தா – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தா 2
தாக்கவும் 2
தாக்கற்கு 1
தாக்காதே 1
தாக்கி 2
தாக்கினால் 1
தாக்கினான் 1
தாக்கு 1
தாக்கும் 3
தாக்குமதில் 1
தாக 1
தாகத்திலே 1
தாகத்தின் 1
தாகம் 3
தாகமாய் 1
தாகமோ 1
தாகியரும் 1
தாங்காது 1
தாங்கி 2
தாங்கிய 1
தாங்கு 1
தாட்கு 1
தாணுவினோடு 1
தாணுவே 1
தாதாவும் 1
தாது 2
தாதை 1
தாதையே 1
தாதோ 1
தாப 1
தாபிக்கும் 1
தாம் 7
தாமத 1
தாமரை 1
தாமரைக்கு 1
தாமாய் 1
தாமே 1
தாய் 24
தாய்_இலா 2
தாய்_இலார் 1
தாய்க்கு 1
தாயகம் 1
தாயர் 1
தாயாக 1
தாயான 2
தாயினும் 3
தாயும் 6
தாயுமான 2
தாயுமானவன் 1
தாயே 3
தார் 1
தாரகத்தை 1
தாரகம் 3
தாரகமா 1
தாரகமாய் 3
தாரணி 1
தாரணையினால் 1
தாரம் 1
தாரா 1
தாராத 1
தாராது 2
தாராமல் 1
தாராயேல் 1
தாராவிடின் 1
தாராளமா 1
தாராளமாய் 1
தாரு 1
தாரை 3
தாவிட 1
தாவியதோர் 1
தாவு 1
தாழ்வு 4
தாழாது 1
தாழாமல் 1
தாழாயோ 1
தாள் 20
தாள்_இணை 1
தாளால் 1
தாளில் 3
தாளின் 1
தாளை 3
தான் 47
தான 1
தானம் 4
தானம்-அதில் 1
தானமாய் 1
தானமும் 1
தானமே 1
தானாக 4
தானாய் 4
தானே 27
தானேயாய் 1
தானேயும் 1

தா (2)

உன்னை உடலை உறு பொருளை தா எனவே – தாயு:28 530/1
இன்ப நிருவிகற்பம் இன்றே தா அன்று எனிலோ – தாயு:43 987/1
மேல்


தாக்கவும் (2)

தாக்கவும் செய்வாய் அன்றோ சச்சிதானந்த வாழ்வே – தாயு:35 570/4
தாக்கவும் என் அல்லல் எல்லாம் தட்டழிவது எந்நாளோ – தாயு:45 1106/2
மேல்


தாக்கற்கு (1)

தாக்கற்கு உபாயம் சமைத்த பிரான் காக்கும் உயிர் – தாயு:28 477/2
மேல்


தாக்காதே (1)

தாக்காதே தாக்கும் தனியே பராபரமே – தாயு:43 646/2
மேல்


தாக்கி (2)

கரு மருவு காயத்தை நிர்மலமதாகவே கமலாசனாதி சேர்த்து காலை பிடித்து அனலை அம்மை குண்டலி அடி கலை மதியினூடு தாக்கி
உருகி வரும் அமிர்தத்தை உண்டுண்டு உறங்காமல் உணர்வான விழியை நாடி ஒன்றோடு இரண்டு எனா சமரச சொரூப சுகம் உற்றிட என் மனதின் வண்ணம் – தாயு:12 111/2,3
தாக்கி நின்றவா தன்மயம் ஆம் அதே – தாயு:18 221/4
மேல்


தாக்கினால் (1)

தான் ஆன தன்மை வந்து தாக்கினால் அவ்விடத்தே – தாயு:28 518/1
மேல்


தாக்கினான் (1)

ஏதும் இல்லாமல் எல்லாம் வல்லான் தாளால் என் தலை மீது தாக்கினான் தோழி – தாயு:54 1437/2
மேல்


தாக்கு (1)

தாக்கு அற நிற்கும் சமர்த்தன் உள்ள சாட்சியை சிந்திக்க தக்கது தோழி – தாயு:54 1439/2
மேல்


தாக்கும் (3)

தாக்கும் வகை ஏது இ நாள் சரியை கிரியா யோக சாதனம் விடித்தது எல்லாம் சன்மார்க்கம் அல்ல இவை நிற்க என் மார்க்கங்கள் சாராத பேர்_அறிவு-அதாய் – தாயு:4 27/2
தாக்காதே தாக்கும் தனியே பராபரமே – தாயு:43 646/2
தாக்கும் நல் ஆனந்த சோதி அணு-தன்னில் சிறிய எனை தன் அருளால் – தாயு:54 1438/1
மேல்


தாக்குமதில் (1)

சாற்று அரிய இன்ப_வெள்ளம் தாக்குமதில் நீ முளைக்கில் – தாயு:47 1371/1
மேல்


தாக (1)

நீயே இங்கு எளியேற்கும் தாக மோகம் நினைவூடே நின்று உணர்த்தி நிகழ்த்தலாலே – தாயு:41 597/1
மேல்


தாகத்திலே (1)

தாகத்திலே வாய்க்கும் அமிர்த பிரவாகமே தன்னம் தனி பெருமையே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 102/4
மேல்


தாகத்தின் (1)

தாகத்தின் வண்ணம் தழுவுவனோ பைங்கிளியே – தாயு:44 1080/2
மேல்


தாகம் (3)

