல்


வேதித்து (1)

வெம் தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்று உண்ணலாம் வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம் விண்ணவரை ஏவல்கொளலாம் – தாயு:12 118/2
மேல்


வேதியன் (1)

வேத வேதியன் வெள் விடை ஊர்தி மெய் – தாயு:18 243/2
மேல்


வேதியனே (1)

மிக்க கயிலாய மலை வித்தகனே வேதியனே
செக்கர் அணி மேனியனே செப்பு – தாயு:28 506/3,4
மேல்


வேந்தர் (1)

எண் அரிய சித்தர் மனு ஆதி வேந்தர் இருக்கு ஆதி மறை முனிவர் எல்லாம் இந்த – தாயு:14 139/2
மேல்


வேந்தரே (1)

மெய் திகழும் அஷ்டாங்க யோக பூமிக்குள் வளர் வேந்தரே குண_சாந்தரே வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 61/4
மேல்


வேந்தன் (2)

வேந்தன் எமை இழுத்து மேவுவனோ பைங்கிளியே – தாயு:44 1041/2
வெம் பந்தம் தீர்த்து உலகு ஆள் வேந்தன் திருஞானசம்பந்தனை – தாயு:45 1107/1
மேல்


வேப்பங்காய் (1)

விண்ணவர்-தம் பால் அமுதம் வேப்பங்காய் ஆக என்-பால் – தாயு:44 1076/1
மேல்


வேம்பு (1)

கன்னிகை ஒருத்தி சிற்றின்பம் வேம்பு என்னினும் கைக்கொள்வள் பக்குவத்தில் கணவன் அருள் பெறின் முனே சொன்னவாறு என் என கருதி நகையாவள் அது போல் – தாயு:9 77/3
மேல்


வேரற (1)

முன்னை வல்_வினை வேரற முடித்து என்று முடியா – தாயு:25 377/3
மேல்


வேரை (1)

பண்டை வினை வேரை பறிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1159/2
மேல்


வேல் (1)

நனி பெரும் குடிலம் காட்டும் நயன வேல் கரிய கூந்தல் – தாயு:21 301/3
மேல்


வேலை (5)

தன் நிலைமை காட்டாது ஒருங்க இரு_வினையினால் தாவு சுக_துக்க வேலை தட்டழிய முற்றும் இல்லா மாயை அதனால் தடித்து அகில பேதமான – தாயு:10 99/2
வந்து உலவுகின்றது என முன்றிலிடை உலவவே வசதி பெறு போதும் வெள்ளை வட்ட மதி பட்டப்பகல் போல நிலவு தர மகிழ் போதும் வேலை அமுதம் – தாயு:11 110/2
தொல்லையாம் பிறவி_வேலை தொலைந்திடாது இருள் நீங்காது – தாயு:15 170/3
வேலை_இலா வேதன் விதித்த இந்த்ரசால உடல் – தாயு:45 1122/1
வந்த இருள் வேலை வடியும் நாள் எந்நாளோ – தாயு:45 1157/2
மேல்


வேலை_இலா (1)

வேலை_இலா வேதன் விதித்த இந்த்ரசால உடல் – தாயு:45 1122/1
மேல்


வேழமாம் (1)

வெள்ள கருணை மத வேழமாம் நின் அருட்கு என் – தாயு:43 744/1
மேல்


வேள் (3)

காதில் ஓலையை வரைந்து மேல் குமிழையும் கறுவி வேள் கருநீல – தாயு:24 332/1
வேள் ஏறு தந்தியை கன தந்தியுடன் வென்று விரை ஏறு மாலை சூடி விண் ஏறு மேகங்கள் வெற்பு ஏறி மறைவுற வெருட்டிய கரும்_கூந்தலாய் – தாயு:37 584/3
வேள் ஆனவனு மெய் விட்டான் என்னில் மிக்கோர் துறக்கை விதி அன்றோ தோழி – தாயு:54 1447/2
மேல்


வேளை (2)

நேராக ஒரு கோபம் ஒரு வேளை வர அந்த நிறைவு ஒன்றும் இல்லாமலே நெட்டுயிர்த்து தட்டழிந்து உளறுவார் வசன நிர்வாகர் என்ற பேரும் – தாயு:2 6/2
கலகம்செய இருண்ட யமன் வரும் வேளை
ஏது துணை பழிகார மனமே – தாயு:56 1452/55,56
மேல்


வேளைக்கு (1)

உற்ற வேளைக்கு உறு துணையாய் இந்த – தாயு:18 270/1
மேல்


வேளையில் (3)

ஆராயும் வேளையில் பிரமாதி ஆனாலும் ஐய ஒரு செயலும் இல்லை அமைதியொடு பேசாத பெருமை பெறு குணசந்த்ரராம் என இருந்த பேரும் – தாயு:2 6/1
யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும் உள்ளதே போதும் நான் நான் என குளறியே ஒன்றை விட்டு ஒன்று பற்றி – தாயு:2 13/3
விரிந்த மனம் ஒடுங்கும் வேளையில் நானாக – தாயு:43 771/1
மேல்


