ரூ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ரூப 4
ரூபத்து 1
ரூபமுடன் 1
ரூபமே 1
ரூபியே 1

ரூப (4)

ஆர் அணி சடை கடவுள் ஆரணி என புகழ அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயிலே – தாயு:37 582/3
பாகமோ பெற உனை பாட அறியேன் மலபரிபாகம் வரவும் மனதில் பண்புமோ சற்றும் இலை நியமமோ செய்திட பாவியேன் பாப ரூப
தேகமோ திடம் இல்லை ஞானமோ கனவிலும் சிந்தியேன் பேர்_இன்பமோ சேர என்றால் கள்ள மனதுமோ மெத்தவும் சிந்திக்குது என் செய்குவேன் – தாயு:37 583/1,2
சொல் இறந்து நின்ற சுக ரூப பெம்மானை – தாயு:44 1048/1
தூய அறிவான சுக ரூப சோதி-தன்பால் – தாயு:45 1277/1
மேல்


ரூபத்து (1)

பொருந்து சகம் அனைத்தினையும் பொய்பொய் என்று புகன்றபடி மெய் என்றே போத ரூபத்து
இருந்தபடி என்று இருப்பது அன்றே அன்றோ எம்பெருமான் யான் கவலை எய்தா காலம் – தாயு:42 623/1,2
மேல்


ரூபமுடன் (1)

தொந்த ரூபமுடன் அரூபம் ஆதி குறி குணம் இறந்து வளர் வஸ்துவே துரியமே துரிய உயிரினுக்கு உணர்வு தோன்ற நின்று அருள் சுபாவமே – தாயு:13 124/2
மேல்


ரூபமே (1)

நதி உண்ட கடல் என சமயத்தை உண்ட பர ஞான ஆனந்த ஒளியே நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே நான் எனும் அகந்தை தீர்த்து என் – தாயு:37 578/3
மேல்


ரூபியே (1)

நாத வடிவாகிய மஹா மந்த்ர ரூபியே நாதாந்த வெட்டவெளியே நல் சமயமான பயிர் தழைய வரும் மேகமே ஞான ஆனந்த மயிலே – தாயு:37 585/3

மேல்