பத்தி நெறி நிலைநின்றும் நவ கண்ட பூமி பரப்பை வலமாக வந்தும் பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும் பசி_தாகம் இன்றி எழுநா – தாயு:4 36/1
தாகம் அறிந்து இன்ப நிட்டை தாராயேல் ஆ கெடுவேன் – தாயு:43 659/1
அல்லால் என் தாகம் அறுமோ பராபரமே – தாயு:43 662/2
மேல்


தாகமாய் (1)

தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ தமியனேற்கு அருள் தாகமோ சற்றும் இலை என்பதுவும் வெளியாச்சு வினை எலாம் சங்கேதமாய் கூடியே – தாயு:10 94/2
மேல்


தாகமோ (1)

தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ தமியனேற்கு அருள் தாகமோ சற்றும் இலை என்பதுவும் வெளியாச்சு வினை எலாம் சங்கேதமாய் கூடியே – தாயு:10 94/2
மேல்


தாகியரும் (1)

தாகியரும் யோகம் முன்னே சார்ந்தோர் பராபரமே – தாயு:43 725/2
மேல்


தாங்காது (1)

தாங்காது மொழி பேசும் அரிகர பிரமாதி-தம்மொடு சமானம் என்னும் தடை அற்ற தேரில் அஞ்சுரு ஆணி போலவே தன்னில் அசையாது நிற்கும் – தாயு:5 45/2
மேல்


தாங்கி (2)

விளங்க வெண்_நீறு பூசி விரி சடை கங்கை தாங்கி
துளங்கு நல் நுதல்_கண் தோன்ற சுழல் வளி நெடு மூச்சு ஆக – தாயு:15 168/1,2
கூறு ஆய ஐம்_பூத சுமையை தாங்கி குணம்_இலா மனம் எனும் பேய் குரங்கின் பின்னே – தாயு:42 609/1
மேல்


தாங்கிய (1)

தாங்கிய பார் விண் ஆதி தானே ஞானாக்கினியாய் – தாயு:45 1309/1
மேல்


தாங்கு (1)

தாங்கு அரிய மையல் எல்லாம் தந்து எனை விட்டு இன் அருளாம் – தாயு:44 1051/1
மேல்


தாட்கு (1)

நறை மலர் தாட்கு அன்பு பெற்று நாம் இருப்பது எந்நாளோ – தாயு:45 1100/2
மேல்


தாணுவினோடு (1)

தாணுவினோடு அத்துவிதம் சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1298/2
மேல்


தாணுவே (1)

வந்துவந்து உன் இன்பமே தந்து இரங்கு தாணுவே – தாயு:53 1418/2
மேல்


தாதாவும் (1)

தாதாவும் நீ பெற்ற தாய் தந்தை-தாமும் நீ தமரும் நீ யாவும் நீ காண் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 109/4
மேல்


தாது (2)

காந்தம்-அதை எதிர் காணில் கரும்_தாது செல்லும் அ காந்தத்து ஒன்றாது – தாயு:24 342/1
கொழும் தாது உறை மலர் கோதையர் மோக குரை கடலில் – தாயு:27 407/1
மேல்


தாதை (1)

பொற்பு அரமாய் என் வினை கரும்_தாதை பொடிசெய்ததே – தாயு:27 402/4
மேல்


தாதையே (1)

தொழும் தாதையே வெண்_பொடி பூத்த மேனி சுக பொருளே – தாயு:27 407/4
மேல்


தாதோ (1)

கரக்கும் இயல்பு_உடையேன் பாழ் நெஞ்சம் எந்தாய் கரும்_தாதோ வல் உருக்கோ கரிய கல்லோ – தாயு:42 635/2
மேல்


தாப (1)

ஆறுமோ தாப சோபம் அகலுமோ அல்லல்-தானே – தாயு:21 298/4
மேல்


தாபிக்கும் (1)

பிடித்ததையே தாபிக்கும் பேர்_ஆணவத்தை – தாயு:43 941/1
மேல்


தாம் (7)

வானமே எனக்கு வந்துவந்து ஓங்கும் மார்க்கமே மருளர் தாம் அறியா – தாயு:22 307/2
நெறிகள் தாம் பலபலவுமாய் அந்தந்த நெறிக்காம் – தாயு:25 367/1
துணை தாள் நீடூழி தாம் வாழ்க என்றென்றே – தாயு:28 478/2
தற்பரமா கண்டிருப்பார் தாம் – தாயு:28 486/4
ஆனந்தம் தானே தாம் ஆகும் எம் ஐயனே – தாயு:28 496/3
அவனே அகிலம் அனைத்தும் அவனே தாம்
ஆனவரே சொன்னால் அவனே குரு எனக்கு – தாயு:28 522/2,3
என்று உளை நீ அன்று உளம் யாம் என்பது என்னை இது நிற்க எல்லாம் தாம் இல்லை என்றே – தாயு:42 622/1
மேல்


தாமத (1)

சீறு புலி போல் சீறி மூச்சைப்பிடித்து விழி செக்க சிவக்க அறிவார் திரம் என்று தந்தம் மதத்தையே தாமத செய்கையொடும் உளற அறிவார் – தாயு:8 69/3
மேல்


தாமரை (1)

பேய்_அனேன் திரு_அடி இணை தாமரை பிடித்தேன் – தாயு:24 341/3
மேல்


தாமரைக்கு (1)

திருந்து சீர் அடி தாமரைக்கு அன்பு-தான் செய்ய – தாயு:25 375/1
மேல்


தாமாய் (1)

தத்துவர் தொண்ணூற்றறுவர் தாமாய் வாழ் இ நாட்டை – தாயு:45 1120/1
மேல்


தாமே (1)