வேளையிலும் (1)

விந்தைபெற அறு_சுவையில் வந்தது என அமுது உண்ணும் வேளையிலும் மாலை கந்தம் வெள்ளிலை அடைக்காய் விரும்பி வேண்டிய வண்ணம் விளையாடி விழி துயிலினும் – தாயு:11 110/3
மேல்


வேறதாம் (1)

வேறுபடு வேடங்கள் கொள்ள அறிவார் ஒன்றை மெணமெணென்று அகம் வேறதாம் வித்தை அறிவார் எமை போலவே சந்தை போல் மெய்ந்நூல் விரிக்க அறிவார் – தாயு:8 69/2
மேல்


வேறதாய் (1)

தன் நேர் இலாதது ஓர் அணு என்றும் மூ வித தன்மையாம் காலம் என்றும் சாற்றிடும் சில சமயம் இவை ஆகி வேறதாய் சதாஞான ஆனந்தமாய் – தாயு:10 90/3
மேல்


வேறா (1)

என்னையும் தன்னையும் வேறா உள்ளத்து எண்ணாத வண்ணம் இரண்டற நிற்க – தாயு:54 1434/1
மேல்


வேறாகி (1)

நெஞ்சகம் வேறாகி நினை கூட எண்ணுகின்ற – தாயு:51 1397/1
மேல்


வேறாய் (1)

அகர உயிர் எழுத்து அனைத்தும் ஆகி வேறாய் அமர்ந்தது என அகிலாண்டம் அனைத்தும் ஆகி – தாயு:3 25/1
மேல்


வேறு (32)

சந்ததமும் எனது செயல் நினது செயல் யான் எனும் தன்மை நினை அன்றி இல்லா தன்மையால் வேறு அலேன் வேதாந்த சித்தாந்த சமரச சுபாவம் இதுவே – தாயு:2 8/1
கண்ணார கண்ட அன்பர் கண்ணூடே ஆனந்த_கடலாய் வேறு ஒன்று – தாயு:3 22/2
வெய்யனேன் வெகுளியேன் வெறியனேன் சிறியனேன் வினையினேன் என்று என்னை நீ விட்டுவிட நினைவையேல் தட்டழிவது அல்லாது வேறு கதி ஏது புகலாய் – தாயு:8 74/2
வெந்நீர் பொறாது என் உடல் காலில் முள் தைக்கவும் வெடுக்கென்று அசைத்து எடுத்தால் விழி இமைத்து அங்ஙனே தண் அருளை நாடுவேன் வேறு ஒன்றை ஒருவர் கொல்லின் – தாயு:9 81/1
தண் ஆரும் நின்னது அருள் அறியாதது அல்லவே சற்றேனும் இனிது இரங்கி சாசுவத முத்தி நிலை ஈது என்று உணர்த்தியே சக நிலை தந்து வேறு ஒன்று – தாயு:10 93/3
விரவும் அறு_சுவையினோடு வேண்டுவ புசித்து அரையில் வேண்டுவ எலாம் உடுத்து மேடை மாளிகை ஆதி வீட்டினிடை வைகியே வேறு ஒரு வருத்தம் இன்றி – தாயு:10 97/3
வெம் தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்று உண்ணலாம் வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம் விண்ணவரை ஏவல்கொளலாம் – தாயு:12 118/2
இமை_அளவும் உபகாரம் அல்லால் வேறு ஒன்று இயக்கா நிர்க்குண_கடலாய் இருந்த ஒன்றே – தாயு:14 136/4
இந்த்ராதி போக நலம் பெற்ற பேர்க்கும் இது அன்றி தாயகம் வேறு இல்லை இல்லை – தாயு:14 142/3
போனாலும் கர்ப்பூர தீபம் போல போய் ஒளிப்பது அல்லாது புலம் வேறு இன்றாம் – தாயு:14 153/2
உற்ற துணை நீ அல்லால் பற்று வேறு ஒன்று உன்னேன் பல் நாள் உலகத்து ஓடி ஆடி – தாயு:16 181/1
செல்ல வேறு ஒரு திக்கு அறியேன் எலாம் – தாயு:18 207/3
தங்க வேறு இடம் உண்டோ சகத்திலே – தாயு:18 262/4
தெய்வம் வேறு உளது என்பவர் சிந்தனை – தாயு:18 269/1
மற்றும் வேறு உள மார்க்கம் எலாம் எடுத்து – தாயு:18 271/3
எனக்கு என செயல் வேறு இலை யாவும் இங்கு ஒரு நின்றனக்கு – தாயு:25 362/1
நடக்கினும் ஓடினும் நிற்கினும் வேறு ஒரு நாட்டம் இன்றி – தாயு:27 412/1
வெள்ள செம் பாத புணையே அல்லால் கதி வேறு இல்லையே – தாயு:27 441/4
நீ என நான் என வேறு இல்லை என்னும் நினைவு அருள – தாயு:27 458/1
சித்தம் இரங்கிலது என் சித்தம் தெளியா வேறு
இத்தனைக்கும் ஆதரவும் இல் – தாயு:28 480/3,4
கற்பு உறு சிந்தை மாதர் கணவரை அன்றி வேறு ஓர் – தாயு:36 571/1
நின்றாயே நினை பெறுமாறு எவ்வாறு ஆங்கே நின் அருள் கொண்டு அறிவது அல்லால் நெறி வேறு உண்டோ – தாயு:42 607/2
செய கடவேன் செயல் எல்லாம் நினதே என்று செம் கை குவிப்பேன் அல்லால் செயல் வேறு இல்லை – தாயு:42 629/2
செப்புவது அல்லால் வேறு என் செய்வேன் பராபரமே – தாயு:43 660/2
வெட்டவெளி பேதையன் யான் வேறு கபடு ஒன்று அறியேன் – தாயு:43 701/1
விளக்கும் தகளியையும் வேறு என்னார் நின்னை – தாயு:43 738/1
வேதாந்தம் சித்தாந்தம் வேறு என்னார் கண் களிக்கும் – தாயு:43 841/1
அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே – தாயு:43 856/2
சந்ததமும் நின் கருணை சாற்றுவது அல்லால் வேறு
சிந்தை அறியேன் உன்றன் சித்தம் பராபரமே – தாயு:43 890/1,2
நெஞ்சகத்தில் வாழ்வார் நினைக்கின் வேறு என்று அணையார் – தாயு:44 1059/1
விண்ணுள் வளி அடங்கி வேறு அற்றது என்ன அருள் – தாயு:44 1077/1
களையை களைந்து பின் பார்த்தேன் ஐயன் களை அன்றி வேறு ஒன்றும் கண்டிலன் தோழி – தாயு:54 1435/2
மேல்


