மெ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மெச்ச 1
மெச்சுவார் 1
மெணமெணென்று 1
மெத்த 7
மெத்தவும் 2
மெய் 73
மெய்-அதாம் 1
மெய்_அன்பர்க்கே 1
மெய்கண்டநாதன் 1
மெய்ஞ்ஞான 10
மெய்ஞ்ஞானம் 1
மெய்ஞ்ஞானமான 1
மெய்த்த 1
மெய்ந்நூல் 2
மெய்ம் 1
மெய்ம்மறந்து 1
மெய்ய 1
மெய்யர் 3
மெய்யன் 3
மெய்யனாம் 1
மெய்யனே 2
மெய்யா 2
மெய்யாக 1
மெய்யாம் 1
மெய்யான 4
மெய்யில் 3
மெய்யினால் 1
மெய்யினை 1
மெய்யுடனே 1
மெய்யும் 3
மெய்யே 1
மெய்யை 4
மெய்யையும் 1
மெய்யோ 2
மெல் 1
மெல்_இயலார் 1
மெலிவேனோ 1
மெழுகா 1
மெழுகாய் 3
மெழுகான 1
மெழுகு 4
மெழுகோ 1
மெள்ள 4
மெள்ளமெள்ள 1
மெள்ளமெள 1
மெள 1
மென் 1

மெச்ச (1)

பாலன் பசிக்கு இரங்கி பாற்கடலை ஞாலம் மெச்ச
பின்னே நடக்கவிட்டான் பேர்_அருளை நாடாதார்க்கு – தாயு:28 502/2,3
மேல்


மெச்சுவார் (1)

ஞான கருணாகர முகம் கண்ட போதிலே நவநாத சித்தர்களும் உன் நட்பினை விரும்புவார் சுகர் வாமதேவர் முதல் ஞானிகளும் உனை மெச்சுவார்
வானகமும் மண்ணகமும் வந்து எதிர் வணங்கிடும் உன் மகிமை-அது சொல்ல எளிதோ மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 43/3,4
மேல்


மெணமெணென்று (1)

வேறுபடு வேடங்கள் கொள்ள அறிவார் ஒன்றை மெணமெணென்று அகம் வேறதாம் வித்தை அறிவார் எமை போலவே சந்தை போல் மெய்ந்நூல் விரிக்க அறிவார் – தாயு:8 69/2
மேல்


மெத்த (7)

அந்நேரம் ஐயோ என் முகம் வாடி நிற்பதுவும் ஐய நின் அருள் அறியுமே ஆனாலும் மெத்த பயந்தவன் யான் என்னை ஆண்ட நீ கைவிடாதே – தாயு:9 81/2
வந்த நாள் இல்லை மெத்த அலைந்தேன் உன்னை மறவா இன்பத்தாலே வாழ்கின்றேனே – தாயு:16 184/4
திரு_உருவாளர் அநுபவ நிலையும் சேருமோ ஆவலோ மெத்த
அரு உரு ஆகி அல்லவாய் சமயம் அளவிடா ஆனந்த வடிவே – தாயு:19 280/3,4
மெய்யன் என்று உனை ஐயனே அடைந்தனன் மெத்த
நொய்யன் நுண்ணிய அறிவிலன் ஒன்றை நூறு ஆக்கும் – தாயு:25 372/2,3
கல்லாக படைத்தாலும் மெத்த நன்றே கரணமுடன் நான் உறவு கலக்கமாட்டேன் – தாயு:42 625/2
தள்ளிவிடின் மெத்த தவிப்பேன் பராபரமே – தாயு:43 668/2
மெய்யில் நோய் மாற்று அவுழ்தம் மெத்த உண்டு எம் அண்ணல் தந்த – தாயு:44 1071/1
மேல்


மெத்தவும் (2)

தேகமோ திடம் இல்லை ஞானமோ கனவிலும் சிந்தியேன் பேர்_இன்பமோ சேர என்றால் கள்ள மனதுமோ மெத்தவும் சிந்திக்குது என் செய்குவேன் – தாயு:37 583/2
பித்து ஆனேன் மெத்தவும் நான் பேதை பராபரமே – தாயு:43 690/2
மேல்


மெய் (73)

