வீ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வீங்கி 2
வீசி 1
வீசியே 1
வீசு 1
வீசும் 5
வீட்டறம் 1
வீட்டில் 3
வீட்டின் 1
வீட்டினிடை 1
வீட்டினில் 4
வீட்டு 3
வீட்டை 1
வீட்டையும் 1
வீடு 3
வீடும் 2
வீண் 4
வீணில் 1
வீணிலே 1
வீணினில் 1
வீணே 3
வீணை 1
வீதி 2
வீழ்ந்து 2
வீழ்ந்துவீழ்ந்து 1
வீழ 1
வீழவும் 1
வீழாது 1
வீழாமல் 1
வீழும் 1
வீழும்படிக்கு 1
வீழேன் 1
வீற்றிருக்க 1
வீற்றிருக்கும் 2
வீற்றிருந்த 1
வீற்றிருப்ப 1
வீற்றிருப்பது 1
வீறி 1
வீறிட்ட 1
வீறிய 1
வீறு 8

வீங்கி (2)

மின் போலும் இடை ஒடியும்ஒடியும் என மொழிதல் போல் மென் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப வீங்கி புடைத்து விழ சுமை அன்ன கொங்கை மட மின்னார்கள் பின் ஆவலால் – தாயு:12 120/1
வீங்கி தளர்ந்து விழும் முலையார் மேல் வீழ்ந்து – தாயு:45 1132/1
மேல்


வீசி (1)

கார் ஆர எண் அரும் அனந்த கோடிகள் நின்று கால் ஊன்றி மழை பொழிதல் போல் கால் வீசி மின்னி படர்ந்து பரவெளி எலாம் கம்மி ஆனந்த_வெள்ளம் – தாயு:9 84/3
மேல்


வீசியே (1)

வைத்து எமை மயக்கி இரு கண் வலையை வீசியே மாயா விலாச மோக_வாரிதியில் ஆழ்த்திடும் பாழான சிற்றிடை மடந்தையர்கள் சிற்றின்பமோ – தாயு:10 98/2
மேல்


வீசு (1)

தென்றல் வந்து வீசு வெளி சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1184/2
மேல்


வீசும் (5)

வீசும் நாள் எ நாள் விளம்பாய் பராபரமே – தாயு:43 811/2
கரு முகம் காட்டாமல் என்றும் கர்ப்பூரம் வீசும்
திரு_முகமே நோக்கி திருக்கு அறுப்பது எந்நாளோ – தாயு:45 1086/1,2
மெய் வீசும் நாற்றம் எலாம் மிக்க மஞ்சளால் மறைத்து – தாயு:45 1127/1
பொய் வீசும் வாயார் புலை ஒழிவது எந்நாளோ – தாயு:45 1127/2
காமனை வா என்று இருண்ட கண்_வலையை வீசும் மின்னார் – தாயு:45 1130/1
மேல்


வீட்டறம் (1)

வீட்டறம் துறவறம் இரண்டும் மேன்மையே – தாயு:24 324/4
மேல்


வீட்டில் (3)

வேதாந்த வீட்டில் விளக்கே பராபரமே – தாயு:43 653/2
வெட்டவெளி வீட்டில் அண்ணல் மேவுவனோ பைங்கிளியே – தாயு:44 1069/2
மண்ணான வீட்டில் என்னை வைத்தது என்னோ பைங்கிளியே – தாயு:44 1078/2
மேல்


வீட்டின் (1)

முடிவு_இலா வீட்டின் வாழ்க்கை வேண்டினர்க்கு உன் மோனம் அல்லால் வழி உண்டோ – தாயு:19 281/2
மேல்


வீட்டினிடை (1)

விரவும் அறு_சுவையினோடு வேண்டுவ புசித்து அரையில் வேண்டுவ எலாம் உடுத்து மேடை மாளிகை ஆதி வீட்டினிடை வைகியே வேறு ஒரு வருத்தம் இன்றி – தாயு:10 97/3
மேல்


வீட்டினில் (4)

ஏர் இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு இடர் உற உறுக்கி இடர் தீர்த்து இரவு பகல் இல்லாத பேர்_இன்ப வீட்டினில் இசைந்து துயில்கொள்-மின் என்று – தாயு:4 31/3
ஈடாகவே யாறு வீட்டினில் நிரம்பியே இலகி வளர் பிராணன் என்னும் இரு நிதியினை கட்டி யோகபரன் ஆகாமல் ஏழை குடும்பன் ஆகி – தாயு:12 114/3
திவ்ய அன்புருவம் ஆகி அன்பரொடும் இன்ப வீட்டினில் இருப்பனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 129/4
இலகு பேர்_இன்ப வீட்டினில் என்னையும் இருத்திவைப்பது எ காலம் சொலாய் எழில் – தாயு:24 328/2
மேல்


வீட்டு (3)

