யா – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யாக்கை 2
யாக்கையும் 1
யாங்கள் 6
யாங்களும் 1
யாங்களே 1
யாததற்கும் 1
யாதனையால் 1
யாதின்-பாலும் 2
யாதினுக்கும் 1
யாதினும் 6
யாது 15
யாதும் 6
யாதெனினும் 1
யாதேனும் 2
யாதை 1
யாதொன்று 3
யாம் 14
யார் 14
யார்க்காக 1
யார்க்கு 1
யார்க்கும் 3
யார்க்கேனும் 1
யாராலே-தான் 1
யாருக்கும் 1
யாரும் 1
யாரும்_இலார் 1
யாரே 2
யாரேனும் 1
யாரோ 2
யாவர் 4
யாவரும் 2
யாவன் 2
யாவினும் 1
யாவுக்கும் 1
யாவும் 11
யாவுமாய் 1
யாவுமே 3
யாவையும் 6
யாறு 1
யான் 66
யான்-தான் 3
யானும் 5
யானே 1
யானை 6
யானையை 1
யானோ 1

யாக்கை (2)

அழுந்தும் பவம் நீ நன்மையும் நீ ஆவி யாக்கை நீ-தானே – தாயு:20 286/4
தந்தை தாய் மகவு மனை வாழ்க்கை யாக்கை சகம் அனைத்தும் மௌனி அருள் தழைத்த போதே – தாயு:40 588/1
மேல்


யாக்கையும் (1)

பண்டு ஆர் உயிர் நீ யாக்கையும் நீ பலவாம் சமய பகுதியும் நீ – தாயு:20 290/2
மேல்


யாங்கள் (6)

அத்தனையும் நீ அலது எள்ளத்தனையும் இல்லை எனில் யாங்கள் உனை அன்றி உண்டோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 71/4
காயாத மரம் மீது கல் ஏறு செல்லுமோ கடவுள் நீ யாங்கள் அடியேம் கர்ம பந்தத்தினால் சன்மபந்தம் பெற கற்பித்தது உன்னது அருளே – தாயு:11 107/1
அன்பால் வியந்து உருகி அடி அற்ற மரம் என்ன அடியிலே வீழ்ந்துவீழ்ந்து எம் அடிகளே உமது அடிமை யாங்கள் எனும் நால்வருக்கு அறம் ஆதி பொருள் உரைப்ப – தாயு:12 120/3
குறி யாதும் இல்லை என்றால் யாங்கள் வேறோ கோதை ஒரு கூறு_உடையாய் கூறாய் கூறாய் – தாயு:42 608/2
சாதி எங்கே ஒழுக்கம் எங்கே யாங்கள் எங்கே தற்பர நீ பின்னும் ஒன்றை சமைப்பதானால் – தாயு:42 615/2
சித்து அன்றி யாங்கள் உண்டோ செப்பாய் பராபரமே – தாயு:43 708/2
மேல்


யாங்களும் (1)

இல்_புறத்தவரை நாடார் யாங்களும் இன்ப வாழ்வும் – தாயு:36 571/2
மேல்


யாங்களே (1)

பன்முக சமய நெறி படைத்தவரும் யாங்களே கடவுள் என்றிடும் பாதகத்தவரும் வாத தர்க்கமிடு படிறரும் தலை வணங்கிட – தாயு:13 131/1
மேல்


யாததற்கும் (1)

பொய் முடங்கு தொழில் யாததற்கும் நல சாரதி தொழில் நடத்திடும் புத்தி யூகம் அறிவு_அற்ற மூகம் இவை பொருள் என கருதும் மருளன் யான் – தாயு:13 125/3
மேல்


யாதனையால் (1)

அன்று முதல் இன்றை வரை சனன கோடி அடைந்தடைந்து இங்கு யாதனையால் அழிந்தது அல்லால் – தாயு:14 161/1
மேல்


யாதின்-பாலும் (2)

யாது மனம் நினையும் அந்த நினைவுக்கு நினைவு ஆகி யாதின்-பாலும்
பேதம்_அற நின்று உயிருக்கு உயிர் ஆகி அன்பருக்கே பேர்_ஆனந்த – தாயு:3 15/1,2
அறிவு ஆகி ஆனந்த மயமாய் என்றும் அழியாத நிலை ஆகி யாதின்-பாலும்
பிறியாமல் தண் அருளே கோயில் ஆன பெரிய பரம் பதி-அதனை பெறவே வேண்டில் – தாயு:14 150/1,2
மேல்


யாதினுக்கும் (1)

காட்சி எல்லாம் கண்ணைவிட கண்டது உண்டோ யாதினுக்கும்
ஆட்சி உனது அருளே அன்றோ பராபரமே – தாயு:43 972/1,2
மேல்