ஆனவை எல்லாம் தாமே ஆகுமே மோனகுரு – தாயு:28 529/2
மேல்


தாய் (24)

தந்தை தாய் முதலான அகில ப்ரபஞ்சம்-தனை தந்தது எனது ஆசையோ தன்னையே நோவனோ பிறரையே நோவனோ தற்காலம்-அதை நோவனோ – தாயு:2 10/3
தாராத அருள் எலாம் தந்து அருள மெளனியாய் தாய் அனைய கருணைகாட்டி தாள்_இணை என் முடி சூட்டி அறிவில் சமாதியே சாசுவத சம்ப்ரதாயம் – தாயு:4 34/1
பொல்லாத சேய் எனில் தாய் தள்ளல் நீதமோ புகலிடம் பிறிதும் உண்டோ பொய் வார்த்தை சொல்லிலோ திரு_அருட்கு அயலுமாய் புன்மையேன் ஆவன் அந்தோ – தாயு:9 79/3
பேராது நிற்றி நீ சும்மா இருந்து-தான் பேர்_இன்பம் எய்திடாமல் பேய்_மனதை அண்டியே தாய்_இலா பிள்ளை போல் பித்தாகவோ மனதை நான் – தாயு:11 100/3
தாதாவும் நீ பெற்ற தாய் தந்தை-தாமும் நீ தமரும் நீ யாவும் நீ காண் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 109/4
தந்தை தாய் தமர் தாரம் மகவு என்னும் இவை எலாம் சந்தையில் கூட்டம் இதிலோ சந்தேகம் இல்லை மணி மாட மாளிகை மேடை சதுரங்க சேனையுடனே – தாயு:12 113/1
எந்த நாளைக்கும் ஈன்று அருள் தாய் என – தாயு:18 248/1
எழுந்த சுடரே இமயவரை என் தாய் கண்ணுக்கு இனியானே – தாயு:20 286/2
தாய்_இலா சேய் போல் அலைந்து அலைப்பட்டேன் தாயினும் கருணையாய் மன்றுள் – தாயு:22 306/3
தந்தை தாய் தமர் மகவு எனும் அவை எலாம் சகத்தில் – தாயு:25 371/1
ஒக்கல் தாய் தந்தை மகவு எனும் பாச கட்டுடனே – தாயு:25 387/3
தாய் ஒத்து அடியர்க்கு அருள் சச்சிதானந்த தற்பரமே – தாயு:27 401/4
தாய் உண்டு சேய் என்ன என்னை புரக்க சதானந்தமாம் – தாயு:27 421/2
தாய் என மோனகுரு ஆகி வந்து தடுத்து அடிமை – தாயு:27 458/2
கன்று கெட்டால் தாய் அருகே காண் – தாயு:28 494/4
தாய் எனவும் வந்து என்னை தந்த குரு என் சிந்தை – தாயு:28 541/3
தந்தை தாய் மகவு மனை வாழ்க்கை யாக்கை சகம் அனைத்தும் மௌனி அருள் தழைத்த போதே – தாயு:40 588/1
தாய் ஆன தண் அருளை நிரம்ப வைத்து தமியேனை புரவாமல் தள்ளித்தள்ளிப்போய் – தாயு:42 633/1
தாய்_இலார் போல் நான் தளர்ந்தேன் பராபரமே – தாயு:43 691/2
என் அகத்தில் தாய் போல் இருக்கும் பராபரமே – தாயு:43 692/2
எத்தன்மை குற்றம் இயற்றிடினும் தாய் பொறுக்கும் – தாயு:43 715/1
தாய் அன்றி சூலும் உண்டோ சாற்றாய் பராபரமே – தாயு:43 845/2
தண் கருணை தோன்ற அருள் தாய் நீ பராபரமே – தாயு:43 952/2
தாய் இருந்தும் பிள்ளை தளர்ந்தால் போல் எவ்விடத்தும் – தாயு:43 984/1
மேல்


தாய்_இலா (2)

பேராது நிற்றி நீ சும்மா இருந்து-தான் பேர்_இன்பம் எய்திடாமல் பேய்_மனதை அண்டியே தாய்_இலா பிள்ளை போல் பித்தாகவோ மனதை நான் – தாயு:11 100/3
தாய்_இலா சேய் போல் அலைந்து அலைப்பட்டேன் தாயினும் கருணையாய் மன்றுள் – தாயு:22 306/3
மேல்


தாய்_இலார் (1)

தாய்_இலார் போல் நான் தளர்ந்தேன் பராபரமே – தாயு:43 691/2
மேல்


தாய்க்கு (1)

சஞ்சலம் மாற்றினை இனிமேல் தாய்க்கு உபசாரம் புகன்று – தாயு:33 566/3
மேல்


தாயகம் (1)

இந்த்ராதி போக நலம் பெற்ற பேர்க்கும் இது அன்றி தாயகம் வேறு இல்லை இல்லை – தாயு:14 142/3
மேல்


தாயர் (1)

தாயர் கர்ப்பத்தூடு அன்னமும் தண்ணீரும் தந்து அருளும் – தாயு:43 770/1
மேல்


தாயாக (1)

தாயாக வந்து அருளை தந்தாய் பராபரமே – தாயு:43 761/2
மேல்


தாயான (2)

தாயான கருணையும் உனக்கு உண்டு எனக்கு இனி சஞ்சலம் கெட அருள்செய்வாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 107/4
தாயான மோனன் அருள் சந்திக்க வந்திடுமே – தாயு:29 548/4
மேல்


தாயினும் (3)