ஆக்கை எனும் இடிகரையை மெய் என்ற பாவி நான் அத்துவித வாஞ்சை ஆதல் அரிய கொம்பில் தேனை முடவன் இச்சித்தபடி ஆகும் அறிவு அவிழ இன்பம் – தாயு:4 27/1
பேரிட்டு மெய் என்று பேசு பாழ்ம் பொய் உடல் பெலக்க விளை அமுதம் ஊட்டி பெரிய புவனத்தினிடை போக்கு_வரவு உறுகின்ற பெரிய விளையாட்டு அமைத்திட்டு – தாயு:4 31/2
மின் அனைய பொய் உடலை நிலை என்றும் மை இலகு விழி கொண்டு மையல் பூட்டும் மின்னார்கள் இன்பமே மெய் என்றும் வளர் மாடம் மேல்வீடு சொர்க்கம் என்றும் – தாயு:5 40/1
மெய் விடா நா உள்ள மெய்யர் உள் இருந்து நீ மெய்யான மெய்யை எல்லாம் மெய் என உணர்த்தியது மெய் இதற்கு ஐயம் இலை மெய் ஏதும் அறியா வெறும் – தாயு:6 51/1
மெய் விடா நா உள்ள மெய்யர் உள் இருந்து நீ மெய்யான மெய்யை எல்லாம் மெய் என உணர்த்தியது மெய் இதற்கு ஐயம் இலை மெய் ஏதும் அறியா வெறும் – தாயு:6 51/1
மெய் விடா நா உள்ள மெய்யர் உள் இருந்து நீ மெய்யான மெய்யை எல்லாம் மெய் என உணர்த்தியது மெய் இதற்கு ஐயம் இலை மெய் ஏதும் அறியா வெறும் – தாயு:6 51/1
மெய் விடா நா உள்ள மெய்யர் உள் இருந்து நீ மெய்யான மெய்யை எல்லாம் மெய் என உணர்த்தியது மெய் இதற்கு ஐயம் இலை மெய் ஏதும் அறியா வெறும் – தாயு:6 51/1
மெய் திகழும் அஷ்டாங்க யோக பூமிக்குள் வளர் வேந்தரே குண_சாந்தரே வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 61/4
பொய் கால தேசமும் பொய் பொருளில் வாஞ்சையும் பொய் உடலை மெய் என்னலும் பொய் உறவு பற்றலும் பொய் ஆகும் நான் என்னல் பொய்யினும் பொய் ஆகையால் – தாயு:8 76/2
புன் புலால் மயிர் தோல் நரம்பு என்பு மொய்த்திடு புலை குடிலில் அருவருப்பு பொய் அல்லவே இதனை மெய் என்று நம்பி என் புந்தி செலுமோ பாழிலே – தாயு:9 80/3
விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன் மெய் சிலிர்த்து இரு கை கூப்பி விண் மாரி என என் இரு கண் மாரி பெய்யவே வேசற்று அயர்ந்தேன் இனி யான் – தாயு:9 83/2
புவனம் படைப்பது என் கர்த்தவியம் எவ்விடம் பூத பேதங்கள் எவிடம் பொய் மெய் இதம் அகிதமே வரும் நன்மை தீமையொடு பொறை பொறாமையும் எவ்விடம் – தாயு:10 89/3
விடக்கு துருத்தியை கரு மருந்து கூட்டை வெட்டவெட்ட தளிர்க்கும் வேட்கை மரம் உறுகின்ற சுடுகாட்டை முடிவிலே மெய் போல் இருந்து பொய்யாம் – தாயு:11 101/3
ஏகமான பொயை மெய் என கருதி ஐய வையம் மிசை வாடவோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 122/4
மெய் வருந்து தவம் இல்லை நல் சரியை கிரியை யோகம் எனும் மூன்றதாய் மேவுகின்ற சவுபான நல் நெறி விரும்பவில்லை உலகத்திலே – தாயு:13 125/2