யாதினும் (6)

எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றது எது எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்ல ஒரு சித்தாகி இன்பமாய் என்றைக்கும் உள்ளது எது அது – தாயு:1 1/3
எண் அரிய பிறவி-தனில் மானுட பிறவி-தான் யாதினும் அரிதரிது காண் இ பிறவி தப்பினால் எ பிறவி வாய்க்குமோ ஏது வருமோ அறிகிலேன் – தாயு:7 60/1
எத்தனை விதங்கள்-தான் கற்கினும் கேட்கினும் என் இதயமும் ஒடுங்கவில்லை யான் எனும் அகந்தை-தான் எள்ளளவும் மாறவிலை யாதினும் அபிமானம் என் – தாயு:8 75/1
யான் எனல் காணேன் பூரண நிறைவில் யாதினும் இருந்த பேர்_ஒளி நீ – தாயு:22 311/1
வையம் மீதினில் பரம்பரை யாதினும் மருவும் – தாயு:24 350/2
சூது அகத்தனாய் யாதினும் இச்சை மேல் தோன்றும் – தாயு:25 382/3
மேல்


யாது (15)

யாது மனம் நினையும் அந்த நினைவுக்கு நினைவு ஆகி யாதின்-பாலும் – தாயு:3 15/1
இருள் தீர விளங்கு பொருள் யாது அந்த பொருளினை யாம் இறைஞ்சிநிற்பாம் – தாயு:3 20/4
துரிய நடுவூடு இருந்த பெரிய பொருள் யாது அதனை தொழுதல்செய்வாம் – தாயு:3 21/4
எந்த நாள் கருணைக்கு உரித்தாகும் நாள் எனவும் என் இதயம் எனை வாட்டுதே ஏதென்று சொல்லுவேன் முன்னொடு பின் மலைவு அறவும் இற்றை வரை யாது பெற்றேன் – தாயு:9 87/1
இ பரிசாம் சமயமுமாய் அல்ல ஆகி யாது சமயமும் வணங்கும் இயல்பது ஆகி – தாயு:14 140/4
இந்த உடல் அறிவு அறியாமையும் நீ அல்லை யாது ஒன்று பற்றின் அதன் இயல்பாய் நின்று – தாயு:14 149/3
கத்தனே கல்வி யாது அது கற்கவே – தாயு:18 228/4
பின் செயல் யாது நினைவு_இன்றி கிடப்பேன் பித்தனேன் நல் நிலை பெற நின்றன் – தாயு:19 279/3
இரும்போ கல்லோ மரமோ என் இதயம் யாது என்று அறியேனே – தாயு:23 314/4
மோனம்-தனை விளைத்தால் இனி யாது மொழிகுவதே – தாயு:27 414/4
மின் மயம் ஆன சகம் யாது உரைத்து என் வெளியில் உய்த்த – தாயு:27 442/2
கற்கும் நெறி யாது இனிமேல் காண் – தாயு:28 461/4
என்னை நான் கொடுக்க ஒருப்பட்ட காலம் யாது இருந்து என் எது போய் என் என்னை நீங்கா – தாயு:40 589/1
சேதம் உறின் யாது பின்னே செல்லும் பராபரமே – தாயு:43 817/2
யாது பரம் அதை நாடி அறி நீ – தாயு:56 1452/28
மேல்


யாதும் (6)

எவர் சிறியர் எவர் பெரியர் எவர் உறவர் எவர் பகைஞர் யாதும் உனை அன்றி உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 89/4
சிவன் செயலாலே யாதும் வரும் என தேறேன் நாளும் – தாயு:22 302/1
குறி யாதும் இல்லை என்றால் யாங்கள் வேறோ கோதை ஒரு கூறு_உடையாய் கூறாய் கூறாய் – தாயு:42 608/2
வித்து அன்றி யாதும் விளைவது உண்டோ நின் அருளாம் – தாயு:43 708/1
உள்ளபடி யாதும் என உற்று உணர்ந்தேன் அ கணமே – தாயு:43 910/1
எம்மால் அறிவது அற எம்பெருமான் யாதும் இன்றி – தாயு:48 1375/1
மேல்


யாதெனினும் (1)

இன்ப நிட்டை எய்தாமல் யாதெனினும் சென்று மனம் – தாயு:43 949/1
மேல்


யாதேனும் (2)

இரும்பு நேர் நெஞ்சக கள்வன் ஆனாலும் உனை இடைவிட்டு நின்றது உண்டோ என்று நீ அன்று யான் உன் அடிமை அல்லவோ யாதேனும் அறியா வெறும் – தாயு:9 83/3
தேகம் யாதேனும் ஒரு சித்தி பெற சீவன் முத்தி – தாயு:43 992/1
மேல்