தாய்_இலா சேய் போல் அலைந்து அலைப்பட்டேன் தாயினும் கருணையாய் மன்றுள் – தாயு:22 306/3
தாயினும் இனிய நின்னை சரண் என அடைந்த நாயேன் – தாயு:36 577/1
தாயினும் நல்ல தயாளுவே நின்னை உன்னி – தாயு:46 1329/1
மேல்


தாயும் (6)

தாயும் நீ இன்ப தந்தையும் நீ என்றால் – தாயு:18 236/2
தொழும் தெய்வமும் நீ குருவும் நீ துணை நீ தந்தை தாயும் நீ – தாயு:20 286/3
தந்தை தாயும் நீ என் உயிர் துணையும் நீ சஞ்சலம்-அது தீர்க்க – தாயு:24 331/1
தாயும் தந்தையும் எனக்கு உறவு ஆவதும் சாற்றின் – தாயு:24 341/1
தாயும் பிதாவும் தமரும் குருவும் தனி முதலும் – தாயு:27 443/3
தாயும் தந்தையும் ஆனோய் சிரகிரி தாயுமான தயாபர மூர்த்தியே – தாயு:31 557/4
மேல்


தாயுமான (2)

தடுத்தவாறும் புகலாய் சிரகிரி தாயுமான தயாபர மூர்த்தியே – தாயு:31 556/4
தாயும் தந்தையும் ஆனோய் சிரகிரி தாயுமான தயாபர மூர்த்தியே – தாயு:31 557/4
மேல்


தாயுமானவன் (1)

சிந்தை மேவிய தாயுமானவன் எனும் சிரகிரி பெருமானே – தாயு:24 331/4
மேல்


தாயே (3)

நல் துணையே அருள் தாயே இன்பமான நாதாந்த பரம்பொருளே நாரணாதி – தாயு:16 181/3
ஆதிக்க மோன அருள் தாயே சோதியாம் – தாயு:28 495/2
தாயே அனைய அருள் தந்தாய் பராபரமே – தாயு:43 1012/2
மேல்


தார் (1)

அருளை பொழியும் குண_முகிலே அறிவானந்த தார் அமுதே – தாயு:23 319/4
மேல்


தாரகத்தை (1)

தாரகத்தை பற்றி அன்றோ சாற்றாய் பராபரமே – தாயு:43 737/2
மேல்


தாரகம் (3)

எல்லாம் அறிந்த நீ அறியாதது அன்று எனக்கு எ வண்ணம் உய் வண்ணமோ இருளை இருள் என்றவர்க்கு ஒளி தாரகம் பெறும் எனக்கு நின் அருள் தாரகம் – தாயு:5 42/3
எல்லாம் அறிந்த நீ அறியாதது அன்று எனக்கு எ வண்ணம் உய் வண்ணமோ இருளை இருள் என்றவர்க்கு ஒளி தாரகம் பெறும் எனக்கு நின் அருள் தாரகம்
வல்லான் எனும் பெயர் உனக்கு உள்ளதே இந்த வஞ்சகனை ஆள நினையாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 42/3,4
அறிவிற்கு அறிவு தாரகம் என்று அறிந்தே அறிவோடு அறியாமை – தாயு:20 283/1
மேல்


தாரகமா (1)

தன்னை அறிந்து அருளே தாரகமா நிற்பதுவே – தாயு:43 731/1
மேல்


தாரகமாய் (3)

வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயம் ஆகி மன வாக்கு எட்டா – தாயு:3 14/3
நின் நிறைவே தாரகமாய் நின்று சுகம் எய்தாமல் – தாயு:43 897/1
சென்ற இடம் எல்லாம் திரு_அருளே தாரகமாய்
நின்றவர்க்கே ஆனந்த நிட்டை பராபரமே – தாயு:43 944/1,2
மேல்


தாரணி (1)

தாரணி உள்ள மட்டுமே வணங்க தமியனேன் வேண்டிட தகுமே – தாயு:19 272/4
மேல்


தாரணையினால் (1)

ஊர் என விளங்குவீர் பிரமாதி முடிவில் விடை ஊர்தி அருளால் உலவுவீர் உலகங்கள் கீழ்மேலவாக பெரும் காற்று உலாவின் நல் தாரணையினால்
மேரு என அசையாமல் நிற்க வல்லீர் உமது மே தக்க சித்தி எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 59/3,4
மேல்


தாரம் (1)

தந்தை தாய் தமர் தாரம் மகவு என்னும் இவை எலாம் சந்தையில் கூட்டம் இதிலோ சந்தேகம் இல்லை மணி மாட மாளிகை மேடை சதுரங்க சேனையுடனே – தாயு:12 113/1
மேல்


தாரா (1)

தாரா அருளை எல்லாம் தந்து எனையும் நின் அருளின் – தாயு:43 873/1
மேல்


தாராத (1)

தாராத அருள் எலாம் தந்து அருள மெளனியாய் தாய் அனைய கருணைகாட்டி தாள்_இணை என் முடி சூட்டி அறிவில் சமாதியே சாசுவத சம்ப்ரதாயம் – தாயு:4 34/1
மேல்


தாராது (2)

தாராது தள்ளவும் போகாது உனால் அது தள்ளினும் போகேன் யான் தடை ஏதும் இல்லை ஆண்டவன் அடிமை என்னும் இரு தன்மையிலும் என் வழக்கு – தாயு:12 117/3
தாராது இருக்க தகுமோ பராபரமே – தாயு:43 979/2
மேல்


தாராமல் (1)