வேறுபடு (1)

வேறுபடு வேடங்கள் கொள்ள அறிவார் ஒன்றை மெணமெணென்று அகம் வேறதாம் வித்தை அறிவார் எமை போலவே சந்தை போல் மெய்ந்நூல் விரிக்க அறிவார் – தாயு:8 69/2
மேல்


வேறுபடும் (1)

வேறுபடும் சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின் விளங்கு பரம்பொருளே நின் விளையாட்டு அல்லால் – தாயு:42 630/1
மேல்


வேறும் (9)

வெவ்விய குணம் பல இருக்க என் அறிவூடு மெய்யன் நீ வீற்றிருக்க விதி இல்லை என்னிலோ பூரணன் எனும் பெயர் விரிக்கில் உரை வேறும் உளதோ – தாயு:4 28/2
மை கால் இருட்டு அனைய இருள் இல்லை இரு_வினைகள் வந்து ஏற வழியும் இல்லை மனம் இல்லை அ மனத்து இனம் இல்லை வேறும் ஒரு வரவு இல்லை போக்கும் இல்லை – தாயு:8 76/3
வேதமுடன் ஆகம புராணம் இதிகாசம் முதல் வேறும் உள கலைகள் எல்லாம் மிக்காக அத்துவித துவித மார்க்கத்தையே விரிவாய் எடுத்துரைக்கும் – தாயு:10 91/1
அல்லால் புகலிடம் வேறும் உண்டோ அதுவே நிலையா – தாயு:27 445/2
வாங்கினையே வேறும் உண்மை வைத்திடவும் கேட்டிடவும் – தாயு:28 536/3
போனாலும் யான் போவன் அல்லால் மோன புண்ணியனே வேறும் ஒரு பொருளை நாடேன் – தாயு:42 616/2
வாதனை விட்டு உன் அருளின் மன்னின் அல்லால் வேறும் ஒரு – தாயு:43 736/1
பார்ப்பது அல்லால் வேறும் ஒன்றை பாரேன் பராபரமே – தாயு:43 838/2
ஆசை உன் மீது அல்லால் அருள் அறிய வேறும் ஒன்றில் – தாயு:43 874/1
மேல்


வேறுவேறாகி (1)

ஆறு சமயங்கள்-தொறும் வேறுவேறாகி விளையாடும் உனை யாவர் அறிவார் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 69/4
மேல்


வேறோ (4)

நெறி பார்க்கின் நின்னை அன்றி அகிலம் வேறோ நிலம் நீர் தீ கால் வானும் நீ அலாத – தாயு:42 608/1
குறி யாதும் இல்லை என்றால் யாங்கள் வேறோ கோதை ஒரு கூறு_உடையாய் கூறாய் கூறாய் – தாயு:42 608/2
அனைத்துமாய் நின்றாயே யான் வேறோ நின்னை – தாயு:43 720/1
விட்டு பிரிய இடம் வேறோ பராபரமே – தாயு:43 973/2

மேல்