யாதை (1)

முறை உணர்ந்தார் யாதை முயல்வார் பிறை அணிந்த – தாயு:28 506/2
மேல்


யாதொன்று (3)

ஆங்காரம் ஆன குல வேட வெம் பேய் பாழ்த்த ஆணவத்தினும் வலிது காண் அறிவினை மயக்கிடும் நடு அறியவொட்டாது யாதொன்று தொடினும் அதுவாய் – தாயு:5 45/1
சந்ததமும் வேத மொழி யாதொன்று பற்றின் அது தான் வந்து முற்றும் எனலால் சகம் மீது இருந்தாலும் மரணம் உண்டு என்பது சதா_நிஷ்டர் நினைவதில்லை – தாயு:6 53/1
ஆதலின் எனக்கு இனி சரியை ஆதிகள் போதும் யாதொன்று பாவிக்க நான் அது ஆதலால் உன்னை நான் என்று பாவிக்கின் அத்துவித மார்க்கம் உறலாம் – தாயு:10 91/3
மேல்


யாம் (14)

தெரிவு அரிதாய் கலந்தது எந்த பொருள் அந்த பொருளினை யாம் சிந்தைசெய்வாம் – தாயு:3 16/4
இருள் தீர விளங்கு பொருள் யாது அந்த பொருளினை யாம் இறைஞ்சிநிற்பாம் – தாயு:3 20/4
சிரம்_அளவு எழுப்பியும் நீரினிடை மூழ்கியும் தேகம் நமது அல்ல என்று சிற்சுக அபேக்ஷையாய் நின் அன்பர் யோகம் செலுத்தினார் யாம் பாவியேம் – தாயு:10 97/2
சமமும் உடன் கலப்பும் அவிழ்தலும் யாம் காண தண் அருள்தந்து எமை காக்கும் சாக்ஷி பேறே – தாயு:14 136/3
பந்தம் அறும் பளிங்கு அனைய சித்து நீ உன் பக்குவம் கண்டு அறிவிக்கும் பான்மையேம் யாம் – தாயு:14 149/4
நிற்கும் திரு_அருளில் நெஞ்சே யாம் நிற்பது அல்லால் – தாயு:28 461/3
இருள்-தான் உண்டோ அல்லால் வெளி-தான் உண்டோ இன்பம் உண்டோ துன்பம் உண்டோ யாம் அங்கு உண்டோ – தாயு:42 617/2
என்று உளை நீ அன்று உளம் யாம் என்பது என்னை இது நிற்க எல்லாம் தாம் இல்லை என்றே – தாயு:42 622/1
ஆண்ட நின்னை நீங்கா அடிமைகள் யாம் ஆணவத்தை – தாயு:43 955/1
இச்சையுடன் ஈன்றாளை யாம் காண்பது எந்நாளோ – தாயு:45 1089/2
ஐயனை கல்_ஆல் அரசை யாம் அணைவது எந்நாளோ – தாயு:45 1094/2
அடிகள் அடி கீழ் குடியாய் யாம் வாழா வண்ணம் – தாயு:45 1155/1
எம்மை புலப்படவே யாம் அறிவது எந்நாளோ – தாயு:45 1170/2
எவ்வுயிரும் என்று பணி யாம் செய்வது எந்நாளோ – தாயு:45 1312/2
மேல்


யார் (14)

நின்றாயே மாயை எனும் திரையை நீக்கி நின்னை யார் அறிய வல்லார் நினைப்போர் நெஞ்சம் – தாயு:16 182/2
அன்றி யார் துணை யார் உறவு ஆர் கதி – தாயு:18 260/3
அன்றி யார் துணை யார் உறவு ஆர் கதி – தாயு:18 260/3
கருத எட்டிடா நிறை பொருள் அளவை யார் காண்பார் – தாயு:24 339/4
மணம் உலாம் மலர் பதம் தரின் யார் உனை மறுப்பார் – தாயு:25 369/4
என்னினோ யான் பிழைப்பேன் எனக்கு இனி யார் உன்_போல்வார் இல்லைஇல்லை – தாயு:26 397/3
மெய்யாக ஓர் சொல் விளம்பினர் யார் வையகத்தோர் – தாயு:28 485/2
பந்தம் உற உன்னை படிப்பிக்க கற்றவர் யார்
இந்த மதி ஏன் உனக்கு இங்கு என் மதி கேள் என்னாலே – தாயு:29 549/2,3
ஆதரவு அடைய உள்ளன்பு அருள்கிலையாயின் மற்று யார்
போதனைசெய்ய வல்லார் பூரணானந்த வாழ்வே – தாயு:36 573/3,4
யார் அறிவார் நானோ அறிவேன் பராபரமே – தாயு:43 748/2
கொண்ட நின்னை யார் அறிந்துகொள்வார் பராபரமே – தாயு:43 749/2
ஆவிக்கு உறுதுணை யார் ஐயா பராபரமே – தாயு:43 896/2
சுத்த நிலை அ நிலை யார் சொல்வார் பராபரமே – தாயு:43 928/2
அறிவாரும் இல்லையோ ஐயோ என்னை யார் என்று அறியாத அங்க தேசத்தில் – தாயு:54 1445/1
மேல்