தாராமல் ஐயா நீ தள்ளிவிட வந்தது என்னோ – தாயு:51 1412/2
மேல்


தாராயேல் (1)

தாகம் அறிந்து இன்ப நிட்டை தாராயேல் ஆ கெடுவேன் – தாயு:43 659/1
மேல்


தாராவிடின் (1)

தாராவிடின் என் பெருமூச்சுத்-தான் அ தனஞ்சயனே – தாயு:27 420/4
மேல்


தாராளமா (1)

தாராளமா கருணை பொழிய செய்யும் சாதகம் என்னே கருதி சாற்றும் என்பேன் – தாயு:14 157/4
மேல்


தாராளமாய் (1)

தாராளமாய் நிற்க நிர்ச்சந்தை காட்டி சதா_கால நிஷ்டை எனவே சகச நிலை காட்டினை சுகாதீத நிலயம்-தனை காட்ட நாள் செல்லுமோ – தாயு:9 84/2
மேல்


தாரு (1)

மந்தார தாரு என வந்து மௌனகுரு – தாயு:28 528/3
மேல்


தாரை (3)

சருகு சல பக்ஷணிகள் ஒரு கோடி அல்லால் சகோர பக்ஷிகள் போலவே தவள நில ஒழுகு அமிர்த தாரை உண்டு அழியாத தன்மையர் அனந்த கோடி – தாயு:5 44/1
மடல் அவிழும் மலர் அனைய கை விரித்து கூப்பி வானே அ வானில் இன்ப மழையே மழை தாரை வெள்ளமே நீடூழி வாழி என வாழ்த்தி ஏத்தும் – தாயு:6 55/3
கண் ஆர நீர் மல்கி உள்ளம் நெக்குருகாத கள்ளனேன் ஆனாலுமோ கை குவித்து ஆடியும் பாடியும் விடாமலே கண் பனி தாரை காட்டி – தாயு:10 93/1
மேல்


தாவிட (1)

தாவிட இன்பாதீத தனியிடை இருத்திவைத்த – தாயு:24 336/3
மேல்


தாவியதோர் (1)

தாவியதோர் மர்க்கடமாம் தன்மை விட்டே அண்ணலிடத்து – தாயு:44 1052/1
மேல்


தாவு (1)

தன் நிலைமை காட்டாது ஒருங்க இரு_வினையினால் தாவு சுக_துக்க வேலை தட்டழிய முற்றும் இல்லா மாயை அதனால் தடித்து அகில பேதமான – தாயு:10 99/2
மேல்


தாழ்வு (4)

தாழ்வு பெற்று இங்கு இருந்தேன் ஈது என்ன மாயம் தடையுற்றால் மேல்_கதியும் தடை-அது ஆமே – தாயு:16 178/2
தாழ்வு எனும் சமயம் நீங்கி தமை_உணர்ந்தோர்கட்கு எல்லாம் – தாயு:21 297/3
தாழ்வு அற என் உளத்து இருந்த தத்துவத்தை அத்துவித சாரம்-தன்னை – தாயு:26 393/2
வாழ்வு எனவும் தாழ்வு எனவும் இரண்டா பேசும் வையகத்தார் கற்பனையாம் மயக்கம் ஆன – தாயு:42 611/1
மேல்


தாழாது (1)

ஏழு பிறவியில் தாழாது ஓங்கும் – தாயு:55 1451/10
மேல்


தாழாமல் (1)

தாழாமல் நிலைநிற்கவில்லையோ மேருவும் தனுவாக வளையவிலயோ சத்த மேகங்களும் வச்ரதரன் ஆணையில் சஞ்சரித்திடவில்லையோ – தாயு:2 12/2
மேல்


தாழாயோ (1)

தாழாயோ எந்தை அருள் தாள் கீழ் நெஞ்சே எனை போல் – தாயு:29 544/3
மேல்


தாள் (20)

தாராத அருள் எலாம் தந்து அருள மெளனியாய் தாய் அனைய கருணைகாட்டி தாள்_இணை என் முடி சூட்டி அறிவில் சமாதியே சாசுவத சம்ப்ரதாயம் – தாயு:4 34/1
வளர்ந்த தாள் என்ன உள்ளம் மன்று என மறை ஒன்று இன்றி – தாயு:15 168/4
விழுகின்ற பாவிக்கும் தன் தாள் புணையை வியந்து அளித்தான் – தாயு:27 433/2
துணை தாள் நீடூழி தாம் வாழ்க என்றென்றே – தாயு:28 478/2
தாழாயோ எந்தை அருள் தாள் கீழ் நெஞ்சே எனை போல் – தாயு:29 544/3
நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே நின் அடியர் கூட்டத்திலே நிலைபெற்ற அன்பிலே மலைவு அற்ற மெய்ஞ்ஞான ஞேயத்திலே உன் இரு தாள்
மட்டிலே மனது செல நினது அருளும் அருள்வையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 579/3,4
தேவர் எலாம் தொழ சிவந்த செம் தாள் முக்கண் செங்கரும்பே மொழிக்கு மொழி தித்திப்பாக – தாயு:42 619/1
வீறு பரை திரு_தாள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1088/2
தந்தை இரு தாள் துணித்து தம்பிரான் தாள் சேர்ந்த – தாயு:45 1093/1
தந்தை இரு தாள் துணித்து தம்பிரான் தாள் சேர்ந்த – தாயு:45 1093/1
எந்தை இரு தாள் இணைக்கே இன்புறுவது எந்நாளோ – தாயு:45 1093/2
கொள் செம் கையர் தாள் வாரம் வைப்பது எந்நாளோ – தாயு:45 1108/2
விண்ட சிவவாக்கியர் தாள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1112/2
விண்ணவன் தாள் என்னும் விரி நிலா மண்டபத்தில் – தாயு:45 1187/1
தாள் தலை மேல் சூடி தழைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1292/2
குன்றே நின் தாள் கீழ் குடி பெறவும் காண்பேனோ – தாயு:46 1327/2
அத்தா நின் பொன் தாள் அடிக்கே அனுதினமும் – தாயு:47 1356/1
நேச புணை தாள் நிறுத்தினால் ஆகாதோ – தாயு:47 1363/2
ஐய நின் தாள் கீழே அடிமை நின்றால் ஆகாதோ – தாயு:47 1372/2
தேடுவார் தேடும் சிவனேயோ நின் திரு_தாள் – தாயு:51 1405/1
மேல்