ஒப்ப விரித்து உரைப்பர் இங்ஙன் பொய் மெய் என்ன ஒன்று இலை ஒன்று என பார்ப்பது ஒவ்வாது ஆர்க்கும் – தாயு:14 140/3
நில்லாத ஆக்கை நிலை அன்று எனவே கண்டாய் நேய அருள் மெய் அன்றோ நிலயம்-அதா நிற்க – தாயு:17 187/1
வேண்டும் சீர் அருள் மெய்_அன்பர்க்கே அன்பு – தாயு:18 208/1
தேனை தந்து எனை சேர்ந்து கலந்த மெய்
ஞான தெய்வத்தை நாடுவன் நான் எனும் – தாயு:18 216/2,3
வேத வேதியன் வெள் விடை ஊர்தி மெய்
போதமாய் நின்ற புண்ணியன் பூம் திரு – தாயு:18 243/2,3
சடத்தினை மெய் என்று எண்ணி தளரவோ தனியனேனே – தாயு:21 300/4
இடைந்திடைந்து ஏங்கி மெய் புளகிப்ப எழுந்தெழுந்து ஐய நின் சரணம் – தாயு:22 304/1
தீயிலே வெதுப்பி உயிரொடும் தின்ன சிந்தை நைந்து உருகி மெய் மறந்து – தாயு:22 306/2
மின்னை போன்றன அகிலம் என்று அறிந்து மெய் பொருளாம் – தாயு:24 340/1
பொய் அது என்பதை ஒருவி மெய் உணருதல் போதம் – தாயு:24 350/4
நாடியே இந்த உலகத்தை மெய் என நம்பி – தாயு:25 379/3
முற்றும் மாயமாம் சகத்தையே மெய் என முதல்-தான் – தாயு:25 389/3
கொய்யும் புது மலர் இட்டு மெய் அன்பர் குழாத்துடனே – தாயு:27 403/2
சின்மய முத்திரை கையே மெய் ஆக தெளிந்த நெஞ்சே – தாயு:27 442/3
மெய்யையும் மெய் என்று நின் அடியார்-தம் விவேகத்தையும் – தாயு:27 453/2
ஐயம்_இல் வீட்டையும் மெய் நூலையும் பொய்யது ஆக எண்ணும் – தாயு:27 453/3
கேட்டலுடன் சிந்தித்தல் கேடு_இலா மெய் தெளிவால் – தாயு:28 467/1
விதம் உற்று அறிவு எனும் பேர் மெய் – தாயு:28 481/4
வேண்டுவேன் இந்த உடல் மெய் உணரா பொய்யன் நான் – தாயு:28 493/3
மெய்யை பொய் என்றிடவும் மெய் அணையா பொய் நெஞ்சே – தாயு:28 526/1
பொய்யைத்-தான் மெய் எனவும் போகுமோ ஐயம்_அற – தாயு:28 526/2
தன்மயத்தை மெய் எனவே சார்ந்தனையேல் ஆனந்தம் – தாயு:28 526/3
பொன்னை புவியை மட பூவையரை மெய் எனவே – தாயு:34 569/3
மிடியிட்ட வாழ்க்கையால் உப்பு இட்ட கலம் எனவும் மெய் எலாம் உள் உடைந்து வீறிட்ட செல்வர்-தம் தலைவாயில் வாசமாய் வேதனைகள் உற வேதனும் – தாயு:37 581/1
தூள் ஏறு தூசு போல் வினை ஏறும் மெய் எனும் தொக்கினுள் சிக்கி நாளும் சுழல் ஏறு காற்றினிடை அழல் ஏறு பஞ்சு என சூறையிட்டு அறிவை எல்லாம் – தாயு:37 584/1
பொருந்து சகம் அனைத்தினையும் பொய்பொய் என்று புகன்றபடி மெய் என்றே போத ரூபத்து – தாயு:42 623/1
மெய் அருளே அன்றோ விளம்பாய் பராபரமே – தாயு:43 740/2
மெய் என்றால் மெய் ஆய்விடுமோ பராபரமே – தாயு:43 813/2