யார்க்காக (1)

அன்பினால் மூர்ச்சித்த அன்பருக்கு அங்ஙனே அமிர்த சஞ்சீவி போல் வந்து ஆனந்த மழை பொழிவை உள்ளன்பு இலாத எனை யார்க்காக அடிமைகொண்டாய் – தாயு:9 80/2
மேல்


யார்க்கு (1)

யார்க்கு சரியிடலாம் ஐயா பராபரமே – தாயு:43 998/2
மேல்


யார்க்கும் (3)

இறையவன் எனலாம் யார்க்கும் இதய சம்மதம் ஈது அல்லால் – தாயு:15 169/4
அன்பர் யார்க்கும் அருவருப்பு அல்லவோ – தாயு:18 206/2
யார்க்கும் செயல் இலையே ஐயா பராபரமே – தாயு:43 752/2
மேல்


யார்க்கேனும் (1)

மெய்யான தன்மை விளங்கினால் யார்க்கேனும்
பொய்யான தன்மை பொருந்துமோ ஐயாவே – தாயு:28 462/1,2
மேல்


யாராலே-தான் (1)

ஆரே அங்கு அவர் பெருமை என்னே என்பேன் அடிக்கின்ற காற்றே நீ யாராலே-தான்
பேராதே சுழல்கின்றாய் என்பேன் வந்து பெய்கின்ற முகில்காள் எம் பெருமான் நும் போல் – தாயு:14 157/2,3
மேல்


யாருக்கும் (1)

யாருக்கும் சொல வாய் இலை ஐயனே – தாயு:18 223/4
மேல்


யாரும் (1)

யாரும்_இலார் என்னை அறிவாரோ பைங்கிளியே – தாயு:44 1032/2
மேல்


யாரும்_இலார் (1)

யாரும்_இலார் என்னை அறிவாரோ பைங்கிளியே – தாயு:44 1032/2
மேல்


யாரே (2)

கரையும் இன்றி உன்னை வைத்தார் யாரே என்பென் கானகத்தின் பைங்கிளிகாள் கமலம் மேவும் – தாயு:14 159/2
நெறி நிற்பார் யாரே நிகழ்த்தாய் பராபரமே – தாயு:43 885/2
மேல்


யாரேனும் (1)

யாரேனும் அறிவு அரிய சீவன் முத்தி உண்டாகும் ஐய ஐயோ – தாயு:26 400/2
மேல்


யாரோ (2)

நேய உனை யாரோ நினையார் பராபரமே – தாயு:43 770/2
அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே – தாயு:43 827/2
மேல்


யாவர் (4)

ஆறு சமயங்கள்-தொறும் வேறுவேறாகி விளையாடும் உனை யாவர் அறிவார் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 69/4
ஒருத்தர் ஆர் உளப்பாடு உணர்பவர் யாவர் உலகவர் பல் நெறி எனக்கு – தாயு:19 277/3
என்னை உன்றன் கைக்கு அளித்தார் யாவர் என்னை யான் கொடுத்து – தாயு:43 760/1
எவ்வாறு இங்கு உற்று உணர்ந்தார் யாவர் அவர்-தமக்கே – தாயு:45 1211/1
மேல்


யாவரும் (2)

கந்தருவர் கின்னரர்கள் மற்றையர்கள் யாவரும் கை குவித்திடு தெய்வமே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 53/4
இமையோர் முதலிய யாவரும் முனிவரும் – தாயு:55 1451/34
மேல்


யாவன் (2)

சொன்னவன் யாவன் அவன் முத்தி சித்திகள் எலாம் தோய்ந்த நெறியே படித்தீர் சொல்லும் என அவர் நீங்கள் சொன்ன அவையில் சிறிது தோய்ந்த குண_சாந்தன் எனவே – தாயு:7 64/3
வெண் தலை விழி கை காலில் விளங்கிட நின்றான் யாவன் – தாயு:15 167/4
மேல்


யாவினும் (1)

பின்னும் முன்னுமாய் நடுவுமாய் யாவினும் பெரியது – தாயு:25 376/1
மேல்


யாவுக்கும் (1)

வாதமிடு பர சமயம் யாவுக்கும் உணர்வு அரிய மகிமை பெறு பெரிய பொருளே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 585/4
மேல்


