மீ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

மீட்டிடவும் (1)

மீட்டிடவும் வல்ல நீர் என் மன_கல்லை அனல் மெழுகு ஆக்கி வைப்பது அரிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 58/4
மேல்


மீதானமான (1)

மீதானமான வெற்பை மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1181/2
மேல்


மீதிலே (3)

அந்தகாரத்தை ஓர் அகம் ஆக்கி மின் போல் என் அறிவை சுருக்கினவர் ஆர் அ அறிவு-தானுமே பற்றினது பற்றாய் அழுந்தவும் தலை மீதிலே
சொந்தமாய் எழுத படித்தார் மெய்ஞ்ஞான சுக நிஷ்டை சேராமலே சோற்று துருத்தியை சதம் எனவும் உண்டு உண்டு தூங்கவைத்தவர் ஆர்-கொலொ – தாயு:2 10/1,2
ஆசைக்கு ஓர் அளவு இல்லை அகிலம் எல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக அம் பொன் மிக வைத்த பேரும் – தாயு:2 13/1
எந்த நாளும் சரி என தேர்ந்துதேர்ந்துமே இரவு_பகல் இல்லா இடத்து ஏகமாய் நின்ற நின் அருள்_வெள்ளம் மீதிலே யான் என்பது அறவும் மூழ்கி – தாயு:12 113/3
மேல்


மீதினில் (1)

வையம் மீதினில் பரம்பரை யாதினும் மருவும் – தாயு:24 350/2
மேல்


மீது (15)

ஆழ் ஆழி கரை இன்றி நிற்கவிலையோ கொடிய ஆலம் அமுதாகவிலையோ அ கடலின் மீது வட அனல் நிற்கவில்லையோ அந்தரத்து அகில கோடி – தாயு:2 12/1
வாசம் உறு சற்சாரம் மீது என்னை ஒரு ஞான மத்தகஜம் என வளர்த்தாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 37/4
சந்ததமும் வேத மொழி யாதொன்று பற்றின் அது தான் வந்து முற்றும் எனலால் சகம் மீது இருந்தாலும் மரணம் உண்டு என்பது சதா_நிஷ்டர் நினைவதில்லை – தாயு:6 53/1
இசைய மலர் மீது உறை மணம் போல ஆனந்தம் இதயம் மேல் கொள்ளும் வண்ணம் என்றைக்கும் அழியாத சிவராச யோகராய் இந்த்ராதி தேவர்கள் எலாம் – தாயு:7 62/3
துய்யனே மெய்யனே உயிரினுக்குயிரான துணைவனே இணை ஒன்று இலா துரியனே துரியமும் காணா அதீதனே சுருதி முடி மீது இருந்த – தாயு:8 74/3
மத்த மத கரி முகில் குலம் என்ன நின்று இலகு வாயிலுடன் மதி அகடு தோய் மாட கூட சிகரம் மொய்த்த சந்திரகாந்த மணி மேடை உச்சி மீது
முத்தமிழ் முழக்கமுடன் முத்த நகையார்களொடு முத்துமுத்தாய் குலாவி மோகத்து இருந்தும் என் யோகத்தின் நிலை நின்று மூச்சை பிடித்து அடைத்து – தாயு:11 105/1,2
காயாத மரம் மீது கல் ஏறு செல்லுமோ கடவுள் நீ யாங்கள் அடியேம் கர்ம பந்தத்தினால் சன்மபந்தம் பெற கற்பித்தது உன்னது அருளே – தாயு:11 107/1
ஆதார ஆதேயம் முழுதும் நீ ஆதலால் அகிலம் மீது என்னை ஆட்டி ஆடல் கண்டவனும் நீ ஆடுகின்றவனும் நீ அருளும் நீ மெளன ஞான – தாயு:11 109/3
எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் இல்லை எனும் இ உலகம் மீது ஏதும் அறியாதவன் என பெயர் தரித்து மிக ஏழைக்குள் ஏழை ஆகி – தாயு:12 119/1
நாள் இது வரைக்கும் உன் அடிமை கூடவே சனனம் ஆனதோ அநந்தம் உண்டு நல சனன மீது இதனுள் அறிய_வேண்டுவன அறியலாம் – தாயு:13 126/2
அறிவில் நின்று குருவாய் உணர்த்தியதும் அன்றி மோனகுரு ஆகியே அகிலம் மீது வர வந்த சீர் அருளை ஐய ஐய இனி என் சொல்கேன் – தாயு:13 128/3
ஊன் ஆரும் உடல் சுமை என் மீது ஏன் வைத்தாய் உயிர் எனவும் என்னை ஒன்றா உள் ஏன் வைத்தாய் – தாயு:16 179/2
மெய்யனே இந்த மேதினி மீது உழல் – தாயு:18 224/3
ஆசை உன் மீது அல்லால் அருள் அறிய வேறும் ஒன்றில் – தாயு:43 874/1
ஏதும் இல்லாமல் எல்லாம் வல்லான் தாளால் என் தலை மீது தாக்கினான் தோழி – தாயு:54 1437/2
மேல்


மீதும் (1)

அருமை பெறு புகழ் பெற்ற வேதாந்த சித்தாந்தம் ஆதியாம் அந்தம் மீதும் அத்துவித நிலையராய் என்னை ஆண்டு உன் அடிமை ஆனவர்கள் அறிவினூடும் – தாயு:4 32/3
மேல்


மீள (1)

ஆள வந்தார் தாளின் கீழ் ஆள் புகுந்தாய் மீள உன்னை – தாயு:28 523/2
மேல்


மீன் (1)

பள்ளத்தின் மீன் போல் பதைத்தேன் பராபரமே – தாயு:33 562/4

மேல்