நோ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

நோக்கம் (2)

எல் பட விளங்கு ககனத்தில் இமையா விழி இசைந்து மேல் நோக்கம் உறலால் இரவு_பகல் இருளான கன தந்தி பட நூறி இதயம் களித்திடுதலால் – தாயு:7 65/2
சிந்தை நோக்கம் தெரிந்து குறிப்பு எலாம் – தாயு:18 248/3
மேல்


நோக்கற்கு (1)

நோக்கற்கு அரிதான நுண்ணிய வான் மோன நிலை – தாயு:28 477/1
மேல்


நோக்காமல் (1)

நோக்காமல் நோக்கி நிற்கும் நுண் அறிவு காண்பேனோ – தாயு:46 1340/2
மேல்


நோக்கி (3)

வந்து என் உடல் பொருள் ஆவி மூன்றும் தன் கைவசம் எனவே அத்துவா மார்க்கம் நோக்கி
ஐந்து புலன் ஐம்_பூதம் கரணம் ஆதி அடுத்த குணம் அத்தனையும் அல்லை அல்லை – தாயு:14 149/1,2
திரு_முகமே நோக்கி திருக்கு அறுப்பது எந்நாளோ – தாயு:45 1086/2
நோக்காமல் நோக்கி நிற்கும் நுண் அறிவு காண்பேனோ – தாயு:46 1340/2
மேல்


நோக்கு (1)

நோக்கு கரணம் புருடன் உடனே கூட நுவல்வர் இருபத்தைந்தா நுண்ணியோரே – தாயு:24 346/4
மேல்


நோக்கும் (3)

நோக்கும் திரு_கூத்தை நோக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1255/2
நோக்கும் திரு_கூத்தை நோக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1255/2
நோக்கும் மவுனம் இந்த நூல்_அறிவில் உண்டாமோ – தாயு:51 1401/2
மேல்


நோய் (3)

வாட்டம் அறா உற்பவ நோய் மாறுமோ நாட்டமுற்று – தாயு:28 467/2
மெய்யில் நோய் மாற்று அவுழ்தம் மெத்த உண்டு எம் அண்ணல் தந்த – தாயு:44 1071/1
மையல் நோய் தீர்க்க மருந்தும் உண்டோ பைங்கிளியே – தாயு:44 1071/2
மேல்


நோய்-தன்னை (1)

என்னை கெடுக்க இசைந்த இரு_வினை நோய்-தன்னை
கெடுக்க தகாதோ பராபரமே – தாயு:43 799/1,2
மேல்


நோய்கள் (1)

நெறியின் வைகி வளர் செல்வமும் உதவி நோய்கள் அற்ற சுக வாழ்க்கையாய் நியமம் ஆதி நிலை நின்று ஞான நெறி நிஷ்டை கூடவும் எந்நாளுமே – தாயு:13 128/2
மேல்


நோயாளர்க்கும் (1)

வாத நோயாளர்க்கும் எட்டாத முக்கண் உடை மா மருந்துக்கு அமிர்தமே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 580/4
மேல்


நோயும் (1)

நோயும் வெம் கலி பேயும் தொடர நின் நூலில் சொன்ன முறை இயமாதி நான் – தாயு:31 557/1
மேல்


நோவனோ (4)

தந்தை தாய் முதலான அகில ப்ரபஞ்சம்-தனை தந்தது எனது ஆசையோ தன்னையே நோவனோ பிறரையே நோவனோ தற்காலம்-அதை நோவனோ – தாயு:2 10/3
தந்தை தாய் முதலான அகில ப்ரபஞ்சம்-தனை தந்தது எனது ஆசையோ தன்னையே நோவனோ பிறரையே நோவனோ தற்காலம்-அதை நோவனோ – தாயு:2 10/3
தந்தை தாய் முதலான அகில ப்ரபஞ்சம்-தனை தந்தது எனது ஆசையோ தன்னையே நோவனோ பிறரையே நோவனோ தற்காலம்-அதை நோவனோ
பந்தமானது தந்த வினையையே நோவனோ பரமார்த்தம் ஏதும் அறியேன் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 10/3,4
பந்தமானது தந்த வினையையே நோவனோ பரமார்த்தம் ஏதும் அறியேன் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 10/4

மேல்