யாவும் (11)

தெள்ளி மறை வடியிட்ட அமுத பிழம்பே தெளிந்த தேனே சீனியே திவ்ய ரசம் யாவும் திரண்டு ஒழுகு பாகே தெவிட்டாத ஆனந்தமே – தாயு:6 54/3
தாதாவும் நீ பெற்ற தாய் தந்தை-தாமும் நீ தமரும் நீ யாவும் நீ காண் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 109/4
பாரில் கண்டவை யாவும் பருகினை – தாயு:18 223/2
வேண்டும் யாவும் இறந்து வெளியிடை – தாயு:18 258/1
என் செயல் இன்றி யாவும் நின் செயல் என்று எண்ணுவேன் ஒவ்வொரு காலம் – தாயு:19 279/1
ஆதியாய் நடுவாய் அந்தமாய் பந்தம் யாவும் அற்று அகம் புறம் நிறைந்த – தாயு:22 305/1
எனக்கு என செயல் வேறு இலை யாவும் இங்கு ஒரு நின்றனக்கு – தாயு:25 362/1
ஒளியுமாய் நிறை வெளியுமாய் யாவும் ஆம் உரவோய் – தாயு:25 383/4
விதம் யாவும் கடந்து அவித்தை எனும் இருளை கீண்டு எழுந்து விமலம் ஆகி – தாயு:26 392/3
ஆக்குவை மாயை யாவும் நொடியினில் அவற்றை மாள – தாயு:35 570/1
அண்டர் அண்டம் யாவும் நீ கொண்டு நின்ற கோலமே – தாயு:53 1419/1
மேல்


யாவுமாய் (1)

இருள் ஆகி ஒளி ஆகி நன்மை தீமையும் ஆகி இன்று ஆகி நாளை ஆகி என்றுமாய் ஒன்றுமாய் பலவுமாய் யாவுமாய் இவை அல்லவாய நின்னை – தாயு:8 68/3
மேல்


யாவுமே (3)

போதமே நிற்கும் அ போதத்தை நாடிலோ போதமும் நினால் விளக்கம் பொய் அன்று தெய்வ மறை யாவுமே நீ என்று போக்கு_வரவு அற நிகழ்த்தும் – தாயு:11 109/2
மண்ணொடு ஐந்தும் வழங்கு உயிர் யாவுமே
அண்ணலே நின் அருள் வடிவு ஆகுமே – தாயு:18 226/3,4
ஆரணங்கள் ஆகமங்கள் யாவுமே ஆனந்த – தாயு:28 470/1
மேல்


யாவையும் (6)

ஐ வகை எனும் பூதம் ஆதியை வகுத்து அதனுள் அசர சர பேதமான யாவையும் வகுத்து நல் அறிவையும் வகுத்து மறை ஆதி_நூலையும் வகுத்து – தாயு:4 29/1
சுமை எடு-மின் என்று-தான் சும்மாடுமாய் எமை சுமையாளும் ஆக்கி நாளும் துர்_புத்தி பண்ணி உள நல்_புத்தி யாவையும் சூறையிட்டு இந்த்ரஜாலம் – தாயு:11 103/2
எவ்வுயிர் திரளும் உலகில் என் உயிர் என குழைந்து உருகி நன்மையாம் இதம் உரைப்ப எனது என்ற யாவையும் எடுத்து எறிந்து மத யானை போல் – தாயு:13 129/1
கவ்வை அற்ற நடை பயில அன்பர் அடி கண்டதே அருளின் வடிவமா கண்ட யாவையும் அகண்டம் என்ன இரு கை குவித்து மலர் தூவியே – தாயு:13 129/2
எக்கணும் தொழ யாவையும் பூத்து காய்த்து – தாயு:18 219/3
வாராய் நெஞ்சே உன்றன் துன்_மார்க்கம் யாவையும் வைத்துக்கட்டு இங்கு – தாயு:27 450/1
மேல்


யாறு (1)

ஈடாகவே யாறு வீட்டினில் நிரம்பியே இலகி வளர் பிராணன் என்னும் இரு நிதியினை கட்டி யோகபரன் ஆகாமல் ஏழை குடும்பன் ஆகி – தாயு:12 114/3
மேல்


யான் (66)