மின்னும்படிக்கு அகண்டாகார அன்னை-பால் வினையேனை ஒப்புவித்து வீட்டு நெறி கூட்டிடுதல் மிகவும் நன்று இவை அன்றி விவகாரம் உண்டு என்னிலோ – தாயு:11 108/3
உன்னாமல் ஒன்று இரண்டு என்று ஓராமல் வீட்டு நெறி – தாயு:44 1031/1
வீட்டு இன்ப மெய் பொருளை மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1200/2
மேல்


வீட்டை (1)

வீட்டை கருதும் அப்போது வெளியாம் உலக வியப்பு அனைத்தும் – தாயு:20 291/3
மேல்


வீட்டையும் (1)

ஐயம்_இல் வீட்டையும் மெய் நூலையும் பொய்யது ஆக எண்ணும் – தாயு:27 453/3
மேல்


வீடு (3)

பூராயமாய் உணர ஊகம்-அது தந்ததும் பொய் உடலை நிலை அன்று என போத நெறி தந்ததும் சாசுவத ஆனந்த போகமே வீடு என்னவே – தாயு:2 11/2
மனைவி புதல்வர் அன்னை பிதா மாடு வீடு என்றிடும் மயக்கம்-தனையும் – தாயு:23 313/3
வீடும் என்-பால் தொடர்ச்சியோ இடைவிடாமல் மிக்க கதி வீடு அன்றோ விளங்கல் வேண்டும் – தாயு:41 603/2
மேல்


வீடும் (2)

இடம்பெறு வீடும் மின்னார் செய் சகமும் இரு_நிதியும் – தாயு:27 417/1
வீடும் என்-பால் தொடர்ச்சியோ இடைவிடாமல் மிக்க கதி வீடு அன்றோ விளங்கல் வேண்டும் – தாயு:41 603/2
மேல்


வீண் (4)

வீண் நாள் கழித்து மெலிவேனோ பைங்கிளியே – தாயு:44 1040/2
மேவு பஞ்ச வண்ணம் உற்றாய் வீண் சிறையால் அல்லலுற்றாய் – தாயு:44 1072/1
வாக்கு ஆதியான கன்ம மாயை-தம்பால் வீண் காலம் – தாயு:45 1145/1
வீண் பாவம் போய் அதுவாய் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1290/2
மேல்


வீணில் (1)

நல்லவன் சாருவாகன் நான் சொலும் நெறிக்கு வீணில்
தொல்லை ஏன் ஆகமாதி தொடுப்பது ஏன் மயக்கம் ஏது இங்கு – தாயு:15 173/2,3
மேல்


வீணிலே (1)

வீணிலே அலையாமல் மலை_இலக்கு ஆக நீர் வெளிப்பட தோற்றல் வேண்டும் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 63/4
மேல்


வீணினில் (1)

வீணினில் கர்ப்பூர மலை படு தீப்பட்ட விந்தை என காண ஒரு விவேகம் காட்ட – தாயு:14 148/2
மேல்


வீணே (3)

போற்றிலேன் நின்னை அந்தோ போக்கினேன் வீணே காலம் – தாயு:24 337/2
தீயிடை மெழுகாய் நொந்தேன் தெளிவு_இலேன் வீணே காலம் – தாயு:36 577/3
வீணே பிறந்து இறந்து வேசற்றேன் ஆசை அற – தாயு:46 1345/1
மேல்


வீணை (1)

விண்ணவர் இந்திரன் முதலோர் நாரதாதி விளங்கு சப்தருஷிகள் கன வீணை வல்லோர் – தாயு:14 139/1
மேல்


வீதி (2)

முத்தாந்த வீதி முளரி தொழும் அன்பருக்கே – தாயு:43 654/1
சித்தாந்த வீதி வரும் தேவே பராபரமே – தாயு:43 654/2
மேல்


வீழ்ந்து (2)

சேற்றிலே இன்னம் வீழ்ந்து திளைக்கவோ சிறியனேனே – தாயு:24 337/4
வீங்கி தளர்ந்து விழும் முலையார் மேல் வீழ்ந்து
தூங்கும் மதன் சோம்பை துடைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1132/1,2
மேல்


வீழ்ந்துவீழ்ந்து (1)

அன்பால் வியந்து உருகி அடி அற்ற மரம் என்ன அடியிலே வீழ்ந்துவீழ்ந்து எம் அடிகளே உமது அடிமை யாங்கள் எனும் நால்வருக்கு அறம் ஆதி பொருள் உரைப்ப – தாயு:12 120/3
மேல்


வீழ (1)

ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல் விசை அடங்கி மனம் வீழ நேரே அறியாமை ஆகின்ற இருள் அகல இருள் ஒளியும் அல்லாது இருந்த வெளி போல் – தாயு:12 114/1
மேல்


வீழவும் (1)

கால் அற்று வீழவும் முக்கண்_உடையாய் காண்பேனோ – தாயு:46 1321/2
மேல்


வீழாது (1)