தாள்_இணை (1)

தாராத அருள் எலாம் தந்து அருள மெளனியாய் தாய் அனைய கருணைகாட்டி தாள்_இணை என் முடி சூட்டி அறிவில் சமாதியே சாசுவத சம்ப்ரதாயம் – தாயு:4 34/1
மேல்


தாளால் (1)

ஏதும் இல்லாமல் எல்லாம் வல்லான் தாளால் என் தலை மீது தாக்கினான் தோழி – தாயு:54 1437/2
மேல்


தாளில் (3)

கதி உண்டு ஞானமாம் கதிர் உண்டு சதிர் உண்டு காயசித்திகளும் உண்டு கறை உண்ட கண்டர்-பால் அம்மை நின் தாளில் கருத்து ஒன்றும் உண்டாகுமேல் – தாயு:37 578/2
முற்றுமோ எனக்கு இனி ஆனந்த வாழ்வு மூதறிவுக்கு இனியாய் நின் முளரி தாளில்
பற்றுமோ சற்றும் இல்லை ஐயோஐயோ பாவி படும் கண் கலக்கம் பார்த்திலாயோ – தாயு:42 620/1,2
அங்கணனார் தாளில் அடங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1274/2
மேல்


தாளின் (1)

ஆள வந்தார் தாளின் கீழ் ஆள் புகுந்தாய் மீள உன்னை – தாயு:28 523/2
மேல்


தாளை (3)

வந்து அருளும் குரு மெளனி மலர்_தாளை அநுதினமும் வழுத்தல்செய்வாம் – தாயு:3 19/4
மரு மலர் எடுத்து உன் இரு தாளை அர்ச்சிக்க எனை வா என்று அழைப்பது எந்நாள் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 44/4
தூக்கி வைக்கும் தாளை தொழுதிடும் நாள் எந்நாளோ – தாயு:45 1085/2
மேல்


தான் (47)