எண் திசை விளக்கும் ஒரு தெய்வ அருள் அல்லாமல் இல்லை எனும் நினைவு உண்டு இங்கு யான் எனது அற துரிய நிறைவாகி நிற்பதே இன்பம் எனும் அன்பும் உண்டு – தாயு:2 7/2
சந்ததமும் எனது செயல் நினது செயல் யான் எனும் தன்மை நினை அன்றி இல்லா தன்மையால் வேறு அலேன் வேதாந்த சித்தாந்த சமரச சுபாவம் இதுவே – தாயு:2 8/1
இக பரமும் உயிர்க்கு உயிரை யான் எனது அற்றவர் உறவை எந்தநாளும் – தாயு:3 17/1
சைவ முதலாம் அளவு_இல் சமயமும் வகுத்து மேல் சமயம் கடந்த மோன சமரசம் வகுத்த நீ உன்னை யான் அணுகவும் தண் அருள் வகுக்கவிலையோ – தாயு:4 29/2
கரு மருவு குகை அனைய காயத்தின் நடுவுள் களிம்பு தோய் செம்பு அனைய யான் காண் தக இருக்க நீ ஞான அனல் மூட்டியே கனிவு பெற உள் உருக்கி – தாயு:4 32/1
ஆணிலே பெண்ணிலே என் போல ஒரு பேதை அகிலத்தின் மிசை உள்ளதோ ஆடிய கறங்கு போல் ஓடி உழல் சிந்தையை அடக்கி ஒரு கணமேனும் யான்
காணிலேன் திரு_அருளை அல்லாது மெளனியாய் கண் மூடி ஓடும் மூச்சை கட்டி கலா மதியை முட்டவே மூல வெம் கனலினை எழுப்ப நினைவும் – தாயு:7 63/1,2
எத்தனை விதங்கள்-தான் கற்கினும் கேட்கினும் என் இதயமும் ஒடுங்கவில்லை யான் எனும் அகந்தை-தான் எள்ளளவும் மாறவிலை யாதினும் அபிமானம் என் – தாயு:8 75/1
அந்நேரம் ஐயோ என் முகம் வாடி நிற்பதுவும் ஐய நின் அருள் அறியுமே ஆனாலும் மெத்த பயந்தவன் யான் என்னை ஆண்ட நீ கைவிடாதே – தாயு:9 81/2
விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன் மெய் சிலிர்த்து இரு கை கூப்பி விண் மாரி என என் இரு கண் மாரி பெய்யவே வேசற்று அயர்ந்தேன் இனி யான்
இரும்பு நேர் நெஞ்சக கள்வன் ஆனாலும் உனை இடைவிட்டு நின்றது உண்டோ என்று நீ அன்று யான் உன் அடிமை அல்லவோ யாதேனும் அறியா வெறும் – தாயு:9 83/2,3
இரும்பு நேர் நெஞ்சக கள்வன் ஆனாலும் உனை இடைவிட்டு நின்றது உண்டோ என்று நீ அன்று யான் உன் அடிமை அல்லவோ யாதேனும் அறியா வெறும் – தாயு:9 83/3
அண்ணா பரஞ்சோதி அப்பா உனக்கு அடிமை யான் எனவும் மேல் எழுந்த அன்பாகி நாடகம் நடித்ததோ குறைவில்லை அகிலமும் சிறிது அறியுமேல் – தாயு:10 93/2
எந்த நாளும் சரி என தேர்ந்துதேர்ந்துமே இரவு_பகல் இல்லா இடத்து ஏகமாய் நின்ற நின் அருள்_வெள்ளம் மீதிலே யான் என்பது அறவும் மூழ்கி – தாயு:12 113/3
கோடாது எனை கண்டு எனக்குள் நிறை சாந்த வெளி கூடி இன்பாதீதமும் கூடினேனோ சரியை கிரியையில் முயன்று நெறி கூடினேனோ அல்லன் யான்
ஈடாகவே யாறு வீட்டினில் நிரம்பியே இலகி வளர் பிராணன் என்னும் இரு நிதியினை கட்டி யோகபரன் ஆகாமல் ஏழை குடும்பன் ஆகி – தாயு:12 114/2,3
தாராது தள்ளவும் போகாது உனால் அது தள்ளினும் போகேன் யான் தடை ஏதும் இல்லை ஆண்டவன் அடிமை என்னும் இரு தன்மையிலும் என் வழக்கு – தாயு:12 117/3
பொய் முடங்கு தொழில் யாததற்கும் நல சாரதி தொழில் நடத்திடும் புத்தி யூகம் அறிவு_அற்ற மூகம் இவை பொருள் என கருதும் மருளன் யான்
தெய்வ நல் அருள் படைத்த அன்பரொடு சேரவும் கருணை கூர்வையோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 125/3,4
இரு_வினையும் கூட்டி உயிர் திரளை ஆட்டும் விழு பொருளே யான் சொலும் விண்ணப்பம் கேளே – தாயு:14 138/4
அருள் உடைய பரம் என்றோ அன்று-தானே யான் உளன் என்றும் எனக்கே ஆணவாதி – தாயு:14 160/3
ஆவியே உனை யான் அறிவாய் நின்று – தாயு:18 196/1
சொல்லவோ அறியாத தொழும்பன் யான்
செல்ல வேறு ஒரு திக்கு அறியேன் எலாம் – தாயு:18 207/2,3
ஆதியே உனை யான் அடைந்தேன் அகம் – தாயு:18 215/3
எங்ஙனே உய்ய யான் எனது என்பது அற்று – தாயு:18 225/1
உய்வர் என்பதும் யான் உணர்ந்தேன் உற்றே – தாயு:18 269/4
பிறவியும் வேண்டும் யான் எனது இறக்கப்பெற்றவர் பெற்றிடும் பேறே – தாயு:22 308/4