மெய் என்றால் மெய் ஆய்விடுமோ பராபரமே – தாயு:43 813/2
மின் அனைய பொய் உடலை மெய் என்று நம்பி ஐயோ – தாயு:43 814/1
ஞாலத்தை மெய் எனவே நம்பிநம்பி நாளும் என்றன் – தாயு:43 819/1
மெய் அருளின் மூழ்கின் விடும் காண் பராபரமே – தாயு:43 820/2
புந்தியினால் நின் அடியை போற்றுகின்ற மெய் அடியார் – தாயு:43 982/1
கண்ட அறிவு அகண்டாகாரம் என மெய் அறிவில் – தாயு:43 1009/1
கல்லாதேன் ஆனாலும் கற்று உணர்ந்த மெய் அடியார் – தாயு:43 1018/1
மெய் கூடு சென்று விளம்பி வா பைங்கிளியே – தாயு:44 1066/2
மெய் பணியும் தந்து ஒரு கால் மேவுவனோ பைங்கிளியே – தாயு:44 1067/2
மெய் திகழ்ந்து என் அல்லல் விடியும் நாள் எந்நாளோ – தாயு:45 1105/2
தமிழ் சமர்த்தர் மெய் புகழ்வது எந்நாளோ – தாயு:45 1109/2
கண்டது பொய் என்று அகண்டாகார சிவம் மெய் எனவே – தாயு:45 1112/1
நீர்க்குமிழி பூண் அமைத்து நின்றாலும் நில்லா மெய்
பார்க்கும் இடத்து இதன் மேல் பற்று அறுவது எந்நாளோ – தாயு:45 1117/1,2
மெய் வீசும் நாற்றம் எலாம் மிக்க மஞ்சளால் மறைத்து – தாயு:45 1127/1
மெய் காட்சியாம் புவனம் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1178/2
வெட்டவெளி விண் ஆற்றில் மெய் தோய்வது எந்நாளோ – தாயு:45 1180/2
ஈனம் இல்லா மெய் பொருளை இம்மையிலே காண வெளி – தாயு:45 1191/1
மெய் விளக்கின் பின்னே போய் மெய் காண்பது எந்நாளோ – தாயு:45 1195/2
மெய் விளக்கின் பின்னே போய் மெய் காண்பது எந்நாளோ – தாயு:45 1195/2
வீட்டு இன்ப மெய் பொருளை மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1200/2
புண்ணிய பாவங்கள் பொருந்தா மெய் அன்பர் எல்லாம் – தாயு:45 1227/1
குத்திர மெய் புற்றகத்து குண்டலி பாம்பு ஒன்று ஆட்டும் – தாயு:45 1231/1
மெய்ய நினை மெய் எனவே மெய்யுடனே காண்பேனோ – தாயு:46 1320/2
மெய் மயம் வந்து என்னை விழுங்கவைத்தால் ஆகாதோ – தாயு:47 1354/2
பொய் புவியை மெய் போல் புதுக்கிவைத்தது என்னேயோ – தாயு:51 1407/2
என்றும் அழியும் இ காயம் இத்தை ஏதுக்கு மெய் என்று இருந்தீர் உலகீர் – தாயு:54 1442/1
உண்டோ நமை போல வஞ்சர் மலம் ஊறி ததும்பும் உடலை மெய் என்று – தாயு:54 1443/1
கொண்டோ பிழைப்பது இங்கு ஐயோ அருள் கோலத்தை மெய் என்று கொள்ளவேண்டாவோ – தாயு:54 1443/2
வாள் ஆரும் கண்ணியர் மோகம் யம வாதை கனலை வளர்க்கும் மெய் என்றே – தாயு:54 1447/1
வேள் ஆனவனு மெய் விட்டான் என்னில் மிக்கோர் துறக்கை விதி அன்றோ தோழி – தாயு:54 1447/2
மேல்