பொய் விடா பொய்யினேன் உள்ளத்து இருந்து தான் பொய்யான பொய்யை எல்லாம் பொய் எனா வண்ணமே புகலவைத்தாய் எனில் புன்மையேன் என் செய்குவேன் – தாயு:6 51/2
சந்ததமும் வேத மொழி யாதொன்று பற்றின் அது தான் வந்து முற்றும் எனலால் சகம் மீது இருந்தாலும் மரணம் உண்டு என்பது சதா_நிஷ்டர் நினைவதில்லை – தாயு:6 53/1
பெருமை பெறு பூரணம் குறையுமோ பூதங்கள் பேய் கோலமாய் விதண்டை பேசுமோ அலது தான் பரிபாக காலம் பிறக்கவிலையோ தொல்லையாம் – தாயு:10 95/3
சடக்கை சடக்கென சதம் என்று சின்மயம் தான் ஆகி நிற்பது என்றோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 101/4
சன்மார்க்கம் ஞானம்-அதின் பொருளும் வீறு சமய சங்கேத பொருளும் தான் என்று ஆக – தாயு:14 143/1
தான் வந்து தொடரும் இத்தால் வளரும் துன்ப சாகரத்தின் பெருமை எவர் சாற்ற வல்லார் – தாயு:14 146/2
வெல்ல உண்டு இங்கு உன்னையும் தான் ஆக கொண்டு வேதகமாய் பேசாமை விளங்கும்-தானே – தாயு:14 152/4
தான் ஆன தன்மயமே அல்லால் ஒன்றை தலையெடுக்க ஒட்டாது தலைப்பட்டு ஆங்கே – தாயு:14 153/1
எந்தையே எல்லாம் தான் என்று இயம்பினன் எமை படைத்த – தாயு:15 174/2
ஆனாமையாய் அகில நிகில பேதம் அனைத்தின் உள்ளும் தான் ஆகி அறிவு ஆனந்த – தாயு:16 179/3
பினை ஒன்றும் இலை அந்த இன்பம் எனும் நிலயம் பெற்றாரே பிறவாமை பெற்றார் மற்றும் தான்
மனை என்றும் மகன் என்றும் சுற்றம் என்றும் அசுத்த வாதனையாம் ஆசை ஒழி மன் ஒரு சொல் கொண்டே – தாயு:17 185/3,4
தான் என நிற்கும் சமத்து உற என்னை தன்னவன் ஆக்கவும் தகும் காண் – தாயு:22 311/2
தன்னை தான் அறிந்திட அருள் புரிதியேல் தக்கோய் – தாயு:25 364/2
அன்றி ஒரு பொருள் இலதாய் எப்பொருட்கும் தான் முதலாய் அசலம் ஆகி – தாயு:26 391/3
தன்னை அறிந்தவர்-தம்மை தான் ஆக செய்து அருளும் சமத்தை லோகம் – தாயு:26 394/1
வைத்துவைத்து பார்ப்பவரை தான் ஆக எந்நாளும் வளர்த்து காக்கும் – தாயு:26 396/3
தன்னிலே தான் ஆக நினைந்து கனிந்து அவிழ்ந்து சுக சமாதி ஆக – தாயு:26 397/1
தான் என்று ஒரு முதல் பூரணமாக தலைப்பட்டு ஒப்பு_இல் – தாயு:27 414/2
சத்த மவுனம் முதல் மூன்று மௌனமும் தான் படைத்தேன் – தாயு:27 426/3
சகம் அனைத்தும் பொய் எனவே தான் உணர்ந்தால் துக்க – தாயு:28 465/1
சத் அசத்து அருள் உணர்த்த தான் உணராநின்ற – தாயு:28 481/3
மோனகுருவே முழுதினையும் தான் உணர்ந்த – தாயு:28 489/3
பூசிக்கும் தான் நிறைந்து பூரணமாய் யோசித்து – தாயு:28 491/2
அல்லும்_பகலும் பேர்_அன்புடனே தான் இருந்தால் – தாயு:28 499/1
தத்தி கரைபுரண்டு தான் – தாயு:28 517/4
தான் ஆன தன்மை வந்து தாக்கினால் அவ்விடத்தே – தாயு:28 518/1
நான் தான் எனும் மயக்கம் நண்ணுங்கால் என் ஆணை – தாயு:28 540/1
தன்னை அறிய தனது அருளால் தான் உணர்த்தும் – தாயு:34 569/1
சித்தம் மிசை புகுந்தது தான் மெய்யோ பொய்யோ சிறியேற்கு இங்கு உளவு உரையாய் திகையா வண்ணம் – தாயு:41 601/2
எத்திக்கும் தான் ஆகி என் இதயத்தே ஊறி – தாயு:43 642/1
தம் உயிர் போல் எவ்வுயிரும் தான் என்று தண் அருள் கூர் – தாயு:43 784/1
தான் ஆதல் பூரணமே சாரும் இடம் உண்டு உயிரும் – தாயு:43 893/1
தன் செயலால் ஒன்றும் இலை தான் என்றால் நான் பாவி – தாயு:43 922/1
தன்மயமாய் நின்ற நிலை தானே தான் ஆகி நின்றால் – தாயு:43 953/1
தான் அந்தம் ஆன சகச நிருவிகற்ப – தாயு:43 962/1
பற்று ஒழிந்து சிந்தை பதைப்பு ஒழிந்து தானே தான்
அற்று இருப்பது என்றைக்கு அமைப்பாய் பராபரமே – தாயு:43 990/1,2
சாதித்தார் பொன் அடியை தான் பணிவது எந்நாளோ – தாயு:45 1098/2
தத்துவமாம் பாழ்த்த சட உருவை தான் சுமந்த – தாயு:45 1171/1
சடத்துள் உயிர் போல் எமக்கு தான் உயிராய் ஞானம் – தாயு:45 1193/1
தான் ஆன உண்மை-தனை சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1201/2
தான் என்னை முன் படைத்தான் என்ற தகவு உரையை – தாயு:45 1259/1
தான் அவனாம் தன்மை எய்தி தண்டம் என அண்டம் எங்கும் – தாயு:45 1284/1
சொல்லா முன் நீ தான் தொகுத்து இரங்க காண்பேனோ – தாயு:46 1347/2
தான் ஆக நிற்க ஒரு தந்திரம்-தான் இல்லையோ – தாயு:48 1377/2
ஒருக்காலே உணர்ந்தவர்கட்கு எக்காலும் தான் ஒழியாத இன்ப_வெள்ளம் உலவாநிற்கும் – தாயு:52 1414/2
தள் என சொல்லி என் ஐயன் என்னை தான் ஆக்கிக்கொண்ட சமர்த்தை பார் தோழி – தாயு:54 1428/2
தன் பாதம் சென்னியில் வைத்தான் என்னை தான் அறிந்தேன் மனம்-தான் இறந்தேனே – தாயு:54 1430/2
மேல்


தான (1)

சுரந்து இனிது இரங்கும் தான கற்பகமே சோதியே தொண்டனேன் நின்னை – தாயு:19 276/2
மேல்


தானம் (4)

தானம் தவம் சற்றும் இல்லாத நான் உண்மை-தான் அறிந்து – தாயு:27 415/1
தானம் தவம் ஞானம் சாற்று அரிய சித்தி முத்தி – தாயு:28 529/1
தானம் தருமம் தழைத்த குரு மானமொடு – தாயு:28 541/2
தானம் தவம் தருமம் சந்ததமும் செய்வர் சிவ – தாயு:43 793/1
மேல்


தானம்-அதில் (1)

தானம்-அதில் ஊறும் அமிர்தம் – தாயு:28 466/4
மேல்


தானமாய் (1)

தானமாய் நின்று தன்மயம் காட்டிய – தாயு:18 220/2
மேல்


தானமும் (1)

தானமும் தவமும் யோக தன்மையும் உணரா என்-பால் – தாயு:21 299/1
மேல்


தானமே (1)

தானமே தவமே நின்னை நான் நினைந்தேன் தமியனேன் தனை மறப்பதற்கே – தாயு:22 307/4
மேல்


தானாக (4)