யான் எனல் காணேன் பூரண நிறைவில் யாதினும் இருந்த பேர்_ஒளி நீ – தாயு:22 311/1
என்னுள் கலந்தாய் யான் அறியாது இருந்தாய் இறைவா இனியேனும் – தாயு:23 312/3
எனது என்பதும் பொய் யான் எனல் பொய் எல்லாம் இறந்த இடம் காட்டும் – தாயு:23 316/1
மர பான்மை நெஞ்சினன் யான் வேண்டுவ கேட்டு இரங்கு எனவே மெளனத்தோடு அந்தர – தாயு:24 323/3
கொடுக்கின்றோர்கள்-பால் குறைவையாது யான் எனும் குதர்க்கம் – தாயு:24 327/1
அத்துவிதம் பெறும் பேறு என்று அறியாமல் யான் எனும் பேய்_அகந்தையோடு – தாயு:24 330/1
தெருளின முன்னிலையாம் உன்னை சேர்ந்து யான் தெளிகின்றேனே – தாயு:24 357/4
துன்னும் இன்னல் ஏன் யான் எனும் அகந்தையேன் சொல்லாய் – தாயு:25 376/4
சூடி வாழ்ந்தனர் அமல நின் அடியர் யான் தொழும்பன் – தாயு:25 379/2
பற்றுகின்றனர் எந்தை நின் அடியர் யான் பாவி – தாயு:25 389/2
என்னினோ யான் பிழைப்பேன் எனக்கு இனி யார் உன்_போல்வார் இல்லைஇல்லை – தாயு:26 397/3
ஆண்ட குரு மெளனி-தன்னால் யான் எனது அற்று அவன் அருள் நான் ஆவேன் பூவில் – தாயு:26 399/3
முடக்குவன் யான் பரமானந்த நித்திரை மூடிடுமே – தாயு:27 412/4
உடையாய் உடையபடி அன்றி யான் செய்தது ஒன்று இலையே – தாயு:27 455/4
அத்தனைக்கும் நான் அடிமை ஆதலினால் யான் எனது என்று – தாயு:28 477/3
என்றைக்கும் வேண்டுவனே யான் – தாயு:28 492/4
யான் உன் பரம் – தாயு:28 525/4
பொருளோடு யான் இருக்க போய் ஒளித்த நெஞ்சே நீ – தாயு:29 551/2
கள்ள கருணையை யான் காணும் தரம் ஆமோ – தாயு:33 562/2
வைத்த பொருள் உடல் ஆவி மூன்றும் நின் கைவசம் எனவே யான் கொடுக்க வாங்கிக்கொண்டு – தாயு:41 601/1
ஆனாலும் யான் எனது இங்கு அற்ற எல்லை அது போதும் அது கதி-தான் அல்ல என்று – தாயு:42 616/1
போனாலும் யான் போவன் அல்லால் மோன புண்ணியனே வேறும் ஒரு பொருளை நாடேன் – தாயு:42 616/2
இருந்தபடி என்று இருப்பது அன்றே அன்றோ எம்பெருமான் யான் கவலை எய்தா காலம் – தாயு:42 623/2
கண்டிலையோ யான் படும் பாடு எல்லாம் மூன்று கண் இருந்தும் தெரியாதோ கசிந்து உள் அன்பு ஆர் – தாயு:42 627/1
ஈனம் தரும் உடலம் என்னது யான் என்பது அற – தாயு:43 655/1
வெட்டவெளி பேதையன் யான் வேறு கபடு ஒன்று அறியேன் – தாயு:43 701/1
அனைத்துமாய் நின்றாயே யான் வேறோ நின்னை – தாயு:43 720/1
என்னை உன்றன் கைக்கு அளித்தார் யாவர் என்னை யான் கொடுத்து – தாயு:43 760/1
விண்ணுக்கும் விண் ஆகி மேவும் உனக்கு யான் பூசைபண்ணி – தாயு:43 785/1
எண்ணமும்-தான் நின்னைவிட இல்லை என்றால் யான் முனமே – தாயு:43 796/1
ஏது வந்தும் ஏது ஒழிந்தும் என்னது யான் என்னார்கள் – தாயு:43 829/1
என்னது யான் என்னல் அற்றோர் எங்கிருந்து பார்க்கினும் நின் – தாயு:43 851/1
அடுத்த இயல்பாக ஒன்றை யான் பகர்வது அல்லால் – தாயு:43 854/1
தொடுத்தது ஒன்றை யான் வேண்டி சொல்லேன் பராபரமே – தாயு:43 854/2
அன்பர் எல்லாம் இன்பம் அருந்திடவும் யான் ஒருவன் – தாயு:43 889/1
பத்தர் அருந்தும் பரம சுகம் யான் அருந்த – தாயு:43 905/1
கார் பூத்த கண்டனை யான் காணும் நாள் எந்நாளோ – தாயு:45 1083/2
வந்த பரஞ்சோதியை யான் வாஞ்சிப்பது எந்நாளோ – தாயு:45 1230/2
என்னது யான் என்பது அற எவ்விடமும் என் ஆசான் – தாயு:45 1304/1
என் செயினும் என் பெறினும் என் இறைவா ஏழையன் யான்
நின் செயல் என்று உன்னும் நினைவு வர காண்பேனோ – தாயு:46 1330/1,2
சிட்டர் போல் யான் அருந்தி தேக்கவைத்தால் ஆகாதோ – தாயு:47 1355/2
நின் அறிவுள் நின்னுடன் யான் நிற்கவைத்தால் ஆகாதோ – தாயு:47 1361/2
இறப்பும் பிறப்பும் பொருந்த எனக்கு எவ்வணம் வந்தது என்று எண்ணி யான் பார்க்கில் – தாயு:54 1431/1
மேல்