பள்ளமே வீழாது எனை கரையேற்றி பாலிப்பது உன் அருள் பரமே – தாயு:19 275/4
மேல்


வீழாமல் (1)

பாச_கடற்குளே வீழாமல் மனது அற்ற பரிசுத்த நிலையை அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 13/4
மேல்


வீழும் (1)

பள்ளத்தின் வீழும் புனல் போல் படிந்து உன் பரம இன்ப – தாயு:27 440/3
மேல்


வீழும்படிக்கு (1)

வேதனை வளர்த்திட சதுர்வேத வஞ்சன் விதித்தான் இ அல்லல் எல்லாம் வீழும்படிக்கு உனது மௌன மந்த்ராதிக்ய வித்தையை வியந்து அருள்வையோ – தாயு:37 585/2
மேல்


வீழேன் (1)

மிக்க தெய்வமே நின் இன்ப_வெள்ளத்தில் வீழேன்
ஒக்கல் தாய் தந்தை மகவு எனும் பாச கட்டுடனே – தாயு:25 387/2,3
மேல்


வீற்றிருக்க (1)

வெவ்விய குணம் பல இருக்க என் அறிவூடு மெய்யன் நீ வீற்றிருக்க விதி இல்லை என்னிலோ பூரணன் எனும் பெயர் விரிக்கில் உரை வேறும் உளதோ – தாயு:4 28/2
மேல்


வீற்றிருக்கும் (2)

குரு மணி இழைத்திட்ட சிங்காதனத்தின் மிசை கொலு வீற்றிருக்கும் நின்னை கும்பிட்டு அனந்தம் முறை தெண்டனிட்டு என் மன குறை எலாம் தீரும் வண்ணம் – தாயு:5 44/3
பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி புராந்தகி த்ரியம்பகி எழில் புங்கவி விளங்கு சிவசங்கரி சகஸ்ரதள புஷ்பம் மிசை வீற்றிருக்கும்
நாரணி மனாதீத நாயகி குணாதீத நாதாந்த சத்தி என்று உன் நாமமே உச்சரித்திடும் அடியர் நாமமே நான் உச்சரிக்க வசமோ – தாயு:37 582/1,2
மேல்


வீற்றிருந்த (1)

வாரா வரவாய் வட நிழல் கீழ் வீற்றிருந்த
பூராயம் நம்மை புலப்படுத்தவேண்டி அன்றோ – தாயு:29 547/1,2
மேல்


வீற்றிருப்ப (1)

துங்கம் மிகு பக்குவ சனகன் முதல் முனிவோர்கள் தொழுது அருகில் வீற்றிருப்ப சொல் அரிய நெறியை ஒரு சொல்லால் உணர்த்தியே சொரூபாநுபூதி காட்டி – தாயு:4 26/3
மேல்


வீற்றிருப்பது (1)

தொண்டர்களிடத்திலோ நீ வீற்றிருப்பது தொழும்பனேற்கு உளவு புகலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 86/4
மேல்


வீறி (1)

வீறி பரந்த பரமான ஆனந்த_வெள்ளம் ஒன்று – தாயு:27 411/2
மேல்


வீறிட்ட (1)

மிடியிட்ட வாழ்க்கையால் உப்பு இட்ட கலம் எனவும் மெய் எலாம் உள் உடைந்து வீறிட்ட செல்வர்-தம் தலைவாயில் வாசமாய் வேதனைகள் உற வேதனும் – தாயு:37 581/1
மேல்


வீறிய (1)

வீறிய வேதாந்த முதல் மிக்க கலாந்தம் வரை – தாயு:45 1253/1
மேல்


வீறு (8)

சுத்திசெய்தும் மூல ப்ராணனோடு அங்கியை சோமவட்டத்து அடைத்தும் சொல் அரிய அமுது உண்டும் அற்ப உடல் கற்பங்கள்-தோறும் நிலைநிற்க வீறு
சித்திசெய்தும் ஞானம் அலது கதி கூடுமோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 36/3,4
வந்த குருவே வீறு சிவஞான சித்தி நெறி மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 38/4
வீறு அனைத்தும் இ நெறிக்கே என்ன என்னை மேவு என்ற வரத்தே பாழ் வெய்ய மாயை – தாயு:14 134/2
சன்மார்க்கம் ஞானம்-அதின் பொருளும் வீறு சமய சங்கேத பொருளும் தான் என்று ஆக – தாயு:14 143/1
வெளியே வெளியின் விளை சுகமே சுகர் வீறு கண்டும் – தாயு:27 446/3
வேத முதலான நல் ஆகம தன்மையை விளக்கும் உள்_கண்_இலார்க்கும் மிக்க நின் மகிமையை கேளாத செவிடர்க்கும் வீறு வாதம் புகலுவாய் – தாயு:37 580/3
விஞ்சு புல பாடு அனைத்தும் வீறு துன்பம்செய்ய வந்த – தாயு:43 900/1
வீறு பரை திரு_தாள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1088/2

மேல்