மெய்-அதாம் (1)

மெய்-அதாம் இன்பம் என்று விளைவதே – தாயு:18 201/4
மேல்


மெய்_அன்பர்க்கே (1)

வேண்டும் சீர் அருள் மெய்_அன்பர்க்கே அன்பு – தாயு:18 208/1
மேல்


மெய்கண்டநாதன் (1)

மெய்கண்டநாதன் அருள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1097/2
மேல்


மெய்ஞ்ஞான (10)

பந்தம்_அற மெய்ஞ்ஞான தீரமும் தந்து எனை பாதுகாத்து அருள்செய்குவாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 8/4
சொந்தமாய் எழுத படித்தார் மெய்ஞ்ஞான சுக நிஷ்டை சேராமலே சோற்று துருத்தியை சதம் எனவும் உண்டு உண்டு தூங்கவைத்தவர் ஆர்-கொலொ – தாயு:2 10/2
மோகத்திலே சிறிதும் ஒழியவிலை மெய்ஞ்ஞான மோனத்தில் நிற்க என்றால் முற்றாது பரிபாக சத்தி களனேக நின் மூதறிவிலே எழுந்த – தாயு:11 102/3
கோன் ஆக ஒரு முதல் இங்கு உண்டு எனவும் யூகம் கூட்டியதும் சக முடிவில் குலவுறு மெய்ஞ்ஞான
வான் ஆக அ முதலே நிற்கும் நிலை நம்மால் மதிப்பு அரிதாம் என மோனம் வைத்ததும் உன் மனமே – தாயு:17 193/2,3
நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே நின் அடியர் கூட்டத்திலே நிலைபெற்ற அன்பிலே மலைவு அற்ற மெய்ஞ்ஞான ஞேயத்திலே உன் இரு தாள் – தாயு:37 579/3
முன்_நாள் மெய்ஞ்ஞான முனிவர் தவம் ஈட்டுதல் போல் – தாயு:43 857/1
கன்மம் என்பது எல்லாம் கரிசு_அறவே மெய்ஞ்ஞான
தன்ம நிலை சார்ந்தது அன்பர் தன்மை பராபரமே – தாயு:43 858/1,2
கைவிளக்கின் பின்னே போய் காண்பார் போல் மெய்ஞ்ஞான
மெய் விளக்கின் பின்னே போய் மெய் காண்பது எந்நாளோ – தாயு:45 1195/1,2
ஆணவத்தொடு அத்துவிதமானபடி மெய்ஞ்ஞான
தாணுவினோடு அத்துவிதம் சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1298/1,2
இந்த மயக்கை அறுக்க எனக்கு எந்தை மெய்ஞ்ஞான எழில் வாள் கொடுத்தான் – தாயு:54 1446/2
மேல்


மெய்ஞ்ஞானம் (1)

விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும் – தாயு:43 792/1
மேல்


மெய்ஞ்ஞானமான (1)

பந்தம் அறும் மெய்ஞ்ஞானமான மோன பண்பு ஒன்றை அருளி அந்த பண்புக்கே-தான் – தாயு:14 151/1
மேல்


மெய்த்த (1)

மெய்த்த குலம் கல்வி புனை வேடம் எலாம் ஓடவிட்ட – தாயு:45 1250/1
மேல்


மெய்ந்நூல் (2)

வேறுபடு வேடங்கள் கொள்ள அறிவார் ஒன்றை மெணமெணென்று அகம் வேறதாம் வித்தை அறிவார் எமை போலவே சந்தை போல் மெய்ந்நூல் விரிக்க அறிவார் – தாயு:8 69/2
காண்டல்பெற புறத்தின் உள்ளபடியே உள்ளும் காட்சி மெய்ந்நூல் சொலும் பதியாம் கடவுளே நீ – தாயு:14 144/1
மேல்


மெய்ம் (1)

பொய்த்த மொழி அல்லால் மருந்துக்கும் மெய்ம் மொழி புகன்றிடேன் பிறர் கேட்கவே போதிப்பது அல்லாது சும்மா இருந்து அருள் பொருந்திடா பேதை நானே – தாயு:8 75/3
மேல்


மெய்ம்மறந்து (1)

நீராளமாய் உருகி கண்ணீர் சோர நெட்டுயிர்த்து மெய்ம்மறந்து ஓர் நிலையாய் நிற்பேன் – தாயு:14 155/4
மேல்


மெய்ய (1)

மெய்ய நினை மெய் எனவே மெய்யுடனே காண்பேனோ – தாயு:46 1320/2
மேல்


மெய்யர் (3)

பொய் வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே பொய் இலா மெய்யர் அறிவில் போத பரிபூரண அகண்டிதாகாரமாய் போக்கு_வரவு அற்ற பொருளே – தாயு:4 29/3
மெய் விடா நா உள்ள மெய்யர் உள் இருந்து நீ மெய்யான மெய்யை எல்லாம் மெய் என உணர்த்தியது மெய் இதற்கு ஐயம் இலை மெய் ஏதும் அறியா வெறும் – தாயு:6 51/1
பூத முதல் நாதம் வரை பொய் என்ற மெய்யர் எல்லாம் – தாயு:43 1014/1
மேல்


மெய்யன் (3)

வெவ்விய குணம் பல இருக்க என் அறிவூடு மெய்யன் நீ வீற்றிருக்க விதி இல்லை என்னிலோ பூரணன் எனும் பெயர் விரிக்கில் உரை வேறும் உளதோ – தாயு:4 28/2
மெய்யன் என்று உனை ஐயனே அடைந்தனன் மெத்த – தாயு:25 372/2
அன்பருக்கு அன்பான மெய்யன் ஐயன் ஆனந்த மோனன் அருள் குருநாதன் – தாயு:54 1430/1
மேல்