யான்-தான் (3)

சொல் அரிய தன்மை-அதா யான்-தான் என்ன தோன்றாது எல்லாம் விழுங்கும் சொரூபம் ஆகி – தாயு:14 152/2
யான்-தான் எனல் அறவே இன்ப நிட்டை என்று அருணைக்கோன்-தான் – தாயு:28 524/1
எந்த நிலைகளும் ஆங்கே கண்ட யான்-தான் இரண்டு அற்று இருந்ததும் ஆங்கே – தாயு:54 1440/2
மேல்


யானும் (5)

எந்நாளும் உடலிலே உயிராம் உனை போல் இருக்கவிலையோ மனது எனும் யானும் என் நட்பாம் பிராணனும் எமை சடம்-அது என்று உனை சித்து என்றுமே – தாயு:9 88/1
எனக்கென்று இருந்த உடல் பொருளும் யானும் நின என்று ஈந்த வண்ணம் – தாயு:23 321/1
என் அறிவும் யானும் எனது என்பதுவுமாம் இவைகள் – தாயு:43 747/1
எனக்கு இனியார் உன் போலும் இல்லை என்றால் யானும்
உனக்கு இனியான் ஆகா உளவு ஏன் பராபரமே – தாயு:43 913/1,2
என்னையே எனக்கு அளித்த நின்னை யானும் நினைவனே – தாயு:53 1420/2
மேல்


யானே (1)

நின்ற வாதனையை கடந்தவர் நினைவே நேசமே நின் பரம் யானே – தாயு:22 310/4
மேல்


யானை (6)

கானகம் இலங்கு புலி பசுவொடு குலாவும் நின் கண் காண மத யானை நீ கைகாட்டவும் கையால் நெகிடிக்கென பெரிய கட்டை மிக ஏந்தி வருமே – தாயு:5 43/1
எவ்வுயிர் திரளும் உலகில் என் உயிர் என குழைந்து உருகி நன்மையாம் இதம் உரைப்ப எனது என்ற யாவையும் எடுத்து எறிந்து மத யானை போல் – தாயு:13 129/1
ஒரு வனவன் யானை கெட குடத்துள் செம் கை ஓட்டுதல் போல் நான் பேதை உப்போடு அப்பை – தாயு:14 160/1
கடம் பெறு மா மத யானை என்னவும் நீ பாச கட்டான நிகளபந்த கட்டு அவிழ பாரே – தாயு:17 188/4
ஆங்காரம் என்னும் மத யானை வாயில் கரும்பாய் – தாயு:45 1150/1
ஞான மத யானை நடத்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1284/2
மேல்


யானையை (1)

வட்டமிட்டு ஒளிர் பிராணவாயு எனும் நிகளமோடு கமனம்செயும் மனம் எனும் பெரிய மத்த யானையை என் வசம் அடக்கிடின் மு_மண்டலத்து – தாயு:38 586/1
மேல்


யானோ (1)

விட்ட நின்னை யானோ வியப்பேன் பராபரமே – தாயு:43 764/2

மேல்