எண்ணாதபடிக்கு இரங்கி தானாக செய்து அருளும் இறையே உன்றன் – தாயு:3 22/3
தானாக சொல்லாதோ சாற்றாய் பராபரமே – தாயு:43 743/2
தானாக வந்து தடுத்தாண்டு எனை இன்பவானாக – தாயு:43 876/1
தப்பிதம் ஒன்று இன்றி அது தானாக நிற்க உண்மை – தாயு:51 1393/1
மேல்


தானாய் (4)

சாதித்த சாதனமும் யோகியர்கள் நமது என்று சங்கிப்பர் ஆதலாலே தன்னிலே தானாய் அயர்ந்துவிடுவோம் என தனி இருந்திடின் அங்ஙனே – தாயு:9 85/3
தன்னை ஒருவர்க்கு அறிவு அரிதாய் தானே தானாய் எங்கும் நிறைந்து – தாயு:23 312/1
அகத்தூடு அணு அணுவாய் அண்டம் எல்லாம் தானாய்
மகத்து ஆகி நின்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 861/1,2
தன்னை அறியாது சகம் தானாய் இருந்துவிட்டால் – தாயு:43 924/1
மேல்


தானே (27)

கற்றை அம் சடை மெளனி தானே கனிந்த கனி கனிவிக்க வந்த கனி போல் கண்டது இ நெறி என திரு_உள கனிவினொடு கனிவாய் திறந்தும் ஒன்றை – தாயு:9 82/2
பொல்லாத வாதனை எனும் சப்த பூமியிடை போந்துதலை சுற்றி ஆடும் புருஷனில் அடங்காத பூவை போல் தானே புறம் போந்து சஞ்சரிக்கும் – தாயு:10 92/2
தேகாதி உலகம் எங்கும் கலந்து தானே திகழ் அனந்தானந்த மய தெய்வ குன்றே – தாயு:14 132/4
கண் அகல் ஞாலம் மதிக்க தானே உள்ளங்கையில் நெல்லி கனி போல காட்சியாக – தாயு:14 139/3
காண் அரிய அல்லல் எல்லாம் தானே கட்டுக்கட்டாக விளையும் அதை கட்டோடே-தான் – தாயு:14 148/1
ஓவியம் போல் அசைவு அறவும் தானே நிற்பேன் ஓது அரிய துயர் கெடவே உரைக்கும் முன்னே – தாயு:14 162/4
ஓது அரிய சுகர் போல ஏன்ஏன் என்ன ஒருவர் இலையோ எனவும் உரைப்பேன் தானே
பேதம் அபேதம் கெடவும் ஒரு பேசாமை பிறவாதோ ஆல் அடியில் பெரிய மோன – தாயு:14 163/1,2
மறை முழக்கு ஒலிப்ப தானே வரதமோடு அபய கைகள் – தாயு:15 169/1
தந்த நாள் முதல் இன்ப கால் சற்று அல்லால் தடை அற ஆனந்த_வெள்ளம் தானே பொங்கி – தாயு:16 184/3
சொல்லாலே பயன் இல்லை சொல் முடிவை தானே தொடர்ந்து பிடி மர்க்கடம் போல் தொட்டது பற்றா நில் – தாயு:17 187/3
தானே அகண்டாகார மயம்-தன்னில் எழுந்து பொது நடம்செய் – தாயு:20 287/1
தானே படைத்து இங்கு என்ன பலன்-தன்னை படைத்தாய் உன் கருத்தை – தாயு:20 289/3
தன்னை ஒருவர்க்கு அறிவு அரிதாய் தானே தானாய் எங்கும் நிறைந்து – தாயு:23 312/1
தன்னிலையே நில்லு தானே தனி சச்சிதானந்தமாம் – தாயு:27 423/3
ஆனந்தம் தானே தாம் ஆகும் எம் ஐயனே – தாயு:28 496/3
புலன் ஐந்தும் தானே பொர மயங்கி சிந்தை – தாயு:28 505/1
இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமே – தாயு:43 790/2
நித்திரையாய் தானே நினைவு அயர்ந்தால் நித்தம்நித்தம் – தாயு:43 948/1
தன்மயமாய் நின்ற நிலை தானே தான் ஆகி நின்றால் – தாயு:43 953/1
பற்று ஒழிந்து சிந்தை பதைப்பு ஒழிந்து தானே தான் – தாயு:43 990/1
தானே ஆம் நல் நிலையை தந்த அருள் ஆனந்த – தாயு:43 1005/1
தானே அணைவர் அவர் தன்மை என்னோ பைங்கிளியே – தாயு:44 1057/2
தானே சுபாவம் தலைப்பட நின்றால் ஞான – தாயு:44 1081/1
கேடு_இல் பசு பாசம் எல்லாம் கீழ்ப்படவும் தானே மேல் – தாயு:45 1196/1
தாங்கிய பார் விண் ஆதி தானே ஞானாக்கினியாய் – தாயு:45 1309/1
நின்ற நிலையே நிலையா வைத்து ஆனந்த நிலை தானே நிருவிகற்ப நிலையும் ஆகி – தாயு:52 1413/1
கற்றதும் கேட்டதும் தானே ஏதுக்காக கடம்_படம் என்று உருட்டுதற்கோ கல்_ஆல் எம்மான் – தாயு:52 1415/1
மேல்


தானேயாய் (1)

ஒன்றாய் பலவாய் உலகம் எங்கும் தானேயாய்
நின்றாய் ஐயா எனை நீ நீங்கற்கு எளிதாமோ – தாயு:51 1402/1,2
மேல்


தானேயும் (1)

தானேயும் இ உலகம் ஒரு முதலும் ஆக தன்மையினால் படைத்து அளிக்கும் தலைமையதுவான – தாயு:17 193/1

மேல்