மெய்யனாம் (1)

மெய்யனாம் உனக்கே வெளி ஆகுமே – தாயு:18 238/4
மேல்


மெய்யனே (2)

துய்யனே மெய்யனே உயிரினுக்குயிரான துணைவனே இணை ஒன்று இலா துரியனே துரியமும் காணா அதீதனே சுருதி முடி மீது இருந்த – தாயு:8 74/3
மெய்யனே இந்த மேதினி மீது உழல் – தாயு:18 224/3
மேல்


மெய்யா (2)

போதித்த நிலையையும் மயக்குதே அபயம் நான் புக்க அருள் தோற்றிடாமல் பொய்யான உலகத்தை மெய்யா நிறுத்தி என் புந்திக்குள் இந்த்ரசாலம் – தாயு:5 39/2
மெய்யா அறிந்து என்ன என்னால் இதனை விடப்படுமோ – தாயு:27 419/2
மேல்


மெய்யாக (1)

மெய்யாக ஓர் சொல் விளம்பினர் யார் வையகத்தோர் – தாயு:28 485/2
மேல்


மெய்யாம் (1)

மின்னை அன்ன பொய் வாழ்க்கையே நிலை என மெய்யாம்
உன்னை நான் மறந்து எ வணம் உய் வணம் உரையாய் – தாயு:25 377/1,2
மேல்


மெய்யான (4)

மெய் விடா நா உள்ள மெய்யர் உள் இருந்து நீ மெய்யான மெய்யை எல்லாம் மெய் என உணர்த்தியது மெய் இதற்கு ஐயம் இலை மெய் ஏதும் அறியா வெறும் – தாயு:6 51/1
மெய்யான தன்மை விளங்கினால் யார்க்கேனும் – தாயு:28 462/1
மெய்யான நிட்டையினை மேவினர்கட்கு அன்றோ-தான் – தாயு:28 467/3
பொய் அகல மெய்யான போத நிலை கண்டோர்க்கு ஓர் – தாயு:43 950/1
மேல்


மெய்யில் (3)

மெய்யில் நின்று ஒளிர் பெரியவர் சார்வுற்று விளங்கி – தாயு:24 350/3
மெய்யில் நோய் மாற்று அவுழ்தம் மெத்த உண்டு எம் அண்ணல் தந்த – தாயு:44 1071/1
மெய்யில் சிவம் பிறக்க மேவும் இன்பம் போல் மாதர் – தாயு:45 1141/1
மேல்


மெய்யினால் (1)

மெய்யினால் உனை காண விரும்பினேன் – தாயு:18 252/2
மேல்


மெய்யினை (1)

விண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை
எண்ணி எண்ணி இரவும் பகலுமே – தாயு:18 268/2,3
மேல்


மெய்யுடனே (1)

மெய்ய நினை மெய் எனவே மெய்யுடனே காண்பேனோ – தாயு:46 1320/2
மேல்


மெய்யும் (3)

கையும் மெய்யும் கருத்துக்கு இசையவே – தாயு:18 201/1
காரணம் உணர்த்தும் கையும் நின் மெய்யும் கண்கள் மூன்று உடைய என் கண்ணே – தாயு:19 272/2
மெய்யும் அறிவும் பெறும் பேறும் விளங்கும் எனக்கு உன் அடியார்-பால் – தாயு:23 317/3
மேல்


மெய்யே (1)

மிக வளர வந்த அருள் மெய்யே அகம் நெகிழ – தாயு:28 469/2
மேல்


மெய்யை (4)

மெய் விடா நா உள்ள மெய்யர் உள் இருந்து நீ மெய்யான மெய்யை எல்லாம் மெய் என உணர்த்தியது மெய் இதற்கு ஐயம் இலை மெய் ஏதும் அறியா வெறும் – தாயு:6 51/1
பொன்னை விரித்திடும் உலகத்து உம்பரும் இம்பரும் பரவும் புனித மெய்யை – தாயு:26 394/4
விடவிடவே நாடுவரோ மெய்யை படபடென – தாயு:28 493/2
மெய்யை பொய் என்றிடவும் மெய் அணையா பொய் நெஞ்சே – தாயு:28 526/1
மேல்


மெய்யையும் (1)

மெய்யையும் மெய் என்று நின் அடியார்-தம் விவேகத்தையும் – தாயு:27 453/2
மேல்


மெய்யோ (2)

தேகாதி மெய்யோ தெளி – தாயு:28 476/4
சித்தம் மிசை புகுந்தது தான் மெய்யோ பொய்யோ சிறியேற்கு இங்கு உளவு உரையாய் திகையா வண்ணம் – தாயு:41 601/2
மேல்


மெல் (1)

மெல்_இயலார் மோக விழற்கு இறைப்பேன் ஐயா நின் – தாயு:47 1357/1
மேல்


மெல்_இயலார் (1)

மெல்_இயலார் மோக விழற்கு இறைப்பேன் ஐயா நின் – தாயு:47 1357/1
மேல்


மெலிவேனோ (1)

வீண் நாள் கழித்து மெலிவேனோ பைங்கிளியே – தாயு:44 1040/2
மேல்


மெழுகா (1)

இரும்போ கல்லோ மரமோ என்னும் நெஞ்சை கனல் மேல் இட்ட மெழுகா உருக்கும் இன்ப_வெள்ளம் ஆகி – தாயு:17 192/2
மேல்


மெழுகாய் (3)

என்பு எலாம் நெக்கு உடைய ரோமம் சிலிர்ப்ப உடல் இளக மனது அழலின் மெழுகாய் இடையறாது உருக வரும் மழை போல் இரங்கியே இரு விழிகள் நீர் இறைப்ப – தாயு:9 80/1
முன்னாக நீ என்ன கோட்டை கொண்டாய் என்று மூட மனம் மிகவும் ஏச மூண்டு எரியும் அனல் இட்ட மெழுகாய் உளம் கருகல் முறைமையோ பதினாயிரம் – தாயு:9 88/3
தீயிடை மெழுகாய் நொந்தேன் தெளிவு_இலேன் வீணே காலம் – தாயு:36 577/3
மேல்


மெழுகான (1)

செம் தழலின் மெழுகான தங்கம் இவை என்-கொலோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 30/4
மேல்


மெழுகு (4)

மீட்டிடவும் வல்ல நீர் என் மன_கல்லை அனல் மெழுகு ஆக்கி வைப்பது அரிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 58/4
பந்தமானதில் இட்ட மெழுகு ஆகி உள்ளம் பதைத்துப்பதைத்து உருகவோ பரம சுகமானது பொறுப்பு அரிய துயரமாய் பலகாலும் மூர்ச்சிப்பதோ – தாயு:9 87/2
தீ உண்டிருந்த மெழுகு அலவோ கதி சேர்வதற்கே – தாயு:27 421/4
தீயின் மெழுகு ஒத்து உருகும் சிந்தை வர காண்பேனோ – தாயு:46 1329/2
மேல்


மெழுகோ (1)

பாகோ மெழுகோ பகராய் பராபரமே – தாயு:43 665/2
மேல்


மெள்ள (4)

தன்மயம் ஆன சுபாவத்தில் மெள்ள தலைப்படுங்கால் – தாயு:27 442/1
பொய்யன் இவன் என்று மெள்ள போதிப்பார் சொல் கேட்டு – தாயு:43 694/1
கள்ளன் இவன் என்று மெள்ள கைவிடுதல் காரியமோ – தாயு:45 1233/1
சிற்றறிவு மெள்ள சிதைந்து எம்மான் பேர்_அறிவை – தாயு:45 1287/1
மேல்


மெள்ளமெள்ள (1)

மெள்ளமெள்ள கை நெகிழ விட்டாய் பராபரமே – தாயு:43 969/2
மேல்


மெள்ளமெள (1)

கள்ளன் அறிவூடுமே மெள்ளமெள வெளியாய் கலக்க வரும் நல்ல உறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 54/4
மேல்


மெள (1)

போதியாத எல்லாம் மெள போதிக்க – தாயு:18 247/2
மேல்


மென் (1)

மின் போலும் இடை ஒடியும்ஒடியும் என மொழிதல் போல் மென் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப வீங்கி புடைத்து விழ சுமை அன்ன கொங்கை மட மின்னார்கள் பின் ஆவலால் – தாயு:12 120/1

மேல்